• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 210,074 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

வால்மார்ட்-க்கு அனுமதி :அண்ணாச்சி கடைகளுக்கு பூட்டு போட மத்திய அரசு முடிவு!!

நாட்டை மீண்டும் காலனியாக்கும்,  மறுகாலனியாக்க வேலையில் மத்திய அரசு தற்போது மிகவும் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகிறது. ஓய்வூதிய துறையில் அன்னிய முதலீடு, அணுசக்தி துறையில் பன்னாடு கம்பெனிகள் & தரகு முதலாளிகளுக்காக முழுவீச்சில் நடவடிக்கை என அடுத்த அதிரடியாக சில்லறை வர்த்தகத்தில் 51% நேரடிஅன்னிய முதலீட்டை அனுமதித்து ஒப்புதல் அளித்து உள்ளது.  ஏற்கனவே இங்குள்ள அம்பானி போன்ற தரகு முதலாளிகள் கையில் சிக்கி கொண்டு இருக்கும் சில்லறை வணிகத்தை மொத்தமாக மொட்டை அடிக்க ஒப்புதல் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் சுமார் 30 லட்சம் கோடி மதிப்புள்ள சில்லறை வணிகத்தை விழுங்க வால் மார்ட் போன்ற பராசுர கம்பெனிகள் வரபோகின்றன. ஆயிரம் பேருக்கு கிட்டதட்ட 30 கடை என்ற விகிதத்தை மாற்றி வெறும் 4 அல்லது 5 கடைகள் என ஆக்குவது என்ற ஒற்றை குறிக்கோளுடன் தான் இந்த கம்பெனிகள் வருகிறார்கள். ஏற்கனவே பல நாடுகள் இவ்வாறு மாற்றி விட்டார்கள். கல்வி முதல் மருத்துவம் வரை தனியார்மயமாக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் என்ன மீதி இருக்கிறது என அலையும் மூலதனம், சில்லறை வணிகத்தை மட்டும் விட்டுவைக்குமா என்ன?

இது குறித்து புதிய கலாச்சாரம் இதழில் வந்த கட்டுரை உள்ளிட்ட தொடர்புடை பதிவுகள் இதோ:

வால் மார்ட்:மலிவு விலையில் மரணம்!

பேயாட்சி 2011 – “இப்போது போராடாவிட்டால், இனி எப்போது போராட முடியாது”

ஜெயலலிதா : இம்சை அரசி செல்வி 24-ஆம் புலிகேசி !

ஜெயா தனது பேயாட்டத்தை ஆரம்பிச்சுட்டார்.  அடுத்த தேர்தலில் கலைஞரை கொண்டு வந்து விடலாம் என்று எப்பவும் போல நினைத்து தேர்தலுக்காக’ காத்திருப்பீர்களாயின் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.  மறுகாலனியாக்கத்தின் உச்சத்தில் நாடு சென்று கொண்டு இருக்கிறது.

மன்மோகன் சிங்-யிடம் ’பெட்ரோல் விலை உயர்வு’ குறித்து கேட்டபோது ’பணம் என்ன மரத்திலேயா காய்க்கிறது’ (பெட்ரோலில் பாதிக்கு பாதி வரி என்ற பெயரில் தனது தலைமையிலான மத்திய அரசு கொள்ளையடிப்பது தெரிந்தும்) என்று கூறி விலை உயர்வு என்பது சரியான நடவடிக்கை என்கிறார். பன்னாட்டு அணுசக்தி வியாபாரிகளுக்கு சாதகமாக இழப்பீட்டு மசோதா, ஓய்வூதிய துறையில் அன்னிய முதலீடுக்கு அனுமதி என மத்திய அரசு அடுத்தடுத்து அறிவிக்கிறது.

முந்தையஅம்மா ஆட்சியில் புளி இந்த விலை, பால் இந்த விலை என சட்டசபை தேர்தலுக்கு முன் ‘நீலக்கண்ணீர்’ வடித்த ஜெயா இன்று பால், பஸ் கட்டணம், மின்சாரம் என அனைத்தையும் மிக கடுமையாக உயர்த்திவிட்டு ” விலையர்வை ஏற்று மக்கள் ஒத்துழைப்பு கொடுக்கவும்” என தைரியமாக மீண்டும் மீண்டும் டிவியில் தோன்றி பேசுகிறார்.

இதனை எல்லாம் பாஜக, திமுக கட்சிகளை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதன் மூலம் மாற்ற முடியாது.

’ஓட்டுப்போட்ட மக்கள் சிந்திக்கட்டும், நாங்கள் தேவைப்பட்டால் போராடுவோம்’ என எப்பவும் போல மக்களை பார்த்து கலைஞர் கைக்காட்டும் போதே தெரியவில்லையா? பேய்-உடன் கூட்டணி வைத்து பேயாட்சி வருவதற்கு உழைத்த போலிக்கம்யூனிஸ்டுகளும், கேப்டன்களும் வெற்று அறிக்கையுடன் முடித்து கொள்ளும்போதே தெரியவில்லையா?  எந்த ஓட்டுப்பொறுக்கியும் பேயாட்சியை முறியடிக்க களத்தில் நிற்க மாட்டான். ஏன்னென்றால் விலைவாசி உயர்வு உள்ளிட்ட நமது அனைத்து பிரச்சனைகளுக்கும் அடிப்படை காரணமே இந்த போலி ஜனநாயக அரசு தான். அதனை வெட்டி வீழ்த்தினால் ஓட்டுப்பொறுக்கிகளாகிய இவர்கள் அனைவரும் உயிர் வாழ முடியாது.

ஆக ஜெயாவின் பேயாட்சியை விரட்டியடிக்கும் போராட்டத்தை ஓட்டுச்சீட்டு அரசியல்வாதிகளால் நடத்த முடியாது.  போர்குணமிக்க புரட்சிகர அமைப்புகளின் தலைமையில் தான் நடத்த முடியும்.

இப்போது போராடாவிட்டால் இனி எப்போது போராட முடியாது. போ என்றால் போய்விடுமா இது பேயாட்சி. சமச்சீர் பொதுப்பாடதிட்டத்திற்காக மாணவர்கள் வீதியில் இறங்கி போராடி வெற்றி பெற்றதை போல, ஒரு மக்கள் போராட்டத்தை நடத்தி பேயாட்சியின் தலையில் சம்மட்டியால் அடித்து ஓட ஓட விரட்ட வேண்டும்.

தொடர்புடைய பதிவுகள்:

ஆம்னி பேருந்துகளின் விபத்து! அரசு பேருந்துகளின் நட்டம்!! ஏன்?

 ஜெயா திருந்திவிட்டாராம்! நரியைப் பரியாக்கும் கோயபல்சுகள்!!

ஜெயா பிளஸ் வழங்கும் ”தாலியறுக்கும் டாஸ்மாக்-சீசன் 2”

 அம்மா – ஆணவம் – ஆப்பு!

எத்தனை முறை அம்மணமாக்கினாலும் அமெரிக்காவின் அடிமையாக தான் இருப்பேன் ! கலாமின் தொடரும் சாதனை!

அமெரிக்காவின் அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட அமெரிக்காவின் அடிமைத்தனங்கள் அனைத்தும் ஆதரிக்க கூடிய அப்துல் கலாமை, அமெரிக்காவும் தொடர்ந்து சோதனை என்ற பெயரில் அம்மணம் ஆக்கி வருகிறது. இருப்பினும் கலாம் தனது அமெரிக்கா ஆதரவை மாற்றி கொள்ள போவதில்லை என்பது அவருடைய அருவருடித்தனத்திற்கு சிறந்த உதாரணம்.

தொடர்புடைய பதிவுகள்:

பன்னாட்டு முதலாளிகளின் லாபவெறிக்கான அணு உலைகளை மூடுவோம்! விருத்தாச்சலத்தில் 16.11.2011 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் !

இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்!

கூடங்குளத்தில் போராடும் மக்களுக்கு 200 கோடியில் ஏமாற்று திட்டம் – கோமாளி கலாம்

அப்துல்கலாம்: பயந்தால் கோமாளியாக தொடர முடியாது!

கூடங்குளம் மக்கள் போராட்டம்: அணு மின்நிலையத்தை மூடு!

வளர்ச்சி என்றால் மக்கள் சாகத்தான் வேண்டும் -‍ கோமாளி அப்துல் கலாம்!

பன்னாட்டு முதலாளிகளின் லாபவெறிக்கான அணு உலைகளை மூடுவோம்! விருத்தாச்சலத்தில் 16.11.2011 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் !

மத்திய, மாநில அரசுகளே!

 • பன்னாட்டு அணு உலை முதலாளிகளின் லாப வெறிக்காக சொந்த நாட்டு மக்களை பலியிடாதே!
 • அனல், நீர், காற்று, கடலலை, சூரிய ஒளி, போன்ற சுயசார்ப்பு மின்சார வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடு!

தமிழக மக்களே!

 • இந்திய அரசு, ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, காங்கிரஸ், சிவசேனா கும்பலின் பொய்ப்பிரச்சாரத்தை முறியடிப்போம்!
 • நம் அனைவருக்காகவும் போராடும் கூடங்குளம்-இடிந்த கரை மக்களின் போராட்டத்தில் இணைவோம்!
 • மனித குல விரோத அணு உலைகளை நாட்டை விட்டே விரட்டியடிபோம்!

கண்டன ஆர்ப்பாட்டம்

16.11.2011

புதன் கிழமை

காலை 10.00 மணி

இடம்: பாலக்கரை, விருத்தாசலம்


தொடர்புடைய பதிவுகள்:

இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்!

கூடங்குளத்தில் போராடும் மக்களுக்கு 200 கோடியில் ஏமாற்று திட்டம் – கோமாளி கலாம்

அப்துல்கலாம்: பயந்தால் கோமாளியாக தொடர முடியாது!

கூடங்குளம் மக்கள் போராட்டம்: அணு மின்நிலையத்தை மூடு!

பெட்ரோல் விலையினை தொடர்ந்து ஏத்துவோம் – கூட்டணிக்காரனிடம் கூட கேட்க மாட்டோம்! – கல்லூளிமங்கன் அதிரடி!

தான் ஒரு அமெரிக்காவின் அடிமைநாய் தான் என்பதை இதைவிட வெளிப்படையாக சொல்லமுடியாது.

இன்னொரு அடிமையின் கர்ஜனை இதோ:

தொடர்புடைய பதிவுகள்:

பெட்ரோல் விலையினை உயர்த்தி கொண்டே போவோம், உன்னால் ஆனதை பார்!- மன்மோகன் & கெள்சிங் பாசு சவால்!

பெட்ரோலியத் துறை : பொன் முட்டையிடும் வாத்து!

பெட்ரோல் விலையினை உயர்த்தி கொண்டே போவோம், உன்னால் ஆனதை பார்!- மன்மோகன் & கெள்சிங் பாசு சவால்!

 
 
 
 
 
 
 
 
 
 
 
  
********************
 
விலைவாசி விண்ணை எட்டிக் கொண்டு இருக்கும் போது துளி கூட அது குறித்து வருத்தம் இல்லாமல் பெட்ரோல் விலையேற்றம் சரி என்றும், விலையை உயர்த்தினால் தான் மக்கள் வீணாக்கமாட்டார்கள் என்றும் கூறுகின்றனர்  பிரதமரும், கெளசிங் பாசும். பிரணாப் முகர்ஜீயோ பெட்ரோலிய நிறுவனங்களுக்கும் அரசுக்கு சம்பந்தம் இல்லை என்கிறார்.

முதலாளிகள் நலன்களுக்கானது தான் இந்த அரசு என்பதை தான் மீண்டும் மீண்டும் கூற வருகின்றனர். இதனை நாம் உணர்ந்து கொள்வது எப்போது?                                                                                                                                                                                            

தொடர்புடைய பதிவுகள்:

பெட்ரோலியத் துறை : பொன் முட்டையிடும் வாத்து!


சோப்பு முதல் பெட்ரோல் வரை கொள்ளையடிக்கும் மத்திய, மாநில அரசுகள்!

நாம் வாங்கிய பொருட்களின் விலை இன்று இரண்டு மடங்கு, மூன்று மடங்கு நிலை உயர்ந்திருப்பதை உணர முடியாதவர்கள் இருக்க முடியாது. சோப்பு, பவுடரிலிர்ந்து பெட்ரோல் வரை எந்த பொருளை எடுத்து கொண்டாலும் இது தான் நிதர்சன உண்மை.

இதற்கு உற்பத்தி செலவு என தயாரிப்பவன் ஒரு காரணம் கூறுகிறான், ஆட்சியாளர்களோ வாங்கும் சக்தி, மக்கள் தொகை பெருக்கம்,  கச்சா எண்ணெய் விலையேற்றம் என ஆயிரம் காரணம் சொல்கிறான்.

ஆனால் முக்கிய முதல் காரணம் என்னவென்றால் அது தான் “ வரி”.  நாம் வாங்கும் எந்த பொருளிலும் மூன்றில் ஒரு பங்கு இல்லையென்றால் இரண்டு பங்கு.

******************

இதை தெரிந்து கொள்ள ஒரு உதாரணம் மிலிட்டரி கேண்டீன். இராணுவத்தில் இருக்கும் ஒருவர் தான் வாங்கிய பொருட்களை பற்றி கூறிய போது தான் இதனை தெரிந்து கொள்ள முடிந்தது. இராணுவத்தில் இருப்பவர்கள், இருந்தவர்கள் – பலசரக்கு, எலக்ட்ரிக்கல் பொருள் முதல் மது வகைகள் வரை வாங்குவதற்கான நடத்தபடும் இத்தகைய கேண்டீனில் பொருட்கள் விலை வரி இல்லாமல் வருகிறது என்கின்றனர். விலையை பார்த்த போதுதான் அதிர்ச்சி ஒவ்வொரு பொருளும் மூன்றில் ஒரு பங்கு கம்மி. 32 ரூபாய் லக்ஸ் சோப் வெறும் 19 ரூபாய் தான். 155 பூஸ்ட் வெறும் 99 ரூபாய் தான்.

நம்முடைய வரியில் அரசை நடத்தும் ஆட்சியாளர்கள் அந்த பணத்தில் வரி இல்லாமல் இராணுவத்தினரை பாதுகாக்கின்றனராம். ஆனால் நம்க்கு கல்வியில் இருந்து,  மருத்துவம் வரை அனைத்தும் பணம் என்கிறது.

அடுத்து மீண்டும் உயர போகிறது’ என அறிவித்து உள்ள பெட்ரோல். இதுல இருக்கிற மோசடி சோப்பை விட அதிகம். மூன்றில் இரண்டு மடங்கு வரி.  23 ரூபாய் பெட்ரோலுக்கு 47 ரூபாய் வரி.

இப்படி அனைத்திலும் வரி என்ற பெயரில் கொள்ளையடிக்கும் அரசு யாருக்காக இருக்கிறது. எவனுடைய பிரச்சனைக்காக ஓடோடி வேலை செய்கிறது? நிச்சியம் நமக்காக இல்லை என்பது நாம் வாழ்கின்ற வாழ்க்கையே சொல்லிவிடும்.

டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகளுக்காகவும், இரஷிய, அமெரிக்க பன்னாட்டு முதலாளிகளுக்காகவும் இன்று அணு உலையினை கட்டியே தீருவோம் என ஆர்ப்பரிக்கும் மன்மோகன் சிங், சோனியா கும்பல் நமது வாழ்க்கையே சீரழிக்கும் எந்த பிரச்சனைக்காவது என்றைக்காவது இதில் ஒரு சதவீதமாவது நடவடிக்கை எடுத்திருப்பார்களா? இல்லை.

கருணாந்தி, ஜெயலலிதா, விஜயகாந்த் என பிரிந்து இருந்தாலும் இவர்களுக்குள் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அதுதான் முதலாளிகளின் நலன் பாதுகாக்கப்படவேண்டும் என்ற ஒத்த சிந்தனை. ஆனால் நாம் ஒற்றுமையாக இருக்கிறோமா? குறைந்தபட்சம் இவர்கள் நமக்கானவர்கள் இல்லை என்ற உண்மையை கூட உணர்ந்து உள்ளோமா?

கூடங்குளம் அணுமின் உலையை இழுத்து மூடப் போராடுவோம்!

உழைக்கும் மக்களே!

 • பேராபத்தை உருவாக்கும் அணு உலையும் வேண்டாம்! மேல்நிலை வல்லரசு சதிக்கு பலியாகவும் வேண்டாம்!

 • ரசிய உதவியுடன் கூடங்குளம் அணு உலை அமெரிக்காவுடன் அணு உலை ஒப்பந்தம் – இரண்டுமே நமது நாட்டு நலனுக்கானதல்ல! அமெரிக்க, ரசிய மேல்நிலை வல்லரசுகளின் அணு ஆயுத போட்டிக்கான திட்டமே!

 • காங்கிரஸ் கூட்டணி அரசின் அடியாள் திட்டத்தை முறியடிப்போம்!

          மாணவர்கள், மீனவர்கள், விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்போம்!

தொடர்புடைய பதிவு:

இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்!