• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,819 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

பகத்சிங் , சுகதேவ், ராஜகுருவின் நினைவு நாளில் சந்தோஷ் நகரில் நடைபெற்ற எழுச்சிமிகு தெருமுனைக் கூட்டம்!!

அநீதிக்கு எதிரான இந்தப்போர் எங்களோடு தொடங்கவும் இல்லை எங்கள் வாழ் நாளோடு முடியப்போவதுமில்லை என்று முழங்கி 23ம் வயதிலேயே தூக்கு மேடையேறிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளான பகத்சிங் , சுகதேவ், ராஜகுருவின் நினைவு நாளில் அந்தப்போரை தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தும் தெருமுனைக்கூட்டம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் சென்னை , எழும்பூர், டாக்டர். சந்தோஷ் நகரில் நடைபெற்றது.

இன்று மக்கள் வாழ்வாதார உரிமைகளுக்காகப் போராடினாலே இந்திய அரசின் டர்னியர் விமானங்கள் சுற்றுகின்றன தலைக்கு மேல்.  ஒரு உள் நாட்டுப்போரை தென் தமிழகத்தில் நடத்த அரசு முடிவு செய்துள்ள சூழலில் தமிழகத்தின் தெருக்கள் டாஸ்மாக்கால் நிரம்பி வழிகின்றன,   ஒரு புறம் சினிமா சீரழிவும், நுகர்வு வெறி கலாச்சாரமும் மக்களை குறிப்பாக வேகமும் துடிப்பும் மிக்க மாணவர்கள், இளைஞர்களை சீரழித்தும் மறு புறம் அவர்களை பொறுக்கியாக, ரவுடியாக , ஏன் எண்கவுண்டர் செய்யத் ‘தகுதியானவர்களாக’ மாற்றி இருக்கிறது அரசு. இந்த சூழலில் நாம் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவினை ஏன் நெஞ்சில் ஏந்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்த பு.மா.இ.மு மாநில அமைப்புக்குழு உறுப்பினர் தோழர். செ. சரவணன் “ வெள்ளைக்காரர்கள் நாட்டை அடிமையாக்கி வைத்த அந்த நேரத்திலே மக்கள் விடுதலைக்காக ஒரு விடியலை எதிர்பார்த்திருந்த போது , காந்தியின் கைராட்டை உழைக்கும் மக்களின் கழுத்தை நெறித்த போது, வெடிகுண்டாய் முழங்கியவர்கள் தான் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் அவர்களை மாணவர்கள் – இளைஞர்களிடம் கொண்டு சென்று இன்று அரசு நடத்தும் யுத்தத்திற்கு , அநீதிக்கு எதிரான போரை தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்பதையும், டாஸ்மாக் வியாபாரம் குறைந்து விட்டதை ஆராய நிபுணார் குழு அமைக்கும் தமிழக அரசின்  முடிவு தான், நடிகைகளின் அந்தரங்கம் தான் பத்திரிக்கையின் முதல் பக்கமாக வருகிறதே அன்றி இடிந்த கரையில்  மக்களின்தலைக்குமேல் போர் விமானங்கள் சுற்றி வருவதும் 144 தடை உத்திரவை துச்சமாய் மதித்து, பால் தண்ணீர் , மின்சாரம் என அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட போதும் அரசின் அடக்கு முறைக்கு பணியாத அவர்களின் வீரமும் எந்த ஊடகத்திலும் வருவதில்லை. ஆனால் அம்மக்களுக்கு எந்த ஓட்டுக்கட்சியும் வந்து நிற்கவில்லை எமது தோழர்கள் காடு கடல் வழியே சென்று ஆதரவளித்தார்கள் உயிரை பணயம் வைத்தபடி.  அம்மக்களுக்கு தோளோடு தோள் கொடுப்பதேபகத்சிங்கின் நினைவு நாளில் எடுக்கப்படும் உறுதியாக இருக்கும் ” என்று
கூறினார். அடுத்ததாக பேசிய மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னைக்கிளைச் செயலர் தோழர். மில்டன் “ நாட்டில் உள்ள இயற்கை வளங்கள் எல்லாம் பன்னாட்டு முதலாளிக்கு தாரைவார்க்கப்படுகின்ற இந்தச்சூழலில்தான் இடிந்த கரையில் மக்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். போபர்ஸ், ஸ்பெக்ட்ரம் தற்போது நிலக்கரி ஒதுக்கீட்டில் 10.7 லட்சம் கோடி ஊழல் என தனியார் மயத்திற்கு பின்னர் நாடே வேட்டைக்காடாக மாற்றப்பட்டதையும் அதற்கு எதிராக போராடகூடிய தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரையும் பகத்சிங்கை தூக்கில் ஏற்றிய அதே சட்டத்தின் அடக்குமுறையின் மூலம் நுகத்தடியில் நசுக்கப்படுவதையும் எதிர்த்து போராட வேண்டியதையும்,  தற்போது உள்ள
சட்டங்கள் கூட போதாது என்று புதிய சட்டங்கள் புதிய வடிவங்களில் வருவது எல்லாம் மக்களை கண்காணித்து ஒடுக்குவதற்கே. அதனால்தான் போராடுகின்றவர்களை ஒடுக்குவதற்கு பள்ளிகளில் கேமரா, கல்லூரிகளில் கண்காணிப்பு என்று தொடர்கின்றது. இதை மாற்ற பகத்சிங்கைப்போல இன்று நாம் போராடினால் மட்டுமே முடியும் இதைத்தான் உறுதி மொழியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.”

சிறப்புரை பேசிய பு.மா.இ.மு மாநில அமைப்பாளர் தோழர். த.கணேசன் “ ஜாலியன் வாலாபாக்கை கண்டு கொதித்தெழுந்து போரிட்ட பகத்சிங்கின் நினைவு நாளான இன்று நம் கண்முன்னே கூடங்குளத்தை இன்னொரு ஜாலியன் வாலாபாக்காய் மாற்ற அரசு முயலும் இந்த சூழலில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளை போல போராட வேண்டிய அவசியம் உள்ளது என்றும், இந்த நாட்டின் விதலையை புரட்சியை கனவு கண்ட அந்த வீரர்களில் லட்சியப்பாதையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும் தோழமை அமைப்புக்களும் இன்று சென்று கொண்டிருப்பதற்கு ஒரு உதாரணம் தான் இடிந்தகரையில் பல்லாயிரம் போலீசு வெறி நாய்களை மீறி காடு, கடல் வழியே முற்றுகையை மீறி அம்மக்களுக்கு நேரடியாக அளித்த ஆதரவு.
அம்மக்கள் அதிகபட்ச போராட்டமாக உண்ணாவிரதம் இருக்கும் போது அவர்களை ஒடுக்க 144 தடை உத்திரவு போட்டு பால் தண்ணீர் மின்சாரம் ஆகியவற்றை மறுத்ததால், பச்சைக்குழந்தைகளுக்கு பால் இன்றி  தண்ணீர் மட்டுமே தரக்கூடிய சூழல் உள்ளாது மேலும் அந்தப்பகுதியில் படிக்கும் கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கு செல்லமுடியவில்லை, +2 மாணவர்கள் நூற்றுக்காணோர் தேர்வுக்கு செல்ல முடியவில்லை என்பதையும் அந்தப்பகுதியில் என்ன நடக்கிறது என்பதை யாரும் அறிய முடியாத வகையில் பத்திரிக்கையாளர்கள் உட்பட அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சங்கரன் கோயில் இடைத்தேர்தலுக்காக அம்மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்த ஜெயா போராடுகின்ற மக்களை தனிமைப்படுத்தியும் கைது செய்ததன் மூலமும் போராட்டத்தை ஒடுக்க நினைத்தாலும் அதை முறியடிக்கும் வகையில் கைது செய்யப்பட்ட மக்களை சிறை வாசலில் சந்தித்து வரவேற்று முழக்கமிட்ட புரட்சிகர அமைப்புக்கள் தான் இன்று பகசிங்கைப்போல இந்த நாட்டிற்கே நம்பிக்கையளிக்கும் விடிவெள்ளியாக உள்ளதையும் நம்முடைய சொத்தான மின்சாரத்தை பன்னாட்டு முதலாளிகளின் கொள்ளைக்காக இந்த அரசு தாரைவார்ப்பதையும் அதனால் உழைக்கும் மக்கள் அன்றாடம் பாதிக்கப்பட்டு வேலையிழந்து நிற்கும் கொடுமைக்கு முடிவு கட்ட இந்த தனியார் மயத்திற்கே முடிவு கட்ட வேண்டும் என்றும் உரையாற்றினார் மேலும் கூடங்குளம் அணு உலை திறந்தால் மின்சாரம் நமக்கு கிடைக்கப்போவதில்லை, அது இந்திய அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தததின் விளைவு தான். அணு உலை மூலம் தடையற்ற மின்சாரம் வரும் என்று அனைத்து ஓட்டுப்பொறுக்கி கட்சியினர் சவடால் விடுகின்றனர். தடையற்ற மின்சாரம் எங்கே? ஆறு மாதம் கழித்து அவர்களின் சட்டயை பிடித்து தெருவில் இழுத்து வந்து கேட்க வேண்டும் . எத்தனையோ மாற்று வழியில் மின்சாரம் தயாரிக்க வாய்ப்பு இருந்தும் பன்னாட்டு முதலாளிகளின் லாபத்திற்காக மட்டுமே மக்களை
கொன்று அணு உலையை நிறுவ அரசு அரசு முயல்கிறது. அனைவருக்கும் தடையற்ற மின்சாரம் வேண்டும் எனில் அணு உலையை விரட்டி, நம்முடைய சொத்தான மின்சாரத்தை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு மாணவர்கள் இளைஞர்கள் பகத்சிங் காட்டிய பாதையிலே முன் சென்று அந்தப்போரை கொண்டு சென்று ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரை முன்னெடுக்க வேண்டும்” என்று தனது உரை நிறைவு செய்தார்.

இந்த கூட்டத்திற்கு பு.மா.இ.மு சென்னைக்கிளை செயற்குழு உறுப்பினர் தோழர். ஏழுமலை நன்றியுரை கூற கூட்டம் நிறைவு பெற்றது. சுமார் 300பேர் கலந்து கொண்ட இந்த தெருமுனை கூட்டத்தில் புமாஇமு தோழர்களின் கலை நிகழ்ச்சிகள் அனைவரை உணர்வூட்டும் வகையில் நடைபெற்றது. குறிப்பாக கட்டபொம்மன் மற்றும் தேசவிடுதலைப் போரடா ஆகிய பாடல்கள் அனைவரை உச்சரிக்க வைத்தன. மேலும் நிகழ்ச்சி வரவேற்பும், ஓவியக்காட்சியும் பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் வாரிசுகளாக களமிறங்க வேண்டிய அவசியத்தை உணர்த்தின.
இன்றைய சூழலில் இடிந்த கரையில் ஒரு உள் நாட்டுப்போரை நடத்தும் அரசுக்கு எதிராக பகத்சிங்காக, ராஜகுருவாக, சுகதேவாக இளைஞர்கள் மாணவர்கள் மாறவேண்டியதையும் ,அந்தப்போரை தொடர வேண்டிய அவசியத்தினை உணர்த்தும் வகையில் இந்த தெருமுனைக்கூட்டம் அமைந்தது.

மார்ச் 23, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங்,சுகதேவ்,ராஜகுரு நினைவு நாளில் உறுதியேற்போம்!

மார்ச் 23, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங்,சுகதேவ்,ராஜகுரு நினைவு நாளில் உறுதியேற்போம்!

அன்பார்ந்த மாணவர்களே- இளைஞர்களே!

மாணவர்கள் இளைஞர்களின் உண்மையான கதாநாயகர்களான பகத்சிங் ,சுகதேவ்,ராஜகுரு தூக்கிலிடப்பட்ட நாள்தான் மார்ச்-23,1931.

வெள்ளையர்களை அடித்து விரட்டி வென்றெடுக்க வேண்டிய விடுதலையை கெஞ்சிப்பெற வேண்டிய பிச்சையாக்கினார் காந்தி. ஆனால் போராடி விடுதலையை சாதிக்க வேண்டும் என்று வெகுண்டெழுந்த பகத்சிங்கும் அவரைச் சார்ந்த இளைஞர்களும் கம்யூனிச ஒளியில் அந்த காந்திய காரிருளை கிழித்து போராடங்களை முன்னெடுத்தனர். இந்தப் போராளிகளைத்தான் அன்று காந்தியும் காலனியாதிக்கவாதிகளும் தீவிரவாதிகள் என்று அவதூறு செய்தனர்.விடுதலைக்காகப் போராடிய மக்களை குற்றப் பரம்பரையினராக்கி கண்காணித்து கொடுமைபடுத்தியது ஆங்கிலேய ஏகாதிபத்தியம்.

அந்த காலனியாதிக்கம்தான் ஒழிந்துவிட்டதே அதற்கென்ன இப்பொழுது என்று கேட்கிறீர்களா? அது ஒழிந்துவிடவில்லை. மறுகாலனியாக்கம் என்ற மறு உருவத்தில் அக்கொடுமைகளையெல்லாம்  தீவிரப்படுத்திவருகிறது.

 நாட்டின் முன்னேற்றத்திற்காக என்ற பெயரில் திணிக்கப்பட்ட தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைகளின் விளைவாக கல்வி, மருத்துவம்,சுகாதாரம், தண்ணீர் ,மின்சாரம் என அனைத்தும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு வருகின்றன.’காசு இல்லையேல் கல்வி இல்லை,  படித்தாலும் வேலை இல்லை’ என்று மக்கள் தொகையில் சரிபாதியிரான மாணவர்-இளைஞர்களின் வாழ்க்கையை நாசமாக்கி வருகின்றன மத்திய மாநில அரசுகள்.

இவற்றை எல்லாம் எதிர்த்து நிற்கும் ஆற்றலும் நெஞ்சுரமும் கொண்டவர்கள் மாணவர்கள் இளைஞர்கள் துடிப்பும் போர்க்குணமும் நிறைந்த இவர்களுடைய போராடும் குணத்தை மழுங்கடித்து முடமாக்கத்தான் ஏகாதிபத்திய சீரழிவு நச்சுக் கலாச்சாரம் திணிக்கப்படுகின்றது. டாஸ்மாக், ஆபாச சீரழிவுகளை அள்ளித்தரும் சினிமா – தொலைக்காட்சிகள் , பைக், செல்போன் என புதுசு புதுசா  கடைவிரிக்கும் நுகர்வு வெறி கலாச்சாரம் இவை அனைத்தும் மாணவர்கள் இளைஞர்களின் சிந்தனைய சீரழித்து சமூக விரோதிகளாகவும் மாற்றிவருகின்றன.இதை தடுத்து நிறுத்த வக்கில்லாத ஆட்சியாளர்கள்தாம் அவர்கள் மீது ரவுடிகள் பொறூக்கிகள் என்று முத்திரை குத்துகிறார்கள்.

போதாக்குறைக்கு வங்கிக்கொள்ளையை முகாந்திரமாக்கிக்கொண்டு கல்லூரிமாணவர்களை போலீசை வைத்து கண்காணிப்பது, பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது என்று மாணவர்களை குற்றப்பரம்பரையினராக மாற்றத் துடிக்கின்றன மத்திய மாநில அரசுகள். இதன் மூலம் அரை குறை ஜனநாயக் உரிமைகளைப் பறித்து பச்சையான போலீசு ராஜ்ஜியத்திற்கு வழி ஏற்படுத்தப் படுகின்றது. மாணவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதை தடுப்பது என்ற நியாயத்தை உருவாக்கி கொண்டு ஒரு நிறுவனமாக யாரும் கேள்வி கேட்பாரின்றி அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகின்றது இந்த அரசு. இது அநியாயத்தை நியாயமாக காட்டும் அயோக்கியத்தனம். மாணவர்களை குற்றப் பரம்பரையினராக்கும் மறுகாலனியாக்கக் கொடூரம் இனியும் இந்த கொடுமைகளை சகித்துக்கொண்டு வாழ்வது அவமானம். ஏகாதிபத்திய எதிப்புப் போராளிகள் பகத்சிங்,சுகதேவ், ராஜகுரு வாரிசுகளாக களமிறங்குவோம். மாணவர்கள்,  இளைஞர்கள் மீதான அனைத்துவகை அடக்குமுறைகளுக்கும் முடிவு கட்ட மீண்டும் ஒரு விடுதலைப் போரை முன்னெடுப்போம். அதற்கு மாணவர்கள் இளைஞர்கள் அனைவரும் அமைப்பாக அணி திரள்வோம் !

தோழர் ஸ்டாலின் – உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம் !

தோழர் ஸ்டாலின் – அவர் உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம். ஐரோப்பாவைப் பிடித்தாட்டுகிறது ஒரு பூதம், கம்யூனிசம் என்னும் பூதம் என்றுகுறிப்பிட்டாரே மார்க்ஸ், உலக முதலாளி வர்க்கத்தைப் பொருத்தவரை, அந்த கம்யூனிச பூதத்தின் மனித உருவம் – ஸ்டாலின்.

டிச 21, தோழர் ஸ்டாலினின் 132 வது பிறந்த நாள்.

தோழர் ஸ்டாலின் – அவர் உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம்.

ஐரோப்பாவைப் பிடித்தாட்டுகிறது ஒரு பூதம், கம்யூனிசம் என்னும் பூதம் என்று கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையிலே குறிப்பிட்டாரே மார்க்ஸ்,

உலக முதலாளி வர்க்கத்தைப் பொருத்தவரை,
அந்த கம்யூனிச பூதத்தின் மனித உருவம் – ஸ்டாலின்.

ஏகாதிபத்திய மிருகங்களும், முதலாளித்துவக் கிருமிகளும் ஊடுறுவ முடியாத  கம்யூனிசத்தின் இரும்புக் கோட்டை

முதலாளித்துவ அறிவு ஜீவிகளுக்கு அரக்கன்,
உலகப் பாட்டாளி வர்க்கத்துக்குக் ‘காவல்தெய்வம்’

………………..

எதிரிகளிடம் வெறுப்பையும் மக்களிடம் பெருமிதத்தையும்
ஒரே நேரத்தில் தோற்றுவித்த ஒரு பெயர் உண்டென்றால்

அந்தப் பெயர் – ஸ்டாலின்.

………………..

பாட்டாளி வர்க்கத் தலைவர்களிலேயே அதிகம் தூற்றப்படுபவர் அவர்தான்.

அவரை வெல்ல முயற்சி செய்தார்கள்,
முடியாதால் கொல்ல முயற்சி செய்தார்கள்.

பேனைப் பெருமாளாக்கி அவரைத் தூற்றினார்கள்.

பொய்களை ஆதாரமாகக் கொண்டே அவருக்கு எதிராக
ஆயிரக்கணக்கான நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்கள்.

பிறகு அந்த நூல்களின் எண்ணிக்கையை ஆதாரமாகக் கொண்டே
அந்தப் பொய்களையெல்லாம் உண்மை என்று சாதித்தார்கள்.

அவர் மறைந்து ஆண்டுகள் பல கடந்த போதிலும்,
எதிரிகளின் வெறி இன்னும் அடங்கவில்லை.

………………..

வரலாற்றில் கொடிய மக்கள் விரோதிகளுக்கும்
வில்லன்களுக்கும் கூட சலுகை வழங்கி

அவர்களுடைய தவறுகளை அனுதாபத்துடன் பரிசீலிக்கும்
அறிவுஜீவிகளின் மூளைகள்,

ஸ்டாலின் என்ற சொல்லைக் கேட்டவுடன் மட்டும்
முறுக்கிக் கொண்டு வெறுப்பைக் கக்குகின்றன.

நரமாமிசம் தின்னும் காட்டுமிராண்டியைப் போல அவரைச் சித்தரிக்கின்றன.

………………..

மார்க்சியம் லெனினியம் மா சே துங் சிந்தனை அனைத்தையும் மெச்சுவதாகக் கூறிக்கொண்டே

கட்சிக்குள் வர மறுக்கும் அறிவாளிகள்,

தங்களை நசுக்கிப் பிழியும் எந்திரமாகக் கட்சியைக் கருதுபவர்கள்,

கட்டுப்பாடுக்கு அஞ்சுபவர்கள், ஜனநாயகம் என்ற பெயரில்

சாதாரண தொழிலாளிகளின் உத்தரவுக்கெல்லாம் நாம் கட்டுப்படவேண்டியிருக்குமே என்று அஞ்சுபவர்கள் –

இவர்கள் யாருக்கும் ஸ்டாலினைப் பிடிப்பதில்லை.

………………..

கம்யூனிஸ்டு முன்முயற்சி, கம்யூனிஸ்டு வேலைத்திறன், கம்யூனிஸ்டு கட்டுப்பாடு, கம்யூனிஸ்டு ஒழுக்கம், கம்யூனிஸ்டு தியாகம்

என்ற சொற்களுக்கான இலக்கணத்தையெல்லாம்

அவருடைய தலைமையின் கீழ்தான்

இலட்சக்கணக்கான ரசிய போல்ஷ்விக்குகள் உருவாக்கிக் காட்டினார்கள்.

………………..

அவருடைய தலைமையின் கீழ் சோசலிசத்தை
கட்டியெழுப்புவதற்காகக் குனிந்த ரசியா,

நிமிர்ந்தபோது இட்லரின் குண்டுகளை நெஞ்சில் வாங்கிக்கொண்டது.

ஐரோப்பாவும் அமெரிக்காவும் இரண்டு நூற்றாண்டுகள்
நடந்து எட்டிய முன்னேற்றத்தை,

இருபதே ஆண்டுகளில் பறந்து எட்டியது.

200 இலட்சம் ரசிய மக்களை இட்லரின் போர்வெறிக்குப் பலி கொடுத்து

உலக மக்களையே பாசிசத்திலிருந்து காப்பாற்றியது.

………………..

மனிதகுலத்தின் ஒப்புயர்வற்ற இந்த வரலாற்றுப் பெருமைகள் அனைத்துக்கும்

உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் ஒரு கம்யூனிஸ்டும்

இன்று நெஞ்சு நிமிர்த்தி உரிமை கொண்டாட முடிகிறதென்றால்,

அந்த கவுரவத்தை நமக்கு வழங்கியவர் தோழர் ஸ்டாலின்.

………………..

வரலாற்றில் மனித குலம் கண்டிராத உழைப்பு,

ஞானியர்களின் சிந்தனைக்கும் எட்டியிருக்க முடியாத அறம்,

கவிஞர்கள் கற்பனையாலும் தீண்ட முடியாத தியாகம்

இவையனைத்தையும் நம் கண்முன்னே நிதர்சனமாக்கியது சோசலிச ரசியா.

அந்த சோசலிச ரசியாவின் புதல்வனும் தந்தையும் – தோழர் ஸ்டாலின்.

அதனால்தான் அவர் கம்யூனிசத்தின் குறியீடு.

அதனால்தான் அவர் ஏகாதிபத்தியத்தின் குறியிலக்கு.

………………..

கம்யூனிசத்தை அது பிறந்த மண்ணிலேயே புதைத்து விட்டதாக களி வெறி கொண்டு பிதற்றிய முதலாளித்துவம்,

இதோ மரணப் படுக்கையில் கிடக்கிறது.

அதன் மலமும் மூத்திரமும் பரப்பும் வீச்சத்தால்
மனித சமூகமே மூச்சுத் திணறுகிறது.

இருப்பினும் சாக மறுக்கும் முதலாளித்துவம், நம்மைக் கொல்கிறது.

பட்டினிச்சாவுகள், தற்கொலைகள், கொலைகள், பயங்கரவாதத் தாக்குதல்கள், ஆக்கிரமிப்புகள், நரவேட்டைகள்

அனைத்தும் ஒரே காரணம் – முதலாளித்துவம்.

மரணப்படுக்கையில் கிடக்கும் முதலாளித்துவம்,

தன்னுடைய மரணத்தைத் தள்ளிப்போடுவதற்காகவே

மனிதகுலத்தை நசிவுக்கும் அழிவுக்கும் தள்ளும் முதலாளித்துவம்!

………………..

முதலாளித்துவம் வென்று விட்டதாகவும்,
கம்யூனிசத்தைக் கொன்றுவிட்டதாகவும்

செய்யப்பட்ட பிரகடனங்கள் பொய் என்று

நாம் நடைமுறையில் நிரூபிக்கும் வரை,

அதாவது முதலாளித்துவத்தை அதற்குரிய சவக்குழிக்குள் இறக்கி
உப்பை அள்ளிப் போடும் வரை,

கம்யூனிசம் செத்துவிட்டதாக

அதன் வாயிலிருந்து ஒரு முனகலாவது கேட்டுக் கொண்டுதான் இருக்கும்.

………………..

கம்யூனிசம் வெல்லும்வரை முதலாளித்துவம் கொல்லும்.

முதலாளித்துவக் லாபவெறியின் கோரதாண்டவத்தை,

பாசிசம் உலகமக்கள் மீது தொடுத்த ஆக்கிரமிப்புப் போரை,

கம்யூனிசத்தின் வெற்றியின் மூலம்தான் முறியடித்தார் தோழர் ஸ்டாலின்.

பாசிசம் தோற்றதனால் கம்யூனிசம் பிழைத்துவிடவில்லை.

மாறாக, கம்யூனிசம் வென்றதனால்தான் பாசிசம் தோற்றது.

அந்தக் கம்யூனிச வெற்றியின் சின்னம் தோழர் ஸ்டாலின்.

………………..

முதலாளித்துவத்தைக் கொன்று புதைத்த மண்ணில்,

தோழர் ஸ்டாலினின் புகழை ஒரு மலர்ச்செடியாய் நாம் நடுவோம்.

அதற்கு முன், அவர் நினைவு தரும் உத்வேகத்தால்

முதலாளித்துவத்தைக் கொன்று புதைப்போம்!

-மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.

“ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம்!

“ஸ்டாலின்”

கோடான கோடி உழைக்கும் மக்கள்
உவப்போடு உச்சரித்து உச்சரித்து
உழைக்கும் வர்க்கத்தின் உதடுகளாகவே மாறிவிட்ட ஒரு பெயர்!

முதலாளிவர்க்கமோ!
அந்தப்பெயரைச் சொன்னவுடனேயே சூடுபட்டது போல,
“அய்யோ ஸ்டாலின் என்று அலறுகிறது.
‘ஸ்டாலின்’ என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே
சுரண்டுபவர்களின் கூடாரத்திற்கு இரத்தம் சுண்டிப்போகிறது.

ஆம்! ஸ்டாலின் என்பது வெறும் பெயரல்ல!
அது வர்க்கப்போராட்டத்தின் ஒரு குறியீடு!

பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்திற்காக
போராடினார் என்ற ஒரே  காரணத்திற்காக!

எத்தனை அவதூறுகளை
முதலாளித்துவம் பரப்பியது
தோழர் ஸ்டாலினைப் பற்றி!
முதலாளித்துவத்தின் ஆவிகளாக
எத்தனை கூலி எழுத்தாளர்களின் கட்டுக்கதைகள்
தோழர் ஸ்டாலினைச் சுற்றி!

பாட்டாளி வர்க்கம் வீறுகொண்டு எழும் போதெல்லாம்-
முதலாளித்துவ ஆசிபெற்ற அறிவுஜீவிகள்,
மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதிகள்,
கம்யூனிச திரிபுவாதிகள்
கதறுகிறார்கள்;
“அய்யோ மீண்டும் ஸ்டாலினிஸ்டுகள்
மீண்டும் ஸ்டாலினிஸ்டுகள்!”

ஆம்!
மூட்டைப்பூச்சிகளால் எப்படி
சூரியனை ரசிக்க முடியும்?
முதலாளித்துவத்தால் எப்படி
ஸ்டாலினை சகிக்க முடியும்!

‘தோழர் ஸ்டாலின்
நமது வர்க்கத்துக்காக பேசியவர்
நமது வர்க்கத்துக்காக போராடியவர்
முக்கியமாக –
நமது வர்க்கத்தை நமக்கு உணர்த்துபவர்
அந்த அவசியத்தோடு
அரசியல் தேவையோடு
நாம் ஒவ்வொருவரும்
தோழர் ஸ்டாலினிடமிருந்து
பெற வேண்டிய வர்க்க உணர்வை
சுருக்கமாக…….
வர்க்கப்போராட்டத்திற்கு நெருக்கமாக
உங்களையும் இணைக்கிறது
இந்த ஸ்டாலின் சகாப்தம்!

வெளியீடு

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி

விலை

ரூ 75

கிடைக்குமிடம்:
கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை-600 002
போன்:044 – 2841 2367

தொடர்புடைய பதிவுகள்:

சோசலிச சமூகத்தில் ஒரு கட்சி ஆட்சிமுறை ஏன்? – தோழர் ஸ்டாலின் பதில்!

மார்க்சியத்தின் பெயரில் தியாகு போன்ற தமிழினவாதிகள் தொடர்ந்து கூறி வரும் ஒரு அவதூறு பிரச்சாரம் ”சோவியத் யூனியனின் ஒரு கட்சி ஆட்சிமுறை” என இருந்தது தவறு, அதுவும் அதன் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாயிற்று என்பது. மறுபுறம் சோசலிச எதிர்ப்பாளர்களான முதலாளித்துவ அறிவிஜீவிகளோ ”சோவியத் யூனியனில் ஒரு கட்சி ஆட்சிமுறை என்பது சோசலிசத்தின் அடக்குமுறைக்கு ஒரு உதாரணம் என பிரச்சாரம் செய்கின்றனர்.

ஆனால் ”சோசலிச சமூகத்தில் அரசு என்பது ”பாட்டாளி வர்க்க சர்வாதிகார” அரசாகத்தான் இருக்க முடியும் என்பது எப்படி மார்க்சிய அறிவியலோ, அதுபோல பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசில் ”ஒரு கட்சி ஆட்சிமுறை” தான் நீடிக்க முடியும் என்பதும் மார்க்சிய அறிவியல்.” என்பதை, தோழர் ஸ்டாலின் அவர்கள் அமெரிக்க தூதுக்குழுவிற்கு அளித்த பேட்டியில் நிறுவுகிறார்.

**************************************

தூதுக்குழு பிரதிநிதி:

சோவியத் யூனியனில் ஒரு கட்சியானது சட்டப்பூர்வ ஏகபோகத்தை அனுபவிப்பது குறித்து தங்கள் கருத்து என்ன?

தோழர் ஸ்டாலின்:

குலாக்குகள்,நேப்மென்கள், வீழ்ச்சிபெற்ற பழைய சுரண்டும் வர்க்கங்களின் எச்சங்கள் ஆகிய, மக்கள் தொகையின் இன்னொரு பிரிவைப் பொறுத்தமட்டிலும், அவர்கள் தேர்தல் உரிமைகளை இழந்திருப்பது போலவே, சொந்த அரசியல் அமைப்புக்களை வைத்துக் கொள்வதற்கான உரிமையையும் இழந்துள்ளனர். பூர்ஷீவாக்களிடமிருந்து பாட்டாளி வர்க்கமானது தொழிற்சாலைகள், ஆலைகள், வங்கிகள், இரயில்வேக்கள், நிலங்கள் மற்றும் சுரங்கங்கள்ளை மட்டும் கைப்பற்றவில்லை; அரசியல் அமைப்புக்கள்  வைத்துக் கொள்ளும் உரிமையையும் அவர்களிடமிருந்து பறித்துக் கொண்ட்து. ஏனெனில், பூர்ஷீவாக்களின் ஆட்சி மீட்கப்படுவதை பாட்டளி வர்க்கம் விரும்பவில்லை. சோவியத் யூனியனின் பாட்டாளிவர்க்கம், பூர்ஷீவாக்களிடமிருந்தும் நிலப்பிரபுகளிடமிருந்தும், தொழிற்சாலைகள், ஆலைகள், நிலம், இரயில்வேக்கள், வங்கிகள் மற்றும்  சுரங்கங்களை பறித்துக் கொண்டுள்ளது பற்றி தூதுக்குழு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்பது தெளிவு.

எனினும், பாட்டளி வர்க்கமானது இத்துடன் நின்று கொள்ளாமல் பூர்ஷீவாக்களை, அரசியல் உரிமைகளையும் இழக்குமாறு செய்த்து குறித்து தூதுக்குழு வியப்புறுகிறது என்று எனக்குத் தோன்றுகிறது. அது முற்றிலும் தர்க்க ரீதியானதல்ல, அல்லது இன்னும் சரியாகச் சொல்வதாயின் , அது முற்றிலும் தர்க்கத்திற்குப் புறம்பானது என்றே எனக்குப் படுகிறது. பூர்ஷீவாக்களிடம் பாட்டளி வர்க்கம் ஏன் பெருந்தன்மை காட்ட வேண்டும்?

மேற்கில் அதிகாரத்திலுள்ள பூர்ஷீவாக்கள் தொழிலாளி வர்க்கத்திடம் சிறிதளவு பெருந்தன்மையாவது காட்டுகின்றனரா? உண்மையான புரட்சிகர உழைக்கும் வர்க்க கட்சிகளை தலைமறைவாகும்படி செய்யவில்லையா? சோவியத் யூனியனின் பாட்டாளிவர்க்கம் மட்டும் தனது வர்க்க எதிரியிடம் ஏன் பெருந்தன்மை காட்டவேண்டும்? தர்க்கத்துடன் ஒருவர் பேச வேண்டும் என்று கருதுகிறேன். பூர்ஷீவாக்களுக்கு அரசியல் உரிமைகள் மீண்டும் தரப்பட வேண்டும் என்று கருதுவோர், மேலும் சென்று, பூர்ஷீவாக்களுக்கு தொழிற்சாலைகள்,ஆலைகள், இரயில்வேக்கள் மற்றும் வங்கிகளை மீட்டுத் தருவது குறித்தும், தர்க்கரீதியாக பிரச்சினை எழுப்புவர்.

தூதுக்குழு பிரதிநிதி:

கம்யூனிஸ்ட் கட்சி அல்லாத, தொழிலாளர் மற்றும் விவசாயிகளிடையே அபிப்பிராயம் எவ்வாறு சட்டரீதியாக வெளிப்பாடு கொள்கிறது என்பதையே நாங்கள் குறிப்பிடுகின்றோம். பெருந்திரளான உழைக்கும் வர்க்க அமைப்புகள், தொழிற்சங்கங்கள் போன்றவற்றில்  இவ்வெவ்வேறு அபிப்பிராயங்களும் வெளிப்படக் கூடும்.

தோழர் ஸ்டாலின்:

தற்போது, சோவியத் யூனியனில் தொழிலாளர் மற்றும் விவசாயிகளிடையே அபிப்பிராய மோதல் ஏதும் உண்டா? சந்தேகமின்றி இருக்கவே செய்கிறது. இலட்சக்கணக்கான தொழிலாளரும் விவசாயிகளும் எல்லா நடைமுறை பிரச்சனைகள் மற்றும் எல்லா விளக்கங்கள் குறித்தும் ஒரே மாதிரியாக சிந்திக்க வேண்டும் என்பது சாத்தியமற்றதாகும். அது ஒருபோதும் நிகழாது. முதலில், பொருளாதார நிலைபாடு குறித்தும், பல்வேறு பிரச்சனைகள் தொடர்பான அபிப்பிராயங்கள் குறித்தும், தொழிலாளருக்கும் விவசாயிகளுக்குமிடையே பெரிய வேறுபாடு உண்டு. இரண்டாவதாக, பயிற்சியில் வேறுபாடு, வயது மற்றும் மனோபாவத்தில் வேறுபாடு, நெடுநாளையத் தொழிலாளருக்கும் அண்மைக்காலத்தே கிராமப்புறத்திலிருந்து வந்து சேர்ந்துள்ள தொழிலாளருக்குமிடையேயான வேறுபாடு, தொழிலாளர் வர்க்கத்திற்குள்ளேயே சில அபிப்பிராய வேறுபாடு போன்றன உண்டு. இவையெல்லாம், தொழிலாளரிடையேயும் உழைக்கும் திரளான விவசாயிகளிடையேயும் அபிப்பிராய மோதலுக்கு இட்டுச் சென்று, தொழிற்சங்கங்கள், கூட்டுறவுகள், சோவியத்துகளுக்கான தேர்தல்கள் போன்றவை தொடர்பான கூட்டங்களில் சட்டரீதியான  வெளிப்பாடு பெறும்.

ஆனால், இப்போது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் நிலைமைகளின் கீழ் இருக்கும் அபிப்பிராய மோதலுக்கும், அக்டோபர் புரட்சிக்கு முன்பாக இருந்த அபிப்பிராய மோதலுக்குமிடையே ஒரு தீவிர வேறுபாடு உண்டு. கடந்தகாலத்தில், தொழிலாளர் மற்றும் விவசாயிகளிடயேயான அபிப்பிராய மோதலானது, பெரியதும், நிலப்பிரபுகள், ஜாராட்சி, பூர்ஷீவாக்கள் ஆகியோரை தூக்கி எறிவது மற்றும் பூர்ஷீவா சமூக அமைப்பை நொறுக்குவது குறித்த பிரச்சினைகளில் குவிந்திருந்த்து. இப்போது, பாட்டாளிவர்க்க சர்வாதிகார நிலைமைகளின் கீழாக, அபிப்பிராய மோதலானது சோவியத் அதிகாரத்தை தூக்கி எறிவது மற்றும் சோவியத் அமைப்பை நொறுக்கித் தள்ளுவது என்னும் பிரச்சனைகள் குறித்ததாக அல்லாமல், சோவியத் அமைப்புகளை மேம்படுத்துவது மற்றும் அவற்றின் செயற்பாட்டை மேம்படுத்துவது குறித்ததாக உள்ளது. ஒரு தீவிர வேறுபாடு இங்குள்ளது.

நிலவுகின்ற அமைப்பை புரட்சிகர வழியில் உடைத்து நொறுக்குவது குறித்த, கடந்த காலத்தின் அபிப்பிராய மோதலானது, தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளிடையே, ஏராளமான எதிரெதிர் கட்சிகள் தோன்றுதலுக்கான  தளமமைத்துக் கொடுத்தது என்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அக்கட்சிகள், போல்ஷ்விக்  கட்சி, மென்ஷ்விக் கட்சி, சோசலிசப் புரட்சிகர கட்சி.

இன்னொருபுறம், இப்போது, பாட்டளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ், நிலவுகின்ற சோவியது அமைப்பை உடைத்து நொறுக்குவதற்கான அல்லாமல் அதனை மேம்படுத்தி ஒன்று திரட்டுவதற்காக நிலவும் அபிப்பிராய மோதலானது, தொழிலாளர் மற்றும் விவசாயிகளிடையே ஏராளமான கட்சிகள் தோன்ற தளம் அமைத்துத் தருவதில்லை. என்பதைப் புரிந்து கொள்வதில் சிரம்மே ஏற்படாது.

 

ஆகவேதான், கம்யூனிஸ்ட் கட்சியான ஒரே கட்சி மட்டுமே, சட்டபூர்வமான கட்சி என்னும் ஏகபோகத்தை அனுபவிப்பதானது, தொழிலாளர் மற்றும் விவசாயிகளிடையே ஆட்சேபணையைக் கிளப்பாததுடன் , அவசியமானதாகவும் விருப்பத்துக்குரியதாகவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

நாட்டில் எங்களது கட்சி மட்டுமே சட்டபூர்வமான கட்சி என்னும் நிலையானது செயற்கையானதும் வேண்டுமென்றே உண்டாக்கப்பட்ட்துமான ஒன்றல்ல. அத்தகைய நிலையை நிர்வாக சூழ்ச்சித் திறங்கள் போன்றவற்றால் செயற்கையாக உருவாக்கிட இயலாது. எங்கள் கட்சியின் நிலை வாழ்விலிருந்து வளர்ந்ததாகும்; சோசலிச –புரட்சிகர கட்சி மற்றும் மென்ஸ்விக் கட்சிகளது அப்பட்டமான திவாலான நிலைமயினாலும் எங்கள் நாட்டில் நிலவுகின்ற நிலைமைகளால் அவை அக்கட்ட்த்திருந்து வெளியேறியதாலு வரலாற்று ரீதியில் வளர்ந்ததாகும்.

கடந்த காலத்தில் சோசலிச – புரட்சிகர மற்றும் மென்ஷ்விக் கட்சிகள் என்னவாக இருந்தன? பாட்டாளி வர்க்கத்திடையே பூர்ஷீவாக்களின் செல்வாக்கான சாதன்ங்களாக அவை இருந்தன. அக்டோபர் 1917-க்கு முன்பாக அக்கட்சிகளை எது வாழ்வைத்து, நீடிக்க வைத்திருந்தது? பூர்ஷீவா வர்க்கத்தின் இருப்பு; இறுதிப் பகுப்பாய்வில் , பூர்ஷீவா ஆட்சியின் இருப்பு. பூர்ஷீவாக்கள் தூக்கி எறியப்பட்டபோது, அக்கட்சிகளின் இருப்பிற்கான நியாயமும் மறைந்து போக வேண்டியது தான் என்பது தெளிவாகவில்லையா?

1917-க்கு பிறகு அக்கட்சிகளின் நிலை என்ன? முதலாளித்துவத்தை மீட்பதையும் பாட்டாளிவர்க்க ஆட்சியை தூக்கி எறிவதையும் வற்புறுத்துகின்ற கட்சிகளாயின. அவை தொழிலாளர் மற்றும் விவசாயிகளிடையே எல்லா நியாயங்களையும் செல்வாக்கையும் இழந்திட வேண்டியவைதான் என்பது தெளிவாகவில்லையா?

கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சோசலிச – புரட்சிகர மற்றும் மென்ஸ்விக் கட்சிகளுக்கும் இடையே உழைக்கும் வர்க்கத்தினரிடமான செல்வாக்கிற்கான மோதல் இன்று நேற்றுத் தொடங்கியதன்று. 1905- க்கு முன்பே பெருந்திரளான புரட்சிகர இயக்கத்தின் முதல் அறிகுறிகள் வெளிப்பட உடனேயே அது தொடங்கியது. 1903 லிருந்து அக்டோபர் 1917 வரையிலான காலகட்டமானது, எங்களது நாட்டின் தொழிலாளர் வர்க்கத்திற்குள்ளேயேயான கடுமையான அபிப்பிராய மோதலும், உழைக்கும் வர்க்கத்தினரிடம் செல்வாக்கு பெறுவதற்காக போச்ஷிவிக்குகளுக்கும், மென்ஸ்விக்குகள் மற்றும் சோசலிச – புரட்சிகரயாளர்களுக்குமிடையே போராட்டமும் கொண்ட்தாகும்.

அக்கால கட்டத்தில்  சோவியத் யூனியனின் தொழிலாளர் வர்க்கம் மூன்று புரட்சிகளை கடந்து வந்தது. அப்புரட்சிகளின் புடக்குவையில் அது இக்கட்சிகளை பரிசோதித்துப் பார்த்தது. பாட்டாளி வர்க்க புரட்சிக்கான இலட்சியத்திற்கு அவற்றின் தகுதியைப் பரிசீலித்தது, அவற்றின் புரட்சிகர குணநலனை பரிசோதித்தறிந்தது.

1917 இன் அக்டோபர் நாட்களுக்கு சற்று முன்னதாக, ஒட்டுமொத்தமான கடந்தகால புரட்சிகர போராட்ட வரலாறு தொடுத்திருந்த போது , தொழிலாளர் வர்க்கத்திற்குள்ளாக சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பல்வேறு கட்சிகளை வரலாறு, தராசில் நிறுத்தி பார்த்த போது, இறுதியில், ருஷ்யாவின் தொழிலாளார் வர்க்கமானது, தனது உறுதியான தேர்வினைச் செய்து, கம்யூனிஸ்ட் கட்சியை ஒரேயொரு பாட்டாளிவர்க்க கட்சியாக ஏற்றுக் கொண்டது.

தொழிலாளர் வர்க்கம் கம்யூனிஸ்ட் கட்சியைத் தேர்ந்தெடுத்ததை எவ்வாறு நாம் விளக்குவது? உதாரணமாக, பெட்ரோகிராட் சோவியத்தின் போல்ஷ்விக்குகள் ஏபரல் 1917-இல் மிகச் சிறுபான்மையினராக இருந்தது. உண்மையல்லவா? அப்போது, சோசலிச – புரட்சியாளர்களும் மென்ஸ்விக்குகளும் சோவியத்துக்களில் அதிகப்படியான பெரும்பான்மை பெற்றிருந்தனர் என்பது உண்மையல்லவா? அக்டோபர் நாட்களுக்குச் சற்று முன்னதாக, பூர்ஷீவாக்களுடன் அணி சேர்ந்திருந்த சோசலிச – புரட்சிகர மற்றும் மென்ஸ்விக் கட்சிகளின் கரங்களில், அரசாங்கத்தின் மொத்த இயக்கமும் நிர்பந்தப்படுத்தலின் எல்லா வழிமுறைகளும் இருந்தன என்பது உண்மையல்லவா?

கம்யூனிஸ்ட் கட்சியானது போர்நிறுத்தத்தையும் உடனடியான ஜனநாயக அமைதியையும் வலியுறுத்த சோசலிச புரட்சியாளர்களும் மென்ஷ்விக்குகளும் ”வெற்றி பெறும்வரை போர்” என்பதை, ஏகாதிபத்திய யுத்தத்தின் தொடர்ச்சியை வற்புறுத்தினர் என்பதுதான் விளக்கம்.

கம்யூனிஸ்ட் கட்சியானது, கெரன்ஸ்கி அரசாங்கத்தை தூக்கி எறிவதையும் பூர்ஷிவா ஆட்சியைத் தூக்கி எறிவதையும் தொழிற்சாலைகள், ஆலைகள், வங்கிகள் மற்றும் இரயில்வேக்களை தேசியமயப்படுத்தலையும் ஆதரித்து நிற்க, மென்ஷ்விக் மற்றும் சோசலிச புரட்சிகர கட்சிகளோ, கெரன்ஸ்கி அரசாங்கத்திற்கு ஆதரவாகப் போராடி தொழிற்சாலைகள், ஆலைகள், வங்கிகள் மற்றும் இரயில்வேக்களின் மீது பூர்ஷீவாக்களின் உரிமைக்காகப் பரிந்து பேசியது என்பதுதான் விளக்கம்.

கம்யூனிஸ்ட் கட்சியானது, விவசாயிகளின் நலன்களின் பொருட்டாக நிலப்பிரபுக்களின் நிலங்களை உடனடியாக கைப்பற்றுவதை ஆதரித்திட,  சோசலிச-புரட்சிகர மற்றும் மென்ஷ்விக் கட்சிகள் அரசியல் நிர்ணயசபை கூட்டப்படும்வரை ஒத்திப்போட்டன-அரசியல் நிர்ணயசபை கூட்டுவதையும் காலவரையின்றி ஒத்தி வைத்தனர் என்பதுதான் விளக்கம்.

எனவே, தொழிலாளரும் விவசாயிகளும், இறுதியில், கம்யூனிஸ்ட் கட்சியைத் தேர்ந்தெத்தது வியப்பிளிக்கக் கூடியுதா?

எனவே, சோசலிச-புரட்சிகர மற்றும் மென்ஷ்விக் கட்சிகள் அதலபாதாளத்திற்கு சென்றன என்பது வியப்பளிக்கக் கூடியதா?

இப்படியாகத்தான் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏக்போகம் கிடைத்தது; எனவேதான் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்திற்கு வந்தது.

அக்டோபர் 1917க்குப் பிந்தையதான உள்நாட்டுப் போர் மிகுந்த அடுத்த காலகட்டமானது, மென்ஷ்விக்  மற்றும் சோசலிச-புரட்சிகர கட்சிகளது இறுதி நாசத்தையும், போல்ஷ்விக் கட்சியின் இறுதி வெற்றியையும் கொண்ட கால கட்டமாகும். அக்காலகட்ட்த்தில், மென்ஷ்விக்குகளும் சோசலிச-புரட்சியாளர்களும் தாங்களே கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றிக்கு வழிவகை செய்தனர். அக்டோபர் புரட்சியின்போது நாசமுற்று மூழ்கிப்போன, மென்ஷ்விக் மற்றும் சோசலிச-புரட்சிகர கட்சிகளின் துண்டு துக்காணிகள், எதிர்ப்புரட்சிகர குலாக் கிளச்சிகளுடன் இணைந்து கொள்ளத் தொடங்கி, கோல்சக்குகள் மற்றும் டெனிகின்களுடன் அணி சேர்ந்து கொண்டு, நேச அணியின் சேவையில் நுழைந்து, தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் பார்வையில் முற்றிலிமாக நாணயம் இழந்தனர்.

 பூர்ஷீவா புரட்சியாளர்களிலிருந்து பூர்ஷீவா எதிர்ப்புரட்சியாளர்களாக மாறிவிட்ட சோசலிச-புரட்சியாளர்களும் மென்ஷ்விக்குகளும் புதிய சோவியத் ருஷ்யாவின் குரல்வளையை நெரிக்கும் நேச அணியின் முயறிசிகளுக்கு உதவ, போல்ஷ்விக் கட்சியோ, ஆற்றலும் புரட்சிகரமிக்கவர்களை அணிதிரட்டி, தொழிலாளரையும் விவசாயிகளையும், மேலும் மேலும், சோசலிச தாயகத்திற்காகப் போராடவும், நேச அணியை (Entente) எதிர்த்துப் போராடவும், எழுச்சி கொள்ளச் செய்த்து.

அக்காலகட்டத்தில் கம்யூனிஷஸ்டுகளின் வெற்றியானது சோசலிச-புரட்சியாளர்களையும் மென்ஷ்விக்குகளையும் முற்றிலும் இயல்பான வகையில் அப்பட்டமான தோல்விக்கு இட்டுச்செல்லக் கூடியதாகவே இருந்தது; உண்மையில் இட்டும் சென்றது. இவையனைத்தும் நிகழ்ந்த பின்னும், கம்யூனிஸ்ட் கட்சியானது தொழிலாளர் வர்க்கம் மற்றும் ஏழை விவசாயிகளது ஒரேயொரு கட்சியானது வியப்பளிக்க கூடியதா என்ன?

அவ்வாறே, கம்யினிஸ்ட் கட்சியே நாட்டின் ஒரேயொரு சட்டபூர்வ கட்சி என்னும் ஏகபோகம் உண்டானது.

stalin3பாட்டாளி வர்க்க சர்வாதிகார நிலைமைகள் கொண்ட தற்போதைய காலத்தில், தொழிலாளர் விவசாயிகளிடையேயான அபிப்பிராய மோதல் குறித்து குறிப்பிடுகிறீர்கள். அபிப்பிராய மோதல் இருக்கும், இருகிறது என ஏற்கனவே நான் கூறியிருகிறேன்; அது இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமில்லை. ஆனால், தற்போதைய நிலைமைகளில் தொழிலாளரிடையேயான அபிப்ராய மோதலானது, சோவியத் அமைப்பைத் தூக்கி எறிவது என்னும் அடிப்படைப் பிரச்சனை குறித்ததாக அல்லாமல் சோவியத்துகளை மேலும் முன்னேற்றுவது, சோவியத் உறுப்புக்கள் புரிந்துள்ள தவறுகளை நிவர்த்தி செய்வது, மற்றும் அதன் வழியாக, சோவியத் ஆட்சியை திடப்படுத்துவது என்னும் நடைமுறைப் பிரச்சனைகளைக் குறித்ததாகும். இத்தகைய அபிப்பிராய மோதலானது கம்யூனிஸ்ட் கட்சியினை வலுப்படுத்தவும் முழு நிறைவாக்கவும் மட்டுமே செய்யும் என்பது புரிந்துகொள்ளக் கூடியதே. இத்தகைய அபிப்பிராய மோதலானது, தொழிலாளர் வர்க்கம் மற்றும் உழைக்கும் விவசாயிகளிடையே இதர கட்சிகளின் உருவாக்கத்திற்கு தளமொன்று வழங்காது என்பது புரிந்து கொள்ளக் கூடியதே.

– முதலாவது அமெரிக்க தொழிலாளர் தூதுக்குழுவுக்கு

தோழர் ஸ்டாலின் அளித்த பேட்டியிலிருந்து

தொடர்புடைய பதிவுகள்:

வெற்றிகரமான 7வது பதிப்பில் “ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம்!

மாபெரும் சதி

நவம்பர் புரட்சியை நெஞ்சிலேந்துவோம்

”அக்டோபர்” – சோவியத் திரைப்படம்

“பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!

நவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல்

“நம்முடைய விழாக்கள்”

ஏகாதிபத்தியங்களுக்கு
பிரம்மாஸ்திரமாய்
விளங்கும் இயேசுவின்
கிறிஸ்துமசா
நமக்கான விழா?
இல்லை
ஏகாதிபத்தியம் விழுந்தே
தீரும்
அதன் சிதிலங்களில் கம்யூனிசம்
மிளிர்ந்து எழும்
அதற்கான பாட்டாளிகளின்
ஆயுதமே மார்க்ஸியம்
என்று சூளுரைத்த
மாமேதை மார்க்சின்
பிறந்தநாளே நம்முடைய விழா..!

பெற்ற தகப்பனை
கணவனாய் கொண்டு
படுக்கையை பகிர்ந்து
கொண்ட சரஸ்வதியை
கல்வி கடவுளாய்
உயர்த்தும் சரஸ்வதி
பூஜையா நமக்கான விழா?
இல்லை
அறிவு கூர்மையிலும்
பண்பின் கருணையிலும்
தன் வாழ்நாள் தியாகத்தாலும்
படிப்பவர் மனதில்
தாய்மையின் பாடங்களாய்
பதிந்துபோகும்
ஜென்னிமார்க்சின் பிறந்தநாளே
நம்முடைய விழா..!

காட்டை கழனியாக்கி
வியர்வை துளிகளை
நெற்கதிர்களாக்கி
உலகின் பசியாற்றிய
உழுபவனை,
எருதுகளோடு எருதுகளாய்
ஏர்முனையில் பூட்டி
ஏழ்மையிலும், துயரத்தாலும்
அவனை வாட்டி
அவன் ஈட்டிய அனைத்தையும்
தனதாக்கி கொண்ட
நிலப்பிரபுக்களின்
பொங்கல் விழாவா
நமக்கான விழா?
இல்லை
உழுபவனை அடித்து
தன் தொந்தியை பெருக்கிய
நிலப்பிரபுக்களை
ஈவிரக்கம் பாராமல்
அழித்தொழித்த
ரஷ்யாவின் நவம்பர் புரட்சியே
நம்முடைய விழா..!

ஆபாசத்திலும்
அழுக்கு உருண்டையிலும்
உயிர் பெற்றதாய் விளங்கும்
பானை வயிறு
பிள்ளையாரின் விநாயகர்
சதுர்த்தியா நமக்கான விழா?
இல்லை
மனிதநேயத்தாலும்
மேதாவிலாசத்தாலும்
நம் மனங்களை
கொள்ளை கொண்ட
மாமேதை
மாவோவின் பிறந்தநாளே
நம்முடைய விழா!

சி.பி.எம் என்னும்
பூணுலிஸ்ட்களுக்கு
அஹிம்சையை போதித்த
யானை காது காந்தியின்
காந்தி ஜெயந்தியா
நமக்கான விழா?
இல்லை
காந்தியின் துரோகமும்
வெள்ளையரின் கோபமும்
23 வயது இளைஞனின்
கழுத்தை
தூக்குகயிறால் முறிக்க,
உயிர் இழந்த அவ்விளைஞன்
தன் ஒப்பற்ற தியாகத்தால்
இந்திய வரலாற்றில்
பகத்சிங்காய் எழுந்து நின்றானே
அம்மாவிரனின்
பிறந்தநாளே
நம்முடைய விழா!

நயன்தாரா, நமீதாவின்
குலுக்கல் ஆட்டம்
பில்லாவை இரவு
முழுக்க கண்விழித்து
பார்க்கும்
சிவராத்தியா நமக்கான விழா?
இல்லை
பயங்கரவாத அமெரிக்காவின்
ஆக்கிரமிப்புக்கு பாடை
கட்டிய வியட்நாமிய
போராளிகளின்
போர்கால இரவுகளே
நம்முடைய விழா!

எம் பாட்டன் நரகாசூரனின்
வீரத்தை கண்டஞ்சி
நடுங்கிய
பார்ப்பன பரதேசிகள்
கோழைத்தனத்தால்
செடிமறைவில் நின்று
அம்மெய்தி வீழ்த்திய
தீபாவளி நாளா
நமக்கான விழா?
இல்லை
இரண்டாயிரமாண்டு
கால பார்ப்பன பண்பாட்டு
படையெடுப்பிற் கெதிராய்
அரைநூற்றாண்டு கால
சுயமரியாதை யுத்தம் நடத்திய
பெரியாரின் பிறந்தநாளே
நம்முடைய விழா..!

வெள்ளியில் வீழ்ந்து
ஞாயிரின் உயிர்
பெற்றதாய் பொய்யுரைக்கும்
இயேசுவின்
மூன்றாம் நாள்
உயிர்த்தெழுதலான புனித
வெள்ளியா நமக்கான விழா?
இல்லை
50 களில் சோவியத்திலும்,
70 ன் இறுதியில் சீனத்திலும்
துரோகத்தால்
வீழ்த்தப்பட்டு
இன்று இமயத்தின் சிகரத்தில்
கத்திமுனையில் கருக்கொண்டிருக்கும்
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே
அதன் பிறப்பே
நம்முடைய விழா..!

பசியால் வாரங்களை
கடந்து, பிரியாணியின்
ருசிய\யால் வயிறு முட்ட
உண்டு
மந்தநிலையில் மதிமயங்கி
கிடக்கும் ரம்சான் பண்டிகையா
நமக்கான விழா?
இல்லை
ஈராக் மண்ணை ஆக்ரமித்தற்க்காக
வெள்ளை மாளிகையின்
வெள்ளை பன்றியை
செருப்பால் அடித்து
அமெரிக்காவின் காலனி
ஆதிக்கத்திற்கு
தன் காலனியால்
பதிலடி தந்தானே
மாவீரன்
முண்டாசர் அல்ஜெய்தி
அவ்விரனின் தியாகம்
வெளிப்பட்ட நாளே
நம்முடைய விழா..!

புதிய ஜனநாயக புரட்சி
நடந்தேறி விடுமோ
யென்றஞ்சி
வெள்ளை ஏகாதிபத்தியம்
இந்திய நிலப்பிரபுத்துவத்துடன்
செய்து கொண்ட
துரோக ஒப்பந்தமான
ஆகஸ்ட் 15ன்
போலி சுதந்திரமா
நமக்கான விழா?
இல்லை
ஏகாதிபத்தியத்தையும்
அதன் அல்லக்கை
தரகு முதலாளியத்தையும் அதன்
கூட்டாளி நிலப்பிரபுத்துவத்தையும்
பூண்டோடு ஒழிக்கும்
புதிய ஜனநாயக புரட்சியின்
பிறப்பே
நம்முடைய விழா..!

– நக்சல்பாரியன்