• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 213,792 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

மீண்டும் நண்பனுக்கு ஒரு கடிதம்!

என் அன்புள்ள நண்பனே,
ஈராண்டுகளுக்குப்பின் உனை
மீண்டும் சந்திக்கிறேன்
இதோ இப்போது அதே
புரட்சி நாளில்……
 
அன்றும் இன்றும்
எத்தனையோ
எவ்வளவோ மாறிவிட்டன
சொன்னால் நம்ப மாட்டாய்
கண்டிப்பாக நீயும் நானும் கூட
மாறித்தான் போயிருக்கிறோம்….
 
“நீ பேசுற பேச்சுக்கு ஜெயிலுக்குத்தான்
போவ – உனக்கு களி திங்குற காலம் வந்திடுச்சு”
கடவுள் மேல் எனக்கு நம்பிக்கையில்லை
ஆனால் உன் வாக்கு
பலித்துவிட்ட்து நண்பா!
ஒரு வேளை நீ வசிட்டன் ஆகிவிட்டாய்யா என்ன?
 
நீ கூறியது போல
சிறைக்கும் சென்று விட்டேன்
ஆனால் இப்போதங்கே களி தருவதில்லை
காய்ந்து போன சோற்றை தான் தருகிறார்கள்….
 
சிறை என்றவுடன்
நீ முகஞ்சுளிப்பதும்- உன்
நியாயத்தராசில் அதல பாதாளத்தில்
நான் நிற்பதையும் உணர்கிறேன்…..
 
உனக்குத் தெரியாது
உன் தாராசினை நீ இயக்குவதில்லை
ஆனால்
நான் பெருமையாயிருக்கிறேன்
யார் தாலியறுத்தும் நாங்கள்
சிறை செல்லவில்லை – ஊர்
தாலியறுத்த பொன்மனச்செல்வியின்
பொற்கால ஆட்சியல்லவா இது….
 
எப்படி எங்களால் அமைதியாயிருக்க முடியும்?
1 ½ கோடி மாணவர்களின்
கல்வியுரிமை பறிபோன பின்னும்
அமைதியாயிருக்கச்சொல்கிறாயா என்ன?
 
LKG-யில் தன்பிள்ளையை
சேர்க்க முடியாமல் செத்துப்போன
சங்கிதாவின்
ஆவியென்னை உசுப்பியது
 
என்னால் நிம்மதியாய்
உறங்க முடியவில்லை
ஆனால் நிம்மதியாய்
உறங்கினேன் சிறையில்
என்பதை நீ அறிவாயா?
 
மற்றகைதிகளின் மத்தியில்
கம்பீரமாக நடந்து சென்ற
அந்த மகிழ்ச்சியும்
மக்களுக்கான எமது போராட்டத்தால்
விறைப்பான காவல்துறை கூட
கண்ணீர் கசிந்ததும்
ஏனென உனக்கு புரிகிறதா?
 
சரி
என் அன்பு நண்பனே!
மீண்டும் தொடங்கிவிட்ட்து பேயாட்சி,
நான் விடை பெறுகிறேன்.
 
இதைப்படித்துக் கொண்டிருக்க்கையில்
நான் தெருவில் இருப்பேன்
தனியாக அல்ல
உழைக்கும் மக்களின் விடுதலைக்காக
உயிரையேத்தரும்
எமது தோழர்களுடன்.
 
அன்புடன்
உன் நண்பன்.
 
– திப்பு

விலை உயர்வினால் மக்கள் கஷ்டப்படுவார்கள் என அம்மாவுக்கு தெரியாது – தினமணியின் பூணல் பாசம்!

பால்,பேருந்து,மின்சாரம் உள்ளீட்டவை கட்டண உயர்வு கடுமையாக இருந்தால் மக்கள் கஷ்டப்படுவார்கள் என சுட்டிக்காட்டாதது அதிகாரிகள் செய்த தவறு. ஆனால் பாவம் முதல்வர் அதிகாரிகள் பேச்சை கேட்டு விலையை உயர்த்தி  மக்கள் கோபத்திற்கு ஆளாகிவிட்டார். – தினமணி

பெட்ரோல் இரண்டு ரூபாய் கூட்டியதற்கே ‘வெந்த பூண்ணில் வேல் பாய்ச்சுவது’ என்று மக்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள் என கூறி மத்திய அரசை எதிர்த்து அறிக்கை விட்டவருக்கு பாதிக்கு பாதி பொருட்களின் விலையை உயர்த்தினால் மக்கள் கஷ்டப்படுவார்கள் என்பது கூட தெரியவில்லையா?

இது கூட தெயாதவர் முதல் அமைச்சர் பதவியில் எதுக்கு இருக்கனும்?

இதே விலை உயர்வை கருணாநிதி செய்தால் மக்கள் விரோதியாக கருணாநிதியை காட்டும் தினமணி, ஜெயா என்ற பாப்பாத்தி செய்தால் அது அவர் செய்து இருக்க மாட்டார் என திருக்குறளை எல்லாம் போட்டு சப்பை கட்டு கட்டி மீண்டும் மீண்டும் தலையங்கம் எழுதி மக்கள் கோபத்தை திசை திருப்ப பார்க்கிறது.

தொடர்புடைய பதிவுகள்:

பேருந்து, பால், மின்சாரம் – விலை உயர்வு! பாசிச ஜெயாவின் பேயாட்டம்!!

பேயாட்சி 2011 – “இப்போது போராடாவிட்டால், இனி எப்போது போராட முடியாது”

ஜெயலலிதா  :  இம்சை அரசி செல்வி 24-ஆம் புலிகேசி  !

ஜெயா தனது பேயாட்டத்தை ஆரம்பிச்சுட்டார்.  அடுத்த தேர்தலில் கலைஞரை கொண்டு வந்து விடலாம் என்று எப்பவும் போல நினைத்து தேர்தலுக்காக’ காத்திருப்பீர்களாயின் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.  மறுகாலனியாக்கத்தின் உச்சத்தில் நாடு சென்று கொண்டு இருக்கிறது.

மன்மோகன் சிங்-யிடம் ’பெட்ரோல் விலை உயர்வு’ குறித்து கேட்டபோது ’பணம் என்ன மரத்திலேயா காய்க்கிறது’ (பெட்ரோலில் பாதிக்கு பாதி வரி என்ற பெயரில் தனது தலைமையிலான மத்திய அரசு கொள்ளையடிப்பது தெரிந்தும்) என்று கூறி விலை உயர்வு என்பது சரியான நடவடிக்கை என்கிறார். பன்னாட்டு அணுசக்தி வியாபாரிகளுக்கு சாதகமாக இழப்பீட்டு மசோதா, ஓய்வூதிய துறையில் அன்னிய முதலீடுக்கு அனுமதி என மத்திய அரசு அடுத்தடுத்து அறிவிக்கிறது.

முந்தையஅம்மா ஆட்சியில் புளி இந்த விலை, பால் இந்த விலை என சட்டசபை தேர்தலுக்கு முன் ‘நீலக்கண்ணீர்’ வடித்த ஜெயா இன்று பால், பஸ் கட்டணம், மின்சாரம் என அனைத்தையும் மிக கடுமையாக உயர்த்திவிட்டு ” விலையர்வை ஏற்று மக்கள் ஒத்துழைப்பு கொடுக்கவும்” என தைரியமாக மீண்டும் மீண்டும் டிவியில் தோன்றி பேசுகிறார்.

இதனை எல்லாம் பாஜக, திமுக கட்சிகளை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதன் மூலம் மாற்ற முடியாது.

’ஓட்டுப்போட்ட மக்கள் சிந்திக்கட்டும், நாங்கள் தேவைப்பட்டால் போராடுவோம்’ என எப்பவும் போல மக்களை பார்த்து கலைஞர் கைக்காட்டும் போதே தெரியவில்லையா? பேய்-உடன் கூட்டணி வைத்து பேயாட்சி வருவதற்கு உழைத்த போலிக்கம்யூனிஸ்டுகளும், கேப்டன்களும் வெற்று அறிக்கையுடன் முடித்து கொள்ளும்போதே தெரியவில்லையா?  எந்த ஓட்டுப்பொறுக்கியும் பேயாட்சியை முறியடிக்க களத்தில் நிற்க மாட்டான். ஏன்னென்றால் விலைவாசி உயர்வு உள்ளிட்ட நமது அனைத்து பிரச்சனைகளுக்கும் அடிப்படை காரணமே இந்த போலி ஜனநாயக அரசு தான். அதனை வெட்டி வீழ்த்தினால் ஓட்டுப்பொறுக்கிகளாகிய இவர்கள் அனைவரும் உயிர் வாழ முடியாது.

ஆக ஜெயாவின் பேயாட்சியை விரட்டியடிக்கும் போராட்டத்தை ஓட்டுச்சீட்டு அரசியல்வாதிகளால் நடத்த முடியாது.  போர்குணமிக்க புரட்சிகர அமைப்புகளின் தலைமையில் தான் நடத்த முடியும்.

இப்போது போராடாவிட்டால் இனி எப்போது போராட முடியாது. போ என்றால் போய்விடுமா இது பேயாட்சி. சமச்சீர் பொதுப்பாடதிட்டத்திற்காக மாணவர்கள் வீதியில் இறங்கி போராடி வெற்றி பெற்றதை போல, ஒரு மக்கள் போராட்டத்தை நடத்தி பேயாட்சியின் தலையில் சம்மட்டியால் அடித்து ஓட ஓட விரட்ட வேண்டும்.

தொடர்புடைய பதிவுகள்:

ஆம்னி பேருந்துகளின் விபத்து! அரசு பேருந்துகளின் நட்டம்!! ஏன்?

 ஜெயா திருந்திவிட்டாராம்! நரியைப் பரியாக்கும் கோயபல்சுகள்!!

ஜெயா பிளஸ் வழங்கும் ”தாலியறுக்கும் டாஸ்மாக்-சீசன் 2”

 அம்மா – ஆணவம் – ஆப்பு!