• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,814 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

வ.உ.சியின் தியாகமும் காங்கிரசின் துரோகமும்

 

 

பார்சி சமூகத்தைச் சேர்ந்த ஜம்ஷெட்ஜி டாடா 1877இல் தனது நூற்பாலையை நிறுவி அதற்குப் “பேரரசி ஆலை‘ என்று பெயரிட்டார். கிழக்கிந்தியக் கம்பெனிக்காகச் சீனாவுக்கு கப்பல் மூலம் அபினி கடத்தியதில் கிடைத்த தரகுப் பணத்தையும், 1857இல் ஈரான் மீதும், 1868இல் எத்தியோப்பியா மீதும் பிரிட்டிஷ் இராணுவம் போர் தொடுத்தபோது அவர்களுக்கு உணவு சப்ளை செய்து அந்த “காண்டீன் கான்டிராக்ட்‘ மூலம் கிடைத்த பணத்தையும் வைத்து இந்த நூற்பாலை துவங்கப்பட்டதால், அந்த நன்றி “பேரரசி ஆலை‘ என்று வாலை ஆட்டியது.

இப்படிப் போதைப் பொருள் கடத்திய டாடாவைத்தான் சுதேசித் தொழிலின் தந்தை என்று பெருமையுடன் குறிப்பிடுகிறது “சுதந்திர‘ இந்தியா. அதேபோல, தமிழ்நாட்டின் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள், ஆங்கில அரசின் ஆசியோடு பர்மா, மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் தங்கள் வட்டித் தொழிலை விரிவுபடுத்தியிருந்தனர்.

இந்தியாவின் சுதேசி வணிகர்கள் இப்படியாகத் திரைகடல் ஓடித் திரவியம் தேடிக் கொண்டிருந்தபோது வெள்ளையனை விரட்ட வேண்டும் என்றால் அவனை எதிர்த்துப் போட்டி வர்த்தகம் நடத்த வேண்டும் என்று ஒரு குரல் தூத்துக்குடியிலிருந்து உரத்துக் கூவியது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் வணிகரல்ல. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த வழக்குரைஞரானவ.உ.சிதம்பரம்.

ஒரு பரிதாபத்துக்குரிய சுதந்திரப் போராட்டத் தியாகி. ஏதோ ஒரு உந்துதலில் வெள்ளையனுக்கு எதிராகப் போராடிச் சிறை சென்றவர்” என்பது போன்ற தோற்றம் வ.உ.சி.யைப் பற்றி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உண்மையில் அவர் மிகவும் திட்டமிட்டுச் செயல்பட்ட ஒரு விடுதலை வீரர். பிரிட்டிஷாருக்கு எதிரான நெருப்பாகவே வாழ்ந்தவர்.

“வெள்ளையனை விரட்டுவது என்றால் நம்மவர்க்குக் கடல் ஆதிக்கம் வேண்டும். எனவே தமிழர்கள் மீண்டும் கடல் மேல் செல்வது எவ்வாறு என்பதைத் திட்டமிட்டேன்” என்று சுதேசிக் கப்பலுக்கான “விதை‘ பற்றிக் குறிப்பிடுகிறார் வ.உ.சி.

சுதேசிக் கப்பல் என்பது வியாபாரம் அல்ல, அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தின் வீரியமிக்க வடிவம் என்ற புரிதல் வ.உ.சி.க்கு இருந்தது. எனவே தன்னுடைய கம்பெனிக்கு மிகச் சாதாரண மக்களிடமெல்லாம் பங்கு வசூல் செய்தார் வ.உ.சி.

1906 அக்டோபர் 16ஆம் நாள் “சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி‘ என்ற பெயரில் சுதேசிக் கப்பல் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. 1907 மே மாதம் “காலியோ, லாவோ‘ என்ற இரண்டு சுதேசிக் கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் மிதக்கத் தொடங்கின.

கிலி பிடித்த வெள்ளையர்களின் பிரிட்டிஷ் இந்தியன் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியும் (பி.ஐ.எஸ்.என்) பிரிட்டிஷ் அரசும் இணைந்த கைகளோடு சுதேசிக் கப்பலுக்கு எதிராகச் சதிகள் செய்ய ஆரம்பத்தன.

தூத்துக்குடிக்கும் கொழும் புக்கும் இடையில் 5 ரூபாயாக இருந்த மூன்றாம் வகுப்புக் கட்டணத்தை 75 பைசாவாகக் குறைத்தது பி.ஐ.எஸ்.என் நிறுவனம். அடுத்த சதியாக, இந்திய இலங்கை ரயில்வே நிர்வாகம், பி.ஐ.எஸ்.என் நிறுவனக் கப்பல்களில் ஏற்றப்படும் சரக்குகளுக்கும் பயணிகளுக்கும் ரயிலில் கட்டணச் சலுகை என்று அறிவித்தது.

ஆனாலும் தேசப்பற்று மிக்க மக்கள் இந்த சதி நிறைந்த சலுகைகளைப் புறம் தள்ளி, வ.உ.சி.யின் சுதேசிக் கப்பல்களையே ஆதரித்தனர். அதனால் வெள்ளையன் கப்பல் நிறுவனத்திற்கு மாதம் 40,000 வரை நட்டம் ஏற்பட்டது. சுதேசிக் கப்பல் மக்களை அரசியல் படுத்தியது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்ட உணர்வை மக்கள் மனதில் விதைத்தது.

சுதேசிக் கப்பல் பதிவு செய்து சரியாக மூன்று மாதம் கழித்து திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ‘வெள்ளையர் எதிர்ப்புணர்வு இங்கு நிலவுகிறது. குறிப்பாக தூத்துக்குடியில் அதிகம் நிலவுகிறது’ என்று அரசுக்கு அறிக்கை அனுப்பினான். ஆம். நெஞ்சில் நெருப்போடு வெள்ளையர் களுக்கு எதிரான கலவரத்தை நடத்தக் காத்திருந்தது திருநெல்வேலிச் சீமை.

திருநெல்வேலியே திகுதிகுவென்று தீப்பற்றி எரிகிறது

கப்பலோட்டியது மட்டும்தான் வ.உ.சியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கை என்ற சித்திரம் தவறானது. பிரிட்டிஷ் ஆட்சியின் சுரண்டலையும் கொடுங்கோன்மையையும் எதிர்த்த மக்கள் போராட்டங்களின் மூலம்தான் விடுதலையைச் சாதிக்க முடியும் என்ற பார்வை வ.உ.சி.க்கு இருந்திருக்கிறது.

வெள்ளை முதலாளிகளால் நடத்தப் பட்ட தூத்துக்குடி கோரல் ஆலைக்கு எதிராக அவர் நடத்திய போராட்டம் இதற்குச் சான்றாக இருக்கிறது.

கோரல் ஆலையில் 10 வயதுச் சிறுவர்களும் தொழிலாளர்களாக வேலை வாங்கப்பட்டனர். வார விடுமுறை என்பதே கிடையாது. கூலி மிகக் குறைவு. வேலையில் தவறு நேர்ந்தால் பிரம்படி. இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்டுவதற்காக வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகிய மூவரும் கைகோர்த்தனர்.

”முதலாளிகளை முடமாக்குவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று இயந்திரங்களுக்கு ஊறு விளைவிப்பது, இன்னொன்று வேலை நிறுத்தம். இரண்டாவது வழியே சிறந்தது” என்று தொழிலாளர்களிடம் உரையாற்றினார் சிவா. பின்னர் பேசிய வ.உ.சி, இரண்டு வழிகளையும் கையாளுமாறு தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்டார்.

தொழிலாளர்கள் வ.உ.சியின் “கோரிக்கையை‘ உடனே நிறைவேற்றினர். மறுநாளே ஆலையின் மீது கற்களை வீசினார்கள். ஆலையின் தண்ணீர்க் குழாயை உடைத்தெறிந்தார்கள். தொழிலாளர் பிரச்சினையை மக்களிடம் பேசி அதனை வெள்ளையருக்கு எதிரான போராட்டமாக மாற்றினார் வ.உ.சி.

மக்கள் வீதியில் சென்ற வெள்ளையர்களைக் கல்லால் அடித்தனர். வியாபாரிகள் வெள்ளையருக்கு உணவுப் பொருட்களை விற்க மறுத்தனர். தூத்துக்குடியில் வாழ்ந்த வெள்ளையர்கள் உயிருக்குப் பயந்து தங்கள் இரவுகளைக் கப்பல் கம்பெனி அலுவலகத்தில் கழித்தனர். ஆலைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அதனால் வெள்ளையனின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நாவிதர்களோ வெள்ளையரை ஆதரித்தவர்களுக்குச் சவரம் செய்யவும் மறுத்தனர்.

நிலைமை எல்லை மீறியது. நிர்வாகம் பணிந்தது. வார விடுமுறை, ஊதிய உயர்வு, வேலை நேரக்குறைப்பு ஆகியவற்றுக்கு உடன்பட்டது. தொழிலாளர் பிரச்சினையை ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமாக மாற்றியமைத்த வ.உ.சி.யின் இந்த வியூகம் பிரமிக்க வைக்கிறது. இந்தப் போராட்ட முறை இந்தியா முழுவதும் பின்பற்றப்பட்டிருந்தால் பிரிட்டிஷ் அரசு அப்போதே கப்பல் ஏறியிருக்கும்.

வெறுமனே கூலி உயர்வுக்குக் குரல் கொடுக்கிற அமைப்பாகத் தொழிற் சங்கத்தை வ.உ.சி பார்க்கவில்லை. ஏகாதிபத்தியத்தை நாட்டை விட்டே விரட்டுகிற மாபெரும் சக்தியாகவே அவர் தொழிலாளி வர்க்கத்தைப் பார்த்தார். கோரல் ஆலைப் போராட்டம் முடிந்தவுடனேயே அடுத்த அரசியல் போராட்டத்தைத் துவக்குகிறார் வ.உ.சி.

அன்றைய காங்கிரஸ் கட்சியின் திலகர் அணியைச் சேர்ந்த விபின் சந்திரபால் சிறையிலிருந்து விடுதலை அடைந்த நாளை சுயராச்சிய நாளாகக் கொண்டாட முடிவு செய்யப்படுகிறது. தடை விதிக்கிறான் கலெக்டர் விஞ்ச். 1908 மார்ச்10ம் நாள் வ.உ.சி, சிவா, பத்மநாபன் ஆகியோர் தலைமையில் தடை உத்தரவை மீறுகிறார்கள் மக்கள். வெறி கொண்ட விஞ்ச் மூவரையும் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கிறான்.

உடனே திருநெல்வேலியின் கடைகள் அனைத்தும் மூடப்படுகின்றன. வ.உ.சி யின் தீவிர விசுவாசியான ஏட்டு குருநாத அய்யர், திறந்திருக்கும் கடைகளையெல்லாம் மூடுமாறு மிரட்டுகிறார். இதனால் தன் வேலையையும் இழந்து சிறைக்கும் செல்கிறார்.

சுமார் 4000 பேர் கொண்ட மக்கள் கூட்டம் இந்துக் கல்லூரிக்குள் நுழைந்து மாணவர்களையும் தங்களோடு சேர்த்துக்கொண்டு கல்லூரியை இழுத்து மூடுகிறது. கல்லூரி முதல்வர் எர்ஃபர்டு தப்பி ஓடி அருகில் இருந்த பாரி கம்பெனிக்குள் ஒளிந்து கொள்கிறார்.

பிறகு அந்த மக்கள் கூட்டம் நகரமன்ற அலுவலகம், அஞ்சலகம், காவல் நிலையம், மண்ணெண்ணெய்க் கிடங்கு ஆகிய அனைத்துக்கும் தீ வைத்துக் கொளுத்துகிறது. திருநெல்வேலியே திகு திகுவெனத் தீப்பற்றி எரிகிறது.

எழுச்சி கொண்ட கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்த போலீசு ஆயத்தமானபோது “எங்களோடு சேர்ந்து கொண்டு வெள்ளையரைச் சுடுங்கள்” என்று போலீசைக் கோருகிறார்கள் மக்கள். தூத்துக்குடியிலும் கடையடைப்பு. வீடுகளின் மாடிகளிலிருந்து போலீசார் மீது சரமாரியாகக் கற்கள் வீசப்படுகின்றன. தமது முக்கிய வாடிக்கையாளர்களான வெள்ளையர்களை எதிர்த்தும் கசாப்புக் கடைக்காரர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.

வேலைநிறுத்தம் முடிந்து நாட்கள் முன்புதான் பணிக்குத் திரும்பியிருந்த கோரல் ஆலைத் தொழிலாளர்கள் கைதுக்கு எதிராக மீண்டும் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.

வ.உ.சி, சிவா இருவர் மீதும் அரசு நிந்தனை வழக்கு தொடர்கிறான் கலெக்டர் விஞ்ச். 1908 சூன் 7ஆம் நாளன்று ”வ.உ.சிக்கு ஆயுள் மற்றும் நாடு கடத்தல் தண்டனை” விதிக்கிறான் நீதிபதி பின்ஹே. அந்தமான் சிறையில் இடப்பற்றாக்குறை காரணமாக நாடு கடத்தல் தவிர்க்கப்படுகிறது. ஆனாலும் கடும் குற்றவாளிகளுக்கு அணிவிக்கின்ற இரும்பு வளையத்தை வ.உ.சி யின் காலில் அணிவிக்கிறது பாளை சிறை நிர்வாகம். கோவை, கண்ணனூர் என அவருடைய சிறைவாசம் தொடர்கிறது. அங்கே கைதிகளின் மீதான சிறைக் கொடுமைகளுக்கு எதிராக வ.உ.சி.யின் போராட்டமும் தொடர்கிறது.

மேல் முறையீட்டில் ஆயுள் தண்டனை குறைக்கப்பட்டு, 1912 டிசம்பர் 24அன்று கண்ணனூர் சிறையில் இருந்து விடுதலையான வ.உ.சி.க்குக் கிடைத்த வரவேற்பு, காங்கிரஸ் இயக்கத்தின் கையாலாகாத்தனத்தைக் காட்டியது. சுப்பிரமணிய சிவா, கணபதிப் பிள்ளை என்ற இருவரைத் தவிர வ.உ.சியை வரவேற்கக்கூட யாரும் வரவில்லை.

சிறைத்தண்டனை அனுபவித்ததால் வழக்கறிஞர் பணியைத் தொடரும் உரிமை வ.உ.சி.யிடமிருந்து பறிக்கப் பட்டு விட்டது. குடும்பத்தைக் காப்பாற்ற அவர் மளிகைக் கடை நடத்தினார், மண்ணெண்ணெய் விற்றார், அரிசி, நெய் வியாபாரங்கள் செய்து பார்த்தார். வெள்ளையனை எதிர்த்துக் கப்பல் கம்பெனியே நடத்திய வ.உ.சி.க்கு கடை நடத்தத் தெரியவில்லை. அரசியல் தெரிந்த அளவுக்கு அவருக்கு வியாபாரம் தெரியவில்லை. எனினும் வறுமை அவருடைய அரசியல் ஈடுபாட்டைக் குறைத்துவிடவுமில்லை.

சென்னை, பெரம்பூரில் மளிகைக் கடை வைத்திருந்தபோதுதான் தபால் ஊழியர் சங்கத்தை உருவாக்கினார்.

அந்தக் காலத்தில் தொழிற்சங்கங்களிலும் காங்கிரஸ் தலைவர்களிடமும் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த அன்னிபெசன்டை எதிர்த்தார். “மக்கள் எழுச்சி வெள்ளையருக்கு எதிராக வெகுண்டு எழுவதைத் தடுக்கவே அன்னிபெசன்ட் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்”என்று தொழிலாளர்களிடம் பேசினார். அன்னிபெசன்டோடு சேர்ந்து செயல்படுவதற்காக, தான் தலைவராகக் கருதிய திலகரையும் கண்டித்தார் வ.உ.சி.

காந்திய ஏமாற்றிய ரூ.5000

காந்தியின் கொள்கைகளில் நம்பிக்கை இல்லாதபோதிலும் வேறு வழியின்றி அவர் காந்தியின் தலைமையை ஆதரித்தே பேசியிருக்கிறார். காந்தியுடன் கசப்பான தனிப்பட்ட அனுபவமும் அவருக்கு இருந்தது. சிறையிலிருந்து திரும்பிய வ.உ.சியின் குடும்ப வறுமை போக்க, 5000 ரூபாய் நிதி திரட்டி வ.உ.சியிடம் ஒப்படைக்கு மாறு காந்தியிடம் கொடுத்திருக்கிறார்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்த தமிழர்கள்.

கடிதம் மூலமும் நேரிலும் பலமுறை கேட்டும் காந்தி அந்தப் பணத்தை வ.உ.சியிடம் தரவேயில்லை. எனினும் வ.உ.சி. அதைப் பொருட்படுத்தவில்லை. காந்தியின் அகிம்சைக் கொள்கைதான் அவரைப் பெரிதும் இம்சை செய்திருக்கிறது.

சிறுவயல் என்ற கிராமத்தில் ப.ஜீவா நடத்திவந்த ஆசிரமத்துக்குச் சென்றிருக் கிறார் வ.உ.சி. அங்கிருந்த ராட்டை களைப் பார்த்துவிட்டு, “இங்குள்ள இளைஞர்கள் நூல் நூற்கிறார்களா?” என்று ஜீவாவைக் கேட்கிறார். “ஆம்”என்று அவர் சொன்னவுடன், “முட்டாள் தனமான நிறுவனம். வாளேந்த வேண்டிய கைகளால் ராட்டை சுற்றச் சொல்கிறாயே” என்று கோபப்பட்டிருக் கிறார். இந்த உணர்வோடுதான் காங்கிரசில் இருந்திருக்கிறார் வ.உ.சி.

அன்றைய சென்னை மாகாண காங்கிரசில் வ.உ.சிக்கு இணையான தியாகியோ, போர்க்குணமுள்ள தலைவரோ கிடையாது. எனினும் வ.உ.சி க்கு உரிய மரியாதையை காங்கிரஸ் தரவில்லை. அது மட்டுமல்ல, காங்கிரசிலிருந்து வெளியேறிய பின், கேரளத்தின் மாப்ளா எழுச்சியை ஆதரித்து கோவையில் பேசியதற்காக வ.உ.சி மீது அரசதுரோக வழக்கு தொடுத்தது பிரிட்டிஷ் அரசு.

இந்த வழக்கை எதிர்கொள்வதற்கும் கூட அவருக்கு காங்கிரஸ் உதவவில்லை. வ.உ.சி மீது காங்கிரஸ் கொண்டிருந்த இந்த வெறுப்பிற்கு வேறொரு வலுவான காரணம் உண்டு.

வ.உ.சியிடம் பெரியாரின் தாக்கம்

1925 ஆம் ஆண்டு தந்தை பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம், தமிழக அரசியலை இரண்டாகப் பிளக்கிறது.

19.6.27 அன்று கோவில்பட்டியில் நடந்த ஒரு கூட்டத் தில் பெரியாருடன் வ.உ.சியும் கலந்து கொள்கிறார். “எனது தலைவர்‘ என்று பெரியாரை பெருமையுடன் குறிப்பிட்டுப் பேசுகிறார். பின்னர் பேசிய பெரியார், தனக்கேயுரிய பண்போடு அதை மறுக்கிறார். (குடி அரசு, 26.6.27)

பின்னர் காங்கிரசில் மீண்டும் இணைந்த வ.உ.சி, 1927 சேலம் காங்கிரஸ் மாநாட்டில், “இம்மகாநாட்டில் குழுமியுள்ளோரில் பெரும்பாலோர் பிராமணரல்லாதோர். நானும் பிராமணரல்லாதார்தான்” என்று பேசுகிறார்.

1928 இல் காரைக்குடியில் சைவ சமயத்தோர் மத்தியில் பேசும்போது அவருடைய பேச்சில் பெரியாரின் தாக்கம் அதிகமாகவே தெரிகிறது.

பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிப்பதையும் மனுஸ்மிருதியையும் கண்டிக்கிறார். சிரார்த்தம் செய்வதைக் கேலி செய்கிறார். பார்ப்பான் என்ற சொல்லை எதிர்ப்பாகவே பயன்படுத்துகிறார். பெண்களின் உரிமை பற்றிப் பேசுகிறார்.“தவறு என்று தெரிந்தால் வள்ளுவரென்ன, சிவபெருமானே ஆனாலும் தள்ளி வைக்க வேண்டியதுதான்” என்று பேசுகிறார்.

சிறையில் இருந்த போது அவரிடம் நிலவிய சாதி மனோபாவத்தை அவரது குறிப்புகளே கூறுகின்றன. “பார்ப்பான் அல்லது பாண்டிய வேளாளன் சாப்பாடாக்கித் தந்தால்தான் உண்பேன்” என்று ஜெயிலரிடம் போராடிய வ.உ.சி, பெரியாரின் தாக்கத்தால் பெருமளவு உருமாறியிருக்கிறார் என்பதை மேற்சொன்ன நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.

வ.உ.சி மீது காங்கிரஸ் கொண்டிருந்த வெறுப்புக்கான காரணத்தை இனிமேலும் விளக்கத் தேவையில்லை. 1936இல் வ.உ.சி இறந்த பிறகும் அவர் மீதான வெறுப்பை காங்கிரஸ் கைவிடவில்லை.

திராவிட இயக்கத்தின் மீதும் பெரியார் மீதும் கட்டுக்கடங்காத காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தவரான ம.பொ.சி தன் அனுபவத்தை எழுதுகிறார்.

1939 இல் வ.உ.சிக்கு ஒரு சிலை வைக்க ம.பொ.சி முயன்றபோது காங்கிரஸ் நிதியிலிருந்து பணம் கொடுக்க மறுக்கிறார் சத்தியமூர்த்தி. “வகுப்புவாத உணர்ச்சி காரணமாகத்தான் நான் ஜஸ்டிஸ் கட்சிக்காரரான வ.உ.சிக்கு காங்கிரஸ் மாளிகை முன்பு சிலை வைக்க முயல்கிறேன் என்று (என் மீது) பழி சுமத்தினார் சத்தியமூர்த்தி” என்று எழுதுகிறார் ம.பொ.சி.

பிறகு, வேறு வழியில்லாமல் வ.உ.சியை காங்கிரஸ் “கவுரவிக்க‘ முயன்றபோது அது அவரை மிகக் கேவலமாக இழிவுபடுத்துவதாக அமைந்தது.

1949இல் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே வ.உ.சி யின் பெயரில் கப்பல் விடப்படுகிறது. துவக்க விழாவில் பேசினார் அன்றைய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி:

“கோரல் மில்ஸ், பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி இவற்றின் ஒத்துழைப்புடனும், இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடனும்… இந்தக் கப்பல் போக்குவரத்தை இன்று நான் ஆரம்பித்து வைக்கிறேன்…. நம் நாடு முழு விடுதலை பெற்று விட்டது. ஹார்வி கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரது வீட்டில் இன்று நான் விருந்தாளியாகத் தங்கியிருக்கிறேன்… சிதம்பரம் பிள்ளை ஆனந்தக் கண்ணீர் ததும்பத் தம் பெரிய கண்களை அகல விரித்து இந்த விழாவையும் என்னையும் பார்த்துக் கொண்டிருப்பது போலவே எனக்குத் தோன்றுகிறது” என்று கொஞ்சமும் வெட்கமில்லாமல் இந்த பச்சைத் துரோகத்தை பெருமை பொங்க விவரித்தார்.

இறந்தவர் மீண்டும் வரக் கூடுமென்றால், வ.உ.சி தனது பெரிய கண்கள் சிவக்க இந்தப் பச்சைத் துரோகத்துக்காக ராஜாஜியின் குரல் வளையைக் கடித்துக் குதறியிருப்பார்.

அவர் உயிருடன் இருந்த போதே அவர் துவங்கிய கப்பல் கம்பெனி நலிவுற்றது.“நான் தோற்றுவித்த கப்பல் கம்பெனி நசித்தபின் எங்கள் கம்பெனியைச் சேர்ந்த ஒரு கப்பலை எங்கள் எதிரியான பி.ஐ.எஸ்.என் கம்பெனியாரிடமே அப்போதிருந்த சுதேசிக் கப்பல் அதிகாரிகள் விற்று விட்டது எனது உடைந்த மனதில் உதிரம் பெருகச் செய்தது” என்று குமுறினார் வ.உ.சி.

எந்த எதிரிகளை எதிர்த்து வ.உ.சி கப்பல் விட்டாரோ, அந்த எதிரியின் தயவிலேயே கப்பல் விட்டு அதற்கு அவரது பெயரையும் சூட்டிக் களங்கப் படுத்தியது `சுதந்திர’ இந்தியா. தன்னுடைய சித்திரவதைகள் மூலம் வ.உ.சியின் உடலிலிருந்துதான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ரத்தம் குடிக்க முடிந்தது. காங்கிரஸ் துரோகிகளோ, தேச விடுதலைக்காகத் துடித்து அடங்கிய அந்த உள்ளத்தையும் உடைத்து ரத்தம் குடித்துவிட்டார்கள்.

-வே. மதிமாறன்

நன்றி: புதிய கலாச்சாரம் 2006

விடுதலைப் போரின் வீர மரபு உங்களுக்கு தெரியுமா?

காலனிய எதிர்ப்பு விடுதலைப் போர் என்றாலே காந்தி, நேரு, காங்கிரசு என்று ஆரம்பப் பள்ளி முதல் அனைத்து வகை கல்வி நிறுவனங்களாலும் கூறப்படும் பொய்யான வரலாறே இங்கே உண்மையென நம்பப்படுகிறது. ஆயினும் வரலாற்றின் வீரஞ்செறிந்த அந்த பக்கங்கள் இதை மறுக்கின்றன. கிட்டத்தட்ட 250 ஆண்டுகளாக வெள்ளையர்களை எதிர்த்து போர் புரிந்து தன்னுயிரை ஈகம் செய்து மறைந்த்து போயிருக்கும் அந்த வரலாற்று மாந்தர்களையும், காலகட்டத்தையும் புதிய கலாச்சாரத்தின் இந்த சிறப்பிதழ் மீட்டு கொண்டு வருகிறது.

ஊழலும், காரியவாதமும், நம்பிக்கையின்மையும் கோலேச்சும் இந்தச் சூழலில் இந்த வரலாற்றை நினைவு கூர்வது என்பது மீண்டும் மறுகாலனியாதிக்கத்திற்கு எதிரான சுதந்திரப் போரை நாம் நடத்த வேண்டிய கடமையை கற்றுத் தேர்வதோடு அதில் பங்கேற்பதும் ஆகும். புத்தகக் கண்காட்சியை  முன்னிட்டு கீழைக்காற்றின் வெளியீடாக வரும் இந்த கட்டுரைகளை இங்கே அறிமுகம் செய்கிறோம்.

– வினவு

_______________________________________________________

விடுதலைப் போரின் வீர மரபு

1800 – 1801 இல் தென்னகத்தில் கிளர்ந்தெழுந்த முதல் இந்தியச் சுதந்திரப் போர், 1806 வேலூர் சிப்பாய்ப் புரட்சியில் முடிவடைந்தது. அந்த வேலூர்ப் புரட்சிக்கு இது 200ஆம் ஆண்டு. இதனைத் தொடர்ந்து 1857இல் கிளர்ந்தெழுந்த வட இந்தியச் சுதந்திரப் போருக்கு இது 150வது ஆண்டு துவக்கம். 1906இல் வ.உ.சி துவக்கிய சுதேசிக் கப்பல் கம்பெனி எனும் மக்கள் இயக்கத்திற்கு இது நூற்றாண்டு. ஏகாதிபத்திய எதிர்ப்புச் சிங்கம் பகத்சிங்கின் பிறந்த நாளுக்கு இது நூற்றாண்டுத் துவக்கம்.

சத்தியாக்கிரகம் எனும் போராட்ட வடிவத்தை தென் ஆப்பிரிக்காவில் காந்தி அறிமுகப்படுத்தியதற்கும், ‘வந்தே மாதரம்…’ என்ற இந்து தேசியப்பாடல் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதற்கும் கூட இது நூற்றாண்டுதான். தேதிகள் பொருந்தி வருவதனால் தியாகமும் துரோகமும் ஒன்றாகி விடுவதில்லை. எனினும் நம் விடுதலைப் போராட்டத்தின் ஒளிவீசும் மரபுகள் அனைத்தையும் இந்து தேசியவாத, அகிம்சாவாத ஜோதிக்குள் அமிழ்த்துகின்றன ஆளும்வர்க்கங்கள். நம் விடுதலைப் போராட்ட மரபு, காந்தியின் வருகைக்குப் பின்னர்தான் திசையறிந்த ஒரு மக்கள்திரள் இயக்கமாக உருப்பெற்றதைப் போன்றதொரு தோற்றத்தை அதிகாரபூர்வ வரலாறு நம் சிந்தனையில் பதித்து வைத்திருக்கிறது.

பெருமிதம் கொள்ளத்தக்க விடுதலைப் போராட்டத்தின் வீர மரபை நம் வரலாற்றுப் பிரக்ஞையிலிருந்தே துடைத்தொழிப்பதற்கான இந்தச் சதி மிகவும் தந்திரமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. வன்முறைக்குப் பதிலாக அகிம்சை என்ற வாதத்திற்குள் காந்திகாங்கிரசின் ஏகாதிபத்திய அடிவருடித்தனமும் துரோகமும் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன. ஒரு தபால் தலை வெளியீடு மற்றும் அரசு விழாவின் மூலம் கட்டபொம்மன் முதல் பகத்சிங் வரையிலான போராளிகள் அனைவரும் துக்கடாக்களாக நிறுவனமயமாக்கப்படுகிறார்கள்.

இந்த வரலாற்றுப் புரட்டிற்கு இன்னொரு பரிமாணமும் இருக்கிறது. 1857 எழுச்சிதான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் என்கிறது வரலாறு. ஆனால், வெள்ளையர்களுக்கு எதிராக திப்பு நடத்திய போர்களும் இந்துஸ்தானத்திலிருந்தே ஆங்கிலேயரை விரட்ட திப்பு மேற்கொண்ட முயற்சிகளும் விடுதலைப் போராட்டத்தின் துவக்கப்புள்ளியாகக் கூட அங்கீகரிக்கப்படுவதில்லை. கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணிறந்த முன்னணியாளர்கள் இணைந்து தீபகற்பக் கூட்டணி என்றொரு கூட்டணியை அமைத்திருந்ததையும், அந்தக் காலனியாதிக்க எதிர்ப்பு முன்னணி மகாராட்டிரத்தின் தென்பகுதி உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல பகுதிகளை ஊடுருவிச் சென்றதையும், பல்லாயிரம் விவசாயிகளின் பங்கேற்புடன் நடந்த அந்த மக்கள் போர் 1799 முதல் 1806 வேலூர் புரட்சி வரை தொடர்ந்ததையும் அதிகாரபூர்வ வரலாறு பதிவு செய்வதில்லை. இந்த மாபெரும் மக்கள் போரை முதல் சுதந்திரப் போராகவும் அங்கீகரிப்பதில்லை. தென்னிந்திய வரலாற்றை அலட்சியப்படுத்துவது, இசுலாமியர்களைப் புறக்கணிப்பது என்ற இந்து தேசியவாதக் கண்ணோட்டமே இந்த இருட்டடிப்புக்குக் காரணம். இந்த உண்மையைக் கூறுவது, 1857 சுதந்திரப் போரின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவது ஆகாது.

இந்தச் சிறப்பிதழில் தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் சுதந்திரப் போரின் வரலாற்றை அதன் நாயகர்களின் வழியாக உங்களுக்கு அறிமுகம் செய்கிறோம். எனினும் இது பத்திரிக்கை எனும் வடிவ வரம்புக்குட்பட்ட ஒரு பறவைப் பார்வை மட்டுமே. திப்பு, மருது, 1857 எழுச்சி முதல் வ.உ.சி, பகத்சிங் வரையில் நாம் காணும் மூன்று நூற்றாண்டுகளைச் சேர்ந்த இந்த மண்ணின் அரிய புதல்வர்கள் தமக்குள் அதிசயிக்கத்தக்கதோர் ஒற்றுமையைக் கொண்டிருக்கிறார்கள். இந்த மண்ணின் இறையாண்மையும் மக்களின் நலனும் பிரிக்கவொண்ணாதவை என்ற கருத்து இவர்கள் அனைவரிடமும் இழையோடுகிறது. தியாகிகளை மட்டுமின்றி சமகால துரோகிகளையும் தெரிந்து கொள்வதன் மூலம்தான் தியாகத்தின் மதிப்பை உணர்ந்துகொள்ள இயலும் என்பதால் துரோகிகளுக்கும் சில பக்கங்களை ஒதுக்கியிருக்கிறோம். இந்தத் துரோகத்தின் மரபணுக்கள் நிகழ்காலத் துரோகிகளை அடையாளம் காண்பதற்கும் வாசகர்களுக்குப் பயன்படும்.

துப்பாக்கிகளுக்கு எதிராக வேல்கம்புகளையும், பீரங்கிகளுக்கு எதிராக நெஞ்சுரத்தையும் நிறுத்திக் காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட இந்த வீரப் புதல்வர்களுக்கு நாம் வேறென்ன காணிக்கை செலுத்த முடியும், மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராகப் போரிடுவதைத் தவிர.

______________________________________________

நன்றி: புதிய கலாச்சாரம் – தலையங்கம் – நவம்பர் 2006

முதல் பதிவு: வினவு

 

வீரபாண்டிய கட்டபொம்மன் – விடுதலை வீரனாகிறான் ஒரு பாளையக்காரன்!

********************************

ஹைதர் அலி – மன்னர் குலம் சாராத மாவீரன் !

திப்பு சுல்தான் – விடுதலைப் போரின் விடிவெள்ளி !

பூலித்தேவன் – கிளர்ச்சிப் பாளையக்காரர்களின் முன்னோடி !

கவிதை: ஆகஸ்டு 15க்கு ஆழ்ந்த அனுதாபங்கள் !!

“வெள்ளையனே வெளியேறு’ நாடகமும் காங்கிரசின் வேசித்தனமும்!

“வெள்ளையனே வெளியேறு!’ என ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முழக்கமிட்டு “செய் அல்லது செத்துமடி’ என தீரமிக்க ஒரு போராட்டத்தை இந்தியாவின் சுதந்திரத்திற்காக காந்தி நடத்தினாராம்! கதை விட்டு வருகின்றனர், காங்கிரசுக்காரர்கள். காந்தி விடுத்த அறைகூவலின்படி போராட்டத்தில் ஈடுபட்ட “ஆகஸ்டு தியாகிகள்’ என்று தம்மைத்தாமே பீற்றிக் கொள்கின்றனர். அதற்கு இப்போது பொன்விழா கொண்டாடுகிறார்களாம் தமிழக காங்கிரசுக்காரர்கள்.

வரலாற்றைப் புரட்டுவதும் தேசத்துரோகத்தையே தேசபக்தி என்று சித்தரிப்பதும்தான் காங்கிரசின் கலாச்சாரம். இந்தியத் திருநாட்டின் விடுதலை தான் நோக்கம் என்பது திட்டமிட்ட பொய்யே. “வெள்ளையனே வெளியேறு!” என்ற தீர்மானத்தை காந்தியும் காங்கிரசும் போட்ட பின்னணியே வேறு.

1939ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதியன்று இட்லர் போலந்தையும் இங்கிலாந்தையும் தாக்கினான். உடனே பிரான்சு ஜெர்மனி மீது போர்ப்பிரகடனம் செய்தது. இவ்வாறு இரண்டாவது உலக யுத்தம் மூ ண்டது.

போர் தொடுக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள் ஆங்கிலேய வைசிராய், இந்தியா “போரிலுள்ள ஒரு நாடு” என அறிவித்தார். யுத்த செலவிற்காகப் புதிய வரிகளைப் போட்டு இந்திய மக்களைக் கசக்கிப் பிழிய ஆங்கிலேய ஏகாதிபத்தியம் தயாரானது. தனது இராணுவ பீரங்கிக்குத் தீனி போட இந்தியர்களைத் தீவிரமாகப் பட்டாளத்தில் சேர்க்க ஆரம்பித்தது. எதிர்த்துப் போராடுபவர்களை ஒடுக்க அவசரச் சட்டங்களைப் போட்டு, அடக்குமுறையை ஏவிவிட தன்னைத் தயார்படுத்திக் கொண்டது; ஒவ்வொரு எதிர்ப்பையும் நசுக்கியது. ஒடுக்குமுறையை மட்டுமே நம்பியிருக்காமல் போருக்குப் பின் அரசியலதிகாரத்தை இந்தியர்களின் கைக்கே மாற்றிவிடுவது என்ற மாயையை ஏற்படுத்தும் பொருட்டு கிரிப்ஸ் கமிசன் போன்ற தூதுக்குழுக்கள் மூலம் அரசியல் மோசடி மூ¬ட்டைகளை அவிழ்த்துவிட்டது.

ஜெர்மனி ஜப்பான் ஒரு பக்கமும், இங்கிலாந்து பிரான்சு மற்றொரு பக்கமுமாக நின்று நாசகார யுத்தத்தில் ஈடுபட்டிருந்தன. இந்த இரண்டு ஏகாதிபத்திய முகாம்களும் ஒன்றின் காலனிகளை இன்னொன்று அபகரிக்க நடத்திய யுத்தம்தான் அது. எனவே, அது உலக மக்களுக்கு எதிரான அநீதியான யுத்தமாகும். இந்த யுத்தத்தில், இரண்டு முகாம்களையும் எதிர்த்து முறியடிக்க வேண்டியதே ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமையாகும். நம்மை அடிமைப்படுத்தியிருந்த இங்கிலாந்து அநியாய யுத்தத்தில் சிக்கிக் கொண்டிருந்த நேரம், அதனால் இந்தியா மீது தனது ஆதிக்கத்தைச் செலுத்துவதில் பலவீனப்பட்டிருந்த நேரம். எனவே, இந்தியா தனது சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு மிகவும் வாய்ப்பான நேரம். இந்தியாவின் சுதந்திரத்தை ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திடமிருந்து பறித்தெடுக்க விரும்பும் எந்த தேசபக்த இந்தியனும் இவ்வாறுதான் எண்ணுவான். யுத்தத்திற்கும் காலனிய ஆட்சிக்கும் எதிராகப் போர்ப் பிரகடனம் செய்து சுதந்திரத்திற்கான போராட்டத்தைத் தீவிரமாக்குவான்.

ஆனால் காந்தியும் காங்கிரசும் மக்களைத் திரட்டி சுதந்திரத்திற்கான போராட்டத்தை நடத்தவில்லை. மாறாக, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக காந்தி, நேரு, ஜின்னா ஆகியோர் தனித்தனியாக விடுத்த அறிக்கைகளில் உறுதி கூறினர். 1939 செப்டம்பர் 5ல் வைசிராயைச் சந்தித்த காந்தி தனது முழு அனுதாபமும் ஆங்கிலேய ஆட்சிக்கு உண்டு எனச் சொன்னார். அந்தச் சந்திப்பின்போது, “நான் அவருக்கு (வைசிராய்க்கு) இங்கிலாந்து பாராளுமன்றமும் அமைச்சரவைத் தலைமையகமும் யுத்தத்தால் அழியக்கூடிய வாய்ப்பு பற்றிய சித்திரத்தை விளக்கியபோது கண்கலங்கிப் போனேன்” என்று காந்தி எழுதினார். “இங்கிலாந்து ஜீவ மரணப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, அதை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்குவது இந்தியாவின் கௌரவத்திற்கே இழிவு ஏற்படுத்தும் செயலாகும்” என்று 1940, மே 20ல் நேரு அறிவித்தார். இதே நேரத்தில் காந்தி, “பிரிட்டனுடைய அழிவிலிருந்து எங்களது சுதந்திரத்தை தேடவில்லை” என்று அறிவித்தார்.

அது மட்டுமல்ல, இங்கிலாந்து ஒரு நியாயமான இலட்சியத்திற்குப் போராடுவதாகவும் அதற்கு இந்தியா நிபந்தனையற்ற ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் அறிவித்தார். “ஆகையினால் நான் இப்போது இந்தியாவின் விடுதலையைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்கவில்லை. அது கட்டாயம் வரும். ஆனால் இங்கிலாந்தும் பிரான்சும் வீழ்ந்துவிட்டால் என்ன ஆவது?”1 என்று காலனியாதிக்கவாதிக்காகக் கண்ணீர் வடித்தார்.

1941ஆம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதிகூட காந்தி பின்வருமாறு சொன்னார்: “இங்கிலாந்தின் நெருக்கடியான நேரம்தான் நமக்குச் சரியான சந்தர்ப்பம் என அடிக்கடி கூறப்படுகிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன். அகில இந்திய காங்கிரசு கமிட்டியின் பம்பாய் தீர்மானம் அத்தகைய கொள்கை எதையும் நிராகரிக்கிறது. நாம் எவ்வாறு இங்கிலாந்தை அதன் நெருக்கடியான வேளையில் சங்கடப்படுத்திக் கொண்டே, அகிம்சாவாதிகள் என நம்மை அழைத்துக் கொள்ள முடியும்?2

இவ்வாறு காந்தியும் காங்கிரசும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அடிமைச் சேவகம் செய்து கொண்டு அமைதியாக இருந்தனர். மக்களுடைய மனோநிலை எப்படி இருக்கிறது என்று கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர். மறுபக்கம், இந்தியத் தொழிலாளர்களும் விவசாயிகளும் மாணவர்களும் யுத்தத்திற்கு எதிராகவும் இந்தியாவை இங்கிலாந்தின் போர் இரதத்தில் மாட்ட வைத்ததற்கு எதிராகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஏகாதிபத்தியக் காலனி அரசு கடும் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. இந்தியப் பாதுகாப்புச் சட்ட விதிகளை அமுலுக்குக் கொண்டு வந்து ஏராளமான பேரைக் கைது செய்தது.

இந்த நிலையில் 1942ஆம் ஆண்டு வந்த உலக யுத்தத்தில் ஜெர்மனிஜப்பான் முகாமான அச்சு நாடுகளின் கை மேலோங்கியது. அனேகமாக ஐரோப்பா கண்டம் முழுவதையும் நாஜி ஜெர்மனி படைகள் படுவேகத்தில் தமது காலடியில் கொண்டு வந்தன. ஜப்பானியப் படையெடுப்பிற்கு முன் மலேசியாவிலும் பர்மாவிலும் இருந்த இங்கிலாந்தின் காலனிய அரசுகள் பொலபொலவென உதிர்ந்தன. ஜப்பானியப் படைகள் படுவேகத்துடன் இந்திய எல்லைவரை முன்னேறியது. இவையெல்லாம் சேர்ந்து அச்சு நாடுகள்தான் உலக யுத்தத்தில் இறுதி வெற்றியடையும் என்று ஒரு பிரிவு இந்திய தரகு முதலாளிகளையும் அவர்களது அரசியல் பிரதிநிதிகளையும் நம்ப வைத்தன. ஜப்பானின் அடுத்த ஒரு தாக்குதலில் இந்தியா அதன் வசம் வந்துவிடும் என்று இவர்கள் உறுதியாக நம்பினர். உண்மை நிலையும் அதுவாகத்தானிருந்தது.

எனவே, இனிமேலும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அடிவருடியாக இருக்க அவர்கள் விரும்பவில்லை. வெற்றி பெறப்போகும் புதிய எஜமானனான ஜப்பானிய ஏகாதிபத்தியத்திற்குச் சேவகம் செய்ய விரும்பினர். ஜப்பானிய ¬மூலதனத்துடன் புதிய உறவுகளை உருவாக்க எண்ணினர். இந்தியாவை விட்டு வெளியேறுமாறு ஆங்கிலேயருக்கு நிர்ப்பந்தம் கொடுக்க விரும்பினர். சுருக்கமாகச் சொன்னால் அவர்கள் மூ ழ்கிக் கொண்டிருக்கும் கப்பலை விட்டுத் தப்பத் துடிக்கும் எலிகளைப் போல இருந்தனர். காந்தியின் தளபதியான பட்டாபி சீதாராமையாவின் வார்த்தைகளில் இந்தச் சிந்தனை பின்வருமாறு பிரதிபலித்தது: “இந்தியா ஒரு மூ ழ்கிக் கொண்டிருக்கும் கப்பலுடனோ, உதிர்ந்து கொண்டிருக்கும் நட்சத்திரத்துடனோ தன்னை இணைத்துக் கொள்ள வேண்டுமா?”3

ஜப்பானின் தாக்குதல் வேகத்தைக் கண்டு காலனிய ஆங்கிலேய அரசாங்கமும் பீதியுற்று, அசாமையும் வங்காளத்தையும் கை கழுவியது. அதற்கு முன் அந்தப் பகுதிகளில் எதிரிப்படைகளுக்குப் பயன்படலாம் எனக் கருதப்படுகின்ற கட்டிடங்களை இடித்துத் தள்ளுதல், பயிர்களை எரித்தல் ஆகியவற்றை — நிலத் தீய்ப்புக் கொள்கையை ஆங்கிலேய ஏகாதிபத்தியம் கையாண்டது. பீகாரில் புதிய தற்காப்பு அரண்களைக் கட்டியது. இவையெல்லாம் இந்தியத் தரகுப் பெரு முதலாளிகள் மற்றும் அவர்களது அரசியல் பிரதிநிதிகளிடையே பீதியை உருவாக்கிற்று.

நிலைமையைக் கணிப்பதிலும் செயல்படுவதிலும் காங்கிரசிற்குள் மூ ன்று பிரிவினர் தோன்றினர். ஜப்பானிய முகாம் வெற்றி பெற்று இந்தியாவைக் கைப்பற்றும் என உறுதியாக காந்தி நம்பினார். எனவே, ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி ஜப்பானியரோடு தாங்கள் கூட்டு வைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித்தர வேண்டுமென்று விரும்பினார். நேரு, ராஜாஜி, ஆசாத் ஆகியோர் ஆங்கிலேய ஏகாதிபத்திய முகாமே உலக யுத்தத்தில் இறுதி வெற்றி பெறும் என நம்பினார்கள். எனவே, தொடர்ந்து ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டுமென்று வாதாடினர். சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் ஒரு பிரிவினர் பாசிச ஜெர்மனி ஜப்பான் முகாமை நேரடியாக ஆதரித்துப் படைதிரட்டிக் கொண்டு களத்திலேயே இறங்கினர்.

1940இல் இட்லரிடம் ஹாலந்து சரணடைந்ததிலிருந்து காந்தியின் பார்வையில் இட்லரின் நிலை “சீராக உயர்ந்து கொண்டிருப்பதாகவும்” யுத்தத்தில் இங்கிலாந்து தோற்றுவிடும் என்று காந்தி நம்புவதாகவும்4 ஜி.டி. பிர்லாவிடம் காந்தியின் செயலாளர் மகாதேவ் தேசாய் தெரிவித்தார். 1940ஆம் ஆண்டு மே 26இல் வைசிராய் லின்லித் கௌவுக்கு காந்தி எழுதிய கடிதத்தில், “சமாதானத்தை நாடுமாறு” ஆங்கிலேய அமைச்சரவைக்கு ஆலோசனை கூறினார். மேலும் அக்கடிதத்தில், “சித்தரிக்கப்படுவதைப் போல இட்லர் அவ்வளவு மோசமான மனிதராக இருப்பார் என்று நான் நம்பவில்லை” என்றும் குறிப்பிட்டார். மேலும் இங்கிலாந்து மக்களை, “நீங்கள் எல்லோரும் உங்களையோ, மானுடத்தையோ காப்பாற்ற முடியாத உங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட வேண்டும். போராடுவதற்குப் பதில் திருவாளர் இட்லரையும் சீமான் முசோலினியையும் வரவேற்று உங்களுடைய நாடுகள் என்று சொந்தம் கொண்டாடும் பகுதிகளில் அவர்களுக்கு எது வேண்டுமா அதை எடுத்துக் கொள்ளச் சொல்ல வேண்டும்”5 என்று வற்புறுத்தி காந்தி வேண்டுகோள் விடுத்தார்.

ஆங்கிலேயர்களிடம் காந்திக்கு இருந்த முந்தைய அனுதாபம் நாஜிப் படைகளுக்கு அமைதியாகக் காத்துக் கொண்டிருப்பதாகவும் அவர்களிடம் ஆங்கிலேயர்கள் சரணடைவதே சிறந்தது என அறிவுறுத்துவதாகவும் உருமாற்றம் அடைந்தது. 1942 ஏப்ரலில் காந்தி, “தாம் முன்பு இங்கிலாந்திற்கு முற்றிலும் கொடுத்து வந்த தார்மீக ஆதரவை இப்போது கொடுக்க மனம் மறுக்கிறது.”6 என்று கூறினார். ஆம், “மகாத்மா’வின் “அந்தரங்கக் குரல்’ இப்போது முற்றிலும் வேறுபட்ட பாதையை மேற்கொள்ளக் கட்டளையிட்டது. எனவே, ஆங்கிலேய அரசுப் பிரதிநிதி கிரிப்ஸ் திரும்பிச் சென்ற பிறகு காந்தி, காங்கிரசின் காரியக் கமிட்டிக்கும் அகில இந்திய காங்கிரசு கமிட்டிக்கும் நகல் தீர்மானம் ஒன்றை, ஏப்ரல் 27 தொடங்கி நிகழவிருந்த அலகாபாத் மாநாட்டிற்கு ஏற்றுக் கொள்ள அனுப்பினார். அத்தீர்மானத்தில் அவர் பின்வருமாறு கூறியிருந்தார்:

“அகில இந்தியக் காங்கிரசுக் கமிட்டி, இந்தியாவை இனியும் இங்கிலாந்தால் பாதுகாக்க முடியாது எனக் கருதுகிறது… ஜப்பானின் சண்டை இந்தியாவுடனானது அல்ல… இந்தியா விடுதலை அடையுமானால் அதன் முதல் நடவடிக்கை ஜப்பானுடன் பேச்சு வார்த்தை நடத்துவதாக இருக்கும். இக்கமிட்டி ஜப்பானிய அரசு மற்றும் மக்களுக்கு இந்தியா அவர்களுடனோ வேறெந்த நாட்டுடனோ எவ்விதப் பகைமையும் கொண்டிருக்கவில்லை என உறுதியளிக்கிறது.”7

வல்லபாய் படேல், ராஜேந்திர பிரசாத், கிருபளானி போன்றோரால் ஆதரிக்கப்பட்ட காந்தியின் நகல் தீர்மானத்தை நேரு பின்வருமாறு விமரிசித்தார்: “நாம் பாபுவின் (காந்தியின் மொர்) அணுகுமுறையை ஏற்போமாகில், அச்சு நாடுகளின் மறைமுகக் கூட்டாளிகளாகி விடுவோம். இத்தீர்மானத்தின் முழுச் சிந்தனையோட்டமும் பின்னணியும் ஜப்பானுக்குச் சாதகமாக இருக்கிறது. ஜப்பானும் ஜெர்மனியும் போரில் வெல்லும் என்று காந்தி நம்புகிறார். இந்த நம்பிக்கை அவரது முடிவை அவரையும் அறியாமலேயே ஆளுமை செய்கிறது.”

ராஜேந்திர பிரசாத்தால் திருத்தப்பட்ட காந்தியின் நகல் தீர்மானத்தைப் பற்றி கருத்து கூறும்போது ராஜகோபாலாச்சாரி, “ஜப்பான் ஆங்கிலேயரின் வெளியேற்றத்தால் உருவாக்கப்படும் வெற்றிடத்தை நிரப்பும்… இத்தீர்மானம் சொல்வது போல் ஜப்பானின் கரங்களில் ஓடி விழுந்து விடக் கூடாது.”8

காந்தியோ மிகவும் அவசரப்பட்டார். மே 1942ல் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டி ஒன்றில் காந்தி கூறினார்: “இந்த ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட, கட்டுப்பாடான அராஜகம் (அதாவது ஆங்கிலேய ஆட்சி) ஒழிய வேண்டும். இதன் விளைவாக முற்றிலும் சட்டம் ஒழுங்கு சீர்குலையுமானாலும் அதை நான் எதிர்கொள்வேன்”. மேலும் 1942 ஜூன் 7ஆம் தேதியிட்ட “அரிஜன்’ ஏட்டில் “அடிமை ஓட்டுனர்களை எதிருங்கள்” என்று மக்களுக்கு அறைகூவல் விடுத்தார். 1942 மே 28இல் ராஷ்ட்ரிய யுவக் சங் எனும் அமைப்பினுடைய உறுப்பினர்களிடம், “இந்த அடிமைத்தனத்தின் பேரழிவிலிருந்து விடுவித்துக் கொள்ள நாம் வன்முறையைக் கூட ஏற்கலாம்”9 என்றார் காந்தி.

இவ்வாறு காந்தி, படேல், பிரசாத் ஆகியோர் ஜப்பானியப் படைகளின் வெற்றியை ஆவலுடன் எதிர்நோக்கி ஆங்கிலேயர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறி அதன் மூலம் தாங்கள் ஜப்பானுடன் ஒப்பந்தத்திற்கு வர இங்கிலாந்தை நெருக்கியபோது, நேருவும் ஆசாத்தும் நேசப்படைகள் (அமெரிக்கா இங்கிலாந்து பிரான்சு முகாம்) இறுதி வெற்றியடையும் என உறுதியாக நம்பினர். நேரு சியாங்கே ஷேக்குடனும் அமெரிக்காவுடனும் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டார். ஆங்கிலேய ஆதிக்கமே தொடர வேண்டும் இந்தியா சுதந்திரம் பெற வேண்டுமென்பதல்ல என்ற நேருவின் கருத்தை ஆதரித்தார் ராஜாஜி. முசுலீம் லீகுடன் அவர்களின் தனிநாடு கோரிக்கையை ஏற்றுக் கொள்வதன் அடிப்படையில் இணைந்து, ஆங்கிலேய ஆட்சிக் குடையின் கீழ் ஒரு “தேசிய அரசாங்கத்தை” நிறுவி ஜப்பானை எதிர்க்க வேண்டுமென்று வாதாடினார்.

காங்கிரசின் மேல்மட்டத் தலைமையில் ஏற்பட்ட இந்தப் பிளவு இந்தியத் தரகுப் பெரு முதலாளிகளின் முரண்பட்ட விருப்பங்களையே பிரதிபலித்தது. லால் சந்த், ஹீராசந்த் போன்றபல குஜராத்தி, மார்வாரி மில் முதலாளிகள் ஜப்பானிய எஜமானர்களை வரவேற்கக் காத்திருந்தபோது மற்றொரு பிரிவு, ஆங்கிலேய ஆதரவுக் குழுவாகவே நீடித்தது. மூன்றாவதாக ஒரு பிரிவு உயர்ந்து கொண்டிருந்த அமெரிக்காவுடன் இணைந்து கொள்ள முன்வந்தது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கும் இந்தியத் தரகுப் பெரு முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களுக்கும் பிறந்த கள்ளக் குழந்தையான காங்கிரசுக் கட்சி, இந்தியாவின் சுதந்திரத்திற்கு என்றுமே பாடுபட்டதில்லை. மாறாக, தரகுப் பெரு முதலாளிகள் நிலப்பிரபுக்களின் அரசியல் பிரதிநிதியான காங்கிரசு, சுதந்திர வேட்கையால் தன்னெழுச்சியாகப் போராடிய இந்திய மக்களின் தீரமிக்க போராட்டங்களைக் காட்டிக் கொடுத்தது; துரோகமிழைத்தது. மக்களுடைய போராட்டங்களைத் திசை திருப்பி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்குக் கேடயமாக விளங்கியது. காலனிய ஆட்சியைப் புதிய அடித்தளங்களில் தக்க வைக்கும் கருவியாகச் செயல்பட்டது. இதுவரை ஒரே முகாமாக இருந்த காங்கிரசில்தான், ஜப்பானின் படுவேகமான முன்னேற்றம் மேற்சொன்ன பிரிவுகளைக் கொண்டு வந்தது.

இந்தப் பிரிவினர் கொண்டிருந்த கருத்து வேறுபாடெல்லாம் எந்த ஏகாதிபத்திய முகாம் வெற்றி பெறும் என்ற கணிப்பில்தான். ஆனால் வெற்றி பெறும் முகாமிற்கு இந்தியா அடிமையாக இருக்க வேண்டுமென்பதில் கருத்து ஒற்றுமையிருந்தது.
“வெள்ளையனே வெளியேறு’ என்று காந்தியும் காங்கிரசும் அறைகூவல் விடுத்ததன் பின்னணி இதுவே. எதிர்ப்பு தெரிவித்த நேரு, ஆசாத் ஆகியோரை காங்கிரசின் பொறுப்புகளிலிருந்து ராஜினாமா செய்யச் சொல்லி மிரட்டியும் பிறவாறு உருட்டியும் காந்தி தனது தீர்மானத்தை ஏற்குமாறு செய்தார். ஓர் எதேச்சதிகாரியாகவே நடந்து கொண்டார். இப்படித்தான் ஏகமனதாக, “வெள்ளையனே வெளியேறு’ தீர்மானம் பம்பாயில் நடந்த காங்கிரசுக் கமிட்டிக் கூட்டத்தில் 1942ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் எட்டாம் தேதி நிறைவேறியது.

ஒரு பக்கம் ஜப்பானிய புது எஜமானர்களுக்குச் சேவை செய்யக் காத்திருக்கிறோம் என்று நிரூபிக்க “செய் அல்லது செய்துமடி’ என்று தீவிரமாக காந்தி அறைகூவல் விட்டாலும் இன்னொரு பக்கம் மக்களின் போராட்டங்கள் தனது கையை விட்டுப் போய்விடக் கூடாது என்பதிலும் குறிப்பாக இருந்தார். எனவேதான் போராட்டத்திற்கு எவ்விதத் தயாரிப்போ, திட்டமோ தீட்டப்படவில்லை. பேச்சு வார்த்தை நடத்துவதே நோக்கம் என்று சொல்லப்பட்டது.

1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி காந்தி வைசிராய்க்கு எழுதிய கடிதத்தில் “நான் பெரும் நடவடிக்கைகளைத் தொடங்கும் வரையாவது இந்திய அரசாங்கம் காத்திருக்க வேண்டும். உருப்படியான ஏதேனும் நடவடிக்கை எடுக்கும் முன் உங்களுக்கு ஒரு கடிதம் அனுப்ப பூரணமாகச் சிந்திப்பதாய் நான் வெளிப்படையாக அறிவித்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டார். போராட்டம் தொடங்கும் முன், பிரச்சினை எழுவதற்கு முன், முதல் நடவடிக்கையாக வைசிராய்க்குப் பேச்சுவார்த்தை வேண்டி எழுதப்படும் என்று காங்கிரசால் விளக்கம் தரப்பட்டது. காங்கிரசுக் கமிட்டிக் கூட்டம் முடிந்ததும் வைசிராய்க்குக் கடிதம் எழுதத் தொடங்கினார்கள். முடிக்கும் முன்பே ஆகஸ்ட் 9ம் தேதி காந்தி உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர். காங்கிரசு சட்ட விரோதமான ஸ்தாபனம் என அறிவிக்கப்பட்டது. “ஒரு வாரத்தில் வெற்றி’ என்று படேல் சவடால் அடித்தார்.

காங்கிரசுத் தலைவர்களின் கைது மக்களது போராட்டங்களைத் தூண்டிவிடும் என ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்குத் தெரியும். எனினும், காங்கிரசுத் தலைவர்கள் எவ்வித முன் தயாரிப்பும் செய்யாததால் தன்னெழுச்சியான திட்டமிடாத போராட்டங்களைச் சுலபமாக அடக்கி விடலாம் என ஆங்கிலேய ஏகாதிபத்தியம் கருதியது.

ஆனால் இந்திய மக்களோ, காந்தியின் நயவஞ்சக விருப்பத்தை மீறி, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடினார்கள். காந்தியின் உபதேசங்களை மீறியும் அவருடைய கண்டனங்களைப் புறக்கணித்தும் மக்கள் நாடெங்கும் வன்முறைக் கிளர்ச்சிகளைத் தொடங்கினர். இந்தியாவெங்கும் கொந்தளிப்பு; குழப்பம்; தனிப்பட்ட பிரிவுகளும், குழுக்களுமே இப்போராட்டங்களை நடத்தின.

இதுதான் “புகழ்பெற்ற’ ஆகஸ்ட் போராட்டம்; இந்தப் போராட்டத்தை காங்கிரசு ஆரம்பிக்கவில்லை; மாறாக, இந்தியாவின் உழைக்கும் மக்கள் இப்போராட்டத்தினை நடத்தினர்; காந்தியும் காங்கிரசும் போராட்டத்தைத் தடுத்து நிறுத்தவே செயல்பட்டனர். ஆனால் இன்றோ, ஆகஸ்ட் தியாகிகள் என வெட்கமின்றி காங்கிரசுக்காரர்கள் பீற்றிக் கொள்கிறார்கள். இந்தியாவை புதிய எஜமானனுக்கு (ஜப்பானுக்கு) அடகு வைக்க “வெள்ளையனே வெளியேறு’ தீர்மானம் போட்ட காந்தியும் காங்கிரசுக்காரர்களும் இன்று ஏகாதிபத்திய எதிர்ப்பு சுதந்திரப் போராட்ட வீரர்களாகக் காட்டிக் கொள்வது கயமைத்தனத்தின் உச்சமாகும்!

194344ம் ஆண்டுகளில் யுத்தத்தின் போக்கு மாறியது; உலக அளவில் ஜெர்மனி ஜப்பான் பாசிச முகாம் வீழ்ச்சியடையத் தொடங்கியது; இங்கிலாந்து பிரான்சு முகாம் வெற்றி மேல் வெற்றி பெற்று வந்தது; ஜெர்மனி ஜப்பான் முகாமினுடைய வீழ்ச்சி தவிர்க்க முடியாதது என்று தெள்ளத் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. பார்த்தார் காந்தி! அடித்தார் ஒரு “அந்தர்’ பல்டி! அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்ட கதையாகிவிடப் போகிறதே என்று ஆங்கிலேய ஏகாதிபத்தியத் திற்கு மீண்டும் தன் எஜமான விசுவாசத்தைக் காட்ட வாலை ஆட்டினார். நடந்த போராட்டங்களுக்குத் தான் பொறுப்பல்ல என்று வலியச் சொல்ல ஆரம்பித்தார். 1943ஆம் ஆண்டு ஜூலை 15ம் தேதி உள்துறைக்கு காந்தி எழுதிய கடிதத்தில், “மொத்தமாகப் பெருமளவில் காங்கிரசுத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதால் தங்களை அடக்கிக் கொள்ளும் ஆற்றலை இழக்கும் அளவிற்கு மக்கள் சினத்தால் வெறிகொண்டு விட்டதாய்த் தோன்றுகிறது. நடந்துள்ள நாசத்திற்கு காங்கிரசு பொறுப்பல்ல; அரசாங்கமே பொறுப்பு என்று நான் கருதுகிறேன்.”

“இந்தியா முழுவதும் கைதுகள் செய்ய அரசாங்கம் எடுத்த நடவடிக்கை மிக வன்முறையாக இருந்ததால், காங்கிரசிடம் பரிவு உள்ள மக்கள் தன்னடக்கத்தை இழந்து விட்டார்கள். இந்தத் தன்னடக்க இழப்பிற்கு காங்கிரசு உடந்தை என்று பொருளாகி விடாது” என்று தெரிவித்தார்.

1942 ஆகஸ்ட் 7,8 தேதிகளில் நடந்த அகில இந்திய காங்கிரசுக் கமிட்டி கூட்டில் காங்கிரசுக்காரர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்புவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அது முழுமையாக வரையப்படாது நின்றுவிட்டது. 1943 ஜூலை 15ல் காந்தியார் இந்த வரையப்படாத சுற்றறிக்கையைத் தயக்கத்துடன் மேற்கோள் காட்டினார்; அதில் பின்வருமாறு இருந்தது.

“மகாத்மா முடிவு செய்யும் வரை எந்த இயக்கமும் முடிவு செய்யக்கூடாது; எவ்வித நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது. இறுதியாக அவர் வேறுவிதமாக முடிவு செய்யலாம். ஒரு பெரிய அனுமதி பெறாத தவறுக்கு நீங்கள் பொறுப்பாளி ஆவீர்கள். ஆயத்தமாக இருங்கள்; ஏற்பாடு செய்யுங்கள்; விழிப்போடு இருங்கள்; ஆனால் எவ்விதத்திலும் செயல்படாதீர்கள்”.

காங்கிரசின் சார்பில் நேரு, வல்லபாய் படேல், ந.பி.பந்த் ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட ஓர் அதிகாரபூர்வமான அறிக்கை 1945, செப்டம்பர் 21ல் வெளியாயிற்று. அதில், “அகில இந்தியக் காங்கிரசு கமிட்டியாலோ காந்தியாலோ எந்த இயக்கமும் அதிகாரபூர்வமாகத் தொடங்கப்படவில்லை” எனத் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு, ஆகஸ்டில் நடந்த போராட்டங்களுக்கும் காங்கிரசிற்கும் கிஞ்சித்தும் தொடர்பில்லை எனக் காலனியாதிக்கவாதிகளிடம் தன்னை நல்ல பிள்ளை போல காட்டிக் கொண்ட காங்கிரசு, ஆகஸ்டு மாதத்திலும் அதை அடுத்த மாதங்களிலும் நடைபெற்ற தலைமையற்ற தன்னெழுச்சியான நிகழ்ச்சிகளைப் பின்னாளில் “ஆகஸ்டு போராட்டம்’ என ஏற்பதென்று முடிவு செய்தது. அதாவது, காந்தியின் கண்டனங்களைப் புறக்கணித்து விட்டு மக்கள் நடத்திய போராட்டங்களையே காந்தியும் காங்கிரசும் நடத்திய “ஆகஸ்டு போராட்டம்’ என சுவீகரித்துக் கொண்டனர்.

உண்மையான விடுதலை வேட்கையால் உந்தப்பட்டு, இந்திய உழைக்கும் மக்கள் எண்ணற்ற தியாகங்கள் செய்து நடத்திய வீரஞ்செறிந்த போராட்டங்களைக் கண்டனம் செய்த காந்தியும் காங்கிரசும், பின்னர் அந்தப் போராட்டங்களையே காங்கிரசின் தியாகமாக, விடுதலைப் போராட்டமாகச் சித்தரித்துச் சுவீகரித்துக் கொள்வது எவ்வளவு பெரிய வக்கிரம்! வரலாற்றுப் புரட்டு!

உண்மையில் வெள்ளையனை இந்த நாட்டைவிட்டு விரட்டுவதுதான் காந்தியின் நோக்கமென்றால், சிறையிலிருந்து 1944ஆம் ஆண்டு காந்தியார் வெளிவந்தபின் “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் காந்தியாரோ “ஆகஸ்ட் தீர்மானம் தானாகவே ரத்தாகிவிட்டது” என்று சொன்னார். ஏனென்றால், “1944ஆம் ஆண்டில் 1942ஆம் ஆண்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாது” என்று விளக்கெண்ணெய் விளக்கமளித்தார்.

எனவே, போர் முடியும் தறுவாயில் (ஆகஸ்ட் 1945) உலகெங்கும் மக்கள் விடுதலையை நோக்கி முன்னேறிய போது காந்தியாரின் துரோகத்தனத்தால் இந்தியா போரின் தொடக்கத்தில் இருந்தது போல் ஓர் அடிமை நாடாகவே போரிலிருந்து வெளிப்பட்டது.

தனது புதிய எஜமானர்களான ஜெர்மனி, ஜப்பான் ஏகாதிபத்தியங்களை வரவேற்கவே “வெள்ளையனே வெளியேறு’ என்று காந்தி சொன்னார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியோ எவ்வித நிபந்தனையும் இன்றி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்குப் பக்கபலமாக நின்று போருக்கான உதவிகளைச் செய்தது; யுத்த நிதி திரட்டிக் கொடுத்தது; படைக்கு ஆட்களைச் சேர்த்தது; வேலை நிறுத்தம் செய்ய வேண்டாம் என்றும் உற்பத்தியைப் பெருக்கச் சொல்லியும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது.

இவ்வாறு காந்தியைப் போலவே இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியும் மக்களுக்குத் துரோகமிழைத்தது. ஆனால் காங்கிரசுக்காரர்களோ தாங்கள் “24 காரட்’ சுத்த தேச பக்தர்கள் என்றும் கம்யூனிஸ்டுகள்தான் துரோகிகள் என்றும் நேற்றுவரை பிரச்சாரம் செய்து வந்தனர். இன்று காங்கிரசும் வலது இடது போலி கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து “வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் பொன் விழா கொண்டாடுகிறார்கள். ஆக, தங்களைத் தேசத்துரோகிகள் என்று காங்கிரசு சொல்லி வந்ததை இரு போலி கம்யூனிஸ்டுகளும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். நேற்றுவரை துரோகிகளாய் இருந்த கம்யூனிஸ்டுகள் இன்று திடீரெனத் தேச பக்தர்களாக மாறிவிட்டார்கள் என்று காங்கிரசு சொல்கிறது.

இதுதான் காங்கிரசின் “தேசிய’ கலாச்சாரம்!
இதுதான் போலிக் கம்யூனிஸ்டுகளின் “புரட்சி’க் கலாச்சாரம்!
புரிந்து கொள்வோம் இவர்களை!
புறந்தள்ளுவோம் இவர்களை!

நூல்: காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு

வெளியீடு
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
விலை ரூ 15

 

 

 

பகத்சிங் , சுகதேவ், ராஜகுருவின் நினைவு நாளில் சந்தோஷ் நகரில் நடைபெற்ற எழுச்சிமிகு தெருமுனைக் கூட்டம்!!

அநீதிக்கு எதிரான இந்தப்போர் எங்களோடு தொடங்கவும் இல்லை எங்கள் வாழ் நாளோடு முடியப்போவதுமில்லை என்று முழங்கி 23ம் வயதிலேயே தூக்கு மேடையேறிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளான பகத்சிங் , சுகதேவ், ராஜகுருவின் நினைவு நாளில் அந்தப்போரை தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தும் தெருமுனைக்கூட்டம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் சென்னை , எழும்பூர், டாக்டர். சந்தோஷ் நகரில் நடைபெற்றது.

இன்று மக்கள் வாழ்வாதார உரிமைகளுக்காகப் போராடினாலே இந்திய அரசின் டர்னியர் விமானங்கள் சுற்றுகின்றன தலைக்கு மேல்.  ஒரு உள் நாட்டுப்போரை தென் தமிழகத்தில் நடத்த அரசு முடிவு செய்துள்ள சூழலில் தமிழகத்தின் தெருக்கள் டாஸ்மாக்கால் நிரம்பி வழிகின்றன,   ஒரு புறம் சினிமா சீரழிவும், நுகர்வு வெறி கலாச்சாரமும் மக்களை குறிப்பாக வேகமும் துடிப்பும் மிக்க மாணவர்கள், இளைஞர்களை சீரழித்தும் மறு புறம் அவர்களை பொறுக்கியாக, ரவுடியாக , ஏன் எண்கவுண்டர் செய்யத் ‘தகுதியானவர்களாக’ மாற்றி இருக்கிறது அரசு. இந்த சூழலில் நாம் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவினை ஏன் நெஞ்சில் ஏந்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்த பு.மா.இ.மு மாநில அமைப்புக்குழு உறுப்பினர் தோழர். செ. சரவணன் “ வெள்ளைக்காரர்கள் நாட்டை அடிமையாக்கி வைத்த அந்த நேரத்திலே மக்கள் விடுதலைக்காக ஒரு விடியலை எதிர்பார்த்திருந்த போது , காந்தியின் கைராட்டை உழைக்கும் மக்களின் கழுத்தை நெறித்த போது, வெடிகுண்டாய் முழங்கியவர்கள் தான் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் அவர்களை மாணவர்கள் – இளைஞர்களிடம் கொண்டு சென்று இன்று அரசு நடத்தும் யுத்தத்திற்கு , அநீதிக்கு எதிரான போரை தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்பதையும், டாஸ்மாக் வியாபாரம் குறைந்து விட்டதை ஆராய நிபுணார் குழு அமைக்கும் தமிழக அரசின்  முடிவு தான், நடிகைகளின் அந்தரங்கம் தான் பத்திரிக்கையின் முதல் பக்கமாக வருகிறதே அன்றி இடிந்த கரையில்  மக்களின்தலைக்குமேல் போர் விமானங்கள் சுற்றி வருவதும் 144 தடை உத்திரவை துச்சமாய் மதித்து, பால் தண்ணீர் , மின்சாரம் என அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட போதும் அரசின் அடக்கு முறைக்கு பணியாத அவர்களின் வீரமும் எந்த ஊடகத்திலும் வருவதில்லை. ஆனால் அம்மக்களுக்கு எந்த ஓட்டுக்கட்சியும் வந்து நிற்கவில்லை எமது தோழர்கள் காடு கடல் வழியே சென்று ஆதரவளித்தார்கள் உயிரை பணயம் வைத்தபடி.  அம்மக்களுக்கு தோளோடு தோள் கொடுப்பதேபகத்சிங்கின் நினைவு நாளில் எடுக்கப்படும் உறுதியாக இருக்கும் ” என்று
கூறினார். அடுத்ததாக பேசிய மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னைக்கிளைச் செயலர் தோழர். மில்டன் “ நாட்டில் உள்ள இயற்கை வளங்கள் எல்லாம் பன்னாட்டு முதலாளிக்கு தாரைவார்க்கப்படுகின்ற இந்தச்சூழலில்தான் இடிந்த கரையில் மக்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். போபர்ஸ், ஸ்பெக்ட்ரம் தற்போது நிலக்கரி ஒதுக்கீட்டில் 10.7 லட்சம் கோடி ஊழல் என தனியார் மயத்திற்கு பின்னர் நாடே வேட்டைக்காடாக மாற்றப்பட்டதையும் அதற்கு எதிராக போராடகூடிய தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரையும் பகத்சிங்கை தூக்கில் ஏற்றிய அதே சட்டத்தின் அடக்குமுறையின் மூலம் நுகத்தடியில் நசுக்கப்படுவதையும் எதிர்த்து போராட வேண்டியதையும்,  தற்போது உள்ள
சட்டங்கள் கூட போதாது என்று புதிய சட்டங்கள் புதிய வடிவங்களில் வருவது எல்லாம் மக்களை கண்காணித்து ஒடுக்குவதற்கே. அதனால்தான் போராடுகின்றவர்களை ஒடுக்குவதற்கு பள்ளிகளில் கேமரா, கல்லூரிகளில் கண்காணிப்பு என்று தொடர்கின்றது. இதை மாற்ற பகத்சிங்கைப்போல இன்று நாம் போராடினால் மட்டுமே முடியும் இதைத்தான் உறுதி மொழியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.”

சிறப்புரை பேசிய பு.மா.இ.மு மாநில அமைப்பாளர் தோழர். த.கணேசன் “ ஜாலியன் வாலாபாக்கை கண்டு கொதித்தெழுந்து போரிட்ட பகத்சிங்கின் நினைவு நாளான இன்று நம் கண்முன்னே கூடங்குளத்தை இன்னொரு ஜாலியன் வாலாபாக்காய் மாற்ற அரசு முயலும் இந்த சூழலில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளை போல போராட வேண்டிய அவசியம் உள்ளது என்றும், இந்த நாட்டின் விதலையை புரட்சியை கனவு கண்ட அந்த வீரர்களில் லட்சியப்பாதையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும் தோழமை அமைப்புக்களும் இன்று சென்று கொண்டிருப்பதற்கு ஒரு உதாரணம் தான் இடிந்தகரையில் பல்லாயிரம் போலீசு வெறி நாய்களை மீறி காடு, கடல் வழியே முற்றுகையை மீறி அம்மக்களுக்கு நேரடியாக அளித்த ஆதரவு.
அம்மக்கள் அதிகபட்ச போராட்டமாக உண்ணாவிரதம் இருக்கும் போது அவர்களை ஒடுக்க 144 தடை உத்திரவு போட்டு பால் தண்ணீர் மின்சாரம் ஆகியவற்றை மறுத்ததால், பச்சைக்குழந்தைகளுக்கு பால் இன்றி  தண்ணீர் மட்டுமே தரக்கூடிய சூழல் உள்ளாது மேலும் அந்தப்பகுதியில் படிக்கும் கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கு செல்லமுடியவில்லை, +2 மாணவர்கள் நூற்றுக்காணோர் தேர்வுக்கு செல்ல முடியவில்லை என்பதையும் அந்தப்பகுதியில் என்ன நடக்கிறது என்பதை யாரும் அறிய முடியாத வகையில் பத்திரிக்கையாளர்கள் உட்பட அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சங்கரன் கோயில் இடைத்தேர்தலுக்காக அம்மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்த ஜெயா போராடுகின்ற மக்களை தனிமைப்படுத்தியும் கைது செய்ததன் மூலமும் போராட்டத்தை ஒடுக்க நினைத்தாலும் அதை முறியடிக்கும் வகையில் கைது செய்யப்பட்ட மக்களை சிறை வாசலில் சந்தித்து வரவேற்று முழக்கமிட்ட புரட்சிகர அமைப்புக்கள் தான் இன்று பகசிங்கைப்போல இந்த நாட்டிற்கே நம்பிக்கையளிக்கும் விடிவெள்ளியாக உள்ளதையும் நம்முடைய சொத்தான மின்சாரத்தை பன்னாட்டு முதலாளிகளின் கொள்ளைக்காக இந்த அரசு தாரைவார்ப்பதையும் அதனால் உழைக்கும் மக்கள் அன்றாடம் பாதிக்கப்பட்டு வேலையிழந்து நிற்கும் கொடுமைக்கு முடிவு கட்ட இந்த தனியார் மயத்திற்கே முடிவு கட்ட வேண்டும் என்றும் உரையாற்றினார் மேலும் கூடங்குளம் அணு உலை திறந்தால் மின்சாரம் நமக்கு கிடைக்கப்போவதில்லை, அது இந்திய அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தததின் விளைவு தான். அணு உலை மூலம் தடையற்ற மின்சாரம் வரும் என்று அனைத்து ஓட்டுப்பொறுக்கி கட்சியினர் சவடால் விடுகின்றனர். தடையற்ற மின்சாரம் எங்கே? ஆறு மாதம் கழித்து அவர்களின் சட்டயை பிடித்து தெருவில் இழுத்து வந்து கேட்க வேண்டும் . எத்தனையோ மாற்று வழியில் மின்சாரம் தயாரிக்க வாய்ப்பு இருந்தும் பன்னாட்டு முதலாளிகளின் லாபத்திற்காக மட்டுமே மக்களை
கொன்று அணு உலையை நிறுவ அரசு அரசு முயல்கிறது. அனைவருக்கும் தடையற்ற மின்சாரம் வேண்டும் எனில் அணு உலையை விரட்டி, நம்முடைய சொத்தான மின்சாரத்தை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு மாணவர்கள் இளைஞர்கள் பகத்சிங் காட்டிய பாதையிலே முன் சென்று அந்தப்போரை கொண்டு சென்று ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரை முன்னெடுக்க வேண்டும்” என்று தனது உரை நிறைவு செய்தார்.

இந்த கூட்டத்திற்கு பு.மா.இ.மு சென்னைக்கிளை செயற்குழு உறுப்பினர் தோழர். ஏழுமலை நன்றியுரை கூற கூட்டம் நிறைவு பெற்றது. சுமார் 300பேர் கலந்து கொண்ட இந்த தெருமுனை கூட்டத்தில் புமாஇமு தோழர்களின் கலை நிகழ்ச்சிகள் அனைவரை உணர்வூட்டும் வகையில் நடைபெற்றது. குறிப்பாக கட்டபொம்மன் மற்றும் தேசவிடுதலைப் போரடா ஆகிய பாடல்கள் அனைவரை உச்சரிக்க வைத்தன. மேலும் நிகழ்ச்சி வரவேற்பும், ஓவியக்காட்சியும் பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் வாரிசுகளாக களமிறங்க வேண்டிய அவசியத்தை உணர்த்தின.
இன்றைய சூழலில் இடிந்த கரையில் ஒரு உள் நாட்டுப்போரை நடத்தும் அரசுக்கு எதிராக பகத்சிங்காக, ராஜகுருவாக, சுகதேவாக இளைஞர்கள் மாணவர்கள் மாறவேண்டியதையும் ,அந்தப்போரை தொடர வேண்டிய அவசியத்தினை உணர்த்தும் வகையில் இந்த தெருமுனைக்கூட்டம் அமைந்தது.

மார்ச் 23, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங்,சுகதேவ்,ராஜகுரு நினைவு நாளில் உறுதியேற்போம்!

மார்ச் 23, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங்,சுகதேவ்,ராஜகுரு நினைவு நாளில் உறுதியேற்போம்!

அன்பார்ந்த மாணவர்களே- இளைஞர்களே!

மாணவர்கள் இளைஞர்களின் உண்மையான கதாநாயகர்களான பகத்சிங் ,சுகதேவ்,ராஜகுரு தூக்கிலிடப்பட்ட நாள்தான் மார்ச்-23,1931.

வெள்ளையர்களை அடித்து விரட்டி வென்றெடுக்க வேண்டிய விடுதலையை கெஞ்சிப்பெற வேண்டிய பிச்சையாக்கினார் காந்தி. ஆனால் போராடி விடுதலையை சாதிக்க வேண்டும் என்று வெகுண்டெழுந்த பகத்சிங்கும் அவரைச் சார்ந்த இளைஞர்களும் கம்யூனிச ஒளியில் அந்த காந்திய காரிருளை கிழித்து போராடங்களை முன்னெடுத்தனர். இந்தப் போராளிகளைத்தான் அன்று காந்தியும் காலனியாதிக்கவாதிகளும் தீவிரவாதிகள் என்று அவதூறு செய்தனர்.விடுதலைக்காகப் போராடிய மக்களை குற்றப் பரம்பரையினராக்கி கண்காணித்து கொடுமைபடுத்தியது ஆங்கிலேய ஏகாதிபத்தியம்.

அந்த காலனியாதிக்கம்தான் ஒழிந்துவிட்டதே அதற்கென்ன இப்பொழுது என்று கேட்கிறீர்களா? அது ஒழிந்துவிடவில்லை. மறுகாலனியாக்கம் என்ற மறு உருவத்தில் அக்கொடுமைகளையெல்லாம்  தீவிரப்படுத்திவருகிறது.

 நாட்டின் முன்னேற்றத்திற்காக என்ற பெயரில் திணிக்கப்பட்ட தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைகளின் விளைவாக கல்வி, மருத்துவம்,சுகாதாரம், தண்ணீர் ,மின்சாரம் என அனைத்தும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு வருகின்றன.’காசு இல்லையேல் கல்வி இல்லை,  படித்தாலும் வேலை இல்லை’ என்று மக்கள் தொகையில் சரிபாதியிரான மாணவர்-இளைஞர்களின் வாழ்க்கையை நாசமாக்கி வருகின்றன மத்திய மாநில அரசுகள்.

இவற்றை எல்லாம் எதிர்த்து நிற்கும் ஆற்றலும் நெஞ்சுரமும் கொண்டவர்கள் மாணவர்கள் இளைஞர்கள் துடிப்பும் போர்க்குணமும் நிறைந்த இவர்களுடைய போராடும் குணத்தை மழுங்கடித்து முடமாக்கத்தான் ஏகாதிபத்திய சீரழிவு நச்சுக் கலாச்சாரம் திணிக்கப்படுகின்றது. டாஸ்மாக், ஆபாச சீரழிவுகளை அள்ளித்தரும் சினிமா – தொலைக்காட்சிகள் , பைக், செல்போன் என புதுசு புதுசா  கடைவிரிக்கும் நுகர்வு வெறி கலாச்சாரம் இவை அனைத்தும் மாணவர்கள் இளைஞர்களின் சிந்தனைய சீரழித்து சமூக விரோதிகளாகவும் மாற்றிவருகின்றன.இதை தடுத்து நிறுத்த வக்கில்லாத ஆட்சியாளர்கள்தாம் அவர்கள் மீது ரவுடிகள் பொறூக்கிகள் என்று முத்திரை குத்துகிறார்கள்.

போதாக்குறைக்கு வங்கிக்கொள்ளையை முகாந்திரமாக்கிக்கொண்டு கல்லூரிமாணவர்களை போலீசை வைத்து கண்காணிப்பது, பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது என்று மாணவர்களை குற்றப்பரம்பரையினராக மாற்றத் துடிக்கின்றன மத்திய மாநில அரசுகள். இதன் மூலம் அரை குறை ஜனநாயக் உரிமைகளைப் பறித்து பச்சையான போலீசு ராஜ்ஜியத்திற்கு வழி ஏற்படுத்தப் படுகின்றது. மாணவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதை தடுப்பது என்ற நியாயத்தை உருவாக்கி கொண்டு ஒரு நிறுவனமாக யாரும் கேள்வி கேட்பாரின்றி அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகின்றது இந்த அரசு. இது அநியாயத்தை நியாயமாக காட்டும் அயோக்கியத்தனம். மாணவர்களை குற்றப் பரம்பரையினராக்கும் மறுகாலனியாக்கக் கொடூரம் இனியும் இந்த கொடுமைகளை சகித்துக்கொண்டு வாழ்வது அவமானம். ஏகாதிபத்திய எதிப்புப் போராளிகள் பகத்சிங்,சுகதேவ், ராஜகுரு வாரிசுகளாக களமிறங்குவோம். மாணவர்கள்,  இளைஞர்கள் மீதான அனைத்துவகை அடக்குமுறைகளுக்கும் முடிவு கட்ட மீண்டும் ஒரு விடுதலைப் போரை முன்னெடுப்போம். அதற்கு மாணவர்கள் இளைஞர்கள் அனைவரும் அமைப்பாக அணி திரள்வோம் !

பகத்சிங்கின் தூக்கும் காந்தியின் துரோகமும்

லாகூர் சதிவழக்கு சம்பந்தமான தீர்ப்பில் காந்தி நடந்து கொண்ட விதம், பிரிட்டிஷ் அரசோடு கள்ளக் காதல் கொண்டு உறவாடிய விசயங்கள் ஆகியவை சமீபகாலத்தில் கூட அம்பலமாகியுள்ளது. மத்தியப் பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியதற்காகவும், லாலா லஜபதிராயை அடித்துக் கொன்ற பிரிட்டிஷ் போலீசு அதிகாரி சாண்டர்சைச் சுட்டுக் கொன்றதற்காகவும் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற தோழர்களுக்கு லாகூர் சிறைச்சாலையிலே தூக்குத் தண்டனை காத்திருந்தது. இதே நேரத்தில் 1931ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் காலனி ஆட்சியின் தலைவனான இர்வின் என்பவனுக்கும் காந்திக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. (காந்தி இர்வின் ஒப்பந்தம்)

இவ்வொப்பந்தப்படி “சுயராச்சியம்’ சம்பந்தமான சில சரத்துக்களையும், “இந்தியாவின் நலன்களுக்குப் பாதுகாப்பான ஒதுக்கீடுகள்’ எனச் சில்லறைச் சீர்திருத்த ஒப்பந்தங்களும், காந்தியை பின்பற்றிச் சிறை சென்றவர்களுக்குப் பொது மன்னிப்பும் வழங்கப்பட்டது. ஆனால் புரட்சியாளர்கள் ஒருவர் கூட விடுதலை செய்யப்படவில்லை.

இந்த ஒப்பந்தம் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் மரண தண்டனை பற்றி மௌனம் சாதித்தது. மாறாக, பலாத்காரக் குற்றங்களுக்காகவும், பலாத்காரத்தைத் தூண்டிய குற்றத்திற்காகவும் தண்டிக்கப்பட்டவர்கள் யாரும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என ஒப்பந்தம் திட்டவட்டமாகக் கூறியது. அது மட்டுமின்றி பெசாவரில் மக்களைச் சுட மறுத்ததற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த கூர்க்காப் படையினர் எந்த பலாத்காரத்திலும் இறங்கவில்லை. அவர்கள் காந்தி கூறிய அகிம்சைத் தத்துவத்தைத்தான் கடைப்பிடித்தனர். அவர்களுடைய விடுதலைக்கு இந்த ஒப்பந்தத்தில் இடமில்லை. காந்தி இதுபற்றிய கோரிக்கை கூட எழுப்பவில்லை.

பகத்சிங் மற்றும் தோழர்கள் தூக்கிலிடப்படுவதற்குச் சில தினங்களுக்கு முன்பு காந்தி வெளிநாட்டு நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். “பகத்சிங் மீதும் இதரர் மீதும் விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுமா?” என ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு “என்னை இக்கேள்வி கேட்காதிருப்பதே மேல். இதற்குமேல் நான் ஒன்றும் கூறமுடியாது” எனக் கூறிய காந்தி அந்த ஒப்பந்தம் போடப்பட்ட முறையைப் பற்றி ரொம்பவும் சிலாகித்துப் பேசினார். “முதலாவதாக, வைசிராயின் விசேசப் பொறுமையும், அளத்தற்கரிய உழைப்பும், சிறந்த குணமும் இன்றி இவ்வொப்பந்தம் முடிந்திருக்க மாட்டாதென நான் கூறவிரும்புகிறேன்… இதுபோன்ற ஒப்பந்தத்தைப் பற்றிய வரையில் வெற்றியடைந்த கட்சி எதுவெனக் கூறவும் முடியாது; கூறுவதும் சிறந்ததன்று. ஏதாவது வெற்றி இருக்குமாயின் அது இருவரையும் சார்ந்ததே. காங்கிரசு ஒருபோதும் வெற்றியை நினைத்ததில்லை.” ஆம்; பிரிட்டிஷ் நலனோடு சாராத வெற்றியை இவர்கள் ஒருபோதும் நினைத்ததில்லைதான்!

காந்தி இர்வின் காகித ஒப்பந்தங்களின் சரத்துக்களைக் கண்ட பஞ்சாப் மக்களும், ஏனைய இந்திய மக்களும் கொதிப்படைந்திருந்தனர். கராச்சியில் காங்கிரசு மாநாடு கூடும் அதேநாளில் பகத்சிங் லாகூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். ஆத்திரமுற்ற மக்கள் திரளிடமிருந்து காந்திக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் கிளர்ந்தெழுந்தன. ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். “பலர் அதன் தவறான அம்சங்களைக் கண்டித்தனர். மேலும் தனிநபர் பயங்கரவாதத்தைக் கொண்டு காந்தியை அச்சுறுத்தினர்” என இர்வினுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் குறிப்பிடுகிறார். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் மரண தண்டனை விசயத்தில் காந்தியாரின் பங்கை மக்கள் நன்றாகவே அறிந்திருந்தனர். “மக்கள் காந்தியை உடனடியாக ஒழித்துக் கட்ட, பலாத்காரமாக நசுக்க ஆயத்தமாயிருந்தனர்” என இர்வின் குறிப்பிட்டுள்ளார் arl of Birhenhead P.305)

 மக்களுடைய அறியாமையைப் பயன்படுத்தி அதன்மேல் சவாரி செய்து கொண்டிருந்த காந்தியை அதே மக்கள் பலாத்காரமாக நசுக்கி எறியும் அளவுக்குச் சென்றுள்ளார்கள் என்றால் காந்தி எத்தகைய துரோகியாக இருந்திருக்க வேண்டும். 1922 ஒத்துழையாமை இயக்கம், 1931 காந்தி இர்வின் ஒப்பந்தம் இதன் ­மூலம் செய்த துரோகத்தைக் காட்டிலும், பின் நாட்களில் காந்தி செய்த துரோகம் என்றென்றும் ஏகாதிபத்திய அடிமை நாடாய் இந்தியா இருப்பதற்குப் பலமான கால்கோளாய் அமைந்து விட்டன.

– காந்தியும் காங்கிரசும் – ஒரு துரோக வரலாறு என்ற நூலின் ஒரு பகுதி

காந்தியும் காங்கிரசும் நூலின் மொத்த பகுதியையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

வெளியீடு

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
விலை ரூ 15

வறுமையைப் பெருக்கி வாழ்வைப் பறிக்கும் குடியரசுக்கு விழா ஒரு கேடா?

“63 ஆண்டு கால குடியரசு தினத்தின் யோக்கியதை” – 

பட்டினியால் வாடும் மக்களின் தன்மையை அளவிடும் சர்வதேச அளவிலான குறியீட்டெண்ணின் அடிப்படையில் இந்தியா எத்தியோப்பாவை விடத் தாழ்ந்து போயுள்ளது. சீனா (47 வது இடம்), பாகிஸ்தானை விடவும் (88ஆவது இடம்) இந்தியா (94 ஆவது இடம்) மிகவும் பின்னோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது.
..
மகப்பேற்றின்போது போதிய மருத்துவ வசதி இன்மையால் இறந்து போகும் இந்தியப் பெண்களின் எண்ணிக்கை மட்டும் ஆண்டுக்கு 1.17 லட்சம்.
வயது வந்த இந்தியர்களில் 48.5% பேர்கள் ஊட்டச்சத்துக்குறைவானவர்கள். 3 வயதுக்குக் குறைவான குழந்தைகளில் 47! பேருக்கு வயதுக்கேற்ற உயரமில்லை. 15.5% பேர்களுக்கு உயரத்துக்கேற்ற எடை இல்லை என்பதெல்லாம் ஆய்வுகளில் தெரியவந்தவை.
1997 முதல் 2005 வரை இந்தியா முழுவதும் ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.
மராட்டியம், கருநாடகம், ஆந்திரம், மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் மட்டும் 89,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
32 ஆயிரம் பேர்கள் தற்கொலை செய்து கொண்ட மராட்டிய மாநிலத்தில் தான் 4 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள பணக்காரர்கள் 25 ஆயிரம் பேர் வாழும் மாநகரமான மும்பை உள்ளது என்பது வேதனை கலந்த உண்மை.
விவசாயத்துக்கு 1990-இல் வங்கிகள் வழங்கிய கடன் 13.8 சதவீதமாக இருந்தது. அதே வங்கிகள் 2001 – -2 நிதியாண்டில் வழங்கிய கடனோ 7.2 சதவீதம் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலில் இருந்தே, ஆட்சியாளர்களுக்கு விவசாயத்தின் மீதுள்ள அக்கறை தெளிவாகப் புரியும்.
விவசாயத்தைப் படிப்படியாய் தலைமுழுகி விடுவது என்ற அடிப்படையில், 1991-இல் விவசாயத் துறையில் அரசு செய்த முதலீடு 3.4 சதவிதமாக இருந்த நிலைமை மாறி, அதை 2001-ல் 1.3 சதவிதமாகச் சுருக்கி, விவசாயிக்கு சுருக்குக் கயிற்றைத் திரித்துத் தந்தது.
உடல் உழைப்புக்கு அவசியமாகத் தேவைப்படும் புரதத்தை வழங்கும் பருப்பின் நுகர்வோ 15.2 கிலோவில் இருந்து 10.6 கிலோவாகச் சரிந்துள்ளது.
உலக அளவில் நாளொன்றுக்கு தனிநபர் உண்ணும் உணவின் கலோரி மதிப்பு 3206. ஆனால் இந்திய மக்களின் ஏழைகளான 30 சதவிதம் பேர் உண்பதோ வெறும் 1626 கலோரிதான் என்றால், இந்திய ஏழைகளின் வாழ்க்கை என்பதே ஏதோ உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதுதானே பொருள்?
இந்திய மக்களில் 91 கோடி பேர்களின் தினசரி வருமானம் 80 ரூபாய்க்கும் கீழே என்றும், அந்தக் கொஞ்ச நஞ்ச பணத்துக்குள் உணவு, வீட்டு வாடகை, மருத்துவம், குழந்தைகளுக்கான கல்வி ஆகிய அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பார்த்துக் கொள்ளும்படியான அவல் நிலைக்குத் தள்ளி உள்ளது என்றும் உலக வங்கியே குறிப்பிடுகிறது.
ஆனால் அதே நேரத்தில், நாட்டில் உள்ள 10 சதவீதப் பணக்கார்கள் இந்நாட்டின் 52 சதவீத சொத்துக்களையும் வளங்களையும் அனுபவிக்கின்றனர். அடித்தட்டில் இருக்கும் 10 சத ஏழைகள் அனுபவிக்கும் வளங்களோ வெறும் 0.21 சதமாகச் சுருங்கி உள்ளது.
110 கோடி இந்திய மக்களில் வெறும் ஒரு லட்சம் பேரை மட்டும் கோடீஸ்வர்களாக்கி, பல பத்து கோடிப்பேரை ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடுபவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.
மூலம்:
டிசம்பர் “புதிய ஜனநாயகம்”
“உழைத்தவர் மெலிந்தனர் வலித்தவர் கொழித்தனர்” கட்டுரை

முன்பு காந்தி வந்தார் இன்று அன்னா ஹசாரே வந்தார் இந்த மானிடர் திருந்தப் பிறந்தார்! – RSS அம்பி ஜெயமோகனின் புலம்பல்!

டிச 23 தினமணியில் ஜெயமோகன்

‘அண்ணா ஹசாரே – மனசாட்சி பதில் சொல்லட்டும்’ என்ற கட்டுரை’ எழுதி’ உள்ளார்.

அதில்,

அன்னா ஹசாரே, ஒரு வரலாற்று நம்பிக்கை அவர், காந்திய முறையினை கடைப்பிடிப்பவர் அவர், தலித்துகளுக்கு அதிகார பகிர்வு அளித்தவர் அவர் (1987-ல் ராலேகான் சித்திக்கு போய் பார்த்தபோது), எளிமையின் சிகரம் அவர், ஏழை சமூகசேவகர் அவர்….. அவர், அவர், அவர் என நீளும் ஜெயமோகன் புலம்பலில் இடையிடையே குடிப்பவர்களை சவுக்கால் அடிப்பது என்ற முடிவுக்கு மரத்தடி பஞ்சாயத்து சரி என அன்னா முயன்றிருக்கக்கூடும், சரத் பவாரை ஒரு முறைதான் அடித்தார்களா? என கேட்டதற்கு அன்னா ஒரு அரிய சிந்தனையாளர் அல்லாதது காரணமாக இருக்கக்கூடும், ராலேகான் சித்தியில் தேர்தல் நடத்தவேணாம் என அன்னா நினைத்தமைக்கு பெரும்நிர்மாணப்பணிகள்’ ராலேகான் சித்தியில் நடைபெற்றுவருவது காரணமாக இருக்கக்கூடும் ….என அன்னா டவுசர் கிழியப்போவதாக பதறுகிறார்.

அன்னாவை எதிர்க்கும் தரப்பினர் நேர்மையில்லாதவர்கள், காந்தியே இன்று நேரில் வந்தாலும் குறை சொல்பவர்கள் என்றும், இன்னொரு சாராரான எங்களை(ஜெயமோகனை) போன்ற நம்பிக்கைவாதிகளுக்கு அன்னா ’தேவ தூதனாக’ காட்சி தருகிறார் என்கிறார்.

இறுதியில் இந்தியாவின் எதிர்காலமே இனி அன்னா ஹசாரே தான்.  அவரை விமர்சனம் செய்வது என்பது, இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கேள்விகளில் ஒன்று. நம் மனசாட்சியுடன் ’அந்தரங்கமாக’ நம்மால் பேச முடிந்தால்தான், இதற்கான பதிலை நாம் சொல்ல முடியும் என முடித்து உள்ளார்.

ஜெயமோகன் அவர்களே,

ஊழலின் ஊற்றுக்கண்ணே முதலாளித்துவம்தான், மிகப்பெரிய ஊழல்பேர்வழிகளே முதலாளிகள்தான். சட்டப்பூர்வமாகவே இத்தகைய முதலாளிகளுக்கு நாட்டை கொள்ளை அடிக்கும் உரிமைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், ’ஊழல் எதிர்ப்பு’ என்ற பெயரில் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு முழு சுதந்திரம் கொடுக்க கிளம்பியுள்ளார் அன்னா ஹசாரே.

இது குறித்த அன்னாவின் மீதான விரிவான விமர்சனங்களுக்கு பதில் கூறாமல் மொக்கையாக ஜாக்கி வைத்து அன்னாவை தூக்க கண்டிப்பாக உங்களால் மட்டுமே முடியும்.

ராலேகான் சித்தியில் தலித்துகளுக்கு அதிகார பகிர்வு குறித்து பேசும் நீங்கள் அங்கு தலித்துகளுக்கு நிலப்பகிர்வு குறித்து பேச மறுப்பது ஏன்? நிலம் சொந்தமாக இருக்கும் தலித்துகளுக்கே உங்கள் ராமராஜியத்தில் கயர்லாஞ்சி தான் முடிவாக இருக்கும் போது நிலம் இல்லாத ராலேகான் சித்தி தலித்துகளின் அதிகாரம் என்னவாக இருக்க முடியும்?

2011-ல் ராலேகான் சித்திக்கு எமது தோழர்கள் உள்ளிட்ட பல்வேறு குழுவினர் சென்று அந்த ‘புரட்சிக்’ கிராமத்தின் புரட்டு உண்மைகள் அம்பலமாக்கிய பின்பும் 87-ல் நான் சென்றேன், வியந்தேன் என சல்லி அடிப்பது ஏனோ?

காந்தியே வந்தாலும் குறை சொல்வார்கள் என இனி எழுதாதீர்கள்.  காந்தி மீண்டும் வந்தால் இழுத்து போட்டு நாலு சாத்து சாத்தாமல் விடமாட்டார்கள் பகத்சிங்கின் வாரிசுகள் என்று வேண்டுமானால் எழுதுங்கள்.

இறுதியாக, உங்க கட்டுரையில் ஒரு நல்ல விசயம் இருக்குமாயின் அது ”அன்னா ஹசாரே கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி மட்டும் அல்ல, ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி கும்பலின் ஆதரவோடு வரும் கைக்கூலி” என்ற உண்மையினை வெட்டவெளிச்சமாக சொன்னது தான். ”

 தொடர்புடைய பதிவுகள்:

கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி அன்னா ஹசாரேவின் முகத்திரையை கிழித்தெறிவோம்!

அண்ணா ஹசாரே கிராமத்தில் வினவு! நேரடி ரிப்போர்ட்!

டீம் அண்ணா: உப்பிப் பெருக்கப்படும் ஒரு போலிப் புரட்சி!- அருந்ததிராய்

 அண்ணா ஹசாரே: ஊடகங்களின் பிரைம் டைம் விளம்பரம்!

அண்ணா ஹசாரே: ஜன் ஜோக்பால் வெர்ஷன் 2.0

மாலையில் மெழுகுவத்தி, ராத்திரி குவாட்டர், காலையில் TIMES OF INDIA!

அண்ணா ஹசாரேவுக்காக சென்னையில் போங்காட்டம்! நேரடி ரிப்போர்ட்!!

அண்ணா ஹசாரேவுக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்! புமாஇமு தோழர்கள் 13 பேர் பொய் வழக்கில் சிறையில் அடைப்பு!

தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் கீழ் பொதுச்சொத்துகளும், இயற்கை வளங்களும், பொதுத்துறைகளும் சட்டபூர்வமாகவே தரகுமுதலாளிகளுக்கும், பன்னாட்டு முதலாளிகளுக்கும் தாரை வார்க்கப்படும் காலத்தில் இருக்கிறோம். கல்வி, மருத்துவம் முதல் சாலைகள் வரையிலான அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டு, அவர்கள் அடிக்கும் கொள்ளைகள் அனைத்தும் சட்டபூர்வமாக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சட்டபூர்வ ஊழலான மறுகாலனியாக்கத்துக்கு எதிரான போராட்டங்களை முதன்மைப் படுத்துவதற்குப் பதிலாக,  சட்டவிரோத ஊழலை ஒழிப்பதே முதற்கடமை என்று சித்தரிப்பதன் மூலம் தொந்திரவற்ற சேவையை பன்னாட்டு முதலாளிகளுக்கு அளிக்க முன்வருமாறு நம்மை அழைக்கிறார் ஹசாரே.

இப்படிபட்ட ஏகாதிபத்திய கைக்கூலியான அண்ணா ஹசாரே நேற்று (18.12.11) சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேச வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை புமாஇமு தோழர்கள் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை கைது செய்ததோடு 13 தோழர்கள் மீது பொய் வழக்குகளை போட்டு சிறையில் அடைத்து உள்ளது போலீஸ்.

ஆர்ப்பாட்ட முழக்கங்கள்!

கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி அண்ணா ஹசாரேவை விரட்டியடிப்போம்!

  • ஊழலின் ஊற்றுக்கண்ணே முதலாளிகள்தான்

இதைப் பேசாத ஹசாரே-வின் ஊழல் எதிர்ப்பு

      முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் அயோக்கியத்தனமே!

இளைஞர்களே!

  • ஹசாரே ஹீரோவுமல்ல,இளைஞர்களைத் திரட்டுவது

வலுவான லோக்பாலுக்கும் அல்ல –

  •  முதலாளிகளின் கொள்ளைக்கு வலு சேர்க்கவே!
  • பிர்லாவின் கைக்கூலி காந்தியின் வாரிசான

ஹசாரேவின் முகத்திரையை கிழித்தெறிவோம்!

தொடர்புடைய பதிவுகள்:

அண்ணா ஹசாரே கிராமத்தில் வினவு! நேரடி ரிப்போர்ட்!

டீம் அண்ணா: உப்பிப் பெருக்கப்படும் ஒரு போலிப் புரட்சி!- அருந்ததிராய்

 அண்ணா ஹசாரே: ஊடகங்களின் பிரைம் டைம் விளம்பரம்!

அண்ணா ஹசாரே: ஜன் ஜோக்பால் வெர்ஷன் 2.0

மாலையில் மெழுகுவத்தி, ராத்திரி குவாட்டர், காலையில் TIMES OF INDIA!

அண்ணா ஹசாரேவுக்காக சென்னையில் போங்காட்டம்! நேரடி ரிப்போர்ட்!!

கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி அண்ணா ஹசாரேவை விரட்டியடிப்போம்!

  • ஊழலின் ஊற்றுக்கண்ணே முதலாளிகள்தான்

            இதைப் பேசாத ஹசாரே-வின் ஊழல் எதிர்ப்பு

            முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்கும்

                                                                                   அயோக்கியத்தனமே!

இளைஞர்களே!

  • ஹசாரே ஹீரோவுமல்ல,இளைஞர்களைத் திரட்டுவது

          வலுவான லோக்பாலுக்கும் அல்ல –

  •  முதலாளிகளின் கொள்ளைக்கு வலு சேர்க்கவே!

  • பிர்லாவின் கைக்கூலி காந்தியின் வாரிசான

          ஹசாரேவின் முகத்திரையை கிழித்தெறிவோம்!

தொடர்புடைய பதிவுகள்:

அண்ணா ஹசாரே கிராமத்தில் வினவு! நேரடி ரிப்போர்ட்!

  டீம் அண்ணா: உப்பிப் பெருக்கப்படும் ஒரு போலிப் புரட்சி!- அருந்ததிராய்

அண்ணா ஹசாரே: ஊடகங்களின் பிரைம் டைம் விளம்பரம்!

அண்ணா ஹசாரே: ஜன் ஜோக்பால் வெர்ஷன் 2.0

மாலையில் மெழுகுவத்தி, ராத்திரி குவாட்டர், காலையில் TIMES OF INDIA!

அண்ணா ஹசாரேவுக்காக சென்னையில் போங்காட்டம்! நேரடி ரிப்போர்ட்!!