• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 220,449 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

அப்துல்கலாம்: பயந்தால் கோமாளியாக தொடர முடியாது!

 பல அணுசக்தி தலைவர்களே நமது நாட்டின் சுயசார்பை இழக்க வேண்டிவரும், உலகில் தோரியம் அதிகம் கிடைக்கும் இரண்டாவது நாடான இந்தியா அதிலிருந்து மின்சாரம் தயார் செய்வதில் பல்வேறு முன்னேற்றங்களை சாதித்து வருவதை நிறுத்த வேண்டி வரும் என அமெரிக்காவுடனான 123 ஒப்பந்தத்தை எதிர்த்தனர். ஆனால் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் என்ற அடிமைசாசனத்தை நிறைவேற்ற வேண்டும், அது நாட்டு நல்லது என தொடர்ந்து அதை ஆதரித்த தொடர்ந்து பேசியவர் அப்துல்கலாம் . அதனால் மத்திய அரசு கவிழ்ந்து விடும் நிலை ஏற்பட்ட போது அமர்சிங்-யை சந்தித்து அணுசக்தி அவசியம் (அரசை காப்பாற்ற அமெரிக்காவால் கையூட்டு கொடுக்கப்பட்டது – விக்கிலீக்ஸ்) குறித்து பேசி ச்மாஜ்வாதி ஆதரவை பெற்று தந்தார்.

இவ்வாறு தான் விஞ்ஞானி அல்ல, கோமாளி (+புரோக்கர்) தான் என்பதை அப்போதே நாட்டுக்கு அறிவித்தவர். இவர் வந்து, கூடங்குளம் அணு உலையினை ஆய்வு செய்து பாதுகாப்பை என்னவென்று உறுதி செய்வார் என்பதை ஆளும் வர்க்கத்தை மட்டுமல்ல,அனைவரும் அறிந்து கொள்ளக்கூடிய ஒன்றே.

ஏற்கனவே ஆங்கில நாளிதழ்களில் கூடங்குளம் அணு உலையினை ஆதரித்து வேறு எழுதிவிட்டதால் போராட்ட குழுவினரும் அவரை சந்திக்க விரும்பவில்லை. அதை விட கூடங்குளம் வந்த கோமாளி கலாமும் போராட்டக்காரர்களை சந்தித்தால் அவர்கள் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்பதால் இடிந்தகரை செல்லாமல், அணு உலை ஆதரவாளர்களை மட்டும் சந்தித்து விட்டு , பாதுகாப்பு பிரமாதம் என எழுதிவைத்த அறிக்கையினை வாசித்துவிட்டு கிளம்பினார்.

அந்த அறிக்கையுடன் போராடும் மக்களை பார்த்து,

பயந்தால் வரலாறு படைக்க முடியாது, கல்லணை பார், தஞ்சை கோவிலை பார் என கேவளப்படுத்தும் விதமாக உலறிவிட்டு போயுள்ளார் இந்த கோமாளி.

ஐயா கலாம அவர்களே!

கண்டிப்பாக உங்களால் மட்டும் தான் இப்படிப்பட்ட கோமாளித்தனங்களை செய்ய முடியும். எதிர்க்கவர்களின் கேள்வியை மடைமாற்றி திசை திருப்பும் சகுணி வேலையை தான் சொல்கிறோம்.  கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு குறித்து ரஷிய நிறுவனங்கள் சமர்பித்த அறிக்கையில்;

1) குறிப்பாக நில நடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களை கணக்கில் கொள்ளாமல் அணு உலை கட்டப்பட்டு உள்ளது

2) 1.6 கிமீ க்குள் மக்கள் யாரும் வசிக்க கூடாது என்ற விதியினை பின்பற்றவில்லை, 1 கிமீ க்குள் மக்கள் வசித்து வருகின்றனர்.

இது மாதிரி பல குறைபாடுகளுடன் கட்டப்பட்டு வரும் அணு உலை மூடவேண்டும் என்பதே சரி. ஆனால் இப்படி நியாயமான கேள்விகள், அறிக்கைகளுக்கு பதில் சொல்லாமல் ஆதரவாளர்களை சந்தித்துவிட்டு வெற்று அறிக்கையினை வாசிக்க, கண்டிப்பாக அப்துல் கலாம் ஆகிய உங்களால் தான் முடியும். எவ்வளவு தான் அம்பலப்பட்டு போனாலும் கோமாளியாக தொடர்ந்து ஆட்டத்தை உங்களால் தான் ஆட முடியும்.

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம் மக்கள் போராட்டம்: அணு மின்நிலையத்தை மூடு!

4 Responses

  1. ஐயா , தங்கள் கட்டுரை வரைந்த விதம் மிக அருமை …

    திரு . அப்துல் கலாம் அவர்களை கோமாளி என்று நீங்கள் வர்ணித்ததின் மூலம் போர்ராட்ட குழுவினரும் , நீங்களும் அறிவாளிகள் என்பதை நிரூபித்து விட்டீர்கள் . இல்லை என்றால் Phd ( Political Science ) முடித்தவர் அணு விஞ்ஞானியாய் ஆகவும் முடியாது , அறிவியலில் Doctorate முடித்தவர் கோமாளியாகவும் முடியாது . யார் யார் என்பதை நீங்களே யோசித்து கொள்ளுங்கள் .

    நீங்கள் எழுதியுள்ள கட்டுரையிலும் எனக்கு மாற்று கருத்துகள் உள்ளது .

    // குறிப்பாக நில நடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களை கணக்கில் கொள்ளாமல் அணு உலை கட்டப்பட்டு உள்ளது//
    கொஞ்சம் இந்த பதிவை வாசித்து பாருங்கள் http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_20.html

    // 1.6 கிமீ க்குள் மக்கள் யாரும் வசிக்க கூடாது என்ற விதியினை பின்பற்றவில்லை, 1 கிமீ க்குள் மக்கள் வசித்து வருகின்றனர். //
    நீங்கள் கூறுவது மிகவும் தவறான தகவல் . இந்தியாவின் எல்லா அணு மின் நிலயங்களும் 1 . 6 கிலோ மீட்டர் சுற்றளவு வரையும் ( அணு உலையில் இருந்து) காம்பௌன்ட் சுவர் எழுப்பி இருப்பார்கள் . நீங்கள் சொன்ன கூடங்குளம் அணுமின் நிலையமும் அதற்க்கு விலக்கல்ல . சந்தேகம் இருந்தால் அங்கு போய் பாருங்களேன் .

    உங்களின் கடைசி வரிகளுக்கு நான் சொல்லும் ஒரே பதில் இது தான் ” தூங்குகிறவனை எழுப்பி விடலாம் . ஆனால் அப்பாவி மக்களின் பின்னால் ஒளிந்துகொண்டு தூங்கிறவனை போல நடிக்கிரவர்களை எழுப்ப முடியாது ”

    நன்றி

  2. ஓய்வுதியம் பெற்றுவரும் கோமாளி இதைத்தான் சொல்வார். பிழைப்புக்கார கோமாளி அவர்

  3. இந்தியன் அவர்களே!

    நில நடுக்கம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களை கணக்கில் கொள்ளாமல் கட்டப்பட்டு உள்ளது என்பதற்கான அறிக்கையின் சுட்டி இதோ:

    http://www.bellona.org/articles/articles_2011/rosatom_report

    அதே போல இத்தனை கிலோ மீட்டர்க்குள் எவ்வளவு மக்கள் இருக்க கூடாது, நகரம் இருக்க கூடாது, சுற்றுலா தளங்கள் இருக்க கூடாது என பல விதிகள் மீறபட்டு உள்ளது என பத்திரிக்கைகளில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

    அது சரி இந்தியன்,

    நீங்களே இவ்வளவு விளக்கங்களை(?) வைத்து உள்ள போது கலாம் அவர்கள் ஏன் இடிந்தகரை செல்லாமல் போனார்.
    பணக்காரன் வீட்டுக்குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் போய் வல்லரசு கனவை பற்றி பிதற்றும் கலாம், மக்களை சந்திக்க மாட்டாரா? இல்லை டின்னு கட்டி விடுவார்கள் என்ற பயமா?

  4. நல்ல அருமையான கட்டுரை….தான் பிறந்த மண்ணுக்கு ஒன்றுமே செய்யாத மனிதர் என்று சொன்னால் ….இல்லை இல்லை அவர் இந்தியர் என்று சொல்லிக்கொண்டு ஒரு சில சொற்ஜாலம் புரிகின்றவர்கள் இங்கும் வந்து தனது கருத்துக்களை பதிந்து விட்டு போயி இருக்கின்றார்கள்.

Leave a comment