ஒரு பாமர மாணவனின் கேள்விக்கு, இதோ தமிழக அரசின் பதில் மற்றும் சாதனை விளக்கம்.
மாணவர்களின் கேள்வி (மா.கே): மாணவர்களாகிய எங்களுக்கு கல்வி வேண்டாவே வேண்டாம். ஏனென்றால், எங்களுக்கு அறிவு வளர ஆரம்பித்து, அதன்முலம் சிந்திக்க தொடங்கிவிடுவோம். பின்பு எங்களின் பிற அடிப்படை உரிமைகளையும் கேற்க தொடங்கிவிடுவோம்.
தமிழக அரசின் பதில் (த.ப): உங்களின் கோரிக்கை ஏற்கனவே மிக சிறப்பாக நிறைவேற்றப்பட்டுவறுகிறது. ஆனால், இதை வெளியே தெரியாமல், சத்தமில்லாமல் செய்துள்ளோம். அதுதான், அரசுப் பள்ளிகளின் தரம் தாழ்த்துவது – இழுத்து மூடுவது என்ற கொள்கை. ஒரு குறிப்பான சாட்சி வேண்டுமென்றால், இந்த மாதம் சென்னையில் மட்டும் “30 மாநகராட்சி பள்ளிகளை” மூடியுள்ளோம் (ஆதாரம்: தமிழ் ஒசை, 11/06/09: “30 மாநகராட்சி பள்ளிகள் மூடல்”). இப்ப ஜாலியா? இது மட்டுமா, தமிழகம் முழுவதும் நிறையப் பள்ளிகளை மூடியுள்ளோம்.
மா.கே: தமிழகம் முழுவதும் இது போல் எத்தனை பள்ளிகளை மூடியுள்ளீர்கள்?
த.ப: அது பரம ரகசியம். ஏன்னா, நாங்கள் தொடர்ச்சியா அரசுப்பள்ளிகளை மூடிக் கொண்டே உள்ளோம்/மூடுவோம்.
மா.கே: மக்களுக்கு என்ன காரணம் சொல்லி பள்ளிகளுக்கு மூடு விழா நடத்தினிர்கள்?
த.ப: போதிய மாணவர்கள் சேரவில்லையென்று.
மா.கே: நிறைய மாணவர்கள் தனியார் பள்ளிகளில், அவங்க அம்மாவின் தாலியை அடகு கடையில் வைத்து சேருகிறார்களே?
த.ப: அதுவா, தனியார் கல்வி வள்ளல்களின் கல்லா குறைந்துவிடக்கூடாது என்பதற்காக.
மா.கே: நிறைய அரசுப் பள்ளிகளில், அதிக மாணவர்கள் இருந்தும் போதிய ஆசிரியர்கள் இல்லை என்று சொல்லுகிறார்களே?
த.ப: இது எதிர் கட்சிகளின் சதி…
மா.கே: அப்போ, அந்த எதிர் கட்சி ஆட்சி செய்யும் போது?
த.ப: அது எங்களின் சதி அல்ல…
மா.கே: அரசுப் பள்ளிகளில் ஏன் போதிய ஆசிரியர்கள் இல்லை?
த.ப: இந்த பிரச்சினையை சிறப்பாக முடித்துள்ளோம். அதெப்பிடினா, “20 மாணவர்களுக்கு 1 ஆசிரியர்” என்பதை “90 மாணவர்களுக்கு 1 ஆசிரியர்” என்று மாத்திவிட்டோம்.
மா.கே: நிறைய அரசுப் பள்ளிகளிள், சுவர் இடிந்து, கழிப்பிட வசதியில்லாமல் பாழடைந்த பங்களா போல் உள்ளதே?
த.ப: அதுவா, நிறைய மாணவர்கள் பேய் பங்களாவை பார்க்கவேண்டும் என்றார்கள்.
மா.கே: ஆமாம், நாங்கள் பள்ளிகளே வேண்டாம் என்கிறோம். ஆனால், தனியார் பள்ளிகள் புற்றீசல் போல் பெருகுகின்றனவே? அரக்கதனமாக பணம் பிடுங்குகிறார்களே?
த.ப: அதுவா, கல்வி வள்ளல்களின் குடும்பம் சோறு இல்லாமல் பிச்சை எடுத்து சாப்பிடுகிறார்கள். அதை போக்கவே, தனியார் பள்ளிகள் புற்றீசல் போல் பெருகுவதை நாங்கள் கண்டும் காணமல் இருந்துவிடுகிறோம். எடுத்துக்காட்டாக, சாராய ரவுடி ஜேப்பியரின் குடும்பம் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல், நேற்று கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பிச்சை எடுத்துட்டு இருந்தாங்க. அதனால தான், தாய்மார்களின் தாலி சேட் கடையில் அடமானம் பீஸ் கட்டினாலும் நாங்கள் கண்டு கொள்வதில்லை.
மா.கே: ஆனா, சில பேரு கல்வி அடிப்படை உரிமை என்று சொல்லுகிறார்களே?
த.ப: எங்களுக்கு இந்த “அடிப்படை உரிமை” என்ற வாக்கியத்திற்கு அர்த்தம் தெரியாது. அதை அமெரிக்க எஜமானன் சொல்லி தரவில்லை.
மா.கே: ஆனா, கரண்ட் பில் இரண்டு நாட்கள் கட்ட மறந்துட்டா, பீஸா ஏன் பிடுங்குகிறீர்கள்?
த.ப: அது எங்களின் அடிப்படை கடமை.
மா.கே: வேறேன்னாவெல்லாம் மாணவ சமுதாயதிற்கு செய்துள்ளீர்கள்?
த.ப: மாணவர்கள் நன்றாக குடிக்கட்டும் என்று, ஊரெங்கும் சாராய கடையை திறந்துள்ளோம். குறிப்பா சொன்னா, கோயம்பேடு மார்க்கெட்டை சுற்றி நாங்கு சாராய கடைகளை திறந்துள்ளோம். ஏன், நிறைய ஊரில் பஸ் ஸ்டாண்டில் கூட சாராய கடையை திறந்துள்ளோம். விழுப்புர மாவட்டத்தில் உள்ள 300 கி.மீ நெடுஞ்ச்சாலையில் மட்டும் 70 சாராய கடையை திறந்துள்ளோம். இந்த சாலையில் இரண்டு நாட்களுக்கு 5 பேர் சாலை விபத்தில் இறந்தாலும் நாங்கள் கண்டு கொள்வதில்லை. (தமிழ் ஒசை, 15/06/09)
மா.கே: ஆமாம், தனியார் பள்ளி நல்லா தரமுனு சொல்லுராங்க. ஆனால் இந்த வாரம் சென்னையில் தனியார் பள்ளியில் ஒரு மாணவன் ஹாக்கி கோல் போஸ்ட் விழுந்து இறந்துவிட்டானே? (தி ஹிந்து, 17/06/2009)
த.ப: அதெல்லாம், தரம் தரமுனு தனியார் பள்ளியை நோக்கி ஒடும் பெற்றோர்களின் பிரச்சனை. காசை கொட்டி குடுக்கும் அவர்களின் பிரச்சனை.
மா.கே: மற்ற சாதனைகள்?
த.ப: நாங்கள் நிறைய சாதனைகள் செய்துள்ளோம். சாராய ரவுடி ஜேப்பியரின் கல்லூரியில் ராபின்வாஸ் முதல் விவேக் வரை கொட்டடி கொலைகளை கண்டுகொள்ளவே இல்லை. மிகச் சிறந்த சாதனையின்னா, கும்பகோணத்தில் 92 பச்சிழம் குழந்தைகள் கதற, கதற சாக காரணமாயிருந்தோம் (2003). இதன்மூலம், அந்த பெற்றோர்களுக்கு எவ்வளவு புண்ணியம் செய்துள்ளோம்???
Filed under: 1 | Leave a comment »