அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
நவ. 7, 1917, உழைப்பது மட்டுமல்ல, நம்முடைய வேலை, நாட்டை ஆளவும் முடியும் என்பதை நிரூபித்த நாள். சுரண்டும் வர்க்கத்தை வீழ்த்தி உழைப்பவர்களுக்கான அரசியல் அதிகாரத்தை படைத்த நாள். இந்த பூவலகில் சோசலிசம் என்ற சொர்க்கத்தை உழைப்பவர்களுக்கு அறிமுகப்படுத்திய நாள். அது தான் ரசியப் புரட்சி நாள். உழைக்கும் மக்களுக்கான உண்மையான கொண்டாட்ட நாளும் இதே நாள் என்பதை நம் நினைவில் நிறுத்துவோம்!
பாட்டாளி வர்க்கத்தின் தலைவரான் ஆசான் தோழர் லெனின் தலைமையில், ரசிய கம்யூனிச கட்சியால் உருவாக்கப்பட்ட உலகின் முதல் சோசலிச அரசு, தமது குடிமக்கள் அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம், சுகாதாரம், குடிநீர் என அனைத்து அத்தியாவசியத் தேவைகளையும் உடனடியாகத் தீர்த்து வைத்த்தோடு, அனைவருக்கும் கல்வி-வேலையும் உத்தரவாதப்படுத்தி சாதனைப் படைத்தது.
ஆனால், நம் நாட்டில் நிலைமை?
விலைவாசி விசம் போல் ஏறி வருகிறது. தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வீதியில் வீசிப்படுகிறார்கள், விவசாயம் அழிந்து தற்கொலை, பட்டினிசாவு என விவசாயிகள் லட்சக்கணக்கில் மடிந்து வருகிறார்கள். கல்வி வியாபாரமாக்கப்பட்டு விட்ட்தால் ஏழை மாணவர்கள் தற்குறியாக்கப்படுகிறார்கள். சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் இந்த நாடே பன்னாட்டுக் கம்பெனிகளின் லாபவெறிக்காக கூறுபோட்டு விற்கப்படுகிறது. இக்கொடுமைகளை எதிர்த்து போராடும் மக்கள் மீதோ இராணுவம், போலீசை ஏவி அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு ஒரு உள்நாட்டுப் போரையே நட்த்தி வருகிறது. மன்மோகன் – சோனியா கும்பலின் காங்கிரஸ் அரசு.
இதற்கெல்லாம் என்ன காரணம்?
இந்த அரசு மனமுவந்து ஏற்று நடைமுறைப்படுத்திவரும் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்னும் மறுகாலனியாக்க்க் கொள்கைதான். இது தான் இன்று மக்களை மரணக்குழியில் தள்ளி வருவதோடு, நாட்டை மீண்டும் அடிமை (மறுகாலனி)யாக்கி வருகிறது.
இக்கொடுமை நமக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள ஏழை நாடுகள் மீது உலக முதலாளித்துவம் திணித்து வரும் சுரண்டல் கொள்கையான் மறுகாலனியாக்க்கக் கொள்ளை. இதை ஒழிப்பதே உலக உழைக்கும் மக்களின் மீதான இன்றைய கடமை. இக்கடமையை நிறைவேற்ற ஏழை நாட்டு உழைக்கும் மக்களோடு ஒன்றிணைவோம். உலக முதலாளித்துவ சுரண்டலை – மறுகாலனியாக்க்கக் கொள்கையை முறியடிப்போம். இதற்கு தெற்காசிய மக்களுக்கு நாம் ஒரு விடிவெள்ளியாகத் திகழ்வோம். மறுகாலனியாக்கத்தை முறியடிக்க முதலில் நமது நாட்டில் மீண்டும் ஒரு விடுதலைப் போரை நக்சல்பாரிகள் தலைமையில் கட்டிமைப்போம். பன்னாட்டு முதலாளிகள் மற்றும் தரகு முதலாளிகளுக்கு மரண அடி கொடுப்போம். புதிய ஜனநாயகப் புரட்சியை நட்த்தி சமூக விடுதலையையும் சாதிப்போம். அதற்கு இன்றைய நவம்பர் புரட்சி நாளில் உறுதியேற்போம்.
தொடர்புடைய பதிவுகள்:
வெற்றிகரமான 7வது பதிப்பில் “ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம்!
“ஸ்டாலின் சகாப்தம்”
நவம்பர் புரட்சியை நெஞ்சிலேந்துவோம்
”அக்டோபர்” – சோவியத் திரைப்படம்
“பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!
நவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல்
நவம்பர் புரட்சி சோவியத் யூனியன் புகைப்படங்கள்
Filed under: நவம்பர் புரட்சி நாள் | Tagged: அக்டோபர், உழைப்பாளிகள் தினம், ஒளிக்குறுந்தகடு, சோவியத், பாட்டாளி வர்க்கம், பூவுலகில் சொர்க்கம், மக்கள்புரட்சி, ரஷியப்புரட்சி, ரஷியா, லெனின், ஸ்டாலின் |
Leave a Reply