• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,819 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

புமாஇமு தோழர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏ.சி சீனிவாசன் , இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு, எஸ்.ஐ கோபிநாத்தை-யும் கொலை முயற்சி குற்றத்தின் கீழ் கைது செய்-சிறையிலடை!


புமாஇமு தோழர்கள் மீது மதுரவாயல் போலீசு ரவுடிகள் கொலைவெறித்தாக்குதல்!

64 பேர் கைது, 8 பேர் படுகாயம்! தாக்குதல் நடத்திய ஏ.சி சீனிவாசன் ,இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு, எஸ்.ஐ கோபிநாத்தை-யும் கொலை முயற்சி  குற்றத்தின் கீழ் கைது செய்-சிறையிலடை!

========================================================

உழைக்கும் மக்களே!

# மதுரவாயல் பகுதி இளைஞரை படுகொலை செய்தவர்களை கைது செய்யாமல்

அப்பாவி மாணவர்களை கைது செய்ததை எதிர்த்த பு.மா.இ.மு தோழர்கள்

திவாகர்,குமரேசனை கடத்திச் சென்று மறைத்து வைத்தது போலீசு!

#  விசாரிக்க போலீசு நிலையம் சென்ற பகுதி மக்கள்,  பு.மா.இ.மு தோழர்கள் மீது அடக்குமுறையை ஏவி விட்டது போலீசு!

 # இதை அரங்கேற்றிய பாசிச ’ஜெயா’ அரசின் போலீசு ராஜ்ஜியத்திற்கு முடிவுகட்டுவோம்!

***************************************************
தொடர்புடைய பதிவுகள்:

கலைஞர் தொலைக்காட்சியில் புமாஇமு தோழர்கள் மீதான போலீசு தாக்குதல் காட்சிகள்!

வீடியோ:

புமாஇமு தோழர்கள் மீது போலீசார் கொலைவெறி தாக்குதல் – வீடியோ!

புகைப்படங்கள்:

மதுரவாயல்: புமாஇமு தோழர்கள் மீது போலீசார் கொலைவெறி தாக்குதல் –

புமாஇமு தோழர்கள் மீது போலீசார் கொலைவெறி தாக்குதல் – வீடியோ!

புகைப்படங்கள்:

மதுரவாயல்: புமாஇமு தோழர்கள் மீது போலீசார் கொலைவெறி தாக்குதல் –

மதுரவாயல்: புமாஇமு தோழர்கள் மீது போலீசார் கொலைவெறி தாக்குதல்!

மதுரவாயல் ஏரிக்கரை பகுதியில் நேற்று (25.8.12) ஒருவர்  கொலை செய்து வீசப்பட்டுயிருந்தார்.விசாரணைக்காக போலீசு வந்தது. கொலை சம்பவம் என்பதால் பகுதி மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

கூட்டத்தில் வேடிக்கை பார்த்த பகுதி இளைஞர்களை குறிவைத்த போலீசு அவர்களைத் தூக்க முடிவு செய்தது. வழக்கமாக குற்றவாளிகள் கிடைக்காமல் இப்படி அப்பாவிகள் மீது வழக்கு போடுவது போலீசின் உத்தி. அருகில் நின்று கொண்டிருந்த புரட்சிகர மாணவர் இளைஞர்-முன்னணி தோழர்கள் திவாகரும், குமரேசனும் மாணவர்களுக்கே உரிய துணிவோடு கொலையில் சம்பந்தமற்ற அப்பாவி இளைஞர்களை எதற்காக கைது செய்கிறீர்கள் என்று போலீசு கும்பலை எதிர்த்துக் கேட்டனர். உடனே தோழர்களை தாக்கிய காக்கிச்சட்டை ரவுடிகள் அவர்களையும் வண்டிக்குள் திணித்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு பறந்தனர்.

போலீசு அந்த இளைஞர்களையும், தோழர்களையும் கைது செய்யவில்லை மாறாக கடத்தியிருக்கிறது. போலீசு ரவுடிகளால் கடத்திச் செல்லப்பட்ட இளைஞர்களும் தோழர்களும் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் தெரிவிக்காமல் மறைத்து வைத்திருக்கின்றனர்.

இதனை அறிந்த புமாஇமு தோழர்கள்  இன்று(26.8.12) பிற்பகல் மதுரவாயல் காவல் நிலையத்திற்கு சென்று பொய் வழக்கில்  கைது செய்த தோழர்களை விடுவிக்க கோரியும், அவர்கள் எங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை சொல்லுமாறும்  கேட்டபோது போலீசார் எங்கள் தோழர்களை கண்மூடித்தனமாக தாக்கி கொலைவெறியோடு அடித்து விரட்டினர்.

மேலும் பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்து ரிமாண்ட் செய்து உள்ளனர்.

 

தொடர்புடைய பதிவுகள்:

டிபிஐ முற்றுகை! மாணவர்கள்-தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல்!!