• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 214,847 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை கொல்லைப்புறமாக நுழைக்க மன்மோகன் அரசு சதி!

தீவிர நிதிநெருக்கடியில் சிக்கி தவிக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் கல்வி சந்தையை இந்தியாவில் கடைவிரிப்பதற்கு 2010ல்  16 சட்டமுன்வரைவுகளை மத்திய அரசு கொண்டு வந்தது. தற்போது நமது நாட்டில் மீதமிருக்கும் அரசு கல்லூரிகளையும் ஒழித்துவிட்டு முழுக்க  முழுக்க பணம் உள்ளவன் மட்டுமே கல்வி கற்க முடியும் என்பது உள்ளிட்ட பல ஆபத்துக்கள் இந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்களால் வரப்போகிறது என்பதே நிதர்சனம்.

இதில் தற்போது வந்துள்ள செய்தி என்னவென்றால்

 பல்வேறு காரணங்களால் சட்டமுன்வரைவுகள் நிறைவேற்றுவது தள்ளிப்போவதால் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் கொள்ளையடிப்பது தாமதப்படுகிறது. இதற்காக ஜூலையில் நடைபெறவிருந்த பல்கலைக்கழக மானியக்கூட்டத்தை உடனடியாக கூட்டவும் அதில், ஏற்கனவே இருக்கும் சட்டங்கள் மூலம் எப்படி வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை கொண்டுவர முடியும்’ என ஆலோசிக்கவும் உள்ளது மத்திய அரசு.

நாட்டில் விலைவாசி என்பது நாள்தோறும் விண்ணைத்தொடும் அளவுக்கு உயர்ந்து வருகிறது, லட்சக்கணக்கான விவசாயிகள் தினந்தோறும் தற்கொலை செய்து கொள்கிறார்கள், ஊட்டசத்து இல்லாமல் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என மக்களை பாதிக்கும் ஆயிரக்கணக்கான பிரச்சனைகளில் இந்த நாடு சிக்கி தவித்துக்கொண்டு இருக்கும்போது அதற்கெல்லாம், மெளனம் ஒன்றைத்தவிர நமக்கு எதையும் தராத இந்த அரசு பன்னாட்டு முதலாளிகளின் இலாபவேட்டைக்காக மட்டும் எப்படி பம்பரமாக வேலை செய்யும் என்பதற்கு இந்த செய்தியே சாட்சி.

கூடங்குளம் அணு உலை முதல் வால்மார்ட், வெளிநாட்டு பல்கலைக்கழகம் வரை அனைத்தும் நமக்கு சொல்லும் செய்தி இந்த ஒன்றுதான். இந்த(திய)  அரசு என்பது பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகளின் நலன்களுக்காக மட்டுமே வேலை செய்ய ஏற்படுத்தப்பட்டது என்பதுதான் அது.

இதில் கவனிக்கவேண்டிய மற்றொன்று, வேறு ஊடகங்களில் வெளிவராத இந்த செய்தி ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதியின் தொலைக்காட்சியிலேயே வந்துள்ளது என்பது. பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் பெட்ரோலே என கண்டுபிடித்து ஆர்ப்பாட்டம் செய்தது போல அவருடைய கூட்டணி அரசின் நாசகார கொள்கைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல நம்ப சொல்கிறார் கருணாநிதி. குஜராத் படுகொலையின் போது பாஜகாவுடன் கைகோர்த்துக்கொண்டே இன்றும் மதவாதம் குறித்து எச்சரிக்கும் குள்ளநரியிடமிருந்து வேறு எதை எதிர்ப்பார்க்க முடியும்.

தொடர்புடைய பதிவுகள்:

கருத்துப்படம்: MBBS Rs 40,00,000 only ENG Rs 20,00,000 only!

வாங்கையா வாங்க! அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு பாக்கு வைத்து அழைக்கும் கபில்சிபில் மாமா!

வாஷிங்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய, அமெரிக்க கல்வி வாய்ப்புகள் என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமைச்சர் கபில் சிபல் பேசியதாவது: வாஷிங்டனில் நடைபெற்று வரும் இந்திய, அமெரிக்க கல்வி உச்சி மாநாட்டில் பங்கேற்பதில் இந்தியா பெருமை அடைகிறது. அமெரிக்காவைப் போலவே இந்தியாவிலும் கல்வித்துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவிலிருந்து உயர்கல்விக்காக மாணவர்கள் அதிக அளவில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கின்றனர்.

இந்திய மாணவர்களுக்கு கல்விச் சேவையை அளிக்கும் விதமாக அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்களது கிளைகளைத் துவங்க முன்வரவேண்டும். இதற்குத் தேவையான வசதிகளை செய்து தர இந்தியா தயாராக உள்ளது.

இந்தியாவில் முதலீடு செய்வது அமெரிக்க பல்கலைக்கழங்களுக்கு லாபகரமாக அமையும்.

இப்போது அமெரிக்காவிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் இதுபோன்ற தரமான கல்வியைப் பெறும் எண்ணத்தில் இந்தியாவில் 20 கோடி மாணவர்கள் உள்ளனர். எனவே 20 கோடி மாணவர்கள் அமெரிக்கா வருவதை விட, அமெரிக்க பல்கலைக்கழகங்கள் அங்கு வருவதே சரியாக இருக்கும்.

இப்போது 1.6 கோடி மாணவ, மாணவிகள் கல்லூரிகள், பல்கலைக்கழங்களுக்கு கல்வி பயில செல்கின்றனர். அடுத்த 10 ஆண்டுகளில் இது 4.5 கோடியாக உயரும்.

எனவே அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 1,000 பல்கலைக்கழகங்களையும், 55 ஆயிரம் கல்லூரிகளையும் அமைக்க வேண்டிய தேவை உள்ளது. ஆனால் இந்தியாவில் 1,000 பல்கலைக்கழங்களை அமைப்பது என்பது முடியாத காரியம். எனவே தனியார் துறைகளின்மூலம் கல்விச் சேவையை அளிக்க முடிவு செய்துள்ளது என்றார் அவர்.

கல்வி சந்தையில் இப்ப இந்தியாவில் லாபம் அதிகம் வரும் என வெளிப்படையாகவே அழைக்கிறார் கபில்சிபில்.  இது குறித்து வினவில் வந்த விரிவான கட்டுரை இதோ:

வெளிநாட்டு பல்கலைக்கழக முதலாளிகள் வரப்போகின்றனர்! உஷார்!!