• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 220,431 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

பன்றி காய்ச்சல் நோய்க்கு தனியார் மருத்துவமனைகளின் சேவையோ சேவை?

இப்போது இந்திய முழுவதும் பன்றி காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரசு தனியார் மருத்துவமனைகளை பன்றி காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகளை அமைக்க கோரியது. அதுமட்டுமில்லாமல், அரசு கிங் நிறுவனத்தில் டெஸ்ட் செய்ய உதவும் என்றும் சொல்லியது. ஆனால், ஒரு தனியார் மருத்துவமனையும் இதற்கு முன்வரவில்லை. இதற்கு அவர்கள் கூரிய காரணம், அவர்களுடைய மருத்துவமனை கட்டடங்கள் தனி வார்டுகளை அமைக்க வசதியாக இல்லை என்று (டைம்ஸ் ஆப் இந்தியா, 12/08/2009).

உண்மையிலேயே அவர்கள் நினைத்தால் தனி வார்டுகளை அமைக்க முடியாதா?

நாடே பன்றி காய்ச்சலால் அவதி படும்போது தனியார் மருதுவமனைகளால் இது கூட செய்ய முடியாதா?

ஆபத்து காலத்தில் உதவி செய்யாத தனியார் மருதுவமனைகளால் நாட்டிக்கு என்ன பயன்?

தனியார் மருத்துவமனைகளின் ஒரே நோக்கம் லாபம் மட்டும் தான?

தனியார்மயம் தான் சரி என்று சொல்லுபவர்களே, இப்போது சொல்லுங்கள் இதுதான் நீங்கள் எதிர்பார்க்கும் தரமா?

தனியார் மருத்துவமனைகளின் தரம் இதுதான்:

எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் மீர்முஸ்தபா உசேன் சொல்கிறார், “சில தனியார் மருத்துவமனைகள் யுனானி, ஆயுர்வேத டாக்டர்களை பயிற்சியில் உள்ள டாக்டர்களாக காட்டி பொதுமக்களை ஏமாற்றுகின்றனர்”. சில மருத்துவமனைகள் ஆயாக்களுக்கு நர்ஸ் உடை அணிவித்து நிறுத்தி விடுகின்றன (தினமலர் 28/05/2009).

இப்போது சொல்லுங்கள் தனியார் மையத்தின் உண்மை முகம் சேவையா? தரமா? அல்லது லாபம் மட்டும் தானா?

4 Responses

  1. பன்றிக்காய்ச்சல் திட்டமிட்டு பரவுகிறதோ தெரியவில்லை பீதி திட்டமிட்டு பரப்பப்படுகின்றது. காரணம் இந்த நோய் பீடித்து செத்தவர்களெல்லாம் அதிகம் பேர் பணக்கார, மேல் தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்களே.

    என்னவோ தனியார் மருத்துவமனைகளுக்கு பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி அளித்தால் பீதி பிடரி அடித்துக்கொண்டு ஓடும் என நினைக்கிறேன்.

    கலகம்

  2. உண்மையிலேயே பல தனியார் மருத்துவமனைகள் தரமற்று தான் இருக்கின்றன. தனியார்மயமானால் தரம் கிடைக்கும் என்பது போலிதனமான மாயை.

    மக்களுக்கு மருத்துவம் செய்வதில் இருந்து நழுவ பார்க்கும் அரசும், பன்றி காய்ச்சலுக்கு மருத்துவம் செய்ய மறுக்கும் தனியார் மருத்துவமனை வியாபாரிகளும் கண்டிக்கத் தக்கவர்கள்.

  3. தனியார் மருத்துவமனைகளின் ஒரே நோக்கம் லாபம் மட்டும் தான். அதில் சந்தேகமே இல்லை.

  4. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான http://www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

Leave a comment