தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் முதல் கட்டமாக 53 பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் ஆகஸ்டு 30-ல் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் +2வில் குறைந்தபட்சமாக விழுப்புரம் மாவட்டம் புதுவை ஆரோவில்லில் உள்ள நியூ எரா பள்ளிக்கு ரூ 7000/-மும் , சமீபத்தில் மாணவன் ரஞ்சனை படுகொலை செய்த பார்ப்பன கிரிமினல் கும்பலான YGP எனப்படும் ராஜலெட்சுமி நடத்திவரும் பத்ம சேஷாத்திரி பள்ளிக்கு அதிகப்பட்சமாக ரூ 36,000/-மும் நிர்ணக்கப்பட்டு உள்ளது.
இச்செய்தி அன்றைய தினமணியில் முதல்பக்கத்தில் வந்து உள்ளது. அதே நாளிதழில் 4ம் பக்கத்தில் கே.கே.நகர் – பத்ம சேஷாத்திரி பள்ளியில் நீச்சல் பயிற்சி அளிப்பதே சட்டவிரோதமென்றும், நீச்சல் குளமே அனுமதியின்றி கட்டப்பட்டுயுள்ளதாகவும் ரஞ்சன் படுகொலை வழக்கில் உயர்நீதிமன்றம் கூறியுள்ளதாகவும் செய்தி வந்து உள்ளது.
அதாவது அனுமதியின்றி இவ்வளவு நாளாக நீச்சல்குளம் நடத்தி வந்துள்ளனர். பயிற்சி’ என்ற பெயரில் மாணவன் ரஞ்சனை கொலை செய்து உள்ள Y.G.ராஜலட்சுமி பள்ளியினை இழுத்து மூடிவதற்கு பதிலாக சட்டபூர்வமாகவே அதிக கல்விக்கட்டணக்கொள்ளைக்கு அனுமதி தந்து உள்ளது பாசிச ஜெயா அரசு. ஜேப்பியார், விஜயன் ஆகிய கல்வி முதலைகளைக் கூட பார்மாலிட்டிக்கு கைது செய்து விடுதலை செய்தவர்கள், Y.G.P ராஜலட்சுமியை கைது செய்யாததற்கான காரணமும் இந்த பார்ப்பன பூணுல் பாசத்தில் தான் கட்டப்பட்டுயுள்ளது.
போதாக்குறைக்கு இந்த Y.G.P ராஜலட்சுமி முதல்வர் ஜெயாவின் நாடககுழுவாக்கும். இவர் எப்படி தண்டிப்பார். இந்த உண்மையை உணர்ந்து கொள்ளும் நாம்தான் தண்டிக்க வேண்டும். கொலைகார கூடாரத்தின் தலைவி ராஜலெட்சுயை கைது செய்ய வைக்கவும், அந்த பத்ம சேஷாத்திரி கல்வி குழுமத்தை அரசுடைமையாக்கவும் போராடுவோம்!
தொடர்புடைய பதிவுகள்:
ரஞ்சன் படுகொலை: கலைஞர் தொலைக்காட்சியில் தோழர் கணேசன் உரையாடல்!
பத்மா ஷேசாத்திரி பள்ளியின் லாபவெறிக்கு மாணவன் ரஞ்சன் படுகொலை!
பத்மா சேஷாத்திரி திருமதி ஒய்ஜிபியை கைது செய்து கொலை வழக்கு போடு!
தாம்பரத்தில் நடந்த சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கும் வரை போராடுவோம் – தெருமுனைக்கூட்ட நிகழ்ச்சிப்பதிவு!
சேலையூர் சியோன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்து!
Filed under: தனியார்மய கல்வியின் லாபவெறி | Tagged: அனைவருக்கும் இலவச கல்வி, அரசு பள்ளி, அருகாமைப் பள்ளி, இலவசக் கல்வி, ஒய்.ஜி.மகேந்திரன், கட்டணக் கொள்ளை, கல்வி, கல்வி அடிப்படை உரிமை, கொலை, சிறுவன், தனியார் பள்ளி, தனியார் பள்ளிகள், தனியார்மயம், தமிழகம், திருமதி ஒய்ஜிபி, பத்மா ஷேசாத்திரி பள்ளி, பள்ளி, பள்ளி வாகனம், பெற்றோர் சங்கம், பெற்றோர்கள், பொதுப்பள்ளி, போராட்டம், மரணம், மறுகாலனியாக்கம், மாணவர்கள், ரஞ்சன் படுகொலை | Leave a comment »