கூடங்குளம் அணு உலையினால் மின்சாரம் கிடைத்து அதனால் மின்வெட்டு போய் விடும் என்ற அரசு மற்றும் தினமலர்(ம்) போன்ற ஊடகங்களின் நச்சுப் பிரச்சாரத்தை முறியடிக்கும் விதமாக எழுதப்பட்ட பாடல்.
*******************************
பவரு கட்டு; பவரு கட்டு; பவரு கட்டு – அந்த
பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!
கோரஸ்: அந்த பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!
கூடங்குளம் இயங்கினாக்க மறைந்திடுமா பவரு கட்டு…!
இதுக்குமுன்னே ஏண்டா இல்ல இத்தன நேரம் பவரு கட்டு…!
அந்த அணு உலையை இயக்குறதுக்கு அரசு போடும் சாட்டுக்கட்டு!
அந்த ஆய்வு குழு நாலுபேரும் அம்மாவோட நாடக செட்டு!
பவரு கட்டு; பவரு கட்டு; பவரு கட்டு – அந்த
பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!
கோரஸ்: அந்த பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!
சிறுதொழில் விவசாயம் பாதி நாலு மின்வெட்டு
பென்சருக்கும் ஹுண்டாய்க்கும் பல்லாயிரம் மெகாவாட்டு
அந்த அணு உலையை இயைக்கி புட்டா நிக்காதாம் பம்புசெட்டு
சொல்லுற ஆர்-எஸ்-எஸ்ஸும் காங்கிரசும் பன்னாட்டுக்கு மைக்கு செட்டு….
பவரு கட்டு; பவரு கட்டு; பவரு கட்டு – அந்த
பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!
கோரஸ்: அந்த பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!
உலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு…!
சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு
அட மாப்பிள்ளைகு எய்ட்ஸ்ன்னு மனவரையில தெரிஞ்சுட்டு
நீ மாலபோட சொல்லுவியா… நீ பெத்த மகளுக்கு….!
பவரு கட்டு; பவரு கட்டு; பவரு கட்டு – அந்த
பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!
கோரஸ்: அந்த பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!
****************
தொடர்புடைய பதிவுகள்:
கூடங்குளம் மக்களோடு கரங்களை இணைத்திடு! நாட்டை மீண்டும் காலனியாக்கும் அணு உலையை விரட்டிடு!!
Filed under: கூடங்குளம் | Tagged: அணு உலை, அணு உலை ஆபத்து, அணு மின்சாரம், அணுமின் நிலைய விபத்துக்கள், அப்துல் கலாம், அமெரிக்கா, இடிந்தகரை, இடிந்தகரை மக்கள் போராட்டம், கதிர் வீச்சு, கன்னியாகுமரி, காங்கிரசு, கூடங்குளம், கூடங்குளம் அணு மின்நிலையம், நாகர்கோவில், பா.ஜ.க, பாடல்கள், புஜதொமு, பெவிமு, பேரணி, ம.க.இ.க, மக்கள் கலை இலக்கியக் கழகம், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், முற்றுகை, ரசியா, விவசாயிகள் விடுதலை முன்னணி, விவிமு, HRPC |
தமிழ் திரட்டி ( http://www.tamiln.org ) தமிழன்.