• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 220,449 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

அரசு பள்ளிகளில் கண்கானிப்பு கேமரா: மாணவர்களா? குற்றவாளிகளா?

இதுவரை தனியார் பள்ளிகளில் மட்டுமே கண்கானிப்புக் கேமரா பொருத்தப்பட்டு மாணவர்களை கண்கானிப்பது என்ற பெயரில் டார்ச்சர் செய்வது, தண்டனை கொடுப்பது என்பது இருந்து வந்தது. தற்போது திருவான்மியூர் அரசு பள்ளியில் கண்கானிப்பு கேமரா பொருத்தப்பட்டு மாணவர்கள் கண்கானிக்க தொடங்கிவிட்டனர். இது குறித்த தி இந்து பத்திரிக்கையில் வந்த செய்தி இதோ: Big Brother or benign eye? CCTV debate rages on

எதுக்கு கேமரா என்று கேட்டால்   ‘குற்றத்தை தடுக்கிறோம்’ என்ற வழக்கமான பல்லவியை பாடத்தொடங்கி விடுகின்றனர். மனிதனை பண்படுத்துவது தான் கல்வி. அந்த கல்வியை மாணவனுக்கு அளிக்கவேண்டிய கல்வி நிலையங்கள் எப்படி குற்றம் நடக்கும் இடமாக மாறமுடியும்?

 மேலும் ஹிந்து பத்திரிக்கை செய்தியில் ஒரு ஆசிரியர் கூறியிருப்பது போல தவறு செய்யும் மாணவனை கேமரா எப்படி தடுக்கும்? அம்மாணவனின் பெற்றோரை வரவழைத்து அவர்கள் மகன் செய்த தவறுக்கு தண்டனை கொடுக்க நிரூபிக்கும் சாட்சியாகத்தான் பயன்படுத்த முடியும்.

 வீட்டுவாடகைக்கு குடியிருப்போர்கள் அனைவரையும் ‘தகவல் திரட்டுவது’ என்ற பெயரில் குற்றவாளிகள் போல சித்தரிக்க காவல்துறை முற்பட்டதைப் போல மாணவ்ர்கள் என்றாலே தவறு செய்பவர்கள் என சித்தரிக்கவே இந்த கண்கானிப்பு கேமரா. இதுவரை தனியார் கல்வி முதலாளிகள் தங்கள் தரமான கல்விக்கு’ உதாரணமாக காட்டிய கேமராவை அதே வழியில் பயன்படுத்தி மாணவர் சமூகத்தை குற்றாவாளி கூண்டில் ஏற்றும் அரசின் முயற்சியை தொடக்கத்திலேயே கிள்ளி எறிய போகிறோமா? இல்லை குற்றவாளி கூண்டில் நிற்கப்போகிறோமா? என்பது தான் மாணவர்களாகிய நமது முன் உள்ள கேள்வி.

தொடர்புடைய பதிவுகள்

One Response

  1. அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா
    மாணவர்களா? குற்றவாளிகளா?
    தமிழக அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது அவர்க்ளின் இயல்பான வளர்ச்சியை பாதிக்கும்.மேலும் மன்மோகன் அரசும் இலவச செல்போன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தௌள்ளது.இவை அனைத்துமே அரசு பாசிசமயமாகிவருகிறது என்பதையே குறிக்கிறது.

Leave a comment