இந்தியாவின் கோதுமை களஞ்சியம் என்றழைக்கப்படும் பஞ்சாப் மாநிலத்தில் கூட விவசாயத்திற்கான இடுபொருட்களின் விலை உயர்வினாலும், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமலும் கூலி ஏழை விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அன்றாட நிகழ்வாகி விட்டது.
பெரும் பண்ணையார்களையும், பன்னாட்டு நிறுவனங்களையும் கொளுக்க வைக்க இப்படி கூலி ஏழை விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளிய ஆளும் வர்க்க கும்பல் தற்போது பள்ளிக்கூட மாணவர்களின் மதிய உணவிற்கான நிதியை கூட தேர்தல் விளம்பரத்திற்காக மாற்றிவிட்டு மாணவர்களை பட்டினி போடுகிறது.
‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற பாஜக-வின் கூட்டணி அரசு தான் பஞ்சாப் மாநிலத்தின் ஆளும் அரசாங்கம்.
வல்லரசு இந்தியா, ஒளிரும் இந்தியா என ஆளும் வர்க்கத்தின் கோஷங்களில் மட்டுமே வேறுபாடு. மற்றபடி எவன் ஆட்சிக்கு வந்தாலும் இந்திய போலி ஜனநாயகத்தில் மக்கள் நிலை என்னவோ ஒன்றுதான்.
தொடர்புடைய பதிவுகள்:
பஞ்சாப்: பிணக்காடாகும் கோதுமைக் களஞ்சியம்
Filed under: குறுக்கு வெட்டு பகுதி | Tagged: அகாலிதளம், அரசியல், ஆளும் வர்க்கம், இந்தியா, உண்மை நிலை, ஒளிரும் இந்தியா, ஓட்டுப்பொறுக்கி அரசியல், கோதுமை களஞ்சியம், தனியார்மயம், நிகழ்வுகள், பசுமை புரட்சி, பஞ்சாப், பன்னாட்டு முதலாளிகள், பள்ளி மாணவர்கள், பள்ளிக்கூடம், பாஜக, போலி ஜனநாயகத் தேர்தல், மதிய உணவு, மறுகாலனியாக்கம், வல்லரசு கனவு, வேடிக்கை | Leave a comment »