• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 216,726 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

வால்மார்ட்-க்கு அனுமதி :அண்ணாச்சி கடைகளுக்கு பூட்டு போட மத்திய அரசு முடிவு!!

நாட்டை மீண்டும் காலனியாக்கும்,  மறுகாலனியாக்க வேலையில் மத்திய அரசு தற்போது மிகவும் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகிறது. ஓய்வூதிய துறையில் அன்னிய முதலீடு, அணுசக்தி துறையில் பன்னாடு கம்பெனிகள் & தரகு முதலாளிகளுக்காக முழுவீச்சில் நடவடிக்கை என அடுத்த அதிரடியாக சில்லறை வர்த்தகத்தில் 51% நேரடிஅன்னிய முதலீட்டை அனுமதித்து ஒப்புதல் அளித்து உள்ளது.  ஏற்கனவே இங்குள்ள அம்பானி போன்ற தரகு முதலாளிகள் கையில் சிக்கி கொண்டு இருக்கும் சில்லறை வணிகத்தை மொத்தமாக மொட்டை அடிக்க ஒப்புதல் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் சுமார் 30 லட்சம் கோடி மதிப்புள்ள சில்லறை வணிகத்தை விழுங்க வால் மார்ட் போன்ற பராசுர கம்பெனிகள் வரபோகின்றன. ஆயிரம் பேருக்கு கிட்டதட்ட 30 கடை என்ற விகிதத்தை மாற்றி வெறும் 4 அல்லது 5 கடைகள் என ஆக்குவது என்ற ஒற்றை குறிக்கோளுடன் தான் இந்த கம்பெனிகள் வருகிறார்கள். ஏற்கனவே பல நாடுகள் இவ்வாறு மாற்றி விட்டார்கள். கல்வி முதல் மருத்துவம் வரை தனியார்மயமாக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் என்ன மீதி இருக்கிறது என அலையும் மூலதனம், சில்லறை வணிகத்தை மட்டும் விட்டுவைக்குமா என்ன?

இது குறித்து புதிய கலாச்சாரம் இதழில் வந்த கட்டுரை உள்ளிட்ட தொடர்புடை பதிவுகள் இதோ:

வால் மார்ட்:மலிவு விலையில் மரணம்!

தற்கொலையில் தமிழகம் – முதலிடத்தில் அம்பானி !

டெல்லி: தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 16,561 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும், இந்தியாவில் மணிக்கு 15 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்றும் தேசிய குற்ற ஆவண காப்பக அறி்க்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடக்கும் குற்றச்சம்பவங்கள், விபத்துகள் குறித்த தகவல்கள் தேசிய குற்ற ஆவண காப்பகம் மூலம் சேகரிப்படுகிறது. கடந்த 2010ம் ஆண்டில் நடந்த குற்றச் சம்பவங்கள் குறித்த அறிக்கையை உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

கடந்த ஆண்டில் இந்தியா முழுவதும் 1,34,599 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில் சுமார் 70.5 சதவீதம் பேர் திருமணமான ஆண்கள், 67 சதவீதம் பேர் திருமணமான பெண்கள். தற்கொலையில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 16,561 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2009ம் ஆண்டு 14,424 பேர் தற்கொலை செய்துள்ளனர். 2009ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2010ல் கூடுதலாக 14.8 சதவீதம் பேர் தற்கொலை செய்துள்ளனர்.

தமிழகத்தை இந்தியாவின் முதல் மாநிலமாக மாற்றுவேன் என கருணாநிதியும், ஜெயாவும் தூக்கம் இல்லாமல் உழைத்தது மூலம் தான் இந்த சாதனையினை தமிழகம் எட்டி உள்ளது. நாட்டை பன்னாட்டு & தரகு முதலாளிகளுக்கு இவர்கள் விற்பனை செய்வதை தடுத்து நிறுத்தாத வரை இந்த ’சாதனை’ யிலிருந்து நாம் மீள முடியாது.

 புது தில்லி, அக். 27 : பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் உள்ளார்.

“”இந்தியாவின் பணக்காரர்களை பொருத்தவரை இந்த ஆண்டு கொந்தளிப்பான ஆண்டாகும். இந்தியாவின் பொருளாதாரம் 8 சதவீதமாக உள்ளது. பல்வேறு ஊழல் புகார்கள், உயர்ந்து வரும் பணவீக்கம் உள்ள நிலையிலும், பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” என்று ஃபோர்ப்ஸ் இதழின் ஆசிரியர் ( இந்தியா) இந்திரஜித் குப்தா கூறினார்.

இதில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக முகேஷ் அம்பானி முதல் இடத்தை பிடித்து வருகிறார். இப்பட்டியலில் 14 புதுமுகங்கள் இடம் பெற்றுள்ளனர். இண்டிகோ ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் ராகுல் பாட்டியா மற்றும் ஆனந்த் மஹிந்திரா ஆகியோர் முதல் முறையாக பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

பட்டியலில் இடம் பெற்றிருந்த வினோத் கோயங்கா, சாஹித் பால்வா ஆகியோர் இந்த ஆண்டு இடம் பெறவில்லை. இவர்கள் இருவரும் 2ஜி அலைக்கற்றை வழக்கில் கைதாகி திஹார் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உழைப்புகேற்ற ஊதியம் இல்லாமல், அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை உயர்வு, கல்விக்கட்டணம், மருத்துவ செலவு என விழி பிதுங்கி வாழ வக்கற்று தற்கொலை-க்கு உழைக்கும் மக்களை தள்ளும் அதே உலகமயமாக்கல் மறுபுறம் கோடீஸ்வர்களின் எண்ணிக்கையையும்,  அவர்களின் சொத்து மதிப்பையும் அதிகரித்து வருகிறது.

”ஒரு இடத்தில் செல்வம் குவிவதன் விளைவாக , அதே நேரத்தில் இன்னொரு முனையில் வறுமைதுயிர் குவிகிறது” என்றார் மார்க்ஸ். வறுமையின் குறியீடு தான் தற்கொலையில் முதலிடம்.

அழுகி நாறும் ஜனநாயகத்துக்கு ’சென்ட்’ அடிக்கும் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி!

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குரேஷி கூறியது: நமது நாட்டின் எல்லா இடங்களிலும் ஏதாவது ஒரு வகையில் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. அதனால், வெற்றி பெற்ற பிரதிநிதிகளை “பதவியிலிருந்து நீக்கும் உரிமையை’ மக்களுக்கு வழங்குவது சாத்தியமில்லை. இந்த உரிமை வழங்கப்பட்டால் எல்லோரும் தங்களது பிரதிநிதிகளை அடுத்தடுத்துப் பதவி நீக்கம் செய்யத் தொடங்கிவிடுவார்கள்.

திரும்ப பெறும் உரிமையை அளித்தால் அனைவரும் திருப்பி அழைக்கப்படுவார்கள் என்றால் உனது ஜனநாயகத்தோட யோக்கியதை என்ன? திருடர்கள் மட்டுமே நிற்க முடியும் என்ற ஜனநாயகத்தை மக்கள் ஏற்க வேண்டுமா?

”வேட்பாளரை நிராகரிக்கும் உரிமையை வழங்குவதும் ஆபத்தானது. அப்படிப்பட்ட உரிமை தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அதுவும் நாட்டுக்கு எதிரான மனநிலை அதிகம் உள்ள ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் தவறான செய்தியைப் பரப்புவதற்கு வழி ஏற்பட்டுவிடும். ”

ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சார்ந்த உழைக்கும் மக்க்ள் நாங்கள் இந்திய நாட்டினரே அல்ல, எங்கள் மீது தொடுக்கப்பட்டு இருப்பது ஆக்கிரமிப்பு போர், எங்களுக்கு சுய நிர்ணய உரிமை வேண்டும் என்று நாள் தோறும் போராடுகிறார்கள். இந்த மக்களின் கோரிக்கையை பரிசீலனைக்கே எடுத்து  கொள்ள முடியாது என்றால் இது என்ன பரிசுத்த ஜனநாயகம்.

”உழைக்கும் மக்களின் உயிர் வாழும் உரிமையே நிராகரிக்கும் உரிமையை உங்களுக்கு யார் வழங்கியது.”

’நல்லவனாக பார்த்து தேர்தெடுங்கள்’ என பத்திரிக்கைகள் ஜாக்கி வைத்து தூக்குகின்றனர்(எந்த கிரகத்தில் என்று மட்டும் சொல்வதில்லை). இந்த நல்லவனை தேர்தெடுக்கும் பிரச்சாரத்தை தலைமை தேர்தல் ஆணையர் குரேஷியிடமே முதலில் செய்யலாமே.

வாங்கையா வாங்க! அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு பாக்கு வைத்து அழைக்கும் கபில்சிபில் மாமா!

வாஷிங்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய, அமெரிக்க கல்வி வாய்ப்புகள் என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமைச்சர் கபில் சிபல் பேசியதாவது: வாஷிங்டனில் நடைபெற்று வரும் இந்திய, அமெரிக்க கல்வி உச்சி மாநாட்டில் பங்கேற்பதில் இந்தியா பெருமை அடைகிறது. அமெரிக்காவைப் போலவே இந்தியாவிலும் கல்வித்துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவிலிருந்து உயர்கல்விக்காக மாணவர்கள் அதிக அளவில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கின்றனர்.

இந்திய மாணவர்களுக்கு கல்விச் சேவையை அளிக்கும் விதமாக அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்களது கிளைகளைத் துவங்க முன்வரவேண்டும். இதற்குத் தேவையான வசதிகளை செய்து தர இந்தியா தயாராக உள்ளது.

இந்தியாவில் முதலீடு செய்வது அமெரிக்க பல்கலைக்கழங்களுக்கு லாபகரமாக அமையும்.

இப்போது அமெரிக்காவிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் இதுபோன்ற தரமான கல்வியைப் பெறும் எண்ணத்தில் இந்தியாவில் 20 கோடி மாணவர்கள் உள்ளனர். எனவே 20 கோடி மாணவர்கள் அமெரிக்கா வருவதை விட, அமெரிக்க பல்கலைக்கழகங்கள் அங்கு வருவதே சரியாக இருக்கும்.

இப்போது 1.6 கோடி மாணவ, மாணவிகள் கல்லூரிகள், பல்கலைக்கழங்களுக்கு கல்வி பயில செல்கின்றனர். அடுத்த 10 ஆண்டுகளில் இது 4.5 கோடியாக உயரும்.

எனவே அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 1,000 பல்கலைக்கழகங்களையும், 55 ஆயிரம் கல்லூரிகளையும் அமைக்க வேண்டிய தேவை உள்ளது. ஆனால் இந்தியாவில் 1,000 பல்கலைக்கழங்களை அமைப்பது என்பது முடியாத காரியம். எனவே தனியார் துறைகளின்மூலம் கல்விச் சேவையை அளிக்க முடிவு செய்துள்ளது என்றார் அவர்.

கல்வி சந்தையில் இப்ப இந்தியாவில் லாபம் அதிகம் வரும் என வெளிப்படையாகவே அழைக்கிறார் கபில்சிபில்.  இது குறித்து வினவில் வந்த விரிவான கட்டுரை இதோ:

வெளிநாட்டு பல்கலைக்கழக முதலாளிகள் வரப்போகின்றனர்! உஷார்!!