திப்பு, மருது சகோதரர்கள், கட்டமொம்மன், தீரன் சின்னமலை என ஆரம்பித்து பகத்சிங் முதலான விரர்களின் விடுதலைப் போராட்டத்தின் காரணமாகவும், எங்கே இந்த நாடு உண்மையான புரட்சியாளர்களிடம், உழைக்கும் மக்களிடம் சென்று விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவும், ஏற்கனவே இரண்டாம் உலகப்போரில் பெரிய பொருளாதார பின்னடைவை சந்தித்ததாலும் ஆங்கிலேய அரசாங்கம் உடனடியாக தங்களது அடியாளான காங்கிரஸ் என்ற துரோககளிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு சென்ற நாள் தான் ஆகஸ்ட் 15.
ஆக இந்த குறைந்தபட்ச அதிகார மாற்றம் கூட நீண்ட நெடிய விடுதலைப்போரின் மூலம் தான் கிடைத்தது. ஆனால் இது குறைத்து இன்றைய தலைமுறை மாணவர்-இளைஞர் சமூகத்திற்கு தெரிய கூடாது என்பதற்காக தான் பகத்சிங், திப்பு போன்றவர்களின் போராட்டம் குறித்து நமது பாடப்புத்தகங்களில் கூறாமல் ஆகஸ்ட் 15 என்பது ஏதோ காந்தி சென்று கடையில் வாங்கி வந்து கொடுத்த மிட்டாய் போல கதைகளை எழுதி குவித்து உள்ளது இந்திய ஆளும் வர்க்கம்.
ஏனெனில் துரோகம் 65 ஆண்டுகளாக தொடர்ந்து அரசாளுவதால் தான். பகத்சிங் எழுத்தை படிக்கும் மாணவன் , நாட்டை அமெரிக்காவுக்கு கூட்டி கொடுப்பதையே வேலையாக வைத்து உள்ள துரோகிகளை சும்மா விட மாட்டான் என இந்திய ஆளும் வர்க்கத்துக்கு தெளிவாக தெரியும் என்பதால் தான்.
ஆக பெரும்பாண்மை மக்கள் தினசரி 20 ரூபாய் கூட வருமானம் இன்றி பசி, பட்டினி உடன் வாழும் நாட்டில் தான் அம்பானி போன்ற உலக பணக்காரர்களின் முதல் இடங்களை வகிப்பவர்கள் வாழும் வக்கிரத்தை ஏற்படுத்தியது ஆகஸ்ட் 15!
நாம் கல்வி இன்றியும், மருத்துவம் இன்றியும் இலவச புளுத்த அரிசியை மட்டும் நம்பி உயிர் வாழ கூடிய நிலையினை ஏற்படுத்தியது ஆகஸ்ட் 15!
இப்படி உலகமய கொள்கையையே உயிர்மூச்சாக கொண்டு உள்ள ஆகஸ்ட் 15 என்ற போலி சுத்ந்திரத்தை நாம் கொண்டாட முடியுமா?
முடியாது.
திப்பு, மருது,பகத்சிங் நேசித்த ஒரு உண்மையான விடுதலையை சாதிக்கும் நாள் தான் நமது விடுதலை தினமாக இருக்கமுடியும். அதற்கு அவர்கள் நடத்திய அதே விடுதலைப்போரை நாம் நடத்தி முடிக்க வேண்டும்.
இந்தப்போர் எங்களோடு தொடங்கவும் இல்லை!
எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதும் இல்லை!
– என பகத்சிங் விடுத்த போர்க்குரல் உங்கள் காதுகளில் கேட்கவில்லையா…
தொடர்புடைய பதிவு:
போலி சுதந்திர தினக்கொண்டாட்டத்தை புறக்கணிப்போம்! மீண்டுமொரு விடுதலைப் போரை முன்னெடுப்போம்!
கஞ்சி ஊத்த வக்கில்ல என்னடா கெவர்மெண்டு – பாடல்
காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு : பு.ம.இ.மு
இந்தியா வல்லரசாகவில்லை, அமெரிக்காவின் அடியாளாகிறது!
கவிதை: ஆகஸ்டு 15க்கு ஆழ்ந்த அனுதாபங்கள் !!
விடுதலைப் போரின் வீர மரபு உங்களுக்கு தெரியுமா?
வந்தே மாதரம் பாடமறுப்பவன் தேச விரோதியா?
எது தீவிரவாதம் ? யார் தீவிரவாதிகள்?
வந்தே ஏமாத்துறோம் – ஒரு தேச பக்தி பாடலா?
Filed under: போலி சுதந்திரம் | Tagged: அகிம்சை, அரசியல், ஆகஸ்ட் 15, இந்தியா, இந்தியாவின் சாதனைகள், ஓட்டுப்பொறுக்கி அரசியல், கல்வி கார்ப்பரேட்மயம், கவிதைகள், கிராமம், சமூகம், சினிமா, தனியார்மயம், தேசபக்தி, தோழர் துரை.சண்முகம், நிகழ்வுகள், பசுமை புரட்சி, புதிய கலாச்சாரம், மறுகாலனியாக்கம், வறுமைக்கோடு, விவசாயம் |
நல்ல பதிவு… நம்ம பதிவுக்கும் வாங்க…
http://varikudhirai.blogspot.com