• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,819 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

சோவியத் வீரனின் தியாகம்

தோழர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினத்தை (டிசம்பர் 21) முன்னிட்டு ….

தோழர் ஸ்டாலின் தலைமையில், ஹிட்லர் என்ற பாசிச மிருகத்திடமிருந்து உலகை காப்பாற்றிய சோவியத் வீரர்கள் பற்றிய உண்மைகதைகள் சிலவற்றை மாஸ்கோ நூலில் இருந்து தேர்தெடுத்து க்கதைகள் ஒவ்வொன்றாக பிரித்து வெளியிட முடிவு செய்ததில் நான்காவது மற்றும் இறுதி பதிவாக “வீரனின் தியாகம்”   என்ற உண்மைக்கதையினை வெளியிடுகிறோம்.

************************

ஏப்ரல் 25ந் தேதியன்று முதல் பைலோருஷ்ய இராணுவம் மற்றும் முதல் உக்ரேனிய இராணுவத் த்ருப்புகளும் பெர்லினைச் சூழ்ந்து கொண்டு முற்றுகையை முழுமையாக்கின. இப்பொழுது நகரத்தின் நடுப்பகுதியில் போ நடைப் பெற்றது.

  பெர்லின் ஒரு மாபெரும் நகரம். அந்த சமயத்தில் அங்கே மொத்தம் ஆறு லட்சம் வீடுகள் இருந்தன. ஒவ்வொரு தெருவிலும் சாவு தலை விரித்தாடியது.

   நாஜிகள் தெருக்களில் குறுக்குச் சுவர்களும் பலவிதமான தடைகளும் ஏற்ப்படுத்தினார்கள். குறுக்குச் சுவர்களுக்குச் செல்லும் பாதைகாளில் கண்ணிகள் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு தெருவும் ஒரு போர்க்களமாக உண்மையாகவே மாறியிருந்தது.

பெர்லின் நகரத்தின் தெருக்களில் ஒன்றில் குறுக்குச் சுவர்கள் மிகவும் பலமாக அமைக்கப்பட்டிருந்த்து. இரும்பு, எஃகு மற்றும் பாறாஇக் கற்களைக் கொண்டு நாஜிகள் அவற்றைக் கட்டியிருந்தார்கள். முதலில் காலாட்படை அந்தச் சுவர் மீது மோதியது. ஆனால் பலனில்லை போர்வீர்ர்கள் வீனாக உயிரிழந்தார்கள். அடுத்தபடியாக சோவியத் டாங்கிகள் அங்கே வந்து தங்களுடைய கணமான பீரங்கிகளைக் கொண்டு சுட்டன; அங்கிருந்த குறுக்குச் சுவர்காளில் எங்காவது ஒரு இடத்தில் பிளவை ஏற்ப்படுத்த முயற்சி செய்தார்கள். ஆனால் டாங்கி பீரங்கிகளின் குண்டுகளால் கூட அந்தச் சுவர்களைத் தகர்க்க முடியவில்லை. இரும்பும் சிமெண்டும் சேர்த்துக்கட்டப்பட்ட கட்டிட்த்தை போல அந்தச் சுவர் உறுதியாக நின்றது. அந்தச் சுவர் காலாட் படைகளையும் டாங்கிகளையும் முன்னேறவிடாமல் தடுத்தது. எல்லாப் போக்குவரத்தும் அந்த இட்த்தில் நின்றுவிட்டது.

காலாட் படைவீர்ர்களும் டாங்கி ஓட்டிகளும் அங்கே இரும்பையும் எஃகையும் பாறாஇக் கற்களையும் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

”வேட்டு வைக்கும் திறமைசாலிகள், பாதை அமைக்கும் படையினர் சிலராவது எஅம்மிடமிருந்தால்…” என்று பேசிக் கொண்டார்கள்.

அவர்கள் விரும்பியது மாதிரியே பாதை அமைக்கும் படையைச் சேர்ந்த வீர்ர் ஒருவர் அந்தக் குறுக்குச் சுவரை நோக்கி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். அவர் தனக்குப் பின்னால் வெடிமருந்துகள், ஒரு பிக்ஃபோர்டு எறியூட்டும் பொறியமைப்பு மற்றும் எரிகின்ற சுருள் ஆகியவற்றை இழுத்துக் கொண்டு வந்தார். அவர் அங்கே நின்று சற்றுத் தாமதித்து விட்டுக் கீழே குனிந்தார். பிறகு மறுபடியும் தரையில் ஊர்ந்தார்.
போர்வீரர்கள் கண்கள் அவர் மீதே இருந்தன. அடுத்தாற் போல என்ன செய்யப் போகிறார்  என்பது அவர்களுக்குத் தெரியும். அவர் அந்தக் கற்களில் ஒன்றின் மீது தாவி ஏறி அதன் மீது படுத்துக் கொண்டார். பிறகு வெடிமருந்தை அந்தக் கல்லின்  அடியில் கவனமாக வைத்து பிக்ஃபோர்டு எறியூட்டும் பொறியமைப்பை இணைத்தார்.

அவருடைய ஒவ்வொரு செயலையும் போர்வீர்ர்கள் கவனமாக பார்த்தார்கள். இனிமேல் திரியில் நெருப்பைப் பற்ற வைப்பார். அந்த நெருப்புப் பொறி சுருள் வழியாக வெடுமருந்தை நோக்கி வேகமாக போகும். அவர் உடனே கல்லிலிருந்து கீழே குதிப்பார்; குறுக்கு சுவர்க்கு அப்பால் ஓடிப்போய் விடுவார். நெருப்புப் பொறி  வெடுமருந்தில் பட்டவுடன் ஏற்ப்படும் வேட்டில் சுவர் அசைந்தாடும். அதில் பிளவு ஏற்படும். போர்வீர்ர்கள் அந்தப் பிளவு வழியாக உள்ளே குதிப்பார்கள்.

அது ஆரம்பமாயிற்று. அந்தப் போர்வீர்ர் பையிலிருந்து தீக்குச்சியை எடுத்து உரசி நெருப்பு பற்ற வைத்தார். அதை திரியில் காட்டினார். திடீரென்று அவர் தன்னுடைய கைகளை விரித்துக் கொண்டு அந்தக் கல் மீது படுத்துக் கொண்டார். சிறிதும் அசையவில்லை. “அவரைக் கொன்று விட்டார்கள்” என்று யாரோ சொன்னார்கள். இல்லை . அந்தப் போர்வீர்ர் நகரத் தொடங்கினார்.

“சகோதரர்களே! அவர் சாகவில்லை. காயமடைந்திருக்கிறார்” என்றார் ஒருவர்.

அவர் உடலே லேசாக அசைத்தார். தலையைத் தூக்கினார். கல்லைப் பார்த்தார். திரியைப் பார்த்தார். ஏதோ கணக்குப் போடுவது போல இருந்தது. அவர் மறுபடியும் தீப்பெட்டியை எடுத்தார். மறுபடியும் அதை கையில் பிடித்துத் தீக்குச்சியை உஅரசினார். அவர் உடல் பலவீனமடைந்து விட்டபடியால் தீக்குச்சி பற்றிக் கொள்ளவில்லை. மறுபடியும் அந்தப் பாறாங்கள் மீதே படுத்துக் கொண்டார்.

அந்தப் பாறை சிகப்பு நிறமாக மாறிக் கொண்டிருப்பதைப் போர்வீர்ர்கள் பார்த்தார்கள். அவர் உடலிலிருந்து இரத்தம் பெருகிக் கொண்டிருக்கிறது.  அவர் பலம் குறைந்து வருகிறது. ஆயினும் அவர் தன்னுடைய முயற்சியைக் கையில் எடுத்தார். மூன்றாவது முறையாகக் குச்சியை உரசினார். பலே! அது தீப்பற்றிவிட்டது. நெருப்பைத் திரியை நோக்கி நீட்டினார். கடைசியில் அதற்கு நெருப்பு வைத்துவிட்டார். அந்தச் சுருளிலிருந்து புகை, பாம்பைப் போல வெடிமருந்தை நோக்கி ஓடியது.

“குதி! கீழே குதி!”  என்று போர்வீரர்கள் அவரை நோக்கி கத்தினார்கள்.

அவர் அசைவில்லாமல் அக்கல்லின் மேலே கிடந்தார்.

”குதி! குதி!”

போர்வீரர்களுக்கு இப்பொழுது தான் உண்மை தெரிந்தது. கீழே குதிப்பதற்க்கு அந்தப் போர்வீரனுடைய உடலில் சக்தி இல்லை.அந்த வீர்ர் கல்லின் மீது அசைவில்லாமல் படுத்திருந்தார்.
சக்தி வாய்ந்த வெடிமருந்து கண்ணைக் கூச வைக்கும் பிரகாசத்தோடு வெடித்தது. பாறாங்கற்கள் உடைந்து பெரும் கற்கள் வானத்திலே பறந்தன. சுவரில் ஒரு துவாரம் வாயைப் பிளந்து கொண்டுருப்பது தெரிந்தது. போர்வீர்ர்கள் அதன் வழியாக உள்ளே குதிப்பார்கள்.

வீரர்களின் புகழ் ந்ன்றும் அழியாது! துணிவுடையோர் புகழ் என்றும் மறையாது!

முந்தைய பதிவுகள்:

வீட்டை கொடுத்த வீராங்கனை!

சோவியத் வீரன் டான்கோ

சோவியத் வீரன் டிட்டாயெவ்