• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 216,726 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

சோப்பு முதல் பெட்ரோல் வரை கொள்ளையடிக்கும் மத்திய, மாநில அரசுகள்!

நாம் வாங்கிய பொருட்களின் விலை இன்று இரண்டு மடங்கு, மூன்று மடங்கு நிலை உயர்ந்திருப்பதை உணர முடியாதவர்கள் இருக்க முடியாது. சோப்பு, பவுடரிலிர்ந்து பெட்ரோல் வரை எந்த பொருளை எடுத்து கொண்டாலும் இது தான் நிதர்சன உண்மை.

இதற்கு உற்பத்தி செலவு என தயாரிப்பவன் ஒரு காரணம் கூறுகிறான், ஆட்சியாளர்களோ வாங்கும் சக்தி, மக்கள் தொகை பெருக்கம்,  கச்சா எண்ணெய் விலையேற்றம் என ஆயிரம் காரணம் சொல்கிறான்.

ஆனால் முக்கிய முதல் காரணம் என்னவென்றால் அது தான் “ வரி”.  நாம் வாங்கும் எந்த பொருளிலும் மூன்றில் ஒரு பங்கு இல்லையென்றால் இரண்டு பங்கு.

******************

இதை தெரிந்து கொள்ள ஒரு உதாரணம் மிலிட்டரி கேண்டீன். இராணுவத்தில் இருக்கும் ஒருவர் தான் வாங்கிய பொருட்களை பற்றி கூறிய போது தான் இதனை தெரிந்து கொள்ள முடிந்தது. இராணுவத்தில் இருப்பவர்கள், இருந்தவர்கள் – பலசரக்கு, எலக்ட்ரிக்கல் பொருள் முதல் மது வகைகள் வரை வாங்குவதற்கான நடத்தபடும் இத்தகைய கேண்டீனில் பொருட்கள் விலை வரி இல்லாமல் வருகிறது என்கின்றனர். விலையை பார்த்த போதுதான் அதிர்ச்சி ஒவ்வொரு பொருளும் மூன்றில் ஒரு பங்கு கம்மி. 32 ரூபாய் லக்ஸ் சோப் வெறும் 19 ரூபாய் தான். 155 பூஸ்ட் வெறும் 99 ரூபாய் தான்.

நம்முடைய வரியில் அரசை நடத்தும் ஆட்சியாளர்கள் அந்த பணத்தில் வரி இல்லாமல் இராணுவத்தினரை பாதுகாக்கின்றனராம். ஆனால் நம்க்கு கல்வியில் இருந்து,  மருத்துவம் வரை அனைத்தும் பணம் என்கிறது.

அடுத்து மீண்டும் உயர போகிறது’ என அறிவித்து உள்ள பெட்ரோல். இதுல இருக்கிற மோசடி சோப்பை விட அதிகம். மூன்றில் இரண்டு மடங்கு வரி.  23 ரூபாய் பெட்ரோலுக்கு 47 ரூபாய் வரி.

இப்படி அனைத்திலும் வரி என்ற பெயரில் கொள்ளையடிக்கும் அரசு யாருக்காக இருக்கிறது. எவனுடைய பிரச்சனைக்காக ஓடோடி வேலை செய்கிறது? நிச்சியம் நமக்காக இல்லை என்பது நாம் வாழ்கின்ற வாழ்க்கையே சொல்லிவிடும்.

டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகளுக்காகவும், இரஷிய, அமெரிக்க பன்னாட்டு முதலாளிகளுக்காகவும் இன்று அணு உலையினை கட்டியே தீருவோம் என ஆர்ப்பரிக்கும் மன்மோகன் சிங், சோனியா கும்பல் நமது வாழ்க்கையே சீரழிக்கும் எந்த பிரச்சனைக்காவது என்றைக்காவது இதில் ஒரு சதவீதமாவது நடவடிக்கை எடுத்திருப்பார்களா? இல்லை.

கருணாந்தி, ஜெயலலிதா, விஜயகாந்த் என பிரிந்து இருந்தாலும் இவர்களுக்குள் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அதுதான் முதலாளிகளின் நலன் பாதுகாக்கப்படவேண்டும் என்ற ஒத்த சிந்தனை. ஆனால் நாம் ஒற்றுமையாக இருக்கிறோமா? குறைந்தபட்சம் இவர்கள் நமக்கானவர்கள் இல்லை என்ற உண்மையை கூட உணர்ந்து உள்ளோமா?