எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்பதெல்லாம் சுத்தப் பொய். 3 எண்ணெய் நிறுவனங்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கிறது. 2006-07 முதல் 2009-10 வரையிலான 4 நிதியாண்டுகளில் இந்த 3 நிறுவனங்களும் ரூ. 36,653 கோடி லாபம் அடைந்திருக்கின்றன. மத்திய அரசுக்கு ரூ.4,73,000 கோடி லாபம் கிடைத்திருக்கிறது. விற்பனை வரி போன்றவை மூலமாக மாநில அரசுகளும் ஆதாயம் அடைகின்றன.
இந்த 4 நிதி ஆண்டுகளில் பெட்ரோலியப் பொருள்களுக்காக வழங்கப்பட்ட மொத்த மானியமே ரூ.26,000 கோடிதான். மொத்த வருவாயில் இது 6 சதவீதத்துக்கும் குறைவு. நஷ்டம் ஏற்படுவதாக, அரசும் எண்ணெய் நிறுவனங்களும் ஒப்பாரி வைத்தாலும், அவர்களுக்கு லாபம் கிடைக்கிறது என்கிற உண்மையை எந்தப் போர்வைக்குள்ளும் மூடிவிட முடியாது.
– தினமணியில் வந்த அரசின் தந்திரக் கணக்கு கட்டுரையிலிருந்து..
பெட்ரோலிய பொருட்களில் தொடர்ந்து நஷடம் என்று புருடா விடும்
மத்திய அரசின் முகத்திரையினை கிழிக்கிறது இக்கட்டுரை.
தொடர்புடைய கட்டுரை:
பெட்ரோல் லிட்டருக்கு ரூ 3 விலை உயர்வு! 23 ரூபாய் பெட்ரோலுக்கு 47 ரூபாய் வரி!
Filed under: மறுகாலனியாக்கம் | Tagged: அரசியல், இந்தியா, காங்கிரஸ், செய்தி, தனியார்மயம், நிகழ்வுகள், புரட்டு, பெட்ரோல், மானியம் | Leave a comment »