பாசிச இருள் சூழ்ந்திருந்த இரண்டாம் உலகப் போரின் போது போருக்காகவே பல ஆண்டுகள் தயாரிப்பில் செலவிட்டதுமான, மேற்கு ஐரோப்பாவிலும் பால்கனிலும் இரண்டாண்டு கால போர் அனுபவம் பெற்றதுமான ஹிட்லரின் ஜெர்மானிய இராணுவத்தை தடுத்து நிறுத்தியது லெனின்கிராடு சுவர். அதுவும் சாதாரணமாக தடுத்து நிறுத்தவில்லை. மிகப்பெரிய அளவில் ஆட்களையும், ஆயுதங்களையும் இழந்து மற்ற போர்முனைகளிலுமிருந்து வெளியேற வேண்டிய நிலையினை பாசிச மிருகமான ஹிட்லருக்கு ஏற்படுத்தி வரலாற்று வெற்றியை பெற்று தந்த்து லெனின்கிராடு.
இப்படிபட்ட லெனின்கிராடு சண்டையில் மிக முக்கிய பங்காற்றியது அந்த தொழிற்சாலை. ரஷ்யப்புரட்சி அதனை தொடர்ந்த உள்நாட்டுப் போர் என்ற முதலாளித்துவ நாடுகளின் படையெடுப்பிலும் முக்கிய பங்காற்றியது அந்த தொழிற்சாலை. ஆம் அந்த தொழிற்சாலைலிருந்து தான் டாங்கிகள், ஆயுதங்கள் தயாரித்து எதிரிகளை வீழ்த்தினர் சோவியத் தொழிலாளர்கள். அத்தகைய புகழ்மிக்க தொழிற்சாலையின் பெயர் செர்கேய் கீராவ்.
கீராவ் தொழிலாளர்கள் தொழிற்கூட்த்தில் ஒரு இலக்கிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும்படி எங்களை அழைத்தார்கள். லெனின்கிராடு கவிஞர்களாகிய நிக்கலாய் தீஹனவும் அலெக்சாந்தர் புரகோஃபியெவும் நானும் கலந்து கொண்டோம்.
கூட்டங்களுக்கும் விருந்துகளுக்கும் பொருத்தமாக அமைக்கபட்டிருந்த ஒரு தொழிற்சாலைக் கட்ட்டங்களின் கான்கீரிட் நிலவறையில் அது நடைபெற்றது. கலந்து கொள்ள விரும்பிய எல்லோருக்கும் போதுமானதாக எழுநூறு இருக்கைகள் கொண்ட அந்தக் கூடம் போதவில்லை. பக்கப் பகுதிகள் நிறைந்து வாசற்கதவு மூடப்பட வேண்டியிருந்தது. அதே நேரத்தில் தொழிற்சாலையின் மீது பீரங்கித் தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதிலும், ஆட்கள் தொடர்ந்து அம்மாலை முழுக்க வந்துகொண்டிருந்தார்கள்.
கீராவ் நம்முடன் இருக்கிறார் என்ற தனது கவிதையை நிக்கலாய் தீஹனவ் வாசித்தார். 1934 டிசம்பர் முதல் தேதியில் படுகொலை செய்யப்பட்ட லெனின்கிராடு தொழிலாளர்களின் அன்புக்குரிய தலைவர், பயங்கர இருளில், உறைய வைக்கும் பனியில் முற்றுகையிடப்பட்ட நகரைச் சுற்றிப் பார்க்கச் செல்வதைப் பற்றி அது கூறுகிறது.
அருமையான படைப்பாகிய இந்தக் கவிதையின் தாக்கம், கொடூரமான குளிர்காலத்தில் பனி உறைந்த குடியிருப்பில் மெழுகுவர்த்தி விளக்கு வெளிச்சத்தில் தீஹனவால் எழுதப்பட்ட்து என்பதாலும் ஜெர்மானியர்கள் தொழிற்சாலையைத் தாக்கிக் கொண்டுருந்த போது தொழிற்சாலைக் கட்டட்த்தின் நிலவறையில் கீராவ் தொழிலாளர்களுக்கு அவராலேயே படித்துக் காட்டப்பட்ட்து என்பதாலும் இரட்டிப்பு மடங்காகிறது. கல்லாய்ச் சமைந்தது போல கேட்டுக் கொண்டிருந்தவ்ர்கள் அசையாது உட்கார்ந்திருந்தனர். அவர்களுடைய முகங்கள் அதே நேரத்தில் துயரத்துடனும் நெகிழ்ச்சியுடனும் காணப்பட்டன.
தனது பெயரைக் கொண்ட தொழிற்சாலையைக் கடந்துச் சென்ற கீராவைப் பற்றிய கவிதையின் ஒரு பாகம் இதோ:
குண்டு விழுந்த வீடுகள்,
நொறுங்கிய வேலிகள்
பரந்த வானத்திற்குக் கீழே, எங்கெனும்
இராணுவ வண்டிகள் நிறைந்த
தெருக்கள் வழியே கீரோவ் செல்கிறார்.
போர்வீரனாகிய இந்த மனிதரோ
வெகுண்டெழுந்து தான் நேசிக்கின்ற
நகரின் வழியே நடக்கிறார். அது வேறு
கோட்டை போல இருண்டு காணப்படுகிறது.
இடைவேளை இல்லை, வம்பளப்பு இல்லை,
ஓய்வு, தூக்கம் பற்றிய சிந்தனை இல்லை.
தொழிலாளர் முகங்களோ கடுகடுப்புடன்
வியர்த்துக் காணப்படுகிறது, எனினும்
உறுதியுடனும் வலிமையுடனும் உள்ளன,
தொழிற்சாலைகள் விமானத் தாக்குதலுக்கு
ஆளாகியே எங்கேனும் புகை மண்டலம்,
வேலையே நில்லாது நடைபெறுகிறது.
அலுப்புக்கோ அச்சத்திற்கோ இடமில்லை,
கணமேனும் துணிவை இழந்தல் இல்லை,
அவர்களுக்கிடையே கிழவர் பேசுகிறார்;
“நமது சூப்போ ஆக்க் கொஞ்சம்
ரொட்டியோ தங்கம் போலச் சிறிதே
ஆயினும் வலிவும் துணிவும் நம்மிடமுண்டு
அலுப்பை நாமும் பின்னர் காணலாம்.
குண்டு வீச்சோ நின்றபாடில்லை
இப்போது நம்மைப் பட்டினி போடலாம்,
லெனின்கிராடைத் துண்டித்து நம்மை
அடிமைகளாக்கத் துடிக்கின்றனர்!
நேவாவின் புனிதக் கரைகளிலே
ருஷ்யத் தொழிலாளி மடியலாம்,
சரணடைவது ஒருபோதும் கிடையாது!
புதிய சக்தியுடன் போர்முனை செல்வோம்,
முற்றுகையைத் தூளாக்குவோம்,
இந்தத் தொழிற்சாலை சாதாரணமானதா
இல்லையில்லை, அருமைத் தோழர்
கீரோவின் பெயரால் அழைப்போம்.”
`இந்த வரிகளை தீஹனவ் படிக்கையில், உறுதி படைத்த ஆண்களும் பெண்களும் கொண்ட கீராவ் தொழிலாளர்களின் கன்னங்களில் கண்ணீர் பெருகி ஓடியது. தீஹனவ் கூட் தெரியக் கூடியவாறு நெகிழ்ந்து போனார். அவர் அதை முடித்த போது தொடர்ந்து கைதட்டிக் கொண்டே இருந்தார்கள்.
தொழிற்சாலையின் வெளிவாசலின் முன்னே கீரோவின் மிகப் பெரிய சிலை நிற்கிறது, சாதாரணமாக அவர் மேடையில் காணப்படுவது போல; தோல் தொப்பி அணிந்தவாறு, அவரது உறுதி மிக்க கால்களில் நின்றார், பேசுகின்ற தோரணையில் அவரது கை விரிந்து கிடந்தது, துணிச்சலும், நம்பிக்கைமிக்க புன்முறுவலும் கொண்ட அகன்ற ருஷ்ய முகத்துடன், அவரது திறந்த கோட்டின் நுனிப்பகுதிகள் குண்டுச் சிதறல்களால் துளைக்கப்பட்டிருந்தன. ஆனால் வலிமையும் எளிமையும் மிக்க மனிதனின் நம்பிக்கையும் கவர்ச்சி மிக்க புன்னகையும் கொண்ட முகத்துடன் அவர் அங்கே நின்றார், அவரது நீட்டிய கரம் போராட அழைத்தது. இப்போது அவர் கொல்லப்பட்டிருக்க முடியாது, எனினும் 1934 டிசம்பர் முதல் நாள் அன்று கொல்லப்பட்டு விட்டார். ஏனென்றால் கீரோவும் அவர் போராடிய நோக்கமும் அவரத்துவம் மிக்கவை.
–அலெக்சாந்தர் ஃபதேயெவ்
( சோவியத் எழுத்தாளரான அலெக்சாந்தர் தனது பதினேழாவது வயதில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகச் சேர்ந்து, மறைமுகமாக வேலை செய்தார், பிறகு கொரில்லாக்களுடன் சேர்ந்து கொண்டார். பின்னர் ஒரு சுரங்க்க் கல்லுரியில் படித்து முடித்து, பத்திரிக்கைக்காக வேலை செய்தார். உள்நாட்டுப் போரின் போது துரகிழக்கில் நடந்த நிகழ்ச்சிகளை விவரிக்கும், அலெக்சாந்தரின் முதலாவது நாவலாகிய “முறியடிப்பு” (1927) ஒரு நிலையான புகழை இவருக்கு ஈட்டித் தந்தது. 1941-1945 ஆம் ஆண்டு பாசிசத்திற்கு எதிராக தோழர் ஸ்டாலின் தலைமையில் சோவியத் வீரச் செறிந்த போரின் போது பிராவ்தா பத்திரிக்கைக்காக போர் நிரூபராகப் பணியாற்றினார். )
– “லெனின்கிராடுக்கான பாதுகாப்பு” என்ற மாஸ்கோ நூலில்
ஒரு உட்தலைப்பிலிருந்து தொகுக்கப்பட்டது.
தொடர்புடைய பதிவுகள்:
நவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்! புரட்சிகர அமைப்புக்களின் நவம்பர் புரட்சி நாள் விழா
புகைப்படத் தொகுப்பு!
நவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்!
ருசியாவின் வெற்றி- தந்தை பெரியார்
வெற்றிகரமான 7வது பதிப்பில் “ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம்!
“ஸ்டாலின் சகாப்தம்”
வரலாற்று நோக்கில் ” ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் “
நவம்பர் புரட்சியை நெஞ்சிலேந்துவோம்
”அக்டோபர்” – சோவியத் திரைப்படம்
“பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!
நவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல்
நவம்பர் புரட்சி சோவியத் யூனியன் புகைப்படங்கள்
Filed under: சோசலிசம், சோவியத் யூனியன் | Tagged: அரசியல், இரண்டாம் உலகப்போர், கவிதை, செர்க்கீ கிராவ், சோசலிசம், சோவியத் யூனியன், சோவியத் வீரம், தொழிலாளர்கள், நிகழ்வுகள், நினைவு தினம், நூல் அறிமுகம், பாட்டாளி வர்க்கம், புரட்சி, பூவுலகில் சொர்க்கம், மாஸ்கோ நூல்கள், ரஷியத் தலைவர், ரஷியப்புரட்சி, ரஷியா, லெனின், லெனின்கிராடு, ஸ்டாலின் | Leave a comment »