• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,814 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

பகத்சிங்கின் தூக்கும் காந்தியின் துரோகமும்

லாகூர் சதிவழக்கு சம்பந்தமான தீர்ப்பில் காந்தி நடந்து கொண்ட விதம், பிரிட்டிஷ் அரசோடு கள்ளக் காதல் கொண்டு உறவாடிய விசயங்கள் ஆகியவை சமீபகாலத்தில் கூட அம்பலமாகியுள்ளது. மத்தியப் பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியதற்காகவும், லாலா லஜபதிராயை அடித்துக் கொன்ற பிரிட்டிஷ் போலீசு அதிகாரி சாண்டர்சைச் சுட்டுக் கொன்றதற்காகவும் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற தோழர்களுக்கு லாகூர் சிறைச்சாலையிலே தூக்குத் தண்டனை காத்திருந்தது. இதே நேரத்தில் 1931ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் காலனி ஆட்சியின் தலைவனான இர்வின் என்பவனுக்கும் காந்திக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. (காந்தி இர்வின் ஒப்பந்தம்)

இவ்வொப்பந்தப்படி “சுயராச்சியம்’ சம்பந்தமான சில சரத்துக்களையும், “இந்தியாவின் நலன்களுக்குப் பாதுகாப்பான ஒதுக்கீடுகள்’ எனச் சில்லறைச் சீர்திருத்த ஒப்பந்தங்களும், காந்தியை பின்பற்றிச் சிறை சென்றவர்களுக்குப் பொது மன்னிப்பும் வழங்கப்பட்டது. ஆனால் புரட்சியாளர்கள் ஒருவர் கூட விடுதலை செய்யப்படவில்லை.

இந்த ஒப்பந்தம் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் மரண தண்டனை பற்றி மௌனம் சாதித்தது. மாறாக, பலாத்காரக் குற்றங்களுக்காகவும், பலாத்காரத்தைத் தூண்டிய குற்றத்திற்காகவும் தண்டிக்கப்பட்டவர்கள் யாரும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என ஒப்பந்தம் திட்டவட்டமாகக் கூறியது. அது மட்டுமின்றி பெசாவரில் மக்களைச் சுட மறுத்ததற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த கூர்க்காப் படையினர் எந்த பலாத்காரத்திலும் இறங்கவில்லை. அவர்கள் காந்தி கூறிய அகிம்சைத் தத்துவத்தைத்தான் கடைப்பிடித்தனர். அவர்களுடைய விடுதலைக்கு இந்த ஒப்பந்தத்தில் இடமில்லை. காந்தி இதுபற்றிய கோரிக்கை கூட எழுப்பவில்லை.

பகத்சிங் மற்றும் தோழர்கள் தூக்கிலிடப்படுவதற்குச் சில தினங்களுக்கு முன்பு காந்தி வெளிநாட்டு நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். “பகத்சிங் மீதும் இதரர் மீதும் விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுமா?” என ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு “என்னை இக்கேள்வி கேட்காதிருப்பதே மேல். இதற்குமேல் நான் ஒன்றும் கூறமுடியாது” எனக் கூறிய காந்தி அந்த ஒப்பந்தம் போடப்பட்ட முறையைப் பற்றி ரொம்பவும் சிலாகித்துப் பேசினார். “முதலாவதாக, வைசிராயின் விசேசப் பொறுமையும், அளத்தற்கரிய உழைப்பும், சிறந்த குணமும் இன்றி இவ்வொப்பந்தம் முடிந்திருக்க மாட்டாதென நான் கூறவிரும்புகிறேன்… இதுபோன்ற ஒப்பந்தத்தைப் பற்றிய வரையில் வெற்றியடைந்த கட்சி எதுவெனக் கூறவும் முடியாது; கூறுவதும் சிறந்ததன்று. ஏதாவது வெற்றி இருக்குமாயின் அது இருவரையும் சார்ந்ததே. காங்கிரசு ஒருபோதும் வெற்றியை நினைத்ததில்லை.” ஆம்; பிரிட்டிஷ் நலனோடு சாராத வெற்றியை இவர்கள் ஒருபோதும் நினைத்ததில்லைதான்!

காந்தி இர்வின் காகித ஒப்பந்தங்களின் சரத்துக்களைக் கண்ட பஞ்சாப் மக்களும், ஏனைய இந்திய மக்களும் கொதிப்படைந்திருந்தனர். கராச்சியில் காங்கிரசு மாநாடு கூடும் அதேநாளில் பகத்சிங் லாகூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். ஆத்திரமுற்ற மக்கள் திரளிடமிருந்து காந்திக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் கிளர்ந்தெழுந்தன. ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். “பலர் அதன் தவறான அம்சங்களைக் கண்டித்தனர். மேலும் தனிநபர் பயங்கரவாதத்தைக் கொண்டு காந்தியை அச்சுறுத்தினர்” என இர்வினுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் குறிப்பிடுகிறார். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் மரண தண்டனை விசயத்தில் காந்தியாரின் பங்கை மக்கள் நன்றாகவே அறிந்திருந்தனர். “மக்கள் காந்தியை உடனடியாக ஒழித்துக் கட்ட, பலாத்காரமாக நசுக்க ஆயத்தமாயிருந்தனர்” என இர்வின் குறிப்பிட்டுள்ளார் arl of Birhenhead P.305)

 மக்களுடைய அறியாமையைப் பயன்படுத்தி அதன்மேல் சவாரி செய்து கொண்டிருந்த காந்தியை அதே மக்கள் பலாத்காரமாக நசுக்கி எறியும் அளவுக்குச் சென்றுள்ளார்கள் என்றால் காந்தி எத்தகைய துரோகியாக இருந்திருக்க வேண்டும். 1922 ஒத்துழையாமை இயக்கம், 1931 காந்தி இர்வின் ஒப்பந்தம் இதன் ­மூலம் செய்த துரோகத்தைக் காட்டிலும், பின் நாட்களில் காந்தி செய்த துரோகம் என்றென்றும் ஏகாதிபத்திய அடிமை நாடாய் இந்தியா இருப்பதற்குப் பலமான கால்கோளாய் அமைந்து விட்டன.

– காந்தியும் காங்கிரசும் – ஒரு துரோக வரலாறு என்ற நூலின் ஒரு பகுதி

காந்தியும் காங்கிரசும் நூலின் மொத்த பகுதியையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

வெளியீடு

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
விலை ரூ 15

வறுமையைப் பெருக்கி வாழ்வைப் பறிக்கும் குடியரசுக்கு விழா ஒரு கேடா?

“63 ஆண்டு கால குடியரசு தினத்தின் யோக்கியதை” – 

பட்டினியால் வாடும் மக்களின் தன்மையை அளவிடும் சர்வதேச அளவிலான குறியீட்டெண்ணின் அடிப்படையில் இந்தியா எத்தியோப்பாவை விடத் தாழ்ந்து போயுள்ளது. சீனா (47 வது இடம்), பாகிஸ்தானை விடவும் (88ஆவது இடம்) இந்தியா (94 ஆவது இடம்) மிகவும் பின்னோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது.
..
மகப்பேற்றின்போது போதிய மருத்துவ வசதி இன்மையால் இறந்து போகும் இந்தியப் பெண்களின் எண்ணிக்கை மட்டும் ஆண்டுக்கு 1.17 லட்சம்.
வயது வந்த இந்தியர்களில் 48.5% பேர்கள் ஊட்டச்சத்துக்குறைவானவர்கள். 3 வயதுக்குக் குறைவான குழந்தைகளில் 47! பேருக்கு வயதுக்கேற்ற உயரமில்லை. 15.5% பேர்களுக்கு உயரத்துக்கேற்ற எடை இல்லை என்பதெல்லாம் ஆய்வுகளில் தெரியவந்தவை.
1997 முதல் 2005 வரை இந்தியா முழுவதும் ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.
மராட்டியம், கருநாடகம், ஆந்திரம், மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் மட்டும் 89,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
32 ஆயிரம் பேர்கள் தற்கொலை செய்து கொண்ட மராட்டிய மாநிலத்தில் தான் 4 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள பணக்காரர்கள் 25 ஆயிரம் பேர் வாழும் மாநகரமான மும்பை உள்ளது என்பது வேதனை கலந்த உண்மை.
விவசாயத்துக்கு 1990-இல் வங்கிகள் வழங்கிய கடன் 13.8 சதவீதமாக இருந்தது. அதே வங்கிகள் 2001 – -2 நிதியாண்டில் வழங்கிய கடனோ 7.2 சதவீதம் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலில் இருந்தே, ஆட்சியாளர்களுக்கு விவசாயத்தின் மீதுள்ள அக்கறை தெளிவாகப் புரியும்.
விவசாயத்தைப் படிப்படியாய் தலைமுழுகி விடுவது என்ற அடிப்படையில், 1991-இல் விவசாயத் துறையில் அரசு செய்த முதலீடு 3.4 சதவிதமாக இருந்த நிலைமை மாறி, அதை 2001-ல் 1.3 சதவிதமாகச் சுருக்கி, விவசாயிக்கு சுருக்குக் கயிற்றைத் திரித்துத் தந்தது.
உடல் உழைப்புக்கு அவசியமாகத் தேவைப்படும் புரதத்தை வழங்கும் பருப்பின் நுகர்வோ 15.2 கிலோவில் இருந்து 10.6 கிலோவாகச் சரிந்துள்ளது.
உலக அளவில் நாளொன்றுக்கு தனிநபர் உண்ணும் உணவின் கலோரி மதிப்பு 3206. ஆனால் இந்திய மக்களின் ஏழைகளான 30 சதவிதம் பேர் உண்பதோ வெறும் 1626 கலோரிதான் என்றால், இந்திய ஏழைகளின் வாழ்க்கை என்பதே ஏதோ உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதுதானே பொருள்?
இந்திய மக்களில் 91 கோடி பேர்களின் தினசரி வருமானம் 80 ரூபாய்க்கும் கீழே என்றும், அந்தக் கொஞ்ச நஞ்ச பணத்துக்குள் உணவு, வீட்டு வாடகை, மருத்துவம், குழந்தைகளுக்கான கல்வி ஆகிய அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பார்த்துக் கொள்ளும்படியான அவல் நிலைக்குத் தள்ளி உள்ளது என்றும் உலக வங்கியே குறிப்பிடுகிறது.
ஆனால் அதே நேரத்தில், நாட்டில் உள்ள 10 சதவீதப் பணக்கார்கள் இந்நாட்டின் 52 சதவீத சொத்துக்களையும் வளங்களையும் அனுபவிக்கின்றனர். அடித்தட்டில் இருக்கும் 10 சத ஏழைகள் அனுபவிக்கும் வளங்களோ வெறும் 0.21 சதமாகச் சுருங்கி உள்ளது.
110 கோடி இந்திய மக்களில் வெறும் ஒரு லட்சம் பேரை மட்டும் கோடீஸ்வர்களாக்கி, பல பத்து கோடிப்பேரை ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடுபவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.
மூலம்:
டிசம்பர் “புதிய ஜனநாயகம்”
“உழைத்தவர் மெலிந்தனர் வலித்தவர் கொழித்தனர்” கட்டுரை

முன்பு காந்தி வந்தார் இன்று அன்னா ஹசாரே வந்தார் இந்த மானிடர் திருந்தப் பிறந்தார்! – RSS அம்பி ஜெயமோகனின் புலம்பல்!

டிச 23 தினமணியில் ஜெயமோகன்

‘அண்ணா ஹசாரே – மனசாட்சி பதில் சொல்லட்டும்’ என்ற கட்டுரை’ எழுதி’ உள்ளார்.

அதில்,

அன்னா ஹசாரே, ஒரு வரலாற்று நம்பிக்கை அவர், காந்திய முறையினை கடைப்பிடிப்பவர் அவர், தலித்துகளுக்கு அதிகார பகிர்வு அளித்தவர் அவர் (1987-ல் ராலேகான் சித்திக்கு போய் பார்த்தபோது), எளிமையின் சிகரம் அவர், ஏழை சமூகசேவகர் அவர்….. அவர், அவர், அவர் என நீளும் ஜெயமோகன் புலம்பலில் இடையிடையே குடிப்பவர்களை சவுக்கால் அடிப்பது என்ற முடிவுக்கு மரத்தடி பஞ்சாயத்து சரி என அன்னா முயன்றிருக்கக்கூடும், சரத் பவாரை ஒரு முறைதான் அடித்தார்களா? என கேட்டதற்கு அன்னா ஒரு அரிய சிந்தனையாளர் அல்லாதது காரணமாக இருக்கக்கூடும், ராலேகான் சித்தியில் தேர்தல் நடத்தவேணாம் என அன்னா நினைத்தமைக்கு பெரும்நிர்மாணப்பணிகள்’ ராலேகான் சித்தியில் நடைபெற்றுவருவது காரணமாக இருக்கக்கூடும் ….என அன்னா டவுசர் கிழியப்போவதாக பதறுகிறார்.

அன்னாவை எதிர்க்கும் தரப்பினர் நேர்மையில்லாதவர்கள், காந்தியே இன்று நேரில் வந்தாலும் குறை சொல்பவர்கள் என்றும், இன்னொரு சாராரான எங்களை(ஜெயமோகனை) போன்ற நம்பிக்கைவாதிகளுக்கு அன்னா ’தேவ தூதனாக’ காட்சி தருகிறார் என்கிறார்.

இறுதியில் இந்தியாவின் எதிர்காலமே இனி அன்னா ஹசாரே தான்.  அவரை விமர்சனம் செய்வது என்பது, இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கேள்விகளில் ஒன்று. நம் மனசாட்சியுடன் ’அந்தரங்கமாக’ நம்மால் பேச முடிந்தால்தான், இதற்கான பதிலை நாம் சொல்ல முடியும் என முடித்து உள்ளார்.

ஜெயமோகன் அவர்களே,

ஊழலின் ஊற்றுக்கண்ணே முதலாளித்துவம்தான், மிகப்பெரிய ஊழல்பேர்வழிகளே முதலாளிகள்தான். சட்டப்பூர்வமாகவே இத்தகைய முதலாளிகளுக்கு நாட்டை கொள்ளை அடிக்கும் உரிமைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், ’ஊழல் எதிர்ப்பு’ என்ற பெயரில் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு முழு சுதந்திரம் கொடுக்க கிளம்பியுள்ளார் அன்னா ஹசாரே.

இது குறித்த அன்னாவின் மீதான விரிவான விமர்சனங்களுக்கு பதில் கூறாமல் மொக்கையாக ஜாக்கி வைத்து அன்னாவை தூக்க கண்டிப்பாக உங்களால் மட்டுமே முடியும்.

ராலேகான் சித்தியில் தலித்துகளுக்கு அதிகார பகிர்வு குறித்து பேசும் நீங்கள் அங்கு தலித்துகளுக்கு நிலப்பகிர்வு குறித்து பேச மறுப்பது ஏன்? நிலம் சொந்தமாக இருக்கும் தலித்துகளுக்கே உங்கள் ராமராஜியத்தில் கயர்லாஞ்சி தான் முடிவாக இருக்கும் போது நிலம் இல்லாத ராலேகான் சித்தி தலித்துகளின் அதிகாரம் என்னவாக இருக்க முடியும்?

2011-ல் ராலேகான் சித்திக்கு எமது தோழர்கள் உள்ளிட்ட பல்வேறு குழுவினர் சென்று அந்த ‘புரட்சிக்’ கிராமத்தின் புரட்டு உண்மைகள் அம்பலமாக்கிய பின்பும் 87-ல் நான் சென்றேன், வியந்தேன் என சல்லி அடிப்பது ஏனோ?

காந்தியே வந்தாலும் குறை சொல்வார்கள் என இனி எழுதாதீர்கள்.  காந்தி மீண்டும் வந்தால் இழுத்து போட்டு நாலு சாத்து சாத்தாமல் விடமாட்டார்கள் பகத்சிங்கின் வாரிசுகள் என்று வேண்டுமானால் எழுதுங்கள்.

இறுதியாக, உங்க கட்டுரையில் ஒரு நல்ல விசயம் இருக்குமாயின் அது ”அன்னா ஹசாரே கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி மட்டும் அல்ல, ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி கும்பலின் ஆதரவோடு வரும் கைக்கூலி” என்ற உண்மையினை வெட்டவெளிச்சமாக சொன்னது தான். ”

 தொடர்புடைய பதிவுகள்:

கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி அன்னா ஹசாரேவின் முகத்திரையை கிழித்தெறிவோம்!

அண்ணா ஹசாரே கிராமத்தில் வினவு! நேரடி ரிப்போர்ட்!

டீம் அண்ணா: உப்பிப் பெருக்கப்படும் ஒரு போலிப் புரட்சி!- அருந்ததிராய்

 அண்ணா ஹசாரே: ஊடகங்களின் பிரைம் டைம் விளம்பரம்!

அண்ணா ஹசாரே: ஜன் ஜோக்பால் வெர்ஷன் 2.0

மாலையில் மெழுகுவத்தி, ராத்திரி குவாட்டர், காலையில் TIMES OF INDIA!

அண்ணா ஹசாரேவுக்காக சென்னையில் போங்காட்டம்! நேரடி ரிப்போர்ட்!!

அண்ணா ஹசாரேவுக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்! புமாஇமு தோழர்கள் 13 பேர் பொய் வழக்கில் சிறையில் அடைப்பு!

தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் கீழ் பொதுச்சொத்துகளும், இயற்கை வளங்களும், பொதுத்துறைகளும் சட்டபூர்வமாகவே தரகுமுதலாளிகளுக்கும், பன்னாட்டு முதலாளிகளுக்கும் தாரை வார்க்கப்படும் காலத்தில் இருக்கிறோம். கல்வி, மருத்துவம் முதல் சாலைகள் வரையிலான அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டு, அவர்கள் அடிக்கும் கொள்ளைகள் அனைத்தும் சட்டபூர்வமாக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சட்டபூர்வ ஊழலான மறுகாலனியாக்கத்துக்கு எதிரான போராட்டங்களை முதன்மைப் படுத்துவதற்குப் பதிலாக,  சட்டவிரோத ஊழலை ஒழிப்பதே முதற்கடமை என்று சித்தரிப்பதன் மூலம் தொந்திரவற்ற சேவையை பன்னாட்டு முதலாளிகளுக்கு அளிக்க முன்வருமாறு நம்மை அழைக்கிறார் ஹசாரே.

இப்படிபட்ட ஏகாதிபத்திய கைக்கூலியான அண்ணா ஹசாரே நேற்று (18.12.11) சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேச வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை புமாஇமு தோழர்கள் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை கைது செய்ததோடு 13 தோழர்கள் மீது பொய் வழக்குகளை போட்டு சிறையில் அடைத்து உள்ளது போலீஸ்.

ஆர்ப்பாட்ட முழக்கங்கள்!

கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி அண்ணா ஹசாரேவை விரட்டியடிப்போம்!

  • ஊழலின் ஊற்றுக்கண்ணே முதலாளிகள்தான்

இதைப் பேசாத ஹசாரே-வின் ஊழல் எதிர்ப்பு

      முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் அயோக்கியத்தனமே!

இளைஞர்களே!

  • ஹசாரே ஹீரோவுமல்ல,இளைஞர்களைத் திரட்டுவது

வலுவான லோக்பாலுக்கும் அல்ல –

  •  முதலாளிகளின் கொள்ளைக்கு வலு சேர்க்கவே!
  • பிர்லாவின் கைக்கூலி காந்தியின் வாரிசான

ஹசாரேவின் முகத்திரையை கிழித்தெறிவோம்!

தொடர்புடைய பதிவுகள்:

அண்ணா ஹசாரே கிராமத்தில் வினவு! நேரடி ரிப்போர்ட்!

டீம் அண்ணா: உப்பிப் பெருக்கப்படும் ஒரு போலிப் புரட்சி!- அருந்ததிராய்

 அண்ணா ஹசாரே: ஊடகங்களின் பிரைம் டைம் விளம்பரம்!

அண்ணா ஹசாரே: ஜன் ஜோக்பால் வெர்ஷன் 2.0

மாலையில் மெழுகுவத்தி, ராத்திரி குவாட்டர், காலையில் TIMES OF INDIA!

அண்ணா ஹசாரேவுக்காக சென்னையில் போங்காட்டம்! நேரடி ரிப்போர்ட்!!

கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி அண்ணா ஹசாரேவை விரட்டியடிப்போம்!

  • ஊழலின் ஊற்றுக்கண்ணே முதலாளிகள்தான்

            இதைப் பேசாத ஹசாரே-வின் ஊழல் எதிர்ப்பு

            முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்கும்

                                                                                   அயோக்கியத்தனமே!

இளைஞர்களே!

  • ஹசாரே ஹீரோவுமல்ல,இளைஞர்களைத் திரட்டுவது

          வலுவான லோக்பாலுக்கும் அல்ல –

  •  முதலாளிகளின் கொள்ளைக்கு வலு சேர்க்கவே!

  • பிர்லாவின் கைக்கூலி காந்தியின் வாரிசான

          ஹசாரேவின் முகத்திரையை கிழித்தெறிவோம்!

தொடர்புடைய பதிவுகள்:

அண்ணா ஹசாரே கிராமத்தில் வினவு! நேரடி ரிப்போர்ட்!

  டீம் அண்ணா: உப்பிப் பெருக்கப்படும் ஒரு போலிப் புரட்சி!- அருந்ததிராய்

அண்ணா ஹசாரே: ஊடகங்களின் பிரைம் டைம் விளம்பரம்!

அண்ணா ஹசாரே: ஜன் ஜோக்பால் வெர்ஷன் 2.0

மாலையில் மெழுகுவத்தி, ராத்திரி குவாட்டர், காலையில் TIMES OF INDIA!

அண்ணா ஹசாரேவுக்காக சென்னையில் போங்காட்டம்! நேரடி ரிப்போர்ட்!!

காந்திக்கு தேசத் தந்தை’ பட்டம் தந்ததே போலி கம்யூனிஸ்டுகள்தான் – ஏ.பி.பரதன்

இந்தியப்புரட்சிக்கு துரோகம் செய்து காந்தி என்ற துரோகபதருக்கு ஒளிவட்டம் காட்டியது நீங்கள் தான் என்று அனைவருக்கும் தெரிந்ததை இன்று ஏ.பி.பரதன் வெளிப்படையாக அறிவித்து விட்டார். காந்தியை புரட்சியாளராக மாற்ற நீங்கள் மேற்கொண்ட போராட்டங்களை’ மறக்க முடியுமா என்ன?. மொத்தத்தில் நாங்கள் போலி கம்யூனிஸ்டுகள் தான் என்று ஒப்பு கொண்டு விட்டீர்கள்.

தொடர்புடைய பதிவுகள்:

’மாகாத்மா’ காந்தி – துரோகத்தின் களர் நிலம்..

காந்தி :வழிகாட்டியல்ல, சோளக்காட்டு பொம்மை!

காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு : பு.ம.இ.மு

1.காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு

2.வெள்ளை ஏகாதிபத்தியத்தின் கள்ளக் குழந்தை
3.கருவாகி உருவான கதை

4.விசுவாச நாய்கள்

5.தீவிரவாதமும் ஒத்துழையாமையும்

6.சாத்வீகச் சதிச் செயல்

7.கை கொடுத்துக் காலை வாரிய காந்தி

8.நிலப்பிரபுக்களின் தாசன்

9.­மூக்கில் நாறிய சுயராச்சியம்!

10.அகிம்சையின் நோக்கம்

11.மகான் அல்ல; மக்கள் விரோதி!

12.பகத்சிங்கின் தூக்கும் காந்தியின் துரோகமும்

13.ஏகாதிபத்தியங்களுக்குப் பாதபூசை

14.மக்கள் முதுகில் குத்திய காந்தி

15.“சுதந்திரம்’ ஒரு கபட நாடகமே!

16.குழப்பவாதிகள்

17.படுபிற்போக்காளர்கள்

18.இந்து சநாதனி

19.சர்வாதிகாரிகள்

20.ரௌடிக் கும்பல்

21.“வெள்ளையனே வெளியேறு’ நாடகமும் காங்கிரசின் வேசித்தனமும்

22.மேலும் சில ஆதாரங்கள்

அத்வானி உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கிய ’வந்தே மாதரம்’ ஒரு தேசபக்தி பாடலா?

ஓடுறான் புடி, ஓடுறான் புடி என இரத யாத்திரை கிழம்பிய அத்வானி வழியில் ’வந்தே மாதரம் ’  பாடலை கேட்டு கண் கலங்கி விட்டாராம். மக்கள் மத்தியில் இந்துத்துவ பயங்கரவாதிகள் ’வந்தே மாதரம்’ பாடலை பெரிய தேசபக்தி பாடல் போல தொடர்ந்து சித்தரிக்கும் பிரச்சாரத்துடன் தான், அத்வானியின் நீலக்கண்ணீரை சேர்த்து பார்க்க வேண்டி உள்ளது.

இந்த அடிப்படையில் ‘வந்தே மாதரம்’ பாடலை அம்பலப்படுத்தி தோழர் அசுரன் அவர்கள் தளத்தில் வந்த கட்டுரையின் மீள் பிரசுரம் இதோ:

********************

வந்தே ஏமாத்துறோம் – ஒரு தேச பக்தி பாடலா?

“எனக்கு அவன் கொடுத்த செக் திரும்பி வந்திடுச்சுண்ணே.”

“விளக்கமா சொல்லு”

“அண்ணே.. அவனுக்கு நான் பத்தாயிரம் பணம் கொடுத்திருந்தனா.. அதை அவன்கிட்ட திருப்பிக் கேட்டப்போ அவன் ஒரு செக் கொடுத்திருந்தான்னே.. அது பேங்கில திரும்பி வந்துடுச்சு.. என்னன்னு கேட்டு பணத்த வாங்கித்தாங்க!”

“நீ எப்போ அவனுக்கு..பணம் கொடுத்தே?”

“அவன் பொண்டாட்டி ஓடிப்போவதுக்கு முன்னாடி?”

“என்னது அவன் பொண்டாட்டி ஓடிப்போயிட்டாளா? யார் கூட? அந்த நெட்டையா ஒருத்தன் ஊடகீட வந்துகிட்டு இருந்தானே அவனோடயா? ஏம்பா ஏன் என்கிட்டே சொல்லல இத?”

“அண்ணே! விசயம் அது இல்லண்ணே! செக்கப் பத்திக் கேளுங்க!”

“கொஞ்சம் சும்மா இருப்பா நீ! எவ்வளாவு நாளாப்பா அவன்கூட ஒன் பொண்டாட்டி பழக்கம்? எங்க ஓடிப் போனாங்க?”

********

இந்த மாதிரி உரையாடலை காமெடி என சினிமாவில் ரசித்திருப்பீர்கள்.. நிஜத்திலும் இவ்வாறு நடந்து கொண்டுள்ளது இந்தியாவில் காங்கிரசு, பிஜேபி எனும் ஆளும் வர்க்கக்கட்சியின் வடிவில்.

வந்தே ஏமாத்தறோம் பஜனையின் பிண்ணனி:

நாட்டின் சுரங்கங்கள், விமான ஓடுதளங்கள், நிலையங்கள், ஆறு, நிலத்தடி நீர் என ஒன்றும் பாக்கி இல்லாமல் அன்னியனுக்குக் காட்டிக் கொடுத்தாயிற்று..சுயசார்புக்கொள்கையை அணுசக்தித்துறையில் கைகழுவி அமெரிக்காவிடம் சரணாகதி ஆன விசயம் மக்களிடம் அம்பலமாகி நிற்கும் வேளையில் ‘வந்தேமாதரம் பஜனை’யைக் கையில் எடுத்துள்ளனர் இரு கயவாளிகளும்.

தேசபக்தி என்பது வெறும் பஜனைப்பாட்டு அல்ல. அது கோடானுகோடி உழைக்கும் இந்திய மக்களின் நலனுக்காக சிந்திப்பதாகும். இவர்களின் நலனை அன்னியனிடம் அடகுவைத்த விசயம் அம்பலமாகும்போது அதிலிருந்து மக்களை திசை திருப்பும் உத்தியாகவே இவர்கள் செய்து வரும் வாதம் உள்ளது. (செக்கு திரும்பி வந்த விசயத்தை விட்டு விட்டு பொண்டாட்டி ஓடிப்போனது பற்றிப் பேச ஆரம்பிக்கும் காமெடியை நினைவுகொள்க).

இவர்கள் இப்படி வந்தே மாதரம் பற்றிய சர்ச்சையை நடத்திக்கொண்டிருக்கையிலேயே ஓசையில்லாமல் கோக்கோகோலா கம்பெனிக்காரனுக்கு ‘நற்சான்றிதழ்’ தரும் மாமா வேலையை அமெரிக்க அடிமை மன்மோகன்சிங்கின் கூலிப்படை செய்து விட்டது.

இதே தாசானுதாசன், கொஞ்ச நாளுக்கு முந்தி, ‘ராவின் அரசில் இருந்த அமெரிக்க உளவாளி யார்?” என்பதை முன்னாள் ஜஸ்வந்த் சிங்கிடம் லாவணி பாடிக்கொண்டிருந்தார். அமெரிக்க உளவாளியே பிரதமராக இருப்பதும், அவர், உளவாளி பற்றிப் பேசுவதும்தான் காலக்கொடுமை.

மருத்துவம், கல்வி, குடிநீர் எல்லாமே தேசத்து மக்களுக்குக் கிடைக்கவிடாமல் தனியார்மயமாக்கப்பட்டு அம்மக்களின் நலன்கள் காவு கொள்ளப்பட்டு வரும் சூழலில் இந்த மாமாக்கள் (காங்கிரசு, பாஜக) ‘தேசபக்தி’ பற்றிப் பினாத்துகிறார்களே? அன்னிய நிறுவனமான சோனி, பத்தாண்டுகளுக்கு முன் ‘வண்ட்ட்ட்ட்டேஏ மாத்த்தரம்’ என்று மலச்சிக்கல் வந்தவன் முக்குகிற மாதிரி ஏ ஆர் ரகுமானை வைத்துப் பாடச்சொல்லி காசு சம்பாதித்ததே! அப்போது அன்னியக்கம்பெனி எப்படி எங்களோட ‘தேசபக்தி’ வியாபாரத்துல தலையிடலாம்னு குறைந்தபட்சம் ‘தேசிய முதலாளிகள்’ மாதிரியாவது கண்டித்தார்களா இந்த இந்துவியாதிகள் என்றால் அதெல்லாம் இல்லை.
சரி.. இவர்கள் சொல்லிவரும் வந்தே மாதரத்தின் லட்சணத்தைத்தான் பார்த்து விடுவோமே!

வந்தே ஏமாத்துறோம்! எப்படி?
“மொகலாயர் ஆட்சிக்குப் பிறகு வங்காளத்தை ஆண்ட முசுலீம் நவாபுகள், ஜமீன்தார்கள் ஆட்சியில் பார்ப்பன மேல்சாதியினர் தங்கள் ஆதிக்கத்தை இழந்து தவித்தனர். எனவே நவாபுகளை முறியடித்த ஆங்கிலேயர்களை அவர்கள் நெஞ்சார வாழ்த்தி வரவேற்றனர்.

இந்தச் சூழ்நிலையை வைத்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி எனும் பார்ப்பனர் ‘ஆனந்த மடம்’ எனும் புதினத்தை எழுதினார். முசுலீம் அரசர்களை எதிர்த்து இந்துச் சாமியார்கள் போராடுவதைக் கூறும் இக்கதையில்தான் ‘வந்தே மாதரம்’ (தாய்க்கு வணக்கம்) என்ற பாடல் வருகிறது. காளி, சரஸ்வதி, லட்சுமி என்று தாயை விளிக்கும் ‘வந்தே மாதரம்’ இப்படித்தான் தோன்றியது.

“நம்முடைய நவாபின் ராஜ்ய பரிபாலனத்தைப் பாரும். மதம் போய் விட்டது; சமூகம் போய் விட்டது; மானம் போய்விட்டது;குலம் போய்விட்டது; இப்போது பிராணனும் போய்க்கொண்டிருக்கிறது..” இது ‘ஆனந்தமடம்’ நாவலில் வரும் ஓர் உரையாடல். இதில்யாருடைய மதம்-சமூகம்-மானம்-குலம்-பிராணன் போய்விட்டதென்பதைத் தெள்ளெனவே உணரமுடியும்.

அதனால்தான் முசுலீம் அரசர்களிடமிருந்து வங்கத்து மாதாவை விடுதலை செய்த ‘ஆங்கிலப் பிதாவை’ அன்றைய வங்கத்துப் பார்ப்பன மேல் சாதியினர் மனதார வாழ்த்தினர். வந்தேமாதரத்தின் தோற்றத்திலேயே நாட்டுப்பற்றுக்கு இடமில்லை!

காலப்போக்கில் வங்கத்து வந்தே மாதரம் ஆங்கிலப் பிதாவை எதிர்க்கும் பாரத மாதாவாக மறுபிறவி எடுத்தது. இந்த பாரத மாதா பஜனையை விடுதலைப் போராட்டத்தில் திணித்தது காங்கிரசு கும்பலின் கைங்கர்யமாகும். இந்திய அளவில் இந்து மதமும், பாரத மாதாவும் உருவாக்கப்பட்டு வந்த நிகழ்ச்சிப் போக்கும், காங்கிரசின் பார்ப்பன மேல்சாதித் தலைவர்களும் அவர்களின் பார்ப்பனீய இந்துத்துவக் கருத்தும் ‘வந்தே மாதரத்தை’ப் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக இருந்தன.

கோவில்களில் அம்மணமாக நிற்கும் பெண் கடவுள்களை மாதிரியாகக் கொண்டு, அந்தப் பெண் உருவங்களுக்கு பார்ப்பன, உயர்சாதி மாமிகளின் பாணியில் சேலை கட்டி “இதுதான் லட்சுமி,சரஸ்வதி,பார்வதி” என்று வரைந்து தள்ளினார் திருவாங்கூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ஓவியர் ரவி வர்மா. இப்படியே ‘மாதா’க்களை உருவாக்கிய மன்னர் பரம்பரைதான் கடைசி வரை வெள்ளையனின் விசுவாச அடிமையாக இருந்தது. முதுகில் நாலு கை முளைத்த லட்சுமிதான் பாரத மாதா; இந்தப் பெண் தெய்வத்தை வருணிக்கும் பாடல்தான் ‘விடுதலை கீதம்’ என்று சொன்னால் அது பிற மதத்தினரை வெறுப்படையச் செய்யாதா?

பிற மதத்தினரை விடுங்கள், மக்கள் மீது மீளாக் காதல் கொண்ட எந்த ஒருசுயமரியாதை உள்ள தேச பக்தருக்கும் இந்த பிற்போக்கு போக்கிரி பாடலை தேச பக்தி பாடல் என்றால் கொலை வெறி வரத்தான் செய்யும்.

மத வெறி அரசியலும், மாற்று அரசியலும்:

இப்படித்தான் விடுதலைப் போராட்டத்திலிருந்து மதத்தின் பெயரால் முசுலீம் மக்களைத் தனிமைப்படுத்தும் போக்கைக் காங்கிரசுக் கும்பல் ஆரம்பித்து வைத்தது.

இப்போது பிஜேபி அர்ஜூன் சிங்கை நெளிய வைக்கவும் தனது இந்துவியாதி அரசியல் ஆயுதத்தை கூர்மைப் படுத்தவும் இந்த பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டுள்ளது.

ஏகாதிபத்திய அடிமைகளான பிஜேபியும், காங்கிரசும் நாட்டின் மூல வளங்களையும், நாட்டின் இறையாண்மையையும் டாலர் தேவதையின் முன் சமர்ப்பித்து விடுவதில் போட்டாபோட்டி போடுகின்றன. போராடும் உழைக்கும் இந்திய மக்கள் மீது , ஹூண்டாய் காரனின் எச்சில் காசுக்காக அடக்குமுறையையும், உரிமைப்போர் நடத்தும் மக்கள் மீது தாமிரபரணியில் கோக் கொடுக்கும் எலும்புத்துண்டுக்காக அரசு எந்திரத்தை ஏவி விடுவதிலும் இந்த இரண்டு கூட்டுக்களவாணிகளும் கள்ள மவுனமே சாதித்தன.

இது இன்று நேற்றல்ல. நூறாண்டுகளாக நடந்து வரும் துரோக வரலாறுதான். மக்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராய் எப்போதெல்லாம் போராடினரோ அப்போதெல்லாம், காங்கிரசு மக்களை அன்னியனுக்குக் காட்டிக்கொடுத்தே வந்துள்ளது. (புன்னபுரா, சவுரிசவுரா, தெலங்கானா உழவர் எழுச்சிகள், பகத்சிங்கின் புரட்சிப்படை ஆகியவற்றுக்கு எதிராக இருந்தமை).

பாஜகவின் மூல வேரான இந்துமகாசபையும் ஆர் எஸ் எஸ் ம், மற்ற இந்துவியாதிகளும் இதே மாமா வேலையைத்தான்(விளக்கு பிடித்தல்) 1947க்கு முன்னரும், பின்னரும் செய்தனர் (வெள்ளையனே வெளியேறு, தல்வார் புரட்சி ஆகியவற்றிற்கெதிராக வேலை செய்தமை). இன்றும் தொடர்கின்றனர்.

ஒட்டுண்ணிகளை அழிக்கும் வீரிய மருந்து – உழைக்கும் வர்க்கம்:

வந்தே மாதரம் பாடி நம்மை ஏமாற்றும் அரசியல் ஒட்டுண்ணிகளும், அவர்களின் எச்சில் பொறுக்கி அல்லக்கைகளும் நம்மைப் பார்த்து ‘வந்தே ஏமாத்துறோம்’ எனச்சொல்வது கேட்கிறது.

இந்த தேசத்தின் நலன்களையோ, தேசத்தின் செல்வங்களையோ, உழைப்பாளர்களையோ மதிக்காமல், அவற்றுக்கெல்லாம் எதிரானவர்களாய் நடந்து கொண்டு, வெறுமனே ‘வந்தே மாதரம்’ போன்ற பஜனைகளை தூக்கிப்பிடித்துக்கொண்டு ‘போலி தேசப்பற்று’ பேசி அதற்கென ‘நாய்ச்சண்டை இடுவது’ எவ்வாறு சாத்தியமாகின்றது?

மக்களிடம் நாம் உண்மையான அரசியலை – அதாவது ஏகாதிபத்தியத்தை, அதற்கு நக்கிப்பிழைக்கும் காங்கிரசு, பாஜக கூட்டத்தை – பற்றி பேசத்தொடங்க வேண்டும். அவர்களின், இந்த அரசின் மக்கள் விரோத போக்கை அம்பலப்படுத்த வேண்டும்.

பிளாக்ஸ்பாட்டுகளில் நுழைந்து அங்குள்ள பல போலி தேசிய கூமுட்டைகளை உடைக்க வேண்டும்.

கற்பக விநாயகம்

’மாகாத்மா’ காந்தி – துரோகத்தின் களர் நிலம்..

முன்குறிப்பு:

என்னடா இது இவர்களுக்கு வேலையே இல்லையா ?.. யாரையாவது திட்டிக் கொண்டு இருப்பதே இவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது.. கடைசியாக தேசப் பிதா காந்தியையும் கூட விட்டுவைக்காமல் விமர்சிக்க  வந்துவிட்டார்களே என்று வருத்தப்பட்டு கொள்ளாதீர்கள். இந்த பதிவில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும்  அனைத்து விவரங்களும், நிகழ்வுகளும் காந்தியின் நேர்கானல்கள் மற்றும் அவருடைய ஹரிஜன் இதழில் அவரே கைபட எழுதியவற்றிலிருந்தே எடுத்தாளப்பட்டிருக்கின்றன.

 

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இன்று வரை  ஆகா … காந்தீ .. மகானே.. என்று காந்தியை மனதில் உயர்த்தி வைத்திருந்தவர்கள் கோபப்படாமல் சற்று நிதானமாக முழுமையாக வாசியுங்கள். இனி கட்டுரைக்குள் செல்லலாம்.

காலனியாட்சி காலத்தில்:

இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் என்பது ஏதோ காந்தி போட்ட தாளத்தில் மக்கள் ஆடிய டப்பாங்குத்து ஆட்டம் என்றும் அந்த ஆட்டத்திற்கு  மயங்கித் தான் வெள்ளைக்காரன் இங்கிருந்து வெளியேறிவிட்டான் என்பதுமாகவே இங்கு ‘வரலாறு’ ’உருவாக்கப்பட்டிருக்கிறது’ ஆனால் உண்மை என்ன ? காலனியாட்சி காலத்தில் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் தாம் இந்திய ’விடுதலை’க்கு முதல் காரணமாகின. வெள்ளைக்காரன் ஒன்றும் காந்தியின்  உண்ணாவிரததிற்கு இரக்கப்பட்டு கொண்டு வெளியேறிவிடவில்லை. காலனியாதிக்கத்திற்கெதிராக பீரிட்டெழுந்த பல இலட்சம் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் ஆட்சியாளர்களாலும், மக்கள் போராட்டங்களை மழுங்கடிப்பதையே எப்போதும் வேலையாகக் கொண்டிருந்த காந்தியாலுமே கட்டுப்படுத்தவியலாத வன்முறையை நோக்கி பயணித்த காரணத்தாலும், இரண்டாம் உலகப் போரில் பொருளாதார ரீதியில் வாங்கிய அடியாலும் தான் வெள்ளைக்காரன் வெளியேறினான். அப்போதிருந்த தேசிய சர்வதேசிய நிலைமையில் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் யோக்கியவானாக, ‘ஜனநாயகப்பூர்வமாக’ நடந்து கொள்வதாக உலக மக்களுக்கு முன்பு நாடகம் ஆடியது. புற நிலையாக உள்நாட்டில் அதிகரித்த வன்முறைப் போராட்டங்கள், அக நிலையாக உலகப்போரில் ஏற்பட்ட பொருளாதார அடி, இவை இரண்டும் தான் பிரிட்டனை ’பெயரளவிற்காவது’ இந்தியாவிலிருந்து வெளியேற நிர்பந்தித்தது. இந்த நிலைமையின் கீழ் தான் உள்நாட்டு நிலைமை மேலும் மோசமாகி அதிகாரம் வன்முறையாளர்களின் கைகளுக்கு போய் விடுவதற்கு முன்னால் வெள்ளைக்காரன் நமது நாட்டிலிருந்து முடிந்தவரை சுருட்டிக் கொண்டு தனக்கு ஆதரவான கைக்கூலி கும்பலிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு வெளியேறினான். அதாவது கத்தியின்றி இரத்தமின்றி என்று பிதற்றுகிறார்களே அந்த வெட்கமின்றி பெற்ற ’சுதந்திரம்’ இப்படித் தான் வந்தது. போகும் போதும் அவன் ஒன்றும் சும்மா போகவில்லை, இன்று அமெரிக்க ஏகாதிபத்தியம் எப்படி தன் சொல்படி ஆடும் பொம்மை ஆட்சியை ஆப்கனில் வைத்திருக்கிறதோ அதே போன்று தான் அன்று பிரிட்டனும் இங்கு தனது சாட்டைக்கு ஆடும் பொம்மை அரசை நேரு தலைமையிலும் காந்தியின் மேற்பார்வையிலும்  நிறுவி விட்டு போனது. இது தான் இந்த மகாத்மாக்கள் சுதந்திரம் பெற்றுத்தந்த லட்சணத்தின் பின்னால் உள்ள அரசியல்.

மக்களின் தன்னெழுச்சி போராட்டங்களும் காந்தியின் துரோகங்களும் :

அது என்ன தன்னெழுச்சி போராட்டங்கள்?  சரி, அதற்கும் காந்திக்கும்  என்ன சம்மந்தம்? அவரை குறை சொல்லுவதற்கான காரணம் என்ன ? அவர் அப்படி என்ன தான் துரோகம் செய்தார் ?

இது போன்ற பல கேள்விகள் உங்கள் மனதில் எழலாம்.

நாம் நினைத்துக் கொண்டிருப்பது போல் சுதந்திரப் போராட்டம் என்பது வெறும் காந்தி மற்றும் காங்கிரசின் தலைமையில் நடந்த ஒத்துழையாமை போராட்டங்கள் மட்டுமே அல்ல. பல வீரம் செறிந்த போராட்டங்கள் நமது இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ’திட்டமிட்டே’ மறைக்கப்பட்டுள்ளன.

அவ்வாறான வீரம் செறிந்த போராட்டங்களில் முக்கியமான சிலவற்றையும் அப்போராட்டங்கள் பற்றி நமது தேசப்பிதா விடுத்த ஸ்டேட்மெண்ட்களையும் அவருடைய வாயாலேயே கேட்போம்.

சிட்டகாங் , பெஷாவர் மக்கள் எழுச்சியும் காந்தியின் அதிகார வெறியும்:

1930ம் ஆண்டு வடகிழக்கின் சிட்டகாங் நகரிலும் மேற்கிலுள்ள பெஷாவரிலும்  மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் முழு வீச்சில் நடைபெற்றன. சிட்டகாங்கில் புரட்சிகர மானவர் இயக்கங்களைச் சேர்ந்த ’ஹிந்துஸ்தான் குடியரசுப் படையினர்’ பிரிட்டிஷ் ஆயுதக் கிடங்கை சூறையாடினர். பெஷாவரில் பத்தானியர்கள் என்ற மக்கள் குழுவினர் பிரிட்டீஷ் படைக்கு எதிராக துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். பெஷாவரில் சண்டையிட்ட அனைவரும் ’இஸ்லாமியர்கள்’. அக்காலகட்டத்தில் ’கார்வாலிப் படையினர்’ என்றொரு படைப்பிரிவு பிரிட்டிஷ் இராணுவத்தில் இருந்தது. மக்கள் எழுச்சியை அடக்க இந்த கார்வாலிப் படையினரைத் தான் அனுப்பியது. இவர்கள் அனைவரும் ’ஹிந்து’க்கள். இந்த கார்வாலிப் படையினரும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் தாம். தமது சொந்த மக்களுக்கு எதிராக துப்பாக்கி ஏந்த முடியாது என்று அவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் ஆயுதங்களை திருப்பிக் கொடுத்தனர். மீதிப்பேர் போராடிய மக்களுடன் இணைந்து கொண்டனர். இதனால் பிரிட்டீஷ் இராணுவத்திற்கு மிகப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

இந்தப் பின்னடைவினால் பெஷாவர் நகரே ஏப்ரல் 25 முதல் மே 4 வரை மக்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் வான் படைத் தாக்குதல் மூலமும் பிற பகுதிகளிலிலிருந்து இறக்கிய படைக் குவிப்பின் காரணமாகவும் அந்நகரம் மீண்டும் பிரிட்டிஷ் படைகளின் கைகளுக்கு சென்றது.

மேற்கூறிய சம்பவத்தில் நடந்திருப்பது என்ன ? காலனியாட்சிக்கெதிராக போராடும் சொந்த நாட்டு மக்களை கொன்றொழிக்க ஆயுதம் ஏந்த முடியாது என்று பிரிட்டீஷ் இராணுவத்தில் இருந்தாலும் இந்திய சிப்பாய்கள் தேசப்பற்றுடன் மறுத்திருக்கிறார்கள், அத்துடன் வெள்ளையாட்சிக்கெதிராக போராடும் மக்களோடும் தங்களை இணைத்து கொண்டிருக்கிறார்கள். பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் ஆணைப்படி இயந்திரங்களை போல துப்பாக்கிகளின் விசையை தட்டிவிட்டு போராடும் மக்களை கொல்லுவது அகிம்சையா அல்லது மக்களை கொல்ல மறுத்து ஆயுதங்களை கீழே போட்டது அகிம்சையா? எது அகிம்சை? இது நம்மைப் போன்ற சாதாரண ஆத்மாக்களுக்கே தெரியும் போது மகாத்மாவுக்கு தெரியாதா என்ன ? ஆனால் அகிம்சா மூர்த்தி ’மகாத்மா’ காந்தி கூறியது என்ன ? கீழ் கண்டவாறு தான் கூறினார்.

இராணுவ சிப்பாயாக வேலைக்கு சேர்ந்த பிறகு இராணுவ அதிகாரி யாரை சுட்டுக் கொல்லச் சொன்னாலும் சுட வேண்டும் அது தான் அவனது கடமை. அப்படி செய்யவில்லை என்றால் அவன் கீழ்படிய மறுத்த பெருங்குற்றத்தைச் செய்தவன் ஆவான். அப்படி சுட்டுக் கொல்லச் சொன்ன பிறகும் அதை செய்ய மறுக்குமாறு நான் ஒரு போதும் கூற மாட்டேன். ஏனெனில் நான் அதிகாரத்தில் இருக்கும் போது இதே அதிகாரிகளையும் சிப்பாய்களையும் நான் பயன்படுத்திக் கொள்ள நேரிடலாம். இப்பொழுது நான் அவர்களை அவ்வாறு சுட மறுக்குமாறு கற்பித்தால் பின்னர் நான் அவர்களை சுடச் சொல்லும் போதும் இவர்கள் இதே போல கிழ்படிய மறுக்க நேரிடும் என அஞ்சுகிறேன்’’.

(ஆதாரம்: பிரெஞ்சு பத்திரிக்கையாளர் சார்லஸ் பெட்ராஷ், கார்வாலிப் படை வீரர்கள் பற்றிக் கேட்ட கேள்விக்கு மகாத்மாவின் பதில்: மாண்ட்,பிப்ரவரி 20,1932)

மக்களை சுட மறுத்த இராணுவ வீரர்கள் தமது ’கடமை’யை செய்திருக்க வேண்டும், அதாவது வெள்ளையாட்சியை எதிர்த்து போராடிய மக்களை சிப்பாய்கள் துப்பாக்கியால் சுட்டு பொசுக்கியிருக்க வேண்டும் என்று கூறுகிற ஒரு காலனியாட்சியின் கைக்கூலியையா நீங்கள் மகாத்மா என்றும் தேசப்பிதா என்றும் அழைப்பீர்கள் ? இதற்கு பெயரா அகிம்சை ? இதற்கு பெயர் அடிவருடித்தனம், கைக்கூலித்தனம் என்கிறோம் நாங்கள். இல்லை இல்லை.. என்று மறுப்பீர்களானால் இந்த செயலுக்கு வேறு என்ன பெயரிட்டு அழைக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் கூற வேண்டும் …

கப்பற்படை எழுச்சியும் அயோக்கியத் திருவுருவின் அறிக்கையும்:-

1946 ம் ஆண்டு கப்பற்படை வீரர்களிடம் மாபெரும் எழுச்சி ஏற்பட்டது. தொழிலாளர்களும், மாணவர்களுமாக கிட்டத்தட்ட 30000 பேர் அந்த நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்ததில் ஈடு பட்டிருந்தனர், ஏறத்தாழ 20000 கப்பற்படை வீரர்கள் மும்பை நகரின் வீதிகளில் செங்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். “புரட்சி ஓங்குக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இறந்து படுக!” என்று விண்ணதிர முழங்கினர். கப்பற்படையின் 20 கப்பல்களை அவர்கள் முற்றுகையிட்டனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்த போராட்டத்தை அடக்க இராணுவத்தை ஏவி விட்டது. ஆனால் இராணுவ வீரர்கள் கப்பல் படை வீரர்களை சுட மறுத்து விட்டனர். பிரிட்டிஷ் அட்மிரல் காட்பிரே “அரசாங்கத்தில் உள்ள அதிகபட்ச சக்தியை உபயோகப் படுத்துவேன். இதனால் கப்பற்படையே அழிந்தாலும் கவலை இல்லை” என்று கொக்கரித்தான்.முஸ்லீம் லீக் தலைவர்களும் காங்கிரஸ் தலைவர்களும் போராட்டக் காரர்களைச் சாடுவதிலேயே குறியாக இருந்தனர்.

காந்தி ‘மகான்’ “இந்துக்களும் முஸ்லீம்களும் ‘புனிதமற்ற ஒரு கூட்டில் சேந்ததாக’ மக்களை சாடினார். அந்த எழுச்சியைக் கண்டு பயங்கரமாக அதிர்ச்சி அடைந்த தொடை நடுங்கி காந்தி அந்தப் போராட்டத்தை அடக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்தார்.

இது குறித்து தனது ஹரிஜன் இதழில் இந்த அகிம்சாவாதி எழுதியவை பின்வருமாறு:

அந்தப் போராட்டம் வெற்றி பெற்றிருக்குமானால் அது நாட்டைக் காலிகளின் கையில் கொடுத்திருக்கும். அந்த முடிவைக் காண்பதற்கு நான் 125 ஆண்டுகள் வாழ விரும்பவில்லை. மாறாக தீயிலிட்டு என்னை அழித்துக் கொள்வேன்(ஆதாரம் : ஹரிஜன்: ஏப்ரல் 2, 1946).

காலனியாட்சியை எதிர்த்து விடுதலைக்காக போராடிய மக்களைப் பார்த்து ’காலி’கள் என்று கூறிய இந்த அயோக்கியரைத் தான் தேசப் பிதா என்று நமக்கு வரலாறு சொல்லித்தருகிறார்கள், எனினும் ஆளும் கும்பலால் சொல்லப்படுபவை மட்டுமே வரலாறு அல்ல, வரலாறு என்றைக்கும் ஒன்றாக மட்டுமே இருந்ததும் இல்லை. மேற்கூறியது தான் உண்மையான வரலாறு. நாளை இந்த வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்ளும் இந்த நாட்டின் இளைய தலைமுறை தேசப்பிதாவை வெள்ளைக்காரனின் கைக்கூலி என்று சரியான அடைமொழியுடன் அடையாளம் கண்டு கொள்ளும்.

பகத்சிங்கை தூக்கிலிட நாள் குறித்த நல்லவர் :

மக்களை சுட்டுப்பொசுக்கு அது தான் உனது கடமை எனவே கடமையை செய் என்று வெள்ளைக்கார துரையை போல சிப்பாய்களுக்கு கட்டளையிட்ட இந்த அகிம்சா மூர்த்தி தான் பகத் சிங்கைத் தூக்கிலிட இர்வின் பிரபுவுக்கு நாள் குறித்துக் கொடுத்தார். அதாவது பகத் சிங்கைத் தூக்கிலிடுவதாக இருந்தால் லாகூர் மாநாட்டிற்கு முன்பே தூக்கிலிட்டு விடுமாறு  இர்வினுக்கு கடிதம் எழுதியவர் தான் இந்த பாபுஜி. இந்த சம்பவத்தை காந்தியின் முதல் வாழ்க்கை வரலாறு நூலை எழுதிய பட்டாபி சீதாராமையா (காங்கிரஸ்) (காந்தியால் நேதாஜியை எதிர்த்து காங்கிரஸ் தலைமைக்கு களமிறக்கப்பட்டவை) தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தியை அறிந்த பஞ்சாப் மக்கள் காந்தியை எதிர்த்து பல ஆர்ப்பாட்டங்களை  நடத்தினர். காந்திக்கெதிராக நடந்த இந்த ஒவ்வொரு ஆர்ப்பாட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து இர்வின் கீழ்கண்டவாறு கூறினான்

மக்கள் காந்தியை உடனடியாக ஒழித்துக்கட்ட, பலாத்காரமாக நசுக்க ஆயத்தமாயிருந்தனர். (ஆதாரம்: Earl Of Birhenhead P. 305).

 

பிரிட்டிஷாரின் காலை நக்கியதை கையால் எழுதிய காந்தி:

முதல் உலகப்போரின் போது இந்த மகாத்மா தான் பிரிட்டிஷ் படைக்கு ஆட்சேர்ப்புக்கான கவுரவ தூதராக செயல்பட்டார் என்பது உங்களில் எத்தனை காந்தி ரசிகர்களுக்கு தெரியும் ? வெள்ளையனுக்கு எதிராக மக்கள் ஆயுதம் ஏந்திய போது அதை வன்முறை என்றும், அவர்களை காலிகள் என்றும் விஜயகாந்த் கணக்காக முகம் சிவந்து கூச்சல் போட்ட இந்த யோக்கியர் தான் வெள்ளைக்காரனுக்காக நமது நாட்டு மக்களை துப்பாக்கி தூக்கி போராடச்சொன்னார் ! இது கதையல்ல உண்மை, மேலும் வரலாறு. எனில் அந்த செயலுக்கு என்ன பெயர் வைக்கலாம் ? இதற்கு பெயர் தான் மாமா வேலை என்பது ! இது குறித்து காந்தி மாமா கூறிய வசனம் பின்வருமாறு

ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால் இதோ ஒரு பொன்னான வாய்ப்பு, பயன்படுத்திக் கொள்ளுங்கள்

இவ்வாறு துண்டுப் பிரசுரங்களின் மூலம் பிட்டீஷாருக்காக தனது மாமா வேலையை செய்தார் இந்த அகிம்சாமூர்த்தி.

அடுத்ததாக இரண்டாம் உலகப் போரில் தனது பிரிட்டிஷ் கைக்கூலித்தனத்தை பின்வருமாறு வெளிப்படுத்திக்கொண்டார்.

நான் அவருக்கு(பிரிட்டிஷ் வைசிராய்) பிரிட்டிஷ் பாராளுமன்றமும் அமைச்சரவைத் தலைமையகமும் அழிக்கப்படக்கூடிய வாய்ப்பு பற்றிய சித்திரத்தை விளக்கிய போது நெஞ்சுருகிப் போனேன் இவ்வாறு நெக்குருகி எழுதியுள்ளார் தனது ஹரிஜன் இதழில் (ஹரிஜன், செப்.5, 1939).

இதே காலகட்டத்தில் இவர் உதிர்த்த முத்துக்கள் நாங்கள் பிரிட்டனுடைய அழிவிலிருந்து எங்களுடைய சுதந்திரத்தைத் தேடவில்லை”. அது தவிர பிரிட்டன் நியாயத்திற்காக போராடுவதாகவும் அதற்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஆகையால் நான் எப்போதும் சுதந்திரத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கவில்லை. அது கட்டாயம் வரும். ஆனால் பிரிட்டனும் பிரான்சும் வீழ்ந்து விட்டால் என்ன ஆகும் ?” – (ஹரிஜன் – செப்.9, 1939)

இப்படி வாயை திறந்தாலே காலனியவாதிகளுக்கு ஆதரவாகவும் மக்களுக்கு எதிராகவுமே வார்த்தைகளை துப்பிக்கொண்டிருந்த  காந்தி தான் நமக்கு தேசப்பிதாவா ? இப்படிப்பட்ட ஒர் வெள்ளை ஆட்சியின் அடிமையா நமக்கு தேசத்தந்தை ? இப்பேர்பட்ட ஒரு மாமாவா நமக்கு சுதந்திரத்தை பெற்றுத்தந்திருக்க முடியும் ?

மேலும் சில நற்செய்திகள் :

காந்தி உண்ணாவிரதம் இருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதிகப் பட்சம் எத்தனை நாட்கள் இருந்திருப்பார் ?  இன்றைய கருணாநிதியைப் போன்று ஒரு சிறு நாடகம் நடத்துவார். அதற்குப் பெயர் தான் உண்ணாவிரதம். காந்தி எப்பொழுதெல்லாம் உண்ணாவிரதம்  இருந்தார் என்று உற்று நோக்கினால் மிகத் தெளிவாகத் தெரிவது  ஒன்று தான். எப்பொழுதெல்லாம் மக்கள் போராட்டம் அவர் கையை மீறி கட்டுக்கடங்காமல் போகிறதோ அப்பொழுதெல்லாம் அதை நீர்த்துப் போக வைக்க அங்கேயே உடனடியாக ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவிப்பார். உண்ணாவிரத பந்தலிலேயே காந்தி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவார். மக்களோ காந்திக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயந்து போய் போராட்டங்களை கைவிட்டுவிட்டு இந்த கைக்கூலிக்காக காத்திருப்பார்கள். பிறகு காந்தி விடுவிக்கப்படுவார். மீண்டும் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் வெடிக்கும் உடனே காந்தி மறுபடியும் பந்தலுக்கு வந்து விடுவார், காவலர்களும் கைது செய்து மீண்டும் சிறையிலடைப்பார்கள். மக்களும் போராட்டங்களை கைவிட்டுவிட்டு காந்திக்காக காத்திருப்பார்கள். கடைசி வரை இதே கதை தான். காந்தியின் இந்த பித்தலாட்டம் செல்லுபடியாகாமல் அம்பலப்பட்டுப்போனது கப்பற்படை எழுச்சியின் போது தான்.

உண்ணாவிரதம் என்று நாம் அறிந்த வரையில் மேற்கண்ட வகையில் உலகத்தையே ஏமாற்றி வந்த காந்தியின் உண்ணாவிரதம் ஒன்று, இன்னொன்று இன்று வரைக்கும் ஓட்டுப்பொறுக்கிகள் இருக்கும் உண்ணாவிரதம். இவை இரண்டைத் தவிர வேறு உண்மையான உண்ணாவிரதத்தைப் பற்றி எங்காவது எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா அல்லது படித்திருக்கிறீர்களா ? இல்லை என்றால் இப்போது கேட்டுக்கொள்ளுங்கள்.

பகத்சிங்கும் அவரது தோழர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவர்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டம் ஒரு வீர காவியம். உண்ணாவிரதம் இருப்பதிலும் கூட காந்தி எப்படி ஊரை ஏமாற்றிய ஏமாற்றுக்காரர் என்பதை அறிய வேண்டுமானால் தோழர்களின் உண்ணாவிரதத்தை பற்றி நீங்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். உண்ணாவிரதம் இருப்பது என்று முடிவு செய்த பிறகு ஒவ்வொரு தோழரும் குறைந்தது பத்து நாட்கள் வரை சோறு தண்ணியின்றி கிடக்கிறார்கள். அதற்கு மேல் உடல் நிலை ஒத்துழைக்காமல் பல தோழர்கள் சுய நினைவை இழக்கிறார்கள். தோழர் ஜதீந்திர நாத் தாஸ் மட்டும் தொடர்ச்சியாக 63 நாட்கள்  உண்ணாவிரதம் இருந்து சுய நினைவை இழந்து இறுதியில் 13.09.1929 அன்று காலமாகிறார். அன்று தோழருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கை (அன்றைய இந்திய மக்கள் தொகையுடன் ஒப்பிட்டுக்கொள்ளுங்கள்) கிட்டத்தட்ட 7 லட்சம் பேர். இறுதி ஊர்வலத்தின் போது காந்திக்கெதிரான முழக்கங்களும், கோஷங்களும் வின்னைப்பிளந்தன. அன்று அவருடைய புகழைப் பாடாத பத்திரிக்கைகளே இல்லை. ஆனால் இந்த அகிம்சாமூர்த்தி காந்தியோ அவரைப் பற்றி ஒரு இரங்கல் அறிக்கை கூட வெளியிடவில்லை . வெள்ளைக்காரனுக்கு காலை நக்க நாக்கை வெளியே தொங்க விடும்  இந்த நாய் சுதந்திரப் போராட்ட வீரனுக்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை.

காந்தி என்கிற இந்த நரியால் நீர்த்துப் போகச் செய்யப்பட்ட போராட்டங்கள் தான் எத்தனை எத்தனை ? காட்டிக் கொடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிகள் தான் எத்தனை எத்தனை ?..

1946 ஜனவரியில் நடந்த விமானப் படை எழுச்சி ,கப்பற்படை எழுச்சி, ஜபல்பூர் சிப்பாய்கள் கலகம், பெஷாவர் கார்வாலிப் படை எழுச்சி, தெலுங்கானா விவசாயிகள் போராட்டம் என நீண்டு கொண்டே போகும்.

சுதந்திரம் வந்தது:

2ம் உலக போரால் சிதறி சின்னாபின்னமான ஆங்கிலேய ஏகாதிபத்தியம் தனது இராணுவ பலத்தை முற்றிலும் இழந்திருந்தது.  காலனியாட்சிக்கெதிராக பிரிட்டீஷ் இராணுவத்திற்குள்ளேயே இருந்த இந்திய வீரர்கள் தமது முழு எதிர்ப்பையும்  காட்டினர். மக்கள் தன்னெழுச்சியாக வீதியில் இறங்கி போராடினர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர பிரிட்டிஷ் அரசால் முடியவில்லை. இது குறித்து அப்போதைய கிழக்கிந்திய பிராந்தியத் தளபதியாக இருந்த லெப். ஜெனரல் சர்.பிரான்ஸ் டகர் என்பவன் தனது “ நினைவிருக்கும் வரை, பக்.518 ” புத்தகத்தில் நமது நாட்டின் (இங்கிலாந்து) தொழில் தேவையை விட அதிகமாக நமது இராணுவக் கடமை இருந்ததையும், போண்டியாகிப் போன நமது நாட்டின் பலத்தை மீறியதாக இது இருந்ததையும் நாம் இறுதியில் கண்டோம். இந்தியாவை விட்டு வெளியேறியதற்கு அதுவும் விரைவாக வெளியேறியதற்கு இது மிக முக்கியமான மற்றொரு காரணமாகும் என்று குறிப்பிட்டிருப்பது கத்தியின்றி இரத்தமின்றி வெட்கமின்றி பெற்ற சுதந்திரத்திற்கு மற்றுமொரு சான்றாகும்.

மக்களின் தன்னெழுச்சியைக் கண்டு அஞ்சி அலறிய மவுண்ட் பேட்டனின்  இந்தியப் படைத் தளபதி லார்டு இஸ்மாய் கூறுகையில் “ 1947 மார்ச்சில் இந்தியா இருந்த நிலைமை வெடி குண்டுகளால் நிறைக்கப் பட்டு நடுக்கடலில் இருக்கும் ஒரு கப்பலில் தீப்பிடித்துக் கொண்டதை போல இருந்தது. நெருப்பு அந்த குண்டுகளை நெருங்கும் முன் அதை அனைக்க வேண்டிய பிரச்சனை முன்னே நின்றது. எனவே நாங்கள் செய்ததைத் தவிர வேறு மாற்று செய்வதற்கில்லை.என்று கூறினான்.

இத்தகைய சூழ்நிலையில் தான் அதிகாரத்தை தனது இந்திய ஏஜண்டுகளான கங்கிரஸ் துரோகக் கும்பலின் கையில் கொடுத்து விட்டு சென்றனர் ஆங்கிலேயர்கள்.

மேற்கூறியவை அனைத்தும் காலனியாட்சி காலத்தில் நிகழ்ந்த கொடுமைகளில் கடுகளவு மட்டுமே. ஒரு நெல்லிக்கனி அளவுக்கு தெரிய வேண்டுமானால் “கீழைக்காற்று” வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் ”காந்தியும் காங்கிரசும் – ஒரு துரோக வரலாறு” என்ற புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்.

காந்தியின் அரசியல் வாழ்க்கையை அம்பலப் படுத்தினாலே இவ்வளவு வருகிறதே,  அவரது சொந்த வாழ்க்கை வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறினால் காறி உமிழத் தான் தோன்றும். இன்னும் அவர் சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கும்,  தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் செய்த கொடுமைகளைச் சொன்னால் பக்கங்கள் பத்தாது.

இனிமேலாவது இந்தியாவின் விடுதலைப்போராட்ட வரலாறு குறித்த முடிவுகளை, உண்மைகளை பாட புத்தகங்களில் தேட மாட்டீர்கள் என்று நம்புகிறோம்.

முதல் பதிவு: சர்வதேசியவாதிகள்