• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,819 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

தோழர் மாவோ: எம் விடுதலைப்பாதையில் உன் சிந்தனை ஒளிவெள்ளம்!

மக்கள் மொழியில்

மார்க்சியம் சொன்னவர் – சீனப்

பழங்கதை சொல்லி

பாமரர் மனதில் நின்றவர்!

முரண்பாட்டுத் தத்துவத்தை

செழுமைப்பெற செய்தவர்!

செஞ்சீனம் படைத்திட

செம்படை அமைத்தவர்!

பாட்டாளி வர்க்க விடுதலைக்கு

பண்பாட்டுப் புரட்சியைத்

தொடங்கியவர் – எம்

விடுதலைப்பாதையில்

உன் சிந்தனை ஒளிவெள்ளம்!

தோழர் மாவோ நினைவு தினத்தை(செப்டம்பர் 9 -1976)

முன்னிட்டு 

*******************

மாவோ புகைப்படம்:  தோழர் விடுதலை

தொடர்புடைய பதிவுகள்:

மாவோ – மானுட விடுதலையின் நம்பிக்கை ஒளி!!

நீ தான் ஆசிரியன் – கவிதை

நீ தான் ஆசிரியன்

பருவத்தேர்வுகள்
நெருங்கிவிட்டது போலிருக்கிறது
படித்துக்கொண்டிருக்கிறாய்
பார்க்கும் போதெல்லாம்
தொலைபேசியில் கேட்கும் போதெல்லாம்……

தலையில் தட்டி குட்டி
இரவு முழுக்க விழுந்து விழுந்து
எதைப்படித்துக்கொண்டிருக்கிறாய்

?
புரியாததை புரிய வைக்க உன்னுள்
எத்தனைப் போராட்டம்
தெரியாததை தெரியவைக்க
எத்தனை விழிப்புக்கள்……எதைப்புரிந்து கொண்டாய்?
எதைத் தெரிந்து கொண்டாய்?
ஆனாலும் கண்டிப்பாய்
நீ தேர்வாகிவிடுவாய்
மக்களைப் புரியாமலும்
தெரியாமலும்
இருக்கத்தானே தேர்வுகள்……

I=V/R
இது ஓம்ஸ் விதி
இன்னும் எத்தனை விதிகள்
எதை மாற்ற? எதை உருவாக்க?
மின்சாரத்தின் அலகினை
அளக்க முற்படும் நீ
என்றாவது நம் பொருளாதார அலகினை
பற்றி நினைத்திருக்கிறாயா?

அரிசி விலையும்
பருப்பு விலையும் எதனால்
ஏறுகிறதென்று தெரியாமல்
எதைப் படிக்கிறாய்?

மருத்துவம்,பொறியியல்
அறிவியல்……..
காய்ந்து போன நிலங்கள்
மூடிக்கிடக்கும் ஆலைகள்
சுருண்டு போன நெசவாளிகள்
எந்தப்படிப்பு வந்து இதை
மாற்றப்போகிறது?

பார்ப்பனீயத்தின் தேர்வுகள்
குத்திக்கிழிக்கின்றன
பறையனென்றும் சூத்திரனென்றும்
முதலாளித்துவம்
கடைசி பென்ச்-ல் உட்காரவைத்து விட்டது
உழைக்கும் மக்களை……

நீ டாக்டர் ஆனாலும் என்ஜினியர் ஆனாலும்
ஏன் அந்த கலக்டரே ஆனாலும்
இதை மாற்ற முடியுமா என்ன ?
உன் வாழ்வுக்கு
இம்மியளவும் பயன்படாத படிப்புதான்
உனக்கு மதிப்பு கொடுக்கப்போகிறதா?

படி நன்றாகப்படி
முதலில் உன்னைப்படி
இந்த உலகைப்படி
உழைக்கும் மக்களைப்படி
அவர்கள் தான் ஆசிரியர்கள்
அங்கிருந்து கற்போம்
புரிந்ததை உனக்கு தெரிந்ததை
பற்றி கற்போம்- வேலையில்லா
திண்டாட்டம் இங்கில்லை……

போராட்டத்தில்
ஓய்வுக்கு இடமில்லை
உன் விளங்காத படிப்பையும்
விளங்க வைக்க “புதிய ஜனநாயகத்தையும்”
சேர்த்துப்படி
இனி நீ விளக்கு
மற்றவர்களுக்கு நீ தான் ஆசிரியன்.

-கலகம்

முதல் பதிவு: கலகம்

தொடர்புடைய பதிவுகள்:

வினவு – தேர்வு: ‘காப்பி’ அடித்தால் தப்பா? ஒரு அனுபவம் !!

கனவு காண சொன்னாரு.. கலாம் சொன்னாரு…!

விளங்காத படிப்பும்-விளங்கவைக்கும் அரசியலும்

காக்கிச்சட்டை ரவுடிகளுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்!


காக்கிச்சட்டை ரவுடிகளுக்கு எதிரான ஆர்பாட்டம்

துரவாயல் கொலை வழக்கில் இரு அப்பாவி இளைஞர்களையும், இரு பு.மா.இ.மு தோழர்களையும் கடத்தி  வைத்திருந்த போலீசிடம் பகுதி மக்களும் பு.மா.இ.மு தோழர்களும் விடுவிக்கக்கோரிய போது அவர்களை குற்றவாளிகள் என்று கூறியது போலீசு. அப்பாவிகளான அவர்கள் மீது பொய் வழக்குகளை போட்டு சிறையிலடைக்கும் போலீசின் முயற்சியை எதிர்த்து நின்ற தோழர்கள் மீது போலீசு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதலில் ஐந்து தோழர்கள் மிகக்கடுமையான தாக்குதலுக்குள்ளாயினர். அடித்து தாக்கியதுடன் 64 பேர் மீது பொய் வழக்குகளையும் போட்டு சிறையில் தள்ளியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை பிணையில் விடுவதற்கும் மறுத்து வருகின்றனர்.  பாசிச ஜெயாவின் இந்த போலீசு ஆட்சியை கண்டித்து சுவரொட்டி ஒட்டிய இரு தோழர்களையும் கைது செய்து மிரட்டி, அவர்ளுடைய பெற்றோர்களை வரவழைத்து நக்சல் பீதியூட்டியுள்ளது.

தமிழகத்தில் நடக்கும் இந்த போலீசு ஆட்சியை கண்டித்து பு.மா.இ.மு கடந் 3- ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது. ஒரே நேரத்தில் காங்கிரசுக்கும் பு.மா.இ.முவிற்கும் அனுமதி கொடுக்கப்பட்டிருந்ததால் ஆர்ப்பாட்டம் மறுநாள் தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 11 மணிக்கு மெமோரியல் ஹால் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பு.மா.இ.மு ஆர்ப்பாட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்பதற்காகவே போலீசு வேண்டுமென்று காங்கிரசுக்கு அதே நேரத்தில் ஆர்ப்பாட்டம் கொடுத்திருந்தது. ஆனால் தோழர்கள் உறுதியாக நடத்துவோம் என்று போராடிய பிறகே மறுநாள் நடத்திக் கொள்ள அனுமதி கொடுத்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு பு.மா.இ.மு மாநில அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் செ.சரவணன் தலைமை தாங்கினார். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தை சேந்த தோழர் சுரேசும், பு.மா.இ.மு மாநில அமைப்பாளர் தோழர் த. கணேசனும் கண்டன உரையாற்றினர்.

சரவணன் பேசும் போது,  போலீசு கும்பலின் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு என்ன காரணம் என்பதை விளக்கினார்.  மதுரவாயல் பகுதியில் போலீசுக்கும் சமூக விரோதிகளுக்குமிடையில் இருக்கும் கள்ளக்கூட்டும், அந்த கள்ளக்கூட்டணிக்கு பு.மா.இ.மு தடையாக இருந்து வருவதும் தான் இந்த தாக்குதலுக்கான உண்மையான காரணம். எங்களுக்கு இது போன்ற அடக்குமுறைகள் ஒன்றும் புதியதல்ல.  உழைக்கும் மக்களின் துணையோடு இதையும் எதிர்கொள்வோம் போலீசு அராஜகத்தை முறியடிப்போம் என்று கூறி தலைமை உரையை முடித்தார்.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர் தோழர் சுரேஷ் பேசும் போது, புரட்சிகர அமைப்புகள் இது போன்ற அடக்குமுறைகளை எதிர்கொள்வது சகஜமானது தான். புரட்சிகர அமைப்புகளை ஒடுக்கி வைக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் தான் இந்த வழக்குகள் அனைத்தும் புனையப்பட்டுள்ளன.  நீங்கள் இதை எதிர்கொள்ளுங்கள் ம.உ.பா.மை உங்களுக்கு துணையாக இருக்கும்.

காவல்துறை மட்டுமல்ல நீதித்துறையும் கூட காவல்துறையை போலவே செயல்படுகிறது. போலீசு சொல்வதை அப்படியே கேட்டுக்கொண்டு தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.  எனவே போலீசை மட்டுமல்ல நீதிமன்றத்தையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது,  எதிர்கொள்வோம் என்று கூறி முடித்தார்.

இறுதியாக பேசிய கணேசன், போலீசு என்பது எப்படி கிரிமினல் கும்பலாக இருக்கிறது என்பதையும்,  இந்த போலீசு ரவுடிகள் நம்மை மட்டுமல்ல போராடக்கூடிய அனைத்து தரப்பு  மக்களையும் தான் தாக்கி வருகிறார்கள் என்பதையும்.  இத்தகைய மக்கள் விரோத போலீசு அமைப்பையே ஒழித்துக்கட்டுவது தான் இதற்கு தீர்வு என்றும் கூறினார். அத்துடன் கைது செய்யப்பட்ட தோழர்களை உழைக்கும் மக்களின் உதவியோடு வெளியில் கொண்டு வருவோம் என்று கூறி முடித்தார்.

பிறகு போலீசு குண்டர்களுக்கு எதிரான கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் ,இளைஞர்கள், பெற்றோர்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.  பேருந்துகளில் பயணித்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தை கவனித்தவாறே சென்றனர். பு.மா.இ.மு நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் போலீசு கும்பலுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்தது.

______________________________

முதல் பதிவு: வினவு

போலீசு தாக்குதல்: கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்!

தொடர்புடைய பதிவுகள்:

 பிரசுரம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

நக்கீரன்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் மீது கொலைவெறித்தாக்குதல்!

போஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு!

சென்னை புமாஇமு தோழர்கள், மக்கள் மீது காக்கி ரவுடிகள் தாக்குதல்!

நன்றி: புதிய ஜனநாயகம் செப் 2012

போலீசு தாக்குதல்: கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்!

தொடர்புடைய பதிவுகள்:

 பிரசுரம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

நக்கீரன்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் மீது கொலைவெறித்தாக்குதல்!

போஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு!

இந்திய நாடாளுமன்றம் – பன்றி தொழுவத்தின் 60 ஆண்டு கால சாதனை!

நாடாளுமன்றம் விற்பனைக்கு! மலிவு எம்;பி.க்கள் தயார்! இந்திய நாடாளுமன்றம் ஊழலின் ஊற்றுக்கண்

01_2006.jpgஇந்தியாவில் உள்ள பலகட்சி நாடாளுமன்ற ஜனநாயகம்தான் உலகிலேயே மிகச் சிறந்த அரசியலமைப்பு என்று முதலாளிய ஏகாதிபத்திய அறிவுஜீவிகள் புகழ்ந்து தள்ளுகின்றனர். குறிப்பாக, சோவியத் ஒன்றியம் மற்றும் பிற போலி கம்யூனிச நாடுகளில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, அங்கிருந்தெல்லாம் அரசியல் நிபுணர்கள் வந்து இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் செயல்படுவதை நேரில் கண்டு வியந்து போனார்கள்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசியல் அமைப்புதான் கம்யூனிச ஆட்சிகளின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று கண்டுபிடித்த “”நம்ம ஊரு” த.தே.பொ.க. மணியரசன் கும்பல் உட்பட எல்லா வண்ணப் போலி கம்யூனிஸ்டுகளும் கூட பலகட்சி நாடாளுமன்ற ஜனநாயக அரசியலமைப்பே தமது திட்டமென்று மாற்றிக் கொண்டார்கள்.

இந்த அரசியலமைப்பு இவ்வளவு காலம் நீடித்திருப்பது, பல தேர்தல்கள் நடந்து முடிந்திருப்பதே இதன் வெற்றியைப் பறைசாற்றுவதாக அவர்கள் எல்லோரும் போற்றிப் புகழ்கிறார்கள். ஆனால், இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தினுடைய வெற்றியின் இரகசியம் என்னவென்று அவர்கள் பேசுவதில்லை. அது இதுதான்:

இந்தியாவின் பலகட்சி நாடாளுமன்ற ஜனநாயகம் செத்து அழுகிப் போன பிணமாகக் குப்பைமேட்டில் திறந்தவெளியில் கிடக்கிறது. அதன் முடைநாற்றம் மனிதர்களுக்குத் தெரிகிறது. ஆனால், செத்து அழுகிப் போன பிணத்தைக் கொத்தித் தின்னும் கழுகு காக்கைகளுக்கு அது ருசியான விருந்தாகவே தெரிகிறது. அந்த விருந்தில் கலந்து கொள்ளும் காக்கைகள் போல, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பங்கேற்கும், பதவி வகிக்கும் கட்சிகள் அனைத்துமே ஏதாவது ஒரு வகையில் பொறுக்கித் தின்பதற்கு வசதிகளும் வழிவகைகளும் உள்ளன.

ஆளுங்கட்சிகளாக இருந்தாலும், எதிர்க்கட்சிகளாக இருந்தாலும், தேர்தல்களில் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியுற்றாலும் சரி, எல்லாக் கட்சிகளுக்கும் பொறுக்கித் தின்பதற்கான ஏற்பாடுகள் இருக்கின்றன என்கிற ஒரு காரணமே போதும். இதனாலேயே பல கட்சி நாடாளுமன்றம், மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற தோற்றத்தோடு நீடித்திருக்க முடிகிறது. இதுதான் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சிறப்பு.

இது இப்படித்தான் செயல்படுகிறது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது. சமீபத்தில் வெளியாகி நாடே நாறும் வோல்கர் கமிசன் அறிக்கை விவகாரம், நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு அதன் உறுப்பினர்கள் இலஞ்சம் வாங்கிய விவகாரம், எம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு இலஞ்சம் வாங்கிய விவகாரம் இவை அனைத்திலும் ஏதோ சில நபர்கள், ஏதோ ஒரு கட்சி மட்டும் சிக்கவில்லை. ஏறக்குறைய அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் சிக்கியுள்ளனர்.

வோல்கர் கமிசன் அறிக்கை பின்னணி

1990களின் ஆரம்பத்தில் குவைத்தை ஆக்கிரமித்த ஈராக்கின் சதாம் உசேன் படைகள், அந்நாட்டு எண்ணெய் வயல்களைக் கைப்பற்றிக் கொண்டன. குவைத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்பது என்ற பெயரில் அதிநவீன ஆயுதங்களுடன் மத்திய கிழக்கில் வந்திறங்கிய அமெரிக்கப் படைகள் வெறித்தனமான தாக்குதல் போர் நடத்தி ஈராக் இராணுவத்தை விரட்டியடித்தது. ஆனால், அமெரிக்கா அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. வளமிக்க எண்ணெய் வயல்கள் நிறைந்த மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தையும் தனது மேலாதிக்கம் மற்றும் மறுகாலனியாதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியது. “”உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதங்கள் உட்பட பெருந்திரள் பேரழிவு ஆயுதங்களைத் தயாரித்து குவித்து வைத்திருப்பதோடு, அணுஆயுத உற்பத்திக்கான தயாரிப்பிலும் இறங்கியுள்ள சதாமின் ஈராக்கினால் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்புக்குப் பேராபத்து விளைந்துள்ளது; பல ஆயிரம் ஷியா மற்றும் குர்து மக்களைப் படுகொலை செய்து மனித உரிமைகளை மீறும் குற்றங்கள் செய்துள்ளது, சதாம் உசைன் அரசு” என்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி ஈராக்குக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் பொருளாதாரத் தடை விதிக்கச் செய்தது, அமெரிக்கா. அதோடு இராணுவ முற்றுகையும் செய்தது.

ஈராக்குக்கு எதிரான இந்த இராணுவ முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடையால் உலக அரங்கில் அந்நாடு பெருமளவு தனிமைப்படுத்தப்பட்டது. இவற்றால், எண்ணெய் வளமிக்கதாக இருந்தாலும், அதைப் பயன்படுத்தி உலகச் சந்தையில் இருந்து மருந்து மற்றும் உணவு போன்ற இன்றியமையாத் தேவைகளைக் கூட வாங்க முடியாமல் ஈராக் திணறியது. இலட்சக்கணக்கான குழந்தைகள் போதிய மருந்துப் பொருட்கள் கூடக் கிடைக்காமல் மாண்டு போயின.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் நிபந்தனைகளை ஏற்று, ஈராக்கிலுள்ள இராணுவஆயுத நிலைகளை ஐ.நா. பிரதிநிதிகள் சோதனையிட ஈராக்கின் சதாம் அரசு சம்மதித்தது. அதை ஏற்ற ஐ.நா. சபை, ஈராக்கில் மக்கள்திரள் பேரழிவு ஆயுதங்கள் உற்பத்தி செய்வதற்கான வசதிகள் இருக்கின்றனவா, அவை ஏற்கெனவே குவிக்கப்பட்டிருக்கின்றனவா என்பதை சோதனை செய்வதற்கு தனது குழுவை அனுப்பும் அதேசமயம், “”உணவுக்கு எண்ணெய்” என்ற இடைக்காலத் திட்டத்தை வகுத்து, அதன் அடிப்படையில் குறிப்பிட்ட அளவு பெட்ரோலிய எண்ணெய் விற்கவும் இன்றியமையாப் பொருட்களை இறக்குமதி செய்து கொள்ளவும் ஈராக்கை அனுமதித்தது.

ஆனால் அமெரிக்காவோ, தொடர்ந்து சதாம் அரசு மீது பல பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தி வந்தது. இறுதியில் மக்கள் திரள் பேரழிவு ஆயுதங்களைக் குவித்து வைத்திருப்பதாகவும், அவை தயாரிப்பதற்கான இரகசிய ஆலைகள் வைத்திருப்பதாகவும், ஐ.நா. சோதனைக் குழு சுதந்திரமாக ஆய்வு நடத்துவதற்கு அனுமதி அளிக்க வில்லை என்றும், அணுஆயுதங்களைக் கூட உற்பத்தி செய்வதற்கு முயல்வதாகவும், அமெரிக்கா மீதான 2002 செப்டம்பர் 11 விமானத் தாக்குதல் நடத்திய பின்லேடனின் அல்கொய்தா அமைப்புடன் அச்சதியில் ஈராக்கு பங்கு இருப்பதாகவும் பல பொய்யான பழிகள் சுமத்தி 2004இல் ஈராக்கைத் தாக்கி ஆக்கிரமித்துக் கொண்டது. சதாம் உசைன் மற்றும் அவரது சகபாடிகள் கைது செய்யப்பட்டு தண்டிப்பதற்கான விசாரணை நாடகமும் நடத்தி வருகிறது.

ஈராக் மீது அமெரிக்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியங்கள் ஆக்கிரமிப்புப் போர் தொடுத்து, அந்நாட்டு ஆட்சியைக் கவிழ்த்து, ஒரு பொம்மை ஆட்சியை நிறுவியதற்கு சொல்லப்பட்டக் காரணங்கள் அனைத்தும் பொய்யானவை என்று கடந்த ஓராண்டில் மேலும் அம்பலமாகிப் போனது. அமெரிக்கா, பிரிட்டன் உட்பட உலக நாடுகளின் மக்கள் அனைவரும் இந்த ஆக்கிரமிப்புப் போருக்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ஈராக்கில் இலஞ்ச ஊழல், சகநாட்டவர் மீதான படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் நிறைந்த சதாம் உசைனின் ஆட்சியைத் தூக்கியெறிந்து “சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவே போர் தொடுத்தோம்’ என்று கூறும் அமெரிக்கா, இந்தக் கோணத்தில் விசாரணை தண்டனைக்கு ஆதாரங்களைத் தேடுகிறது.

ஈராக்கிற்கு எதிரான ஆக்கிரமிப்புப் போரை நியாயப்படுத்தவும், சதாம் ஆட்சியைக் கவிழ்த்து, நிறுவப்பட்ட பொம்மை அரசுக்கு நியாயவுரிமையைக் கோரவும் சதாமுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஆதாரப்படுத்தும் வேலைகளில் அமெரிக்கா இறங்கியது. பேரழிவு ஆயுதக் குவிப்பு, அல்கொய்தா பயங்கரவாதிகளின் கூட்டாளி போன்ற குற்றச்சாட்டுக்கள் பொய்த்துப் போனபிறகு, சதாமுக்கு எதிரான உள்விவகாரங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவமளித்தது. அதாவது “மனிதாபிமான’ அடிப்படையில் ஐ.நா. சபை அளித்த “”உணவுக்கு எண்ணெய்” திட்டத்தைக் கூட சதாம் உசைன் கும்பல் சொந்த ஆதாயத்துக்காக முறைகேடாகப் பயன்படுத்திக் கொண்டு கொள்ளையடித்திருக்கிறது என்று நிரூபிக்கும் வேலையில் ஈடுபட்டது, அமெரிக்கா.

உணவுக்கு எண்ணெய் திட்டத்தில் நடந்த இலஞ்சஊழல் முறைகேடுகளை விசாரிப்பது என்று ஐ.நா. சபை மூலம் தீர்மானித்து வோல்கர் உட்பட ஏகாதிபத்தியக் கைக்கூலிகளைக் கொண்ட விசாரணைக் கமிசன் ஒன்று அமைக்கப்பட்டது. அதன் நோக்கம், சதாம் மீதான இலஞ்ச ஊழல் முறைகேடுகளைத் திரட்டித் தருவதுதான். இதற்காக ஐ.நா. சபையைப் பயன்படுத்திக் கொண்ட அமெரிக்கா, சதாம் மீதான சகநாட்டவர் படுகொலை, மனித உரிமை மீறல்கள் ஆகிய குற்றச்சாட்டுக்களை ஆதாரப்படுத்த, ஷியா, குர்து பிரிவின் பிரதிநிதிகள் என்ற பெயரில் வேறு சிலரைக் கொண்ட முகாம்களைப் பயன்படுத்திக் கொள்கிறது.

ஈராக்கை ஆண்ட சதாம் உசைன் கும்பல் இலஞ்ச ஊழல், சகநாட்டவர் மீதான படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் ஆகிய குற்றங்கள் புரியாத சுத்தமான ஜனநாயகத் தன்மை உடையது அல்ல என்பது உண்மைதான். இராணுவ பாசிச ஆட்சி நடத்தியதோடு, குவைத், ஈரான் ஆகிய நாடுகளுக்கு எதிராக ஆக்கிரமிப்புப் போர் நடத்திய கும்பல்தான். இந்தக் குற்றங்களை மூடிமறைப்பதற்காக இசுலாமிய மதவாதம், தேசியம், சுதந்திரம், ஏகாதிபத்திய எதிர்ப்பு முகமூடிகளைத் தரித்துக் கொண்டதுதான்.

ஆனால், இந்தக் குற்றங்களுக்காக சதாம் கும்பலை விசாரிக்கவோ, தண்டிக்கவோ சிறிதும் அருகதையற்றது அமெரிக்க ஏகாதிபத்தியம். ஏனென்றால், ஒருபுறம் பேரழிவு ஆயுதங்களை மலைமலையாக அமெரிக்காவே குவித்து வைத்திருப்பதோடு, இலஞ்ச ஊழல், மனித உரிமை மீறல்களின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளின் ஊற்றுமூலமாக அது விளங்குகிறது. மறுபுறம், ஈரானுக்கு எதிரான போரில் சதாமின் ஈராக்குக்குப் பேரழிவு ஆயுதங்களை வழங்கியதோடு, ஷியா, குர்து மக்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு ஆதரவு அளித்தும் வந்திருக்கிறது.

எரிகிற வீட்டிலும்கொள்ளையடிக்கும் எமகாதகர்கள்

கடந்த நவம்பரில் அந்த வோல்கர் கமிசன் அறிக்கை வெளியானது. உணவுக்கு எண்ணெய் திட்டத்தின் மூலம் ஒப்பந்ததாரர்கள் அல்லாத, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 270 பேருக்கு சதாமின் ஆட்சி எண்ணெய் ஒதுக்கீடு செய்து கொடுத்திருக்கிறது. அவர்களிடமிருந்து சேவைக் கட்டணம் வசூலித்து சதாமின் “”பாத் கட்சி” ஆதாயம் அடைந்திருக்கிறது என்று கூறுகிறது வோல்கர் கமிசன். அப்படி ஒப்பந்ததாரர் அல்லாத ஈராக் எண்ணெய் ஒதுக்கீடு செய்து ஆதாயம் அடைந்தவர்களின் வரிசையில் இந்தியாவின் மிகப் பெரிய தரகு முதலாளியும் இன்றைய ஆளும் காங்கிரசுக்கு நெருக்கமானதுமான அம்பானி குடும்பத்தின் ரிலையன்சு, காசுமீரின் பாந்தர் கட்சித் தலைவர் பீம்சிங், காங்கிரசு கட்சியின் வெளிவிவகார அமைச்சர் நட்வர்சிங் மற்றும் காங்கிரசுக் கட்சியும் இடம் பெற்றுள்ளனர்.

2001ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் காங்கிரசுக் கட்சியின் தூதுக் குழுவுக்குத் தலைமையேற்று ஈராக்குக்குப் போன நட்வர்சிங் கூடவே தனது மகன் ஜகத்சிங் மற்றும் அவரது உறவினரும் தொழில் கூட்டாளியுமான அந்துலீப் சேகலை அழைத்துக் கொண்டு போய், அவர்கள் மூலம் 40 இலட்சம் பீப்பாய் பெட்ரோலிய எண்ணெய் ஒதுக்கீடு பெற்று, சேகலின் “”ஹம்தான் ஏற்றுமதி” என்ற கம்பெனி பெயரில் சதாம் உசைனின் “”பாத்” கட்சிக்கு ஜோர்டான் நாட்டு வங்கி மூலம் சேவைக் கட்டணம் செலுத்தியுள்ளனர். காங்கிரசுப் பிரமுகராக இருந்து, அக்கட்சித் தூதுக் குழுவில் சென்ற அனில் மதராணி இதை உறுதி செய்துள்ளார்.

இச்செய்தி வெளியானவுடன், தனக்கு எதிரான அரசியல் சதி, ஆதாரமற்றது என்று மறுத்த நட்வர் சிங்கும் அவரது மகனும் ஈராக் பயணம் குறித்து முன்னுக்குப் பின் முரணாக உளறினர். நட்வர் சிங்குக்கு ஆதரவாகப் பேசிய காங்கிரசு, ஒருபுறம் மத்திய அமலாக்கப் பிரிவு மூலம் விசாரணை நடத்திக் கொண்டே, உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி பதக் தலைமையில் விசாரணைக் கமிசன் போட்டு பிரச்சினையை மழுப்புவதில் இறங்கியது.

நட்வர்சிங்கைப் பதவி நீக்கம் செய்யும்படி நாடாளுமன்றத்தில் “”கலகம்” செய்தன எதிர்க்கட்சிகள். முதலில் நட்வர்சிங் மீது நடவடிக்கையை வலியுறுத்திய போலி கம்யூனிஸ்டுகள் பிறகு, எல்லாம் சி.ஐ.ஏ. சதி என்றும், நட்வர் சிங் இடதுசாரி முற்போக்காளர், அமெரிக்க எதிர்ப்பாளர், வோல்கர் கமிட்டியே அமெரிக்க சி.ஐ.ஏ. புனைவு என்ற நிலையெடுத்துள்ளது. நட்வர் சிங்கை நீக்கிவிட்டு தனக்கு விசுவாசியான மன்மோகன் சிங்கிடம் அயலுறவுத் துறையை ஒப்படைக்கவே அமெரிக்கா இப்படிச் செய்கிறது என்கின்றனர். இப்படிக் கூறுபவர்கள்தாம் தொடர்ந்து மன்மோகன் சிங் அரசையும் ஆதரிகின்றனர். மறுபுறம் நட்வர் சிங்கும் சி.பி.எம். கூறுவதுபோல, அமெரிக்க எதிர்ப்பாளர் அல்ல. பதவியேற்ற மறுவாரமே அமெரிக்காவிற்குப் போய் புஷ்ஷிடம் மண்டியிட்டு, ஈராக்கிற்கு இந்தியப் படை அனுப்புவதை உறுதி கூறியவர்; இங்கே ஏற்பட்ட கடும் எதிர்ப்பே, அவ்வாறு செய்ய விடாமல் தடுத்து விட்டது.

ஈராக் விவகாரத்தில் தன்னை ஆதரிக்காத, சதாம் ஆதரவு நட்வர் சிங்கையும், காங்கிரசையும் பழிவாங்கவே வோல்கர் கமிட்டி அறிக்கையை அமெரிக்கா தயாரித்துள்ளது என்றும் போலி கம்யூனிஸ்டுகள் கூறுகிறார்கள். ஆனால் நட்வர் மன்மோகன் சோனியா கும்பல்தான் அமெரிக்காவுடன் அணுஆயுத இராணுவ ஒப்பந்தம் போட்டது, ஈரானுக்கு எதிரான அமெரிக்க சதியை ஆதரித்து, அணுஆயுத தடை தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் ஆதாரங்கள் வெளிவந்தது காரணமாக, காங்கிரசு ஊழலை மறைப்பதற்காக நட்வர் சிங்கிடம் இருந்த பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், “”நீ மட்டும் யோக்கியமா?” என்ற வழக்கமான பாணியில், ஈராக் உணவு எண்ணெய் திட்டத்தால் காங்கிரசு மட்டும் ஆதாயமடையவில்லை, பா.ஜ.க.வும்தான் ஊழல் செய்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை காங்கிரசு வெளியே கொண்டு வருகிறது.

பா.ஜ.க. ஆட்சியில்தான் இந்த ஊழல் நடந்திருக்கிறது. ஈராக்கில் உள்ள இந்தியத் தூதர் அப்போதே இது குறித்த செய்தியை, பா.ஜ.க. அரசுக்கு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் சமயத்தில் பா,ஜ.க. அரசுக்கு இந்த உண்மை தெரிய வந்தும் தனக்குச் சாதகமாக, காங்கிரசுக்கு எதிரான ஆயுதமாக அது பயன்படுத்தாதற்கு காரணம் இந்த ஊழலில் பா.ஜ.க.வுக்கும் பங்கு கிடைத்திருப்பதுதான் என்று எதிர் குற்றச்சாட்டு வீசப்படுகிறது. குறிப்பாக, வாஜ்பாயியின் மருமகன் ரஞ்சன் பட்டாச்சார்யா, சதாமின் மகனுடன் நெருங்கிய உறவு வைத்திருந்தார்; அவருக்கு எண்ணெய் விவகாரத்தில் தொடர்பு இருந்தது என்று ராஜீவுக்கும் காங்கிரசுக்கும் நெருங்கிய கூட்டாளியும், காங்கிரசு அரசின் முன்னாள் வெளியுறவுச் செயலரும், உ.பி. மாநில முன்னாள் ஆளுநருமான ரமேஷ் பண்டாரி கூறுகிறார்.

எப்படியோ அமெரிக்கா, தனது எதிரிக்கு எதிராக நடத்திய துப்பாக்கிச் சூட்டின் சிதறல்கள் தனது விசுவாசிகளான இந்திய முன்னாள்இன்னாள் ஆட்சியா ளர்களையும் பதம்பார்த்து விட்டது. இந்தநாட்டில் ஜனநாயகம் பரவலாக்கப்படுகிறது என்று சொன்னால், ஊழல் பரவலாக்கப்படுகிறது; ஆளும் கட்சிக்கு மட்டுமல்ல, எதிர்க் கட்சிகளுக்கும் கூட இலஞ்ச ஊழல் களுக்கான வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றது. சந்தேகமின்றி இந்த வகையில் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் மிகச் சிறந்து விளங்குகின்றது.

கேள்வி கேட்க இலஞ்சம்! சர்வகட்சி ஜனநாயகம்!

இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அனைத்துக் கட்சி இலஞ்ச ஊழல் மாண்பை நிரூபிக்கும் வகையில் மேலும் சில சான்றுகள் சமீபத்தில் வெளியாகியுள்ளன. தொழில் குழுமங்களுக்குச் சாதகமாக நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்புவதற்கு எம்.பி.க்கள் இலஞ்சம் வாங்கும் “”வீடியோ” காட்சிகள்; உள்ளூர் தொகுதி வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் 2 கோடி ரூபாய் பெறும் எம்.பி.க்கள், திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கு இலஞ்சம் கேட்கும் “”வீடியோ” காட்சிகள் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பப்பட்டிருக்கின்றன.

முந்தைய பா.ஜ.க. ஜனதா தள கூட்டணி ஆட்சியின் போது ஆயுத பேர நாடகமாடி அக்கட்சிகளின் தலைவர்கள் இலஞ்சம் வாங்கக் கூடியவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையிலான “”வீடியோ” காட்சியைப் படமாக்கி ஒளிபரப்பினார், “”தெகல்கா” செய்தி இணையத்தளத்தின் ஆசிரியர் அனிருத் பெகல். இப்போது அவர் “”கோப்ரா போஸ்ட்” என்ற செய்தி இணையத்தளத்தின் சொந்தக்காரரும் ஆசிரியருமாக உள்ளார். இவர் “”ஆஜ் தக்” என்ற செய்தி அலைவரிசையுடன் இணைந்து, நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க எம்.பி.க்கள் இலஞ்சம் வாங்குவதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளார்.

“”கோப்ரா போஸ்ட்” இணையத்தளம் மற்றும் “”ஆஜ் தக்” அலைவரிசையைச் சேர்ந்த செய்தியாளர்களைக் கொண்ட குழு ஒன்று, சிறுதொழில் முனைவோர் சங்கம் என்ற பெயரில் எம்.பி.க்கள் சிலரை அணுகி, சங்கத்துக்குச் சாதகமாக நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கான பேரங்கள் நடத்தி பதினைந்தாயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை இலஞ்சம் கொடுத்து, அதை இரகசியமாக “”வீடியோ” காட்சியாகப் பதிவும் செய்து ஒளி பரப்பிவிட்டது.

இதைப் பார்த்து “”நாங்கள் ஆழமான வேதனையும் அதிர்ச்சியும் அடைந்துவிட்டோம்” என்று தற்போதைய நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி பம்மாத்து பண்ணியிருக்கிறார். ஆனால், இலஞ்சம் வாங்கிக் கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்பது பல ஆண்டுகளாக நடப்பது எம்.பி.க்கள் உட்பட அரசியல்வாதிகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் தெரிந்த விசயம்தான்!

“”1980கள் நெடுகவும் பெட்ரோலிய இரசாயனம் மற்றும் மருந்துக் கம்பெனிகள் எம்.பி.க்களைப் பயன்படுத்தி கேள்விகளும் எதிர்க் கேள்விகளும் நாடாளுமன்றத்தில் எழுப்பிக் கொண்டிருந்தது நன்றாகவே தெரியும். இந்தப் பிரச்சினை இந்தியாவில் ஒன்றும் விதிவிலக்கானதில்லை” என்கிறார் ராஜீவ்சோனியா இருவருக்குமே நெருங்கிய காங்கிரசு மூத்த தலைவரும் மேலவை எம்.பி.யுமான ஜெயராம் ரமேஷ்.

“”இப்போது சிக்கியவர்கள் எல்லாம் சிறிய மீன்கள்தான்; மாபெரும் சுறாக்களையெல்லாம் யாரும் நெருங்கக் கூட இல்லை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. கேள்வி கேட்கப் பணம் வாங்கிய விவகாரம் என்பது வெளியே தெரியும் ஒரு சிறுமுனை போன்றது தான். மலையளவு விவகாரங்கள் மறைந்து கிடக்கின்றன. ஒரு குறிப்பிட்ட தொகையை “படி’ போலப் பெற்றுக் கொண்டு, தொழில் குழுமங்கள் சார்பில் நிரந்தரப் பிரதிநிதிகளாக இருக்கும் எம்.பி.க்கள் பலரும், சில குறிப்பிட்ட ஆதரவுக் குழுக்களில் இடம் பெற்றுள்ள எம்.பி.க்கள் பலரும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்கள் யார் யார் என்பது அரசியல் வட்டாரத்திலோ, நாடாளுமன்ற வட்டாரத்திலோ தெரியாத விசயமுமல்ல.

“”தொழில் குழுமங்களின் பிரதிநிதிகளாக இருக்கும் எம்.பி.க்களுக்கு ரொக்கம் மட்டுமல்லாமல், இதர சலுகைகள், போனஸ், நிறுவனப் பங்குகள் (ஷேர்கள்) உள்பட பல ஆதாயங்கள் கிடைக்கின்றன. அவர்கள் சார்ந்துள்ள தொழில் குழுமங்கள் அல்லது அமைப்புக்கு லாபத்தை ஏற்படுத்தக் கூடிய கேள்விகளையே அந்த எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கேட்கின்றனர். ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் தொழில் நிறுவனக் குழுமங்கள், தம் எதிரி நிறுவனங்களை முடக்குவதற்கான கேள்விகளை நாடாளுமன்றத்தில் கேட்பதற்கு அரசியல்வாதிகளைக் கடந்த காலத்தில் பயன்படுத்தி வந்தன” (தினமணி 19.12.05) என்று எழுதுகிறார், மூத்த செய்திக் கட்டுரையாளர் நீரஜா சௌத்ரி.

மக்கள் பிரதிநிதிகள் என்ற போர்வையில் பெரும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளாகச் செயல்படுவது பழைய, ஒப்பீட்டு ரீதியில் சிறிய விசயம்தான். நாடாளுமன்றம் மற்றும் அரசாங்கத்துக்குக் கொள்கை முடிவுகளைப் பரிந்துரைக்கும் நாடாளுமன்ற குழுக்களின் உறுப்பினர்களாகவே தங்கள் பிரதிநிதிகளை தொழில் நிறுவனங்கள் நியமிக்கச் செய்கின்றன. இதற்கும் மேலேபோய், தரகு அதிகார முதலாளிகளே நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவிகளையே அரசியல் கட்சிகளிடம் பேரம்பேசி வாங்கி விடுகின்றனர். பா.ஜ.க. மற்றும் காங்கிரசைப் போலவே, மாயாவதி, முலயம் சிங் கட்சிகள் முக்கியமாக இதைச் செய்கின்றன.

ஒழுக்க சீலர்களின் கட்சி என்று நாடகமாடும் பா.ஜ.க.வினர் ஆறுபேரும், பிழைப்புவாத மாயாவதி கட்சியினர் மூவரும், லல்லு, முலயம், காங்கிரசு கட்சிகளில் தலா ஒருவருமாக 11 எம்.பி.க்கள் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்குபவர்களின் “”வீடியோ” காட்சியில் சிக்கியுள்ளனர். பா.ஜ.க. தமது கட்சிக்காரர்கள் மீது முதலில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தாலும் நாடாளுமன்றத்தில் இருந்து அவர்களை நீக்குவதற்கு மறைமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாதி அரசியல் நடத்தும் மாயாவதி, லல்லு, முலயம் கட்சிகளுக்கு லஞ்ச ஊழல் ஒரு பிரச்சினையே இல்லை. இதெல்லாம் தனது கட்சிக்கு எதிரான சதி என்று கூறும் மாயாவதி தனது ஊழல் எம்.பி.க்களுக்கு வக்காலத்து வாங்கி நியாயப்படுத்தியிருக்கிறார்.

இந்த இலஞ்ச நடவடிக்கை அம்பலமாக்கப்பட்ட அதேபாணியில் அடுத்ததாக, ஆண்டுதோறும் இரண்டு கோடி ரூபாய் தொகுதி வளர்ச்சிக்கு என்று தரப்படும் நிதியை ஒதுக்கீடு ஒப்புதல் கொடுப்பதற்காக, மூன்று பா.ஜ.க., இரண்டு முலயம் கட்சி, மாயாவதி, காங்கிரசு கட்சிகளில் தலா ஒருவர் என ஏழு எம்.பி.க்கள் இலஞ்சம் வாங்குவதை “”ஸ்டார்” அலைவரிசை “”வீடியோ” காட்சி எடுத்து அம்பலப்படுத்தியிருக்கிறது.

கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற விவகாரத்தில் பரபரப்பாகவும், உடனேயும் நடவடிக்கை எடுத்த கட்சிகளும், நாடாளுமன்றமும் இரண்டாவது விவகாரத்தில் அப்படிச் செய்யவில்லை. இவர்கள் நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு இடைக்கால தடை விதித்து, அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி சம்பந்தப்பட்ட அமைச்சக விசாரணை என்பதாக திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்னும் கொஞ்ச காலத்தில் “”நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இதெல்லாம் சகஜம்தான்” என்று எல்லாக் கட்சிகளும் வெளிப்படையாகவே மாற்றி விடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. “”சிக்கிக் கொள்ளும் அளவுக்கு முட்டாள்தனமாக இருந்ததற்காக எம்.பி. பதவியைப் பறிப்பது என்பது மிகக் கடுமையான தண்டனை என்று அவர்கள் கூறுவார்கள்” என்கிறார், நீரஜா சௌத்ரி. இப்படியே போனால், ஒழுங்கு நடவடிக்கையில் இருந்து யாருமே தப்ப முடியாது; ஆகவே இதையெல்லாம் கண்டு கொள்ளக் கூடாது என்று மாற்றி விடுவார்கள்.

“”கம்யூனிஸ்டு கட்சிகள் மட்டும்தான் இதிலெல்லாம் சிக்காது ஒழுக்க சீலர்கள்” என்று அறிவுஜீவிகளால் பாராட்டப்படுகிற இவர்கள், சிக்கிக் கொள்ளும் அளவுக்கு முட்டாள்கள் அல்ல என்பதுதான் உண்மை. 20,30 சினிமா படங்களை அருவெறுப்பாக எடுத்துக் கொள்ளையடிக்கிறார்கள் என்றால் அவற்றுக்கு நடுவே ஒரு அற்பத்தனமான, பத்தாம்பசலிக் குடும்பப் படத்தையும் எடுத்து காசு பார்ப்பது போன்றது போலி கம்யூனிச கட்சிகளின் செயல். ஏற்கெனவே பன்றித் தொழுமாகி விட்டது நாடாளுமன்ற ஜனநாயகம். அந்தப் பன்றிகள் மீது பன்னீர் தெளித்து மணம் பரப்புவதுதான் இவர்கள் வேலை.

“””நாடாளுமன்ற ஜனநாயகம் என்பதே கேலிக் கூத்து’ என்று காலம் காலமாக தீவிர கம்யூனிஸ்டுகள் சொல்லி வருவது உண்மைதானோ என்று பொதுமக்கள் வீதிக்கு வீதி பேசும் நிலை ஏற்பட்டிருக்கிறது” என்று எழுதுகிறது, பிரபல பார்ப்பன கிசுகிசு ஏடான ஜூனியர் விகடன். இதே அச்சம்தான் போலி கம்யூனிஸ்டுகளுக்கும்! ஆனாலும் இந்த உண்மையை என்ன செய்தும் மூடி மறைத்துவிட முடியாது!

– ஆர்.கே.

நன்றி: புதிய ஜனநாயகம் 2006

தொடர்புடைய பதிவுகள்:

எம்.எல்.ஏ வுக்கு பொறுக்கித் தின்ன மட்டுமே அதிகாரம்! ஆள்வதற்கல்ல!!

கோடிகளில் கொழிக்கும் மத்திய அமைச்சரவை ! பி.சாய்நாத் !!

தேர்தல் சீர்திருத்தம் மூலம் ஊழல் மறையுமா? கேள்வி-பதில்

ஜனநாயம் எனபது லட்சியமா, வழிமுறையா?

மக்களை குற்றவாளிகள் போல் கண்காணிக்கும் போலீசு ஆட்சிக்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டம்! அனைவரும் வருக!

குடியிருப்போர், மாணவர்கள், தொழிலாளர்களை

குற்றவாளிகள் போல் கண்காணிக்கும்

போலீசு ஆட்சியை முறியடிப்போம்!

கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 25.4.12 மாலை 4 மணி

இடம்:  மெமோரியல் ஹால், சென்னை

அனைவரும் வாரீர்!

அதிகரிக்கும் போலீசு கண்காணிப்பு: பாசிமயமாகும் அரசு!

தொடர்புடைய பதிவுகள்

ஹூனான் விவசாயிகள் இயக்கம் பற்றிய ஓர் ஆய்வறிக்கை 1927 – தோழர் மாசேதுங்

mao__2_copy

 1927ம் ஆண்டு சீனாவின் ஹூனான் மாகாணத்தில் நடைபெற்ற விவசாயிகளின் எழுச்சியினைக்குறித்து, அப்போதிருந்த தவறான புரிதல்கள் குறித்தும், கட்சியிலிருந்த வலதுசாரி பிரிவான சென் டூ ஷி தலைமையிலானவர்கள் மேற்கொண்ட விவசாய இயக்கத்துக்கெதிரான செயல் பாடுகள் குறித்தும் தோழர் மாசேதுங் தெளிவாக விளக்குகிறார்.

கோமிண்டாங்கைத்திருப்தி படுத்த விவசாயவர்க்கத்தை கைவிட்டு தொழிலாளிவர்க்கத்தை தனிமைப்படுத்தியதை அம்பலப்படுத்தி கண்டிக்கிறார். இந்த விவசாயிகள் இயக்கத்தினைப்பற்றி மேட்டுக்குடியினரும், செல்வந்தர்களும் ஏன் கட்சியிலிருந்த வலது பிரிவினரும் பேசியதற்கு மாறாக தன்னுடைய நேரடி பயணத்தின் விளைவாக கண்ட அனுபவபூர்வமான அறிக்கையே இந்த ஹூனான் விவசாயிகள் இயக்கம் பற்றிய ஓர் ஆய்வறிக்கை 1927 ஹூனானில் வளர்ந்த விவசாய இயக்கத்தினை இரண்டு காலகட்டமாக பிரிக்கலாம். முதல் காலகட்டம் 1926 ஜனவரிமுதல் செப்டம்பர் வரையிலானது.

அக்கட்டம் அமைப்பைக்கட்டும் காலகட்டம். அதில் ஜனவரி முதல் ஜூன் வரை தலைமறைவாக செயல்பட்டது.புரட்சிகர ராணுவம் சாவோ ஹெங் டியை (யுத்த பிரபு) விரட்டிய காலமே வெளிப்படையான காலமாகும். (ஜூலை முதல் செப் வரை). இந்த முதல் காலக்கட்டத்தில் 3 முதல் 4 லட்சம் வரைதான் உறுப்பினர்கள் இருந்தது. அமைப்பின் நேரடி தலைமையின் கீழிருந்த மக்களின் எண்ணிக்கை 10 லட்சத்தினைத்தாண்டவில்லை. ஆனால் இரண்டாவது காலகட்டமான 1926 அக்டோபர் முதல் 1927 ஜனவரி வரையில் சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தினைத்தாண்டியது.அதன் நேரடி தலைமையின் கீழிருந்த மக்களின் எண்ணிக்கையோ 1 கோடிக்கும் அதிகமானது. விவசாயிகள் தங்களின் பலத்தினை சார்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். நான்கு மாதங்களுக்குள்ளாகவே ஒரு புரட்சியைத்தோற்றுவித்தனர். மாபெரும் ஈடு இணையில்லா சாதனை இது.

விவசாயிகளின் முக்கியத்தாக்குதல் இலக்காய் இருந்தவை உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள். ஆனால் நிலபிரபுக்களை வீழ்த்துகிற போகிற போக்கில் வம்சா வரிக்கோட்பாடு, ஊழல் அமைப்புக்களுக்கெதிராக, மூட நம்பிக்கைக்கெதிராக தங்கள் போராட்டத்தினை கட்டியமைத்தனர். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் நிலபிரபுக்களின் வாரிசாய் , தகுதியாய், வளர்ந்த சலுகைகள் தூள் தூளாக்கப்பட்டது. நிலபிரபுக்களின் அதிகாரத்தை பறித்து அங்கு விவசாய சங்கம் அமர்கிறது. இது வரை மக்களை ஒடுக்கியே வந்த அதிகாரம் இப்போது ஒடுக்கியவர்களை ஒடுக்கப்பட்டவர்களால் அடக்கப்போகிறது. மாபெரும் முழக்கம் உதயமாகிறது அது தான் ” அனைத்து அதிகாரமும் விவசாய சங்கங்களுக்கே “ அது நடைமுறையிலும் சாத்தியமாக்கப்படுகின்றது.

உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள் ஆகியோர் பேசுவதற்கான எல்லா உரிமையும் மறுக்கப்படுகின்றது. பணத்தினைக்கொடுத்து சங்கத்தில் சேர முயற்சிக்கும் நிலப்பிரபுக்களுக்கு பதிலாய் தெறிக்கின்றன வார்த்தைகள் “தூ யாருக்கு வேண்டும் உன் எச்சில் காசு “.

 நான்கு மாதங்களுக்கு முன் மந்தையாக இருந்த (அழைக்கப்பட்ட) சங்கம் தான் இப்போது மிக மிக மதிப்புக்குரியது.நகரத்திற்கு தப்பி வந்த உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள் ஆகியோர் உச்சரிக்கும் இது “பயங்கரமானது” என்ற சொல் முதலாளித்துவாதிகள் மட்டுமல்ல புரட்சிகர எண்ணம் கொண்டோரையும் பிடித்தாட்டியிருக்கிறது அதற்கு தெளிவாய் பதில் சொல்கிறார் மாவோ “இது அருமையானது”. ஆம் மக்களை கொன்று குவித்த நிலப்பிரபுக்களின் மீது இந்த பயங்கரமானது எத்தனை முறை விழுந்திருக்கும் ?

ஆனால் மக்கள் கிளர்ந்தெழுந்து நிலப்பிரபுக்களுக்கெதிராக போராடும் போது திருப்பி தாக்கும் போது பயங்கரமானது என்றவார்த்தைகள் மக்களை பாய்ந்து கடித்து குதறுகிறது. இதே போலத்தான் “சங்கம் தேவைதான் ஆனால் அத்து மீறுகிறார்கள்” என்ற போர்வையும்.

அத்துமீறிய உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்களுக்கு எதிராக கிளம்பாத வார்த்தை மக்களுக்கெதிராக கிளம்புகிறது. (இதை அப்படி நம்முடைய லால்கர், நந்திகிராமிற்கு பொருத்தியும் பார்க்கலாம் . அரச பயங்கவாதத்தினை பற்றி பேசாத வாய்கள் எல்லாம் மக்கள் நிலபிரபுக்களை விரட்டியவுடன் சொன்னது “அறிவில்லாத மக்கள் போலீஸ் ஸ்டேசனை கொளுத்தறாங்க, சீபீஎம் ஆபீசை கொளுத்தறாங்க, நிலப்பிரபுவை கொல்றாங்க “)

யாரை கீழ் மக்கள் என பணக்கார விவசாயிகள் இகழ்ந்தார்களோ அவர்கள் தற்போது பேரரசர்களாகிவிட்டார்கள் ஆம் மக்களின் ஆணைக்கிணங்க நிலப்பிரபுக்கள் சிறையிலடைக்கப்படுகிறார்கள். இப்புரட்சியின் முன்னணியாளர்கள் யார் தெரியுமா? ஏழை விவசாயிகள். மொத்த மக்கள் கிராமப்புற தொகையில் ஏழை விவசாயிகள் 70%, நடுத்தர விவசாயிகள்20%, பணக்கார விவசாயிகள் 10% இருக்கிறார்கள். அதிலும் அந்த 70 % ஏழை விவசாயிகளில் மிகமிக வறிய விவசாயிகள் 20%-ம் வறுமையில் வாடும் விவசாயி 50% பேரும் இருக்கிறார்கள். இந்த ஏழை விவசாயிகள் தான் நம்முடைய இலக்கு அவர்கள்ள்தான் இழப்பதற்கு ஏதும் இல்லாதவர்கள், இந்த இலக்கு தான் அந்த இலக்கினை (உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள்) தாக்கி அழிக்கும் என்கிறார் தோழர் மாவோ.

விவசாய சங்கம் குற்றம் இழைத்துவிட்டதாக கூறுபவர்களிடம் மாவோ சொல்கிறார் “உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்களுக்கெதிரான உழைக்கும் மக்களின் போர் இது . இது எவ்விதத்திலும் குறை கூறத்தக்கதல்ல .” என்று தான் பயணம் செய்த போது விவசாய சங்கத்தின் சாதனைகளை பட்டியலிடுகிறார்.

மாபெரும் 14 சாதனைகளை கூறும் மாவோ இப்புரட்சி சரியான திசை வழியில் செல்வதை தெளிவாக அறிகிறார்.மக்களை அமைப்பாக்கியதே மாபெரும் சாதனை . ஹூனான் மத்திய மாவட்டத்தில் எல்லா விவசாயிகளும், தெற்கு ஹூனானில் பாதி விவசாயிகளும், மேற்கு ஹூனானில் தற்போது அமைப்பாக்கும் நிலையிலும் சங்கத்தில் இணைந்திருக்கின்றனர். ஆனால் சில மாவட்டங்களை அமைப்பு இன்னும் சேரவில்லை. நிலப்பிரபுத்துவ வர்க்கத்தினைத்தாக்கும் விவசாய சங்கம் தன் பலத்துக்கேற்றவாறு செயல் பாட்டில் இறங்குகிறது. அரசியல் ரீதியாக தாக்க கணக்குகளை சரி பார்ப்பது , அதாவது பொதுப்பணத்தினை கையாடல் செய்த தீய மேட்டுக்குடிக்கெதிரான நவடிக்கை, பணத்தினை மீட்பதோடு அந்தஸ்தினை அடித்து வீழ்த்தவும் பயன்படுகிறது. ஒழுங்கீனக்களுக்கெதிராக நன்கொடை வசூலிக்கப்படுகிறது. அத்துடன் அவன் தன் மானம் மரியாதையை முற்றிலும் இழக்கவும் வைக்கிறது சங்கம். நன்கொடைகள் மூலம் தண்டனை வழங்கப்படுகிறது.

 உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள். நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் மிகவும் முக்கியமானவை. சியாங்டன்-ல் 15000 விவசாயிகள் தீய மேட்டுக்குடியினரின் வீட்டில் நுழைந்து துவம்சம் செய்து 4 நாட்கள் தங்கி தின்று தீர்க்கின்றனர். பின்னர் வழக்கமான அபராதம் வேறு. உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள் ஆகியோரை தெருவில் காகிதத்தொப்பி அணிந்து இழுத்து வரும் இந் நிகழ்வு மக்களிடையே மிகவும் வரவேற்பினை பெற்றிருக்கிறது. முன்னர் நிலபிரவின் ஆணைக்கிணங்க சிறையில் தள்ளிய நீதிபதி தற்போது விவசாய சங்கம் காலையில் சொன்னால் மதியம் பிடி ஆணை பிறப்பிக்கப்படுகிறார். மிக மோசமான குற்றங்கள் புரிந்த உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள் தன் வசதிக்கேற்றவாறு தப்பி ஓடுகின்றனர்.

 சிலர் திருப்பி அரசால் திருப்பி கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மிக மிக மோசமான கொடுங்கோலர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கான குறிப்புக்கள், மற்றும் அவன் இழைத்த குற்றங்கள் என அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான விவசாயிகளை வறுமையால் கொன்றவன், பிச்சைக்காரர்களை கொன்று ஆரம்பிக்கின்றேன் என சொன்னவன் என முக்கிய குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

ஹூனான் மாகாணத்தில் விவசாய சங்கத்தின் அதிகாரத்தின் கீழுள்ள பகுதிகளில் எல்லாம் எங்குமே தானிய பதுக்கலோ, வெளியே அனுப்புவதோ, விலையேற்றம் செய்வதோ முற்றிலும் இல்லை. தடை செய்யப்பட்டுள்ளது. குத்தகையை காரணமின்றி அடிக்கடி உயத்தி கொள்ளை அடித்தல் முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது. டூ எனப்படும் மாவட்டமும் டூவான் எனப்படும் மாவட்ட நிர்வாகமும் தற்போது அமைதியாய் ஒதுங்கியிருப்பதைத்தவிர வேறு வழியில்லை என்றாகிவிட்டது.

மக்களை சித்திரவதை செய்யும் போலீசு இப்போது ஒதுங்கிச்செல்கிறது. நிலப்பிரபுக்களின் ஆயுதப்படைய தூக்கியெறிந்துவிவசாயிகள் தங்களின் படைகளை நிறுவியிருக்கிறார்கள். சியாங் சியாங்-ல் 100000 ஈட்டிகளும்,மற்ற மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஈட்டிகளும் இருக்கின்றன. “ஈட்டியை கண்டு உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள் தான் பயம் கொள்ள வேண்டும். புரட்சியாளர்கள் அல்ல” சீனாவில் மதிக்கும் எந்த ஒரு சாதாரண மனிதனும் அரசியல் ஆதிக்கம் (மாகாண அமைப்பு முறை), குல ஆதிக்கம், கடவுளாதிக்கம் என 3 வகையான ஆதிக்கத்தின் கீழ்தானிருக்கின்றனர். ஆனால் பெண்கள் இந்த மூன்றையும் சேர்த்து கணவன் ஆதிக்கத்திலும் உழல்கின்றனர்.

நிலபிரபுத்துவத்துக்கெதிரான இப்போராட்டம் நான்வகை ஆதிக்கத்தையும் தகர்க்கிறது. பெண்களுக்கு சம உரிமை என சுதந்திரம்ஜனனாயகம், சமத்துவம் என அனைத்தும் பரவலாக்கப்படுகிறது. இந்தப்புரட்சி மாபெரும் கல்வி அறிவினை மக்களுக்கு கொடுத்திருக்கிறது, அன்னியப்பாணி கல்வியினை வெறுத்த மக்கள் சீனப்பாணி கல்விமுறையை ஆவலோடு கற்கிறார்கள்.அரசியல் கல்வில் இரு குழந்தைகள் விளையாடும் போது கூட ஒன்று ஏகாதிபத்தியம் ஒழிகஎன முழக்கமிடுவதன் மூலம் மக்களிடம் ஆழமாக வேறூன்றியுள்ள அரசியலை அறியமுடிகிறது. தீய பழக்கங்கள் சூதாட்டம்,ஆபாச நடனம், அபின் புகைத்தல், சாராயம் காய்ச்சுதல் தடை செய்யப்பட்டு ஒழிக்கப்பட்டு விட்டது.

எருதுகள் கொல்வதற்கும் தடையும், கோழிகள், வாத்துகள், பன்றிகள், வளர்க்க கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. கொள்ளையடித்தல் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, கொள்ளையர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். மேலும் மிக அதிகமான நன்கொடை கூட தடை செய்யப்பட்டிருப்ப்து என்பது பணக்கார விவசாயிகள் மத்தியில் கூட நல்லபெயரை கொடுத்து இருக்கிறது. கடனுக்காக கூட்டுறவு இயக்கம், தானியத்துக்கான கூட்டுறவு என பலவும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பல்லாண்டுகளாக போடப்படாத சாலை, தூர்வாரப்படாத குளங்கள் என அனைத்தும் சாத்தியமாகி இருக்கின்றன அதுவும் நான்கு மாதங்களில்……….

இது மக்களின் போராட்டமே உழைக்கும் விவசாயிகளின் புரட்சியே என்பதனை ஆணித்தரமாக நிறுவுகிறார் தோழர் மாசேதுங். இதை ஆதரிக்கவேண்டியது நம் கடைமை என்றும் அப்போதிருந்த வலது தலைமை புரட்சியை புறக்கணித்தது தவறு என்பதயும் தெளிவிக்கிறார். இப்புத்தகத்தினை படிக்கும் போதே கவர்ந்த விசயம் என்னவெனில் அந்த எழுத்து நடை நம்மை அவருடனே (மாவோ) பயணிக்கவைக்கிறது.

புத்தகம் முடிந்தவுடன் அவரின் வார்த்தைகள் ஆழமாய் பதிகின்றன

” ஒரு புரட்சி என்பது மாலை நேர விருந்தோ, ஒரு கட்டுரை எழுதுவதோ, ஓவியம் தீட்டுவதோ, பூத்தையல் வேலைப்பாடோ அல்ல……….. ஒரு புரட்சி நிதானமுள்ளதாகவும் பொறுமை, கருணை, பெருந்தன்மையுள்ளதாக இருக்க முடியாது. புரட்சி என்பது ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தினை தூக்கி எறிவதாகும். இது ஒரு பலாத்த்கார நடவடிக்கை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்திருக்கும் நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தை ஆயிரக்கணக்கான விவசாயிகளின் பலத்தை பிரயோகிக்காது சாத்தியமில்லை. சக்திமிக்க எழுச்சி மட்டுமே லட்சக்கணக்கான விவசாயிகளை தட்டி எழுப்பி பலம் வாய்ந்த சக்தியாக உருவாக்க முடியும்”

 – தோழர் கலகம்

கேடயம் வெளியீடு,

விலை 20/-

தற்போது மிகவும் கிடைப்பதற்கு தட்டுப்பாடான நூல்

பெட்ரோலியத் துறை : பொன் முட்டையிடும் வாத்து!

இந்த விலையேற்றம் குறித்து காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை, ‘விலையினை குறைக்கும் வழியினை மத்திய அரசு ஆராய வேண்டும்.மாநில அரசுகள் வரியினை குறைக்க வேண்டும்’. கூட்டணி கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி தெரிவிக்கிறது. திமுக கட்சி எப்பவும் போல எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மெளனம் சாதிக்கிறது. ஓட்டுப்பொறுக்கி அரசியலில் கட்சிகளின் யோக்கியதை இதுதான்.

இதனிடையே ‘பெட்ரோலிய எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம்’ என்று மோசடியினை கூறி கொண்டே விலையினை உயர்த்திக் கொண்டே போகின்றனர். ஆனால் அது உண்மையல்ல. மத்திய, மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய வருமானம் தரும் துறைதான், பெட்ரோலிய துறை. இது குறித்த புதிய ஜனநாயகம் பத்திரிக்கையில் வந்த கட்டுரை மீள்பிரசுரம் செய்கிறோம்.

********************

பெட்ரோலியத் துறை : பொன் முட்டையிடும் வாத்து

இந்தியாவில் பெட்ரோல் – டீசல் மீது விதிக்கப்படும் அபரிதமான வரிகள்தான், அவற்றின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம்.

பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு, பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக மக்களின் தலையில் இடியாக இறங்கியிருக்கிறது. எனினும், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகளை

உயர்த்தாமல், பெட்ரோல் விலையில் இரண்டு ரூபாயும்; டீசலின் விலையில் ஒரு ரூபாயும் மட்டும் உயர்த்தப்பட்டிருப்பதைக் காட்டி, தன்னை மக்களின் வேதனையை அறிந்தவனாகக் காட்டிக் கொள்கிறது, காங்.கூட்டணி ஆட்சி.

இவ்விலை உயர்வின் மூலம் கிடைக்கும் இலாபம் ஒருபுறமிருக்க, பெட்ரோல்டீசல் விற்பனையின் மூலம் மைய/மாநில அரசுகளுக்குக் கிடைத்துவரும் வரி வருமானம், 6,500 கோடி ரூபாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கட்டண உயர்வின் மூலம், பட்ஜெட்டிற்கு முன்பாகவே மக்களிடம் ஒரு வரிக் கொள்ளையை நடத்திவிட்டது, மன்மோகன் சிங் கும்பல்.

எப்பொழுதெல்லாம் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் அதனை நியாயப்படுத்த, ஒரு “”ரெடிமேட்” காரணத்தைக் கூறி வருகிறது, மைய அரசு. “”சர்வதேச சந்தை விலையை ஒப்பிடும்பொழுது, இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்கள் விலை மலிவாக விற்கப்படுவதாகவும்; அதனால் அரசு நிறுவனங்களுக்கு ஏகப்பட்ட நட்டம் ஏற்படுவதாகவும் (தற்போதைய நட்டக் கணக்கு ரூ. 70,000 கோடி); அந்த நட்டத்தை இனியும் தாங்க முடியாது என்ற நிலையில்தான் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் மிதமாக ஏற்றப்படுவதாகவும்” மைய அரசும், அதன் எடுபிடிகளும் நியாயப்படுத்தி வருகின்றனர். ஆனால், பெட்ரோலியப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வது குறித்து, நாடாளுமன்ற நிலைக் குழு அரசுக்கு அளித்துள்ள அறிக்கையைப் படித்தால், அரசு கூறிவரும் நட்டக் கணக்கு, நியாயவாதங்கள் அனைத்தும் மிகப் பெரிய பித்தலாட்டம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

பெட்ரோல், டீசல் போன்ற பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்யப் பயன்படும் மூலப் பொருளான கச்சா எண்ணெய் (ஞிணூதஞீஞு ணிடிடூ) நமது நாட்டில் தேவையான அளவிற்குக் கிடைப்பதில்லை என்றாலும் கூட, இந்தியாவின் (பெட்ரோலிய) தேவையில் ஏறத்தாழ 30 சதவீதத்தை உள்நாட்டில் கிடைக்கும் கச்சா எண்ணெய்தான் பூர்த்தி செய்கிறது. வியாபாரம் என்று பார்த்தால்கூட, உள்நாட்டில் எடுக்கப்படும் கச்சா எண்ணெயை, இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு ஈடாக விற்பனை செய்வதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. ஆனால், மைய அரசோ, இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது என்னென்ன உற்பத்திச் செலவீனங்கள் ஏற்றப்படுமோ, அவை அனைத்தையும் உள்நாட்டில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய் மீதும் ஏற்றி வைத்து விற்பனை செய்து வருகிறது. உள்நாட்டுத் தயாரிப்புகளை, ஃபாரின் சரக்குகளைப் போல விற்கும் மோசடி வியாபாரத்தை, மைய அரசு சட்டபூர்வமாகவே நடத்தி வருகிறது.

இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற நிலைக்குழு, பெட்ரோலியப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வது குறித்து அரசுக்கு ஆக. 2005இல் அளித்துள்ள அறிக்கையில், “”இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது விதிக்கப்படும் கடற்பயணச் சரக்குக் கட்டணம், துறைமுகக் கட்டணம், சுங்கவரி போன்ற செலவீனங்களை உள்நாட்டு கச்சா எண்ணெய் மீது விதித்து விலை நிர்ணயம் செய்யக் கூடாது” என அரசுக்குப் பரிந்துரை செய்தது.

இப்பரிந்துரையை ஒதுக்கித் தள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு, “”உள்நாட்டு கச்சா எண்ணெய் மீது விதிக்கப்படும் வரிகள் மற்றும் அதன் விலையை நிர்ணயம் செய்வது தொடர்பாக அரசுக்கு ஆலோசனை சொல்ல ரங்கராஜன் கமிட்டியை அமைத்திருப்பதாக”க் கூறி, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரை அறிக்கையைக் கரையானுக்கு இரையாக்கியது, மைய அரசு.

ரங்கராஜன் கமிட்டியால் அரசுக்கு அளிக்கப்பட்ட பரிந்துரையில், உள்நாட்டு கச்சா எண்ணெய்க்கு விலை நிர்ணயிப்பது தொடர்பாக எவ்வித ஆலோசனையும் வழங்கப்படவில்லை என்பதைக் “”கண்டுபிடித்த” நாடாளுமன்ற நிலைக்குழு, “”மைய அரசு, நிலைக்குழுவிடம் பொய் சொல்லியதாக”க் குற்றஞ்சுமத்தியது. மேலும், ஜூன் 2006இல் அன்று அரசுக்கு அளித்த மற்றொரு அறிக்கையில், “”உள்நாட்டு கச்சா எண்ணெய்க்கு விலை நிர்ணயிப்பது தொடர்பாக ஏற்கெனவே அளிக்கப்பட்ட பரிந்துரைகளை அமல்படுத்துமாறு” மீண்டும் வலியுறுத்தியது, நாடாளுமன்ற நிலைக்குழு. நாடாளுமன்ற நிலைக்குழுவை நாடாளுமன்றத்திற்கு இணையாக மதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டாலும், அது அளித்த பரிந்துரைகளோ, பைசா காசுக்கும் பயன் இல்லாமல், செவிடன் காதில் ஊதிய சங்காக முடிந்து போனது.

கச்சா எண்ணெயின் அடக்க விலையை நிர்ணயிப்பதில் நடந்து வரும் இப்பகற் கொள்ளை ஒருபுறமிருக்க, கச்சா எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் பெட்ரோலியப் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரி என்பது, மைய/மாநில அரசுகளின் கஜானாவை நிரப்பும் அமுதசுரபியாக இருந்து வருகிறது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் சில்லறை விற்பனை விலை ரூ. 41.25. இதில் ரூ. 23.97ஐ, வரியாக, மைய/மாநில அரசுகள் பறித்துக் கொள்கின்றன. இதனைக் கழித்துவிட்டுப் பார்த்தால், 1 லிட்டர் பெட்ரோலின் சில்லறை விற்பனை விலை ரூ. 17.28 தான்.

பெட்ரோலியப் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரிகள் சிறீலங்காவில் 37%, தாய்லாந்தில் 24%, பாகிஸ்தானில் 30%, மற்ற பல நாடுகளில் 20 சதவீதமாகவும் இருக்கும்பொழுது இந்தியாவில், பெட்ரோலியப் பொருட்கள் மீது மாநில அரசுகள் விதிக்கும் விற்பனை வரி மட்டும் 18.9 சதவீதத்தில் இருந்து 34 சதவீதம் வரை எகிறிப் பாய்கிறது. இவ்விற்பனை வரி தவிர்த்து, சுங்கவரி, கலால்வரி, நுழைவுவரி, கல்விவரி, எண்ணெய் நிறுவனங்களின் வளர்ச்சி வரி என அடுக்கடுக்காக பெட்ரோலியப் பொருட்கள் மீது பல்வேறு வரிகள் விதிக்கப்படுகின்றன. ஒட்டு மொத்தமாக, ஒரு லிட்டர் பெட்ரோலின் சில்லறை விற்பனை விலையில் 57 சதவீதமும்; ஒரு லிட்டர் டீசலின் சில்லறை விற்பனை விலையில் 35 சதவீதமும் பல்வேறு வரிகளாக மக்களிடமிருந்து பிடுங்கப்படுகின்றன.

பெட்ரோலியத்துறை அமைச்சகம் நாடாளுமன்ற நிலைக் குழுவுக்குக் கொடுத்துள்ள அறிக்கையின்படி, 200405ஆம் ஆண்டில் பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை மூலம் மைய அரசுக்குக் கிடைத்த வரி வருமானம் 77,692 கோடி ரூபாய்; மாநில அரசுகளுக்குக் கிடைத்த வரி வருமானம் 43,254 கோடி ரூபாய். அந்த ஆண்டு, மைய அரசிற்கு சுங்கவரி மூலம் கிடைத்த வருமானத்தில் (54,738 கோடி ரூபாய்), 35 சதவீதப் பங்கு பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை மூலம் மட்டுமே கிடைத்திருக்கிறது.

பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படும் ஒவ்வொரு முறையும், அவ்விலை உயர்வுக்கு நேர் விகிதத்தில் அரசின் வரி வருமானமும் அதிகரித்து வந்திருக்கிறது. 200506 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், 53,182 கோடி ரூபாய் சுங்க வரியாக வசூலிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த இலக்கு பின்னர் 64,215 கோடி ரூபாயாகத் திருத்தப்பட்டது. அந்த பட்ஜெட் ஆண்டின் இறுதியில் சுங்க வரி வருமானம் 65,050 கோடி ரூபாயாக அதிகரித்தது. பட்ஜெட்டில் போட்டதைவிட 22.32 சதவீதம் அதிகமாக சுங்கவரி வசூலானதற்கு, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வும் காரணமாக அமைந்தது என மைய அரசின் தணிக்கை அறிக்கை குறிப்பிடுகிறது.

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால் பணவீக்கம் ஏற்பட்டு, ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் வேட்டு வைத்துவிடும் என்பதால், முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள்கூட, பெட்ரோலியப் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரிகளைக் குறைக்குமாறு அரசிடம் கூறி வருகிறார்கள். ஆனால் மைய அரசோ, இந்த வரிக் கொள்ளையை விரிவாக்குவதில்தான் குறியாக இருந்து வருகிறது.

எங்கும் இல்லாத அதிசயமாக, எண்ணெய் நிறுவனங்களின் வளர்ச்சி வரி என்ற பெயரில் புதுவிதமான வரியொன்றை உள்நாட்டு கச்சா எண்ணெய் மீது விதித்து, அதன்மூலம் ஆண்டுக்கு 5,000 கோடி ரூபாய் வசூலித்து வருகிறது, மைய அரசு. 1974ஆம் ஆண்டு தொடங்கி விதிக்கப்பட்டு வரும் இவ்வரியின் மூலம், இதுநாள்வரை ஏறத்தாழ 64,000 கோடி ரூபாய் மைய அரசிற்கு வருமானம் கிடைத்திருந்தாலும், எண்ணெய் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக இவ்வரி வருமானத்தில் இருந்து செலவழிக்கப்பட்டுள்ள தொகை 902 கோடி ரூபாய் தான். மீதிப் பணம் முழுவதையும் மைய அரசு ஊதாரித்தனமாகச் செலவழித்திருப்பதாக நாடாளுமன்ற நிலைக்குழு குற்றஞ்சுமத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பெட்ரோலியப் பொருட்களின் மீது கல்வி வரியைக் விதித்து வருகிறது மைய அரசு; வளர்ச்சி வரியைச் சுருட்டிக் கொண்டு, எண்ணெய் நிறுவனங்களையே அம்போ எனக் கைவிட்டுவிட்ட மைய அரசு, கல்வி வரியில் மட்டும் கை வைக்காமல் விட்டிருக்குமா?

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தாறுமாறாக உயரும் பொழுது, அதனின் பாதிப்பில் இருந்து உள்நாட்டு நுகர்வோரைக் காப்பாற்ற 15,000 கோடி ரூபாய் பெறுமான அவசர கால நிதியொன்றை மைய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அரசுக்குப் பதிலாக, பெட்ரோலியப் பொருட்களின் விலையை சந்தை தீர்மானிக்கும்படியான சீர்திருத்தம் இத்துறையில் புகுத்தப்பட்டபொழுது, அந்த 15,000 கோடி ரூபாயையும் மைய அரசே சுருட்டிக் கொண்டது.

இந்தியாவில் உள்ள 18 கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் 17 அரசு வசமும், ஒரு ஆலை தரகு முதலாளி அம்பானி வசமும் உள்ளன. இந்தியாவின் ஒட்டு மொத்த எண்ணெய் சுத்திகரிப்புத் திறனில் 74 சதவீதம் அரசு நிறுவனங்களிடமும், 26 சதவீதம் அம்பானியிடம் இருக்கிறது. எனினும், இந்தியாவில் இருந்து பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தில் அம்பானி நிறுவனம்தான் (59 சதவீத ஏற்றுமதி) முன்னணியில் இருக்கிறது. அரசாங்கம் அம்பானியிடம் கொண்டுள்ள வர்க்கப் பாசம்தான் இதற்குக் காரணம். பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு, அரசு சுங்க வரிச் சலுகைகளை அளித்திருக்கிறது. இந்தச் சலுகைகளை அம்பானியே ஏகபோகமாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே, ஏற்றுமதி வர்த்தகத்தில் அரசு எண்ணெய் நிறுவனங்கள் அடக்கி வாசிக்கின்றன.

இதனை ஆராய்ந்த நாடாளுமன்ற நிலைக்குழு, “”சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியப் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால், விற்பனையின் மூலம் கிடைக்கும் இலாபமே போதுமானது; ஏற்றுமதியை ஊக்குவிக்கத் தனியாக வரிச் சலுகைகளை அளிக்க வேண்டியதில்லை. இந்த வரிச் சலுகைகளை நீக்குவதால் கிடைக்கும் வருமானத்தை, உள்நாட்டு மக்கள் பலன் அடையும்படி, பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைக்கப் பயன்படுத்தலாம்” எனப் பரிந்துரைத்தது.

இந்த ஆலோசனையைக் கேட்டு, அம்பானி அலறுவதற்கு முன்பாகவே, அரசாங்கம் அலறியது. “”இந்தியாவில் தயாரிக்கப்படும் பெட்ரோலியப் பொருட்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் போட்டியைச் சமாளிக்கும் வண்ணம் விலை மலிவாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே சுங்கவரிச் சலுகைகளை அளித்து வருகிறோம். எனவே, இச்சலுகைகளைத் திரும்பப் பெற முடியாது” எனக் கூறி, அம்பானியின் வயிற்றில் பாலை வார்த்தது.

அரசாங்கத்தின் கொள்கை எப்படி ஏறுக்கு மாறாக இருக்கிறதென்று பாருங்கள். பெட்ரோலும், டீசலும், மண்ணெண்ணெயும், சமையல் எரிவாயுவும் உள்நாட்டு மக்களுக்கு விலை மலிவாகக் கிடைக்க வேண்டும் என்பது பற்றி அக்கறை கொள்ளாத அரசாங்கம், இந்தியப் பெட்ரோலியப் பொருட்கள் சர்வதேசச் சந்தையில் விலை மலிவாகக் கிடைக்க வேண்டும் எனக் கவலைப்படுகிறுது. மண்ணெண்ணெய்க்கும், சமையல் எரிவாயுவுக்கும் தரப்படும் “மானியத்தை’ நிறுத்த வேண்டும் எனத் திருவாய் மலரும் மன்மோகன் சிங், அம்பானி அனுபவித்து வரும் ஏற்றுமதி வரிச் சலுகைகளை நிறுத்த மறுக்கிறார்.

200405 ஆம் ஆண்டில் பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை மூலம் அரசுக்குக் கிடைத்த மொத்த வரி வருமானம் 1,20,946 கோடி ரூபாய் என்று ஏற்கெனவே பார்த்தோம். இவ்வரி வருமானம் போக, அரசு எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடி ரூபாயை இலாப ஈவாக மைய அரசிற்கு அளித்து வருகின்றன. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்த பொழுது, அதற்கேற்ப உள்நாட்டில் விலை குறைப்பு செய்யாமல் அடித்த கொள்ளை தனிக்கதை. இப்படியாக பெட்ரோலியத் துறை பொன் முட்டையிடும் வாத்தாக இருக்கும் அதேசமயம், சமையல் எரிவாயுவுக்கும், மண்ணெண்ணெய்க்கும் 200506ஆம் ஆண்டில் அரசு கொடுத்த “மானியமோ’ வெறும் 2,535 கோடி ரூபாய்தான். (ஆதாரம்: தினமணி, 13.1.08)

பொது மக்களிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வரியாகப் பறித்துக் கொண்டுவிட்டு, 2,500 கோடி ரூபாயைத் திருப்பித் தருவதை மானியம் என்று எப்படிச் சொல்ல முடியும்? இந்த 2,500 கோடி ரூபாய் திருப்பித் தரப்படுவதைக் கூட நிறுத்திவிட வேண்டும் எனக் கூறிவரும் மன்மோகன் சிங்கின் மேதமைக்கும், ஒரு வழிப்பறித் திருடனின் இரக்கமின்மைக்கும் இடையே என்ன வேறுபாடு இருந்து விட முடியும்?

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து கொண்டே போவதற்கு அமெரிக்கா, ஈராக்கில் நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போர், அமெரிக்கப் பொருளாதாரமும், அமெரிக்க டாலரும் நசிவடைந்திருப்பது உள்ளிட்டுப் பல்வேறு திரைமறைவுக் காரணங்கள் உள்ளன. இவற்றைக் கண்டித்து அம்பலப்படுத்த முன்வராத மன்மோகன் சிங், பெட்ரோல் டீசலின் விலையை உயர்த்தி, மக்களின் இரத்தத்தைக் குடிக்கிறார். இப்படிப்பட்டவரை பொருளாதாரப் புலி என அழைப்பதைவிட, ஆட்கொல்லிப் புலி என அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

நன்றி: புதிய ஜனநாயகம்