• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,595 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

“எம் தாய்மண் உணர்ச்சிக்கு ஈடாகுமா உன் கூலிப்படையின் சம்பள உணர்ச்சி!”

கூடங்குளம்…வேண்டுவது அனுதாப அலையல்ல..

அடக்குமுறைக்கெதிரான போராட்டம்!

நிராயுதபாணியாய் மக்கள்,
நிரம்பிய ஆயுதம் தரித்து போலீசு படை,
கைக்குழந்தையோடு போராடுபவர்கள்
வன்முறையைத் தூண்டுபவர்களாம்!

கைத்தடியும் துப்பாக்கிகளோடும் சூழ்ந்தவர்கள்
அமைதியை நிலைநாட்ட அவதரித்தவர்களாம்?!

மூலதனமும், பேரழிவும் உயிர்வாழ
சட்டத்தைக் காட்டி கலைந்து போகச் சொல்லும்
உத்திரவு ஆளும் வர்க்கத்துக்கு உண்டெனில்,

எங்கள் இயற்கையும், சந்ததியும் உயிர்வாழ
அணு உலையைத் திரும்பிப் போகச் சொல்லும்
உரிமை மக்களுக்கும் உண்டுதானே!

ஜனநாயக நெறிப்படி எதிர்ப்பைக் காட்ட
கடலோரம் சுடுமணலில் கலந்தனர் மக்கள்.
ஒரு நாள் வெயில் தாங்கி
உழைத்து பழக்கமில்லாத அதிகார வர்க்கமே,
உனக்கும் ‘ஜனநாயகத்’ தெம்பிருந்தால்
உன் ‘கொள்கைக்காக’ சுடுமணலில்
நீயும் அமர்ந்து கொள்ளடா எதிரில்
ஏன் ஜனநாயகம் தாங்காமல் அலறுகிறாய்
எங்கள் இருப்பைப் பார்த்து!

கடலோரம்… மண்ணை பிளந்து
கூடங்குளத்தை தன்னில் பார்க்கும்
எங்கள் மழலையரின் தாய்மண் உணர்ச்சிக்கு
நேர் நிற்க முடியுமா?
கூலிப்படையின் சம்பள உணர்ச்சி!

அலைகளின் முழக்கில்
இரண்டறக் கலந்த அணுஉலை எதிர்ப்பில்…
மெகா போனை வைத்துக் கொண்டு
மெகா சீரியல் ஓட்டிய அதிகாரி குரல்கள்
அடிபட்டுப் போயின…
போராட்டத்தின் அலை பொங்கி வரும்போது
செத்த மீனுக்குள்ள மரியாதை கூட
மொத்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் க்கு கிடையாதென்பதை
கடல் புறம் காட்டி நின்றது.

உளவுப்படை, இழவுப் படை எதுவாயினும்
கடலுக்குப் போகாமலேயே மணற்பரப்பில்
போலீசை கருவாடாய் காயவைத்தனர் மக்கள்.

ஜனநாயக அவஸ்தைகளை தாங்கிக்கொள்ளும்
சகிப்புத்தன்மை மக்களுக்கிருக்கலாம்,
ஆளும் வர்க்கத்திற்கும், அதிகார வர்க்கத்திற்கும்
அது ஒரு போதும் இல்லையென…
மீண்டும் உறுதி செய்தது போலீசு…
நிராயுதபாணியாய் நின்ற மக்கள்மீது
தடியடி, தாக்குதல், கண்ணீர்புகை, துப்பாக்கிச் சூடு!

முற்றுகைப் போராட்டம் சட்டவிரோதமென
அறிவித்த அரசு… இப்போது ஆயுதங்களுடன்
கன்னியாகுமரி தொடங்கி… கடலோரப் பகுதிகள்
இடிந்தகரை வரை முற்றுகை.

சம்மணம் போட்டு அமர்வது கூட
சட்டவிரோதமென,
இடிந்தகரை உண்ணாநிலை போராட்ட
பந்தலையும் ஆக்கிரமித்து
சொந்த நாட்டு மக்கள் மீது
அரசுப்படையின் அட்டூழியங்கள்

தண்ணீர், மின்சாரம், உணவுப் பொருட்களை
தடை செய்து,
இடிந்தகரையை முள்ளிவாய்க்காலாக்கும்
பாசிச காட்டாட்சி!

இத்தனைக்கும் மத்தியில்..
போராடும் மக்கள் நம்மிடம் வேண்டுவது
அனுதாப அலையல்ல…
உண்மைகளை கண்டுணரும் நேர்மை!

அணு உலைக்கெதிரான போராட்டத்தின் வழியே
கதிரியக்க பயங்கரத்தை மட்டுமல்ல,
உழைக்கும் மக்களுக்கு உதவாத
இந்த போலி ஜனநாயக அமைப்பையும்
இதில் புழுத்து திரியும்
அரசியல் பயங்கரங்களையும்
நமக்கு அம்பலப்படுத்தியிருக்கிறார்கள் கூடங்குளம் மக்கள்.

பயங்கரவாதிகள் பலரகம்… பலவிதம்…

ரத்தக் களறியில் மக்கள்.
‘ரத்தத்தின் ரத்தமான’ தா.பாண்டியனோ
தாக்குதல் நடத்திய கைக்கு
தங்கக் காப்பாய் அறிக்கை;

“பொறுமையாகவும், நிதானமாகவும்
பிரச்சினைகளை கையாண்டு
சுமூகமாக தீர்க்க வேண்டும்…”

போராடி… துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட
மீனவர் அந்தோணியின்
போஸ்ட்மார்டம் அறிக்கைக்கு
கட்டாயம் தா.பா. ‘டெக்னிக்’ உதவும்.

அடித்தவனுக்கே போய் ஆறுதலும்
தேறுதலும் சொல்லும்
இப்படியொரு பயங்கரவாதியை
எங்காவது பார்த்ததுண்டா?

இன்னொருபடி முன்னேறி…
மார்க்சிஸ்டு ஜி.ராமகிருஷ்ணனோ
“மக்கள் போராட்டத்தை கைவிட்டு
சுமூகமான நிலை ஏற்பட ஒத்துழைக்க வேண்டும்”
என ஜெயாவின் ஆவியாகி ஜீவிக்கிறார்.
சொந்தநாட்டு மக்களையும்,
சொன்ன பேச்சை கேட்காத கட்சிக்காரனையும்
நந்திகிராமிலும், கேரளாவிலும்
வேட்டையாடுவதில்
ஜெயலலிதாவுக்கே ராஜகுரு
சி.பி.எம். பயங்கரவாதிகள் என்பதை
கூடங்குளமும் குறித்துக் கொள்கிறது.

போராட்டக் களத்தில்
அப்பாவி மக்களை விட்டுவிட்டு
தலைவர்கள் தப்பியோடிவிட்டதாய்
ஊடக பயங்கரவாதிகள் ஊளை!
பாவம்! தவிக்கும் மக்களை
சன்.டி.வி. கலாநிதிமாறன் போய்
காப்பாற்றி வரவேண்டியதுதானே!

ஸ்பெக்ட்ரம் ஊழலில்
தப்பியோடும் பயங்கரவாதிகள்
வாழ்வுரிமைக்குப் போராடுபவர்கள் மீது
வன்மம் கொப்பளிப்பது
தற்செயலல்ல, வர்க்கப் பகைதான்!

தெற்கிருந்து தினந்தோறும்
போராடுபவர்களைப் பார்த்து,

நயன்தாரா இடுப்பைக் கிள்ளவும்,
நாடார்கள் ஓட்டை பொறுக்கவுமே
தெற்கு பக்கம் ‘செட்டு’ போடும் சரத்குமார்
“தலைவர்கள் தலைமறைவானதிலிருந்தே
அவர்கள் சரியானவர்கள் இல்லை” என
வாய் கொழுப்பும், வர்க்கக் கொழுப்பும்!

வாய் சும்மா இருந்தாலும்
உங்கள் வர்க்கம் சும்மா இருக்காது
வாய்திறந்து பேசுங்கள் வரவேற்கிறோம்…
உங்கள் வர்க்கம் தெரியவருவதால்!

புடைசூழ வாருங்கள் பொய்யர்களே…
உங்களிடம் நாளேடு உள்ளது.. டி.வி. உள்ளது…
பணம் உள்ளது…. படை உள்ளது….
ஆனால் உண்மையும், நீதியும்
எங்களிடம் மட்டுமே!

உரிமையின் உணர்ச்சிகளை
அறியாத உங்கள் தோல்களை
உரித்துக் காட்டும் மக்களின் போராட்டம்.

போராட்டத்தின் நியாயம் அறிய
கொஞ்சம் கூடங்குளத்திற்கு  செவி கொடுங்கள்…
போராட்டத்தின் உண்மை அறிய
கொஞ்சம் இடிந்தகரையை உற்றுப் பாருங்கள்…
போராட்டத்தின் சுவை அறிய
துப்பாக்கிகளுக்கு முன்னே
தங்கள் மழலையை போராட்டத்திற்கு ஒப்படைத்திருக்கும்
எம் பிள்ளைகளின் கரம் சேருங்கள்…

அதோ… தடிகொண்டு தாக்கும் போலீசை
நெய்தல் செடிகொண்டு
வர்க்க குறியோடு எறியும் – எங்கள்
பரதவர் மகனின் போர்க்குணம் பார்த்து
பொங்குது கடல்!

மண்ணைக் காக்கும் போராட்டத்தில்
மண்ணும் ஒரு ஆயுதமாய்
வெறுங்கையோடு எம் பெண்களும்
பிள்ளைகளும் தூற்றும் மணலில்…
அடக்குமுறை தூர்ந்து போவது திண்ணம்!

______________________________________________

– துரை. சண்முகம்.

_______________________________________________

முதல் பதிவு: வினவு

 

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!

கூடங்குளம் நகரில் துப்பாக்கி சூடு!
கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!
கூடங்குளம் – இடிந்தகரை: போராட்டக் காட்சிகள்!
கூடங்குளம்:தாக்கத் தொடங்கியது போலீசு! அச்சமின்றி முன்னே செல்கிறார்கள் மக்கள்!!
உலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு…! சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு

கூடங்குளம் மக்களோடு கரங்களை இணைத்திடு! நாட்டை மீண்டும் காலனியாக்கும் அணு உலையை விரட்டிடு!!

அரசு பள்ளிகளில் கண்கானிப்பு கேமரா: மாணவர்களா? குற்றவாளிகளா?

இதுவரை தனியார் பள்ளிகளில் மட்டுமே கண்கானிப்புக் கேமரா பொருத்தப்பட்டு மாணவர்களை கண்கானிப்பது என்ற பெயரில் டார்ச்சர் செய்வது, தண்டனை கொடுப்பது என்பது இருந்து வந்தது. தற்போது திருவான்மியூர் அரசு பள்ளியில் கண்கானிப்பு கேமரா பொருத்தப்பட்டு மாணவர்கள் கண்கானிக்க தொடங்கிவிட்டனர். இது குறித்த தி இந்து பத்திரிக்கையில் வந்த செய்தி இதோ: Big Brother or benign eye? CCTV debate rages on

எதுக்கு கேமரா என்று கேட்டால்   ‘குற்றத்தை தடுக்கிறோம்’ என்ற வழக்கமான பல்லவியை பாடத்தொடங்கி விடுகின்றனர். மனிதனை பண்படுத்துவது தான் கல்வி. அந்த கல்வியை மாணவனுக்கு அளிக்கவேண்டிய கல்வி நிலையங்கள் எப்படி குற்றம் நடக்கும் இடமாக மாறமுடியும்?

 மேலும் ஹிந்து பத்திரிக்கை செய்தியில் ஒரு ஆசிரியர் கூறியிருப்பது போல தவறு செய்யும் மாணவனை கேமரா எப்படி தடுக்கும்? அம்மாணவனின் பெற்றோரை வரவழைத்து அவர்கள் மகன் செய்த தவறுக்கு தண்டனை கொடுக்க நிரூபிக்கும் சாட்சியாகத்தான் பயன்படுத்த முடியும்.

 வீட்டுவாடகைக்கு குடியிருப்போர்கள் அனைவரையும் ‘தகவல் திரட்டுவது’ என்ற பெயரில் குற்றவாளிகள் போல சித்தரிக்க காவல்துறை முற்பட்டதைப் போல மாணவ்ர்கள் என்றாலே தவறு செய்பவர்கள் என சித்தரிக்கவே இந்த கண்கானிப்பு கேமரா. இதுவரை தனியார் கல்வி முதலாளிகள் தங்கள் தரமான கல்விக்கு’ உதாரணமாக காட்டிய கேமராவை அதே வழியில் பயன்படுத்தி மாணவர் சமூகத்தை குற்றாவாளி கூண்டில் ஏற்றும் அரசின் முயற்சியை தொடக்கத்திலேயே கிள்ளி எறிய போகிறோமா? இல்லை குற்றவாளி கூண்டில் நிற்கப்போகிறோமா? என்பது தான் மாணவர்களாகிய நமது முன் உள்ள கேள்வி.

தொடர்புடைய பதிவுகள்

ஏழைகள் படிக்கக் கூடாது! சரி கொன்றுவிடலாமா?

ழை மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதால் பள்ளியின் ஒழுக்கமும், தரமும் கெட்டுவிடும், ஆசியர்களிடமும் ஒழுங்கு குலையும் என்று சென்னை அடையாறிலிருக்கும் ஸ்ரீ சங்கரா சீனியர் செகண்டரி பள்ளி கருதுவதாக வந்த செய்தியைப் பார்த்திருப்பீர்கள்.

இதற்கு எடுத்துக்காட்டாக  ஒரு மாணவரின் செயல்திறனையும் அவரது பொருளாதார நிலைமையையும் இணைத்து ஒரு அறிக்கையை சுற்றுக்கு விட்டுள்ளார் அந்த பள்ளியின் தலைமையாசிரியர் சுபலா அனந்தநாராயணன். அதோடு, பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், அனைவருக்குமான கல்வி உரிமை மசோதாவை எதிர்த்து போராடும் படியும் தூண்டியிருக்கிறார்.

முதலில் இந்த கல்வி கற்கும் உரிமை என்றால் என்ன என்பதை பார்த்துவிடுவோம். 60 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்த திட்டம்தான் அது. பாதிக்கும் மேற்பட்ட இந்தியக் குழந்தைகள் குறைந்தபட்சம் எட்டு வருடம் கூட கல்வி கற்பதில்லை. ஒன்று பள்ளியின் பக்கமே வருவதில்லை அல்லது பாதியில் படிப்பை விட்டு நின்று விடுகிறார்கள். இந்த பிள்ளைகளில் மிகப் பெரும்பான்மையினர் வசதி வாய்ப்பற்ற ஏழை மக்கள்.  இந்த கல்வி கற்கும் உரிமை, கோத்தாரி கல்விக் குழுவினரால் பொது பள்ளிக்கூட அமைப்பை நோக்கிய ஒரு சிறுமுயற்சியாக, 1964-இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்திய கல்வியமைப்பில், சாதி மற்றும் சமூக-பொருளாதார நிலைமைகள் உருவாக்கியுள்ள ஏற்றதாழ்வுகளை களைவதற்காக செய்யப்பட்ட சமூக சீர்திருத்தமே இந்த பொது பள்ளிக்கூட அமைப்பு. இந்த மசோதா 1964,1986 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் முறையே நிறைவேற்ற முயன்றும் தோல்வியையே கண்டது.

இந்த மசோதாவுக்காக, பட்ஜெட்டில் 12,000 கோடிகள்  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உலகிலேயே, ஆரம்பக் கல்விக்கு மிகவும் குறைவாக நிதி ஒதுக்கி வரும் நாடு இந்தியாதான். இதுவும் வருடா வருடம் குறைந்து கொண்டே வருகிறது. இது முதலில் தில்லியில் நடைமுறைக்கு வந்து, இப்போது அனைத்து பள்ளிகளிலும் அமுலாகத் தொடங்கியிருக்கிறது.

இந்த மசோதாவின்படி, குழந்தைகளை, பெற்றோர்களை இன்டர்வியூ என்ற பெயரில் நேர்காணல் செய்வது மற்றும் கேபிடேசன் கட்டணம் வசூலிப்பது இரண்டுமே தண்டனைக்குரியது. கேபிடேசன் கட்டணம் வசூலித்தால் கட்டப்படும் பீஸ் தொகையைப்போல் 10 மடங்கும்,  குழந்தைகளையும் பெற்றோரையும் நேர்முகம் கண்டால் 25000 ரூ முதல் 50000 ரூ வரையும் அபராதம் வசூலிக்கப்படும். 25 சதவீத இடங்களை வசதி வாய்ப்பற்ற ஏழை மக்களுக்கு ஒதுக்க வேண்டும்.

ஆரம்பக் கல்வியை முடிக்கும்வரை பள்ளி நிர்வாகம் குழந்தைகளை தண்டிப்பதோ அல்லது பள்ளியை விட்டு அனுப்புவதோ கூடாது. ஒரு கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள் அந்த வட்டாரத்திலிருக்கும் பள்ளியிலேயே படிக்க வேண்டும்.இவையெல்லாம் அதில் சொல்லப்பட்டிருக்கும் முக்கிய அம்சங்கள். இத்தனைக்கும், கல்வி கற்கும் உரிமை, முதல் எட்டு வருடங்களுக்கு மட்டுமே கல்வியை உறுதி செய்கிறது. (அதற்கு பிறகு அந்த மாணவர்களை பற்றிய கவலை யாருக்கும் இல்லை. பள்ளிகள் நினைத்தால் வெளியேற்றலாம். )

கல்வியை முழுக்க தனியார் மயம் ஆக்கிய நிலையில் இந்த மசோதா எதையும் மாற்றாது. மேலும் இனி அரசுக் கல்லூரிகள், பள்ளிகள் ஏதும் புதிதாகத் திறக்கப்படாது என்ற சாத்தியத்தையும் இம்மசோதா கொண்டிருக்கிறது. முக்கியமாக தனியார் பள்ளிகள், கல்லூரிகள் கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதை இம்மசோதா தீர்த்திருந்தால் இப்படி தனியே ஏழைகளை சேர்க்க வேண்டுமென்ற சலுகை தேவைப்படாமாலேயே போயிருக்கலாம்.

இருப்பினும் இந்த பெயரளவு சலுகைகளைக் கூட தாங்கமுடியாமல் இந்த தனியார் பள்ளிகள் பெற்றோரிடம் லாபி வேலையை செய்யத் துவங்கியுள்ளன. இந்த மசோதா இவர்களது வருமானத்தை பாதிக்கிறதாம். அதன் முதல் கட்டமாகத்தான் இந்த இரு பள்ளிக்கூடங்கள் வேலையை காட்டத் தொடங்கியிருக்கின்றன -சங்கரா சீனியர் செகண்டரி பள்ளியும், லேடி ஆண்டாள் பள்ளியும்..

இன்று  பள்ளிக்கூடம் என்பது ஒரு பெரிய பிசினஸ். சென்னையில்தான் எத்தனை வகை வகையான பள்ளிக் கூடங்கள். வகுப்பறைகளில் ஏசியுடன், ஏசியில்லாமல், ஒன்றாம் வகுப்பிலிருந்தே லேப்டாப், பாடதிட்டங்கள்/வீட்டுப்பாடங்கள் ஆன்லைனிலே செய்து அனுப்பும் படியான வசதிக்கொண்டவை, என் ஆர் ஐ பிள்ளைகள் படிக்க என்று ஏராளமான வகைகள் உண்டு. ஒவ்வொரு பள்ளியும் அதன் வசதிகளுக்கும், பெயருக்கும் தகுந்தபடி நுழைவுக்கட்டணங்களை வசூலிக்கின்றன, அவை லட்சங்களில் ஆரம்பித்து ஆயிரங்களில் முடிகிறது.

அந்த பிசினஸின் முக்கியத்துவம் கருதித்தான் அரசியல்வாதிகள், ரவுடிகள், அவர்களது வாரிசுகள் என்று பலரும், கல்வி கற்றிருக்கிறார்களோ இல்லையோ கல்வித்தந்தையும் கல்வித்தாயுமாக பரிணாமம் எடுக்கின்றனர். இப்படி, ஆரம்பக் கல்வியிலேயே வர்க்கப் பாகுபாடுகள் நிறைந்திருக்கிறது. வசதி வாய்ப்புள்ளவர்கள் பெரிய பணக்கார பள்ளிக்குச் செல்கிறார்கள். இல்லாதவர்கள், விலை குறைந்த படிப்பை படிக்கிறார்கள். ஆரம்ப கல்வியிபிலிருந்து தொடங்கும்  இந்த முரண்கள் முடிவடையாததது.

பொதுவாக, நகருக்குள் இருக்கும், இந்த பள்ளிகளில் படிக்க ஒன்று நடிக நடிகையர், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள், வசதியான நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பிள்ளைகளாக இருக்க வேண்டும் அல்லது என் ஆர் ஐக்களின் பிள்ளைகளாக இருக்க வேண்டும். இதுதான் அடிப்படை தகுதி. அதற்கு அடுத்த லெவலில் இருப்பது நடுத்தர வர்க்கத்திற்கான பள்ளிகள். இந்த பள்ளிகளுக்குத்தான் அப்துல்கலாம் கனவு காணச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்-அவர் படித்து வந்த பின்னணியை மறந்துவிட்டு. இந்தியா வல்லரசாவதைப் பற்றி பாடம் நடத்துகிறார். ஏழை மக்களை தூக்கியெறிந்துவிட்டால் இந்தியா வல்லரசாகி விடும் போல.

உயர்ரகக் கல்வி நிறுவனங்கள், சிறந்த பள்ளி என்பதெல்லாம் ஒரு ஏமாற்று. ஒரு சிறந்த பள்ளி என்பது படிப்பில் எப்படிபட்ட மாணவராக இருந்தாலும் தேர்ச்சியடையச் செய்ய வேண்டும். அதை விடுத்து, பள்ளிக்கூட ஆசிரியர்களும், பெற்றோர்களும்.. சங்கம் அமைத்து எந்த மாதிரியான  குழந்தைகளை சேர்த்து கல்வி புகட்டுவது என்றும் பள்ளிக்கூட சூழலுக்கும் தரத்துக்கும் பங்கம் வராத வகையில் பள்ளியை பாதுகாப்பதும் எங்கள் உரிமை என்று சொல்வது சொத்துரிமை சார்ந்ததேயன்றி கல்விப்பணி சார்ந்ததல்ல.

அந்த பிள்ளைகள் வந்து சேர்ந்தால் அனுமதி மறுக்க முடியாது, வகுப்பறைகள் முதல் பள்ளிக்கூடமே பாழாகி விடும், அதோடு உங்கள் பிள்ளைகளின் கல்வியும் பாதிக்கப்படுமென்று அந்த தலைமையாசிரியர் பதறுகிறாரே, ஏன்? தங்கள் பிள்ளைகள் ஏழை மாணவர்களோடு  ஒன்றாக அமர்ந்து கல்வி கற்றால் ஆசிரியர்களும் பெற்றோரும் ஏன் கதறுகிறார்கள்? எது அவர்களை தடுக்கிறது? ஏழை மாணவர்கள் அழுக்காக இருப்பார்கள், கெட்ட பழக்க வழக்கங்கள் உடையவர்கள் அதைப் பார்த்து எங்கள் பிள்ளைகளும் கற்றுக் கொள்வார்கள் என்று அரற்றுகிறார்கள்.

வகுப்பறையில், ஏழை மாணவர்கள் இருந்தால் பாடம் நடத்த கத்த நேரிடும், பாடங்களை படிக்க கஷ்டப்படுவார்கள் என்கிறார்கள் ஆசிரியர்கள் அவர்கள் பங்குக்கு. ஏழை மாணவர்களோடு சேர்ந்தால் எங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் பேச வராது என்றெல்லாம் சாக்கு போக்குகள் சொல்கிறார்கள். குஷ்பூவின் பிள்ளைகள் லேடி ஆண்டாள் பள்ளியில் படிக்கின்றனர். ஏழைகளின் ஓட்டு வேண்டி பிரச்சாரம் செய்த குஷ்பூ அவர்களது பிள்ளைகளை சேர்த்துக் கொள்ள நிர்வாகத்தினரிடம் பிரச்சாரம் செய்வாரா?

ஏழை மாணவர்களுடன் பழகுவதால்தான் தங்கள் வீட்டுப் பிள்ளைகள் கெட்ட வார்த்தைகளை பேசக் கற்றுக் கொள்வதாக மத்திய தர வர்க்கத்தில் ஒரு பொது கருத்து நிலவுகிறது. ஏன், பணக்கார வீட்டுப்பிள்ளைகள் கெட்டவார்த்தைகள் பேசுவதேயில்லையா? நம்முன் நிறுத்தப்படும் முகங்களைப் பாருங்கள். விளம்பரங்களில் சச்சின் வருவதைப் போல தன்ராஜ் பிள்ளை ஏன் வருவதில்லை? சற்று வெள்ளையாக, படித்தவர் போல நடை உடை பாவனைகளைக் கொண்டிருந்தால் “வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்” என்றுதானே நம்புகிறார்கள். நடைமுறையில், எல்லா பித்தலாட்டங்களும் எங்கிருந்துதான் உதிக்கின்றன என்பதை நாம் அறிவோம். இதற்கு ப.சிதம்பரத்திலிருந்து பதிவுலக நர்சிம் வரை உதாரணங்கள் உண்டு.

இந்த முரணின் சற்றே பெரிய வடிவம்தான் கடந்த பிப்ரவரி மாதம்  நடந்த திவ்யாவின் படுகொலை. வகுப்பறையில் வைத்திருந்த பணம் காணோமென்றதும் என்ன நடந்தது? ஏழை என்பதாலேயே திவ்யா திருடியிருக்கக்கூடுமென்று பேராசிரியர்களுக்கு சந்தேகம் வந்தது. உடைகளைக் களையச் சொல்லி சோதனை செய்துள்ளனர். ஏன் மற்ற மாணவியருக்குச் அது போல சோதனை செய்யவில்லை? திவ்யாவை மட்டும் அப்படி சோதனை செய்ய என்ன காரணம்? ஏழை எனபதுதானே. ஏழை என்றால் திருடுவார்கள் என்ற பொதுபுத்திதானே. இதே பொதுபுத்தி பள்ளிக்கூட நிர்வாகத்தினருக்கும் இல்லாமலிருக்குமா? இதே பொதுபுத்தி, ஏழைப்பிள்ளைகள் நன்றாக படித்தால் எப்படியெல்லாம் கொட்டப் போகிறதோ?

நசிந்து போன விவசாயம், நலிந்துவிட்ட தொழில்கள், வேலையின்மை, கடன், சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக பிடுங்கபட்ட விளைநிலங்கள்  என்று பல காரணங்களால் மக்கள் இந்தியாவின் வடகோடிக்கும் தென்கோடிக்கும் பந்தாடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பீகார், ஒரிஸ்ஸாவிலிருந்து 100 ரூபாய்க்கும் 200 ரூபாய்க்கும் கூலிக்கு வந்து கட்டிடவேலை முதல் ஓட்டல் வேலை வரை செய்து பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதேபோல, தமிழக விவசாயிகள் பாத்திரம் பண்டங்களை தூக்கிக் கொண்டு ஊர் ஊராக பிழைப்பு தேடி அலைந்துக்கொண்டிருக்கிறார்கள். நிரந்தர வேலையில்லாமல் கிடைக்கும் வேலையை செய்து பிழைக்கும்படி நகரத்தை நோக்கி துரத்தப்படுகிறார்கள். நமது பிள்ளையாவது படித்து முன்னேறினால் போதும் என்ற பெற்றோரின் நம்பிக்கையை சுமந்து வரும் அந்த குழந்தைகளின் குறைந்த பட்ச ஆரம்ப கல்விக்கான வழியை ஆசிரியர்களும், பெற்றோர்க்ளும் சேர்ந்து அடைக்கிறார்கள். அவர்களைக் கண்டுதான் மூக்கைப் பொத்துகிறார்கள். துரத்தியடிக்கிறார்கள்.

இந்திய உழைக்கும் மக்களின் கல்வி உரிமையை மறுத்தது பார்ப்பனியம். சம்ஸ்கிருதம் பேசினால் நாக்கை அறுக்க வேண்டும் என்றது மனுஸ்மிருதி. இன்று அடையாரில் இருக்கும் ஒரு பார்ப்பனப் பள்ளியும், பார்ப்பன முதல்வரும் ஏழைகளை தடை செய்வோம் என்று பகிரங்கமாக பேசுகிறார்கள். புதிய பார்ப்பனியம்! பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் அடிமைகள் என்று பார்ப்பனியமும், வெள்ளை நிற ஆரியர்களைத் தவிர மற்றவர்கள் அடிமைகள் என்று ஹிட்லரின் நாசிசமும் பேசிய வரலாறு இன்று திரும்புகிறது. ஒரு வேளை இந்தியா வல்லரசாக வேண்டுமென்பதற்காக ஏழைகளை மொத்தமாகக் கொன்றுவிடுவார்களோ தெரியவில்லை. அப்போது இந்த கல்வி, கத்திரிக்காய் பிரச்சினை ஏதுமில்லையே?

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்… ஏழை மாணவர்களுடன் தங்களது பிள்ளைகள் ஒன்றாக அமர்ந்து படிப்பதைக்கூட நடுத்தர வர்க்கத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பள்ளிக்கூடத்தை விட்டே துரத்த திட்டமிடுகிறது பள்ளி நிர்வாகம். நாட்டைவிட்டே துரத்த திட்டமிடுகிறது மன்மோகனின் அரசாங்கம். ஜெய்தாப்பூரில் அணு உலையை எதிர்த்து போராடும் மக்களை சுடும் அரசாங்கம்  டாடாவின் உயிர்வாழும் உரிமைக்கு பரிந்து கொண்டு வருகிறது.

இப்படி, ஏற்றத் தாழ்வுகளை அதிகரித்துச் செல்வது பாசிசத்திலேதான் போய் முடியும். தகுதியிருப்பவர்கள் மட்டுமே இந்த ”வல்லரசில்” வாழ முடியும். பணத்தைக் கொடுத்து நுகரும் வசதியிருப்பவர்களுக்கு மட்டுமே இங்கு இடம். தாகத்துக்கு குடிக்கும் நீரையே  விலை கொடுத்து வாங்கிக் குடிக்கும் நிலையைப்போல சுவாசிக்கும் காற்றுக்கு கூட விலை வைத்தாலும் வைப்பார்கள் இந்த வியாபாரிகள். அப்படி ஒரு திட்டத்தோடு பன்னாட்டு வியாபாரிகள் வந்தாலும் அதில் கையெழுத்திடுவார் மன்மோகன்.

ஆரம்ப கல்விக்கே இந்தநிலை என்றால், மொத்த கல்வித்துறையையுமே தனியார்மயமாக்க திட்டங்கள் தீட்டியிருக்கிறார் கபில்சிபல். மன்மோகன் சிங் பொருளாதாரக் கதவுகளை திறந்து விட்டது போல, கல்வித்துறையின் கதவுகளை இவர் திறந்துவிடப் போகிறார். பன்னாட்டு பல்கலைகழகங்கள் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் இங்கு வியாபாரம் செய்து போட்டி போட்டுக் கொண்டு கல்வியின் ‘தரத்தை’அதாவது பிசினசை உயர்த்தப் போகின்றன.

இன்று ஆரம்பக் கல்விக்கே பல ஆயிரங்கள் செலவு செய்யும் நடுத்தர வர்க்கம், வெளிநாட்டு  பல்கலைக்கழகங்களின் பகாசுர பசிக்கு என்ன செய்யப் போகிறது? உயர்ந்த படிப்பு, உயர்ந்த தரம், வெளிநாட்டு படிப்பை உள்நாட்டிலேயே குறைந்த விலையில் படிக்கலேம் என்றெல்லாம்  மயக்கி நடுத்தர வர்க்கத்தினரை பந்தாடப் போகிறது, கபில் சிபலின் புதிய கல்விக்கொள்கை. நுகரும் தகுதியுள்ளவரே வாடிக்கையாளர். அப்போது, இன்றைய  ஏழை மாணவர்களின் நிலையை எட்டியிருப்பார்கள்  இன்றைய வாடிக்கையாளர்கள்.  கல்வி அப்போது இவர்களுக்கு எட்டாக்கனியாக  மாறியிருக்கும். அதுதான் தனியார்மயமும் தாராளமயமும் வெளிப்படுத்தும் கோரமுகம்.

இதனை, இன்றே உணர்ந்து சரியான போராட்டத்தை இனங் கண்டு தங்களை இணைத்துக் கொள்வதே தங்கள் பிள்ளைகளுக்கு நடுத்தர வர்க்கம் தரும் உண்மையான கல்வியாக இருக்கும்.

_________________________________________________________

– சந்தனமுல்லை

முதல் பதிவு: வினவு

தொடர்புடைய பதிவுகள்:

நிகழ்ச்சி நிரல்: ஜூலை 19 திருச்சி- கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு!

கடலூர் கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு-காட்சி பதிவுகள்!

நாளை நம் குழந்தைகள் கைநாட்டுகளாக மாறும்! போராட வாருங்கள்!

கரூர்: கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு விளக்க தெருமுனை பிரச்சாரம்!

திருச்சி – ஜூலை 19,கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு குறித்த சுவரெழுத்து பிரச்சாரம்!

கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாடு! அனைவரும் அணிதிரண்டு வாரீர்!

விழுப்புரம் – ஜூலை 22,கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு குறித்த சுவரெழுத்து பிரச்சாரம்!

கடலூர் – கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாடு குறித்த சுவரெழுத்து பிரச்சாரம்!

டிபிஐ முற்றுகை – போலீசு கொலைவெறி தாக்குதல் வீடியோ!

மக்களை குற்றவாளிகள் போல் கண்காணிக்கும் போலீசு ஆட்சிக்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டம்! அனைவரும் வருக!

குடியிருப்போர், மாணவர்கள், தொழிலாளர்களை

குற்றவாளிகள் போல் கண்காணிக்கும்

போலீசு ஆட்சியை முறியடிப்போம்!

கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 25.4.12 மாலை 4 மணி

இடம்:  மெமோரியல் ஹால், சென்னை

அனைவரும் வாரீர்!

அதிகரிக்கும் போலீசு கண்காணிப்பு: பாசிமயமாகும் அரசு!

தொடர்புடைய பதிவுகள்

அண்ணா நூலகத்தை இடம் மாற்றத்திற்க்கு எதிரான ஆர்ப்பாட்டம் – பத்திரிக்கைச் செய்தி & வீடியோ!

தினகரன் பத்திரிக்கையில் வந்த செய்தி:

87 பேர் கைதாகி விடுதலை அண்ணா நூலகத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மறியல்

பதிவு செய்த நாள் : 11/10/2011 0:31:9

 சென்னை : அண்ணா நூலகத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்த 87 மாணவர்கள் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர். அண்ணா நூலகத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதை கண்டித்து கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் அமைப்பினர் 35 பேர் தடையை மீறி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில துணை தலைவர் ஸ்டாலின் தலைமை வகித்தார். கோட்டூர்புரம் போலீசார் மாணவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர்.

அதற்கு சம்மதிக்காத மாணவர்கள், திடீரென கோட்டூர்புரம் சிக்னல் அருகில் மறியல் செய்தனர். மறியலில் ஈடுபட்ட 35 பேரையும் போலீ சார் கைது செய்தனர். அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.

சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் 52 பேர் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை மாவட்ட இணை செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். 52 பேரையும் சைதாப்பேட்டை போலீ சார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.

– தினமணியில் வந்த நமது போராட்ட செய்தியில் நமது அமைப்பு பெயரினை தவறாக குறிப்பிட்டு உள்ளனர்.

 

கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தை இடமாற்றம் என்ற பெயரில் வரலாற்றை அழிக்க முயலும் பாசிச ஜெயாவின் செயலைக் கண்டித்து புரட்சிகர மாணவர் இளைஞர்முன்னணி சார்பில் 09.11.11 அன்று காலை 10.30 மணியளவில் பனகல் மாளிகை அருகில் திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோட்டூர்புரம் அண்ணா நூலகம் இடமாற்றம் செய்யப்படுவதாகவும் அங்கு குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்ட உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகள் பராமரிப்பின்றி பாழடைந்து, சீரழிந்து போன சூழலில் அதை மேம்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்கப்படுவதில்லை. இந்நிலையில் இந்த அறிவிப்பு ஒரு ஏமாற்று.

பார்ப்பன பாசிஸ்டான ஜெயலலிதா சமச்சீர் பொதுப்பாட்த்திட்டம் மற்றும் தாய்மொழிக் கல்வியினை தடுக்க தனியார் பள்ளி முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தை இடமாற்றுவது என்பது வரலாற்றை அழிக்க முயலும் செயலே. வரலாறு முழுவதும் பாசிஸ்டுகள் தாங்கள் ஒரு தேசத்தை கைப்பற்றுவதற்கு முன்னும், பின்னும் செய்கின்ற முதற்செயலே வரலாற்றை அழிப்பதுதான்.

ஹிட்லர் முதல் ஜார்ஜ் புஷ் , ராஜபட்சே வரையிலான பாசிஸ்டுகள் கைப்பற்றிய நாடுகளில் நாட்டின் பாரம்பரிய மிக்க சின்னங்களையும், நூலகங்களையும் திட்டமிட்டு அழித்தார்கள். அதைப்போல தமிழ்கப்பண்பாட்டை திட்டமிட்டு அழிக்கும் பார்ப்பன பாசிஸ்டான ஜெயல்லிதாவிற்கு எதிராக உழைக்கும் மக்கள் அனைவரும் போராட வேண்டிய அவசியம் உள்ளது. இதனை வலியுறுத்தும் விதமாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சென்னைக்கிளை இணைச்செயலர் தோழர்.நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். இதில் மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் என நூற்றுகும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தை இடமாற்றம் என்ற பெயரில் வரலாற்றை அழிக்க முயலும் பாசிச ஜெயாவின் செயலைக் கண்டித்து புரட்சிகர மாணவர் இளைஞர்முன்னணி சார்பில் 09.11.11 அன்று காலை 10.30 மணியளவில் பனகல் மாளிகை அருகில் திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோட்டூர்புரம் அண்ணா நூலகம் இடமாற்றம் செய்யப்படுவதாகவும் அங்கு குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்ட உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகள் பராமரிப்பின்றி பாழடைந்து, சீரழிந்து போன சூழலில் அதை மேம்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்கப்படுவதில்லை. இந்நிலையில் இந்த அறிவிப்பு ஒரு ஏமாற்று.

பார்ப்பன பாசிஸ்டான ஜெயலலிதா சமச்சீர் பொதுப்பாட்த்திட்டம் மற்றும் தாய்மொழிக் கல்வியினை தடுக்க தனியார் பள்ளி முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தை இடமாற்றுவது என்பது வரலாற்றை அழிக்க முயலும் செயலே. வரலாறு முழுவதும் பாசிஸ்டுகள் தாங்கள் ஒரு தேசத்தை கைப்பற்றுவதற்கு முன்னும், பின்னும் செய்கின்ற முதற்செயலே வரலாற்றை அழிப்பதுதான்.

ஹிட்லர் முதல் ஜார்ஜ் புஷ் , ராஜபட்சே வரையிலான பாசிஸ்டுகள் கைப்பற்றிய நாடுகளில் நாட்டின் பாரம்பரிய மிக்க சின்னங்களையும், நூலகங்களையும் திட்டமிட்டு அழித்தார்கள். அதைப்போல தமிழ்கப்பண்பாட்டை திட்டமிட்டு அழிக்கும் பார்ப்பன பாசிஸ்டான ஜெயல்லிதாவிற்கு எதிராக உழைக்கும் மக்கள் அனைவரும் போராட வேண்டிய அவசியம் உள்ளது. இதனை வலியுறுத்தும் விதமாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சென்னைக்கிளை இணைச்செயலர் தோழர்.நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். இதில் மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் என நூற்றுகும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அண்ணா நூலகத்தை இடம் மாற்றத்திற்க்கு எதிரான ஆர்ப்பாட்டம் – வீடியோ!

கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தை இடமாற்றம் என்ற பெயரில் வரலாற்றை அழிக்க முயலும் பாசிச ஜெயாவின் செயலைக் கண்டித்து புரட்சிகர மாணவர் இளைஞர்முன்னணி சார்பில் 09.11.11 அன்று காலை 10.30 மணியளவில் பனகல் மாளிகை அருகில் திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோட்டூர்புரம் அண்ணா நூலகம் இடமாற்றம் செய்யப்படுவதாகவும் அங்கு குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்ட உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகள் பராமரிப்பின்றி பாழடைந்து, சீரழிந்து போன சூழலில் அதை மேம்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்கப்படுவதில்லை. இந்நிலையில் இந்த அறிவிப்பு ஒரு ஏமாற்று.

பார்ப்பன பாசிஸ்டான ஜெயலலிதா சமச்சீர் பொதுப்பாட்த்திட்டம் மற்றும் தாய்மொழிக் கல்வியினை தடுக்க தனியார் பள்ளி முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தை இடமாற்றுவது என்பது வரலாற்றை அழிக்க முயலும் செயலே. வரலாறு முழுவதும் பாசிஸ்டுகள் தாங்கள் ஒரு தேசத்தை கைப்பற்றுவதற்கு முன்னும், பின்னும் செய்கின்ற முதற்செயலே வரலாற்றை அழிப்பதுதான்.

ஹிட்லர் முதல் ஜார்ஜ் புஷ் , ராஜபட்சே வரையிலான பாசிஸ்டுகள் கைப்பற்றிய நாடுகளில் நாட்டின் பாரம்பரிய மிக்க சின்னங்களையும், நூலகங்களையும் திட்டமிட்டு அழித்தார்கள். அதைப்போல தமிழ்கப்பண்பாட்டை திட்டமிட்டு அழிக்கும் பார்ப்பன பாசிஸ்டான ஜெயல்லிதாவிற்கு எதிராக உழைக்கும் மக்கள் அனைவரும் போராட வேண்டிய அவசியம் உள்ளது. இதனை வலியுறுத்தும் விதமாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சென்னைக்கிளை இணைச்செயலர் தோழர்.நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். இதில் மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் என நூற்றுகும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தை இடமாற்றம் என்ற பெயரில் வரலாற்றை அழிக்க முயலும் பாசிச ஜெயாவின் செயலைக் கண்டித்து புரட்சிகர மாணவர் இளைஞர்முன்னணி சார்பில் 09.11.11 அன்று காலை 10.30 மணியளவில் பனகல் மாளிகை அருகில் திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோட்டூர்புரம் அண்ணா நூலகம் இடமாற்றம் செய்யப்படுவதாகவும் அங்கு குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்ட உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகள் பராமரிப்பின்றி பாழடைந்து, சீரழிந்து போன சூழலில் அதை மேம்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்கப்படுவதில்லை. இந்நிலையில் இந்த அறிவிப்பு ஒரு ஏமாற்று.

பார்ப்பன பாசிஸ்டான ஜெயலலிதா சமச்சீர் பொதுப்பாட்த்திட்டம் மற்றும் தாய்மொழிக் கல்வியினை தடுக்க தனியார் பள்ளி முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தை இடமாற்றுவது என்பது வரலாற்றை அழிக்க முயலும் செயலே. வரலாறு முழுவதும் பாசிஸ்டுகள் தாங்கள் ஒரு தேசத்தை கைப்பற்றுவதற்கு முன்னும், பின்னும் செய்கின்ற முதற்செயலே வரலாற்றை அழிப்பதுதான்.

ஹிட்லர் முதல் ஜார்ஜ் புஷ் , ராஜபட்சே வரையிலான பாசிஸ்டுகள் கைப்பற்றிய நாடுகளில் நாட்டின் பாரம்பரிய மிக்க சின்னங்களையும், நூலகங்களையும் திட்டமிட்டு அழித்தார்கள். அதைப்போல தமிழ்கப்பண்பாட்டை திட்டமிட்டு அழிக்கும் பார்ப்பன பாசிஸ்டான ஜெயல்லிதாவிற்கு எதிராக உழைக்கும் மக்கள் அனைவரும் போராட வேண்டிய அவசியம் உள்ளது. இதனை வலியுறுத்தும் விதமாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சென்னைக்கிளை இணைச்செயலர் தோழர்.நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். இதில் மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் என நூற்றுகும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அண்ணா நூலகத்தை இடம் மாற்றும் ‘ஜெயா’வின் பார்ப்பன பாசிச நடவடிக்கைக்கு எதிராக பு.மா.இ.மு தலைமையில் ஆர்ப்பாட்டம் – 120 பேர் கைது!

கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தை இடமாற்றம் என்ற பெயரில் வரலாற்றை அழிக்க முயலும் பாசிச ஜெயாவின் செயலைக் கண்டித்து புரட்சிகர மாணவர் இளைஞர்முன்னணி சார்பில் 09.11.11 அன்று காலை 10.30 மணியளவில் பனகல் மாளிகை அருகில் திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோட்டூர்புரம் அண்ணா நூலகம் இடமாற்றம் செய்யப்படுவதாகவும் அங்கு குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்ட உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகள் பராமரிப்பின்றி பாழடைந்து, சீரழிந்து போன சூழலில் அதை மேம்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்கப்படுவதில்லை. இந்நிலையில் இந்த அறிவிப்பு ஒரு ஏமாற்று.

பார்ப்பன பாசிஸ்டான ஜெயலலிதா சமச்சீர் பொதுப்பாட்த்திட்டம் மற்றும் தாய்மொழிக் கல்வியினை தடுக்க தனியார் பள்ளி முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தை இடமாற்றுவது என்பது வரலாற்றை அழிக்க முயலும் செயலே. வரலாறு முழுவதும் பாசிஸ்டுகள் தாங்கள் ஒரு தேசத்தை கைப்பற்றுவதற்கு முன்னும், பின்னும் செய்கின்ற முதற்செயலே வரலாற்றை அழிப்பதுதான்.

ஹிட்லர் முதல் ஜார்ஜ் புஷ் , ராஜபட்சே வரையிலான பாசிஸ்டுகள் கைப்பற்றிய நாடுகளில் நாட்டின் பாரம்பரிய மிக்க சின்னங்களையும், நூலகங்களையும் திட்டமிட்டு அழித்தார்கள். அதைப்போல தமிழ்கப்பண்பாட்டை திட்டமிட்டு அழிக்கும் பார்ப்பன பாசிஸ்டான ஜெயல்லிதாவிற்கு எதிராக உழைக்கும் மக்கள் அனைவரும் போராட வேண்டிய அவசியம் உள்ளது. இதனை வலியுறுத்தும் விதமாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சென்னைக்கிளை இணைச்செயலர் தோழர்.நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். இதில் மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் என நூற்றுகும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கோட்டூர்புரம் அண்ணா நூலகம் இடம் மாற்றம்: வரலாற்றை அழிக்க முயலும் பார்ப்பன பாசிச ‘ஜெயா’கும்பலின் வக்கிரத்தை முறியடிப்போம்!

அத்வானியின் இரத யாத்திரை “ஓடுறான் புடி”

  • முஸ்லீம் எதிர்ப்பும், இந்துமத வெறியின்

    முகமூடி மூலைக்கு மூலை கிழிந்து தொங்குது!

  • நிலத்திருடன் முதலமைச்சராம்!

         நிலக்கரி திருடன் அமைச்சராம்

  • ஊழல் எதிர்ப்பு யாத்திரை நடத்தும்

         அதிவானி சொல்கிறார்  “ஓடுறான் புடி”

**************************

மக்கள் கலை இலக்கியக் கழகம்

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

பெண்கள் விடுதலை முன்னணி

தொடர்புடைய பதிவுகள்:

‘கண்ணை மறைக்கும் காவிப் புழுதி’

விஸ்வ இந்து பரிஷத் அசோக் சிங்கால் – அண்டப்பொய் விஷம பிரச்சாரம்

தெகல்கா வாக்குமூலங்கள் :இந்து பாசிசத்தின் உளவியல்!

குஜராத் பாசிசத்தை தேர்வு செய்தது ஏன்?

இந்த முகமூடி எனக்கும் மக்களுக்கும் இடையே வலிமையான பிணைப்பை ஏற்படுத்தியது. நான் தாக்கப்பட்ட போதெல்லாம், என் வலியை மக்கள் உணர்ந்தார்கள்.”

(மோடியின் பேட்டி, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ், டிசம்பர்25)

“அண்ணனே, தளபதியே, அம்மா, அய்யா’ என்று, தலைவனாகிய ஆண்டவனைத் தொண்டர்கள்

 தொழுது வழிபடும் “துவைத’ நிலையிலிருந்து, “அகம் பிரம்மாஸ்மி’ என்ற “அத்வைத’ நிலைக்கு, “நானே மக்களாக இருக்கிறேன்’ என்ற தூய பாசிச நிலைக்கு, இந்திய ஜனநாயகத்தை உயர்த்தியிருக்கிறார் மோடி.

தனது முகமூடிகளை இலட்சக்கணக்கில் சீனத்திலிருந்து இறக்குமதி செய்து, அவற்றை குஜராத் முழுவதும் விநியோகித்திருந்தார் மோடி. தலைவனை “முக’மாகவும், மக்களை வெறும் “பிரதிபிம்ப’மாகவும் மாற்றிவிட்ட இந்த “அத்வைத’ நாடகத்தில், அரசியல் எதிரிகள் மோடியை விமரிசித்த போது, முகமூடிகள் வலியால் துடித்ததில் வியப்பில்லை.

முன்பு, வாஜ்பாயி எனும் “மிதவாத மூகமூடி’யை அணிந்து கொண்டு பாசிசம் ஆட்சி நடத்தியபோது, அந்த முகமூடியின் மிதவாத ஒப்பனையைப் பாதுகாக்கும் பொறுப்பை, மதச்சார்பற்ற கட்சிகள் ஏற்றிருந்தன. அது பாசிசத்தின் முன்னுரை. இன்று ஒரு கொலைகாரனின் முகத்தைத் தனது முகமூடியாக அணிந்து கொண்டு, ஆனந்தக் கூத்தாடும் குஜராத் நமக்கு வழங்குவது பாசிசத்துக்கான பொழிப்புரை.

முஸ்லிம் இளைஞனை மணந்த இந்துப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து, சிசுவை எடுத்து எரித்துக் கொன்றதையும், அண்டை வீட்டு முஸ்லிம் பெண்களை பாலியல் வல்லுறவால் சிதைத்து, பின்னர் அவர்களைக் கசக்கிக் கொன்று போட்டதையும், குழந்தைகளைத் தீயில் வறுத்ததையும் பெருமை பொங்க அசைபோடும் கொலைகாரர்களை தெகல்கா படம் பிடித்துக் காட்டியபோது, “”இவர்கள் என்ன வகை மிருகங்கள்?” என்று அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் பல வாசகர்கள். எந்த மண்ணில் அந்தப் பாசிசப் பிராணிகள் முளைத்து, தழைத்து வளர்ந்தனவோ அந்த குஜராத் மண், இந்த முகமூடிக் கூத்தின் மூலம் தன்னுடைய முகத்தை அடையாளம் காட்டியிருக்கிறது.

நீதி, கருணை அல்லது மனிதத் தன்மையின் சாயலையேனும் தமக்குள் காப்பாற்றி வைத்திருக்கும் ஒவ்வொருவரும், தெகல்கா இதழின் செய்தியைப் படித்த பின்னர் “எப்படியாவது மோடி தோற்றுவிட மாட்டானா!’ என்று தவித்தனர். தேர்தலுக்கு முந்தைய பல கருத்துக் கணிப்புகள், மோடியின் வெற்றியைத்தான் ஊகித்தன என்ற போதிலும், மோடி தோற்க வேண்டுமென்று ஏங்கினர். ஒருவேளை வெற்றியே பெற்றுவிட்டாலும், மோடியின் ஒரு முடியைக் கூடக் காங்கிரசு பிடுங்கப் போவதில்லை, என்பது தீர்க்கமாகத் தெரிந்திருந்தும், தெகல்கா கிளறிவிட்ட மனப்புண்ணின் ஆறுதலுக்காகவாவது, “மோடி தோற்கவேண்டும்’ என்று பலர் விரும்பினர்.

இனப்படுகொலையின் பிணவாடையை முகர்ந்தபடியேதான், குஜராத்தின் பெரும்பான்மை இந்துக்கள் 2002இல் மோடிக்கு வாக்களித்தனர் என்ற போதிலும், “”அது கோத்ரா சம்பவம் தோற்றுவித்த தற்காலிகக் கிறுக்குத்தனமாக இருக்கக் கூடும்” என்று தமக்குத் தாமே சமாதானம் கூறிக்கொண்ட பலர், 5 ஆண்டுகள் கடந்து விட்டதால் குஜராத்தின் இந்து மனோபாவத்திற்கு புத்தி தெளிந்துவிடும் என்றும், அதன் அடிமனதிலிருந்து “அறவுணர்ச்சி’ மேலெழும்பி 2002இன் அநீதிக்குப் பரிகாரம் வழங்கும் என்றும் நம்பிக்கையோடு எதிர்பார்த்தனர்.

தெகல்காவின் பேட்டிகள், இந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தின. இமை தாழாமல், சொல் தடுமாறாமல் தாங்கள் இழைத்த பஞ்சமா பாதகங்களை “திரைக்கதை’ போல வருணித்தார்கள் “குஜராத்தின் எழுச்சியுற்ற இந்துக்கள்’. “மாமிசம் தின்னும் “தமோ’ குணம் நிரம்பிய கீழ்சாதி அடியாட்படையின்’ வாயிலிருந்து மட்டுமல்ல, “சாக பட்சிணிகளும், இயல்பிலேயே “சத்வ’ குணம் நிரம்பியவர்களுமான’ பார்ப்பனபனியா உயர்சாதி இந்துக்களின் வாயிலிருந்தும் “ரத்தக் கவிச்சு’ வீசியது. இருப்பினும், குஜராத்தின் உயர்சாதி இந்துக்கள் மூக்கைப் பொத்திக் கொள்ளவில்லை. பெரும்பான்மை இந்து மனம், அதனைக் கண்டு அவமானத்தால் குறுகி, வெட்கித் தலைகுனியவில்லை. “வருந்துகிறோம்’ என்று மனதிற்குள் கூட முணுமுணுக்கவில்லை. முகம் என்ன செய்ததோ, அதையே முகமூடிகளும் பிரதிபலித்தன.

“”2002 சம்பவங்களுக்காக வருந்துகிறேன் என்று நீங்கள் ஒரு வார்த்தை கூறினால் அது காயம்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இருக்குமல்லவா?” என்று ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் நரேந்திர மோடியிடம் கேட்டார் கரண் தாப்பர் என்ற பத்திரிகையாளர். மறு கணமே, அந்தத் தொலைக்காட்சிப் பேட்டியிலிருந்து வெளியேறினார் மோடி. தெகல்கா பேட்டிகளோ, குஜராத் தொலைக்காட்சிகளிலிருந்தே வெளியேற்றப் பட்டன. பிரதிபலிப்பு தோற்றுவிக்கும் “இடவல மாற்றம்’ என்பது, இதுதான் போலும்!

குஜராத் தேர்தல் முடிவு, காந்திய மத நல்லிணக்கவாதிகளையே கூட அதிர்ச்சியுறச் செய்துள்ளது. “”குஜராத்தை “இந்துத்துவத்தின் சோதனைச்சாலை’ என்று இனிமேலும் அழைக்க முடியாது; அது தொழிற்சாலையாகி விட்டது” என்கிறார் ஒரு பத்திரிகையாளர். “”குஜராத் ஒரு மாநிலமல்ல, அது ஒரு சித்தாந்தம்” என்று எச்சரிக்கிறார் குல்தீப் நய்யார். “”இனி இந்தியாவே குஜராத் தான்” என்று இரண்டு விரலைக் காட்டிக் கொக்கரிக்கின்றன மோடியின் முகமூடிகள்.

அத்வானியின் கூற்றுப்படி, இது பாரதிய ஜனதாவுக்கு ஒரு திருப்புமுனை. இது “ஆம்பளை ஜெயா’வின் வெற்றி என்பதால், ஜெயலலிதாவைப் பொருத்தவரை இது அவரது சொந்த வெற்றி. ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்கும் (anti-incumbency) மக்களின் மனோபாவத்தை மீறி மோடி வென்றிருப்பதால், இந்த வெற்றிக்கு இந்துத்துவத்தைத் தவிர வேறு என்ன காரணம்? என்பதே மற்ற ஓட்டுக்கட்சிகளின் அக்கறைக்கு உரிய விசயமாக இருக்கிறது.

சங்க பரிவார அமைப்புகளும், லூவா படேல் சாதியைச் சேர்ந்த கேசுபாய் படேல், கோர்தன் ஜடாபயா போன்ற பா.ஜ.க தலைவர்களும், தொகாடியா போன்ற வி.எச்.பி தலைவர்களும், மோடியை எதிர்த்த போதிலும், போட்டி வேட்பாளர்களை நிறுத்தியும், காங்கிரசை மறைமுகமாக ஆதரித்த போதிலும், மோடி வென்றது எப்படி? மாயாவதியின் கட்சி வாக்குகளைப் பிரிக்காமல் இருந்திருந்தால், காங்கிரசு கூடுதல் தொகுதிகளில் வென்றிருக்கக் கூடுமா? மோடிக்கு மாற்றாக முதல்வர் பதவிக்கு காங்கிரசு சார்பில் யாரையும் முன் நிறுத்தவில்லை என்பதுதான், தோல்விக்கு அடிப்படையா? ஆதிக்க சாதியான படேல் சாதியினர் பா.ஜ.க வை எதிர்த்ததால், மற்றெல்லா சாதியினரும் பா.ஜ.க.வின் பக்கம் சாய்ந்து விட்டனரா? அல்லது உள்கட்சிப் பூசலால் பிளவு பட்டிருந்த இந்து ஓட்டு வங்கியை, தெகல்கா விவகாரம் தோற்றுவித்த இந்து உணர்வு, ஒன்றுபடுத்திவிட்டதா?… என தும்பிக்கை, காது, வால் என்று பிரித்து “யானை’யைத் தடவுகின்றன, தேர்தல் முடிவு குறித்த ஊடகங்களின் ஆய்வுகள்.

குஜராத் இனப்படுகொலை குறித்த பெரும்பான்மை இந்துக்களின் மனப்போக்கு என்ன? மோடியின் மறுகாலனியாக்க வளர்ச்சித் திட்டங்கள் குறித்த குஜராத் மக்களின் கண்ணோட்டம் என்ன<? அவை இந்தத் தேர்தல் முடிவுகளின் மீது செலுத்திய தாக்கம் என்ன? – என்ற கேள்விகளையே இந்த ஆய்வுகள் எதுவும் எழுப்பவில்லை. மாறாக, கேந்திரமான இவ்விரு பிரச்சினைகளையும், நமது பார்வையிலிருந்தே தந்திரமாக அகற்றி விடுகின்றன.

இந்தத் தேர்தல் முடிவல்ல, நமது பிரச்சினை. ஒருவேளை இத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தால், அந்த வெற்றி, காந்திய மத நல்லிணக்க வாதிகளின் மனப்புண்ணுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்குமேயன்றி, நிச்சயமாக அது இந்துத்துவத்தின் தோல்வியாக இருந்திருக்காது. “குஜராத் – இந்துத்துவத்தின் சோதனைச்சாலை’ என்ற நிலைமையை மாற்றுவதற்கான ஒரு துவக்கப் புள்ளியாகக் கூட இருந்திருக்காது.

···

குஜராத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, மோடி விடுத்த ஒரு சவால் மிகவும் முக்கியமானது. “”என்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் எல்லாக் குறுந்தகடுகளையும், ஒரு நடுநிலையாளர் குழுவிடம் சமர்ப்பிக்க நான் தயாராக இருக்கிறேன். அதில் மதவெறியைத் தூண்டக்கூடிய ஏதாவது ஒரு பேச்சைக் காட்டுங்கள். நான் தோல்வியை ஒப்புக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்” (டைம்ஸ் ஆஃப் இந்தியா, டிசம். 25)

பாசிஸ்டுகளின் வழக்கமான “வாய்ச்சவடால்’ என்று இதனை ஒதுக்கிவிட முடியாது. இந்து, இந்துத்துவம், முஸ்லிம் என்ற சொற்களைத் தனது பிரச்சாரத்தில், மோடி அநேகமாக உச்சரிக்கவே இல்லை. அவற்றை உச்சரிக்காமலேயே, அவை தோற்றுவிக்கும் விளைவுகளை மோடியால் அறுவடை செய்ய முடிந்திருக்கிறது. காங்கிரசும், இந்தச் சொற்களைப் பயன்படுத்தவில்லை என்பதுதான், குரூரமான நகைச்சுவை. (இந்து பயங்கரவாதிகள் என்று ஒரே ஒருமுறை “திக்விஜய் சிங்’ பேசியதைத் தவிர).

“இந்துத்துவத்தின் சோதனைச் சாலை’ என்று அறியப்படும் ஒரு மாநிலத்தில், கிராமம் முதல் நகரம் வரை, இந்து பாசிச அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு மாநிலத்தில், இந்துத்துவத்துக்கு எதிராகப் பேசும் அமைப்புகள், திரைப்படங்கள், பத்திரிகைகள், கலைஞர்கள் யாராக இருந்தாலும், தாக்கித் துரத்தப்படுவார்கள் என்பது நிலைநாட்டப்பட்டிருக்கும் மாநிலத்தில், 2500 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு, பல்லாயிரம் பேர் வீடு வாசலை இழந்து, கடந்த 5 ஆண்டுகளாக அகதி முகாம்களில் வாழ வேண்டியிருக்கும் ஒரு மாநிலத்தில், “இந்து பாசிசம்’ என்ற சொல்லையே பயன்படுத்தாமல், அதன் கொடூரத் தன்மையை அம்பலப்படுத்தாமல், மோடிக்குப் பெரும்பான்மையாக வாக்களித்திருக்கும் மக்களைத் தன் பக்கம் ஈர்ப்பதில், காங்கிரஸ் எவ்வாறு வெற்றி பெற்றிருக்க முடியும்?

இந்துத்துவத்தை எதிர்ப்பது இருக்கட்டும், காந்திய மத நல்லிணக்கத்தைப் பேசினால்கூட குஜராத் இந்துக்களின் வாக்குகளை இழந்து விடுவோமென்று, காங்கிரசு அஞ்சியது. மோடி முகாமிலிருந்து வெளியேறிய அதிருப்தியாளர்களும், 2002 இனப்படுகொலையின் குற்றவாளிகளுமான கோர்தன் ஜடாபயா, கேசுபாய் படேல், பிரவின் தொகாடியா போன்றோரை அரவணைத்துக் கொள்வதன் மூலம், படேல் சாதி வாக்குகளையும், மோடி எதிர்ப்பு இந்து வாக்குகளையும் அள்ளி விடலாம் என்று கணக்கிட்டது. இது முஸ்லிம் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் என்று தெரிந்திருந்த போதிலும், காங்கிரசை விட்டால் இப்போதைக்கு வேறு நாதி இல்லை என்ற முஸ்லிம் மக்களின் பரிதாபமான நிலைமையை, காங்கிரசு மிகவும் வக்கிரமாகப் பயன்படுத்திக் கொண்டது.

இது குஜராத் சூழ்நிலையைக் கணக்கில் கொண்டு காங்கிரசு வகுத்த தேர்தல் தந்திரம் மட்டுமல்ல. காங்கிரசே ஒரு மிதவாத இந்துத்துவக் கட்சிதான். அயோத்தி பிரச்சினைக்கு அடிக்கொள்ளியாக இருந்த ராஜீவ் காந்தி முதல், இன்று சேதுக் கால்வாய் விவகாரத்தில் பாரதிய ஜனதாவிடம் சரணடைந்த சோனியா காந்தி வரை இதற்குச் சான்றுகள் பல உண்டு. 2002 இனப்படுகொலையின் குற்றவாளிகளைச் சட்டபூர்வமாகத் தண்டிப்பதற்கு, ஒரு துரும்பைக் கூட காங்கிரசு எடுத்துப் போட்டதில்லை என்பது மட்டுமல்ல, கடந்த 5 ஆண்டுகளில் இந்த வழக்குகளை முடக்குவதிலும், மைய அரசு மோடிக்கு துணை நின்றிருக்கிறது என்பதே உண்மை.

எனவே பெயரைக் கூடக் குறிப்பிடாமல், “மரண வியாபாரி’ என்று தனது தேர்தல் பிரச்சாரத்தில் சோனியா குறிப்பிட்டாரே, அது மட்டும்தான் மோடியின் மீது காங்கிரசு தொடுத்த “அதிபயங்கரத் தாக்குதல்’! இதற்கு மோடி கொடுத்த பதிலடிதான், மோடிக்கும் முகமூடிகளுக்குமிடையிலான உறவை நமக்கு விளக்குகிறது.

“”5 கோடி குஜராத் மக்களை “மரணவியாபாரிகள்’ என்கிறார் சோனியா. அது உண்மையா?” – “”இல்லை.. இல்லை..”

“”சோரபுதீன் ஷேக்கை என்ன செய்ய வேண்டும்?” – “”கொல்ல வேண்டும்.. கொல்ல வேண்டும்”

“”குஜராத்தில் நடக்கக் கூடாத சம்பவங்களெல்லாம் நடந்ததாகச் சொல்கிறார்களே, அது உண்மையா?” – “”இல்லை.. இல்லை”

மேற்கூறியவையெல்லாம், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மோடி எழுப்பிய கேள்விகள். அவற்றுக்கு, கூட்டம் ஆரவாரமாக அளித்த பதில்கள். இது போன்றவையெல்லாம் எல்லாக் கூட்டங்களிலும் கட்சித் தொண்டர்கள் போடும் கூச்சல்தானே! என்று கருதிக் குறைத்து மதிப்பிட முடியாது. கூட்டம் அளித்த பதில் என்பது, குஜராத் இந்து உயர்சாதியினரிடம் உறுதியாக நிலவும் பொதுக்கருத்து. குஜராத் இந்து சமூகத்தின் பொது மனோபாவம்.

தன்மீது தொடுக்கப்பட்ட தாக்குதலை, 5 கோடி குஜராத் மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாக திசைதிருப்புவதில், மோடி எப்படி வெற்றி பெற முடிந்தது? பார்ப்பன எதிர்ப்பு, சுயமரியாதை, சாதிமறுப்பு ஆகியவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு “தமிழன்’ என்ற சொல்லைப் பெரியார் பயன்படுத்தினாரென்றால், அதன் நேர் எதிரான பொருளில் “குஜராத்தி’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறான் மோடி.

2002 தேர்தலின் போதே “இந்து’ என்ற சொல்லை, “குஜராத்தி’ என்ற சொல்லைக் கொண்டு தந்திரமாக மாற்றீடு செய்துவிட்டான் மோடி. 2002 இனப்படுகொலையைத் தொடர்ந்து, உலகமே இந்து பாசிஸ்டுகளைக் காறி உமிழ்ந்தபோது, தனது தேர்தல் பிரச்சாரத்துக்கு மோடி வைத்த பெயர் “குஜராத் கவுரவ யாத்திரை’. “”கர்வ் சே கஹோ ஹம் ஹிந்து ஹை” என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் முழக்கம், “குஜராத்தி கர்வமாக மாற்றப்பட்டு விட்டது. முஸ்லிம்கள் அந்நியர்கள்’ என்ற உட்கிடையான பொருளைக் கொண்ட இந்த குஜராத்தி இனவாதம், இந்து பாசிச மனோபாவத்தைத் தன் இதயமாகக் கொண்டிருக்கிறது.

“”சோரபுதீன் ஷேக் என்ற கிரிமினலை என்ன செய்யவேண்டும்?” என்று கூட்டத்தைப் பார்த்து மோடி எழுப்பிய கேள்வி

“”முஸ்லிம் = கிரிமினல், முஸ்லிம் = பயங்கரவாதி” என்ற கருத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டது.

“”கொல்ல வேண்டும்” என்ற கூட்டத்தின் கூச்சல், 2002 இனப்படுகொலைக்கு “சங்கேத மொழி’யில் கூட்டம் வழங்கிய அங்கீகாரம்.

அரசாங்கம், போலீசு, நீதிபதிகள் மட்டுமல்ல, “”மொத்த இந்து சமுதாயமே எங்கள் பின்னால் இருந்தது,” என்று தெகல்கா நிருபரிடம், இந்து பாசிஸ்டு கிரிமினல்கள் அளித்த வாக்குமூலத்தின் பொருள், இதுதான்.

2002 இனப்படுகொலைக்காக குஜராத்தின் இந்துப் பொதுக்கருத்து, கடுகளவும் வருந்தவில்லை, என்றே குஜராத்தின் எல்லா சமூகவியலாளர்களும், குறிப்பிடுகிறார்கள். “கோத்ரா சம்பவம்’ முஸ்லிம்கள் நடத்திய திட்டமிட்ட தாக்குதல், என்று நம்பியதால் உருவான பொதுக்கருத்து அல்ல. “”நாங்கள் ஒன்றும், நடந்ததை நியாயப்படுத்தவில்லை. இருந்தாலும் ஏன் அதையே திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? முஸ்லிம்கள் மட்டும்தான் இந்த சமூகத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? டெல்லி சீக்கியர் படுகொலையின் குற்றவாளிகளைத் தண்டித்து விட்டார்களா?” என்று அடுக்கடுக்காக எதிர்க் கேள்வி கேட்டு, இறுதியில் படுகொலையை நியாயப்படுத்துவதில் வந்து முடிக்கிறார்கள், இந்து நடுத்தர வர்க்கத்தினர். இவர்களில் “மிகவும் நல்லவர்கள்’ என்று கூறப்படுபவர்கள் கூட “”2002ஐ மறந்து விடுங்கள்” என்று அறிவுரை கூறுகிறார்கள். “மறப்பதா? வேண்டாமா? என்பதை பாதிக்கப்பட்ட மக்கள்தான் முடிவு செய்ய முடியும்’ என்ற எளிய நியாயம் கூட உரைக்காத அளவிற்கு, இந்துப் பெரும்பான்மையினர் மத்தியில் அங்கே “சகஜநிலை’ திரும்பியிருக்கிறது.

மறக்க மறுத்தால்? மீண்டும் சகஜ நிலை குலையும். தெகல்காவின் அம்பலப்படுத்தல்கள் வெளியானவுடனே, மீண்டும் ஒரு தாக்குதல் தொடங்கிவிடுமோ? என்று அகதி முகாம்களில் இருந்த முஸ்லிம்கள் அடைந்த அச்சம் இதற்குச் சான்று கூறுகிறது.

இத்தகைய சகஜ நிலையையும் அமைதியையும் நிலைநாட்டியிருப்பதே, இப்போது மோடியின் சாதனையாகி விட்டது.

“”பாதுகாப்பு இல்லாமல், வளர்ச்சி எப்படி இருக்க முடியும்?” என்று கேட்கிறார் மோடி. யாரிடமிருந்து பாதுகாப்பு? என்ற கேள்வியை குஜராத் எழுப்பவில்லை. 2500 பேரைக் கொன்று போட்ட பிறகும், சிறு சலசலப்போ மும்பையில் நடந்ததைப் போன்ற பயங்கரவாத எதிர்த்தாக்குதலோ இல்லாமல், குஜராத் இந்து சமூகத்தை, குறிப்பாக அதன் முதலாளிகளையும், வணிகர்களையும் பாதுகாத்திருக்கிறார் அல்லவா, அந்தப் பாதுகாப்பைத்தான் கூறுகிறார் மோடி!

மறுகாலனியாக்க வளர்ச்சித் திட்டங்களால், நாடே நாலுகால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருப்பதாகவும், பயங்கரவாதமும் தீவிரவாதமும்தான் இந்த வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகவும், மன்மோகன் சிங் வழங்குகின்ற சித்திரம், பன்னாட்டு முதலாளிகள் நலனையும், இந்தியத் தரகுமுதலாளிகளின் நலனையுமே பிரதிபலிக்கிறது. மோடியும் அதையேதான் கூறுகிறாரெனினும், குஜராத்தின் குறிப்பான பின்புலத்தில், “ஆளும் வர்க்கத்துக்கு வழங்கப்படும் பாதுகாப்பிலிருந்து, இந்துக்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு பிரிக்கவொண்ணாததாகி விடுகிறது.’ அதாவது, “எது ஆளும் வர்க்கத்தின் நலனோ? அதுதான் இந்துக்களின் நலன் என்ற கருத்து அதன் வர்க்கரீதியான அர்த்தத்திலும், குஜராத் மக்களின் மனதில் பதியவைக்கப் பட்டிருக்கிறது.

“”விமான நிலையத்துக்கே கார்களை அனுப்பி வைத்து, தொழிலதிபர்களை மகாராஜாக்களைப் போல வரவேற்கும் ஒரே முதல்வர், மோடி மட்டும்தான்” என்று கூறி, மோடியின் வெற்றியைக் கொண்டாடினார் ஒரு இந்தியப் பெருமுதலாளி. “”குஜராத் சாதித்திருப்பதையும், சாதிக்கவிருப்பதையும் எஞ்சியுள்ள இந்தியா ஒருக்காலத்திலும் இனி சாதிக்க முடியாது” என்று கூறி மோடியின் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள், வெளிநாட்டில் குடியேறிய குஜராத்திகள்.

இவர்களின் இந்தக் கொண்டாட்டத்துக்கு அர்த்தமில்லாமல் இல்லை. போராட்டங்களோ எதிர்ப்புகளோ இல்லாமல், சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவியிருக்கும் மாநிலம் குஜராத். சி.பொ.ம. சட்டத்தை 2006இல் மைய அரசு கொண்டுவருவதற்கு முன்னர், 2004லேயே குஜராத்தில் அச்சட்டத்தைக் கொண்டு, வந்தவர் மோடி. “அடானி குழுமம்’ என்ற தரகு முதலாளிக்கு, சதுர கெஜம் 50 பைசா விலையில் (சதுர அடி 5 காசு) 33,000 ஏக்கர் நிலத்தை சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக விற்றிருக்கிறார் மோடி. அதை சதுர கெஜம் 1200 ரூபாய்க்கு விற்று, இந்த நில விற்பனை மூலம் மட்டுமே 20,000 கோடி ரூபாயை இலாபம் ஈட்டியிருக்கிறது அடானி குழுமம். சி.பொ.மண்டலத்தால், வாழ்க்கை இழந்த கூலி விவசாயிகளுக்கோ அங்கே எவ்வித நிவாரணமும் வழங்கப்படுவதில்லை. இந்திய மக்கள்தொகையில் 5% உள்ள குஜராத், இந்திய பங்குச்சந்தையின் 30 சதவீதத்தைக் கையில் வைத்திருக்கிறது. அதே குஜராத் கல்வியிலும், ஆரம்ப மருத்துவத்திலும் பின்தங்கியிருக்கிறது.

சராசரி தனிநபர் வருமானத்தில், குஜராத்திற்கு இந்தியாவிலேயே 4வது இடம். மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிலோ 15வது மாநிலமாக இருக்கிறது குஜராத். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 47% பேர் ஊட்டச்சத்துக் குறைவினால் எடை குறைந்து, சூம்பிக் கிடக்கின்றனர். தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களில், முதல் 3 இடங்களிலேயே குஜராத் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தத் தொழில் மயமாக்கத்தினால் வெளியேற்றப்படும் பழங்குடிகளும் தலித் மக்களும், எவ்வித நிவாரணமும் இல்லாமல் கிராமப்புறங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். “சூப்பர் ஹைவே’க்கள் எனப்படும் சாலைகள் குஜராத்தில் இருக்கின்றன; ஆனால், அந்தச் சாலைகளுக்குச் சுங்கவரி செலுத்தப் பணமில்லாமல், சாலையோரமாக ஒட்டகத்தில் பயணம் போகிறார்கள், மக்கள்.

மறுகாலனியாக்க வளர்ச்சித் திட்டங்களால் தீவிரமடைந்திருக்கும் இத்தகைய ஏற்றத்தாழ்வுகள், சுரண்டப்படும் மக்களிடம் கலக உணர்வைத் “தானே’ தோற்றுவித்து விடுவதில்லை. தேர்தல் ஆதாயத்துக்காகக் கூட, காங்கிரஸ் கட்சி இந்த வர்க்க முரண்பாடுகளை அம்பலப்படுத்துவதில்லை. ஆளும் வர்க்கநலனைப் பேணுவதில் அந்த அளவுக்கு ஒன்றியிருக்கும் பாரதிய ஜனதாகாங்கிரஸ் ஆகிய கட்சிகள் மட்டுமே, அரசியல் அரங்கில் செல்வாக்கு செலுத்துவதால், மக்களின் அரசியல் கண்ணோட்டமும் ஆளும் வர்க்கம் விதிக்கும் வரம்புகளைத் தாண்டுவதில்லை. வர்க்க ஒடுக்குமுறைக்கும் இந்துத்துவ ஒடுக்குமுறைக்கும் இடையிலான உறவுக்கு குஜராத்தில் தெளிவாக அடையாளம் காணத்தக்க பல வேர்கள் உள்ளன.

தொழிற்சங்க இயக்கத்தை முளையிலேயே கருக்கி, முதலாளிகளைத் தம் அறங்காவலர்களாகப் பார்ப்பதற்கு உழைக்கும் மக்களைப் பழக்கிய காந்தியம், வர்க்க ஆதிக்கத்துடன் சாதி ஆதிக்கத்தையும் மறைமுகமாக உறுதிப்படுத்தியது. 1980களில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக இந்தியாவிலேயே முதன்முதலாகப் போராட்டம் நடத்திய மாநிலம் குஜராத் என்பதும், அந்தப் போராட்டத்தின் முன்னணித் தலைவர்களில் மோடியும் ஒருவர் என்பதும் அந்த மாநிலத்தில் நிலவும் “சாதி ஆதிக்க’ மனோபாவத்தைப் புரிந்து கொள்ள உதவும் வரலாற்றுச் சான்றுகள். மலம் அள்ள மறுத்த குற்றத்துக்காக, 80களில் தலித்மக்கள் மீது, கட்டுப்பாடாக சமூகப் புறக்கணிப்பு நடத்திய மாநிலமும் குஜராத் தான். “மலம் அள்ளுவதைக் கூட, ஒரு தியானமாகச் செய்யமுடியும்’ என்று மோடி பேச முடிவதற்கான காரணம் இங்கே இருக்கிறது.

அன்று இட ஒதுக்கீட்டு எதிர்ப்பின் தாக்குதல் இலக்காக தலித்துகள். இன்று குஜராத் கவுரவத்தின் தாக்குதல் இலக்காக முஸ்லிம்கள். இதில் தலித்துகளும் பழங்குடி மக்களும் இந்துத்துவத்தின் காலாட்படையாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் புதிய முன்னேற்றம்.

மறுகாலனியாக்க வளர்ச்சியை “உடலாக’வும், இந்துத்துவத்தை அதன் “ஆன்மா’வாகவும் ஒருங்கிணைக்க முடிந்தததில்தான், மோடியின் வெற்றி அடங்கியிருக்கிறது. சந்தைக் கடுங்கோட்பாட்டு வாதமும், மதக் கடுங்கோட்பாட்டு வாதமும் இணையும் புள்ளி இது. தனியார்மய ஆதரவு, தொழில் வளர்ச்சி, பங்குச் சந்தை, சிறு வணிகம் என்று தமது வர்க்க நலனைப் பார்க்கவோ ஏங்கவோ பழகியிருக்கும் குஜராத் சமூகத்தைப் பொருத்தவரை, “மதச்சார்பின்மை’ என்பது அதிக பட்சம் ஒரு அறக் கோட்படாக மட்டுமே இருக்க இயலும்.

ஆனால், மதச்சார்பின்மை என்பது வெறும் அறம் சார்ந்த விழுமியம் அல்ல. அது ஒரு அரசியல் கோட்பாடு. ஜனநாயகத்துக்கான போராட்டங்களின் மூலம் மட்டும்தான், மதச்சார்பின்மையைத் தனது பண்பாடாக ஒரு சமூகம் கிரகித்துக் கொள்ள இயலும். ஆளும் வர்க்க அரசியலிலும், அரசியலற்ற வணிக மனோபாவத்திலும் ஊறப்போடப்பட்ட ஒரு சமூகம், பாசிசத்தைத் தலை வணங்கி ஏற்றுக் கொள்வது தவிர்க்க இயலாதது.

தாராளவாதக் கொள்கை அளிக்கும் நவீன தொழில் வளர்ச்சியும், கல்வியும், பண்பாடும், தாராளவாத (liberal) விழுமியங்களை உருவாக்கி விடுவதில்லை. மாறாக, பழைமைவாதத்தையும், சுயநலத்தையும், ஆணவத்தையும், பாசிசத்தையும் மட்டுமே அவை வளர்க்கின்றன என்பதற்கு குஜராத்தும், குஜராத்தின் பாசிசத்தை டாலர் ஊற்றி வளர்க்கும் வெளிநாட்டில் குடியேறிய இந்தியர்களும், சான்றாக இருக்கிறார்கள்.

மோடியின் முகமூடிப் பிரச்சாரத்தைப் பார்த்து விட்டு, இது, “இந்துத்துவா’ அல்ல “மோடித்துவா’ என்கிறார்கள், சில பத்திரிகையாளர்கள். பாசிசம் தனியொரு கொள்கையாக இருப்பதில்லை. இட்லர், முசோலினி, அத்வானி, மோடி போன்ற பாசிஸ்டுகளின் வழியாகத்தான் அது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. மோடி முகமூடி வருவதற்கு முன்னால், மோடி ஆணுறை வந்துவிட்டது. அரசு விநியோகிக்கும் ஆணுறைகளில் கூடத் தன்னுடைய படத்தை அச்சிட்டிருக்கிறார் மோடி. கேட்பதற்கே அருவருப்பாகத்தான் இருக்கிறது, எனினும் ஆணுறைகளில் அச்சிடத்தக்க ஆண்மகனாக, குஜராத்தின் இந்துப் பெரும்பான்மை, மோடியைக் கருதியிருக்கிறது என்பது, அதைக் காட்டிலும் அருவருக்கத்தக்கதாக இருக்கிறது.

தெகல்கா நிருபரிடம், “பாபு பஜரங்கி’ என்ற இந்துத்துவக் கொலைகாரன் வியந்து கூறிய சொற்களை இங்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள். “”மார்த் ஆத்மி ஹை!” ஆம்பிளைச் சிங்கம்யா! இந்தச் சொல்லின் வழியே தெறிக்கும் பன்முகம் கொண்ட பொருள், “குஜராத்தின் இந்துப் பெரும்பான்மை மோடியைத் தெரிவு செய்தது ஏன்?’ என்பதை விளக்குகிறது.

···

அந்த முகமூடி, மோடிக்கும், குஜராத்தின் இந்துப் பெரும்பான்மைக்கும் இடையே ஏற்படுத்தியிருந்த “வலிமையான பிணைப்பின்’ பொருளும் விளங்குகிறது.
· மருதையன்

நன்றி : புதிய கலாச்சாரம்