• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 217,198 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

வாங்கையா வாங்க! அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு பாக்கு வைத்து அழைக்கும் கபில்சிபில் மாமா!

வாஷிங்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய, அமெரிக்க கல்வி வாய்ப்புகள் என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமைச்சர் கபில் சிபல் பேசியதாவது: வாஷிங்டனில் நடைபெற்று வரும் இந்திய, அமெரிக்க கல்வி உச்சி மாநாட்டில் பங்கேற்பதில் இந்தியா பெருமை அடைகிறது. அமெரிக்காவைப் போலவே இந்தியாவிலும் கல்வித்துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவிலிருந்து உயர்கல்விக்காக மாணவர்கள் அதிக அளவில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கின்றனர்.

இந்திய மாணவர்களுக்கு கல்விச் சேவையை அளிக்கும் விதமாக அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்களது கிளைகளைத் துவங்க முன்வரவேண்டும். இதற்குத் தேவையான வசதிகளை செய்து தர இந்தியா தயாராக உள்ளது.

இந்தியாவில் முதலீடு செய்வது அமெரிக்க பல்கலைக்கழங்களுக்கு லாபகரமாக அமையும்.

இப்போது அமெரிக்காவிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் இதுபோன்ற தரமான கல்வியைப் பெறும் எண்ணத்தில் இந்தியாவில் 20 கோடி மாணவர்கள் உள்ளனர். எனவே 20 கோடி மாணவர்கள் அமெரிக்கா வருவதை விட, அமெரிக்க பல்கலைக்கழகங்கள் அங்கு வருவதே சரியாக இருக்கும்.

இப்போது 1.6 கோடி மாணவ, மாணவிகள் கல்லூரிகள், பல்கலைக்கழங்களுக்கு கல்வி பயில செல்கின்றனர். அடுத்த 10 ஆண்டுகளில் இது 4.5 கோடியாக உயரும்.

எனவே அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 1,000 பல்கலைக்கழகங்களையும், 55 ஆயிரம் கல்லூரிகளையும் அமைக்க வேண்டிய தேவை உள்ளது. ஆனால் இந்தியாவில் 1,000 பல்கலைக்கழங்களை அமைப்பது என்பது முடியாத காரியம். எனவே தனியார் துறைகளின்மூலம் கல்விச் சேவையை அளிக்க முடிவு செய்துள்ளது என்றார் அவர்.

கல்வி சந்தையில் இப்ப இந்தியாவில் லாபம் அதிகம் வரும் என வெளிப்படையாகவே அழைக்கிறார் கபில்சிபில்.  இது குறித்து வினவில் வந்த விரிவான கட்டுரை இதோ:

வெளிநாட்டு பல்கலைக்கழக முதலாளிகள் வரப்போகின்றனர்! உஷார்!!

அமைச்சரா, ரவுடியா? ஜகத்ரட்சகனின் பாரத் பல்கலை மாணவர் போராட்டம்! i

திடீர் பணக்காரன், ரவுடி ஜகத்ரட்சகனின் பாரத் பல்கலைக்கழகத்தில்  உரிமைக்காக மாணவர்கள் போராட்டம்!

மொழிவாரி மாணவர்களின் பிரச்சினையாக  மாற்றி, அடியாட்களை வைத்து மாணவர்களை அடக்கும் பல்கலை நிர்வாகம் !

– ஒரு நேரடி ரிப்போர்ட்

 சமீப காலமாக  பாரத் பல்கலைக் கழகத்தில் நடந்து வரும் பல பிரச்சினைகளால் அங்கு வேலை செய்யும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதன் விளைவே மாணவர்களின் இப்போராட்டம். ரவுடிகளும், பொறுக்கிகளும் கல்வி நிறுவனங்களை நடத்தினால் என்னவாகும் என்பதற்கு இப்பொழுது இப்பல்கலையில் நடந்து வரும் நிகழ்வுகளே ஒரு சிறந்த உதாரணம்.

பெரும்பாலும் இது போன்ற தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்கள் தங்களுக்கென்று சிலஅல்லக்கைகளையும், ஆட்காட்டிகளையும் வைத்துக்கொண்டு ஆவர்த்தனம் செய்வர். ஆனால் இங்கோ அல்லக்கைகளும் ஆட்காட்டிகளும் மட்டுமே சேர்ந்து ஒரு பல்கலைக்கழகத்தை  நடத்தி வருகின்றனர் என்பதுதான் உண்மை. வளாகத்தில் எங்கு எந்த மூலைக்குச் சென்றாலும் இந்த /ஆ க்களைப் பார்க்கலாம். இப்பல்கலையில் உள்ள அனைத்து உயர் பதவிகளிலும் தங்கள் உறவினர்களை வைத்தே பல்கலையை நடத்தி வருகின்றார் கொள்ளையனான ஜகத்ரட்சகன்.

பல்கலைக்கழகம் என்ற பெயரில் இயங்கி வந்தாலும் மிகச்சிறிய அளவிலான இட வசதியை மட்டுமே கொண்டுள்ள இங்கு உள்கட்டமைப்பு என்பது பெயரளவிலேயே இருப்பது அங்குள்ள அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள்  மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் என்று ஏறத்தாழ பத்தாயிரம் பேர் இருக்கும் அங்கு குறைந்தபட்சம் தாகத்தை போக்குவதற்குத் தேவையான தண்ணீர் வசதிகூட இல்லை என்பது கொடுமையின் உச்சகட்டம்.

பல துறைகளைக் கொண்டு இயங்கி வரும் பல்கலைக்கழகம் என்று இவர்களின் வலைத்தளத்தில்சொல்லப்பட்டாலும் இவற்றில் பல பெயரளவில் மட்டுமே உள்ளது. மேலும் அவையாவும் மிகக் குறைவான கட்டிடங்களிலேயே அடங்கிவிடுகிறது. அங்குள்ள அனைத்து உபகரணங்களும் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக வாங்கப்பட்டு இயங்காத, அரதப் பழசான நிலையிலேயே உள்ளது. புதிய துறைகள் தொடங்கப்பட்டாலும் அதற்கான உபகரணங்கள் எதுவும் இல்லாமல் மாணவர்களை வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவும் செய்முறைப்பயிற்சி இல்லாமல் அவர்களை வேலையில்லாப் பட்டதாரிகளாக்கும் நிலையே இங்கு நீடித்து வருகிறது. இதன்முலம் ஒட்டுமொத்தமாக இப்பல்கலையில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம்  சூனியமாகிப் போய்விடுகிறது. இம்மாணவர்கள் நேர்முகத்தேர்வுக்குச் சென்றால்  பாரத் பல்கலை என்று பார்த்த மாத்திரத்தில் வெளியேற்றப்படும் அவலநிலையும் உள்ளது.

இந்நிலையில்  தங்களுக்கு பள்ளி வளாகத்திலேயே இந்த ஆண்டு முதல் நேர்முகத்தேர்வு வேண்டும் என்று மாணவர்கள் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதுவரை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் முகநூலின்(ஃபேஸ்புக்) மூலம் மாணவர்களைத் திரட்டி போராட்டம் நடத்த மாணவர்கள் முடிவு செய்தனர். திட்டமிட்ட படி நான்காம் ஆண்டு மாணவர்கள் 27.9.2011 அன்று வகுப்பிற்கு செல்லாமல் பல்கலையின் விளையாட்டுத் திடலில் உள்ளிருப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.சமாதானம் பேச வந்த டீன் (Dean) காசி விஸ்வலிங்கம் நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு டிகிரி தான் தரமுடியுமே தவிர வேலை வாங்கித்தர முடியாது என்று திமிர்த்தனமாக பதில் அளித்துள்ளார். இதனால் மேலும் கோபமடைந்த மாணவர்கள் தங்களுக்கு முடிவு தெரியும் வரை போராட்டம் ஒயாது என்று முடிவு செய்து போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கீழ் மட்டத்தில் உள்ள பல்கலையின்  நிர்வாகத்தினர் சமாதானப்படுத்தியும் சமாதானமாகாத நிலையில் பல்கலையின் தாளாளரும் ஜகத்தின் மகனுமான சந்தீப் ஆனந்த் வந்தால் மட்டும் தான் பேசுவோம் என்று மாணவர்கள் கறாராகக் கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த பல்கலையின் தேர்வு இயக்குனரும் பொறுக்கியுமான PJK என்கிற PremJeyaKumar நிர்வாகத்திற்குச் சாதகமான சில தமிழ் மாணவர்களை வைத்து போராட்டத்தை அடக்க முற்பட்டிருக்கிறான், மேலும் அதிகமாக வடமாநிலத்திலிருந்து வந்து படிக்கும் மாணவர்களை தமிழ் மாணவர்கள் மற்றும் வெளியிலிருந்து வந்த ரவுடிகளையும் வைத்து அடிக்க வைத்திருக்கிறார். இதில் வட மாநிலத்து மாணவர்கள் பலர் ரத்தம் சொட்ட சொட்ட அடிபட பதிலுக்கு அவர்களும் அடித்துள்ளனர். சரியாக இதை எதிர்பார்த்துக் காத்திருந்த  ரவுடி PJK இப்பிரச்சினையை தமிழ் மற்றும் வட இந்திய மாணவர்களுக்கான பிரச்சினையாக மாற்றி போலிசுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். பொதுவிலும் பிரச்சினை அவ்வாறாகவே சென்றுள்ளது / மடைமாற்றப்பட்டுள்ளது.

இது போன்ற கருங்காலித்தனத்தை நிர்வாகத்தின் சொந்தக்காரனும் ஆட்காட்டியுமான அடையார் செந்திலும் செய்துள்ளார். ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் தங்களுடைய அதிகார பலத்தினாலும்  அடாவடித்தனத்தினாலும் இப்பரச்சினையை மொழிகளுக்கிடையேயான பிரச்சினையாக மாற்றியுள்ளது நிர்வாகம். இதற்கிடையில் எட்டு மணியானபோதும் மாணவர்கள் அனைவரும் பல்கலை வளாகத்திலேயே அடைக்கப்படிருந்தனர். அதற்குப் பிறகு வெளியே வந்த மாணவர்கள் அனைவரும் இரவு  பத்து மணியளவில் கல்லூரியில் இருந்து தாம்பரத்தில் உள்ள கேம்ப் ரோடு வரை அணிவகுத்துச் சென்றிருக்கின்றனர். சாயங்காலத்திலிருந்து நூற்றுக்கணக்கான போலிசும் அங்கு குவிக்கப்பட்டிருக்கிறது. முடிவு தெரியும் வரை மாணவர்களும் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு இப்பல்கலையின் ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரி பல்கலை அலுவலகத்தின் வாயில் முன்பு நின்ற போது அது  தவறு என்றும், கை நீட்டி சம்பளம் வாங்குகிற நன்றி விசுவாசம் கூட இல்லையா என ஒருமையில் சந்தீப் ஆனந்த் திட்டியதும் யாராலும் மறக்க முடியாத ஒன்றாகும். சுய மரியாதை, தன்மானம் உள்ள எவராலும் இதைக் கேட்டு அமைதியாக இருக்க முடியாதாயினும் தங்களின் வாழ்நிலையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு உள்ளுக்குள் புழுங்கியும், வாய் மூடி மவுனிகளாகவும் இருக்கின்றனர். அற்ப சம்பளத்திற்குக் கூட வேலை செய்யத் தயாராக, படித்த வேலையில்லாப் பட்டதாரிகள் அதிகமிருக்கிறார்கள் என்பதையே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் இவர்கள், இதை வைத்தே அனைவரின் வாயையும் மூடிவிடுகிரார்கள்.

மத்திய அரசாலும் பல்கலைக் கழக மானியக் குழுவினாலும் பல்கலைக்கழகத்திற்கான தகுதியை இழந்துவிட்ட இப்பல்கலைக்கழகத்தின் சமீப கால அடாவடித்தனங்கள், மாநிலத்திலும் மத்தியிலும் அவர்களுக்கிருக்கிற அரசியல் ரீதியான செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு இவர்கள் போடும் ஆட்டம் போன்றவை அளவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.மாணவர்களின் இப்போராட்டம் வெல்ல ஆசிரியர்களும் சேர்ந்து பங்கு கொண்டால் போராட்டம் மேலும் வலுவடையும். போராடும் மாணவர்கள் வெற்றபெற நமது ஆதரவை தெரிவிப்போம்.

முதல் பதிவு: வினவு

அரசு, தனியார் பள்ளிகளில் புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்கள் பரிதவிப்பு

திருத்தணி: அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படாததால் மாணவ, மாணவிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.÷கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் கடந்த ஜூன் 15-ம் தேதி திறக்கப்பட்டது. பள்ளிகள் திறந்து 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. ÷திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரையில் பிளஸ் 2 புத்தகங்கள் தாவரவியல், வணிகவியல், பொருளியல், வரலாறு, அதேபோல் பிளஸ் 1 மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட 4 ஆயிரம் புத்தகங்கள், மாணவர்களுக்கு வழங்க வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

÷தமிழக அரசு, சென்ற ஆண்டு 1 மற்றும் 6 ம் வகுப்புகளுக்கு சமச்சீர் பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. நடப்பு கல்வி ஆண்டில் 10-ம் வகுப்புவரை சமச்சீர் பாடத்திட்டத்தை அமல்படுத்தப்படும் என அறிவித்தது.

÷இந்நிலையில் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, சமச்சீர் பாடத்திட்டத்தை நிறுத்தி வைப்பதாகவும், இந்தாண்டு பழைய பாடத்திட்டமே தொடரும் என அறிவித்தார்.

÷இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சமச்சீர் பாடத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஆகஸ்ட் 9-ம் தேதி தீர்ப்பு கூறியது.

÷அதையேற்ற தமிழக அரசு, ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக சமச்சீர் பாடப் புத்தகம் வழங்கப்படும் என அறிவித்தது.

÷ஆனால் முழுமையான அளவுக்கு புத்தகங்கள் இல்லாததால் ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் இரண்டு அல்லது மூன்று புத்தகங்கள் மட்டும் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

÷ஆனால் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சமச்சீர் கல்வி பாடபுத்தகங்கள் இன்னும் புத்தகங்கள் வழங்கப்படவில்லை.

÷அதேபோல் ஒருசில தனியார் பள்ளிகளிலும் இன்னும் சமச்சீர் கல்வி புத்தகங்கள் வழங்கப்படவில்லை.

 ÷மாணவர்களுக்கு புத்தகங்களும் முழுமையாக வழங்காத நிலையில் தமிழக அரசு வரும் செப்டம்பர் 22-ம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்கும் என அறிவித்துள்ளது. தேர்வுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் முழுமையாக புத்தகங்கள் வழங்கப்படாததால் தேர்வுக்கு எப்படி தயாராவது? எனப் புரியாமல் மாணவ, மாணவிகள் பரிதவித்து வருகின்றனர்.÷இது குறித்து மாவட்டக் கல்வி அலுவலர் உரிய நடவடிக்கை எடுத்து அரசுப் பள்ளகளில் புத்தகங்களின் தேவை அறிந்து சம்மந்தப்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு புத்தகங்கள் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ஜி. யோகானந்தம்
நன்றி : தினமணி

பள்ளிக்கூடம்ன்னா என்னப்பா? – இந்த கேள்விக்கு உங்கள் மறுமொழி என்ன?

This slideshow requires JavaScript.

தொடர்புடைய பதிவுகள்:

பாசிச ஜெயாவிற்கு எதிராக களத்தில் நின்று போராடும் புமாஇமு-விற்கு போராட்ட நிதி தாரீர்!

பாசிச ஜெயா ஆட்சிக்கு வந்தவுடன் சமச்சீர் பொதுப்பாடத்திட்டத்தை ரத்து செய்யும் சட்டத்தை நிறைவேற்றும் போது மாபெரும் எதிர்க்கட்சிகளான திமுக உள்ளிட்ட கட்சிகள் அதற்கு எதிராக ஒரு அறிக்கையை மட்டும் விட்டுட்டு அடங்கி விட்டனர். போலி கம்யூனிஸ்டுகளோ சட்டசபையில் அதனை ஆதரித்து வாக்கு அளித்துவிட்டு, வெளியில் போராடுவது என இரட்டை நிலையினை எடுத்தனர்.

இத்தகைதொரு சூழ்நிலையில் சமச்சீர் பாடத்திட்டத்தை அமுல்படுத்தி கோரியும், தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டாய நன்கொடைக்கு எதிராகவும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் அதனை சார்ந்த  புரட்சிகர அமைப்புகள் கடந்த மூன்று மாதங்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு போர்குணமிக்க போராட்டங்களை நடத்தி வருகிறது. மேலும் நீதிமன்றங்களில் வழக்கினை போட்டு பாசிச ஜெயாவை எதிர்த்து களத்தில் நின்று வருகிறது. இதில் பல தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இதில் சென்னை கிளையினை சேர்ந்த  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள்  தினந்தோறும் பிரச்சாரம் ,  போராட்டம் என வழக்கமாக்கி கொண்டு சமச்சீர் பாடத்திட்டத்தை அமுல்படுத்த கோரியும், தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை எதிர்த்தும்  மாணவர்கள், பெற்றோர்களை அணிதிரட்டி போராட்டத்தை நடத்தி வருகிறது.

பாசிச ஜெயாவின் உருவ மொம்மையை எரித்தும், பாசிச ஜெயாவின்  சமச்சீர் ஆய்வு குழுவின் அறிக்கை நகலை எரித்தும் பல தோழர்கள் சிறை சென்றனர்.

மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை அணிதிரட்டி “வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம்! இலவசக் கட்டாயக் கல்வி உரிமையை நிலைநாட்டுவோம்!! ”  அரங்கக்கூட்டத்தை நடத்தியது.

இதன் தொடர்ச்சியாக நேற்று (1.8.2011) காலை பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை தாசபிரகாஷ் ஹோட்டல் அருகே சமச்சீர் பாடப்புத்தகத்தை உடனே வழங்கு! என்ற முழக்கத்தின் கீழ்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்களை அணிதிரட்டி சாலை மறியல் செய்தனர்.  பாசிச ஜெயாவின் போலீஸ், மறியலை கலைக்க தாக்குதலை மேற்கொண்ட போது தோழர்கள் அதனை போர்க்குணத்துடன் எதிர்கொண்டனர்.

rsyf-samacheer kalvi salaimariyal august 1 (5)
rsyf-samacheer kalvi salaimariyal august 1 (6)
samacheer kalvi salai mariyal (40)
samacheer kalvi salai mariyal (16)
samacheer kalvi salai mariyal (20)
samacheer kalvi salai mariyal (25)
samacheer kalvi salai mariyal (26)

மறியலில் தனது வண்டியினை நிறுத்தாமல் சென்றவர்களிடம் வாகனத்தை நிறுத்தி, உன் பிள்ளைக்கும் சேர்த்து தான் நாங்கள் ரோட்டில் நிற்கின்றோம் என தோழர்கள் விளக்கி பேசும் போது அவர்கள் வாகனத்தை நிறுத்தினர்.

படிக்கின்ற வயசுல ஏண்டா ரோட்டுல வந்து நிற்கிறே என சத்தம் போட்டு அடிக்க வந்த போலீசிடம் பள்ளி மாணவர்கள் “முதலில் புத்தகத்தை கொடுக்க சொல்லு! அதைக் கொடுக்கலைனு தான் ரோட்டுல வந்து நிற்கிறோம்!” என முகத்தில் அறைந்தார் போல பேசி தாக்குதலை எதிர்கொண்டனர்.

rsyf-samacheer kalvi salaimariyal august 1 (2)
rsyf-samacheer kalvi salaimariyal august 1 (3)

rsyf-samacheer kalvi salaimariyal august 1 (4)

உன் காலேஜ் எது என்று சொல்லு, உன்னை பற்றி சொல்கிறேன்? என கேட்ட பெண் போலீசிடம் கல்லூரி பெண் தோழர் ஒருவர் “ சமச்சீர் புத்தகத்துக்காக மறியலுக்கு போகிறேன் என சொல்லிவிட்டுதான் வந்து உள்ளேன்!” என மாணவர் சமூகத்திற்கு  வேண்டிய முக்கிய பண்பே போராடுவது தான் என்பதை உணர்த்தும் விதமாக பேசினார்.

குழந்தையோடு போராடும் பெண் தோழர் ஒருவரை பிடித்து இழுத்து வேனில் ஏற்ற முடியாமல் தோற்ற பெண் போலீசு , “குழந்தையோடு வந்து ரோட்டில நிற்கிறே! உனக்கு வெட்கமா இல்லை?” என கேட்டு உள்ளார். இதற்கு அந்த பெண் தோழர் “ என் குழந்தைக்கு மட்டுமல்ல , உன் குழந்தைக்கும் சேர்ந்து தான் நான் ரோட்டில் வந்து நிக்கிறேன்” என சினம் கொண்டு கூறினார்.

இப்படியொரு போர்குணமிக்க  போராட்டத்தில் போலீசு லத்தியாலும், கைகளாலும் அடித்ததில் பல  தோழர்கள் காயம் அடைந்தனர். இறுதியில் சுமார் 600 பேர் கைது செய்யப்பட்டு மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். இதில் நேற்று மாலை குழந்தைகள், பெண்கள் என விடுவித்து விட்டு  63 தோழர்கள் மீது  பல்வேறு வழக்குகளை போட்டு சிறையில் அடைத்தது  பாசிச ஜெயாவின் போலீசு.

சிறைகளாலோ, வழக்குகளாலோ எமது போராட்டத்தை முடக்க முடியாது என்பதை புமாஇமு தோழர்கள் தொடர்ந்து களத்தில் நின்று நிரூபிக்க புறப்பட்டு விட்டனர்.

பெற்றோர்களே – மாணவர்களே!

 • அடக்கு முறையை எதிர்த்து நிற்போம்!

 • சமச்சீர் பாடப்புத்தகம் பெறும் வரை அடங்க மறுப்போம்!

உழைக்கும் மக்களே!

 • பள்ளி மாணவர்களின் படிப்பை பாழாக்கும்

         பாசிச ஜெயாவின் வக்கிரத்தை முறியடிப்போம்!

எனும் முழக்கத்தின் கீழ தொடர்ந்து களத்தில் நின்று போராடும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி , அதற்கான நிதியினை மக்களிடம் பேருந்துகளிலும், தொடர்வண்டிகளிலும்  பிரச்சாரம் செய்து பெற்று வருவது அனைவரும் பார்த்து இருப்பீர்கள்.  தொடர்ந்து போராட்டம், சிறை என இருப்பதால் நிதியின் தேவை அதிகரித்து கொண்டே வருகிறது.

அதன் அடிப்படையில்  புமாஇமு வாசகர்கள் ஆகிய உங்களிடமிருந்து போராட்ட நிதியினை கோருகிறது.  இதன் மூலம் மாணவர் இளைஞர்  சமூகத்திற்காக தொடர்ந்து களத்தில் நிற்கும் எங்களுக்கு தோள் கொடுங்கள்!

நிதி அளிப்போர் BANK TRANSFERமூலம் வங்கி கணக்கில் செலுத்தலாம்.

Name: V. KARTHIKEYAN
Bank Name: STATE BANK OF INDIA

Account Number: 30006805440
Branch Location: MADURAVOYAL , CHENNAI

Account Type: Savings

அல்லது V. KARTHIKEYAN என்ற பெயரில்  காசோலையாக அனுப்பலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி:

வ.கார்த்திகேயன்,

எண் 41, நேதாஜி 4வது குறுக்குத் தெரு,

பிள்ளையார் கோவில்,

மதுரவாயல்,

சென்னை – 95

நிதி அளிப்போர் அதன் விவரத்தை rsyfchennai@gmail.com என்ற மின்னஞ்சல்-க்கு அனுப்பவும். அதற்கான ரசீசு நிதி அளிப்போர் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

தொடர்புடைய பதிவுகள்:

’டெத் ஆஃப் மெரிட்’ – தலித் மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்களை தோலுரிக்கும் ஆவணப்படம்!

தலித் சமூகத்தில் இருந்து படித்து ஒரு டாக்டராகவோ, என்ஞினியராகவோ ஆவதற்காக வரும் மாணவர்கள் பார்ப்பனியத்தின் சாதி அடக்குமுறை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் நிலை உயர்கல்வி நிறுவனங்களில் தொடர்கதை ஆகி வருகிறது.

அவ்வாறு தற்கொலை செய்து கொண்ட மாணவர்களான டாக்டர்  ஐஸ்ப்ரீத் சிங் மற்றும் டாக்டர் பால் முகுந்த் பார்த்தி , மணிஷ் குமார் ஆகியோரை பற்றிய ஆவணப்படங்கள்  தான் “டெத் ஆஃப் மெரிட்” .  அந்த இளைஞர்களின் குமுறலையும், அவர்கள் பெற்றோர்களின் நீதிக்கான  போராட்டத்தையும் ஆவணப்படம் விவரிக்கிறது.

உயர்கல்வி நிறுவனங்களான  IIT, AIIMS போன்றவை  இன்று பார்ப்பன பாசிஸ்டுகளின் கூடாரமாக இருந்து வருவதை,  வெட்டி வீழ்த்தினால் தான் உழைக்கும் மக்களின் சமூக விடுதலையை சாதிக்க  முடியும்.

ஜீலை மாத புதிய கலாச்சாரம் இதழில் இது குறித்த விரிவான கட்டுரை வெளிவந்து உள்ளது.

டெத் ஆஃப் மெரிட்  ஆவணப்படங்கள்  மற்றும் மேலும் விரிவான செய்திகளும் டெத் ஆஃப் மெரிட்   என்ற வலைத்தளத்தில்  நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.