• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 210,439 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

திருச்சி V.V.V தியேட்டர் ஊழியர் அடித்து கொலை! புமாஇமு தலைமையில் காவல் நிலையம் முற்றுகை!!

திருச்சி – பொன்னகர் – V.V.V சினிமா தியேட்டரில் வேலை செய்து வந்த கல்லாங்காடு புத்தூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஆறுமுகம் என்பவரை யாரோ சில மர்ம நபர்கள் கடந்த 13.3.2012 அன்று தாக்கியுள்ளனர். சினிமா தியேட்டர் வளாகத்திற்குள்ளேயே நடந்த இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அவரை அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையில்  V.V.V தியேட்டர்காரர்கள் சேர்த்து விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.  பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் யாருக்கும் இதுபற்றி எந்த தகவலையும் தியேட்டர் நிர்வாகம் தெரியப்படுத்தாமல் சதித்தனமாக மறைத்துவிட்டது. மருத்துவமனையில் உடனிருந்து உதவ ஆளில்லாமல் தனது வீட்டிற்கு வந்து யாரையாவது அழைத்து செல்லலாம் என அங்கிருந்து வெளியேறிய ஆறுமுகம், வீட்டிற்கு வந்து சேர்ந்த பின் சுய நினைவினை இழந்துவிட்டார். பிறகு அவரது உறவினர்கள் மீண்டும் அவரை (14.3.2012) அதே மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். தலையில் அடிபட்டு இரத்தம் உறைந்து போனதால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து போய் விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

எனவே, தொழிலாளி ஆறுமுகத்தின் இறப்புக்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிந்து உடனடியாக கைது செய்யக் கோரியும், தனது நிறுவனத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்து காப்பாற்ற தவறியும், இது பற்றிய விவரங்களை உறவினர்களுக்கே தெரியாமல் மறைத்த V.V.V தியேட்டர் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் அனைத்தும், அவர்கள் தான் ஆறுமுகத்தை கொலை செய்திருப்பார்கள் என்ற வலுவான சந்தேகத்தை எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. எனவே, குற்றவாளிகள்  மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க கோரியும், பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு உடனடியாக வழங்கி, இறந்த தொழிலாளி ஆறுமுகத்தின் இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவை V.V.V தியேட்டர் நிர்வாகமே ஏற்க கோரியும் இன்று(17.3.1012) கண்டோன்மெண்ட் காவல் நிலைய முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உட்பட சுமார் 100 பேர் கலந்து கொண்ட இந்த காவல்நிலைய முற்றுகை போராட்டத்திற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்ட இணைச் செயலர் தோழர்.செழியன் தலைமை தாங்கினார். இதில் பு.மா.இ.மு நிர்வாகிகளுடன் மனித உரிமை பாதுகாப்பு மைய திருச்சி மாவட்ட செயலர்-வழக்கறிஞர் ஆதிநாராயணமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர். போலீசார் இதில் உடனடியாக வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்காவிட்டார் பிரேத பரிசோதனைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள உடலை எடுத்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

களப்பணியில்…

த. கிளர்ச்சியாளன்.

செயலர்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

திருச்சி  மாவட்டம்