• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 217,254 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

2020ல் நம்ம நாடு வல்லரசாக மாணவர்களே கனவு காணுங்கள்… O.K அங்கிள்!

இப்படியொரு இந்தியா இருப்பது உங்களுக்குத் தெரியாதா?

அப்துல் கலாம் விரும்பிச் சென்று சாப்பிடும் உணவகம் அன்னலட்சுமி. அங்கு ஒரு சாப்பாட்டின் விலை 750 ரூபாய். எளிமையின் சிகரமான கலாம், அன்னலட்சுமியில் உணவருந்திக் கொண்டிருக்க, 2020-இல்

ரூபாய் வீழ்ச்சி: வல்லரசுக் கனவுக்குச் சங்கு!

 பெட்ரோல், மின் கட்டணம், பேருந்துக் கட்டணம் என அனைத்தையும் உயர்த்தி சராசரி இந்தியனின் வாழ்க்கைத் தரத்தை வீழ்த்தினால்தான், ரூபாயின் மதிப்பு உயரும் என்பதுதான் மூலதனம் முன்வைக்கும் பொருளாதாரக் கொள்கை.

அரசின் கையில் டாஸ்மாக்! சாராய ரவுடிகளின் கையில் கல்வி! – கருத்துப்படம்

கருத்துப்படம்: தோழர் முகிலன்

தொடர்புடைய பதிவுகள்:

திவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை!

ஏழைகள் படிக்கக் கூடாது! சரி கொன்றுவிடலாமா?

பள்ளிக்கூடம்ன்னா என்னப்பா? – இந்த கேள்விக்கு உங்கள் மறுமொழி என்ன?

கருத்துப்படம்: MBBS Rs 40,00,000 only ENG Rs 20,00,000 only!

ஜெயாவின் ஊக்கத்தொகை அறிவிப்பு’ வெறும் பித்தலாட்டம்! திருச்சியில் அம்பேத்கர் விடுதி மாணவர்கள் தரமான உணவு கேட்டு புமாஇமு தலைமையில் சாலை மறியல்!

திருச்சியில் டாக்டர் அம்பேத்கர் மாணவர் நலவிடுதியில் மாணவர்களின் அடிப்படை வசதி கோரி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக நடத்தப்பட்ட பல போராட்டங்கள் வெற்றியடைந்துள்ளன. இந்த சூழலில், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமில்லாமலும் அழுகிய காய்கறிகளை போட்டு சமைப்பதால் துர்நாற்றம் வீசியும், சரியாக வேக வைக்காததால், பாதி அரிசியாகவும் இருப்பது தொடர் கதையாக இருந்து வந்த்து. விடுதி வார்டனிடம் இது குறித்து பலமுறை முறையிட்டும் எந்த பதிலும் இல்லை. அதே நிலை மீண்டும் தொடரவே, ஆத்திரமடைந்த மாணவர்கள் பு.மா.இ.மு தலைமையில் 13.12.2011 அன்று காலை விடுதியின் முன்பு உள்ள ரேஸ்கோர்ஸ் சாலையில் சாப்பாடு மற்றும் குழம்பு பாத்திரங்களுடன் வந்து மறியலில் ஈடுபட்டனர்.

150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இப்போராட்ட்த்தை பு.மா.இ.மு மையக்கிளை தோழர்கள் ஜெகதீசன், சங்கத்தமிழன் உள்ளிட்ட தோழர்கள் தலைமை தாங்கி நடத்தினர்.

சமீபத்தில் ஜெயலலிதாவின் கவர்ச்சிகரமான அறிவிப்பாகிய “விடுதி மாணவர்களுக்காக ஊக்கத்தொகை” – அறிவிப்பு என்பதெல்லாம் பித்தலாட்டம் என்பது இப்போராட்டத்தின் மூலம் அம்பலப்பட்டது. அரசின் அறிவிப்புகள் – சலூகைகள் எல்லாம் அதிகாரிகள் முதல் வார்டன் வரை உள்ள சங்கிலித் தொடர் கொள்ளையர்களின் ஊழலுக்கே வழிவகுக்கும் என்பதை மாணவர்களுக்கு தங்களின் எழுச்சியுரையின் மூலம் உணர்த்தினர்.

வந்திருந்த போலீசாரோ மாணவர்களின் போர்க்குணத்தின் முன்பு கையை பிசைந்து நின்று கொண்டிருந்தனர். ஊழலில் ஊறித்திளைத்திருக்கும் இந்த அதிகாரவர்க்கத்தை வைத்துக் கொண்டு சத்துணவு முட்டையை கூட மாணவர்களுக்கு சரியாக வழங்க முடியாது என்பதை போராட்ட்த்திற்கு தலைமையேற்ற தோழர்கள் பேச்சுவார்த்தைக்கு வந்திருந்த சப் கலெகடர் வேதவள்ளி மற்றும் ஆர்டிஓ உள்ளிட்ட அதிகாரிகளின் முகத்திலறைந்தாற் போல எடுத்துரைத்தனர். அவமானத்தால் தலைகுனிந்த அவர்கள் “தவறுக்கு வருத்தும் தெரிவித்து” 15 நாட்களுக்குள் மாணவர்கள் கோரிய 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தனர்.

தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாவிட்டால் “தற்கொலை செய்து கொள்வேன்” என்று மிகவும் உறுதியுடன் கூறியுள்ளார் சப் கலெக்டர் வேதவள்ளி.

தங்களின் கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற ”பதற்றத்துடன்” காத்திருக்கின்றன விடுதி மாணவர்கள். ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளைப் போலவே இந்த அதிகார வர்க்கத்தின் சவடால்களும் காற்றில் பறக்க விடப்படும் என்பதை உணர்ந்துள்ள புமாஇமு-  வினர் அடுத்தகட்ட போராட்ட்த்திற்கு தயாராகி வருகின்றனர்.

தகவல் – புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, திருச்சி

தொடர்புடைய பதிவுகள்:

அரசு விடுதி கட்டிடம் இடிந்து 3 மாணவர்கள் படுகாயம் – மாணவர்கள் போராட்டம்

ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல மாணவர் விடுதிகள்: அரசின் வதைமுகாம்கள்!

மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து “தாவர நடைப் பயணம்’!

சென்னை, செப். 28: சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் மரங்களை அழித்துவிட்டு மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புதன்கிழமை தாவர நடைப் பயணப் போராட்டம் நடத்தப்பட்டது.
பசுமைத் தாவரங்களை அழித்து மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க முயற்சிப்பதாகக் கூறி பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் “தாவர நடைப் பயணம்’ என்ற அறப்போராட்டம் நடைபெற்றது. பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. பச்சையப்பன் கல்லூரி ஏயுடி தலைவர் பேராசிரியர் விஎம்எம்ஆர் ஆண்டவர் பேசுகையில், “மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க எங்கள் கல்லூரி வளாகத்தில் ஒரு அடி இடத்தைக் கூட தரமாட்டோம். எந்த ஒரு மரத்தின் கிளையையும் வெட்ட விட மாட்டோம்.
எந்த விலை கொடுத்தேனும் கல்லூரி இடத்தையும் மரங்களையும் காப்போம். 50 டன் ஆக்சிஜனை கொடுக்கும் மரங்களை வெட்டினால் இப்பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். மரங்களை அழித்துவிட்டுத்தான் மெட்ரோ ரயில் வருமென்றால், மெட்ரோ திட்டமே தேவையில்லை’ என்றார். தாவரவியல் பேராசிரியை அகிலா, “”கல்லூரி வளாகத்தில் 100 ஆண்டுகளை கடந்த 45 வகை மரங்கள் இருக்கின்றன. இதில் 20 வகையான மரங்கள் அரிய வகையைச் சேர்ந்தவை.
மெட்ரோ திட்டத்துக்காக இவற்றை அழித்தால் அந்தப் பகுதியில் சுற்றுச்சுழல் கடுமையாக பாதிக்கப்படும்” என்றார்.
.
சென்னை சி.பி. ராமசாமி அய்யர் அறக்கட்டளை கெளரவ இயக்குநர் நந்திதா  கிருஷ்ணா, “இங்குள்ள 300 அரிய வகை மரங்களை அழித்து விட்டு மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கத் தேவையில்லை. எந்த ஒரு மரத்தையும் வெட்டுவதற்கு இங்குள்ள மாணவர்கள், பேராசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது’ என்றார்.
.
முன்னதாக, மாணவர்கள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், கல்லூரி வளாகத்தில் உள்ள மரங்களுக்கு மத்தியில் நடைப் பயணம் மேற்கொண்டு அவற்றை வெட்ட எதிர்ப்புத் தெரிவித்து கோஷம் எழுப்பினர்.
…. செய்தி: தினமணி நாளிதழ்
_________________
தொடர்புடைய பதிவுகள்:

பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! போராடும் பேராசிரியர்கள், மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்!

பஸ்டே’வை கொண்டாடுவோம்!

மாணவர்கள் பொறுக்கிகளா ? ரவுடிகளா? பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் வீரஞ்செறிந்த போராட்டம்

பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்! கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம்!!

பள்ளிக்கூடம்ன்னா என்னப்பா? – இந்த கேள்விக்கு உங்கள் மறுமொழி என்ன?

This slideshow requires JavaScript.

தொடர்புடைய பதிவுகள்:

ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல மாணவர் விடுதிகள்: அரசின் வதைமுகாம்கள்!

ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நல மாணவர் விடுதிகள் : அரசின் வதைமுகாம்கள் !

ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல மாணவர் விடுதிகள் : அரசின் வதைமுகாம்கள் !சென்னையிலுள்ள அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படித்துவரும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கடந்த டிசம்பர் 21 அன்று சென்னை – அண்ணா சாலையில் நடத்திய சாலை மறியல் போராட்டம், அம்மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காகத் தமிழக அரசால் நடத்தப்படும் நல விடுதிகள் அனைத்தும் மாட்டுக் கொட்டகைகளைவிடக் கேவலமாக இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.

‘‘கடந்த பல ஆண்டுகளாகவே முறையாகப் பராமரிக்கப்படாததால், சிதிலமடைந்துவிட்ட கட்டிடங்கள்; உடைந்து போன கழிவு நீர் செல்லும் குழாய்கள் மாற்றப்படாததால், மலமும், சிறுநீரும் விடுதிக்குள்ளேயே குட்டையைப் போலத் தேங்கி நின்று, அதனால் வீசும் துர்நாற்றம்; 52 அறைகளில் 595 மாணவர்கள் தங்க வேண்டும் என்ற அரசின் கணக்கே அளவுக்கு அதிகமானது எனும்பொழுது, இப்பொழுது அந்த 52 அறைகளில் 1,600 மாணவர்கள் (ஒரு அறைக்கு 30 மாணவர்கள்) அடைபட்டுக் கிடக்கும் அவலம்.” – இதுதான் சென்னை – சைதாப்பேட்டையிலுள்ள எம்.சி.ராஜா விடுதியின் குறுக்குவெட்டுத் தோற்றம்.

சென்னையிலுள்ள மற்ற 16 விடுதிகளும், தமிழகத்தின் பிற பகுதிகளிலுள்ள விடுதிகளும் எம்.சி.ராஜா விடுதியைப் போன்று அல்லது அதைவிடக் கேவலமான நிலைமையில்தான் இருக்கின்றன.

இவ்விடுதிகள் ஒவ்வொன்றிலும் மாவரைக்கும் இயந்திரங்கள், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள், குடிநீரைச் சுத்திகரிப்பதற்கான கருவிகள் இருக்க ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல மாணவர் விடுதிகள் : அரசின் வதைமுகாம்கள் !வேண்டும் என ஆதிதிராவிடர் நலத் துறையின் கொள்கைக் குறிப்பு கூறுகிறது. ஆனால், இவ்விடுதிகளில் காலைக் கடன்களைக் கழிப்பதற்கும், குளிப்பதற்கும்கூட முறையான, போதுமான வசதிகள் கிடையாது என்பதுதான் உண்மை.

இவ்விடுதிகளில் தங்கிப் படிக்கும் ஒவ்வொரு கல்லூரி மாணவன் மற்றும் பள்ளி மாணவனின் உணவிற்காக மாதமொன்றுக்கு ரூ.550/- வரை நிதி ஒதுக்கப்படுவதாக அரசு கூறுகிறது. இந்த ஒதுக்கீடைத் தின்று தீர்ப்பது அதிகார வர்க்கம்தான் என்பதை இவ்விடுதிகளால் போடப்படும் உணவே காட்டிக் கொடுத்துவிடுகிறது. புழுத்துப் போன அரிசிச் சோறுதான் இவ்விடுதிகளால் போடப்படும் ஒரே ‘சத்தான’ உணவு. குழம்புக்கும் காய்கறிக்கும் மாணவர்கள் தங்கள் கைக்காசைத்தான் போட்டுக் கொள்ள வேண்டும். உணவிற்காகவும், கல்விச் செலவிற்காகவும் விடுமுறை நாட்களில் கூலி வேலைக்குப் போவதாகக் குறிப்பிடுகிறார்கள், இம்மாணவர்கள்.  .

இப்படிபட்ட இழிந்த சூழ்நிலையில் தங்க நிர்பந்திக்கப்பட்டுள்ள ஏழை தாழ்த்தப்பட்ட மாணவனால், தனது படிப்பில் முழுமையான கவனத்தை எப்படிச் செலுத்த முடியும்?

அடித்தட்டு மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டிய கடமையை அரசு புறக்கணிக்கிறது என்பதாக மட்டும் இந்தப் பிரச்சினையைப் பார்க்க முடியாது. தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களாகப் பட்டம் சூட்டிக் கொண்டுள்ள திருமா., ரவிக்குமார் போன்றவர்களால் ஆதரிக்கப்படும் தி.மு.க. ஆட்சி, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் மீது கொண்டுள்ள தீண்டாமை மனோபாவத்தையும் பிரதிபலிப்பதாகவே இதனைப் பார்க்க முடியும்.

__________________________________________________

நன்றி: புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2011

மாணவர்கள் பொறுக்கிகளா ? ரவுடிகளா? பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் வீரஞ்செறிந்த போராட்டம்

மாணவர்கள் பொறுக்கிகளா ? ரவுடிகளா?
பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் வீரஞ்செறிந்த போராட்டம்

நிகழும் விக்ருதி வருடம் மாசி மாதம் 25-ம் தேதி (09.03.2011)  முகூர்த்த நாளா என்பது தெரியவில்லை. ஆனால் விசேச நாளாக மாணவர்களுக்காக மாறிவிட்டது. ஆம் அந்தநன்னாளில் காலை சுபமுகூர்த்த வேளையில் மண்ணைக்காக்க, தன் கல்லூரியைக்
காக்க  பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் களத்தில் இறங்கி விட்டார்கள். யார்
யாரெல்லாம் பொறுக்கியாக, விளாங்காதவனாக, ஊதாரியாக, முடிச்சவிக்கியாக இந்த நடுனிலை பத்திரிக்கைகளால் அறிவிக்கப்பட்டார்களோ, மொட்டைத்தலையன் சோவினால்
தண்டிக்கப்பட வேண்டியவர்களாக அறிவிக்கப்பட்டார்களோ அவர்கள் இதோ இப்போது அவர்கள் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள்.

பச்சையப்பன் கல்லூரியின் நிலம் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக பறிக்கப்பப்படுவதற்கெதிராக மாணவர்கள், பேராசிரியர்கள் என தொடர்ச்சியாக போராடிவருவதைமுன்பு வினவில் வெளியான கட்டுரையில் பார்த்தோம். தன் கல்லூரியைக்காக்க,
ஒரு பிடி மண்ணை விடுக்கொடுக்கமுடியாதென அறிவித்த அம்மாணவர்கள்,அவர்களுக்கு வாரி வழங்கிய அப்பகுதி மக்கள்  என  மண்மீட்பு போராட்டவரலாற்றில் இதோ இந்த உள்ளிருப்பு போராட்டம் ஒரு முக்கிய மைல்கல்.

வழக்கம் போல  நேற்று பொதுவாகத்தான் விடிந்தது, மாணவர்கள்
பேருந்திலும்,னடந்தும், இரு சக்கர வாகனங்ளிலும் வந்து கொண்டிருந்தனர்.பேராசிரியர்கள் ஆட்டோக்களில் வந்து கொண்டிருக்க,எப்போது நாம் சாகடிக்கப்படுவோம் என கவலையே உருவாய் வீற்றிருந்தமரங்கள் இப்படி எல்லாம் இயல்பாய் நடந்து கொண்டிருக்கும் வேளையில்  பணக்காரர்களின் அரிப்புக்காக
நம்முடைய வாழ்வு பறிக்கப்படுவதை எண்ணி துடித்துக்கொண்டிருந்த மாணவ பேராசிரியர்களின் இதயங்கள் சொல்லின இது இயல்பான நாள் அல்ல, இது மாணவர்
வரலாற்றில் முக்கிய நாள் என்று.

காலையில் மாணவர்கள் அனைவரும் கல்லூரிக்குள் வந்தார்கள், பேராசிரியர்கள் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்கள். ஒரு பறையொலி கேட்டதும் மாணவர்கள்வெடித்துக்கிளம்பினார்கள். காப்போம் பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம்
என்ற முழக்கங்கள் விண்ணைப்பிளந்தன. பல பேராசிரியர்கள் ஆதரவளித்து வாழ்த்தினார்கள். சிலர் கல்லூரி முதல்வரின் கையாட்களாக இருந்து மாணவர்களை மிரட்டினார்கள். தன் கல்லூரியைக்காக்க வீரஞ்செறிந்த போராட்டத்தில்
இறங்கிய மாணவர்களின் முன்னால் மிரட்டல்கள் தவிடு பொடியாயின.

மாணவர்களே தங்களை ஒழுங்கு படுத்தினார்கள், கட்டுப்படுத்தினார்கள். வெளியே “ரூட் அடிப்பவனாகவும்,புட் போர்ட் அடிப்பவனாகவும்”
சித்தரிக்கப்பட்டவர்கள் பொறுப்பாயியிருக்க, பொறுப்பாக இருக்க வேண்டிய பொறுப்பு முதல்வர் சொன்னார் “மெட்ரோ ரயில் திட்டம் கைவிடப்பட்டது”.
பொதுவாக ஆசிரியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு வகுப்பறையில் மாணவர்களால் பதில் சொல்ல முடியாது, அவர்களுக்கு தெரியாத, புரியாதவற்றையே கேள்வி கேட்கும் ஆசிரியர் தற்போது தங்களுக்குப்புரிந்த, தெரிந்த ஒரு விசயத்தை அவர் கேட்கையிலே  மாணவர்களின் எதிர் பதில்கள் கேள்விகளாக மாறின.

” சார் நீங்க யாரு ? இந்த கல்லூரியில வேலை செய்யும் ஒரு ஊழியர் நீங்க எப்படி திட்டம் நிறுத்தப்பட்டதுன்னு சொல்லுவீங்க?, இதற்கு அப்ரூவல் கொடுத்தது ட்ரஸ்ட் சேர்மேன் ஐசரி கனேஷ், திட்டத்தை அறிவிச்சது சி.எம்.ஆர்.எல்  இதற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?” நான்காயிரம் மாணவர்கள் கலந்து கொண்டதைப்பார்த்து கல்லூரியின் பொறுப்பற்ற பொறுப்பு முதல்வர் சேகருக்கு வியர்த்து கொட்டியது.

அவரின் வார்த்தைகள் தடுமாறின “கணேஷ் சார் காஞ்சிபுரம் கான்வொகேசனுக்காக போயிட்டார், தேர்தல் நேரத்தில அதிகாரிங்க வரமாட்டாங்க நீங்க இங்க போராடுறதுல பிரயோசனம் இல்லை.”

இங்க நாங்க எல்லாம் கல்லூரியை இடிக்கப்போறாங்கன்னு போராடிகிட்டு இருக்குறோம், கான்வொகேசன் ஒரு கேடா? என்னது அதிகாரி, அரசியல்வாதிகள் வரமாட்டாங்களா? மாணவர்கள் நலனுக்கு அப்பாற்பட்டதுதான இந்த தேர்தல் ?
எங்களுக்கு பயன் படாத இந்த தேர்தலை ஏன் நாங்க மதிக்கணும்? எதுக்கு இந்த தேர்தல் எங்க ரத்தத்தை உறிஞ்சி எடுக்கறதுக்கா? கேள்விகளைகண்டு ஓடிப்போனார் முதல்வர் சேகர்.

அவரின் கைத்தடிகளாக செயல்படும்  சிலர்  “இதை விடுப்பா, 25 நாளில் சரி செய்யறமின்னு சொன்னாங்க ஒரு பதிலும் வரலை? என்னைக்கு அப்படி இடிக்கப்போறாங்களோ அப்ப கூப்பிடுறோம் வாங்க” என்றார்கள்.

புரியாததை,விளங்காத படிப்பை சொல்லிக்கொடுத்து மாணவனை சுயமாக சிந்திக்கவிடாத இந்த படிப்பை சொல்லித்தரும் சில ஆசிரியர்கள் சமூகப்பிரச்சினையிலும் தங்கள் பேச்சை மட்டுமே கேட்க வேண்டுமென நிர்பந்திக்கிறார்கள். ஆனால்  தன்மான
உணர்வில்லாத சில ஆசிரியர்களுக்கு பாடம் எடுக்கிறர்கள்
மாணவர்கள்,மூக்குடைந்தார்கள் போலி ஆசிரியர்கள்.

மாணவர் கூட்டத்தின் முன் வந்து கெஞ்சிய முதல்வர், கூட்டத்திற்கு பின் சென்று மாணவர்களை மிரட்டினார், துரத்தியடிக்க முனைந்தார். மதியம் அறக்கட்டளை உறுப்பினர்கள் வேறு ஒரு விழாவிற்காக கல்லூரிக்குள் பின்புறமாக வந்து  உடுப்பி ஹோட்டல் பிரியாணி தின்றுவிட்ட போனார்கள். பச்சையப்பன் கல்லூரியை விற்று தின்னும் படித்த பாரம்பரியமிக்க உறுப்பினர்கள்
பிரியாணியைத்தின்று கொண்டிருக்க,  பொறுக்கிகளாக இந்த நடுத்தர
வர்க்கத்தால் அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் சோறு, தண்ணியின்றிபோராடிக்கொண்டிருந்தார்கள்.

பிரியணி தின்றுவிட்டு,வாயில் பீடா போட்டபடி மீண்டும் வந்தார் முதல்வர் “நாங்களும்தான அன்னைக்கு உண்ணாவிரதம் இருந்தோம்”

மாணவர்கள் பொறுக்கித்தனம் செய்கிறார்கள், அவர்களால் பொது மக்கள் பாதிக்கப்படுகிறது, அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டுமென வாய்பிளக்கும் ஊடகங்கள்  இந்த உள்ளிருப்பு போராட்டதை ஆதரித்து பேசுமா என்ன? எந்த
தொலைகாட்சி ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிடவில்லை.

நடிக, நடிகைகளின் உடல் ரகசியங்களை எழுதுவதற்கே நேரம் சரியாக இருக்கும் என நினைத்துதான் மாணவர்களின் போராட்டத்தை / போராட்டச்செய்தியைவெளியிடாமலிருந்தார்களோஎன்னவோ?
வெளியே போலீசுப்படை காத்துக்கொண்டிருந்தது, எப்போது மாணவர்களை கடித்துக்
குதறலாம் என்று. ஒவ்வொருமுறையும் மாணவர்களிடம் மூக்குடைபட்டு திரும்பி மீண்டும் வரும் போது முதல்வர் சேகர் கேட்ட கேள்வி “எப்போது முடிப்பீங்க” முடிந்து போகப்போகிற வாழ்க்கைக்காக, தாழ்த்தப்பப்ப , பிற்படுத்தப்பட்ட
மாணவர்களின் படிப்பு பறிபோகக்கூடாதென மாணவர்கள் போராடுகிறார்கள்.

எல்லாம் தெரிந்த முதல்வரோ எப்போது முடிப்பீர்கள் என
கேட்டுக்கொண்டிருந்தார்.மாணவர்கள் என்றலே புட் போர்ட் அடிப்பார்கள், பொறுக்கித்தனம் செய்வார்கள்
என பார்ப்பன வாய்பிளக்கும் பத்திரிக்கைகளும் இதைப்பற்றி
வாய்திறக்கவேயில்லை.

மாணவர்களுக்கு பேராசிரியர்களும், அலுவலர்களும் மனப்பூர்வமான ஆதரவை அளித்தார்கள்.தன் கல்லூரியைக்காக்க, தங்களின் கல்வி உரிமையைக்காக்க மாணவர்கள் போராடுகிறார்கள், அவர்களின் போராட்டத்திற்கு நாம் என்னசெய்யப்போகிறோம்?

அடுத்த நாள் (10.03.2011)பகலில் உள்ளிருப்பு போராட்டம்
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகம் எழுத்துமூலமான  வாக்குறுதி அளித்ததன் பெயரில்
இந்தபோராட்டம் தற்காலிகமாக மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது. மண்மீட்பு போராட்டம் ஏதோ இரு நாள்கள் மட்டுமென நின்று விடாது. இது ஆளும் வர்க்கத்திற்கோர் எச்சரிக்கை. மாணவர்கள்  தங்களின் வரலாற்றை எழுத தயாராகிவிட்டார்கள்.அவர்கள்  ஆளும் வர்க்கத்தின் சாவு செய்தியையும் சொல்லியனுப்புவார்கள்.  பச்சையப்பன் கல்லூரியின் ஒரு செங்கல் பெயர்க்கப்பட்டால் ஆளும் வர்க்கம் முழுமையாக தகர்க்கப்படும் என்று கோடிட்டு காட்டியிருக்கிறார்கள். கடந்த கட்டுரையில் கடைசிப்பகுதியை மீண்டும் நினைவு கூர்வோம். பதில் உங்கள் கையில்

 

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உங்கள் தெருக்களில், பேருந்துகளில், ரயில்களில் கல்லூரியைக் காக்கும் போராட்டத்தில் உங்களையும் அழைக்கிறார்கள். உங்களை மீண்டும் மாணவ பருவத்திற்கு ஒரே ஒரு முறை கொண்டு செல்லுங்கள். இப்போது சொல்லுங்கள் என்ன செய்யப்போகிறோம் நாம் ?