• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 213,650 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

மாருதி சுசுகி தொழிலாளர்கள் போராட்டம்: திருச்சியில் நடந்த அரங்குக் கூட்ட செய்திகள்!

18.12.2011 அன்று காலை 10மணி முதல் மதியம் 2மணி வரை, மாருதி சுசுகி தொழிலாளர்கள் போராட்டம்; வால் ஸ்ட்ரீட் முற்றுகை கற்றுத்தரும் பாடம்; புரட்சிகர அரசியலே தீர்வு! என்ற தலைப்பின் கீழ் அரங்குக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தினை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி இணைப்பு சங்கங்களான பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், ஆட்டோ ஒட்டுநர் பாதுகாப்பு சங்கம், அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம், சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்து நடத்தியது.

இந்த அரங்கு கூட்டத்திற்க்கு தோழர் சேகர் (அ.த.வி.பா.ச) சிறப்புதலைவர் அவர்கள் தலைமையேற்று நடத்தினர். மாருதி நிறுவனத்தில் நடந்த தொழிலாளர்களின் போராட்டம், அதன்பின் வேலைநீக்கம் போன்ற கடுமையான அடக்குமுறைகளை கார் நிர்வாகம் தொழிலாளர்கள் மீது திணித்து மட்டுமல்ல தொழிலாளர்களை ஒன்று சேர விடாமல் தடுத்தும் வைத்திருந்தனர். இத்தகைய அடுக்கு முறைகளையும், அதன்பின் வேலை நீக்கம் செய்யப்பட்ட அனைவரும் மீண்டும் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இன்னும் பல்வேறு அனுவங்களை எடுத்துக்கூறி தொழிலர்களை உணர்வடையச்செய்து தனது தலைமை உரையை முடித்துக் கொண்டார்.

அடுத்து சிறப்புரையாற்றிய தோழர் சுப.தங்கராசு மாநில பொதுச்செயலாளர் (புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி) மாருதி கார் ஆலைத் தொழிலாளர்கள் மூன்று மாதங்களாக போராடி 1200 காண்ட்ராக்ட் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு சேர்த்ததுடன் நிர்வாகத்தின் அடக்குமுறையை முறியடித்துள்ளனர்.

நிரந்தர தொழிலாளர்கள் காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடினார்கள். அரியானா, டெல்லி, குர்கான் போன்ற இடங்களில் உள்ள அனைத்து ஆலைத் தொழிலாளர்களும் மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராடினர். இந்த போராட்டமும் வெற்றியும் இந்திய தொழிலாளி வாக்கத்துக்கு உத்வேக மூட்டுவதாக உள்ளது.
அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் உள்ள வால்ஸ்ட்ரீட்டில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் போராடுகின்றனர். வால்ஸ்ட்ரிட் முற்றுகையை ஆதரித்து உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் போராடுகின்றனர். “நாங்கள் 99%, கார்பரேட் முதலாளிகள் 1% தான் என்ற முழக்கத்தின் கீழ் போராடுகின்றனர். மூலதனத்தின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து உலகமுழுவதும் நடைபெறும் போராடடமும் உலக மக்களின் விடுதலைக்கு வழிகாட்டுகிறது.

கம்யூனிசக் கொடியின் கீழ் உலக மக்கள் போராடுவதே தீர்வைத்தரும் உலகத்தொழிலர்களே ஒன்று சேருங்கள்” என்ற காரல் மார்க்சின் கொள்கைதான் உழைக்கும் மக்களின் விடுதலைக்கான தீர்வு. எனவே சோசலிச சமுதாயத்தை அமைக்கப்போராடுவோம்! என அறைகூவி சிறப்புரையை முடித்தார்.

கடைசியில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மையக் கலைக்குழுவின் புரட்சிகர பாடல்கள் இடம் பெற்றது. கூட்டத்திற்கு 300பேர் வந்திருந்து சிறப்பித்தனர்.

இறுதியாக தோழர் கிரிராஜ் சுமைப்பணியாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் அவர்கள் நன்றி கூறினார்.

தொடர்புடைய பதிவுகள்