காஷ்மீர் மக்கள், தனது உரிமைக்காக போராடுவதை எவ்வாறு பத்திரிக்கைகள் மறைக்கின்றன என்பதையும், எவ்வாறு அம்மக்களின் மனித உரிமையை இந்திய இராணுவம் மீறுகின்றது என்பதை டெல்லியில் உள்ள காஷ்மீரில் காணாமல் போனவர்களின் பெற்றோர் சங்கத்தோடு தொடர்புடைய உமா சக்ரவர்த்தி அம்பலப்படுத்துகிறார் (டைம்ஸ் ஆப் இந்தியா, 14/09/2009).
– பத்திரிக்கைகள் உண்மையான செய்தியை முழுமையாக தருவதில்லை. அவை, சம்பவத்தின் ஒரு பகுதியை மட்டும் வெளியிடுகின்றன. இவை, இந்தியாவில் உள்ள நடுத்தர வர்க்கத்தை, காஷ்மீர் பிரச்சனை அம்மக்கள் தேர்தலில் வாக்களித்ததால் முடிந்துவிட்டது என்று நம்பச் செய்வதாகவே உள்ளது.
– எந்த பத்திரிக்கையும் ஆயுதப்படையின் சிறப்பு அதிகாரம், கற்பழிப்பு, சிறையில் நடக்கும் கொட்டடி கொலைகள், இராணுவ மற்றும் ஆயுதப்படையின் ஆள் (உரிமைக்காக போராடுபவரை) கடத்தல் போன்றவற்றை பற்றி பேசுவதே இல்லை.
ஆக மொத்தம், இந்திய பத்திரிக்கைகள் காஷ்மீர் மக்களுக்கு துரோகத்தையே செய்கின்றன. அதை தேச பக்தி என்ற புதைசேற்றில் அடைத்துவிடுகின்றன.
Filed under: அடிப்படை உரிமை, போலி ஜனநாயகம் |
நன்றி நன்பரே உங்களை போல் நடு நிலையோடு சிலர் இருப்பதால் தான் இன்னும் இந்தியா இந்தியாவாக இருகிறது
நான் ஒரு எல்லை பாதுகாப்பு படை வீரன்.3 வருடம் காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றி இருக்கிறேன். அச்சமயங்களில் அம்மக்கள் படும் துயரங்களை பார்த்து என் கண்கள் கலங்கி இருக்கின்றன. ஊடகங்கள் இவ்விஷயத்தை இருட்டடிப்பு செய்வது நிஜமே.