• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,814 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

கொலைகார டௌ கெமிக்கல்ஸ் தயவில் இலண்டன் ஒலிம்பிக்ஸ்!

கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, அவர்களின் குடும்பங்களுக்குமான கணக்கை நேர் செய்துவிட்டு ஒலிம்பிக் அரங்கின் பாதுகாப்பை பற்றி கவலைப்படட்டும், டௌ கெமிக்கல்ஸ்.

_

2012ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் லண்டனில் நடக்கப்போவது தெரிந்த விஷயம்தான். கண்கவர் அம்சமாகவும், அதே சமயம் பாதுகாப்பிற்காகவும் ஒலிம்பிக் அரங்கைச் சுற்றி ஒரு மூடுதிரை அமைக்கப்பட உள்ளது. அந்த திரைக்காக பிரத்யேக பிசின்கள் உபயோகப்படுத்த உள்ளது. மற்ற திரைகளோடு ஒப்பிடும்போது, இந்த கலைநயமிக்க திரை 35 சதவீதம் லகுவானது. முக்கியமாக, அதில் உள்ள கார்பனின் அளவும் குறைவானது. மேலும், அந்த திரையின் முக்கிய அம்சமே,  மறுசுழற்சியால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை உள்ளடக்கியிருப்பதுதான். அது மட்டுமா? அந்த திரையை தொங்க விடுவதற்கான பொருட்கள் கூட மறுசுழற்சியாலானதுதான்.

அந்த திரையைச் செய்யும்போது, வெளியேறும் மாசுப்பொருட்களை குறைப்பதற்குக்கூட கவனமெடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்காகவே, புற-ஊதா கதிர்களை நிவர்த்தி செய்யும் மைதான் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது.  லண்டன் ஒலிம்பிக் அரங்கம் எந்த சுழலையும் தாக்குபிடித்து நிற்க வேண்டுமென்பதற்காக இத்தனை மெனக்கெடல்கள். இதனை அந்த திரை கச்சிதமாக செய்துமுடிக்கும்.

விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் அமைச்சர்களை அசத்தியுள்ள இந்த திரை பார்வையாளர்களையும் பரவசமடையச் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த திரை மட்டுமல்ல, திரையை தயாரிப்பது யார் என்ற செய்தியே நம்மை பரவசமடையச் செய்கிறதே! ஆம், மக்கள் மீதும் சுற்றுச்சூழல் மீதும், பூவுலகின் மீது இவ்வளவு அக்கறையோடு இந்த திரையை டௌ கெமிக்கல்சை தவிர வேறு யார் செய்யக்கூடும்?

கொலைகார டௌ கெமிக்கல்ஸ் தயவில் இலண்டன் ஒலிம்பிக்ஸ்!டௌ கெமிக்கல்ஸ் – யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கியிருக்கும் நிறுவனம் என்று சொன்னால் தரம் எளிதில் விளங்கும். அப்படியும் விளங்கவில்லையென்றால், உங்கள் நினைவுச்செல்களைத் தேடிப்பாருங்கள். பிறந்து சில மாதங்கள் கூட ஆகியிராத குழந்தையின் முகம், மண்ணில் புதையுண்ட அந்த முகத்தை வருடும் கரங்கள் – நினைவுக்கு வருகிறதா போபால் விஷ வாயுக்கசிவு! ஆம், குப்பைகளைப் போல மண்ணுக்குள் தள்ளி புதைக்கப்பட்ட பிஞ்சுக்குழந்தைகளுள் ஒன்று அது.

இந்த படுகொலைகள் நடந்து 27 ஆண்டுகளுக்கு முடிந்துவிட்டன.  யூனியன் கார்பைடு நிறுவனத்திலிருந்து வெளியேறிய நச்சு வாயுக்கசிவு 23000க்கும் அதிகமானோரை காவு கொண்டது. அந்த நஞ்சும், நச்சுக்காற்றும் மாண்டு போனவர்களோடு மட்டும் நின்றுவிடவில்லை. இன்றும் போபாலில் குழந்தைகள் மரபணு மாற்றத்துடன் மண்டைகள் வீங்கி, விழிகள் பிதுங்கி, கை கால்கள் வளைந்து  ஊனத்துடன் பிறக்கின்றன,. கருவிலேயே அழிந்தும் போகின்றன.

அன்று நஞ்சினால் பாதிக்கப்பட்டவர்கள், இன்றும் நடைபிணமாகவே வாழ்கின்றார்கள். நடந்து முடிந்த அந்த படுகொலைக்கு நீதி வழங்கப்படவே இல்லை. அதை விபத்து என்று சொல்லி  வழக்கை இழுத்து மூடியது, இந்திய நீதிமன்றம். இந்த ரத்தக்கறை படிந்த கைகளோடுதான் டௌ கெமிக்கல்ஸ் நிறுவனம் ஒலிம்பிக் அரங்கின் பாதுகாப்பு கவசத்தை தயாரிக்கப் போகிறது என்பது கொடூரமாகக இல்லையா?

ஒலிம்பிக் அரங்கு தயாரிப்பில் டௌ கெமிக்கல் நிறுவனம் பங்கேற்பதை எதிர்த்து பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக 5000 பேர் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்திய விளையாட்டு வீரர்கள் சம்மேளனமும் தனது எதிர்ப்பை காட்டியது. விளையாட்டில் கலந்துக்கொள்ளாமல் வெளிநடப்பு செய்வதாகவும் தெரிவித்திருக்கிறது.

இதற்கெல்லாம்  டௌ கெமிக்கல்ஸ்  நிறுவனத்தின் பதில் என்ன? போபால் விஷ வாயு கசிவின்போது யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கும் டௌவுக்கும் எந்த சம்ப்ந்தமும் இல்லையென்றும், 1989-ல் யூனியன் கார்பைடு நிறுவனம் மக்களுக்கு போட்ட பிச்சைக்காசுதான் நிவாரணம் என்று முடித்துக்கொண்டது.

போபால் விஷவாய் படுகொலை நிறுவனத்தை வாங்கியதோடு மட்டுமல்லாமல் டௌ கெமிக்கல்சின் வரலாறே படுகொலைகளோடு சம்பந்தப்பட்டதுதான். வியட்நாமில் மக்கள் மீது வீசுவதற்கு நாபாம் குண்டுகளையும், வயல்வெளிகள் மீது வீசுவதற்கு ஆரஞ்சு குண்டுகளையும் தயாரித்து வழங்கியது டௌதான். அமெரிக்காவின் பேரழிவு ஆயுதங்களை வழங்குவது இந்த நிறுவனம்தான். இந்த நிறுவனம்தான் இன்று ஒலிம்பிக் அரங்கத்துக்காக 11 மில்லியனில் திரையை தயாரித்துக்கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலை பற்றியும், மக்களின் பாதுகாப்பைப் பற்றியும் முதலைக்கண்ணீர் விடுகிறது.

போபாலில், இன்றும யூனியன் கார்பைடு நிறுவனத்தின் கழிவுகள் அகற்றப்பட வில்லை. எந்த பாதுகாப்புமின்றி மக்கள் அந்த தொழிற்சாலையின் அருகில்தான் வசிக்கின்றனர். அசுத்தமான தண்ணீரைத்தான் உபயோகப்படுத்துகின்றனர். சரியான மருத்துவ வசதிகளின்றி, கிட்டதட்ட 1 லட்சத்துக்கும் அதிகமானோர், நோய்வாய்ப்பட்டும், பாதிக்கப்பட்டும் வேறுவழியின்றி வாழ்க்கையை தள்ளிக்கொண்டிருக்கின்றனர். எனில், யூனியன் கார்பைடு நிறுவனத்தின் சொத்தில் மட்டும்தானா டௌவுக்கு பங்கு? கழிவுகளை அகற்றுவதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான நிவாரணத்தையும் கொடுப்பதும் டௌவுக்கு கடமையில்லையா?

கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, அவர்களின் குடும்பங்களுக்குமான கணக்கை நேர் செய்துவிட்டு ஒலிம்பிக் அரங்கின் பாதுகாப்பை பற்றி கவலைப்படட்டும், டௌ கெமிக்கல்ஸ். அதுவரை, கொலைகார கரங்களிலிருந்து கண்ணுக்கினிய திரையை போர்த்திக்கொண்டு ஒளிர்வதை விட, திரையற்ற ஒலிம்பிக் அரங்கமே அழகு மிக்கது!

______________________________________________________

–    ஜான்சி

ஒலிம்பிக் தங்கம் – பித்தளைச் சுதந்திரம் !

தொடர்புடைய பதிவுகள்

ஒலிம்பிக் தங்கம் – பித்தளைச் சுதந்திரம் !

யாருக்குச் சுதந்திரம்? செல்பேசி மலிவாக புழங்குவதாகச் சொல்லப்படும் நாட்டில் ஐம்பது காசு தபால் கார்டு வாங்கும் மக்களும் அதிகமிருக்கின்றனர். பெருநகரங்களில் கிளைபரப்பும் பிட்சா கார்னர்களுக்கு மத்தியில்தான் இரவு உணவில்லாமல் தூங்கச்செல்லும் மக்கள் பலகோடியில் வாழ்கின்றனர்.

62ஆவது சுதந்திர தினத்தின் கொண்டாட்டங்கள் அதிகாரப்பூர்வமாக நடத்தப்படுகின்றன. அதிகாரத்தின் வழி சிந்திக்கப் பழகியிருக்கும் மக்களும் பெட்டிக்கடையில் துளிர்விடும் தேசியக் கொடிகளை வாங்கிச் செல்கின்றனர். பள்ளிகளிலும், அரசு அலுவலகங்களிலும் அது கண்டிப்பாக அனுசரிக்கப்பட வேண்டிய ஒரு சடங்கு. குழந்தைகளுக்கோ அது மிட்டாய் கிடைக்கும் தினம். ஊடகங்களில் சுதந்திர தினத்திற்காக விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் தேசியப் பெருமிதத்தின் முகமூடியை வைத்து முத்திரைப் பொருட்களை சந்தைப்படுத்துகின்றன. சிறப்பு நிகழ்ச்சிகளில் சுதந்திர தினத்தின் அருமை பற்றி சினிமா நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். வானொலியிலும், வானொளியிலும் ரஹ்மானின் வந்தேமாதரம் கீறல் விழாமல் திரும்பத் திரும்ப ஒலிக்கிறது.

யாருக்குச் சுதந்திரம்? செல்பேசி மலிவாக புழங்குவதாகச் சொல்லப்படும் நாட்டில் ஐம்பது காசு தபால் கார்டு வாங்கும் மக்களும் அதிகமிருக்கின்றனர். பெருநகரங்களில் கிளைபரப்பும் பிட்சா கார்னர்களுக்கு மத்தியில்தான் இரவு உணவில்லாமல் தூங்கச்செல்லும் மக்கள் பலகோடியில் வாழ்கின்றனர். எல்.சி.டி தொலைக்காட்சி துல்லியமாகத் தெரியும் சந்தையில்தான் வானொலிப் பெட்டி கூட வாங்க வழியில்லாத மக்கள் பொழுதைக் கழிக்கின்றனர். அதிகரித்துவரும் ஆடம்பரக் கார்களின் அணிவகுப்பில் சைக்கிள்களின் விற்பனை குறையவில்லை. கணினிப் புழக்கம் கூடிவரும் நாளில் கால்குலேட்டர் கூட இல்லாமல் கைக்கணக்கு போடுபவர்கள்தான் அதிகம்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விளைநிலங்களை அரசின் உதவியுடன் வளைத்துப்போடுவதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சுதந்திரம். வாழ்வாதாரமான விளைநிலங்கள் கைப்பற்றப்படுவதை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுக்கோ குண்டடிபட்டுச் சாவதற்கு சுதந்திரம். கச்சா எண்ணெயின் விலை உயர்வை வைத்து உள்நாட்டில் கொள்ளையடிப்பதற்கு அம்பானிக்கு சுதந்திரம். வாங்கிய கந்துவட்டிக் கடனை அடைக்கமுடியாமல் தற்கொலை செய்து கொள்வது விவசாயிகளுக்கு இருக்கும் சுதந்திரம். மத்திய அரசிடமிருந்து மானியம் பெறுவது உரத்தொழிற்சாலைகளின் சுதந்திரம். அதிக விலையில்கூட உரங்கள் கிடைக்காமல் அல்லாடுவது விவசாயிகளின் சுதந்திரம். கல்வியை வணிகமாக மாற்றி சுயநிதிக் கல்லூரிகளை ஆரம்பிப்பதில் முதலாளிகளுக்கு சுதந்திரம். அரசுப்பள்ளிகள் மூடப்படுவதால் எழுத்தறிவிலிகளாக இருப்பது உழைக்கும் மக்களின் சுதந்திரம்.

அப்பல்லோ முதலான நட்சத்திர மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு மேட்டுக்குடியினருக்கு சுதந்திரம். அரசு மருத்துவமனைகளில் எந்த வசதியுமில்லாமல் சித்திரவதைப் படுவது சாதாரண மக்களின் சுதந்திரம். அரசிடமிருந்து எல்லாச் சலுகைகளையும் பெற்று தொழில் துவங்குவதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சுதந்திரம். அதே நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளி என்ற பெயரில் அடிமையாக வேலைசெய்வது தொழிலாளர்களின் சுதந்திரம். பங்குச்சந்தையில் சூதாடி ஆதாயமடைவதற்கு பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கும், உள்நாட்டுத் தரகர்களுக்கும் சுதந்திரம். தமது ஓய்வூதியத்தை சிட்பண்ட்டில் போட்டு ஏமாறுவதில் நடுத்தர வர்க்கத்திற்கு சுதந்திரம். விண்ணைத் தொடும் ரியல் எஸ்டேட் விலை உயர்வினால் கொள்ளை இலாபம் பார்ப்பதில் முதலாளிகளுக்கு சுதந்திரம். ஒண்டுக் குடித்தனத்தில் கூட குறைவான வாடகைக்கு வீடு கிடைக்காமல் அவதிப்படுவது பெரும்பான்மை மக்களின் சுதந்திரம். உயிர்காக்கும் மருந்துகளை பலமடங்கு விலையில் விற்பதற்கு மருந்து நிறுவனங்களுக்கு சுதந்திரம். மருந்து வாங்க முடியாமல் உயிரைத் துறப்பது ஏழை மக்களின் சுதந்திரம்.

இந்த முரண்பாடுகளின் அளவுகோலே உண்மையான சுதந்திரத்தின் தரத்தை நிர்ணயிக்கும் போது நாட்டு மக்களின் வாழ்நிலையோ சுதந்திரத்தின் பொருளை விளக்குகிறது. ஆங்கில ஏகாதிபத்தியத்திடமிருந்து இந்தியாவின் ஆட்சியதிகாரம் தரகு முதலாளிகளிடம் மாற்றித் தரப்பட்டது. இந்த அதிகார மாற்றத்தையே சுதந்திரம் என்று கொண்டாடுவது ஏமாளித்தனமில்லையா?

இந்த ஆண்டு சுதந்திர தினத்தின் தேசபக்தி பெருமிதம் கொஞ்சம் சுருதி கூடியிருப்பதற்கு காரணம் அபினவ் பிந்த்ரா வாங்கிய தங்கப்பதக்கம். துப்பாக்கிச் சுடும் விளையாட்டில் அபினவ் தங்கம் வென்ற அன்று தேசபக்தி தனது உச்சத்தைத் தொட்டது. செல்பேசியின் குறுஞ்செய்திகள் இலட்சக்கணக்கில் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டன. செய்தி ஊடகங்களில் அபினவ் கதாநாயகனாக வலம் வந்தார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த தங்கம், 112 ஆண்டுகளுக்குப் பிறகு தனிநபர் பிரிவில் கிடைத்த முதல் தங்கப்பதக்கம் என்று புள்ளிவிவரங்களின் படியும் அபினவ் வியந்தோதப்பட்டார். அரசாங்கங்கள் கோடிகளிலும் இலட்சங்களிலும் பரிசுப் பணத்தை அள்ளி வழங்கின. முத்தாய்ப்பாக அபினவின் தந்தை ஏ.எஸ். பிந்த்ரா 200 கோடி ரூபாய் மதிப்பில் டேராடூனில் கட்டிவரும் அபினவ் இன் எனும் நட்சத்திர ஓட்டலை மகனுக்கு பரிசாக வழங்கினார்.

ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற எவருக்கும் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் இத்தனை காஸ்ட்லியான பரிசு கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. அபினவோடு போட்டியிட்டு வெள்ளிப்பதக்கம் வென்ற சீனவீரரையும், வெண்கலம் வென்ற பின்லாந்து வீரரையும் எவரும் சீண்டியிருக்க மாட்டார்கள். அல்லது இந்தப் போட்டிக்காக அபினவ் செலவழித்த தொகையினை அவர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அபினவ் பயிற்சி எடுப்பதற்காக தனது மாளிகை வீட்டிலேயே குளிர்பதன வசதியோடு ஒரு துப்பாக்கி சுடும் பயிற்சிக்கூடத்தை தந்தை பிந்த்ரா கட்டிக்கொடுத்திருக்கிறார். இந்திய அரசு அளித்த பயிற்சியாளர் போதாது என்று வெளிநாட்டு பயிற்சியாளரை தனது சொந்தச் செலவில் அபினவ் அமர்த்திக்கொண்டார். இதுபோக மாதக்கணக்கில் வெளிநாடு சென்றும் பயிற்சி எடுத்துக்கொண்டார்.

ஆக துப்பாக்கி சுடும் பயிற்சிக்கே அபினவுக்கு சில கோடிகள் தேவைப்பட்டதும், அந்தக் கோடிகளைப் பெறும் வசதி அவரது பின்னணியில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இறைச்சியைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்வது, ஓட்டல்கள், வீடியோ கேம்ஸ் தயாரிப்பு, என்று பல தொழில்களை தந்தை பிந்த்ரா நடத்தி வருகிறார். பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தில் இருக்கும் அபினவின் மாளிகையில் மட்டும் 100 பணியாட்கள் வேலை செய்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டில் பட்டப்படிப்பை முடித்து வீடியோ கேம்ஸ் மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் அபினவுக்கு திறமையின் காரணமாக மட்டும் பதக்கம் கிடைக்கவில்லை. அவரது முதலாளியப் பின்னணிதான் தங்கம் வாங்கித் தந்திருக்கிறது. அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் வாழும் பணக்காரர்களின் பிள்ளைகள்தான் விளையாட்டிலும், அரசியலிலும், தொழில் நடத்துவதிலும் முன்னணியில் இருக்கின்றனர்.

இந்தியாவின் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் துணைக் காப்டனான யுவாராஜ் சிங்கும் இதைப்பொன்றதொரு பின்னணியைச் சேர்ந்தவர்தான். இவரது தந்தை ஜெசிகாலால் கொலைவழக்கில் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர். இம்மாநிலங்களைச் சேர்ந்த இம்மேட்டுக்குடியினர் சாதி ஆதிக்கத்திற்கும், வர்க்கச் சுரண்டல்களுக்கும் பெயர் பெற்றவர்கள். எந்த அரசியல் கட்சியானாலும் இவர்களைச் சுற்றியே செல்வாக்கைத் திரட்ட முடியும். இவர்களது பண்ணைவீடுகளின் வரவேற்பறைகளில் இன்றும் துப்பாக்கிகள் கௌரவச் சின்னமாய் அலங்கரிக்கும். அந்தக்காலத்து ஜமீன்தார்களின் இளவல்கள் வேட்டையாடி தமது வீரத்தையும், புகழையும் வெளிப்படுத்தினார்கள். இப்போது கிரிக்கெட், துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட விளையாட்டுக்களில் ஈடுபட்டு தமது குடும்பங்களுக்கு புகழ் சேர்க்கின்றனர். பார்க்க சாது போல இருக்கும் அபினவ் தனது சிறிய வயதில் வேலைக்காரரின் தலையில் பாட்டிலை வைத்து தந்தையின் ஏர் கன்னால் சுட்டுப் பழகுவாராம். குறி தவறி அந்த தொழிலாளி இறந்திருந்தாலும் அபினவ் ஒரு கொலையாளியாக தண்டிக்கப்பட்டிருக்க மாட்டார். பணக்காரர்களின் வீட்டில் இவையெல்லாம் சகஜம்தானே!

வேலையாளின் உயிரைப் பணயம் வைத்த அபினவைக் கண்டிக்காத பெற்றோர் அவனது துப்பாக்கி சுடும் ஆர்வத்தை அறிந்து கொண்டு ஊக்குவித்தனராம். இதுதான் ஒரு மேட்டுக்குடி குலக்கொழுந்து தங்கம் வென்ற கதை. இதை இந்தியாவின் பெருமிதம், நூறுகோடி மக்களின் சாதனை என்றெல்லாம் உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டாடுவதில் பயனில்லை. அபினவுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பும், வசதிகளும் எத்தனை பேருக்குக் கிடைக்கும்? உலகமயமாக்கத்தின் விளைவால் ஏழைகள் மேலும் ஏழைகளாவதும், பணக்காரர்கள் மேலும் மேலும் சொத்து சேர்ப்பதும் அதிகரித்து வரும் வேளையில் விளையாட்டு மட்டும் விதிவிலக்காகிவிடுமா? அபினவின் வெற்றி இந்தியாவில் விளையாட்டு ஆர்வத்தை உற்சாகப்படுத்தும் என்று கூறுகிறார்களே, அதன்படி ஒரு சாதரணக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் துப்பாக்கி சுடும் விளையாட்டில் விரும்பினாலும் ஈடுபட முடியுமா?

இந்தியாவில் விளையாட்டு உணர்வு கிரிக்கெட்டினாலும், அதிகாரவர்க்கத்தினாலும் வேகமாகக் கொல்லப்பட்டு வருகிறது. கால்பந்து முதலான விளையாட்டுகளில் உள்ளூர் போட்டியானாலும், உலகப் போட்டியானாலும் விதிமுறைகள் மாறுவதில்லை. ஐரோப்பிய நாடுகளில் கிளப் கலாச்சாரம் விளையாட்டை வர்த்தகமாக மாற்றியிருந்தாலும் ஆட்டத்திறன் வளர்வதில் குறைவில்லை. ஆனால் கிரிக்கெட்டில் மட்டும் டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20 ஓவர் கிரிக்கெட் என்று வைத்துக்கொண்டு ஆட்டத்திற்கொரு விதிமுறையை வைத்திருக்கிறார்கள். இது ஆட்டத்தை வளர்ப்பதற்கல்ல, ரசிகரின் மேலோட்டமான வெறியை வளர்ப்பதற்கே பயன்படுகிறது. நொறுக்குத் தீனியைச் சுவைப்பது போல கிரிக்கெட்டை ரசிப்பதும் மாறிவிட்டது. வர்த்தகத்தினால் ஒரு விளையாட்டு அழிக்கப்பட்டது என்றால் அது கிரிக்கெட்டிற்கு மட்டும் முதன்மையாய்ப் பொருந்தும். 20 ஓவர் கிரிக்கெட்டில் ஜொலித்தால் மட்டுமே தங்களது வருமானம் அதிகரிக்கும் என்பதால் வீரர்களும் தங்களை மாற்றிக் கொள்கின்றனர். விளம்பரங்களில் நடித்த நேரம் போக ஆட்டத்தில் கண்டபடி அடித்து ஆடவேண்டிய நிர்ப்பந்தத்தில் வீரர்கள் இருக்கும்போது யார் திறமை குறித்து கவலைப்படப் போகிறார்கள்?

70களில் கிளைவ் லாய்டு தலைமையில் ஆடிய உலகின் கனவு அணி ஆட்டத்திறமையெல்லாம் இனி காண்பதற்கில்லை. பழம்பெருசுகள் டெஸ்ட் கிரிக்கெட்டின் மாகமித்யங்களைக் கதைக்கும்போது நுகர்வு கலாச்சார இளைய தலைமுறையோ 20 ஓவர் கிரிக்கெட்டின் பின்னால் அலறியவாறு ஓடுகிறது. முதலாளிகளால் கிரிக்கெட் அழிக்கப்பட்டது ஒருபுறமிருக்க, கிரிக்கெட்டின் வெறிக் காய்ச்சலால் மற்ற விளையாட்டுக்களும் இந்தியாவில் அழிந்து வருகின்றன.

ஒலிம்பிக்கில் முதன்முறையாக இந்திய ஹாக்கி அணி இடம்பெறவில்லை என்பது சிலரின் கவலையாக இருக்கிறது. இருபது வருடங்களாக அதிகார வர்க்கத்தின் ஊழல் கலந்த அலட்சியத்தாலும், கிரிக்கெட்டுக்கு கொட்டி கொடுக்கும் முதலாளிகள் ஹாக்கியை கண்டு கொள்ளாததாலும் இந்த விளையாட்டு தேசிய விளையாட்டு என்ற பெருமையை என்றோ இழந்துவிட்டது. திறமை அடிப்படையில் டெண்டுல்கரை விட ஹாக்கி வீர்ர் தன்ராஜ் பிள்ளை பல மடங்கு உயர்ந்தவர். முன்கள ஆட்டத்தில் சிறுத்தைபோல சீறுவதாக இருக்கட்டும், நூறு மீட்டர் தூரத்திலும் கழுகுப் பார்வையுடன் பந்தை சகவீரருக்கு கைமாற்றிக் கொடுப்பதிலும், பந்தைக் கட்டுப்படுத்துவதிலும், மின்னல் வேகத்தில் குடைந்து செல்வதிலும் மொத்தத்தில் அவர் ஹாக்கியின் ஒரு கவிதை. ஆட்டத்தில் அவர் முன்னணியில் இருந்தபோது பல வெளிநாட்டு வீரர்கள் அவருக்கு இரசிகர்களாக இருந்தனர். இந்த வீரரை இந்தியா எப்படி நடத்தியது?

டெண்டுல்கர் மேன்ஆப்திமேட்ச் விருதுக்காக உலகின் விலையுர்ந்த காரைப் பரிசாகப் பெறும்போது, தன்ராஜுக்கு ஒரு சைக்கிள் மட்டும் பரிசாக அளிக்கப்பட்டது. டெண்டுல்கருக்கு விளம்பரங்களின் வழி கோடிகளில் வருமானம் கொட்டிய போது தன்ராஜை முதலாளிகள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இதில் ஹாக்கி என்பதால் மட்டும் பிரச்சினையில்லை. தோற்றத்திலும், பேச்சிலும் தன்ராஜ் சாதரண மனிதராகவே காட்சியளிப்பார். விளம்பரங்களில் நட்சத்திர வீரர்களின் முகங்களைப் பயன்படுத்துவதற்குத் தேவைப்படும் மேட்டுக்குடி அழகியல் டென்டுல்கரிடமும், சானியா மிர்சாவிடமும் இருக்கிறது என்றால் தன்ராஜுக்கும், பி.டி உஷாவுக்கும் அது இல்லை. ஆக ஒரு விளையாட்டு வீரர் நட்சத்திரமாக மாறுவதற்கு அவரது திறமை மட்டுமல்ல, விளம்பரங்களில் அவர்களை எப்படிப் பயன்படுத்த முடியும் என்பதும் சேர்ந்தே தீர்மானிக்கப்படுகிறது.

இவையெல்லாம் கூட பிரச்சினையல்ல, தன்ராஜ் ஆட்டத்தின் உச்சத்தில் இருக்கும்போது அவர் முன்வைத்த ஆலோசனைகளுக்காக போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டார். பஞ்சாபில் அப்பாவி சீக்கிய இளைஞர்களைக் கொன்று குவித்த கொலைகார போலீசுப் படைக்கு தலைமை வகித்த கே.பி.எஸ் கில் என்பவர்தான் இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் தலைவராக பல வருடங்கள் இருந்தார். வீரர்களை அடிமைகளாக நடத்தியதிலும், ஊழலின் மூலம் சில வீர்ர்களைச் சேர்த்ததிலும் இந்த சம்மேளனம் புகழ்பெற்றது. தற்போது இவர்களின் ஊழல் அம்பலமாகி சம்மேளனம் கலைக்கப்பட்டிருக்கிறது. இதனால் என்ன நட்டம்? தன்ராஜின் தலைமையில் இந்திய அணி பல வெற்றிகளைப் பெற்றிருக்க வேண்டியது நடக்காமல் போனதுதான். இப்படியெல்லாம் அவமானப்பட்டபோதும் தன்ராஜ் இன்னமும் விளையாட்டை நேசிக்கிறார். தன்னைப் போலச் சிறந்த வீரர்களை உருவாக்கும் முகமாக ஒரு அகாடமியை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இந்தியாவின் தேசிய விளையாட்டின் தலை சிறந்த வீரருக்கே இதுதான் கதி எனும்போது மற்ற விளையாட்டுக்களைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை.

விளையாட்டின் உணர்ச்சியை வர்த்தகம் உறிஞ்சிக்கொண்ட பின் என்ன மிஞ்சும்? காரியவாதக் கண்ணோட்டத்துடன் வாழ்வை நகர்த்திச் செல்லும் நடுத்தர வர்க்கம் தனது வாரிசுகளை டென்னீசிலும், கிரிக்கெட்டிலும், நீச்சலிலும், சதுரங்க ஆட்டத்திலும் வளர்ப்பதற்கு சில ஆயிரம் ரூபாய்களை செலவழிக்கிறது. நடுத்தர வர்க்கத்தின் இந்த மாயையை முதலாளிகள் பயன்படுத்துகிறார்கள் என்பதைத் தாண்டி இதனால் விளையாட்டு ஒன்றும் வளரப் போவதில்லை. இந்தியா ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்க வேண்டுமென்றால் அது இன்றைய விளையாட்டை ஆக்கிரமித்திருக்கும் மேட்டுக்குடியினரால் நடக்கப் போவதில்லை. அரசு பள்ளிகளில் படிக்கும் உழைக்கும் சிறார்களிடமிருந்தே அந்த வீரர்கள் தோன்ற முடியும். கடற்கரை மீனவக் கிராமங்களிலிருந்து நீச்சல் வீரர்களும், மலையில் வசிக்கும் மக்களிடமிருந்து தொலைதூர ஓட்டப் பந்தய வீரர்களும், சுமைதூக்கும் தொழிலாளிகளிடமிருந்து பளுதூக்கும் வீரர்களும், கால்பந்தை நேசிக்கும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து சிறந்த கால்பந்து வீரர்களும், அழிந்து வரும் சர்க்கஸ் கலைக்குப் பெண்களை அளிக்கும் கேரளத்திலிருந்து ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனைகளும் தோன்ற முடியாதா என்ன?

ஆயினும் இன்றைய சமூக அமைப்பு அதை சாத்தியப்படுத்தப் போவதில்லை. கல்வியிலும், விவசாயத்திலும், தொழிலிலும், சுகாதாரத்திலும் அப்புறப் படுத்தப்பட்டுள்ள உழைக்கும் மக்களிடமிருந்து வாழ்வதற்கே வழியில்லாத போது வீரர்கள் மட்டும் எப்படித் தோன்ற முடியும்? ஆம் விளையாட்டில் ஒரு புரட்சி வரவேண்டுமென்றால் அது முதலில் அரசியலில் இருந்துதான் தொடங்கமுடியும். இந்தப் பார்வை இந்தியாவுக்கு மட்டுமல்ல மூன்றாம் உலகைச் சேர்ந்த எல்லா ஏழை நாடுகளுக்கும் பொருந்தும்.

உலக மக்களை விளையாட்டின் பெயரால் ஒன்றுபடுத்தும் ஒலிம்பிக், உண்மையில் விளையாட்டு உணர்ச்சியையும், சர்வதேச உணர்வையும் வளர்க்கிறதா என்ன? நாளொரு வண்ணம் ஈராக்கில் குண்டு போட்டு அப்பாவி மக்களை அமெரிக்க இராணுவம் கொல்லும் நேரத்தில் அதிபர் புஷ் பெய்ஜிங்கில் அமெரிக்க விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தவும் செய்கிறார். ஒரு வீரர் மக்களைக் கொல்வதற்காக துப்பாக்கியைச் சுடுகிறார். மற்றொரு வீர்ர் தங்கப்பதக்கத்திற்காகச் சுடுகிறார். இதில் சர்வதேச உணர்வு எப்படி வளர முடியும்? நாடுகளை புவியியலின் எல்லைக் கோடு மட்டும் பிரிக்கவில்லை, ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்பு அரசியல்தான் உண்மையில் நாடுகளைப் பல பிரிவினைகளாக வேறுபடுத்துகின்றது. வல்லரசு நாடுகளின் இராணுவ வலிமையை அவற்றின் ஆக்கிரமிப்பு வெளிப்படுத்தும்போது சமூக வலிமையை ஒலிம்பிக் வெளிப்படுத்துகிறது. மேற்கத்திய நாடுகளின் கௌரவத்தை நிலைநாட்டுவதுதான் ஒலிம்பிக்கின் நோக்கம் என்றால் அது மிகையல்ல. ஹிட்லர் காலத்திலிருந்து இன்றைய புஷ் காலம் வரையிலும் ஒலிம்பிக் வரலாறு அதைத்தான் வழிமொழிகிறது.

ஒலிம்பிக்கின் சர்வதேச உணர்வு இதுவாக இருக்கும்போது விளையாட்டு உணர்வு மட்டும் தனியாக வளராது. பெரும் நிறுவனங்களின் வர்த்தக வலிமையில்தான் ஒலிம்பிக் ஜோதி பிரகாசிக்கிறது. வெற்றி பெறும் வீரர்கள் மனித உடலின் எல்லையற்ற ஆற்றலை வரும் சந்ததியினருக்கு கைமாற்றித் தருவதில் உவகை கொள்வதில்லை. கையெழுத்திடும் விளம்பர ஒப்பந்தங்கள்தான் அவர்களின் இலக்கு. இதன் மூலம் வீரர்கள் விளம்பர மாடல்களாகப் பரிணமிக்கின்றனர். ஒவ்வொரு முறையும் அறிமுகமாகும் புதிய தலைமுறை வீரர்கள் இந்த அலையில் அடித்துச் செல்லப்படும் போது விளையாட்டின் நோக்கம் நமத்துப் போகிறது. ஆகவே மேற்கத்திய நாடுகளில்கூட விளையாட்டு உணர்வினால் வீரர்கள் தோன்றுவதில்லை. வீரர்களைச் சிறுவர்களாக இருக்கும்போதே கண்டு கொள்வதும் பயிற்சி கொடுப்பதும் அங்கே தனியொரு தொழிலாக வளர்ந்திருக்கிறது.

இது சாதாரண மக்கள் விளையாட்டில் ஈடுபடுவதை அச்சுறுத்தும் அளவுக்கு விசுவரூபமெடுத்திருக்கிறது. இங்கே அபினவ் பிந்த்ரா தனக்கு ஏற்படுத்திக்கொண்ட வசதிகள் அங்கே சாதாரணம். பந்தயக் குதிரைகளை வளர்ப்பது போல மேற்குலகின் வீரர்கள் வளர்க்கப்படுகிறார்கள். அறிவியல் தொழில் நுட்பத்தின் உதவியுடன் ஒரு வீரனின் பலம், பலவீனங்கள், தசையின் சக்தி, குறிப்பிட்ட விளையாட்டுக்கு தேவைப்படும் சதையாற்றல், உடம்பின் நெளிவு சுளிவுகள், விளையாடும் போது அதில் ஏற்படும் மாற்றம், எடுக்கவேண்டிய உணவு, கலோரியின் அளவு, சிந்தனையின் கவனத் திறன், அத்தனையும் கணினி, உளவியல், உடலியல், நரம்பியல் முதலான நிபுணர்களின் உதவி கொண்டு வடிவமைக்கப்படுகின்றன. சொல்லப்போனால் மேற்கத்திய நாடுகளின் வீரர்களை மனிதர்கள் என்று அழைப்பதை விட வார்க்கப்பட்ட இயந்திரங்கள் என்று சொல்லலாம். இதனால் ஒரு வீரன் வெற்றி பெறுவான் என்பதைக் களத்தில் நடக்கும் போட்டி தீர்மானிப்பதை விட முன்கூட்டியே அறிவியில் தொழில் நுட்பம் தீர்மானிக்கிறது எனலாம். இத்தகைய வசதிகள் எல்லோருக்கும் கிடைக்காது எனும்போது விளையாட்டு உணர்வு மட்டும் எல்லோரிடமும் எப்படி வளரும்?

ஆனால் இந்த வசதிகள் ஏதுமின்றியே ஆப்பிரிக்க நாடுகளின் வீரர்கள் தொலைதூர ஓட்டப் பந்தயங்களில் சாதனை படைத்து வருகிறார்கள். சின்னஞ்சிறு நாடான கியுபா இதை ஒரு சமூகச் சாதனையாகவே சாதித்திருக்கிறது. அங்கே சமூகமயமாக்கப்பட்ட விளையாட்டிலிருந்து வீரர்கள் தோன்றுகிறார்கள். அமெரிக்காவின் பொருளாதார வலிமை இல்லாமலேயே குத்துச் சண்டை, வாலிபால், தடகளம் முதலியவற்றில் கியூபா வீரர்கள் சாதித்திருக்கின்றனர். அமெரிக்காவின் வர்த்தக மல்யுத்த நிறுவனங்கள் கியூபாவின் புகழ்பெற்ற குத்துச் சண்டை வீரர்களை விலைக்கு வாங்க முயன்ற போது அவ்வீரர்கள் அதை மறுத்திருக்கின்றனர். இத்தகைய முயற்சிகள்தான் மனித உடலின் ஆற்றலை விளையாட்டில் காண்பிக்க முடியும் என்பதோடு மனித குலம் முழுவதையும் விளையாட்டு உணர்வோடு சமூக உணர்வையும் ஒன்று கலப்பதைச் சாத்தியப்படுத்தும். உலகின் நிகழ்ச்சி நிரல் வல்லரசு நாடுகளின் கையிலிருக்கும்போது இந்த உண்மையான விளையாட்டு உணர்ச்சி தோன்றப் போவதில்லை. ஏகாதிபத்தியங்களின் பலவீனமான கண்ணியிலிருந்துதான் புரட்சி தோன்ற முடியும் என்ற அரசியல் உண்மை விளையாட்டிற்கும் பொருந்தும்.

அதுவரை ஒலிம்பிக்கை நாம் சட்டை செய்ய வேண்டியதில்லை. இந்தியா பதக்கம் பெறாதது குறித்து வருத்தப்படவும் தேவையில்லை.

_______________________________

முதல் பதிவு: வினவு

தொடர்புடைய பதிவுகள்

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை கொல்லைப்புறமாக நுழைக்க மன்மோகன் அரசு சதி!

தீவிர நிதிநெருக்கடியில் சிக்கி தவிக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் கல்வி சந்தையை இந்தியாவில் கடைவிரிப்பதற்கு 2010ல்  16 சட்டமுன்வரைவுகளை மத்திய அரசு கொண்டு வந்தது. தற்போது நமது நாட்டில் மீதமிருக்கும் அரசு கல்லூரிகளையும் ஒழித்துவிட்டு முழுக்க  முழுக்க பணம் உள்ளவன் மட்டுமே கல்வி கற்க முடியும் என்பது உள்ளிட்ட பல ஆபத்துக்கள் இந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்களால் வரப்போகிறது என்பதே நிதர்சனம்.

இதில் தற்போது வந்துள்ள செய்தி என்னவென்றால்

 பல்வேறு காரணங்களால் சட்டமுன்வரைவுகள் நிறைவேற்றுவது தள்ளிப்போவதால் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் கொள்ளையடிப்பது தாமதப்படுகிறது. இதற்காக ஜூலையில் நடைபெறவிருந்த பல்கலைக்கழக மானியக்கூட்டத்தை உடனடியாக கூட்டவும் அதில், ஏற்கனவே இருக்கும் சட்டங்கள் மூலம் எப்படி வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை கொண்டுவர முடியும்’ என ஆலோசிக்கவும் உள்ளது மத்திய அரசு.

நாட்டில் விலைவாசி என்பது நாள்தோறும் விண்ணைத்தொடும் அளவுக்கு உயர்ந்து வருகிறது, லட்சக்கணக்கான விவசாயிகள் தினந்தோறும் தற்கொலை செய்து கொள்கிறார்கள், ஊட்டசத்து இல்லாமல் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என மக்களை பாதிக்கும் ஆயிரக்கணக்கான பிரச்சனைகளில் இந்த நாடு சிக்கி தவித்துக்கொண்டு இருக்கும்போது அதற்கெல்லாம், மெளனம் ஒன்றைத்தவிர நமக்கு எதையும் தராத இந்த அரசு பன்னாட்டு முதலாளிகளின் இலாபவேட்டைக்காக மட்டும் எப்படி பம்பரமாக வேலை செய்யும் என்பதற்கு இந்த செய்தியே சாட்சி.

கூடங்குளம் அணு உலை முதல் வால்மார்ட், வெளிநாட்டு பல்கலைக்கழகம் வரை அனைத்தும் நமக்கு சொல்லும் செய்தி இந்த ஒன்றுதான். இந்த(திய)  அரசு என்பது பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகளின் நலன்களுக்காக மட்டுமே வேலை செய்ய ஏற்படுத்தப்பட்டது என்பதுதான் அது.

இதில் கவனிக்கவேண்டிய மற்றொன்று, வேறு ஊடகங்களில் வெளிவராத இந்த செய்தி ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதியின் தொலைக்காட்சியிலேயே வந்துள்ளது என்பது. பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் பெட்ரோலே என கண்டுபிடித்து ஆர்ப்பாட்டம் செய்தது போல அவருடைய கூட்டணி அரசின் நாசகார கொள்கைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல நம்ப சொல்கிறார் கருணாநிதி. குஜராத் படுகொலையின் போது பாஜகாவுடன் கைகோர்த்துக்கொண்டே இன்றும் மதவாதம் குறித்து எச்சரிக்கும் குள்ளநரியிடமிருந்து வேறு எதை எதிர்ப்பார்க்க முடியும்.

தொடர்புடைய பதிவுகள்:

கருத்துப்படம்: MBBS Rs 40,00,000 only ENG Rs 20,00,000 only!

இந்திய நாடாளுமன்றம் – பன்றி தொழுவத்தின் 60 ஆண்டு கால சாதனை!

நாடாளுமன்றம் விற்பனைக்கு! மலிவு எம்;பி.க்கள் தயார்! இந்திய நாடாளுமன்றம் ஊழலின் ஊற்றுக்கண்

01_2006.jpgஇந்தியாவில் உள்ள பலகட்சி நாடாளுமன்ற ஜனநாயகம்தான் உலகிலேயே மிகச் சிறந்த அரசியலமைப்பு என்று முதலாளிய ஏகாதிபத்திய அறிவுஜீவிகள் புகழ்ந்து தள்ளுகின்றனர். குறிப்பாக, சோவியத் ஒன்றியம் மற்றும் பிற போலி கம்யூனிச நாடுகளில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, அங்கிருந்தெல்லாம் அரசியல் நிபுணர்கள் வந்து இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் செயல்படுவதை நேரில் கண்டு வியந்து போனார்கள்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசியல் அமைப்புதான் கம்யூனிச ஆட்சிகளின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று கண்டுபிடித்த “”நம்ம ஊரு” த.தே.பொ.க. மணியரசன் கும்பல் உட்பட எல்லா வண்ணப் போலி கம்யூனிஸ்டுகளும் கூட பலகட்சி நாடாளுமன்ற ஜனநாயக அரசியலமைப்பே தமது திட்டமென்று மாற்றிக் கொண்டார்கள்.

இந்த அரசியலமைப்பு இவ்வளவு காலம் நீடித்திருப்பது, பல தேர்தல்கள் நடந்து முடிந்திருப்பதே இதன் வெற்றியைப் பறைசாற்றுவதாக அவர்கள் எல்லோரும் போற்றிப் புகழ்கிறார்கள். ஆனால், இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தினுடைய வெற்றியின் இரகசியம் என்னவென்று அவர்கள் பேசுவதில்லை. அது இதுதான்:

இந்தியாவின் பலகட்சி நாடாளுமன்ற ஜனநாயகம் செத்து அழுகிப் போன பிணமாகக் குப்பைமேட்டில் திறந்தவெளியில் கிடக்கிறது. அதன் முடைநாற்றம் மனிதர்களுக்குத் தெரிகிறது. ஆனால், செத்து அழுகிப் போன பிணத்தைக் கொத்தித் தின்னும் கழுகு காக்கைகளுக்கு அது ருசியான விருந்தாகவே தெரிகிறது. அந்த விருந்தில் கலந்து கொள்ளும் காக்கைகள் போல, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பங்கேற்கும், பதவி வகிக்கும் கட்சிகள் அனைத்துமே ஏதாவது ஒரு வகையில் பொறுக்கித் தின்பதற்கு வசதிகளும் வழிவகைகளும் உள்ளன.

ஆளுங்கட்சிகளாக இருந்தாலும், எதிர்க்கட்சிகளாக இருந்தாலும், தேர்தல்களில் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியுற்றாலும் சரி, எல்லாக் கட்சிகளுக்கும் பொறுக்கித் தின்பதற்கான ஏற்பாடுகள் இருக்கின்றன என்கிற ஒரு காரணமே போதும். இதனாலேயே பல கட்சி நாடாளுமன்றம், மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற தோற்றத்தோடு நீடித்திருக்க முடிகிறது. இதுதான் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சிறப்பு.

இது இப்படித்தான் செயல்படுகிறது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது. சமீபத்தில் வெளியாகி நாடே நாறும் வோல்கர் கமிசன் அறிக்கை விவகாரம், நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு அதன் உறுப்பினர்கள் இலஞ்சம் வாங்கிய விவகாரம், எம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு இலஞ்சம் வாங்கிய விவகாரம் இவை அனைத்திலும் ஏதோ சில நபர்கள், ஏதோ ஒரு கட்சி மட்டும் சிக்கவில்லை. ஏறக்குறைய அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் சிக்கியுள்ளனர்.

வோல்கர் கமிசன் அறிக்கை பின்னணி

1990களின் ஆரம்பத்தில் குவைத்தை ஆக்கிரமித்த ஈராக்கின் சதாம் உசேன் படைகள், அந்நாட்டு எண்ணெய் வயல்களைக் கைப்பற்றிக் கொண்டன. குவைத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்பது என்ற பெயரில் அதிநவீன ஆயுதங்களுடன் மத்திய கிழக்கில் வந்திறங்கிய அமெரிக்கப் படைகள் வெறித்தனமான தாக்குதல் போர் நடத்தி ஈராக் இராணுவத்தை விரட்டியடித்தது. ஆனால், அமெரிக்கா அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. வளமிக்க எண்ணெய் வயல்கள் நிறைந்த மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தையும் தனது மேலாதிக்கம் மற்றும் மறுகாலனியாதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியது. “”உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதங்கள் உட்பட பெருந்திரள் பேரழிவு ஆயுதங்களைத் தயாரித்து குவித்து வைத்திருப்பதோடு, அணுஆயுத உற்பத்திக்கான தயாரிப்பிலும் இறங்கியுள்ள சதாமின் ஈராக்கினால் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்புக்குப் பேராபத்து விளைந்துள்ளது; பல ஆயிரம் ஷியா மற்றும் குர்து மக்களைப் படுகொலை செய்து மனித உரிமைகளை மீறும் குற்றங்கள் செய்துள்ளது, சதாம் உசைன் அரசு” என்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி ஈராக்குக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் பொருளாதாரத் தடை விதிக்கச் செய்தது, அமெரிக்கா. அதோடு இராணுவ முற்றுகையும் செய்தது.

ஈராக்குக்கு எதிரான இந்த இராணுவ முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடையால் உலக அரங்கில் அந்நாடு பெருமளவு தனிமைப்படுத்தப்பட்டது. இவற்றால், எண்ணெய் வளமிக்கதாக இருந்தாலும், அதைப் பயன்படுத்தி உலகச் சந்தையில் இருந்து மருந்து மற்றும் உணவு போன்ற இன்றியமையாத் தேவைகளைக் கூட வாங்க முடியாமல் ஈராக் திணறியது. இலட்சக்கணக்கான குழந்தைகள் போதிய மருந்துப் பொருட்கள் கூடக் கிடைக்காமல் மாண்டு போயின.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் நிபந்தனைகளை ஏற்று, ஈராக்கிலுள்ள இராணுவஆயுத நிலைகளை ஐ.நா. பிரதிநிதிகள் சோதனையிட ஈராக்கின் சதாம் அரசு சம்மதித்தது. அதை ஏற்ற ஐ.நா. சபை, ஈராக்கில் மக்கள்திரள் பேரழிவு ஆயுதங்கள் உற்பத்தி செய்வதற்கான வசதிகள் இருக்கின்றனவா, அவை ஏற்கெனவே குவிக்கப்பட்டிருக்கின்றனவா என்பதை சோதனை செய்வதற்கு தனது குழுவை அனுப்பும் அதேசமயம், “”உணவுக்கு எண்ணெய்” என்ற இடைக்காலத் திட்டத்தை வகுத்து, அதன் அடிப்படையில் குறிப்பிட்ட அளவு பெட்ரோலிய எண்ணெய் விற்கவும் இன்றியமையாப் பொருட்களை இறக்குமதி செய்து கொள்ளவும் ஈராக்கை அனுமதித்தது.

ஆனால் அமெரிக்காவோ, தொடர்ந்து சதாம் அரசு மீது பல பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தி வந்தது. இறுதியில் மக்கள் திரள் பேரழிவு ஆயுதங்களைக் குவித்து வைத்திருப்பதாகவும், அவை தயாரிப்பதற்கான இரகசிய ஆலைகள் வைத்திருப்பதாகவும், ஐ.நா. சோதனைக் குழு சுதந்திரமாக ஆய்வு நடத்துவதற்கு அனுமதி அளிக்க வில்லை என்றும், அணுஆயுதங்களைக் கூட உற்பத்தி செய்வதற்கு முயல்வதாகவும், அமெரிக்கா மீதான 2002 செப்டம்பர் 11 விமானத் தாக்குதல் நடத்திய பின்லேடனின் அல்கொய்தா அமைப்புடன் அச்சதியில் ஈராக்கு பங்கு இருப்பதாகவும் பல பொய்யான பழிகள் சுமத்தி 2004இல் ஈராக்கைத் தாக்கி ஆக்கிரமித்துக் கொண்டது. சதாம் உசைன் மற்றும் அவரது சகபாடிகள் கைது செய்யப்பட்டு தண்டிப்பதற்கான விசாரணை நாடகமும் நடத்தி வருகிறது.

ஈராக் மீது அமெரிக்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியங்கள் ஆக்கிரமிப்புப் போர் தொடுத்து, அந்நாட்டு ஆட்சியைக் கவிழ்த்து, ஒரு பொம்மை ஆட்சியை நிறுவியதற்கு சொல்லப்பட்டக் காரணங்கள் அனைத்தும் பொய்யானவை என்று கடந்த ஓராண்டில் மேலும் அம்பலமாகிப் போனது. அமெரிக்கா, பிரிட்டன் உட்பட உலக நாடுகளின் மக்கள் அனைவரும் இந்த ஆக்கிரமிப்புப் போருக்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ஈராக்கில் இலஞ்ச ஊழல், சகநாட்டவர் மீதான படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் நிறைந்த சதாம் உசைனின் ஆட்சியைத் தூக்கியெறிந்து “சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவே போர் தொடுத்தோம்’ என்று கூறும் அமெரிக்கா, இந்தக் கோணத்தில் விசாரணை தண்டனைக்கு ஆதாரங்களைத் தேடுகிறது.

ஈராக்கிற்கு எதிரான ஆக்கிரமிப்புப் போரை நியாயப்படுத்தவும், சதாம் ஆட்சியைக் கவிழ்த்து, நிறுவப்பட்ட பொம்மை அரசுக்கு நியாயவுரிமையைக் கோரவும் சதாமுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஆதாரப்படுத்தும் வேலைகளில் அமெரிக்கா இறங்கியது. பேரழிவு ஆயுதக் குவிப்பு, அல்கொய்தா பயங்கரவாதிகளின் கூட்டாளி போன்ற குற்றச்சாட்டுக்கள் பொய்த்துப் போனபிறகு, சதாமுக்கு எதிரான உள்விவகாரங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவமளித்தது. அதாவது “மனிதாபிமான’ அடிப்படையில் ஐ.நா. சபை அளித்த “”உணவுக்கு எண்ணெய்” திட்டத்தைக் கூட சதாம் உசைன் கும்பல் சொந்த ஆதாயத்துக்காக முறைகேடாகப் பயன்படுத்திக் கொண்டு கொள்ளையடித்திருக்கிறது என்று நிரூபிக்கும் வேலையில் ஈடுபட்டது, அமெரிக்கா.

உணவுக்கு எண்ணெய் திட்டத்தில் நடந்த இலஞ்சஊழல் முறைகேடுகளை விசாரிப்பது என்று ஐ.நா. சபை மூலம் தீர்மானித்து வோல்கர் உட்பட ஏகாதிபத்தியக் கைக்கூலிகளைக் கொண்ட விசாரணைக் கமிசன் ஒன்று அமைக்கப்பட்டது. அதன் நோக்கம், சதாம் மீதான இலஞ்ச ஊழல் முறைகேடுகளைத் திரட்டித் தருவதுதான். இதற்காக ஐ.நா. சபையைப் பயன்படுத்திக் கொண்ட அமெரிக்கா, சதாம் மீதான சகநாட்டவர் படுகொலை, மனித உரிமை மீறல்கள் ஆகிய குற்றச்சாட்டுக்களை ஆதாரப்படுத்த, ஷியா, குர்து பிரிவின் பிரதிநிதிகள் என்ற பெயரில் வேறு சிலரைக் கொண்ட முகாம்களைப் பயன்படுத்திக் கொள்கிறது.

ஈராக்கை ஆண்ட சதாம் உசைன் கும்பல் இலஞ்ச ஊழல், சகநாட்டவர் மீதான படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் ஆகிய குற்றங்கள் புரியாத சுத்தமான ஜனநாயகத் தன்மை உடையது அல்ல என்பது உண்மைதான். இராணுவ பாசிச ஆட்சி நடத்தியதோடு, குவைத், ஈரான் ஆகிய நாடுகளுக்கு எதிராக ஆக்கிரமிப்புப் போர் நடத்திய கும்பல்தான். இந்தக் குற்றங்களை மூடிமறைப்பதற்காக இசுலாமிய மதவாதம், தேசியம், சுதந்திரம், ஏகாதிபத்திய எதிர்ப்பு முகமூடிகளைத் தரித்துக் கொண்டதுதான்.

ஆனால், இந்தக் குற்றங்களுக்காக சதாம் கும்பலை விசாரிக்கவோ, தண்டிக்கவோ சிறிதும் அருகதையற்றது அமெரிக்க ஏகாதிபத்தியம். ஏனென்றால், ஒருபுறம் பேரழிவு ஆயுதங்களை மலைமலையாக அமெரிக்காவே குவித்து வைத்திருப்பதோடு, இலஞ்ச ஊழல், மனித உரிமை மீறல்களின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளின் ஊற்றுமூலமாக அது விளங்குகிறது. மறுபுறம், ஈரானுக்கு எதிரான போரில் சதாமின் ஈராக்குக்குப் பேரழிவு ஆயுதங்களை வழங்கியதோடு, ஷியா, குர்து மக்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு ஆதரவு அளித்தும் வந்திருக்கிறது.

எரிகிற வீட்டிலும்கொள்ளையடிக்கும் எமகாதகர்கள்

கடந்த நவம்பரில் அந்த வோல்கர் கமிசன் அறிக்கை வெளியானது. உணவுக்கு எண்ணெய் திட்டத்தின் மூலம் ஒப்பந்ததாரர்கள் அல்லாத, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 270 பேருக்கு சதாமின் ஆட்சி எண்ணெய் ஒதுக்கீடு செய்து கொடுத்திருக்கிறது. அவர்களிடமிருந்து சேவைக் கட்டணம் வசூலித்து சதாமின் “”பாத் கட்சி” ஆதாயம் அடைந்திருக்கிறது என்று கூறுகிறது வோல்கர் கமிசன். அப்படி ஒப்பந்ததாரர் அல்லாத ஈராக் எண்ணெய் ஒதுக்கீடு செய்து ஆதாயம் அடைந்தவர்களின் வரிசையில் இந்தியாவின் மிகப் பெரிய தரகு முதலாளியும் இன்றைய ஆளும் காங்கிரசுக்கு நெருக்கமானதுமான அம்பானி குடும்பத்தின் ரிலையன்சு, காசுமீரின் பாந்தர் கட்சித் தலைவர் பீம்சிங், காங்கிரசு கட்சியின் வெளிவிவகார அமைச்சர் நட்வர்சிங் மற்றும் காங்கிரசுக் கட்சியும் இடம் பெற்றுள்ளனர்.

2001ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் காங்கிரசுக் கட்சியின் தூதுக் குழுவுக்குத் தலைமையேற்று ஈராக்குக்குப் போன நட்வர்சிங் கூடவே தனது மகன் ஜகத்சிங் மற்றும் அவரது உறவினரும் தொழில் கூட்டாளியுமான அந்துலீப் சேகலை அழைத்துக் கொண்டு போய், அவர்கள் மூலம் 40 இலட்சம் பீப்பாய் பெட்ரோலிய எண்ணெய் ஒதுக்கீடு பெற்று, சேகலின் “”ஹம்தான் ஏற்றுமதி” என்ற கம்பெனி பெயரில் சதாம் உசைனின் “”பாத்” கட்சிக்கு ஜோர்டான் நாட்டு வங்கி மூலம் சேவைக் கட்டணம் செலுத்தியுள்ளனர். காங்கிரசுப் பிரமுகராக இருந்து, அக்கட்சித் தூதுக் குழுவில் சென்ற அனில் மதராணி இதை உறுதி செய்துள்ளார்.

இச்செய்தி வெளியானவுடன், தனக்கு எதிரான அரசியல் சதி, ஆதாரமற்றது என்று மறுத்த நட்வர் சிங்கும் அவரது மகனும் ஈராக் பயணம் குறித்து முன்னுக்குப் பின் முரணாக உளறினர். நட்வர் சிங்குக்கு ஆதரவாகப் பேசிய காங்கிரசு, ஒருபுறம் மத்திய அமலாக்கப் பிரிவு மூலம் விசாரணை நடத்திக் கொண்டே, உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி பதக் தலைமையில் விசாரணைக் கமிசன் போட்டு பிரச்சினையை மழுப்புவதில் இறங்கியது.

நட்வர்சிங்கைப் பதவி நீக்கம் செய்யும்படி நாடாளுமன்றத்தில் “”கலகம்” செய்தன எதிர்க்கட்சிகள். முதலில் நட்வர்சிங் மீது நடவடிக்கையை வலியுறுத்திய போலி கம்யூனிஸ்டுகள் பிறகு, எல்லாம் சி.ஐ.ஏ. சதி என்றும், நட்வர் சிங் இடதுசாரி முற்போக்காளர், அமெரிக்க எதிர்ப்பாளர், வோல்கர் கமிட்டியே அமெரிக்க சி.ஐ.ஏ. புனைவு என்ற நிலையெடுத்துள்ளது. நட்வர் சிங்கை நீக்கிவிட்டு தனக்கு விசுவாசியான மன்மோகன் சிங்கிடம் அயலுறவுத் துறையை ஒப்படைக்கவே அமெரிக்கா இப்படிச் செய்கிறது என்கின்றனர். இப்படிக் கூறுபவர்கள்தாம் தொடர்ந்து மன்மோகன் சிங் அரசையும் ஆதரிகின்றனர். மறுபுறம் நட்வர் சிங்கும் சி.பி.எம். கூறுவதுபோல, அமெரிக்க எதிர்ப்பாளர் அல்ல. பதவியேற்ற மறுவாரமே அமெரிக்காவிற்குப் போய் புஷ்ஷிடம் மண்டியிட்டு, ஈராக்கிற்கு இந்தியப் படை அனுப்புவதை உறுதி கூறியவர்; இங்கே ஏற்பட்ட கடும் எதிர்ப்பே, அவ்வாறு செய்ய விடாமல் தடுத்து விட்டது.

ஈராக் விவகாரத்தில் தன்னை ஆதரிக்காத, சதாம் ஆதரவு நட்வர் சிங்கையும், காங்கிரசையும் பழிவாங்கவே வோல்கர் கமிட்டி அறிக்கையை அமெரிக்கா தயாரித்துள்ளது என்றும் போலி கம்யூனிஸ்டுகள் கூறுகிறார்கள். ஆனால் நட்வர் மன்மோகன் சோனியா கும்பல்தான் அமெரிக்காவுடன் அணுஆயுத இராணுவ ஒப்பந்தம் போட்டது, ஈரானுக்கு எதிரான அமெரிக்க சதியை ஆதரித்து, அணுஆயுத தடை தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் ஆதாரங்கள் வெளிவந்தது காரணமாக, காங்கிரசு ஊழலை மறைப்பதற்காக நட்வர் சிங்கிடம் இருந்த பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், “”நீ மட்டும் யோக்கியமா?” என்ற வழக்கமான பாணியில், ஈராக் உணவு எண்ணெய் திட்டத்தால் காங்கிரசு மட்டும் ஆதாயமடையவில்லை, பா.ஜ.க.வும்தான் ஊழல் செய்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை காங்கிரசு வெளியே கொண்டு வருகிறது.

பா.ஜ.க. ஆட்சியில்தான் இந்த ஊழல் நடந்திருக்கிறது. ஈராக்கில் உள்ள இந்தியத் தூதர் அப்போதே இது குறித்த செய்தியை, பா.ஜ.க. அரசுக்கு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் சமயத்தில் பா,ஜ.க. அரசுக்கு இந்த உண்மை தெரிய வந்தும் தனக்குச் சாதகமாக, காங்கிரசுக்கு எதிரான ஆயுதமாக அது பயன்படுத்தாதற்கு காரணம் இந்த ஊழலில் பா.ஜ.க.வுக்கும் பங்கு கிடைத்திருப்பதுதான் என்று எதிர் குற்றச்சாட்டு வீசப்படுகிறது. குறிப்பாக, வாஜ்பாயியின் மருமகன் ரஞ்சன் பட்டாச்சார்யா, சதாமின் மகனுடன் நெருங்கிய உறவு வைத்திருந்தார்; அவருக்கு எண்ணெய் விவகாரத்தில் தொடர்பு இருந்தது என்று ராஜீவுக்கும் காங்கிரசுக்கும் நெருங்கிய கூட்டாளியும், காங்கிரசு அரசின் முன்னாள் வெளியுறவுச் செயலரும், உ.பி. மாநில முன்னாள் ஆளுநருமான ரமேஷ் பண்டாரி கூறுகிறார்.

எப்படியோ அமெரிக்கா, தனது எதிரிக்கு எதிராக நடத்திய துப்பாக்கிச் சூட்டின் சிதறல்கள் தனது விசுவாசிகளான இந்திய முன்னாள்இன்னாள் ஆட்சியா ளர்களையும் பதம்பார்த்து விட்டது. இந்தநாட்டில் ஜனநாயகம் பரவலாக்கப்படுகிறது என்று சொன்னால், ஊழல் பரவலாக்கப்படுகிறது; ஆளும் கட்சிக்கு மட்டுமல்ல, எதிர்க் கட்சிகளுக்கும் கூட இலஞ்ச ஊழல் களுக்கான வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றது. சந்தேகமின்றி இந்த வகையில் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் மிகச் சிறந்து விளங்குகின்றது.

கேள்வி கேட்க இலஞ்சம்! சர்வகட்சி ஜனநாயகம்!

இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அனைத்துக் கட்சி இலஞ்ச ஊழல் மாண்பை நிரூபிக்கும் வகையில் மேலும் சில சான்றுகள் சமீபத்தில் வெளியாகியுள்ளன. தொழில் குழுமங்களுக்குச் சாதகமாக நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்புவதற்கு எம்.பி.க்கள் இலஞ்சம் வாங்கும் “”வீடியோ” காட்சிகள்; உள்ளூர் தொகுதி வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் 2 கோடி ரூபாய் பெறும் எம்.பி.க்கள், திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கு இலஞ்சம் கேட்கும் “”வீடியோ” காட்சிகள் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பப்பட்டிருக்கின்றன.

முந்தைய பா.ஜ.க. ஜனதா தள கூட்டணி ஆட்சியின் போது ஆயுத பேர நாடகமாடி அக்கட்சிகளின் தலைவர்கள் இலஞ்சம் வாங்கக் கூடியவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையிலான “”வீடியோ” காட்சியைப் படமாக்கி ஒளிபரப்பினார், “”தெகல்கா” செய்தி இணையத்தளத்தின் ஆசிரியர் அனிருத் பெகல். இப்போது அவர் “”கோப்ரா போஸ்ட்” என்ற செய்தி இணையத்தளத்தின் சொந்தக்காரரும் ஆசிரியருமாக உள்ளார். இவர் “”ஆஜ் தக்” என்ற செய்தி அலைவரிசையுடன் இணைந்து, நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க எம்.பி.க்கள் இலஞ்சம் வாங்குவதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளார்.

“”கோப்ரா போஸ்ட்” இணையத்தளம் மற்றும் “”ஆஜ் தக்” அலைவரிசையைச் சேர்ந்த செய்தியாளர்களைக் கொண்ட குழு ஒன்று, சிறுதொழில் முனைவோர் சங்கம் என்ற பெயரில் எம்.பி.க்கள் சிலரை அணுகி, சங்கத்துக்குச் சாதகமாக நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கான பேரங்கள் நடத்தி பதினைந்தாயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை இலஞ்சம் கொடுத்து, அதை இரகசியமாக “”வீடியோ” காட்சியாகப் பதிவும் செய்து ஒளி பரப்பிவிட்டது.

இதைப் பார்த்து “”நாங்கள் ஆழமான வேதனையும் அதிர்ச்சியும் அடைந்துவிட்டோம்” என்று தற்போதைய நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி பம்மாத்து பண்ணியிருக்கிறார். ஆனால், இலஞ்சம் வாங்கிக் கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்பது பல ஆண்டுகளாக நடப்பது எம்.பி.க்கள் உட்பட அரசியல்வாதிகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் தெரிந்த விசயம்தான்!

“”1980கள் நெடுகவும் பெட்ரோலிய இரசாயனம் மற்றும் மருந்துக் கம்பெனிகள் எம்.பி.க்களைப் பயன்படுத்தி கேள்விகளும் எதிர்க் கேள்விகளும் நாடாளுமன்றத்தில் எழுப்பிக் கொண்டிருந்தது நன்றாகவே தெரியும். இந்தப் பிரச்சினை இந்தியாவில் ஒன்றும் விதிவிலக்கானதில்லை” என்கிறார் ராஜீவ்சோனியா இருவருக்குமே நெருங்கிய காங்கிரசு மூத்த தலைவரும் மேலவை எம்.பி.யுமான ஜெயராம் ரமேஷ்.

“”இப்போது சிக்கியவர்கள் எல்லாம் சிறிய மீன்கள்தான்; மாபெரும் சுறாக்களையெல்லாம் யாரும் நெருங்கக் கூட இல்லை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. கேள்வி கேட்கப் பணம் வாங்கிய விவகாரம் என்பது வெளியே தெரியும் ஒரு சிறுமுனை போன்றது தான். மலையளவு விவகாரங்கள் மறைந்து கிடக்கின்றன. ஒரு குறிப்பிட்ட தொகையை “படி’ போலப் பெற்றுக் கொண்டு, தொழில் குழுமங்கள் சார்பில் நிரந்தரப் பிரதிநிதிகளாக இருக்கும் எம்.பி.க்கள் பலரும், சில குறிப்பிட்ட ஆதரவுக் குழுக்களில் இடம் பெற்றுள்ள எம்.பி.க்கள் பலரும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்கள் யார் யார் என்பது அரசியல் வட்டாரத்திலோ, நாடாளுமன்ற வட்டாரத்திலோ தெரியாத விசயமுமல்ல.

“”தொழில் குழுமங்களின் பிரதிநிதிகளாக இருக்கும் எம்.பி.க்களுக்கு ரொக்கம் மட்டுமல்லாமல், இதர சலுகைகள், போனஸ், நிறுவனப் பங்குகள் (ஷேர்கள்) உள்பட பல ஆதாயங்கள் கிடைக்கின்றன. அவர்கள் சார்ந்துள்ள தொழில் குழுமங்கள் அல்லது அமைப்புக்கு லாபத்தை ஏற்படுத்தக் கூடிய கேள்விகளையே அந்த எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கேட்கின்றனர். ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் தொழில் நிறுவனக் குழுமங்கள், தம் எதிரி நிறுவனங்களை முடக்குவதற்கான கேள்விகளை நாடாளுமன்றத்தில் கேட்பதற்கு அரசியல்வாதிகளைக் கடந்த காலத்தில் பயன்படுத்தி வந்தன” (தினமணி 19.12.05) என்று எழுதுகிறார், மூத்த செய்திக் கட்டுரையாளர் நீரஜா சௌத்ரி.

மக்கள் பிரதிநிதிகள் என்ற போர்வையில் பெரும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளாகச் செயல்படுவது பழைய, ஒப்பீட்டு ரீதியில் சிறிய விசயம்தான். நாடாளுமன்றம் மற்றும் அரசாங்கத்துக்குக் கொள்கை முடிவுகளைப் பரிந்துரைக்கும் நாடாளுமன்ற குழுக்களின் உறுப்பினர்களாகவே தங்கள் பிரதிநிதிகளை தொழில் நிறுவனங்கள் நியமிக்கச் செய்கின்றன. இதற்கும் மேலேபோய், தரகு அதிகார முதலாளிகளே நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவிகளையே அரசியல் கட்சிகளிடம் பேரம்பேசி வாங்கி விடுகின்றனர். பா.ஜ.க. மற்றும் காங்கிரசைப் போலவே, மாயாவதி, முலயம் சிங் கட்சிகள் முக்கியமாக இதைச் செய்கின்றன.

ஒழுக்க சீலர்களின் கட்சி என்று நாடகமாடும் பா.ஜ.க.வினர் ஆறுபேரும், பிழைப்புவாத மாயாவதி கட்சியினர் மூவரும், லல்லு, முலயம், காங்கிரசு கட்சிகளில் தலா ஒருவருமாக 11 எம்.பி.க்கள் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்குபவர்களின் “”வீடியோ” காட்சியில் சிக்கியுள்ளனர். பா.ஜ.க. தமது கட்சிக்காரர்கள் மீது முதலில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தாலும் நாடாளுமன்றத்தில் இருந்து அவர்களை நீக்குவதற்கு மறைமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாதி அரசியல் நடத்தும் மாயாவதி, லல்லு, முலயம் கட்சிகளுக்கு லஞ்ச ஊழல் ஒரு பிரச்சினையே இல்லை. இதெல்லாம் தனது கட்சிக்கு எதிரான சதி என்று கூறும் மாயாவதி தனது ஊழல் எம்.பி.க்களுக்கு வக்காலத்து வாங்கி நியாயப்படுத்தியிருக்கிறார்.

இந்த இலஞ்ச நடவடிக்கை அம்பலமாக்கப்பட்ட அதேபாணியில் அடுத்ததாக, ஆண்டுதோறும் இரண்டு கோடி ரூபாய் தொகுதி வளர்ச்சிக்கு என்று தரப்படும் நிதியை ஒதுக்கீடு ஒப்புதல் கொடுப்பதற்காக, மூன்று பா.ஜ.க., இரண்டு முலயம் கட்சி, மாயாவதி, காங்கிரசு கட்சிகளில் தலா ஒருவர் என ஏழு எம்.பி.க்கள் இலஞ்சம் வாங்குவதை “”ஸ்டார்” அலைவரிசை “”வீடியோ” காட்சி எடுத்து அம்பலப்படுத்தியிருக்கிறது.

கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற விவகாரத்தில் பரபரப்பாகவும், உடனேயும் நடவடிக்கை எடுத்த கட்சிகளும், நாடாளுமன்றமும் இரண்டாவது விவகாரத்தில் அப்படிச் செய்யவில்லை. இவர்கள் நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு இடைக்கால தடை விதித்து, அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி சம்பந்தப்பட்ட அமைச்சக விசாரணை என்பதாக திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்னும் கொஞ்ச காலத்தில் “”நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இதெல்லாம் சகஜம்தான்” என்று எல்லாக் கட்சிகளும் வெளிப்படையாகவே மாற்றி விடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. “”சிக்கிக் கொள்ளும் அளவுக்கு முட்டாள்தனமாக இருந்ததற்காக எம்.பி. பதவியைப் பறிப்பது என்பது மிகக் கடுமையான தண்டனை என்று அவர்கள் கூறுவார்கள்” என்கிறார், நீரஜா சௌத்ரி. இப்படியே போனால், ஒழுங்கு நடவடிக்கையில் இருந்து யாருமே தப்ப முடியாது; ஆகவே இதையெல்லாம் கண்டு கொள்ளக் கூடாது என்று மாற்றி விடுவார்கள்.

“”கம்யூனிஸ்டு கட்சிகள் மட்டும்தான் இதிலெல்லாம் சிக்காது ஒழுக்க சீலர்கள்” என்று அறிவுஜீவிகளால் பாராட்டப்படுகிற இவர்கள், சிக்கிக் கொள்ளும் அளவுக்கு முட்டாள்கள் அல்ல என்பதுதான் உண்மை. 20,30 சினிமா படங்களை அருவெறுப்பாக எடுத்துக் கொள்ளையடிக்கிறார்கள் என்றால் அவற்றுக்கு நடுவே ஒரு அற்பத்தனமான, பத்தாம்பசலிக் குடும்பப் படத்தையும் எடுத்து காசு பார்ப்பது போன்றது போலி கம்யூனிச கட்சிகளின் செயல். ஏற்கெனவே பன்றித் தொழுமாகி விட்டது நாடாளுமன்ற ஜனநாயகம். அந்தப் பன்றிகள் மீது பன்னீர் தெளித்து மணம் பரப்புவதுதான் இவர்கள் வேலை.

“””நாடாளுமன்ற ஜனநாயகம் என்பதே கேலிக் கூத்து’ என்று காலம் காலமாக தீவிர கம்யூனிஸ்டுகள் சொல்லி வருவது உண்மைதானோ என்று பொதுமக்கள் வீதிக்கு வீதி பேசும் நிலை ஏற்பட்டிருக்கிறது” என்று எழுதுகிறது, பிரபல பார்ப்பன கிசுகிசு ஏடான ஜூனியர் விகடன். இதே அச்சம்தான் போலி கம்யூனிஸ்டுகளுக்கும்! ஆனாலும் இந்த உண்மையை என்ன செய்தும் மூடி மறைத்துவிட முடியாது!

– ஆர்.கே.

நன்றி: புதிய ஜனநாயகம் 2006

தொடர்புடைய பதிவுகள்:

எம்.எல்.ஏ வுக்கு பொறுக்கித் தின்ன மட்டுமே அதிகாரம்! ஆள்வதற்கல்ல!!

கோடிகளில் கொழிக்கும் மத்திய அமைச்சரவை ! பி.சாய்நாத் !!

தேர்தல் சீர்திருத்தம் மூலம் ஊழல் மறையுமா? கேள்வி-பதில்

ஜனநாயம் எனபது லட்சியமா, வழிமுறையா?

அக்னி ஏவுகனைப் பரிசோதனை : சாதனையா? வேதனையா?

அக்னி 5 ஏவுகனை வெற்றி குறித்து பிரதமர் முதல் ஊடகங்கள் வரை பாராட்டு தெரிவித்து பேசுகின்றன. ஆனால் அதே ஊடகங்களில் ஒன்றான தினமணி தனது தலையங்கத்தில் ‘தமிழகத்தில் 90% பேருந்து நிலையங்களில் கட்டணக் கழிப்பிடங்கள், வாகன நிறுத்துமிடங்கள் என அனைத்தும் அநியாய கட்டணக்கொள்ளையும், முறையான பராமரிப்பும் இன்றி சமூக விரோதிகளின் கூடாரங்களாக மாறிவருகிறது’ என கவலை தெரிவிக்கிறது.  ‘விமான நிலையங்களில் கக்கூஸை தூய்மையாக பராமரிக்கமுடியும் அரசால் ஏன் பெருவாரியான மக்கள் பயன்படுத்தும் பேருந்து நிலையங்களில் கக்கூஸை தூய்மையாக பராமரிக்க முடியாது?’ என கேள்வி எழுப்புகிறது. இது தான் இந்தியா. ஒரு கக்கூஸைக்கூட பராமரிக்க முடியாத இவர்கள் தான் ஆபத்தான அணு உலைகளை கட்டப்போகிறோம் என்கிறார்கள்.

இந்தியா ராணுவத்தின் கோவணம் கிழிந்து தொங்கும் நிலையில் அதனை மூடிமறைக்கும் விதமாக அக்னி5 வெற்றி குறித்து பேசப்படுகிறது. இந்நிலையில் நாட்டையே அடகு வைத்துவிட்டு எவனை பாதுகாக்க ஏவுகனைகள் விடப்படுகின்றன என்ற உண்மையினை உணர்த்தும்விதமாக இதற்கு முன்னர் அக்னி ஏவுகனைப் பரிசோதனை செய்யப்பட்டபோது புதிய ஜனநாயகம் இதழில் வந்த கட்டுரையினை மறுபிரசுரம் செய்கிறோம்.

**************************

இந்திய பாதுகாப்புத் துறை, கடந்த மே7ஆம் தேதியன்று அக்னி3 என்ற ஏவுகணையை விண்ணில் ஏவிப் பரிசோதனை நடத்திய முயற்சியில் வெற்றி அடைந்துள்ளது. இதனையடுத்து, அக்னி3 ஏவுகணை அடுத்த ஆண்டிற்குள் இந்திய இராணுவத்தில் சேர்க்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது. இந்தியாவிடம் ஏற்கெனவே உள்ள அக்னி1 மற்றும் அக்னி2 ஏவுகணைகளைவிட, அக்னி3 ஏவுகணை அதிகத் தொலைவு ஏறத்தாழ 3,500 கி.மீ.சுற்றளவில் உள்ள இலக்குகளைச் சென்று தாக்கும் திறன் கொண்டது. இந்த மூன்று வகையான ஏவுகணைகளுமே அணுகுண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடியவை. முதலிரண்டு ஏவுகணைகளைக் கொண்டு பாகிஸ்தானின் உள்பகுதிகளைக் கூடத் தாக்க முடியுமென்றால், அக்னி3 ஏவுகணையோ சீனாவைக் குறி வைக்கிறது.

இந்தியப் பாதுகாப்புத்துறை இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் ஊடாக, அடுத்த ஆண்டு இறுதிக்குள் 5,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய அக்னி5 என்ற ஏவுகணையையும்; ஒலியின் வேகத்தைவிட ஐந்து மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய “”ஹைபர் சோனிக்” ஏவுகணையையும்; விண்ணில் இருந்து செலுத்தக்கூடிய “”அஸ்த்ரா” ஏவுகணையையும் பரிசோதனை செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. இத்தகைய ஏவுகணைகள், ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட அணுகுண்டுகளைச் சுமந்து கொண்டு சென்று, ஒன்றுக்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கக்கூடிய திறன் கொண்டவை என்று கூறப்படுகிறது.

இதுவொருபுறமிருக்க, எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கும் ஹைபர்சானிக் ஏவுகணை; பூமியில் இருந்து விண்ணுக்குச் சென்று, அங்குள்ள இலக்கைத் தாக்கும் ஆகாஷ் ஏவுகணை; நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் கே15 சாகரிகா ஏவுகணை எனப் பல்வேறு விதமான பேரழிவு ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை கடந்த ஒரு ஆண்டுக்குள் இந்தியப் பாதுகாப்புத் துறை பரிசோதித்துப் பார்த்திருக்கிறது.

இந்தியா இப்படி முண்டா தட்டிக் கொண்டு நிற்பதற்கு எதிர்வினைகள் இல்லாமல் போகுமா? இந்தியா அக்னி3 ஏவுகணையைப் பரிசோதனை செய்த அதே சமயத்தில், பாகிஸ்தான், இந்தியாவின் உட்பகுதிகளைக் கூடத் தாக்கக் கூடிய திறன் கொண்ட “”ஷஹீன்2” என்ற ஏவுகணையை, இரண்டு முறை ஏவிப் பரிசோதனை நடத்தியது. சீனாவோ, ஒன்றுக்கு மேற்பட்ட அணுகுண்டுகளை ஏந்திக் கொண்டு, 8,000 கி.மீ சுற்றளவில் உள்ள பல்வேறு இலக்குகளைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளையும்; ஒரேயொரு அணுகுண்டை ஏந்திக் கொண்டு 12,000 கி.மீ முதல் 14,000 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளையும் தனது இராணுவத்தில் சேர்க்கப் போவதாக அறிவித்த்திருக்கிறது.

இந்தியாவும்பாகிஸ்தானும்; இந்தியாவும்சீனாவும் அமைதிப் பேச்சுவார்த்தை, பொருளாதார ஒத்துழைப்பு என ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது, இந்த ஆயுதப் போட்டியும், ஆயுதக் குவிப்பும் அந்த நல்லுறவுகளைச் சிதைத்துவிடாதா எனச் சிலர் கேட்கலாம்; ஆனால், இந்த நாடுகளோ, “”அணு ஆயுதம் இருந்தால்தான் அமைதியை ஏற்படுத்த முடியும்” எனக்கூறி,இந்த ஆயுதக் குவிப்பை நியாயப்படுத்துகின்றன.

இந்தியா அணுகுண்டுப் பரிசோதனைகளை நடத்திய பொழுது, அதனை நியாயப்படுத்த “”இதன் மூலம் இந்தியாபாக். இடையே போர் மூளும் அபாயத்தைக் குறைத்துவிட முடியும்; அணு ஆயுதம் கையிலிருந்தால், மரபு வழி ஆயுதங்களை பெருமளவு வாங்க வேண்டிய அவசியம் எழாது; இதன் மூலம், இராணுவச் செலவைக் குறைத்துவிட முடியும்” என வாதிட்டது. ஆனால், இந்தியாபாக். இடையே கனன்று கொண்டேயிருக்கும் முறுகல்மோதல் நிலை, இந்த வாதங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கிவிட்டது.

1998ஆம் ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் அடுத்தடுத்து அணுகுண்டுப் பரிசோதனைகளை நடத்திய பிறகுதான், அவற்றுக்கிடையே இரண்டு முறை முழு அளவிலான போர் வெடிப்பதற்கான அபாயம் எழுந்தது. 1999இல் நடந்த கார்கில் சண்டையின் பொழுது, இந்தியாவும், பாகிஸ்தானும் ஒருவர் மீது மற்றொருவர் அணுகுண்டைப் போடப்போவதாக, 13 முறை மிரட்டிக் கொண்டதாக அமெரிக்க உளவு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

2001இல் இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டதையடுத்து, இரு நாடுகளும் போர் தொடுப்பதற்காக எல்லைப் புறத்தில் எதிரும் புதிருமாக படைகளையும், ஆயுதங்களையும் நிறுத்தின. எந்த நேரமும் போர் வெடித்து விடலாம் என்ற நிலையில், அப்பொழுது இந்தியப் பிரதமராக இருந்த வாஜ்பாயி, பாக்.மீது அணு ஆயுதங்களைப் போடவும் இந்தியா தயங்காது எனச் சூசகமாக அறிக்கை விடுத்தார். அப்பொழுது பாக். இராணுவத்தின் தளபதியாக இருந்த மிர்ஸா அஸ்லம் பேக், நாங்கள் ஒரு முறையல்ல, இரண்டு முறையல்ல, மூன்று முறை கூட அணு ஆயுதங்களைக் கொண்டு இந்தியாவைத் தாக்குவோம் என்றார். இந்தப் போர்வெறி பிடித்த பேச்சுகள் வெற்று மிரட்டலாகவே முடிந்து போனாலும், அவை, இந்தியபாக். மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தத் தவறவில்லை. இந்தச் சம்பவங்கள் அணு ஆயுதம் மட்டுமே ஒரு நாட்டின் தற்காப்பை உத்தரவாதப்படுத்தி விடாது என்பதையும் நிரூபித்தன.

இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில், இந்திய இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. துணை இராணுவப் படைகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகைகளையும் சேர்த்ததால் இராணுவத்திற்கு  ஒதுக்கப்பட்டுள்ள தொகை ஏறத்தாழ ரூ.1,40,000 கோடி. இது பத்தாண்டுகளுக்கு முன்பு, போக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்ட பொழுது, இராணுவத்திற்கு செலவிடப்பட்ட தொகையை விட, மூன்று மடங்கு அதிகம்; மைய அரசு, இந்திய நாட்டு மக்களின் கல்விக்காக ஒதுக்கும் தொகையைவிட இராணுவச் செலவு 3.6 மடங்கு அதிகம்; 100 கோடி மக்களின் நலவாழ்வுக்காக ஒதுக்கப்படும் தொகையைவிட 5.6 மடங்கு அதிகம்.

இராணுவத்திற்குச் செலவு செய்வதைக் கணக்குப் பார்த்தால், உள்நாட்டுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த முடியாது என்ற வாதம் மூலம், இராணுவ ஒதுக்கீடு நியாயப்படுத்தப்படுகிறது. ஆனால், இராணுவச் செலவை ஆராய நியமிக்கப்பட்ட அருண்சிங் கமிட்டியால் கூட, இப்பூதாகரமான செலவை நியாயப்படுத்த முடியவில்லை. இராணுவச் செலவில் 15 சதவீதத்தைக் குறைக்க வேண்டும் என அக்கமிட்டி அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.

காயலாங்கடைக்குப் போக வேண்டிய அமெரிக்காவின் ட்ரென்டன் என்ற போர்க் கப்பலை, பல நூறு கோடி ரூபாய் செலவில் இறக்குமதி செய்யும் அளவிற்கு இராணுவத்தில் ஊதாரித்தனம் தலைவிரித்தாடுகிறது. அதிகாரிகளும்ஆயுதத் தரகர்களும் சேர்ந்து கொண்டு கமிசன் அடிப்பதற்காகவே தரம் குறைந்த போர்த் தளவாடங்கள் போஃபர்ஸ் பீரங்கி, இசுரேலின் பாராக் ஏவுகணை போன்றவை வாங்கப்படுகின்றன. இந்த ஊதாரித்தனமும், ஊழலும் தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் மூடி மறைக்கப்படுகிறது.

இந்திய அரசு பிப்ரவரி 1994இல் அக்னி ஏவுகணையைப் பரிசோதிக்கத் தொடங்கிய பொழுது, இந்தியா, தனது அனைத்து ஏவுகணைப் பரிசோதனைகளையும் உடனே நிறுத்த வேண்டும் என அமெரிக்கா கண்டித்தது. அப்பொழுது இந்தியப் பிரதமராக இருந்த நரசிம்மராவ், அமெரிக்காவைச் சமாதானப்படுத்த அந்நாட்டுக்கு ஓடினார். ஆனால் இப்பொழுதோ, அக்னி3 ஏவுகணைப் பரிசோதனை பற்றி அமெரிக்கா வாய் திறக்க மறுக்கிறது.

அமெரிக்காவின் இந்த மாற்றம், இந்தியா “”வல்லரசாகி<<<<” விட்டதைக் குறிக்கவில்லை. மாறாக அமெரிக்கா, ஆசிய கண்டத்தில் தனது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ள ஜப்பான், இசுரேல், பாகிஸ்தான் ஆகிய நாடுகளோடு இந்தியாவையும் பயன்படுத்திக் கொள்ளத் திட்டம் போட்டு வருகிறது. 21ஆம் நூற்றாண்டுக்கான புதிய உலக ஒழுங்கமைவு என்ற அமெரிக்காவின் மேலாதிக்கத் திட்டம், ஆசியாவில், சீனாவை அமெரிக்காவின் போட்டியாளராகக் குறிப்பிடுகிறது. சீனாவைக் கண்காணிக்க, உருட்டி மிரட்ட இந்தியாவைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது அமெரிக்காவின் கணக்கு.

இந்தத் திட்டத்தின் அடிப்படையில் தான், இந்திய  அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்; இந்திய  அமெரிக்க இராணுவ ஒப்பந்தம் ஆகியவை போடப்பட்டுள்ளன. 3,500 கி.மீ., 5,000 கி.மீ தாண்டிச் செல்லும் ஏவுகணைகளை இந்தியா தயாரிப்பதை, அமெரிக்கா கண்டுகொள்ளõமல் இருப்பதை இந்தப் பின்னணியில் வைத்துதான் பார்க்க வேண்டும்.

தனது தற்காப்புக்கு அணு குண்டுகளையும் ஏவுகணைகளையும் தயாரித்துக் கொள்ளும் உரிமை இந்தியாவிற்கு உண்டென்றால், மற்ற ஏழை நாடுகளுக்கும் அந்த உரிமை உண்டு. ஆனால், இந்தியாவோ, அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு, ஏழை நாடுகள் அணுசக்தி என வாயைத் திறப்பதற்குக் கூடத் தடை போடுகிறது. சர்வதேச அணுசக்தி முகமையில், ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்ததை இந்த நாட்டாமைக்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

அமெரிக்காவுக்கு அடியாள் வேலை செய்வதன் மூலம், தெற்காசியாவில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள முயலுகிறது, இந்தியா. இந்த அமெரிக்க அடிமைத்தனத்தையும், பேட்டை ரௌடித்தனத்தையும் மூடி மறைப்பதற்காகவே, இந்திய அரசு, உள்நாட்டுப் பாதுகாப்பு, பாக்சீன அச்சுறுத்தல்கள், வல்லரசுக் கனவு போன்றவற்றை ஊதிப்பெருக்கி வருகிறது.

விவசாய உற்பத்தி வீழ்ச்சியாலும், விலைவாசி உயர்வாலும் இந்திய நாட்டின் உணவுப் பாதுகாப்பே கேள்விக் குறியாகிவிட்டது. கல்வி தனியார்மயமானதால், அடித்தட்டு மக்களுக்கு அடிப்படை கல்வி கிடைப்பது கூட உத்தரவாதம் இல்லாமல் போய்விட்டது; கடன் வாங்கி படித்து முடித்தாலும், இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. பெரும்பாலான இந்திய மக்களுக்கு உணவு, உடை, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகள் எதுவுமே கிடைக்காமல், அவர்கள் உத்தரவாதமற்ற வாழ்க்கையை வாழ்ந்து வரும்பொழுது, தேச பாதுகாப்பு என்பதன் பொருள் என்ன? நாடு என்பது நான்கு புறமும் உள்ள எல்லைக் கோடுகள்தானா? அந்த எல்லைக்குள் வாழும் மக்களின் நலன் இல்லையா? பெரும்பாலான மக்களின் வாழ்க்கையோடு விளையாடுவது எல்லைக்கு அப்பால் இருந்து வரும் அச்சுறுத்தலா? இல்லை, இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளா?

· பாலன்

நன்றி: புதிய ஜனநாயகம்

தொடர்புடைய பதிவுகள்

இந்திய இராணுவம்: ஊழலில் நம்பர் 1

பாசிச ஜெயா அரசின் மின் கட்டண உயர்வுக்கு எதிராக புரட்சிகர அமைப்புகள் போராட்டங்கள்

தமிழகத்தில் தனியார் மின் நிறுவன முதலாளிகளின் லாபத்திற்காக மின்கட்டணம் மக்கள் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாசிச ஜெயா அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கு என்று உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் முதலாளிகளின் லாபத்திற்காகவே என்று மாற்றப்பட்டதன் தொடர்ச்சியாகவே மின்சாரமும் பன்னாட்டு மற்றும் தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்படுகின்றது. இந்த மின்கட்டண உயர்வுக்கு காரணமான தனியார்மயத்தை ஒழிப்பது ஒன்றே தீர்வாக அமையும் என்பதை வலியுறுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர்முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் 04.04.12 அன்று மாலை 4 மணியளவில் பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த பு.ஜ.தொ.முவின் மாநில இணைச்செயலர் தோழர். ஜெயராமன் ” இன்று மின்கட்டண உயர்வு என்பது இடி போல உழைக்கும் மக்களைத்தாக்கி நிலைகுலைய வைத்துள்ளதையும் பால், பேருந்து கட்டணத்தை தொடர்ந்து  மின்கட்டண உயர்வை  அறிவித்து தனியார் முதலாளிகளுக்கு சேவை செய்யும் பாசிச ஜெயா அரசை கண்டித்தும் இந்த விலை உயர்வுக்கு எதிராக போராடும் மக்களை ஒடுக்க போலீசின் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்த சூழலில் உழைக்கும் மக்கள் புரட்சிகர அமைப்புக்களுடன் கரம் கோர்த்து நிற்க வேண்டிய அவசியத்தையும் ” வலியுறுத்தினார்.
அடுத்ததாக கண்டன உரை பேசிய பு.ஜ.தொ.முவின் மாநில அமைப்புச் செயலர் தோழர்.வெற்றிவேல் செழியன் ” பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இருக்க வேண்டிய மின்சாரம் தனியார் முதலாளிகளின் லாபத்திற்காக விற்பனை பொருளாக ஒரு பண்டமாக மாற்றப்பட்டிருப்பதுதான் இந்த மின்கட்டன உயர்விற்கு காரணம் . பொது மக்களின் சொத்தான மின்சாரத்தை தனியாருக்கு கொடுப்பதற்காகவே மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உருவாக்கப்பட்டதை அம்பலப்படுத்தியும் மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் அனைத்து அரசாங்கங்களும் தனியார் முதலாளிகளுக்கு சேவை செய்வதையே நோக்கமாக கொண்டுள்ளதையும் விளக்கினார்.
அந்த வகையில் தமிழகத்தில் பாசிச ஜெய அரசு இந்த தனியார் மயக் கொள்கையை தீவிரமாக அமுல்படுத்தி மக்களை கொன்று வருவதையும், மின்வாரியம் நட்டம் என்பதே திட்டமிட்ட சதி என்றூம் 5 தனியார் மின் முதலாளிகளின் லாபத்திற்காக கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்வு பறிக்கப்படுவதையும், இந்த தனியார்மய தாராளமய உலகமய கொடுமையை எந்த ஒரு ஓட்டுக்கட்சியும் எதிர்க்காமல் உள்ளனர் என்றும் இந்த தனியார்மய தாராளமய கொள்கைகளை ஒழிக்க புரட்சிகர அமைப்புக்களின் தலைமையில் மக்கள் அணி திரண்டு போராட வேண்டியதையும் வலியுறுத்தினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் , மாணவர்கள், தொழிலாளிகள் என 250 பேர்கள் வரை கலந்து கொண்டனர்.

கரூரில் புமாஇமு சார்பில் மின்கட்டண உயர்வுக்கு எதிராக நடந்த பொதுக்கூட்டம் குறித்த பத்திரிக்கை செய்தி, புகைப்படங்கள்…

சூதாடிகளுக்கு சோரம் போன கிரிக்கெட் கழிசடைகள் தேசப்பற்றாளர்களா?

ஐ.பி.எல் கிரிக்கெட் மோசடியில் உங்களுக்குப் பங்கில்லையா?

தொடர்புடைய பதிவுகள்:

ஐ.பி.எல் எனும் பன்றிக் காய்ச்சல் – ஒரு எச்சரிக்கை கார்ட்டூன்!

நன்றி: தினமணி

ஐ.பி.எல் கிரிக்கெட் மோசடியில் உங்களுக்குப் பங்கில்லையா?

மின் கட்டண உயர்வு:இன்று(4.4.12) சைதை பனகல் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம்!

பாசிச ஜெயா அரசே!பிணந்திண்ணிக் கழுகே! 

  • மின் நிறுவன முதலாளிகளின் பையை நிரப்ப….
  • மின்சார ஒழுங்குமுறை ஆனையம் மக்கள் தலையில் திணித்துள்ள மின் கட்டண உயர்வை திரும்பப்பெறு!

உழைக்கும் மக்களே!

  • மின்சாரம் வணிகப்பொருளல்ல – அது மக்களின் அடிப்படை தேவை!நம் அனைவரின் சொத்து!!
  • மின்சாரத்தை சரக்காக்கி கொள்ளையடிக்கும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களை அரசுடையாக்கப் போராடுவோம்!
  • தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட ஓரணியில் திரள்வோம்!

 ஆர்ப்பாட்டம்

4.4.12 புதன் கிழமை மாலை 5 மணி , சைதை பனகல் மாளிகை

ம.க.இ.க – பு.ஜா.தொ.மு – பு.மா.இ.மு – பெ.வி.மு

தொடர்புக்கு –

அ.முகுந்தன் – 95518 69588

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம்: பாசிச ஜெயா அரசைக் கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்!

ஐ.பி.எல் கிரிக்கெட் மோசடியில் உங்களுக்குப் பங்கில்லையா?

“365 நாளும் நடக்கட்டும்
மண்ணில், விண்ணில், பேச்சில், எழுத்தில்
அதுவே பேசப்படட்டும்.
ஆட்டங்களில் சூடு பறக்கட்டும்
ஆரவாரங்களில் போதை ஏறட்டும்
விறுவிறுப்பில் நாடு மறக்கட்டும்
விளையாட்டில் தேசம் திருடப்படட்டும்”

சென்னை அணியும், மும்பை அணியும் மோதும் பந்தயத்தை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் தமிழ் என்பதால் சென்னை அணியின் வீரர்கள் அடிக்கும் போது நான்கும், ஆறும் பறக்காதா என்று உங்கள் வயிற்றில் மெல்லிய பதட்டம். சென்னை அணி வென்ற பிறகும் உங்கள் சிந்தனை அந்தக் காட்சியினைப் பின்தொடர்கிறது. கோப்பை வழங்குதல் முடிந்தாலும் மனதில் வழியும் கேளிக்கை உணர்ச்சி நிற்கவில்லை. என்னமோ, ஏதோ இனம் புரியாத ஒரு உணர்வு. இத்தகைய உணர்ச்சி உண்மையெனில் நீங்கள் கிரிக்கெட்டால் வீழ்த்தப்பட்ட ஒரு விரும்பிப் பறிபோன இந்தியக் குடிமகன்.

காலனிய விளையாட்டு காசு கொட்டும் விளையாட்டாய் ஆனது எப்படி?

இந்தியாவை ஆட்சி செய்து களைத்துப்போன வெள்ளையர்கள் பொழுது போக்கிற்காக ஆபத்தில்லாத விளையாட்டாக கிரிக்கெட்டை விளையாடிதோடு, தங்கள் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த மெக்காலே கல்வி கற்ற இந்தியக் குமாஸ்தாக்களுக்கும் கற்றுக்கொடுத்தார்கள். பார்ப்பன மேல் சாதியினரைக் கொண்டிருந்த இந்த அதிகார வர்க்கமும், சமஸ்தானத்து மன்னர்களும், பண்ணையார், மிட்டா மிராசுகளும் கிரிக்கெட்டிற்கு இந்திய அஸ்திவாரம் போட்டார்கள்.

அந்தக் காலத்தில் ஐந்து நாள் டெஸ்ட் போட்டிகளை வானொலி மூலம் பெருமைபடக் கேட்கும் கூட்டத்தினர் மேற்கண்டவர்களின் வழியில் கிரிக்கெட்டின் இரசனையை கீழே வரை பரப்பினர். பின்னர் அறிவியல் தொழில் நுட்பப் புரட்சியின் காரணமாக நேரடி ஒளிபரப்பு சாத்தியமானதும் கூடவே ஒரு நாள் பந்தயங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. தொலைக்காட்சி விளம்பரங்களும், இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இருந்த மிகப்பெரிய சந்தையும் இணைந்து இதன் வர்த்தக மதிப்பை ஆயிரக்கணக்கான கோடிகளில் எகிற வைத்தன.

உலகக் கோப்பை கிரிக்கெட்டும், இந்தியத் துணைக் கண்டத்தின் சந்தை மதிப்பும், கிரிக்கெட்டை இந்திய முதலாளிகளின் ஆதிக்கத்தின் கீழ் தவிர்க்க முடியாத வண்ணம் கொண்டு சேர்த்தன. மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்த 2007 உலகக் கோப்பைக் கிரிக்கெட்டில் இந்திய அணி குறைந்த பட்சம் அரையிறுதிக்காவது தகுதி பெறும் என்று பெரும் மூலதனத்தை முதலீடு செய்திருந்த முதலாளிகள் பின்னர் இந்திய அணி முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியதால் கையை சுட்டுக் கொண்டனர்.

இந்திய அணி எப்போதும் வெற்றிபெறுவது சாத்தியமில்லாதது. வெற்றி பெறும் ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய முதலாளிகள் ஸ்பான்சர் செய்வதும் இயலாது. இவை எல்லாவற்றிற்கும் தீர்வு தரும் முறையில்தான் கிரிக்கெட்டின் எதிர்கால வர்த்தகம் உண்டு என்பதை உணர்ந்து கொண்ட முதலாளிகளின் ஒரு பிரிவு உருவாக்கியதுதான் ஐ.சி.எல் கோப்பை போட்டி.

21ஆம் நூற்றாண்டில் அறிமுகமாகி, பிரபலமாகிவிட்ட இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் மூலம் இந்த விளையாட்டும் மற்ற விளையாட்டுகள் போல ஒரிரு மணி நேரங்களுக்குள் ஆடும்படியான அம்சத்தை கொண்டிருந்தது. இதனால் கிரிக்கெட்டை நேரிலும், சின்னத்திரையிலும் பார்க்கும் கண்களை வகை தொகையில்லாமல் அதிகப்படுத்தலாம் என்று முதலாளிகள் கண்டு கொண்டனர்.

அப்படித்தான் Z டி.வி முதலாளிகள் இருபது ஓவர் போட்டிகளை ஐ.சி.எல் என்று சர்வதேச வீரர்களைச் சேர்த்துக் கொண்டு நடத்த ஆரம்பித்தனர். உலகிலேயே கிரிக்கெட்டை வைத்து அதிகம் சம்பாதிக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஏகபோகத்தை தகர்க்கலாம் என்று அவர்கள் நினைத்தனர். ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலே (ஐ.சி.சி)  இந்திய சங்கத்தின் ஆதிக்கத்தில் இருக்கும் போது ஐ.சி.எல் எதிர்பார்த்தது போல களை கட்ட அனுமதிக்கப்படவில்லை.

லலித் மோடியின் ஐ.பி.எல்லும் அதன் அசுரவளர்ச்சியும்

ஆரம்பத்திலிருந்தே இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சங்கத்தை பெரிய இடத்து மனிதர்கள்தான் நிர்வகித்து வந்தனர். இன்றும் கூட முதலாளிகளும், அரசியல்வாதிகளும்தான் சங்கத்தின் கடிவாளத்தை வைத்திருக்கின்றனர். சரத்பவார், காங்கிரசின் சுக்லா, பி.ஜெ.பியின் அருண் ஜெட்லி, முதலான அரசியல்வாதிகளும் பல்வேறு முதலாளிகளும் சங்கத்தில் உள்ளனர். முக்கியமாக கிரிக்கெட் ஒரு பணம் காய்ச்சி மரமென்று தெரிந்த உடன் இந்த போக்கு எழுதப்படாத விதியாக மாறிவிட்டது.

இப்படி கிரிக்கெட்டிற்கு மக்களிடம் இருக்கும் பேரார்வமும், அரசியல்வாதிகள், அதிகாரிகள், முதலாளிகள் என அனைத்து மேல்மட்டப் பிரிவினரிடமும் இருக்கும் செல்வாக்கையும் புரிந்து கொண்ட லலித் மோடி முழுவீச்சில் அறிமுகப்படுத்தியதுதான் ஐ.பி.எல். இதற்குத் தேவையான எல்லா உதவிகளையும் பி.சி.சி.ஐ யும் ஐ.சி.சி. யும் செய்து கொடுத்தது. புதிய வழிகளில் கோடிகள் கொட்டப்ப் போகிறது என்பதால் அவர்களும் இதில் ஆதாயமடையலாம் என்பதை மோடி உறுதி செய்தார். ஏற்கனவே மேட்ச் பிக்சிங் போன்ற ஊழல்கள் வெளியே தெரியும்படியாக பரவியிருந்த்தால் கவலைப்பட்ட முதலாளிகளுக்கு அப்படி ஒரு பிக்சிங் தேவைப்படாமலேயே பணத்தை சுருட்டலாம் என்பதை மோடி நிரூபித்துக் காட்டினார்.

விளையாட்டு உணர்ச்சியை வர்த்தகமாக்கிய  கிளப் போட்டிகள்!

பல்வேறு விளையாட்டுக்களில் கிளப் பாணி போட்டிகள் இருந்தாலும் கால்பந்தில் அது மிகவும் பிரபலம். குறிப்பாக ஐரோப்பாவில் நடக்கும் இந்த கிளப் கால்பந்து போட்டிகளில் பல பில்லியன் டாலர் பணம் புரள்கிறது. இதன் மூலமாகத்தான் தேசிய அணிகளின் மோதலாக பிரபலமடைந்திருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் சர்வதேச கால்பந்து சங்கம் ஒரு பிரம்மாண்டமான பன்னாட்டு நிறுவனம் போல வளர்ந்திருக்கிறது.

முதலாளித்துவ நாடுகளில் கால்பந்துக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு காரணமாக இதன் பரிமாணம் பரந்து விரிந்து கிடக்கிறது. நாடுகளுக்காக ஆடும் வீரர்கள் தங்களது திறமையைக் காட்டிவிட்டால் போதும், பிறகு அவர்கள் ஆயுசுக்கும் கஷ்டமில்லை என்பதாக கோடிகளை கிளப்போட்டிகளில் அள்ளலாம். ஐரோப்பாவில் உள்ள பல்வேறு கிளப் முதலாளிகள் திறமையான வீரர்களை வாங்குவதற்கு போட்டி போடுவர். கிளப்புகளை பின்னணியில் இருந்து கட்டுப்படுத்தும் முதலாளிகளும், கால்பந்தை வைத்து விளம்பரம் செய்யும் பன்னாட்டு முதலாளிகளும் இதன் வர்த்தக மதிப்பை தீர்மானிக்கின்றனர். அமெரிக்காவில் இருக்கும் கூடைப்பந்து மற்றும் பேஸ்பால் லீக்-களும் கிளப் வகை போட்டிகள்தான். இங்கும் கிளப்புகளை முதலாளிகள்தான் கட்டுப்படுத்துகின்றனர்.

விளையாட்டில் தேசியவெறி மட்டும் இருக்காது கிளப் வெறியையும் உருவாக்க முடியும் என்பதை இந்த சர்வதேச அனுபவங்கள் நிரூபிக்கின்றன. முக்கியமா தேசிய வகை போட்டிகளில் குறிப்பிட்ட அணி வெற்றி பெற்றால்தான் அந்த அணி வீரர்களை வைத்து செய்யப்படும் விளம்பர முதலாளிகள் ஆதாமடையும் என்ற ரிஸ்க் கிளப் போட்டிகளுக்கு இல்லை.  ஐ.பி.எல்லும் முதலாளிகளின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருப்பதற்கு இது ஒரு முக்கியக் காரணமாகும். இந்திய அணியை ‘தேசப்பற்றுடன்’ ஆதரித்துக் கொண்டிருந்த இரசிகர்கள் இன்று பிராந்திய அணியினை ஆதரிப்பவர்களாக உடனடியாக மாறினர்,  வெள்ளையர்களும், வேற்று மாநிலத்தவர்களும், நாட்டவர்களும் இருந்தாலும் இந்த ‘நம்ம டீம்’ உணர்வு சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது.

தொழிற்துறை முதலாளிகளை ஈர்த்த கிரிக்கெட்டின் பெரும் வர்த்தகம்!

இத்தகைய பின்புலத்தில்தான் லலித்மோடியால் ஐ.பி.எல் போட்டிகள் திறமையாக வடிவமைக்கப்பட்டது. எட்டு அணிகள், எட்டு முதலாளிகள், எட்டு முதலாளிகளின் பின்னே உள்ள மற்ற முதலாளிகளின் விவரம் தெரிவிக்கப்படாமை, வீர்ர்களை ஏலம் எடுக்கும் உரிமை, எங்கிருந்து வேண்டுமானாலும் முதலீடு செய்யும் வசதி, அணிகளை ஏலத்தின் மூலம் முதலாளிகள் வாங்கும் வசதி, அந்த ஏலத்தை சிண்டிகேட் அமைத்து நிதானப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு, விளம்பரம், போட்டிகள் மூலம் அணி உரிமையாளர்கள் இலாபம் காண்பதற்கு உத்திரவாதம், ஒளிபரப்பும் உரிமை மூலம் ஊடக முதலாளிகள் பணம் அள்ளுவதற்கு வாய்ப்பு, இதையெல்லாம் அனுமதித்து கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு பி.சி.சி.ஐக்கு தரப்படும் கப்பம், என்று ஐ.பி.எல்லின் மூலம் கிரிக்கெட் புரட்சியை லலித் மோடி பிரம்மாண்டமாக விற்பனை செய்திருக்கிறார். Z டிவியின்  ஐ.சி.எல்லை ஒழிப்பதற்க்காக இறக்கப்பட்ட அங்கீகாரிக்கப்பட்ட ஒன்றைப்போல போல தோற்றம் கொண்டிருந்தாலும் ஒரே வருடத்தில்  அதுவே தனியாக தனது சாம்ராஜ்ஜியத்தைப் பரப்பத்துவங்கியது.

அமெரிக்காவில் அபின் வைத்திருந்த்தாகவும், ஆள் கடத்தலில் ஈடுபட்டதாகவும் குற்றம் நிரூபிக்கப்பட்ட முதலாளி மைனரான லலித் மோடியின் கிரியேட்டிவிட்டி ஐ.பி.எல்லில் பூத்துக் குலுங்கியதை எல்லா முதலாளிகளும் பாராட்டியிருக்கின்றனர். சென்ற முறை பாராளுமன்றத் தேர்தலின் போது போட்டிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது சிரமம் என்ற பிரச்சினை வந்த போது போட்டியையே தென்ஆப்பிரிக்காவுக்கு மாற்றி வெற்றிகரமாக நடத்திக்காட்டினார் மோடி. இனி வருங்காலத்தில் ஐ.பி.எல் போட்டியின் போதுதேர்தல் வந்தால் தேர்தலைத்தான் ஒத்திவைப்பார்கள் எனுமளவுக்கு ஐ.பி.எல் நிர்வாகம் தனி அரசையே நடத்திவருகிறது.

நேரடிப் போட்டிகளைக் காண பன்மடங்கு விலை உயர்த்தப்பட்ட மதிப்பிலான டிக்கெட்டுகள், திரையரங்கத்தில் பல மடங்கு கட்டணம் வாங்கிக் கொண்டு போட்டிகளைக் காண ஏற்பாடு, இணையத்தில் யூ டியூப் உதவியுடன் நேரடி ஒளிபரப்பு, மொபைல் ஃபோன்களில் ரீப்ள்ளே என்று தொழில்நுட்பத்தில் எல்லா சாத்தியங்களோடும் ஐ.பி.எல் தனது வர்த்தக்த்தை வேர்விடச்செய்திருக்கிறது.

அம்பானியும், இந்திய சிமெண்ட்ஸ் சீனிவாசனும், டெக்கான் குரோனிக்கிளின் ராமோஜி ராவும், விஐய் மல்லயாவும் இன்று மக்களின் ஆதரவு பெற்ற ஐ.பி.எல் அணி முதலாளிகளாகப் பரிணமித்திருக்கின்றனர் என்றால் அவர்கள அதற்கு லலித் மோடிக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் இந்த முதலாளிகளிடம் பணியாற்றும் தொழிலாளிகள் வேலைநிறுத்தம் செய்தாலும் மக்களின் ஆதரவைப் பெறமுடியாத செல்வாக்கை இரசிகர்கள் இம்முதலாளிகளுக்கு கொடுக்க முடியும். மேலும் ஷாருக்கான், ப்ரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி, முதலான சினிமா முதலாளிகள் பினாமி வேடத்தில் அணி உரிமையாளர்களாக முன்னேற்றம் அடைந்திருப்பதற்கும் மோடியே காரணம். இதனால் மார்க்கெட்டை பெற்ற, இழந்த எல்லா நட்சத்திரங்களும் பினாமி முதலாளிகளின் முகவராக வலம் வருவர்.

இன்று ஐ.பி.எல்லின் வர்த்தக மதிப்பு பற்றி தினசரிகளில் புதிய புதிய கதைகள் நாளொருமேனி பொழுதொரு வண்ணம் வந்த படி இருக்கின்றன. இன்று ஒட்டு மொத்தமாக ஐ.பி.எல்லின் வர்த்தக மதிப்பு 20,000த்தில் தொடங்கி 50,000 கோடிகள் வரை இருக்குமென்று ஊகிக்கப்படுகிறது. 2008இல் சிலநூறு கோடிகளுக்கு எடுக்கப்பட்ட அணிகளின் மதிப்பு இன்று சில ஆயிரம் கோடி என்று உயர்ந்திருக்கிறது. மூன்று ஆண்டுகளாக தலா 60 போட்டிகள் என்று மொத்தம் 180 போட்டிகள் நடந்திருக்கின்றன. இந்த 180 ஆட்டங்களுக்கான வர்த்தக மதிப்பு பல ஆயிரம் கோடி என்பதை நம்பத்தான் முடியவில்லை. ஒன்றரை மாதமாக நடக்கும் ஐ.பி.எல் போட்டிகள் முதலாளிகளைப் பொறுத்தவரை ஆண்டு முழுவதும் பணத்தை அள்ளிக் கொடுக்கின்றன.

ஆளும்வர்க்கங்களின் ஆசியுடன்தான் ஐ.பி.எல் மோசடிகள்!

இன்று ஐ.பி.எல் மோசடிகளை இந்திய அரசு பயங்கரமாக புலனாய்வு செய்வதாக நடிக்கிறது. எட்டு அணிகளை வைத்தே இவ்வளவு கொள்ளையடிக்க முடியுமென்றால் இன்னும் எத்தனை அணிகளை சேர்க்க முடியுமோ அத்தனையும் கொள்ளை இலாபம்தான் என்பதை முதலாளிகள் உணராமலில்லை. இப்படித்தான் கொச்சி, புனே அணிகள் ஏலமிடப்பட்டு தலா 1,500 கோடிகளுக்கு விலை போயிருக்கின்றன. இனி ஆண்டுக்கு 90 பந்தயங்களாம்.

இதில் கொச்சி அணியை உருவாக்குவதற்கு துணைநின்ற முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் தனது தோழியான சுனந்த புஷ்காருக்கு 70கோடி மதிப்பிலானா பங்குகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார். கொச்சிக்குப் பதில் அகமதாபாத் அணி வென்றிருந்தால் லலித்மோடிக்கும் வேறு சில முதலாளிகளுக்கும் ஆதாயம் கிடைத்திருக்கும். அந்த ஆத்திரத்தில் ஐ.பி.எல் வளர்ச்சியினால் தன்னை அளவு மீறிய ஆண்டவனாகக் கருதிக் கொண்ட லலித்மோடி கொச்சி அணியின் பினாமி இரகசியங்களையும், சசிதரூரின் பங்கையும் வேண்டுமென்றே வெளியிட்டார்.

இத்தகைய இரகசியங்களை வெளியிடக்கூடாது என்பதுதான் ஐ.பி.எல்லின் சட்டதிட்டம். எனினும் முதலாளிகள் மக்களிடமிருந்து பெறும் இலாபத்தை சண்டை சச்சரவு இல்லாமல் எப்போதும் அமைதியாக பிரித்துக் கொள்வார்கள் என்பது எப்படி ஒரு மூடநம்பிக்கையோ அது போல இதுவும் ஏதோ ஒரு காரணத்தை வைத்து வெளிவந்தே தீரவேண்டும். இங்கே அது ஒரு அழகுக்கலை அலங்காரத் தொழிலைச் செய்யும் ஒரு சீமாட்டியை வைத்து வந்திருக்கிறது.

லலித் மோடியால் மந்திரி பதவியைத் துறக்கும் நிலைக்கு ஆளான சசிதரூர் பதிலுக்கு லலித் மோடி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கொண்டிருக்கும் பங்கு மற்றும் ஐ.பி.எல்லை வைத்து அவர் ஒரிரு வருடங்களில் சம்பாதித்திருக்கும் சில ஆயிரம் கோடிகளையும் பற்றி கசியவிட்டார். அப்புறம் ஏகப்பட்ட பூனைக்குட்டிகள் வெளிவரத்துவங்கின.

பி.சி.சி.ஐயில் இருக்கும் நிர்வாகிகள் எவரும் கிரிக்கெட்டை வைத்து வர்த்தக ஆதாயம் அடையக்கூடாது என்பது கூட ஐ.பி.எல்லுக்காக தளர்த்தப்பட்டது என்கிறார் ஸ்பிக் முத்தையா. அவரது தொழில் எதிரியான இந்தியா சிமிண்ட்ஸ் சீனிவாசன் பி.சி.சி.ஐயில் செயலாளராக இருக்கும்போதே சென்னை அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார். மற்ற நிர்வாகிகளும் கூட பல பினாமிகளின் பெயரில் பல அணிகளின் பின்னே ஒளிந்து கொண்டிருக்கலாம்.

முதலாளிகளின் நேரடிப் பிரதிநிதியாக அரசியலில் இருப்பவர் சரத்பவார். முன்னாள் பி.சி.சி.ஐயின் தலைவராக இருந்து வேலை செய்த நேரம் போக உணவுத் துறை அமைச்சராக பொழுது போக்கியவர். மேற்கு மராட்டியத்தின் சர்க்கரை ஆலைகளை கட்டுப்படுத்தும்  பெருமுதலாளியான சரத்பவார் லலித்மோடியின் தீவிர ஆதரவாளராவார். சொல்லப்போனால் லலித்மோடி கூட ஓரவளவுக்கு சரத்பவாரின் பினாமி என்றால் மிகையில்லை. சரத்பவாரின் கட்சியைச் சேர்ந்த பிரஃபுல்பட்டேல் விமானத்துறை அமைச்சராகவும் இருக்கிறார். இவரது மகள் பூர்ணா ஐ.பி.எல் நிர்வாகத்தின் விருந்தோம்பல் குழுவின் தலைவராம். இவரது செல்வாக்கில்தான் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டு கிரிக்கெட் வீரர்களின் தனிப்பட்ட பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாம்.

காங்கிரசைச் சேர்ந்த எம்.பியான சுக்லாவும், பா.ஜ.கவைச் சேர்ந்த அருண்ஜேட்லியும் பி.சி.சி.ஐ நிர்வாகிகளாகவும் இருக்கிறார்கள். லல்லு போன்ற சமூகநீதி அரசியல்வாதிகள் கூட மாநில அளவிலான கிரிக்கெட் சங்கங்களில் இருந்திருக்கிறார்கள். நாளைக்கு சசிகலாவும், அழகிரியும் கூட தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகளாக இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இப்போது வெளிவந்த மோசடிகளின் படி இந்தப் பகல் கொள்ளையில் முதலாளிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஊடகமுதலாளிகள் எல்லோரும் சேர்ந்தே கூட்டணி வைத்து நடத்தியிருக்கின்றனர். மொரிஷியஸ் நாட்டிலிருந்து இந்தியாவில் முதலீடு செய்தால் வரி இல்லை என்பதை வைத்து எல்லா ஐ.பி.எல் அணிகளின் பினாதி முதலீடும் அந்த தீவிலிருந்துதான் வந்திருக்கின்றன. அந்தத்தீவுக்கு வந்த பணம் ஸ்விஸ் வங்கியிலிருந்து வந்திருக்கிறது. இந்தியாவிலிருந்து கருப்பு பணம் ஸ்விஸ் நாட்டுக்கு போயிருக்கிறது. இதன் அளவு ஐந்து இலட்சம் கோடிகள் என்பது ஏற்கனவே வெளிவந்த விசயம்.

மத்திய இந்தியாவில் பழங்குடி மக்களை ஒழிக்க மாவோயிஸ்ட்டுகளின் மீதான போர் தொடுத்திருக்கும் இந்திய அரசின் அமைச்சர்கள் இந்தப் பிரச்சினைக்கு அடுத்தபடியாக இப்போதைக்கு கவலைப்படும் விசயம் ஐ.பி.எல் மோசடிகள். அதுவும் எப்படியோ கசிந்துவிட்ட இந்த ஊழலை இதற்கு மேல் முட்டு கொடுத்து நிறுத்தவதற்கு பிரதமர், ப.சிதம்ரம், பிரணாப் முகர்ஜி, சோனியா எல்லோரும் அல்லும் பகலும் தனியாகவும், சந்தித்தும் வேலை செய்கிறார்கள். மக்களை தற்காலிகமாக ஏமாற்றுவதற்காக வருமானவரித்துறையும், அமலாக்கத்துறையும் ஐ.பி.எல் முதலாளிகளின் அலுவலகங்களை சோதிப்பதாக சீன் போடுகிறார்கள்.

சசிதரூர் கூட தனது வாய்க்கொழுப்பினாலும், வெட்டி பந்தாவினாலும்தான் அமைச்சர் பதவியை இழந்திருக்கிறார். இந்த மோசடி ஆட்டத்தில் வெளியே தெரியாமல் பணிவாக ஆடவேண்டும் என்ற விதியை அவர் மீறியதால்தான் இந்தப்பதவி இழப்பு. அதே போல இப்போது லலித் மோடி மீது அவருக்கு போட்டியான முதலாளிகள், அரசியல்வாதிகள் குழுவிலிருந்து நிர்ப்பந்தம் வந்திருப்பதால் அவரையும் நீக்கியிருக்கிறார்கள். எனினும் இவ்வளவு அப்பட்டமான ஊழல் மோசடி நாயகனைக் கூட அம்பானி, விஜய் மல்லையா, சரத்பவார் போன்றவர்கள் ஆதரித்தார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஊடகங்கள் கூட இந்த மோசடிகளை ஒரு பரபரப்பிற்காக வேறு ஒரு பகைமை காரணமாகவும் வெளியிடுகின்றன. முக்கியமாக இந்த ஆண்டு ஊடகங்கள் செய்தி நேரத்தில் ஐ.பி.எல்லின் பந்தயங்களை நேரடியாக காட்டக்கூடாது, சமீபத்திய பதிவையும் காட்டக்கூடாது என்ற விதிகள் ஊடக முதலாளிகளுக்கு கடுப்பேற்றியிருக்கலாம். லலித்மோடியை அம்பலப்படுத்துவதன் மூலம் எதிர்கால நிர்வாகத்திற்கு தோழமையுடன் தெரிவிக்கக்கூடிய விமரிசனமாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

இனி புதிய நிர்வாகிகளின் கீழ் ஐ.பி.எல் நிர்வாகம் மாற்றியமைக்கப்படும் என்கிறார்கள். இதன்படி கொள்ளைப் பணத்தை எல்லா முதலாளிகளும் சரிசமமாக பிரித்துக் கொண்டு லலித்மோடி போட்ட ராஜபாட்டையில் அதே போலத்தான் பயணிக்கும். லலித் மோடி போனாலும் அவரது மோடியிசம் என்ற அமைப்பு முறையை இவர்கள் தகர்க்கப் போவதில்லை. இப்போது வெளிநாட்டு வீரர்களுக்கு அளிக்கப்பட்ட பணம் ரிசர்வ் வங்கிக்குத் தெரியாமலே சென்றிருக்கிறது என்ற தொழில்நுட்பமெல்லாம் புதிய நுட்பங்களால் நிரப்பப்படும். சுவிஸ் வங்கியில் இருக்கும் கருப்புப் பணம் மொரிஷியஸ் வழியாக இந்தியா வரும் இரகசிய வழித்தடங்கள் இப்போது போல வெளிப்படையாக தெரியாத வண்ணம் மறைக்கப்படும். மற்றபடி இரசிகனுக்கு தேவை  சிக்ஸரும், விக்கெட்டும் மட்டும்தான் என்பதால் இவையெல்லாம் முதலாளிகளுக்கு ஒரு பொருட்டே இல்லை.

ஐ.பி.எல் மோசடியில் இரசிகனின் பங்கு!

முதலாளித்துவ புரட்சி நிலைநிற்பதற்கு முந்தைய சமூகங்களில் விளையாட்டு என்பது சமூகம் தழுவியதாக இருந்தது. இன்றிருப்பது போல தனித்திறமைகளை வெளிப்படுத்தும் சூப்பர்மேன் வீரர்கள் அன்றில்லை. போட்டிகளும் மக்கள் எல்லாரும் கலந்து கொள்ளுமளவு அனைவரின் வாழ்விலும் விளையாட்டு என்பது இரண்டறக் கலந்திருந்தது. முக்கியமாக அவர்களது வாழ்க்கைத் தேவைகளுக்கான உழைப்பில்தான் அந்த விளையாட்டுகள் தோன்றி வளர்ந்தன.

இன்று அறிவியல் தொழில்நுட்ப புரட்சியின் காலத்தில் தனது உடலின் அதீத திறமைகளை காட்டும் சூப்பர் வீரர்கள் தோன்றி விட்டார்கள். நூறு மீட்டரை ஒன்பதே முக்கால் விநாடிகளில் கடந்து விட்ட சாதனை எதிர்காலத்தில் ஒன்பது, எட்டு, ஏழு என்று கூட வரலாம். ஆனால் உலகின் எந்த மூலையில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளையும் நேரடி ஒளிபரப்பில் காணும் வசதியைக் கண்டிருக்கும் இக்காலத்தில், அந்த அளவுக்கு விளையாட்டு என்பது சமூகமயமாவதற்குப் பதில் மக்களின் வாழ்விலிருந்து அன்னியப்பட்டுக் கொண்டிருக்கிறது.

போட்டிகளை உட்கார்ந்தபடி பார்த்து இரசிக்கும் அளவுக்கு பொருத்தமாக நடை, உடலுழைப்பு எல்லாம் இல்லாமல் ஆகிக் கொண்டிருக்கிறது. இப்படி தமது வாழ்வில் இல்லாத உடல் அசைவுகளின் நேர்த்தியான ஆட்டத்தை பார்க்கும் இரசனையை என்னவென்று சொல்வது?

இந்த உலகிலேயே சிக்கலான ஆட்ட விதிகள், நுணுக்கம் ஏதுமில்லாமல் இரசிக்கப்படும் விளையாட்டும் கிரிக்கெட்தான்.  ஸ்டெம்பு விழுந்தால் அவுட், பந்து பிடித்தால் கேட்ச், எல்லைக் கோட்டை உருண்டு தாண்டினால் நான்கு, பறந்து தாண்டினால் ஆறு என்பதை அறிந்து கொண்டாலே கிரிக்கெட் தெரிந்தமாதிரிதான் .

ஐந்து நாட்கள் போட்டியினை பொறுமையாக அசைபோடும் பெரிசுகள் ஒருநாள் போட்டி வந்தபோது மிரண்டு போனார்கள். இருபது ஓவர் போட்டி வந்தபோது புலம்பத் துவங்கினார்கள். ஆனாலும் கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் முன்பை விட பெரிதாகிக் கொண்டே வந்திருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் அறிவியல்-தொழில்நுட்ப புரட்சியும், வர்த்தக நோக்கமும் இணைந்து உருவாக்கிய பெரும் சந்தையே. கிரிக்கெட் ஒரு அமுதசுரபி என்று முதலாளிகள் புரிந்து கொண்ட பிறகு அது வெறும் விளையாட்டு என்பதை என்றோ இழந்துவிட்டது.

இன்றைக்கு மைதானத்தில் பார்க்கும் ஆட்டத்தை விட சின்னத்திரையில் பார்ப்பது என்பது விளையாட்டின் இந்திய தேசிய உணர்ச்சியாகி விட்டது. கிரிக்கெட் ஒளிபரப்பும் ஹாலிவுட் படங்களின் நேர்த்தியை விஞ்சும் வண்ணம் வளர்ந்து வருகிறது. கோக்கைக் குடித்தவாறும், லேயிஸ் சிப்ஸை கொறித்தவாறும் பார்ப்பதற்கு பொருத்தமான விளையாட்டு கிரிக்கெட் மட்டுமே என்பது இரசிகர்களின் அங்கீகாரத்தைப் பெற்று நாளாகி விட்டது. இவ்வளவு நாள் இந்திய அணியின் வெற்றிக்காக பதட்டப்பட்ட இரசிகர்கள் ஒரு மாறுதலுக்காக மாநில அணிகளுக்காக டென்ஷனாகிறார்கள்.

ஐந்து நாள், ஒரு நாள் போட்டிகளை அசைபோட்ட நேரத்தை விட இந்த குறுகிய காலப்போட்டிகள் அசைபோடப்பட்ட நேரம் அதிகம்தான். இந்த ஒன்றரை மாதமாக நாட்டின் பேசுபொருளாக ஐ.பி.எல் மட்டுமே நிகழ்ச்சி நிரலை தயாரித்திருந்தது. விளையாட்டிலிருந்து ஆட்டம், பாட்டம், இசை, ஆடை அணிவகுப்பு, குடி விருந்து, என்று எல்லா வகையிலும் அவை தொடர்ந்தது. பதிவுலகிலும் ஐ.பி.எல்லுக்காக வரையப்பட்ட இடுகைகள் எத்தனை எத்தனை?

ஏற்கனவே மதமாச்சரியங்களுக்குள் ஆழ்த்தப்ப்ட்ட இந்திய சமூகத்தின் நவீன மதமாக கிரிக்கெட் நிலை பெற்றுவிட்டது. கிரிக்கெட்டின் சமூக பொழுது போக்கு நேரங்களில் ஆழ்ந்திருக்கும் ஒரு இரசிகன் பலவற்றையும் இழக்கிறான் என்பதை அறியமாட்டான். முதலாளிகள் எதை விரும்புகிறார்களோ அதற்கேற்படி தான் உசுப்பிவிடப்படும் ஒரு உணர்ச்சிகரமான விலங்கு என்பது அவனுக்குத் தெரியாது.

பெப்சி, கோக் போன்ற முதலாளிகள் நினைத்தால் அவன் இந்திய வெறியையும், பால்தாக்கரே போன்ற இனவெறியர்கள் நினைத்தால் அவன் பாக் எதிர்ப்பு வெறியனாகவும், ஐ.பி.எல் முதலாளிகள் நினைத்தால் அவன் தேசிய இனவெறியனாகவும் மாறிவிடுவான். இந்திய அணிக்காக அவனால் பாரட்டப்பட்ட வீரர்கள் இன்று எதிர் ஐ.பி.எல் அணியில் இருந்தால் வெறுக்கப்படுவார்கள். வெளிநாட்டு வீரர்களை இந்திய அணியின் எதிரிகளாக நினைத்துப் பழக்கப்பட்டவன் இன்று அவர்களை வேட்டி கட்டிய தமிழனாகக்கூட அங்கீகரிக்கத் தயங்குவதில்லை.

முதல் ஆண்டு போட்டியில் பாக் வீரர்களை ஆரவாரத்துடன் ஏற்றவன் பின்பு லலித்மோடியின் சதியால் பாக் வீர்ர்கள் சேர்க்கப்படவில்லை என்பதையும் ஏற்றிருக்கிறான். இப்படி விற்பனைக்கேற்ற உணர்ச்சியை மாற்றி மாற்றி தரித்துக் கொள்வதில் அவனுக்கு வெட்கம் ஏதுமில்லை. அவனுக்குத் தேவை நான்கும், ஆறும்தான்.

வாடகைக்கு வீடு கிடைக்காமல் புறநகருக்கும் புறத்தே மக்கள் ஓடிக்கொண்டிருக்கும் சென்னை நகரில் மூட்டை சிமிண்டை நானூறு ரூபாய்க்கு கொள்ளை விலையில் விற்பனை செய்யும் இந்தியா சிமிண்ட்ஸ் நிறுவனம் சென்னை அணியின் உரிமையாளராக இருப்பதால் அவன் அவர்களை மன்னிக்கவும் செய்கிறான். பேருந்து நிலையத்தில் கருப்பு வெள்ளை போர்டு பேருந்து வந்தால் ஓரிரு ரூபாய்களை மிச்சப்படுத்தலாம் என்று பொறுமையாக காத்திருக்கும் அவன், சென்னை அணியின் இன்றைய மதிப்பு மூவாயிரம் கோடி என்பதை அறியமாட்டான்.

விதர்பாவில் சில ஆயிரம் ரூபாய் கடனுக்காக கொத்துக் கொத்தாய் தற்கொலை செய்திருக்கும் விவசாயிகளின் மண்ணில் புனே அணி 1500 கோடி ரூபாய்க்கு விலை போயிருக்கிறது என்பதும், ஒரிரு ஆண்டுகளில் அந்த அணியின் முதலாளி அதைப் போல பலமடங்கு சுருட்டப்போகிறார் என்பதையும் அவன் அறிய மாட்டான். உலகப் பணக்காரர்களின் வரிசையில் அணிவகுக்கும் முகேஷ் அம்பானி, மும்பை இந்தியன் அணிக்குச் சொந்தக்காரர்தான், தொழில் மோசடியில் நம்பர் ஒன் முதலாளி என்பது அவனுக்குத் தெரியாது.

ரப்பர் இறக்குமதியால் பால்வெட்டும் தொழிலாளிகள் பட்டினி கிடக்க, பாமாயில் இறக்குமதியால் தென்னை விவசாயிகள் காய்ந்து கிடக்க, தொழிலாளிகள் வரத்து இல்லாத்தால் கிராமப் புற டூரிங் தியேட்டர்கள் மூடப்படும் கேரள மண்ணில்தான் 1500 கோடிக்கு கொச்சி அணி வாங்கப்பட்டிருக்கிறது. ஐ.பி.எல் போட்டிகளில் ஒரு கேரள அணி இடம்பெற்றிருப்பதே அவனுக்கு கிடைத்திருக்கும் ஜன்மசாபல்யம்.

ஐ.பி.எல்லின் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பு என்பது அவனது சட்டைப் பாக்கெட்டிலிருந்து அவனுக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட பணம்தான் என்பது அவனுக்குத் தெரியாது.

ஃபோரும் சிக்ஸரும் மட்டுமே எண்களில்லை. வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் 32 கோடி மக்களும், ஊட்டச்சத்து இல்லாமல் சாகும் குழந்தைகளின் எண்ணிக்கையில் முதலிடத்தைப் பிடித்திருக்கும் இந்தியாவும், ஒரு ரூபாய் அரிசிக்காக ரேஷன் கடை செல்லும் ஒரு கோடி தமிழகக் குடும்பங்களும், பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காக துரத்தப்படும் மத்திய இந்தியாவின் பல்லாயிரம் பழங்குடி மக்களும், அவர்களுக்காக தங்களது உயிர்களை அன்றாடம் பலிகொடுக்கும் மாவோயிஸ்ட்டுகளும் கூட எண்களாகத்தான் செய்திகளில் பதிக்கப்படுகிறார்கள்.

ஆயினும் இந்த அழுக்கான இந்திய எண்களை விட ஐ.பி.எல்லின் அலங்காரமான ஃபோரும். சிக்ஸரும் உங்களுக்கு முக்கியமாகத் தெரிகிறது என்றால், ஐ.பி.எல் மோசடிகளின் ஊற்று மூலம் உங்கள் பலத்தில்தான்.

இப்போது ஐ.பி.எல் முடிந்துவிட்டது. அடுத்து உலகக்கோப்பை ட்வெண்டி 20 போட்டி, சாம்பியன்ஸ் லீக், ஒரு நாள் உலகக்கோப்பை போட்டி என்று அடுத்த திருவிழாக்கள் வரப்போகின்றன.இரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

முதல் பதிவு: வினவு

தொடர்புடைய பதிவுகள்: