• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 220,449 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

இந்தியாவில் யுரேனியம் எடுக்கப்படும் ஜாதுகோடா பற்றி உங்களுக்கு தெரியுமா?

பன்னாட்டு நிறுவனங்களின் இலாபவெறிக்காக கூடங்குளம் அணு உலை உள்ளிட்ட நாற்பது அணு உலைகளை இந்தியாவில் கட்ட திட்டமிட்டு உள்ளது இந்திய ஆளும் வர்க்கம். மனித குலத்திற்கு எதிரான அணு உலைகளை உலகில் பல நாடுகள் மூடி வரும் நிலையில் இந்தியாவில் அணு உலைகளை கட்ட களம் இறங்கி உள்ளது இந்திய ஆளும் வர்க்கம். அதிலும் தங்களுடைய நாடுகளில் அணு உலையினை மூடும் ஏகாதிபத்திய முதலாளிகளிடம் அணு உலையினை வாங்கும் போதே தெரிந்து கொள்ளலாம் இவர்களுடைய தேசப்பற்றின் யோக்கியதையினை.

 “ இந்தியாவில் இன்றளவும் 42% கிராமங்களுக்கு மின்சாரமே இல்லை” என்ற உண்மையிலிருந்து ’மின்சாரத்தேவை’ க்கு அணு உலை அவசியம் தேவை – என்ற இவர்களின் முழக்கம் யாருக்கானது என்பது வெட்டவெளுச்சமாகிறது.

இந்நிலையில் கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்று இந்திய ஆளும் வர்க்கமும், அவர்களின் எடுபிடிகளும் திரும்ப திரும்ப கூறிவரும் பொய்யுரைகள் அனைத்தும் அம்பலப்பட்டு போன நிலையில் இதோ இந்திய ஆளும் வர்க்கத்தின் யோக்கியதையினை திரைகிழிக்கிறது இந்த ஆவணப்படம்.

Buddha weeps in jadugoda

இந்தியாவில் யுரேனியம் எடுக்கப்படும் குறிப்பிடதக்க ஒரே இடமான ‘ ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள ஜாதுகோடா’ என்ற ஆதிவாசி மக்கள் வாழும் பகுதி இன்று எப்படி உள்ளது என்பதை Buddha weeps in jadugoda என்ற இந்த  ஆவணப்படம் விவரிகிறது. ஆதிவாசி மக்களுக்கு தெரியாமலேயே அவர்களுடைய வாழ்விடத்தை, குடிநீர் ஆதாரத்தை என அனைத்தையும் பயன்படுத்தமுடியாத நிலைக்கு மாற்றிவிட்டு அம்மக்கள் உயிரையே காவு கொடுக்கும் நிலைக்கு தள்ளி உள்ளது இந்திய ஆளும் வர்க்கங்கள் என்பதை இயக்குனர் ஸ்ரீ பிரகாஷ் தனது ஆவணப்படத்தில் பதிவு செய்து உள்ளார்.

ஜாதுகோடா மற்றும் அதனை சுற்றி உள்ள 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் இன்று யுரேனிய கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு உள்ளது.  யுரேனிய கழிவுகளை எந்த பாதுகாப்பும் இல்லாமல் வெட்டவெளியில் போட்டு வருவதும், யுரேனியம் எடுக்கப்படும் இடத்தை சுற்றி எந்த அறிவிப்பு பலகைகளும் இல்லாமல் உள்ளதையும், அதனை எடுக்கக்கூடிய தொழிலாளர்கள் விரைவிலேயே முடமாக்கப்படும் சூழலையும் காட்சிக்கு காட்சி விவரிக்கிறது ஆவணப்படம். இதனை பார்த்த பின் ‘அணு உலை பாதுகாப்பானது, கூடங்குளம் அணு உலையினை உடனே திறக்கவேண்டும்’ என பேசுபவர்களை என்ன செய்வது என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a comment