• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,595 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

“எம் தாய்மண் உணர்ச்சிக்கு ஈடாகுமா உன் கூலிப்படையின் சம்பள உணர்ச்சி!”

கூடங்குளம்…வேண்டுவது அனுதாப அலையல்ல..

அடக்குமுறைக்கெதிரான போராட்டம்!

நிராயுதபாணியாய் மக்கள்,
நிரம்பிய ஆயுதம் தரித்து போலீசு படை,
கைக்குழந்தையோடு போராடுபவர்கள்
வன்முறையைத் தூண்டுபவர்களாம்!

கைத்தடியும் துப்பாக்கிகளோடும் சூழ்ந்தவர்கள்
அமைதியை நிலைநாட்ட அவதரித்தவர்களாம்?!

மூலதனமும், பேரழிவும் உயிர்வாழ
சட்டத்தைக் காட்டி கலைந்து போகச் சொல்லும்
உத்திரவு ஆளும் வர்க்கத்துக்கு உண்டெனில்,

எங்கள் இயற்கையும், சந்ததியும் உயிர்வாழ
அணு உலையைத் திரும்பிப் போகச் சொல்லும்
உரிமை மக்களுக்கும் உண்டுதானே!

ஜனநாயக நெறிப்படி எதிர்ப்பைக் காட்ட
கடலோரம் சுடுமணலில் கலந்தனர் மக்கள்.
ஒரு நாள் வெயில் தாங்கி
உழைத்து பழக்கமில்லாத அதிகார வர்க்கமே,
உனக்கும் ‘ஜனநாயகத்’ தெம்பிருந்தால்
உன் ‘கொள்கைக்காக’ சுடுமணலில்
நீயும் அமர்ந்து கொள்ளடா எதிரில்
ஏன் ஜனநாயகம் தாங்காமல் அலறுகிறாய்
எங்கள் இருப்பைப் பார்த்து!

கடலோரம்… மண்ணை பிளந்து
கூடங்குளத்தை தன்னில் பார்க்கும்
எங்கள் மழலையரின் தாய்மண் உணர்ச்சிக்கு
நேர் நிற்க முடியுமா?
கூலிப்படையின் சம்பள உணர்ச்சி!

அலைகளின் முழக்கில்
இரண்டறக் கலந்த அணுஉலை எதிர்ப்பில்…
மெகா போனை வைத்துக் கொண்டு
மெகா சீரியல் ஓட்டிய அதிகாரி குரல்கள்
அடிபட்டுப் போயின…
போராட்டத்தின் அலை பொங்கி வரும்போது
செத்த மீனுக்குள்ள மரியாதை கூட
மொத்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் க்கு கிடையாதென்பதை
கடல் புறம் காட்டி நின்றது.

உளவுப்படை, இழவுப் படை எதுவாயினும்
கடலுக்குப் போகாமலேயே மணற்பரப்பில்
போலீசை கருவாடாய் காயவைத்தனர் மக்கள்.

ஜனநாயக அவஸ்தைகளை தாங்கிக்கொள்ளும்
சகிப்புத்தன்மை மக்களுக்கிருக்கலாம்,
ஆளும் வர்க்கத்திற்கும், அதிகார வர்க்கத்திற்கும்
அது ஒரு போதும் இல்லையென…
மீண்டும் உறுதி செய்தது போலீசு…
நிராயுதபாணியாய் நின்ற மக்கள்மீது
தடியடி, தாக்குதல், கண்ணீர்புகை, துப்பாக்கிச் சூடு!

முற்றுகைப் போராட்டம் சட்டவிரோதமென
அறிவித்த அரசு… இப்போது ஆயுதங்களுடன்
கன்னியாகுமரி தொடங்கி… கடலோரப் பகுதிகள்
இடிந்தகரை வரை முற்றுகை.

சம்மணம் போட்டு அமர்வது கூட
சட்டவிரோதமென,
இடிந்தகரை உண்ணாநிலை போராட்ட
பந்தலையும் ஆக்கிரமித்து
சொந்த நாட்டு மக்கள் மீது
அரசுப்படையின் அட்டூழியங்கள்

தண்ணீர், மின்சாரம், உணவுப் பொருட்களை
தடை செய்து,
இடிந்தகரையை முள்ளிவாய்க்காலாக்கும்
பாசிச காட்டாட்சி!

இத்தனைக்கும் மத்தியில்..
போராடும் மக்கள் நம்மிடம் வேண்டுவது
அனுதாப அலையல்ல…
உண்மைகளை கண்டுணரும் நேர்மை!

அணு உலைக்கெதிரான போராட்டத்தின் வழியே
கதிரியக்க பயங்கரத்தை மட்டுமல்ல,
உழைக்கும் மக்களுக்கு உதவாத
இந்த போலி ஜனநாயக அமைப்பையும்
இதில் புழுத்து திரியும்
அரசியல் பயங்கரங்களையும்
நமக்கு அம்பலப்படுத்தியிருக்கிறார்கள் கூடங்குளம் மக்கள்.

பயங்கரவாதிகள் பலரகம்… பலவிதம்…

ரத்தக் களறியில் மக்கள்.
‘ரத்தத்தின் ரத்தமான’ தா.பாண்டியனோ
தாக்குதல் நடத்திய கைக்கு
தங்கக் காப்பாய் அறிக்கை;

“பொறுமையாகவும், நிதானமாகவும்
பிரச்சினைகளை கையாண்டு
சுமூகமாக தீர்க்க வேண்டும்…”

போராடி… துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட
மீனவர் அந்தோணியின்
போஸ்ட்மார்டம் அறிக்கைக்கு
கட்டாயம் தா.பா. ‘டெக்னிக்’ உதவும்.

அடித்தவனுக்கே போய் ஆறுதலும்
தேறுதலும் சொல்லும்
இப்படியொரு பயங்கரவாதியை
எங்காவது பார்த்ததுண்டா?

இன்னொருபடி முன்னேறி…
மார்க்சிஸ்டு ஜி.ராமகிருஷ்ணனோ
“மக்கள் போராட்டத்தை கைவிட்டு
சுமூகமான நிலை ஏற்பட ஒத்துழைக்க வேண்டும்”
என ஜெயாவின் ஆவியாகி ஜீவிக்கிறார்.
சொந்தநாட்டு மக்களையும்,
சொன்ன பேச்சை கேட்காத கட்சிக்காரனையும்
நந்திகிராமிலும், கேரளாவிலும்
வேட்டையாடுவதில்
ஜெயலலிதாவுக்கே ராஜகுரு
சி.பி.எம். பயங்கரவாதிகள் என்பதை
கூடங்குளமும் குறித்துக் கொள்கிறது.

போராட்டக் களத்தில்
அப்பாவி மக்களை விட்டுவிட்டு
தலைவர்கள் தப்பியோடிவிட்டதாய்
ஊடக பயங்கரவாதிகள் ஊளை!
பாவம்! தவிக்கும் மக்களை
சன்.டி.வி. கலாநிதிமாறன் போய்
காப்பாற்றி வரவேண்டியதுதானே!

ஸ்பெக்ட்ரம் ஊழலில்
தப்பியோடும் பயங்கரவாதிகள்
வாழ்வுரிமைக்குப் போராடுபவர்கள் மீது
வன்மம் கொப்பளிப்பது
தற்செயலல்ல, வர்க்கப் பகைதான்!

தெற்கிருந்து தினந்தோறும்
போராடுபவர்களைப் பார்த்து,

நயன்தாரா இடுப்பைக் கிள்ளவும்,
நாடார்கள் ஓட்டை பொறுக்கவுமே
தெற்கு பக்கம் ‘செட்டு’ போடும் சரத்குமார்
“தலைவர்கள் தலைமறைவானதிலிருந்தே
அவர்கள் சரியானவர்கள் இல்லை” என
வாய் கொழுப்பும், வர்க்கக் கொழுப்பும்!

வாய் சும்மா இருந்தாலும்
உங்கள் வர்க்கம் சும்மா இருக்காது
வாய்திறந்து பேசுங்கள் வரவேற்கிறோம்…
உங்கள் வர்க்கம் தெரியவருவதால்!

புடைசூழ வாருங்கள் பொய்யர்களே…
உங்களிடம் நாளேடு உள்ளது.. டி.வி. உள்ளது…
பணம் உள்ளது…. படை உள்ளது….
ஆனால் உண்மையும், நீதியும்
எங்களிடம் மட்டுமே!

உரிமையின் உணர்ச்சிகளை
அறியாத உங்கள் தோல்களை
உரித்துக் காட்டும் மக்களின் போராட்டம்.

போராட்டத்தின் நியாயம் அறிய
கொஞ்சம் கூடங்குளத்திற்கு  செவி கொடுங்கள்…
போராட்டத்தின் உண்மை அறிய
கொஞ்சம் இடிந்தகரையை உற்றுப் பாருங்கள்…
போராட்டத்தின் சுவை அறிய
துப்பாக்கிகளுக்கு முன்னே
தங்கள் மழலையை போராட்டத்திற்கு ஒப்படைத்திருக்கும்
எம் பிள்ளைகளின் கரம் சேருங்கள்…

அதோ… தடிகொண்டு தாக்கும் போலீசை
நெய்தல் செடிகொண்டு
வர்க்க குறியோடு எறியும் – எங்கள்
பரதவர் மகனின் போர்க்குணம் பார்த்து
பொங்குது கடல்!

மண்ணைக் காக்கும் போராட்டத்தில்
மண்ணும் ஒரு ஆயுதமாய்
வெறுங்கையோடு எம் பெண்களும்
பிள்ளைகளும் தூற்றும் மணலில்…
அடக்குமுறை தூர்ந்து போவது திண்ணம்!

______________________________________________

– துரை. சண்முகம்.

_______________________________________________

முதல் பதிவு: வினவு

 

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!

கூடங்குளம் நகரில் துப்பாக்கி சூடு!
கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!
கூடங்குளம் – இடிந்தகரை: போராட்டக் காட்சிகள்!
கூடங்குளம்:தாக்கத் தொடங்கியது போலீசு! அச்சமின்றி முன்னே செல்கிறார்கள் மக்கள்!!
உலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு…! சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு

கூடங்குளம் மக்களோடு கரங்களை இணைத்திடு! நாட்டை மீண்டும் காலனியாக்கும் அணு உலையை விரட்டிடு!!

கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!


கூடங்குளம்-இடிந்தகரை-போராட்டம்-14

கூடங்குளம் மக்கள் போராட்டத்தின் மீதான பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!

போராடும் மக்களுக்குத் தோள் கொடுப்போம்!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இம்மாத இறுதியில் மின் உற்பத்தி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. கூடவே அணு உலையில் யுரேனியம் எரிபொருளை நிரப்ப சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. உள்ளூர் மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பையும் மீறி இந்த அனுமதியை அரசுகளும் நீதிமன்றங்களும் வழங்கியிருக்கின்றன. இந்நிலையில் மக்கள் அணுமின்நிலையத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர்.

அதன்படி குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் இடிந்தகரையிலிருந்து கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு கடற்கரை வழியாக நேற்று சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்த போலீஸ் அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் நயவஞ்சகமான சட்ட மொழியில் பேசி முயன்றனர். இதற்கு தோதாக நீண்ட நாட்களாக 144 தடையுத்திரவையும் பிறப்பித்திருந்தனர். 5000த்திற்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

நேற்றிரவு முழுவதும் கடற்கரையில் வெட்டவெளியில் தங்கிய மக்கள் இன்றும் தமது போராட்டத்தை தொடர்ந்தனர். மக்களை போக்கு காட்டிவிட்டு அலையவிடும் தந்திரத்தை போலீசு தொடர்ந்து மேற்கொண்டது. இறுதியில் கண்ணீர் குண்டுகளை வீசி தடியடி நடத்தியிருக்கிறது தமிழக போலீசு. கையில் கிடைத்தவர்களை கொடூரமாக தாக்கி கைதும் செய்திருக்கிறது. கடலுக்குள் ஓடிய மக்களை மீண்டும் கரை திரும்பாத வண்ணம் அரண் அமைத்து வேட்டை நாயைப் போல காத்திருக்கிறது போலீசு.

இடிந்தகரைக்கு உள்ளேயும் போலீசு படை நுழைந்து, போராட்டக்காரர்களின் பந்தலைக் கைப்பற்றியிருக்கிறது. தேவாலயத்துக்கு உள்ளேயும் நுழைந்திருக்கிறது. ஊரைக் கைப்பற்றிய ஆக்கிரமிப்பு படை போல ஊர் முழுவதையும் போலீசு ஆக்கிரமித்திருக்கிறது. பலர் படகுகளில் கடலுக்குள் செல்கிறார்கள். பெண்கள் குழந்தைகள் திசைக்கொருவராக சிதறியிருக்கின்றனர். யாருக்கு என்ன நேர்ந்த்தென்று தெரியவில்லை.

அணு உலைக்கு எதிராகப் போராடிவரும் இடிந்தகரை மக்கள் மீது பாசிச ஜெயலலிதா அரசு தொடுத்திருக்கும் இந்த நயவஞ்சகமான, கொடிய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.

இத்தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் எமது அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இடிந்தகரை கூடங்குளம் வட்டாரத்தில் போடப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவையும் அங்கே குவிக்கப்பட்டுள்ள போலீசு படைகளையும் உடனே திரும்ப பெறவேண்டும்.

அணு உலை பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் சிவில் உரிமைகளைப் பறிப்பதை நிறுத்த வேண்டும்.

கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதை உடனே நிறுத்தவேண்டும்.

மக்களுக்கும் உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரு நாசம் விளைவிக்கும் அணு உலைகள் இழுத்து மூடப்படவேண்டும். என்று கோருகிறோம்.

ஒரு பட்டாசு தொழிற்சாலையில் கூட மக்களின் உயிருக்கு உத்திரவாதம் வழங்க வக்கில்லாத அரசுக்கு, அணு உலையின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் தருவதாகப் பேசுவதற்கே அருகதை கிடையாது. காற்றாலை, சூரிய ஒளி உள்ளிட்ட மாற்று மின் தயாரிப்பு முறைகள் உலகமெங்கும் பரவிவரும் இக்காலத்தில் இந்தியாவின் மீது அணு உலைகள் திணிக்கப்படுவதற்கு காரணம், ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை இலாப நோக்கமும், இந்திய அரசின் இராணுவ நோக்கமுமே தவிர வேறில்லை.

அணு உலைக்கு ஆதரவாக கூறப்படும் பித்தலாட்டமான வாதங்களை மக்கள் நிராகரிக்க வேண்டுமென்றும், கூடங்குளம் இடிந்தகரை மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக துணை நிற்கவேண்டும் என்றும் மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

அ.முகுந்தன்,

ஒருங்கிணைப்பாளர், போராட்டக்குழு.

ம.க.இ.க, பு.மா.இ.மு, வி.வி.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு.

_______________________________________________________

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம் நகரில் துப்பாக்கி சூடு!
கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!
கூடங்குளம் – இடிந்தகரை: போராட்டக் காட்சிகள்!
கூடங்குளம்:தாக்கத் தொடங்கியது போலீசு! அச்சமின்றி முன்னே செல்கிறார்கள் மக்கள்!!
உலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு…! சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு

கூடங்குளம் மக்களோடு கரங்களை இணைத்திடு! நாட்டை மீண்டும் காலனியாக்கும் அணு உலையை விரட்டிடு!!

கருத்துப்படங்கள்: கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!

ஆபத்தான அணு உலை வேண்டாம் !

அனைவருக்கும் மின்சாரம் வேண்டும் !

என்ற தலைப்பில் சென்னை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பில்  பிப்ரவரி 25ம் தேதி, மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.  அப்பொதுக்கூட்டத்தில் வைக்கப்பட்ட கருத்துப்படங்கள் இதோ…

தொடர்புடைய பதிவுகள்:

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! சென்னை பொதுக்கூட்ட காட்சிகள்!!


கூடங்குளம் அணு உலையினை மூடினால் இந்தியாவில் அடுத்தடுத்து எந்த அணு உலையும் கொண்டு வரமுடியாது! – சென்னை பொதுக்கூட்டம் குறித்த ஜீவி செய்தியில்!

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! சென்னை பொதுக்கூட்ட காட்சிகள்!!

தொடர்புடைய பதிவுகள்:

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! சென்னை பொதுக்கூட்ட காட்சிகள்!!

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! அனைவருக்கும் மின்சாரம் வேண்டும் !

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! அனைவருக்கும் மின்சாரம் வேண்டும் ! என்ற தலைப்பில் சென்னை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பில்  பிப்ரவரி 25ம் தேதி, மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.  அப்பகுதி உழைக்கும் மக்கள், வியாபாரிகள், சென்னை முழுவதிலிமிருந்து திரண்ட அரசியல் ஆர்வலர்கள், என அனைவரின் ஆதரவோடும்  கூட்டம் நடைபெற்றது. சரியாக 6 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கின. இந்த கூட்டத்திற்கு  பு.ஜ.தொ.மு  மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் தலைமை வகித்தார்.  பின்னர் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக்கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

பவர் கட்டு, பவர் கட்டு,  பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு என்ற பாடல்  நாட்டின் மொத்த மின்சாரத்தையும் விழுங்கி சிறு தொழில்களுக்கும் மக்களுக்கும்  இருளைத் தருகின்ற பன்னாட்டு கம்பெனியை ஒழித்துக்கட்டாமல் தீர்வு இல்லை என்றது. ”கரண்ட் வேணுமின்னா ரிஸ்க் எடுக்க வேண்டும் என்ற மக்களிடம் உபதேசம் செய்யும் அறிவாளிகளை’ அம்பலப்படுத்தி தனது வாழ்க்கையையே தினமும் ரிஸ்க் ஆக கொண்டு செல்லும் மீனவர், கட்டிடத்தொழிலாளி, சுரங்கத்தொழிலாளி, ஓட்டுனர்  ஆகிய தொழிலாளர்களின்  உழைப்பினை பறிக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கு எதிரான “மண்ணைத்தோண்டி வெட்டியெடுக்கும் தங்கம் யாருக்கு? என்ற பாடல் முழங்கியது.

யாருக்கோதானே பிரச்சினை நமக்கென்ன என்று இல்லாமல் நாம் உழைப்போராய் ஒன்றுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி ”உழைக்கும் மக்களே ஒன்று படு” என்ற பாடல் இசைக்கப்பட்டது. கூடங்குளம் மக்களின் போராட்டம் எந்த திசைவழியில் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில்அணு உலையை விரட்டணும்னா போராட்டத்த மாத்தணும், கூடங்குளம் இன்னுமொரு நந்திகிராம மாறணும்” என்று இசைக்கப்பட்ட பாடலுடன் தோழர்கள் மற்றும் மக்களின் பலத்த கைத்தட்டலுடன் கலை நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

அடுத்ததாக “ஆதிக்க அணு உலை அடங்காது இடிந்த கரை” என்ற தனது கவிதையை மகஇகதோழர் துரை.சண்முகம் வாசித்தார். 30 லட்சம் கொள்ளையடித்தால் என்கவுண்டர், நாட்டையே கொள்ளையடித்தால் சீப் மினிஸ்டர் என்ற ஆரம்பித்து பஸ் ஸ்டாண்ட் கக்கூசின் நோயிலிருந்து காக்காத அரசு அணு விபத்திலிருந்து நம்மை எப்படி பாதுகாக்கும்? என்ற எள்ளலுடன் பொய்யில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் வந்தால் அதன் மூலம் பொய்யாய்ப்புழுகும் நாராயணசாமி மற்றும் கலாமின் வாயில் 10 ஆயிரம் MW மின்சாரம்  தயாரிக்கும்  திட்டத்தையும் முன்வைத்தார். கூடங்குளம் மக்களின் போராட்டத்தை வரவேற்றும் அப்போராட்டப் புயல் கரை சேர்ந்தே தீரும் என்பதையும் கூறி தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற கொள்கையின்படி அனைத்தையும் அன்னியனுக்கு தாரைவார்த்துவிட்ட இந்த அரசு,  நாட்டை கொள்ளையடித்து அடிமையாக்குவதற்கு பெயர் மறுகாலனியாக்கம் என்றால், நாங்கள்தான் நாட்டையே மக்களை காக்கும் நக்சல்பரி” என்று தனது கவிதையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூதனது சிறப்புரையில் “2010ம் ஆண்டுக்குள் 50,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும் என்று அப்துல் கலாமின் குரு விக்ரம் சாராபாய் சவடால் விட்டுப் போனதையும் நாட்டில் உள்ள 20 அணு மின் உலைகள் மூலம் தற்போது கிடைப்பதோ 4130 மெகாவாட் என்றும் அந்த அணு உலைகள் இயக்கவே 4000 மெகாவாட் மின்சாரம் அளிக்கப்படுவதையும் கூறி மின்வெட்டிற்கு அணு உலை மாற்று என்பதே பொய் என்றார்.

அந்த அணு உலைகள் பாதுகாப்பானவை என்று மக்களிடம் பொய்ப்பிரச்சாரம் செய்வதையும் செர்னோபிலில் ஏற்பட்ட கதிர்வீச்சு பரவி 2700 ச.கி தாண்டியுள்ள இங்கிலாந்தில் ஆடுகள் லட்சக்கணக்கில் புதைக்கப்பட்டதையும் கல்பாக்கம் பகுதி  மக்கள் தற்போது அணு கதிர்வீச்சினால் முன்னைவிட பல மடங்கு நோய்களினால் பாதிக்கப்பட்டு இருப்பதை டாக்டர் மஞ்சுளா அம்பலப்படுத்தியுள்ள அதே வேளையில், விளம்பரத்தில் டாக்டர் சாந்தா கூலிக்கு மாரடிப்பதையும் சுட்டிக்காட்டிப்பேசினார். அணு உலை பாதுகாப்பானது அல்ல என்பதற்கு இதுவரை நடந்த அணுக் கதிர்வீச்சு விபத்துக்களே சாட்சி என்றும்  இருந்தும் அணு உலை பாதுகாப்பானது என்று கூறும் விஞ்ஞானிகள் முதலாளிகளின் கைக்கூலிகள் என்பதை அம்பலப்படுத்தினார்.

பொதுசொத்துக்களை விழுங்க தனியார் மயம் – தாராளாமயம் – உலகமயக் கொள்கைகள் காத்திருப்பதையும் கூறி அதற்கு எதிராக உழைக்கும் மக்கள்  நெஞ்சுரத்தோடு போராடிக் கொண்டிருப்பதையும் மக்களைக் காக்க அது மட்டுமே தீர்வு” என்று கூறினார்.

அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் மனோ தங்கராஜ்  தனது சிறப்புரையில் “கூடங்குளம் மக்களின் போராட்டத்தை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்ற ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புக்களுக்கு நன்றியை தெரிவித்து, காங், பிஜேபி, இந்து முன்னணி கூட்டணிகள் இப்போராட்டத்தை நசுக்க முயலும் போதும் இப்போராட்டம் இவ்வளவு நாள் நீடிப்பதற்கு காரணம் அதை காக்க ம.க.இ.க போன்ற பல அமைப்புக்கள் தமிழகம் முழுவதும் தரும் ஆதரவே என்றும் கூறினார். போராட்டத்திற்கு வெளி நாட்டில் இருந்து பணம் வருவதாக ஒரு நாட்டின் பிரதமர் பொய் பேசுவதையும் மக்களின் போராட்டம் வெளி நாட்டு நிதியில் இருந்து அல்ல உழைக்கும் மக்களின் நிதியில் இருந்து நடப்பதையும் விளக்கினார். கூடங்குளத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்படுவதற்கு ஏற்கனவே 6 அடுக்கு பாதுகாப்பு உள்ள டெல்லியிலேயே அணு உலையை வைத்துக் கொள்ளுங்கள் என்றார். அணு உலை எதிர்ப்பு போராட்டம் இன்றல்ல, 25 ஆண்டுகளாக நீடித்து வருவதற்கு 1988ல் அணு உலைக்கு எதிரான போராட்ட்த்தில் தான் குளச்சலில் கைது செய்யப்பட்டதையும் கூறி  புரட்சிகர அமைப்புக்களின் துணையோடு அணு உலையை தடுப்போம்”” என்றும் கூறினார்.

அடுத்ததாக கூடங்குளத்தின் போராளிகள் மேடையில் அறிமுகம் செய்யப்பட்டனர். அப்பெண்களின் ”வெல்கவே! அணு உலையை எதிர்க்கும் மக்களின் போராட்டம் வெல்கவே ” என்ற பாடலை கூட்டத்திற்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான கூடங்குளம் பெண்கள் கைத்தட்டி சேர்ந்து பாடினார்கள். அணு உலையை வைப்பதற்கு எங்கள் நிலம் என்ன சாக்கடையா? என்ற அவர்களின் கேள்வி சூடு சொரணை உள்ள எவரையும் அசைத்துப் பார்ப்பதாக இருந்தது.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப்பொதுச்செயலர் தோழர் மருதையன் “இந்த கூடங்குளம் போராட்டம் என்பது  ஓட்டுக் கட்சிகள் அல்லாமல் தன்னந்தனியாக மக்களால் மட்டுமே நடத்தப்படுவதுதான். இது தமிழகத்திற்கே முன் மாதிரி அதனால்தான் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. ஓட்டுக்கட்சிகளை தமிழகத்திலிருந்தே அகற்ற இது ஒரு முன்னறிவிப்பு” என்று  தனது சிறப்புரையை தொடங்கினார்.

திடீரென போராட்டம் செய்கிறார்கள் என்று கூறுபவர்கள் மஹாராஷ்டிராவில் பிரெஞ்சு நிறுவனத்துடனான 10,000மெகாவாட் அணு உலைக்கு எதிராக விவசாயிகள் ஒரு அங்குலம் கூட தரமுடியாது என்று நடத்தும் போராட்டத்தை ஆதரிப்பது இல்லை என்பதை அம்பலப்படுத்தினார். பல ஆயிரம் கி.மீ தாண்டியும் அணுக்கதிர் வீச்சினால் ஏற்பட்ட பாதிப்புக்களையோ உயிர்ப்பலிகளையோ அரசு திட்டமிட்டு இருட்டடிப்பு செய்கிறது . இது ஏதோ செர்னோபில், புகுஷிமா, கூடங்குளம் பிரச்சினை அல்ல, இந்தியாவின் உலகம் முழுமைக்குமான பிரச்சினை. பல தலைமுறைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்குதான் இந்த மக்களின் போராட்டம் தொடர்கிறதென்பதையும் இதில் மக்களின் கருத்தையே கேட்காத தமிழக அரசின் நிபுணர் குழு ஒரு ஏமாற்று வேலை” என்று கூறினார்.

மேலும் “நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படுவதையும், மின்வெட்டு சமமாக பிரிக்கப்படாமல் அதில் 70% சிறு தொழில்கள் மேல் சுமத்தப்படுவதையும் இதனால் சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டு  நசிந்து போகிறது எடுத்துக்காட்டிப் பேசினார். சென்னையில் அளிக்கப்படும் மொத்த மின்சாரத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் கழிவறைக்கும் கூட ஏசியை பயன்படுத்தும் மேட்டுக்குடிகள் 80%  மின்சாரத்தை எடுத்துக்கொண்டு அதனால் ஏற்படும் பற்றாக்குறையை சிறு தொழில்கள் மற்றும் உழைக்கும் மக்களின் மீது சுமத்துவதை விவரங்களுடன் அம்பலப்படுத்தினார்.

மருத்துவம், தண்ணீர் என அனைத்தையுமே விற்பனைப் பண்டமாக மாற்றிய தனியார்மயம் தாராளமயம் உலகமயம் தான் மின்சாரத்தையும் மாற்றி உள்ளது. மின்சாரத்தை தேக்கிவைக்க முடியாது என்ற ஒரே காரணத்திற்காக ஒரு யூனிட் மின்சாரம் ஒரே மாதத்தில் ரூ1.10 முதல் ரூ12.00 வரை தனியார் முதலாளிகளால் விற்கப்படுகிறது.

தனியாரிடம் 19 ரூ/ யூனிட்க்கு மின்சாரத்தை வாங்கும் அரசு, நோக்கியா, போர்டு போன்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கு சலுகை விலையில் அளிப்பது தான் இந்த மின் பற்றாக்குறைக்கு காரணம் என்றார். மேலும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு தற்போது ரூ5.50ல் வழங்கப்படும் மின்சாரத்தை 3.50ரூ ஆக குறைக்க மின்சார வாரியம் ஒழுங்கு முறை ஆணையத்திடம் முறையிட்டிருக்கும் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்திப் பேசினார்.

“கடந்த 30 ஆண்டுகளில் ஒரு அணு உலையைக்கூட திறக்காத நாடுகள்தான் இந்தியாவில் அணு உலையை விற்க ஒப்பந்தம் போடுகின்றன. இந்தச் சூழலில் கொண்டுவரப்படும் அணு உலை மின்சாரத்திற்கு அல்ல. அது 17 லட்சம் கோடி ரூபாய்களுக்கு போடப்பட்ட  இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் விளைவு. இந்த அணு உலையின் கழிவினை பாதுகாக்க இடம் இன்று வரை உலகில் கண்டுபிடிக்கப்படவே இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதற்கு மாற்று கூடங்குளம் அணு உலையை அங்கே புதைப்பதுதான் ஒரே வழி.  அதை நாட்டின் மீது பற்று கொண்ட நக்சல்பாரிகளால், மக்களுடைய வலிமையால் மட்டுமே சாதிக்க முடியும்” என்று தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சென்னைக்கிளைத் தோழர்களின் நாடகம், ”பன்னாட்டு நிறுவனங்களால் நமது மின்சாரம் பறிக்கப்படுவதையும் அதற்கு மாற்றாக கூறப்படும் அணு உலை என்பது மக்களை கொல்லவந்த இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் பிண உலை என்பதையும் தனியார்மயம் தாராளமயம் உலகமயத்தின் விளைவான  இந்த அணு உலையை மக்கள்  அடித்து விரட்ட வேண்டும்” என்பதை வலியுறுத்தும் வகையில் அமைந்தது.

நன்றியுரை பு.மா.இ.மு.-ன் மாநில அமைப்பாளர் தோழர் கணேசன் கூறினார். இறுதியில் பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் பொதுக்கூட்டம் நிறைவு பெற்றது.

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! அனைவருக்கும் மின்சாரம் வேண்டும் ! என்பதை வலியுறுத்தும் வகையில் புகைப்படக் காட்சிகள் இந்தக்கூட்டத்தில் இடம் பெற்றது. இந்தக்கூட்டத்தில் சென்னை, கூடங்குளம் பகுதி மக்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள் உழைக்கும் மக்கள் என 5000த்திற்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். எம்.ஜி.ஆர் பகுதி மக்களோ இந்த பொதுக்கூட்டத்திற்கு தங்களது நிதியை அள்ளித்தந்தனர்.  பொதுக்கூட்ட செலவுகளுக்காக துண்டேந்தி பெறப்பட்ட 15,000 ரூபாய் என்பது அப்பகுதி மக்கள் இந்த கருத்துக்கு கொடுத்த ஆதரவையே காட்டியது.  கூட்டத்தின் பின்புறம் பார்வையாளர்களுக்காக  நிகழ்ச்சி திரையிடப்பட்டது. அந்த புரஜெக்டருக்கு மின்சாரம் தடைபட்ட போது உடனே அருகில் இருந்த கடைக்காரர் தன்னுடைய கடையில் இருந்து மின்சாரம் கொடுத்து உதவினார்.

கூட்டம் முடிந்த உடன் ஒரு சிறு வியாபாரி,”வழக்கமா 8 மணிக்கு கடைய மூடிட்டு போயிருவேன், இன்னைக்கு கூட்டத்துக்காக கடைசி வரை திறந்திருந்தேன், எங்களுக்கு எவ்வளவு வேணாலும் கரண்டு கட்டு வரட்டும், ஆனா அந்த மக்களோட தாலிய அறுத்துட்டு அணு மின்சாரமெல்லாம் எங்களுக்கு வேண்டாம்” என்று நெகிழ்ச்சியாக சொன்னார். தோழர்கள் நிதி வசூல் செய்த போது பெண் போலீசு உட்பட சில போலிசுக்காரர்களும், “எங்க்கிட்ட கேட்கமாட்டீங்களா” என்று நிதி அளித்தனர்.

கூடங்குளம் அணு உலை என்பது மின்வெட்டை தீர்க்க வந்ததல்ல, அது அமெரிக்க இந்திய அணு சக்தி ஒப்பந்தத்தின் விளைவு, தனியார்மயம் தாராளமயம் உலகமயத்தின் பிரதிபலிப்பு. மின்வெட்டினால் பாதிக்கப்படும் மக்களுக்கு மொத்த மின்சாரத்தையும் பறித்து தங்களுக்கு மின்வெட்டை மட்டுமே பரிசாகத்தரும் பன்னாட்டு கம்பெனிகளையும் அதற்கு சேவை செய்யக்கூடிய அரசு மற்றும் ஓட்டுக்கட்சிகளையும் விரட்டுவது மட்டுமே இதற்கு தீர்வு என்பதாக இந்த பொதுக்கூட்டம் அமைந்தது.

தொடர்புடைய பதிவுகள்:

அப்துல் கலாம் வாயிலிருந்து ஆறாயிரம் மெகாவாட்

12.2.2012 அன்று சென்னை லயோலா கல்லூரியில் அணுசக்திக்கு எதிரான பெண்கள் போராட்டக்குழு சார்பில் நடைபெற்ற கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை.

___________________________

வன் கொடுப்பதை குடிக்க வேண்டும்,
அவன் தருவதை படிக்க வேண்டும்,
நம் தினச்சாவு கூட – இனி
அணுச்சாவாகவே அமைய வேண்டும்
எனும் அமெரிக்க திமிரின்
ஆதிக்க குறியீடே,
கூடங்குளம் அணு உலை !

போராடும் தமிழகத்தின்
ஒரு பகுதியாக இக்கவியரங்கம்…
அனைவர்க்கும் வணக்கங்கள்.

***

டிந்தகரை உணர்ச்சிகள்
ஒரு கவிதைக்குள் அடங்குமா ?
தெக்கத்தி உப்புக்காற்றில்
புதைந்திருக்கும் போர்க்குணங்கள்
திக்கற்ற அறிவாளிகளின்
தோலில் வந்து உரைக்குமா ?

கொலைவெறிக்கு இரையான காதுகள்
அணுவெறிக்கும் இசையுமென்ற
ஆளும் வர்க்க ஏளனத்தை,
கலைத்தெறியும் பெரும் பணிக்கு
கலைப்பணிகள் துணை சேர்ப்போம் !

போராடும் மக்களின்
உணர்ச்சிகர உண்மைகளை – நாடெங்கும்
வேரோடச் செய்வதற்கு வேண்டும்
நிறைந்த கவிதைகளும்,
நிறைய களப்பணியும்.

க்கத்து மனிதரிடம்
தெக்கத்தி கதை சொல்வோம்..
புன்னையும் புலி நகக்கொன்றையும்
தென்னையும், வழிகாட்டும் பனையும்
பால்வடி மாரோடு எங்கள் அன்னையும்,

உன்னையும் என்னையும் காக்க
உண்ணா நிலையிருக்கும் உண்மையும்,

ப.சிதம்பரம், நாராயணசாமி, கலாமின்
பாசம் படிந்த உதடுகளில்
வழுக்கி விழுந்தவர்கள் உணரும்படி,
பக்கத்து மனிதரிடம்
தெக்கத்தி கதை சொல்வோம் !

கரத்து பிட்சா காடுகளில்
நாகரீக மேய்ச்சலிருப்போரே,
உங்களுக்கும் சேர்த்து தான்
இடிந்தகரை பட்டினிப்போரில்
காய்ந்து கிடக்கிறது
ஒரு தாயின் கருவறை.

நான் வேறு சாதியென்று
நழுவ முடியாது நீ !
பன்னாட்டு கம்பெனிகளின்
அணுக்கழிவுகள்
திண்ணியத்து மலமாய்
திணிக்கப்படுகிறது உனது வாயில் !

கெடுநிலை மத்தியில்
நடுநிலை இல்லை !
இரண்டிலொன்று –
இடிந்தகரை பக்கம் வந்தால்
நீ மனிதனாகலாம்,
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பக்கம் போனால்
காங்கிரசு மிருகமாகலாம் !

பொய்கள் ரதமேறி
புறப்பட்டுவிட்டன,
உண்மைகள் ஊரடங்கி கிடப்பதுவோ ?

இனி.. கவிதைகள்
அரங்கினில் மட்டும் போதாது,
காங்கிரசு பி.ஜே.பி
சிரம்களில் செலுத்தப்பட வேண்டும் !

றிந்து கொள்வோம் !
அபாயம்
அணு உலை மட்டுமல்ல,
அதனை கொண்டுவரும் அரசியல்…
ஆதரிக்கும் கட்சிகள்…

காங்கிரசும் – பா.ஜ.கவும்
ஏகாதிபத்திய இதழ் வழியும் எச்சில்கள் !
கைராட்டையாலேயே
நூல் விட்டவர் காந்தி,
நாட்டை காட்டிக்கொடுக்க
கண்ணாலேயே
நூல் விடுபவர்
மன்மோகன்சிங் !

நேரு, குழந்தைகளுக்குத்தான் மாமா,
மன்மோகனோ
இந்த குவலயத்திற்கே மாமா !
அமெரிக்க அடிமைத்தனத்தில்
அத்வானியும், மோடியும்
பன்னாட்டு கம்பெனி வேள்விக்கு
வில் பிடிக்கும் ராமா !

கனிமொழி ஆபத்தை
காப்பதே பெரும்பாடு !
அணு உலை பாதிப்பில்
அழியட்டும் தமிழ்நாடு
இது கருணாநிதி தமிழனின் நிலைப்பாடு !

ரொம்பவும் நோண்டிக்கேட்டால் நோ கமெண்ட்ஸ் !

அறிவிக்கப்படாத மின்வெட்டால்
அணு உலைக்கு ஆதரவாய்
பொதுக்கருத்தை உருவாக்க
ஜெயலலிதா ஏற்பாடு !
அன்னிய மூலதனத்தில்
கனக்குது அம்மாவின் மடிசாரு !

எழுந்து நீ போராடு !
இல்லையேல் சுடுகாடு !
கோக்கடித்தாலும் விடாது
அமெரிக்கா சாகடிக்கும்,
நீ.. ஆதரித்தாலும்
அணு உலை உன்னையும் கொல்லும் !

ஈழத்தமிழனுக்கு.. முள்ளிவாய்க்கால் !
இந்தியத்தமிழனுக்கு.. கூடங்குளம் !
மேலாதிக்க அடையாளங்கள் வேறு,
நோக்கம் ஒன்று.

த்துக்கொள்ளாத ஈராக்குக்கு
குண்டுவீச்சு !
ஒத்துக்கொண்ட இந்தியாவுக்கு
கதிர் வீச்சு !
உதவாது வெறும் வாய்ப்பேச்சு..

மவுனம் காத்தால் –

தலைமுறைகளின் சினைமுட்டையில்
அணுக்கரு வளரும்
தாயின் மார்பிலும் அணுக்கதிர் சுரக்கும்
அதையும் குடிக்க எத்தனித்து
உதடுகள் பிளந்த குழந்தை அலறும்
பிதுங்கிய விழிகளில் ப்ளூட்டோனியம் வழியும்.
தன்னிறம் மாறும்

புல்லினம் பார்த்து
தாழப் பறக்கும் பறவைகள்
இறக்கைகள் அடித்து குழறும்.
நிலத்தடி நீரும்… நெல்மணி குணமும்
தென்கடல் உப்பும்… தென்றல் காற்றும்
கடைசியில் நஞ்சாய் போய் முடியும்.

சம்மதித்தால் –

அப்துல் கலாம்
கனவு கண்ட இந்தியா
உன்னில் புற்று நோயாய் வளரும்
மன்மோகன்சிங்
நாட்டை முன்னேற்றும் திசையில்
தைராய்டு தசைப் பிண்டம் அசையும்.

அனுமதித்தால் –

அணு உலையும் அணு சார்ந்த படுகொலையும்
நெய்தல் திணையின்
முதல் பொருளாய் மாறிவிடும்.
அய்வகை நிலமும்
அணுக்கழிவின் பிணமுகமாய் ஆகிவிடும்.

இவ்வளவுக்கும் பிறகு –
நம் இழவெடுத்த மின்சாரம்
பன்னாட்டு கம்பெனிகளுக்கு,
இந்தியனாய் இருந்ததற்கு
அணுமின் மயானம் தமிழகத்திற்கு !

செர்நோபில், புகுஷிமா அணுக்கசிவில்
சிதைந்தொழிந்த முகங்களில்
பிழைத்திருக்கும் உண்மைகளை பார்த்து
உலகமே தெளிவுபெறும் வேளையில்
புதுச்சேரியில் போட்ட சரக்கு
தில்லிக்கு போயும் தெளியவில்லை நாராயணசாமிக்கு !

”அணு உலை.. யாரையும்… ஒன்னுமே செய்யாதாம் !
காசை கொட்டிய வேலை வீணாகிவிடுமாம் !”

கட்டிய அணு உலை வீணாகக் கூடாதென்றால்
கொட்டி மூடுங்கள் அதில் காங்கிரசு கழிவுகளை.

பார்ப்பன மனு உலைக்கும் காவல்
பன்னாட்டு அணு உலைக்கும் காவல்
தோரியமும் ஆரியமும் கலந்த

வீரியக் கலவை அப்துல் கலாமும்
‘அணுவுக்கு அஞ்சினால் கனவு நடக்குமா ?’
வாருங்கள் கனவு காணுவோம்
‘முதலில் கண்ணை மூடுவோம்’ என்கிறார்.

பொய்யிலிருந்து
மின்சாரம் தயாரிக்கும்
புதுவழி ஒன்றிருந்தால்
நாராயணசாமி வாயிலிருந்தே
நாலாயிரம் மெகாவாட்டும்
அப்துகலாம் வாயிலிருந்து
ஆராயிரம் மெகாவாட்டும்
தமிழகத்திற்கு கிடைக்கும்.

அன்றாடம் இவர்கள்

அவிழ்க்கும் பொய்கள்
அணுவுக்கே அடுக்காது…
அணுக்கழிவே சகிக்காது.

ளர்ச்சி என்பதற்காய்
புற்று நோயை ஏற்க முடியுமா ?
அறிவியல் சுகம் அடைவதற்காய்

மின்சாரத்தை முத்தமிட முடியுமா ?

பாதுகாப்பான முல்லைப் பெரியாறை
பாதுகாப்பற்றதென்றும்
பாதிப்பான அணு உலையை பாதுகாப்பென்றும்
திரிக்கும் தேசிய பொய்யர்கள்
திசையெங்கும்… ஜாக்கிரதை !
அணு உலைகளை விடவும் ஆபத்தானவை
இந்த அயோக்கியர்களின் வாய்கள்.

த்தாம் பசலிகளாம் நாம்
ப.சிதம்பரம் கேட்கிறார்.
“உங்களுக்கு மின்சாரம் வேண்டுமா ?
வேண்டாமா ?
மாண்புமிகு மத்திய அமைச்சரே
கொஞ்சம் பொறுங்கள்,
எங்கள் மாட்டிடம் கேட்டுவந்து
மறுபடியும் பதில் சொல்கிறேன்…

புல்லினமும், பூ வனமும்
கல்லினமும், கடலினமும்
எம் தமிழின் மெல்லினமும்
இடையினமும், வல்லினமும்

உழைக்கும் மக்களின் சொல்லினமும்,
தொடுவானம் தொடங்கி
கடலாழம் வரைக்கும்
பல்லுயிரினமும் சேர்ந்ததெங்கள் நாடு !

நீங்கள் நாட்டை முன்னேற்ற
நாங்கள் காட்டை இழந்தோம்..

நீங்கள் தொழிலை முன்னேற்ற

எங்கள் வயலை இழந்தோம்..
எங்கள் காற்றை இழந்துவிட்டு
உங்களிடம் ஏ.சி வாங்கவேண்டும்..

எங்கள் ஆற்றை அள்ளிக் கொடுத்துவிட்டு
உங்களிடம் ‘கின்லே’ ’பெப்சி’ வாங்கவேண்டும்..
எங்கள் கடலை இழந்துவிட்டு உங்களிடம்
உப்பு வாங்கவேண்டும்..
எங்கள் மகரந்தங்களை இழந்துவிட்டு
மானியத்தில் உங்களிடம்
சாம்பல் வாங்கவேண்டும்..

முதலாளித்துவ லாபவெறிக்கு
மொத்த இயற்கையையும்
இழந்த பிறகு தான்,
நாங்கள், செத்துப்போனதே
எங்களுக்கு தெரிய வந்தது !

மழை முடிந்தபின்
இலை சொட்டும் ஓசைகளைக் கேட்கவியலாமல்,
மரங்களை இழந்த எங்களை
நகரத்துக் கொசுக்கள்
காதோரம் வந்து கண்டபடி ஏசுகிறது !

குடியிருப்பின்
இறுக்கம் தாளாமல்
குடும்பத்தையே திட்டித்தீர்த்து
தீண்டப்பயந்து
வெறுத்து வெளியேறுகிறது தேள் !

வந்தமர மலரின்றி
வெறுமையில்,
தேடிக்களைத்த வண்ணத்துப்பூச்சி
எங்கள் இயலாமை பார்வை மீது
கண்டனம் பொழிகிறது வண்ணங்களை !

நம்பி ஒப்படைத்த,
ஊருணி, குளங்கள்,
ஆறு, ஏரியைக்
காப்பாற்ற வக்கில்லாத என்மேல்,
காக்கை எச்சமிடுகிறது !

தருவேன் என்ற நம்பிக்கையில்
வாசலில் வந்து மாடு கத்துகிறது,
ஒரு வாய்
தண்ணி தர இயலாமல்
கூனி குறுகுகிறேன் நான் !

வாழையும்… தாழையும்
உப்பும் மீனும், கடலும் கலனும்
செருந்தி மரத்தில் பொருந்தி வாழும்
பூச்சியும்.. எறும்பும்
கேட்கும் கேள்விகளுக்கு

என்னிடம் பதிலில்லை !

மாடு மடி நனைய.. நீரில்லை,
தும்பி குடிக்க தேனில்லை,
வண்டு படுக்க வளமான மண்ணில்லை,
கொண்டு வாராணாம் அணு உலை !
இயற்கையையே கொளுத்தி
எவனுக்கு வெளிச்சம் !

மின்சாரம்,
வேண்டுமா ? வேண்டாமா ?
எனக்கேட்ட அமைச்சர் அவர்களே,
உங்கள் அணுத்திமிர் பார்த்து
அஃறினைகளும் கேட்கின்றன,
“நீங்கள் சொல்லுங்கள் –
உங்களுக்கு இந்தியா வேண்டுமா ?
வேண்டாமா ?

______________________________________________________

– துரை.சண்முகம்

முதல் பதிவு: வினவு

தொடர்புடைய பதிவுகள்: