• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 213,676 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

ஆயுதங்கள் கொள்முதலில் உலக அளவில் இந்தியா முதலிடம்!

நாட்டில ஆகப்பெரும்பான்மையான மக்கள் பசி,பட்டினி என இருப்பதாக அரசினுடைய புள்ளி விவசமே சொல்கிறது. ஆனால் அதை பற்றி எல்லாம் கவலைபடாமல் நாட்டை பன்னாட்டு முதலாளிகளுக்கு  தாரை வார்ப்பதை மன்மோகன் சிங் & சிதம்பரம் & சோனியா கும்பல் மும்மரமாக செய்து வருகிறது.  இதற்கு ஒரு எடுத்துகாட்டு தான் ‘ஆப்பிரிக்காவை விட ஏழைகள் அதிக உள்ள நாடான இந்தியா ஆயுதங்கள் கொள்முதல் செய்வதில் முதலிடம்’ என்ற செய்தி. வாசித்து பாருங்கள் இதை..

ஆயுதங்கள் கொள்முதலில் உலக அளவில் இந்தியா முதலிடம்

___

வாஷிங்டன், செப்.29 : வளரும் நாடுகளில் ஆயுதங்கள் கொள்முதலில் செய்வதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2010ம் ஆண்டு, இந்தியா 580 கோடி டாலர் மதிப்பிலான பல்வேறு ஆயுதங்களை வாங்கியுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் தைவான் ( 270 கோடி டாலர்களுடன்) உள்ளது. சவுதி அரேபியா, பாகிஸ்தான் அடுத்த இடங்களில் உள்ளன. பெரும்பகுதி ஆயுதங்களை இந்தியா தொடர்ந்து ரஷியாவிடமிருந்துதான் வாங்கி வருகிறது.
எனினும், இந்தியா இப்போது நவீன தொழில்நுட்பம் வாய்ந்த ஆயுதங்களை இஸ்ரேல், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து கொள்முதல் செய்கிறது. வளரும் நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதில் அமெரிக்கா முதலிடத்திலும், ரஷியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. ரஷியா 780 கோடி டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வளரும் நாடுகளுக்கு விற்பனை செய்துள்ளது. 2010ம் ஆண்டில் மட்டும் 4,040 கோடி டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் விற்பனையாகின. 2009ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 38.1 சதவீதம் அதிகம் ஆகும்.
உலக பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்த போதும், ஆசிய நாடுகளில் சில பெரிய அளவில் ஆயுதங்கள் கொள்முதல் செய்துள்ளன. குறிப்பாக சவுதி அரேபியாவும், ஆசியப் பகுதியில் இந்தியாவும் அண்மையில் அதிகளவில் ஆயுதங்களை வாங்கியுள்ளன. 2008ம் ஆண்டில், அமெரிக்காவிடமிருந்து, ஆறு சி13ஜே ரக சரக்கு விமானங்களை வாங்கி உள்ளது. 2010ம் ஆண்டில், 57 ஹாக் ஜெட் பயிற்சி விமானங்களை 100 கோடி டாலர் மதிப்பில் இங்கிலாந்திடமிருந்து வாங்கியுள்ளது. அதே ஆண்டு, 12 ஏடபிள்யு ஹெலிகாப்டர்களை இத்தாலியிடமிருந்து இந்தியா வாங்கியுள்ளது.
..
செய்தி: தினமணி