• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 213,729 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

எங்களையும் தூக்கிலிடு! உயர் நீதிமன்றம் முற்றுகை!! மக்கள் போராட்டம் வென்றது!!!

ராஜீவ் கொலைக்குற்றவாளிகள் என்று அரசாலும், ஊடங்களாலும் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தியும் , நளினி உள்ளிட்ட நால்வரையும் உடனே விடுதலை செய்யக்கோரியும் ம.க.இ.க, புமாஇமு, புஜதொமு,விவிமு, பெவிமு மற்றும் மனித உரிமை பாதுகாப்புமையம் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்  நடைபெற்றன. பல்வேறு அமைப்புக்களும் மாணவர்களும் தன்னெழுச்சியாக போராடிக்கொண்டிருந்த சூழலில் மூவருக்கும் 9ம் தேதி தூக்கு என்று திமிர்த்தனமாக அரசு அறிவித்தது.

மூவரின் மீதான தூக்கு என்பதுஅரசியல் நியாத்திற்கு கிடைத்த தூக்கு என்ற அடிப்படையில் 21 ஆண்டுகளாக சிறையில் வாடும் நால்வரையும் உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி ம.க.இ.க, புமாஇமு, புஜதொமு, பெவிமு ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று 30.08.2011 காலை 10.45 மணிக்கு முற்றுகையிடப்பட்டது. எப்போதும் போல் பேருந்து சந்தங்கள் மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும் அச்சாலையில் திடீரென ” விடுதலை செய்! விடுதலை செய் ! முருகன் சாந்தன் பேரறிவாளனை விடுதலை செய்” என்ற முழக்கம் விண்ணைப்பிளக்க, தொடங்கியது முற்றுகை. காவலர்கள் எதிர்பார்க்காதபடி நாலாபுறாமும் மாணவர்கள், பெண்கள், குழந்தைகள், தொழிலாளர்கள் என 300க்கு மேற்பட்ட தோழர்கள் சீறிப்பாய்ந்து வந்தார்கள் .

இதைக்கட்டுப்படுத்த முடியாமல் போலீசு தவிக்க, சாலையை மறித்தபடி தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  உயர் நீதிமன்றத்திற்கு உள்ளே இருந்த மக்கள், ஈழ ஆதரவாளர்கள் என பலர் தாங்களாகவே முழக்கங்களை எழுப்பினர், மறியலில் கலந்து கொண்டனர். இந்த திடீர் மறியலால் நீதிமன்ற சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்பாவிகளான அவர்களை தூக்கிலிடுவது சரி என்றால் எங்களையும் தூக்கிலிடுங்கள் என்று முழங்கினார்கள் 13 தோழர்கள் முகமுடியணிந்தடி தூக்குக்கயிறுடன்.  போலீசோ பெரும் படையுடன் வந்து தாக்குதலுக்கு வந்தது. அனைத்திற்கும் தயாராக வந்திருப்பதாக சொன்னவுடன் வாலை சுட்டிக்கொண்டு சென்றது.

வெளியே முற்றுகையிடப்பட்ட நிலையில் நீதிமன்றத்தின் உள்ளே  மூவரின் தூக்கை நிறுத்தக்கோரும் மனு விசாரணைக்கு வந்திருந்தது. தொடர்ந்து 1 மணி நேரம் முற்றுகை நடந்த நேரத்தில் மூவரின் மீதான தூக்கை 8 வாரத்திற்கு தள்ளி வைத்தது உயர் நீதிமன்றம். முற்றுகைக்கு தலைமை வகித்த  புமாஇமு  மாநில அமைப்பாளர் கணேசன்” மூவரின் தூக்கு தற்போது 8 வாரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மூவரின் தூக்கு ரத்தாகவும், நால்வரையும் உடனே விடுதலை செய்யவும் அடுத்தக்கட்ட போர்க்குணமிக்க போராட்டத்திற்கு தயாராக இருக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். பின்னர்  உயர் நீதிமன்ற முற்றுகை விலக்கிக்கொள்ளப்பட்டது. ஈழத்தை சேர்ந்தவர்கள், மாற்றுஅமைப்பினர் என பலரும் தோழர்களை வாழ்த்தினர்.அதே நேரத்தில் இறுதி வெற்றி கிடைத்துவிட்டதைப்போல சிலர் அதிகப்படியாக  மகிழ்ச்சியில் இருந்த போது புரட்சிகர அமைப்புக்களின் போராட்டமோ மீண்டும் ஒரு மாபெரும் போருக்குத்தயாராகும் படி அறைகூவல் விடுத்தது.

தொடர்புடைய பதிவு:

மூவர் தூக்கு நிறுத்தி வைப்பு! மக்கள் போராட்டம் வென்றது!

மூவர் தூக்குத் தண்டனையை உடனே ரத்து செய்!புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டக் காட்சிகள்!

    
      பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை இரத்து செய்ய வலியுறுத்தியும், அனைவரையும் உடனே விடுதலை செய்யக் கோரி

27.08.2011 பனகல்மாளிகை அருகில்

மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பில் ஆர்ப்பட்டம் நடைபெற்றது.
      சரியாக “4.30 மணிக்கு விடுதலை செய்! விடுதலை செய்! முருகன், சாந்தன், பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்!” என்ற விண்ணதிரும் முழுக்கங்களுடனும் செங்கொடிகள். பதாகைகள்.  முழக்கத்தட்டிகள் என ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தது.
      தலைமை வகித்து உரையாற்றிய ம.க.இ.க-வின் சென்னைக் கிளைச் செயலாளர் தோழர் வெங்கடேசன் பேரறிவாளன், முருகன், சாந்தன்,  நளினி ஆகியோர் ராஜீவ் கொலையாளிகள் என்றே அரசு
முதல் ஊடங்கள் வரை பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. தடா என்ற கொடுஞ் சட்டத்தின் கீழ் கடுமையான சித்திரவதைகளுக்குப்பின்தான் வாக்கு மூலம் பெறப்பட்டிருப்பதையும்,  தவறே செய்யவிலலை எனினும் அரசுக்காக, முதலாளிகளுக்காக வேலைசெய்யும் சிபிஐ‍ யின் யோக்கியதையும் விவரித்தார்.
       மேலும் அவா, தனது உரையில் “அப்பாவிகளான மூவறின் தூக்கை ரத்து செய்து, அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழக மக்களின் கோரிக்கை. இந்தக் ‘கருத்திற்காக உழைக்கும் மக்கள் அணிதிரண்டு போராடவேண்டும். இந்த அரசை எதிர்த்து யார் செயல்பட்டாலும் அவர்களுக்குத் தூக்கு தண்டனை என்பதுதான் இவ்வரசின் நீதி. ஆக உழைக்கும்
மக்கள் இந்த பாசிச கொடுங் கோன்மைக்கு எதிராக போராட வேண்டும்” என்று கூறினார்.
       அடுத்ததாக, சிறப்புரையாற்றிய பு.ஜ.தொ.மு-வின் மாநில இணைச் செயலர் தோழர்.சுதேஷ்குமார் மூவரின் தூக்கு தண்டனைக்கு எதிராக பல்வேறு அமைப்புக்கள் போராடிவருகின்றன.
அவைகள் இதற்குத்தீர்வாக இரண்டு வழியை முன் வைக்கின்றன. 1.கருணை வழி 2.சட்டப்பூர்வ வழி.
       கருணை வழியில் செல்பவர்களின் தலைவிதியோ ‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்றும்,  2007 வரை மூவரை உடனே தூக்கில் போட வேண்டும் என்று குரல் கொடுத்த ஜெயாவிடமே கருணையை கேட்கும் அளவுக்கு உள்ளது.

    சட்டத்தை பின்பற்றுபவர்களோ ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த வழிகாட்டுதலான “இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கருணைமனுவை நிறுத்தி வைத்தால் தூக்கினை இரத்து செய்யலாம்” என்ற கருத்தின் அடிப்படையில் வாதாடுகிறார்கள்.
 
    ஆனால் கருணையின்படியோ அல்லது சட்டத்தின் படியோ அல்ல இது ஒரு அரசியல் உரிமை.
மூவருக்குத்தூக்கு என்பது அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும் தவறு. இராஜீவ் கொலை என்பது அரசியல் நடவடிக்கை தன்னுடைய சுயநிர்ணய, தேச விடுதலைக்காக போராடிய மக்களை
ஒடுக்குவதற்காக இந்திய இராணுவத்தை அனுப்பி கொன்று குவித்த இராஜீவை கொலை செய்தார்கள்.

இதை உச்சநீதிமன்றமே பயங்கரவாத நடவடிக்கை அல்ல என்று கூறியுள்ளதையும் சுட்டிக்காட்டிப்பேசினார்.
    மேலும்”தடா என்ற பயங்கரவாதச்சட்டத்தின் படி போலீஸ் கடும் சித்திரவதைக்கு உட்படுத்தி வாக்கு மூலத்தை வாங்கிய சிபிஐ அதற்காக 60 நாட்கள் அரைநிர்வாணமாக சித்திரவதை செய்ததை
பேரறிவாளன் பத்திரிக்கைகளில் கூறியுள்ளதையும், இந்த தடா என்ற சட்டம் இல்லை எனில் இவர்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கியிருக்கவே முடியாது என சிபிஐ-ன் முன்னாள் இயக்குனர்
கார்த்திகேயன் கூறியதையும்” விளக்கிப்பேசினார். 
    20 ஆண்டுகளாக சிறையில் வாடிய படி என்ன குற்றம் செய்ததோம் என்பதை அறியாத அவர்களுக்கு தூக்கு செப்.9 என உறுதி செய்யப்பட்டுள்ளது. லட்சக்கணக்கில் தமிழர்களை
ராஜபக்சேவுடன் கூட்டு சேர்ந்து தெற்காசிய ரவுடியாகிய இந்தியா மே 18-ல் கொலை செய்ததற்கும், இந்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்டால் தூக்கு என்பதை நிருபிக்கத்தான் செப்.9. ஆக இந்த
இருதினங்களுக்கும் வேறுபாடில்லை.

 

பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்ற ஆண்டர்சன்-க்கு தண்டனை வழங்காத, 5000 சீக்கியர்களைக் கொன்ற காங்கிரசு கொலை காரர்களுக்கு தண்டனை வழங்காத இந்த அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சேவைபுரிந்து தற்போது தான் முதலாளிகளுக்காகவே உழைக்கும் மக்களுக்காக அல்ல என்பதை பட்டவர்த்தனமாக நிரூபித்திருக்கிறது.

     இந்த நால்வரை விடுதலை செய்யக் கோருவது அரசியில் உரிமை என்ற அடிப்படையில்,உழைக்கும் மக்கள் அனைவரும் இந்தக் கருத்துக்களை எங்கும் கொண்டு சென்று அரசுக்கு எதிரான
போராட்டத்தை தொடுத்து மீட்கப்பட வேண்டிய “மூவர் உயிர் மடுமல்ல ஈழப் போராட்டத்திற்கான நியாமும் தான்” என்று எழுச்சியுரையாற்றினார்.

     1 மணிநேரம் 30நிமிடம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்த்தில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர். கருணையினால் அல்ல, அரசியல்
நியாயத்திற்காக, அரசியல் உரிமைக்காக போராட வேண்டும் என்ற நம்பிக்கையை இந்த ஆர்ப்பாட்டம் விதைத்துள்ளது.

மூவர் தூக்கு தண்டனையை ரத்து செய்! விழுப்புரத்தில் விவிமு, புமாஇமு -தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்!!

 பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்!

அனைவரையும் விடுதலை செய்!

என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று (27.8.11) விழுப்புரத்தில் வி.வி.மு, பு.மா.இ.மு ஆகிய அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில்  சுமார் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தோழர் மனோகர் (விவிமு இணைசெயலர்) தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர் ஏழுமலை (விவிமு) மற்றும் தோழர் செல்வகுமார்(புமாஇமு) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்! ஆர்ப்பாட்டம்!!

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்!

அனைவரையும் விடுதலை செய்!

ஆர்ப்பாட்டம்

27.8.2011

பனகல் மாளிகை, சைதாப்பேட்டை

மாலை 4.30 மணி

தலைமை

தோழர் வே.வெங்கடேசன்,

சென்னைக் கிளை செயலாளர்,

ம.க.இ.க, சென்னை.

சிறப்புரை

தோழர் மா.சி. சுதேஷ் குமார்

மாநில இணைச் செயலாளர்,

பு.ஜ.தொ.மு., தமிழ்நாடு.

மக்கள் கலை இலக்கியக் கழகம்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

பெண்கள் விடுதலை முன்னணி

 • தடா எனும் கொடிய சட்டத்தின் கீழ் சித்திரவதை செய்து  பெற்ற வாக்குமூலத்தை வைத்து தூக்கு தண்டனையா?

 • 21 ஆண்டுகள் சிறை தண்டனை, அதுவும் போதாதென்று மரண தண்டனையா?

 • அமைதிப்படை முதல் முள்ளிவாய்க்கால் வரை  பல்லாயிரம் ஈழத்தமிழ் மக்களை படுகொலை செய்துள்ள காங்கிரசு பரம்பரையின் போர் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை?