தோழர் ஸ்டாலின் தலைமையில், ஹிட்லர் என்ற பாசிச மிருகத்திடமிருந்து உலகை காப்பாற்றிய சோவியத் வீரர்கள் பற்றிய உண்மைகதைகள் சிலவற்றை மாஸ்கோ நூலில் இருந்து தேர்தெடுத்து மொத்தமாக நமது வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது.
தோழர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினத்தை (டிசம்பர் 21) முன்னிட்டு அக்கதைகள் ஒவ்வொன்றாக பிரித்து வெளியிட முடிவு செய்ததில் மூன்றாவது பதிவாக “வீட்டை கொடுத்த வீராங்கனை” யை வெளியிடுகிறோம்.
************************
சோவியத் துருப்புகள் முன்னேறித் தாக்கிக் கொண்டிருந்தன. மேஜர்-ஜெனரல் காட்டுகோவ் தலைமையிலிருந்த டாங்கிப் படை நாஜிகளைத் துரத்திக் கொண்டிருந்த்து.
திடிறென்று அவர்கள் ஒரு இடத்தில் நின்றர்கள். அங்கே நதியின் மீதான பாலம் நொறுங்கிப் போயிருந்த்து. நோவொ-பெட்ரோவ்ஸ்கொயே கிராமத்தில் வொலோகோலாம்ஸ்குக்குப் போகும் பாதையில் இந்த சம்பவம் நடைபெற்றது.
டாங்கி ஓட்டிகள் எந்திரங்களை நிறுத்தினார்கள். அவர்களுடைய கண்களுக்கு முன்பகவே நாஜிகள் தப்பியோடிக் கொண்டிருந்தார்கள். ஜெர்மனியப் படைகளை நோக்கி யாரோ சுட்டார்கள்; ஆனால் அது குண்டுகளை வீணாக்கும் பயனற்ற வேலையாகவே இருந்தது.
”போய்வருகிறோம்” என்று நாஜிகள் சத்தம் போட்டார்கள்.
”நாம் நதியைக் கடக்க போகலாமே” என்று யாரோ மேஜர்-ஜெனரலிடம் யோசனை சொன்னார்கள்.
மக்லுஷா நத்யின் செங்குத்தான கரைகளையும் வேகமாகப் பாய்தோடும் தண்ணீரையும் ஜெனரல் காட்கோவ் குனிந்து பார்த்தபடி இருந்தார்.அவர்களுடைய டாங்கிகள் அந்த செங்குத்தான கரைகளின் மீது ஏறிப் போக முடியாது.
ஜெனரல் சிந்தனையில் மூழ்கினார்.
திடீரென்று அங்கே ஒரு பெண் தன்னுடைய குழந்தையோடு டாங்கிகளுக்கு முன்னால் வந்து நின்றாள்.
”””””தோழரே! என்னுடைய வீட்டுக்குப் பக்கத்தில் நதியைச் சுலபமாக்க் கடக்க முடிவும்” என்று ஜெனரல் காட்டுகோவைப் பார்த்துச் சோன்னாள். ”அங்கு தண்ணீர் கொஞ்சமாகதான் ஓடும். செங்குத்தான சரிவுகள் இல்லை.”
டாங்கிகள் அந்தப் பெண்ணைப் பிந்தொடர்ந்து சென்றன.அவள் வீடு தெரிந்தது. நதியின் மேற்கரையில் ஒரு குழிவான இட்த்தில் அந்த வீடு கட்டப்பட்டிருந்தது. அந்த இட்த்தில் நதியைக் கடப்பது சுலபமே. ஆனல்… ஜெனரல் கட்டுகோவும் டாங்கி ஓட்டிகளும் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். அங்கேயும் ஒரு பாலம் இல்லாமல் நதியைக் கடக்க முடியாது.
”இங்கே ஒரு பாலம் கட்ட வேண்டும். அதற்கு மரக்கட்டைகள் வேண்டும்” என்றார்கள் டாங்கி ஓட்டிகள்.
”மரக்கட்டைகள் இருக்கின்றன” என்றாள் அந்த பெண்.
டாங்கி ஓட்டிகள் சுற்றிலும் பார்த்தார்கள். ஆனால் மரக்கட்டைகள் எங்கேயும் தென்படவில்லை.
”அதோ! அங்கே பாருங்கள்” என்று அந்தப் பெண் தன்னுடைய வீட்டைச் சுட்டிக் காட்டினாள்.
”அது வீடு அல்லவா?” என்ன்றார்கள் டாங்கி ஓட்டுனர்கள்.
அந்தப் பெண் தன்னுடைய வீட்டை ஒரு முறைப்பார்த்தாள்; பிறகு போர்வீர்ர்களைப் பார்த்தாள்.
”வீடு என்பது என்ன? மரப்பலைகைகள் தானே? நம் மக்கள் எவற்றையெல்லாம் இழந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழிது இந்த வீடு ஒரு பெரிய விஷயமா? பெட்யா! நான் சொல்வது சரி தானே?” என்று தன்னுடைய குழந்தையிடம் சொன்னால். பிறகு போர்வீரர்களை பார்த்துப் பேசினால் . “அஎத வீட்டைப் பிரித்து மரப்பலகைகளை உபயோகியுங்கள்.”
போர்வீரர்களுக்கு அந்த வீட்டைப் பிரிக்க மனம் வரவில்லை. முன்பே கணமான மூடுபனி தொடங்கிவிட்டது. எந்த நேரத்திலும் குளிர்காலம் ஆரம்பமாகிவிடும். வீடு இல்லாமல் இந்தப் பெண்ணும் குழந்தையும் குளிர்காலத்தை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?
அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அந்தப்பெண் புரிந்துகொண்டால்.
“நாங்கள் ஒரு பொந்தில் குளிர் காலத்தை கழிப்போம். எங்களைப் பர்றிக் கவலைப்பட வேண்டாம்” என்று சொல்லிவிட்டுத் தன்னுடைய குழந்தையைப் பார்த்தாள். “என்ன பெட்யா? சரிதானே? என்று கேட்டாள்.
”ஆமாம் ஆமாம்!” என்றது அந்த குழந்தை.
எனினும் போர்வீரர்கள் தயக்கத்தோடு நின்று கொண்டிருந்தார்கள்.
இதைப் பார்த்த அந்தப்பெண் ஒரு கோடாரியை கையிலெடுத்தால்; தன்னுடைய வீட்டை நோக்கி நடந்தாள். அதன் மரப்பலகையின் மீது கோடாரியைக் கொண்டு முதல் வெட்டு வெட்டினாலள்.
”சரி. நாம் என்ன சொல்ல முடியும்?… நன்றி” என்றார் ஜெனரல் காட்டுகோவ்.
போர்வீர்ர்கள் அந்த வீட்டைப் பிரித்தார்கள். அந்த மரங்களைக் கொண்டு ஒரு பாலத்தைக் கட்டினார்கள். டாங்கிகள் அந்தப் புதிய பாலத்தின் மீது நதியைக் கடந்தன.
டங்கிகள் நதியைக் கடக்கும் பொழுது அந்தப்பெண்ணும் குழந்தையும் கைகளை ஆட்டிப் போர்வீரர்களுக்கு விடை கொடுத்தார்கள்.
“உங்கள் பெயரைச் சொல்லுங்கள். நாங்கள் யாருக்கு நன்றி செலுத்த வேண்டும்?’ என்று போர்வீரர்கள் கேட்டார்கள்.
“அலெக்ஸாண்ட்ரா கிரிகோரியெவ்ன குஸ்னெட்ஸோவா, என் மகம் பிரியோத்தர் இவானெவிச் குஸ்னெட்ஸோவ்.”
“அலெக்ஸாண்ட்ரா கிரிகோரியெவ்ன! உஙகளுக்கு எம்முடைய ஆழ்ந்த நன்றி! பிரியோத்தர் இவானெவிச்! நீ பிற்காலத்தில் பெரிய வீரனாக்க வளர்வாய்” என்று போர்வீரர்கள் அவர்களை வாழ்த்தினார்கள்.
டாங்கிகள் வேகமாக முன்னேறிச் சென்று எதிரிகளின் படைகளைப் பிடித்தன. நாஜிகள் நசுக்கிய பிறகு மேற்குத் திசையில் முன்னேறிச் சென்றன.
வருடங்கள் உருண்டோடின. யுத்தத்தின் இடியோசை நின்றது. மரணத்தின் ஊழிக் கூத்து குடிவடைந்தது. ஒவ்வொரு வருடமும் யுத்தம் எங்களுடைய நினைவிலிருந்து விலகிப் பின்னே போய்க் கொண்டிருந்தது. ஆனால் அப்பொழுது நடைபெற்ற வீரச் செயல்களின் மட்டும் பசுமையாக இருக்கின்றன.
மக்லுஷா நதி கரையில் அந்தப் பெண் காட்டிய வீரத்தையும் தியாகத்தையும் நாங்கள் மறக்கவில்லை. நோவா- பெட்ரோவ்ஸ்கொயே ஒரு சிறிய கிராமம். இன்று அங்கே போய்ப் பாருங்கள். அதே இடத்தில் இன்று ஒரு புது வீடு கட்டப்பட்டிருப்பதை காணமால். ”மாபெரும் தேசப் பக்தப்போரின் போது அலெக்ஸாண்ட்ரா கிரிகோரியெவ்ன, பியோத்தர் இவானெவிச் குஸ்னெட்ஸோவ் காட்டிய வீரத்துக்காக!” என்று அந்த வீட்டின் கதவின் மீது பொறிக்கப்பட்டிருப்பதை காணலாம். யுத்தம் முடிந்தும் டாங்கி வீரர்கள் அங்கே வந்து இந்த வீட்டைக் கட்டினார்கள்.
மக்லுஷா நதி அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த நதியின் மேல் கரையில் வராந்தாவும் முன்வாசலும் கொண்ட ஒரு வீடு காணப்படுகிறது. அதன் சன்னற் கதவுகள் பிரகாசமான உலகத்தை நோக்கி திறந்திருக்கின்றன.
முந்தைய பதிவுகள்:
சோவியத் வீரன் டான்கோ
சோவியத் வீரன் டிட்டாயெவ்
Filed under: தோழர் ஸ்டாலின் | Tagged: அக்டோபர், அரசியல், இரண்டாம் உலகப்போர், உழைப்பாளிகள் தினம், கம்யூனிஸ்ட் கட்சி, சோசலிசம், சோவியத், டிசம்பர் 21, நிகழ்வுகள், பாட்டாளி வர்க்கம், பிறந்த தினம், பூவுலகில் சொர்க்கம், மார்க்சியம், ரஷியப்புரட்சி, ரஷியா, லெனின், ஸ்டாலின் |
Leave a Reply