• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,814 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

இந்திய நாடாளுமன்றம் – பன்றி தொழுவத்தின் 60 ஆண்டு கால சாதனை!

நாடாளுமன்றம் விற்பனைக்கு! மலிவு எம்;பி.க்கள் தயார்! இந்திய நாடாளுமன்றம் ஊழலின் ஊற்றுக்கண்

01_2006.jpgஇந்தியாவில் உள்ள பலகட்சி நாடாளுமன்ற ஜனநாயகம்தான் உலகிலேயே மிகச் சிறந்த அரசியலமைப்பு என்று முதலாளிய ஏகாதிபத்திய அறிவுஜீவிகள் புகழ்ந்து தள்ளுகின்றனர். குறிப்பாக, சோவியத் ஒன்றியம் மற்றும் பிற போலி கம்யூனிச நாடுகளில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, அங்கிருந்தெல்லாம் அரசியல் நிபுணர்கள் வந்து இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் செயல்படுவதை நேரில் கண்டு வியந்து போனார்கள்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசியல் அமைப்புதான் கம்யூனிச ஆட்சிகளின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று கண்டுபிடித்த “”நம்ம ஊரு” த.தே.பொ.க. மணியரசன் கும்பல் உட்பட எல்லா வண்ணப் போலி கம்யூனிஸ்டுகளும் கூட பலகட்சி நாடாளுமன்ற ஜனநாயக அரசியலமைப்பே தமது திட்டமென்று மாற்றிக் கொண்டார்கள்.

இந்த அரசியலமைப்பு இவ்வளவு காலம் நீடித்திருப்பது, பல தேர்தல்கள் நடந்து முடிந்திருப்பதே இதன் வெற்றியைப் பறைசாற்றுவதாக அவர்கள் எல்லோரும் போற்றிப் புகழ்கிறார்கள். ஆனால், இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தினுடைய வெற்றியின் இரகசியம் என்னவென்று அவர்கள் பேசுவதில்லை. அது இதுதான்:

இந்தியாவின் பலகட்சி நாடாளுமன்ற ஜனநாயகம் செத்து அழுகிப் போன பிணமாகக் குப்பைமேட்டில் திறந்தவெளியில் கிடக்கிறது. அதன் முடைநாற்றம் மனிதர்களுக்குத் தெரிகிறது. ஆனால், செத்து அழுகிப் போன பிணத்தைக் கொத்தித் தின்னும் கழுகு காக்கைகளுக்கு அது ருசியான விருந்தாகவே தெரிகிறது. அந்த விருந்தில் கலந்து கொள்ளும் காக்கைகள் போல, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பங்கேற்கும், பதவி வகிக்கும் கட்சிகள் அனைத்துமே ஏதாவது ஒரு வகையில் பொறுக்கித் தின்பதற்கு வசதிகளும் வழிவகைகளும் உள்ளன.

ஆளுங்கட்சிகளாக இருந்தாலும், எதிர்க்கட்சிகளாக இருந்தாலும், தேர்தல்களில் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியுற்றாலும் சரி, எல்லாக் கட்சிகளுக்கும் பொறுக்கித் தின்பதற்கான ஏற்பாடுகள் இருக்கின்றன என்கிற ஒரு காரணமே போதும். இதனாலேயே பல கட்சி நாடாளுமன்றம், மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற தோற்றத்தோடு நீடித்திருக்க முடிகிறது. இதுதான் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சிறப்பு.

இது இப்படித்தான் செயல்படுகிறது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது. சமீபத்தில் வெளியாகி நாடே நாறும் வோல்கர் கமிசன் அறிக்கை விவகாரம், நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு அதன் உறுப்பினர்கள் இலஞ்சம் வாங்கிய விவகாரம், எம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு இலஞ்சம் வாங்கிய விவகாரம் இவை அனைத்திலும் ஏதோ சில நபர்கள், ஏதோ ஒரு கட்சி மட்டும் சிக்கவில்லை. ஏறக்குறைய அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் சிக்கியுள்ளனர்.

வோல்கர் கமிசன் அறிக்கை பின்னணி

1990களின் ஆரம்பத்தில் குவைத்தை ஆக்கிரமித்த ஈராக்கின் சதாம் உசேன் படைகள், அந்நாட்டு எண்ணெய் வயல்களைக் கைப்பற்றிக் கொண்டன. குவைத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்பது என்ற பெயரில் அதிநவீன ஆயுதங்களுடன் மத்திய கிழக்கில் வந்திறங்கிய அமெரிக்கப் படைகள் வெறித்தனமான தாக்குதல் போர் நடத்தி ஈராக் இராணுவத்தை விரட்டியடித்தது. ஆனால், அமெரிக்கா அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. வளமிக்க எண்ணெய் வயல்கள் நிறைந்த மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தையும் தனது மேலாதிக்கம் மற்றும் மறுகாலனியாதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியது. “”உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதங்கள் உட்பட பெருந்திரள் பேரழிவு ஆயுதங்களைத் தயாரித்து குவித்து வைத்திருப்பதோடு, அணுஆயுத உற்பத்திக்கான தயாரிப்பிலும் இறங்கியுள்ள சதாமின் ஈராக்கினால் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்புக்குப் பேராபத்து விளைந்துள்ளது; பல ஆயிரம் ஷியா மற்றும் குர்து மக்களைப் படுகொலை செய்து மனித உரிமைகளை மீறும் குற்றங்கள் செய்துள்ளது, சதாம் உசைன் அரசு” என்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி ஈராக்குக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் பொருளாதாரத் தடை விதிக்கச் செய்தது, அமெரிக்கா. அதோடு இராணுவ முற்றுகையும் செய்தது.

ஈராக்குக்கு எதிரான இந்த இராணுவ முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடையால் உலக அரங்கில் அந்நாடு பெருமளவு தனிமைப்படுத்தப்பட்டது. இவற்றால், எண்ணெய் வளமிக்கதாக இருந்தாலும், அதைப் பயன்படுத்தி உலகச் சந்தையில் இருந்து மருந்து மற்றும் உணவு போன்ற இன்றியமையாத் தேவைகளைக் கூட வாங்க முடியாமல் ஈராக் திணறியது. இலட்சக்கணக்கான குழந்தைகள் போதிய மருந்துப் பொருட்கள் கூடக் கிடைக்காமல் மாண்டு போயின.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் நிபந்தனைகளை ஏற்று, ஈராக்கிலுள்ள இராணுவஆயுத நிலைகளை ஐ.நா. பிரதிநிதிகள் சோதனையிட ஈராக்கின் சதாம் அரசு சம்மதித்தது. அதை ஏற்ற ஐ.நா. சபை, ஈராக்கில் மக்கள்திரள் பேரழிவு ஆயுதங்கள் உற்பத்தி செய்வதற்கான வசதிகள் இருக்கின்றனவா, அவை ஏற்கெனவே குவிக்கப்பட்டிருக்கின்றனவா என்பதை சோதனை செய்வதற்கு தனது குழுவை அனுப்பும் அதேசமயம், “”உணவுக்கு எண்ணெய்” என்ற இடைக்காலத் திட்டத்தை வகுத்து, அதன் அடிப்படையில் குறிப்பிட்ட அளவு பெட்ரோலிய எண்ணெய் விற்கவும் இன்றியமையாப் பொருட்களை இறக்குமதி செய்து கொள்ளவும் ஈராக்கை அனுமதித்தது.

ஆனால் அமெரிக்காவோ, தொடர்ந்து சதாம் அரசு மீது பல பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தி வந்தது. இறுதியில் மக்கள் திரள் பேரழிவு ஆயுதங்களைக் குவித்து வைத்திருப்பதாகவும், அவை தயாரிப்பதற்கான இரகசிய ஆலைகள் வைத்திருப்பதாகவும், ஐ.நா. சோதனைக் குழு சுதந்திரமாக ஆய்வு நடத்துவதற்கு அனுமதி அளிக்க வில்லை என்றும், அணுஆயுதங்களைக் கூட உற்பத்தி செய்வதற்கு முயல்வதாகவும், அமெரிக்கா மீதான 2002 செப்டம்பர் 11 விமானத் தாக்குதல் நடத்திய பின்லேடனின் அல்கொய்தா அமைப்புடன் அச்சதியில் ஈராக்கு பங்கு இருப்பதாகவும் பல பொய்யான பழிகள் சுமத்தி 2004இல் ஈராக்கைத் தாக்கி ஆக்கிரமித்துக் கொண்டது. சதாம் உசைன் மற்றும் அவரது சகபாடிகள் கைது செய்யப்பட்டு தண்டிப்பதற்கான விசாரணை நாடகமும் நடத்தி வருகிறது.

ஈராக் மீது அமெரிக்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியங்கள் ஆக்கிரமிப்புப் போர் தொடுத்து, அந்நாட்டு ஆட்சியைக் கவிழ்த்து, ஒரு பொம்மை ஆட்சியை நிறுவியதற்கு சொல்லப்பட்டக் காரணங்கள் அனைத்தும் பொய்யானவை என்று கடந்த ஓராண்டில் மேலும் அம்பலமாகிப் போனது. அமெரிக்கா, பிரிட்டன் உட்பட உலக நாடுகளின் மக்கள் அனைவரும் இந்த ஆக்கிரமிப்புப் போருக்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ஈராக்கில் இலஞ்ச ஊழல், சகநாட்டவர் மீதான படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் நிறைந்த சதாம் உசைனின் ஆட்சியைத் தூக்கியெறிந்து “சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவே போர் தொடுத்தோம்’ என்று கூறும் அமெரிக்கா, இந்தக் கோணத்தில் விசாரணை தண்டனைக்கு ஆதாரங்களைத் தேடுகிறது.

ஈராக்கிற்கு எதிரான ஆக்கிரமிப்புப் போரை நியாயப்படுத்தவும், சதாம் ஆட்சியைக் கவிழ்த்து, நிறுவப்பட்ட பொம்மை அரசுக்கு நியாயவுரிமையைக் கோரவும் சதாமுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஆதாரப்படுத்தும் வேலைகளில் அமெரிக்கா இறங்கியது. பேரழிவு ஆயுதக் குவிப்பு, அல்கொய்தா பயங்கரவாதிகளின் கூட்டாளி போன்ற குற்றச்சாட்டுக்கள் பொய்த்துப் போனபிறகு, சதாமுக்கு எதிரான உள்விவகாரங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவமளித்தது. அதாவது “மனிதாபிமான’ அடிப்படையில் ஐ.நா. சபை அளித்த “”உணவுக்கு எண்ணெய்” திட்டத்தைக் கூட சதாம் உசைன் கும்பல் சொந்த ஆதாயத்துக்காக முறைகேடாகப் பயன்படுத்திக் கொண்டு கொள்ளையடித்திருக்கிறது என்று நிரூபிக்கும் வேலையில் ஈடுபட்டது, அமெரிக்கா.

உணவுக்கு எண்ணெய் திட்டத்தில் நடந்த இலஞ்சஊழல் முறைகேடுகளை விசாரிப்பது என்று ஐ.நா. சபை மூலம் தீர்மானித்து வோல்கர் உட்பட ஏகாதிபத்தியக் கைக்கூலிகளைக் கொண்ட விசாரணைக் கமிசன் ஒன்று அமைக்கப்பட்டது. அதன் நோக்கம், சதாம் மீதான இலஞ்ச ஊழல் முறைகேடுகளைத் திரட்டித் தருவதுதான். இதற்காக ஐ.நா. சபையைப் பயன்படுத்திக் கொண்ட அமெரிக்கா, சதாம் மீதான சகநாட்டவர் படுகொலை, மனித உரிமை மீறல்கள் ஆகிய குற்றச்சாட்டுக்களை ஆதாரப்படுத்த, ஷியா, குர்து பிரிவின் பிரதிநிதிகள் என்ற பெயரில் வேறு சிலரைக் கொண்ட முகாம்களைப் பயன்படுத்திக் கொள்கிறது.

ஈராக்கை ஆண்ட சதாம் உசைன் கும்பல் இலஞ்ச ஊழல், சகநாட்டவர் மீதான படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் ஆகிய குற்றங்கள் புரியாத சுத்தமான ஜனநாயகத் தன்மை உடையது அல்ல என்பது உண்மைதான். இராணுவ பாசிச ஆட்சி நடத்தியதோடு, குவைத், ஈரான் ஆகிய நாடுகளுக்கு எதிராக ஆக்கிரமிப்புப் போர் நடத்திய கும்பல்தான். இந்தக் குற்றங்களை மூடிமறைப்பதற்காக இசுலாமிய மதவாதம், தேசியம், சுதந்திரம், ஏகாதிபத்திய எதிர்ப்பு முகமூடிகளைத் தரித்துக் கொண்டதுதான்.

ஆனால், இந்தக் குற்றங்களுக்காக சதாம் கும்பலை விசாரிக்கவோ, தண்டிக்கவோ சிறிதும் அருகதையற்றது அமெரிக்க ஏகாதிபத்தியம். ஏனென்றால், ஒருபுறம் பேரழிவு ஆயுதங்களை மலைமலையாக அமெரிக்காவே குவித்து வைத்திருப்பதோடு, இலஞ்ச ஊழல், மனித உரிமை மீறல்களின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளின் ஊற்றுமூலமாக அது விளங்குகிறது. மறுபுறம், ஈரானுக்கு எதிரான போரில் சதாமின் ஈராக்குக்குப் பேரழிவு ஆயுதங்களை வழங்கியதோடு, ஷியா, குர்து மக்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு ஆதரவு அளித்தும் வந்திருக்கிறது.

எரிகிற வீட்டிலும்கொள்ளையடிக்கும் எமகாதகர்கள்

கடந்த நவம்பரில் அந்த வோல்கர் கமிசன் அறிக்கை வெளியானது. உணவுக்கு எண்ணெய் திட்டத்தின் மூலம் ஒப்பந்ததாரர்கள் அல்லாத, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 270 பேருக்கு சதாமின் ஆட்சி எண்ணெய் ஒதுக்கீடு செய்து கொடுத்திருக்கிறது. அவர்களிடமிருந்து சேவைக் கட்டணம் வசூலித்து சதாமின் “”பாத் கட்சி” ஆதாயம் அடைந்திருக்கிறது என்று கூறுகிறது வோல்கர் கமிசன். அப்படி ஒப்பந்ததாரர் அல்லாத ஈராக் எண்ணெய் ஒதுக்கீடு செய்து ஆதாயம் அடைந்தவர்களின் வரிசையில் இந்தியாவின் மிகப் பெரிய தரகு முதலாளியும் இன்றைய ஆளும் காங்கிரசுக்கு நெருக்கமானதுமான அம்பானி குடும்பத்தின் ரிலையன்சு, காசுமீரின் பாந்தர் கட்சித் தலைவர் பீம்சிங், காங்கிரசு கட்சியின் வெளிவிவகார அமைச்சர் நட்வர்சிங் மற்றும் காங்கிரசுக் கட்சியும் இடம் பெற்றுள்ளனர்.

2001ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் காங்கிரசுக் கட்சியின் தூதுக் குழுவுக்குத் தலைமையேற்று ஈராக்குக்குப் போன நட்வர்சிங் கூடவே தனது மகன் ஜகத்சிங் மற்றும் அவரது உறவினரும் தொழில் கூட்டாளியுமான அந்துலீப் சேகலை அழைத்துக் கொண்டு போய், அவர்கள் மூலம் 40 இலட்சம் பீப்பாய் பெட்ரோலிய எண்ணெய் ஒதுக்கீடு பெற்று, சேகலின் “”ஹம்தான் ஏற்றுமதி” என்ற கம்பெனி பெயரில் சதாம் உசைனின் “”பாத்” கட்சிக்கு ஜோர்டான் நாட்டு வங்கி மூலம் சேவைக் கட்டணம் செலுத்தியுள்ளனர். காங்கிரசுப் பிரமுகராக இருந்து, அக்கட்சித் தூதுக் குழுவில் சென்ற அனில் மதராணி இதை உறுதி செய்துள்ளார்.

இச்செய்தி வெளியானவுடன், தனக்கு எதிரான அரசியல் சதி, ஆதாரமற்றது என்று மறுத்த நட்வர் சிங்கும் அவரது மகனும் ஈராக் பயணம் குறித்து முன்னுக்குப் பின் முரணாக உளறினர். நட்வர் சிங்குக்கு ஆதரவாகப் பேசிய காங்கிரசு, ஒருபுறம் மத்திய அமலாக்கப் பிரிவு மூலம் விசாரணை நடத்திக் கொண்டே, உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி பதக் தலைமையில் விசாரணைக் கமிசன் போட்டு பிரச்சினையை மழுப்புவதில் இறங்கியது.

நட்வர்சிங்கைப் பதவி நீக்கம் செய்யும்படி நாடாளுமன்றத்தில் “”கலகம்” செய்தன எதிர்க்கட்சிகள். முதலில் நட்வர்சிங் மீது நடவடிக்கையை வலியுறுத்திய போலி கம்யூனிஸ்டுகள் பிறகு, எல்லாம் சி.ஐ.ஏ. சதி என்றும், நட்வர் சிங் இடதுசாரி முற்போக்காளர், அமெரிக்க எதிர்ப்பாளர், வோல்கர் கமிட்டியே அமெரிக்க சி.ஐ.ஏ. புனைவு என்ற நிலையெடுத்துள்ளது. நட்வர் சிங்கை நீக்கிவிட்டு தனக்கு விசுவாசியான மன்மோகன் சிங்கிடம் அயலுறவுத் துறையை ஒப்படைக்கவே அமெரிக்கா இப்படிச் செய்கிறது என்கின்றனர். இப்படிக் கூறுபவர்கள்தாம் தொடர்ந்து மன்மோகன் சிங் அரசையும் ஆதரிகின்றனர். மறுபுறம் நட்வர் சிங்கும் சி.பி.எம். கூறுவதுபோல, அமெரிக்க எதிர்ப்பாளர் அல்ல. பதவியேற்ற மறுவாரமே அமெரிக்காவிற்குப் போய் புஷ்ஷிடம் மண்டியிட்டு, ஈராக்கிற்கு இந்தியப் படை அனுப்புவதை உறுதி கூறியவர்; இங்கே ஏற்பட்ட கடும் எதிர்ப்பே, அவ்வாறு செய்ய விடாமல் தடுத்து விட்டது.

ஈராக் விவகாரத்தில் தன்னை ஆதரிக்காத, சதாம் ஆதரவு நட்வர் சிங்கையும், காங்கிரசையும் பழிவாங்கவே வோல்கர் கமிட்டி அறிக்கையை அமெரிக்கா தயாரித்துள்ளது என்றும் போலி கம்யூனிஸ்டுகள் கூறுகிறார்கள். ஆனால் நட்வர் மன்மோகன் சோனியா கும்பல்தான் அமெரிக்காவுடன் அணுஆயுத இராணுவ ஒப்பந்தம் போட்டது, ஈரானுக்கு எதிரான அமெரிக்க சதியை ஆதரித்து, அணுஆயுத தடை தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் ஆதாரங்கள் வெளிவந்தது காரணமாக, காங்கிரசு ஊழலை மறைப்பதற்காக நட்வர் சிங்கிடம் இருந்த பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், “”நீ மட்டும் யோக்கியமா?” என்ற வழக்கமான பாணியில், ஈராக் உணவு எண்ணெய் திட்டத்தால் காங்கிரசு மட்டும் ஆதாயமடையவில்லை, பா.ஜ.க.வும்தான் ஊழல் செய்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை காங்கிரசு வெளியே கொண்டு வருகிறது.

பா.ஜ.க. ஆட்சியில்தான் இந்த ஊழல் நடந்திருக்கிறது. ஈராக்கில் உள்ள இந்தியத் தூதர் அப்போதே இது குறித்த செய்தியை, பா.ஜ.க. அரசுக்கு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் சமயத்தில் பா,ஜ.க. அரசுக்கு இந்த உண்மை தெரிய வந்தும் தனக்குச் சாதகமாக, காங்கிரசுக்கு எதிரான ஆயுதமாக அது பயன்படுத்தாதற்கு காரணம் இந்த ஊழலில் பா.ஜ.க.வுக்கும் பங்கு கிடைத்திருப்பதுதான் என்று எதிர் குற்றச்சாட்டு வீசப்படுகிறது. குறிப்பாக, வாஜ்பாயியின் மருமகன் ரஞ்சன் பட்டாச்சார்யா, சதாமின் மகனுடன் நெருங்கிய உறவு வைத்திருந்தார்; அவருக்கு எண்ணெய் விவகாரத்தில் தொடர்பு இருந்தது என்று ராஜீவுக்கும் காங்கிரசுக்கும் நெருங்கிய கூட்டாளியும், காங்கிரசு அரசின் முன்னாள் வெளியுறவுச் செயலரும், உ.பி. மாநில முன்னாள் ஆளுநருமான ரமேஷ் பண்டாரி கூறுகிறார்.

எப்படியோ அமெரிக்கா, தனது எதிரிக்கு எதிராக நடத்திய துப்பாக்கிச் சூட்டின் சிதறல்கள் தனது விசுவாசிகளான இந்திய முன்னாள்இன்னாள் ஆட்சியா ளர்களையும் பதம்பார்த்து விட்டது. இந்தநாட்டில் ஜனநாயகம் பரவலாக்கப்படுகிறது என்று சொன்னால், ஊழல் பரவலாக்கப்படுகிறது; ஆளும் கட்சிக்கு மட்டுமல்ல, எதிர்க் கட்சிகளுக்கும் கூட இலஞ்ச ஊழல் களுக்கான வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றது. சந்தேகமின்றி இந்த வகையில் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் மிகச் சிறந்து விளங்குகின்றது.

கேள்வி கேட்க இலஞ்சம்! சர்வகட்சி ஜனநாயகம்!

இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அனைத்துக் கட்சி இலஞ்ச ஊழல் மாண்பை நிரூபிக்கும் வகையில் மேலும் சில சான்றுகள் சமீபத்தில் வெளியாகியுள்ளன. தொழில் குழுமங்களுக்குச் சாதகமாக நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்புவதற்கு எம்.பி.க்கள் இலஞ்சம் வாங்கும் “”வீடியோ” காட்சிகள்; உள்ளூர் தொகுதி வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் 2 கோடி ரூபாய் பெறும் எம்.பி.க்கள், திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கு இலஞ்சம் கேட்கும் “”வீடியோ” காட்சிகள் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பப்பட்டிருக்கின்றன.

முந்தைய பா.ஜ.க. ஜனதா தள கூட்டணி ஆட்சியின் போது ஆயுத பேர நாடகமாடி அக்கட்சிகளின் தலைவர்கள் இலஞ்சம் வாங்கக் கூடியவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையிலான “”வீடியோ” காட்சியைப் படமாக்கி ஒளிபரப்பினார், “”தெகல்கா” செய்தி இணையத்தளத்தின் ஆசிரியர் அனிருத் பெகல். இப்போது அவர் “”கோப்ரா போஸ்ட்” என்ற செய்தி இணையத்தளத்தின் சொந்தக்காரரும் ஆசிரியருமாக உள்ளார். இவர் “”ஆஜ் தக்” என்ற செய்தி அலைவரிசையுடன் இணைந்து, நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க எம்.பி.க்கள் இலஞ்சம் வாங்குவதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளார்.

“”கோப்ரா போஸ்ட்” இணையத்தளம் மற்றும் “”ஆஜ் தக்” அலைவரிசையைச் சேர்ந்த செய்தியாளர்களைக் கொண்ட குழு ஒன்று, சிறுதொழில் முனைவோர் சங்கம் என்ற பெயரில் எம்.பி.க்கள் சிலரை அணுகி, சங்கத்துக்குச் சாதகமாக நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கான பேரங்கள் நடத்தி பதினைந்தாயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை இலஞ்சம் கொடுத்து, அதை இரகசியமாக “”வீடியோ” காட்சியாகப் பதிவும் செய்து ஒளி பரப்பிவிட்டது.

இதைப் பார்த்து “”நாங்கள் ஆழமான வேதனையும் அதிர்ச்சியும் அடைந்துவிட்டோம்” என்று தற்போதைய நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி பம்மாத்து பண்ணியிருக்கிறார். ஆனால், இலஞ்சம் வாங்கிக் கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்பது பல ஆண்டுகளாக நடப்பது எம்.பி.க்கள் உட்பட அரசியல்வாதிகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் தெரிந்த விசயம்தான்!

“”1980கள் நெடுகவும் பெட்ரோலிய இரசாயனம் மற்றும் மருந்துக் கம்பெனிகள் எம்.பி.க்களைப் பயன்படுத்தி கேள்விகளும் எதிர்க் கேள்விகளும் நாடாளுமன்றத்தில் எழுப்பிக் கொண்டிருந்தது நன்றாகவே தெரியும். இந்தப் பிரச்சினை இந்தியாவில் ஒன்றும் விதிவிலக்கானதில்லை” என்கிறார் ராஜீவ்சோனியா இருவருக்குமே நெருங்கிய காங்கிரசு மூத்த தலைவரும் மேலவை எம்.பி.யுமான ஜெயராம் ரமேஷ்.

“”இப்போது சிக்கியவர்கள் எல்லாம் சிறிய மீன்கள்தான்; மாபெரும் சுறாக்களையெல்லாம் யாரும் நெருங்கக் கூட இல்லை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. கேள்வி கேட்கப் பணம் வாங்கிய விவகாரம் என்பது வெளியே தெரியும் ஒரு சிறுமுனை போன்றது தான். மலையளவு விவகாரங்கள் மறைந்து கிடக்கின்றன. ஒரு குறிப்பிட்ட தொகையை “படி’ போலப் பெற்றுக் கொண்டு, தொழில் குழுமங்கள் சார்பில் நிரந்தரப் பிரதிநிதிகளாக இருக்கும் எம்.பி.க்கள் பலரும், சில குறிப்பிட்ட ஆதரவுக் குழுக்களில் இடம் பெற்றுள்ள எம்.பி.க்கள் பலரும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்கள் யார் யார் என்பது அரசியல் வட்டாரத்திலோ, நாடாளுமன்ற வட்டாரத்திலோ தெரியாத விசயமுமல்ல.

“”தொழில் குழுமங்களின் பிரதிநிதிகளாக இருக்கும் எம்.பி.க்களுக்கு ரொக்கம் மட்டுமல்லாமல், இதர சலுகைகள், போனஸ், நிறுவனப் பங்குகள் (ஷேர்கள்) உள்பட பல ஆதாயங்கள் கிடைக்கின்றன. அவர்கள் சார்ந்துள்ள தொழில் குழுமங்கள் அல்லது அமைப்புக்கு லாபத்தை ஏற்படுத்தக் கூடிய கேள்விகளையே அந்த எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கேட்கின்றனர். ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் தொழில் நிறுவனக் குழுமங்கள், தம் எதிரி நிறுவனங்களை முடக்குவதற்கான கேள்விகளை நாடாளுமன்றத்தில் கேட்பதற்கு அரசியல்வாதிகளைக் கடந்த காலத்தில் பயன்படுத்தி வந்தன” (தினமணி 19.12.05) என்று எழுதுகிறார், மூத்த செய்திக் கட்டுரையாளர் நீரஜா சௌத்ரி.

மக்கள் பிரதிநிதிகள் என்ற போர்வையில் பெரும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளாகச் செயல்படுவது பழைய, ஒப்பீட்டு ரீதியில் சிறிய விசயம்தான். நாடாளுமன்றம் மற்றும் அரசாங்கத்துக்குக் கொள்கை முடிவுகளைப் பரிந்துரைக்கும் நாடாளுமன்ற குழுக்களின் உறுப்பினர்களாகவே தங்கள் பிரதிநிதிகளை தொழில் நிறுவனங்கள் நியமிக்கச் செய்கின்றன. இதற்கும் மேலேபோய், தரகு அதிகார முதலாளிகளே நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவிகளையே அரசியல் கட்சிகளிடம் பேரம்பேசி வாங்கி விடுகின்றனர். பா.ஜ.க. மற்றும் காங்கிரசைப் போலவே, மாயாவதி, முலயம் சிங் கட்சிகள் முக்கியமாக இதைச் செய்கின்றன.

ஒழுக்க சீலர்களின் கட்சி என்று நாடகமாடும் பா.ஜ.க.வினர் ஆறுபேரும், பிழைப்புவாத மாயாவதி கட்சியினர் மூவரும், லல்லு, முலயம், காங்கிரசு கட்சிகளில் தலா ஒருவருமாக 11 எம்.பி.க்கள் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்குபவர்களின் “”வீடியோ” காட்சியில் சிக்கியுள்ளனர். பா.ஜ.க. தமது கட்சிக்காரர்கள் மீது முதலில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தாலும் நாடாளுமன்றத்தில் இருந்து அவர்களை நீக்குவதற்கு மறைமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாதி அரசியல் நடத்தும் மாயாவதி, லல்லு, முலயம் கட்சிகளுக்கு லஞ்ச ஊழல் ஒரு பிரச்சினையே இல்லை. இதெல்லாம் தனது கட்சிக்கு எதிரான சதி என்று கூறும் மாயாவதி தனது ஊழல் எம்.பி.க்களுக்கு வக்காலத்து வாங்கி நியாயப்படுத்தியிருக்கிறார்.

இந்த இலஞ்ச நடவடிக்கை அம்பலமாக்கப்பட்ட அதேபாணியில் அடுத்ததாக, ஆண்டுதோறும் இரண்டு கோடி ரூபாய் தொகுதி வளர்ச்சிக்கு என்று தரப்படும் நிதியை ஒதுக்கீடு ஒப்புதல் கொடுப்பதற்காக, மூன்று பா.ஜ.க., இரண்டு முலயம் கட்சி, மாயாவதி, காங்கிரசு கட்சிகளில் தலா ஒருவர் என ஏழு எம்.பி.க்கள் இலஞ்சம் வாங்குவதை “”ஸ்டார்” அலைவரிசை “”வீடியோ” காட்சி எடுத்து அம்பலப்படுத்தியிருக்கிறது.

கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற விவகாரத்தில் பரபரப்பாகவும், உடனேயும் நடவடிக்கை எடுத்த கட்சிகளும், நாடாளுமன்றமும் இரண்டாவது விவகாரத்தில் அப்படிச் செய்யவில்லை. இவர்கள் நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு இடைக்கால தடை விதித்து, அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி சம்பந்தப்பட்ட அமைச்சக விசாரணை என்பதாக திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்னும் கொஞ்ச காலத்தில் “”நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இதெல்லாம் சகஜம்தான்” என்று எல்லாக் கட்சிகளும் வெளிப்படையாகவே மாற்றி விடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. “”சிக்கிக் கொள்ளும் அளவுக்கு முட்டாள்தனமாக இருந்ததற்காக எம்.பி. பதவியைப் பறிப்பது என்பது மிகக் கடுமையான தண்டனை என்று அவர்கள் கூறுவார்கள்” என்கிறார், நீரஜா சௌத்ரி. இப்படியே போனால், ஒழுங்கு நடவடிக்கையில் இருந்து யாருமே தப்ப முடியாது; ஆகவே இதையெல்லாம் கண்டு கொள்ளக் கூடாது என்று மாற்றி விடுவார்கள்.

“”கம்யூனிஸ்டு கட்சிகள் மட்டும்தான் இதிலெல்லாம் சிக்காது ஒழுக்க சீலர்கள்” என்று அறிவுஜீவிகளால் பாராட்டப்படுகிற இவர்கள், சிக்கிக் கொள்ளும் அளவுக்கு முட்டாள்கள் அல்ல என்பதுதான் உண்மை. 20,30 சினிமா படங்களை அருவெறுப்பாக எடுத்துக் கொள்ளையடிக்கிறார்கள் என்றால் அவற்றுக்கு நடுவே ஒரு அற்பத்தனமான, பத்தாம்பசலிக் குடும்பப் படத்தையும் எடுத்து காசு பார்ப்பது போன்றது போலி கம்யூனிச கட்சிகளின் செயல். ஏற்கெனவே பன்றித் தொழுமாகி விட்டது நாடாளுமன்ற ஜனநாயகம். அந்தப் பன்றிகள் மீது பன்னீர் தெளித்து மணம் பரப்புவதுதான் இவர்கள் வேலை.

“””நாடாளுமன்ற ஜனநாயகம் என்பதே கேலிக் கூத்து’ என்று காலம் காலமாக தீவிர கம்யூனிஸ்டுகள் சொல்லி வருவது உண்மைதானோ என்று பொதுமக்கள் வீதிக்கு வீதி பேசும் நிலை ஏற்பட்டிருக்கிறது” என்று எழுதுகிறது, பிரபல பார்ப்பன கிசுகிசு ஏடான ஜூனியர் விகடன். இதே அச்சம்தான் போலி கம்யூனிஸ்டுகளுக்கும்! ஆனாலும் இந்த உண்மையை என்ன செய்தும் மூடி மறைத்துவிட முடியாது!

– ஆர்.கே.

நன்றி: புதிய ஜனநாயகம் 2006

தொடர்புடைய பதிவுகள்:

எம்.எல்.ஏ வுக்கு பொறுக்கித் தின்ன மட்டுமே அதிகாரம்! ஆள்வதற்கல்ல!!

கோடிகளில் கொழிக்கும் மத்திய அமைச்சரவை ! பி.சாய்நாத் !!

தேர்தல் சீர்திருத்தம் மூலம் ஊழல் மறையுமா? கேள்வி-பதில்

ஜனநாயம் எனபது லட்சியமா, வழிமுறையா?

ஜனநாயகம் என்பது லட்சியமா, வழிமுறையா?

பதினைந்து தேர்தல்களாய்

பாலைவனப் பயணம்

ஜனநாயகம் வாழ்வதற்கு

மக்கள் தந்த விலை

மரணம்!


கட்டுரையை கிழே க்ளிக் செய்து படிக்கவும்

********************************************************

http://i164.photobucket.com/albums/u35/poarmurasu/jana1.jpg

http://i164.photobucket.com/albums/u35/poarmurasu/jana2.jpg

http://i164.photobucket.com/albums/u35/poarmurasu/jana3.jpg

நன்றி மே 2004 புதிய கலாச்சாரம்

பொன்னான ஆகஸ்டு பதினைந்து…

ஆகஸ்டு பதினைந்து. தெருவெங்கும் தோரணங்கள். செவியை பிளக்கும் ‘சுதந்திரகீதங்கள்’. முச்சந்திகளில் முளைத்திருக்கும் சாமியானா பந்தல்கள். கதர்சட்டை போட்ட கந்துவட்டி அன்னாச்சியிலிருந்து, சபாரிசூட் போட்ட ரியல்எஸ்டேட் அதிபர் வரைக்கும் அவரவர் தகுதிக்கேற்ப மிட்டாய் கொடுத்தும் பிரியாணி வழங்கியும் பரிமாறிக்கொண்டனர் ‘சுதந்திரதின’ வாழ்த்துக்களை!

அயிட்டம் பாட்டுக்கு ஆடிச்செல்லும் அம்மணிகளை அழைத்து வந்து, அர்ஜூனின் ‘தேசபக்தி காவியங்களை’ திரையிட்டு, தொலைக்காட்சிகளும் கொண்டாடின ‘சுதந்திரதின’த்தை! இந்தக் கூத்துக்களுக்கு இது அறுபத்து மூன்றாமாண்டு.

தொலைக்காட்சிக்குள்ளே தலையைவிட்டுக் கொண்டு பொழுதைக் கழிப்பதில் எனக்கு அவ்வளவு சுவாரசியமில்லை. கூடவே ‘சுதந்திரதின’ சிறப்பு நிகழ்ச்சிகளை பார்க்கும் அளவுக்கு பொறுமையுமில்லை. வீட்டிற்குள்ளே அடைபட்டுக்கிடக்க மனமில்லை. ‘சுதந்திரமாய்’ வெளியே சென்று சுற்றிவிட்டு வரவேண்டும் எனக்கு.

எட்டாங்கிளாசில் என்கூட படிச்ச சோமசுந்தரத்தை பார்த்து வரலாமென திடீர் திட்டம். மதுரவாயலில் அவன் வீடு. ஆசியாவின் மிகப்பெரியதும் ‘சகலவசதி’களும் நிறைந்ததுமான கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில்தான் இருக்கிறது மதுரவாயல். நாசியைத் துளைக்கும் நெடி, கூவத்தின் கரையெங்கும் குறுக்கும் நெடுக்குமாய் அவலட்சனமாய் அமைந்திருக்கும் அந்த குடிசைகளில் ஏதோ ஒன்றுதான் சோமுவின் வீடு.

ஏற்கெனவே, ஒன்றிரண்டு முறை சென்றிருக்கிறேன் என்றாலும், வாரமலரில் வரும் புதிர்விளையாட்டுக் கோடுகளைப் போலவே, தலையைச் சுற்றவைக்கும் அந்த தெருக்கள் இன்னும் பரிச்சயமாகவில்‌லை. வடக்கு தெற்கு தெரியாமல் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்த அனுபவமும் இருக்கிறது. டயர்வண்டி ஓட்டித்திரிந்த அரைடிக்கட்டுகளிடம் கேட்டு விசாரித்துக் கொண்டே, ஒரு வழியாய் போய்ச்சேர்ந்தேன் சோமுவின் வீட்டுக்கு.

சென்ற முறை பெய்த மழைவெள்ளத்தில் அடித்து சென்றது போக, செங்களோடு ஒட்டிக்கொண்டிருந்தது செம்மண்பூச்சு. போன பொங்கலுக்கு அடிச்ச சுண்ணாம்பின் அடையாளம் தெரியாதபடிக்கு அப்பிக்கொண்டிருந்தது அடுப்புக்கரி.

பல வருடங்களுக்கு பிறகு வந்திருக்கிறேன் என்றாலும் என்னை அடையாளம் கண்டு, பேரைச்சொல்லி கூப்பிட்டு, நலம் விசாரித்தாள் சோமுவின் தாயார். மதிய உணவு அப்போதுதான் தயார் செய்துகொண்டிருந்தார். வந்த களைப்பிற்கு இதமாய் இருந்தது அவர் வழங்கிய நீராகாரம்.

சோமுவைப் பற்றி விசாரித்தேன். எட்டாங்கிளாசோடு படிப்பை நிறுத்திவிட்டு டிரைவிங் கற்றுக்கொண்டான் என்றும், தற்போது மெக்கானிக்செட் ஒன்றில் வேலை பார்ப்பதாகவும் கூறியதைக் கண்டு கலக்கமுற்றேன். பள்ளிப் படிப்பில் அவனுக்கு கீழ்தான் நான். படிப்பிலும் விளையாட்டிலும் படுசுட்டி சோமு. மதுரவாயல் கபடி டீம் கேப்டனாகவும் இருக்கிறான் என்பதுதான் எனக்கு ஆறுதலான ஒன்று.

ஊருக்குதான் ‘சுதந்திரதின’ கொண்டாட்டம். அவனுக்கு இல்லை. ஏதோ கல்கத்தாவிலிருந்து வந்த லாரி ஒன்றை அவசரமாக பழுதுநீக்கி தரவேண்டுமென்று காலையிலே அழைத்து சென்றுவிட்டதாய் தெரிவித்தார் சோமுவின் தாயார். சற்றுநேரம் குடும்ப விசாரிப்புகளை முடித்துக் கொண்டு மெக்கானிக் ஷாப்பிலே அவனை பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறிவிட்டு கிளம்பினேன்.

சரக்கு லாரிகள் வரிசையாய் நிறுத்தப்பட்டிருந்த தேசிய நெடுஞ்சாலையில் ஓர் ஓரமாய் ஒதுங்கியிருந்தது அந்த மெக்கானிக் ஷாப். கிழிசலும் கிரீசும் மலிந்திருந்த முரட்டுத் துணியுடுத்தி மும்மரமாய் இயங்கிக் கொண்டிருந்தான் என் சோமு, அந்த லாரிக்கடியில்.

முன்னங்கையால் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துக்கொண்டு, அதிர்ச்சி விலகாத விழிகளை மூடித்திறந்தபடியே வந்துநின்றான் என் முன்பு. “டேய் சம்பு பார்த்து எவ்ளோ நாளாவுது எப்படீடாயிருக்க” அவன் குரலில் ததும்பி வழிந்தது ஆறு வருடங்களுக்கு முந்தியிருந்த அதே உற்சாகம்.

“டேய் சம்பு கொஞ்சம் பொறுடா, இன்னும் கால் அவர்ல வேலையை முடிச்சிருவேன். வண்டி உடனே கல்கத்தா கிளம்பனும். ரொம்ப அர்ஜென்ட் வேலை. சாரிடா” அவனிடமிருந்து அடுத்தடுத்து விழுந்தது வார்த்தைகள். வெற்று புன்னகையைத் தவிர வேறொன்றும் வெளிப்படவில்லை என்னிடம்.

சோமு வரவழைத்திருந்த தேநீரைப் பருகிமுடிப்பதற்குள் அவனும் தயாரானான். பழைய நினைவுகளை அசைபோட்டபடியே அவன் வீட்டையடைந்தோம். மதிய உணவு அவனோடுதான். தக்காளி மசியலில் இரண்டு முட்டையை அவித்து போட்டிருந்தார் சோமுவின் தாயார். “நீ வருவன்னு முன்னமே சொல்லக்கூடாது தம்பி, ரெண்டுநாளா மார்கெட்டுக்கு போவலை. நீ வந்த நேரத்துக்கு வீட்ல காயிகூட இல்லை.” உண்மையிலே வருத்தப்பட்டுக்கொண்டார் அவர். “அதனால் என்னம்மா இன்னொருநாள் சொல்லிட்டு வாரேன்” என சொல்லிவைத்தேன்.

“என்ன சோமு வீட்டை கொஞ்சம் சரிபண்ண கூடாதாடா? மழையில எப்படிடா சமாளிக்கிறீங்க” வெகுளியாய் கேட்டேன். “அதையேண்டா கேக்குற இதுவே இன்னிக்கா நாளைக்கானுட்டுருக்குது. நாங்க இங்க வந்து வருசம் இருபது ஆகுது. இப்ப திடீர்னு கார்ப்பரேசன்லேருந்து வந்து கூவம் ஆத்துக்குமேலே அதிஉயர் மேம்பாலம் கட்டப்போறோம். வீட்டை காலிபண்ணுங்கன்னு எல்லாத்தையும் மிரட்டிட்டு போயிருக்கான். அதிகாரிலேருந்து அமைச்சர் வரைக்கும் கேட்டுப்பார்த்தும் நமக்கு சாதகமான நிலைமை எதுவுமில்லைடா. வெறுத்துப்போச்சு. இப்படியே வருசம் ஒன்னும் ஓடிடுச்சி. என்ன பன்றதுன்னே தெரியலை” என நொந்து கொண்டவனிடம் ஆறுதலாய் பேசக்கூட வார்த்தைகளில்லை என்னிடம்.

“சரி நேரமாச்சு நான் கிளம்புறேன். நாளைக்கு காலேஜுக்கு போகனும்.” விடைபெற்றுக் கொண்டேன் அந்தக்குடும்பத்திடமிருந்து.
“சரி வா சம்பு போகலாம்.” என கூடவே வந்தான் சோமு.

அந்த குடிசைகளையொட்டி எழும்பியிருந்த ஆளுயுர காம்பவுண்ட் சுவற்றை கையால் உரசியபடியே நடந்து சென்றோம். கூவத்தை மறித்து கம்பீரமாய் கட்டப்பட்டிருந்தது அந்தக் கட்டிடம். அதன் முகப்பு டாக்டர் எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி என்று அடையாளப்படுத்தி நின்றது. ஆயிரம் கேள்விகள் மனதில் தோன்றி மறைந்தாலும் என் வாயில்தான் வந்து தொலைக்கவில்லை. என்னதான் இருந்தாலும், இந்த விசயத்தில் ஏ.சி.எஸ்.க்கு இருக்கும் ‘சுதந்திரம்’ அந்த ஏழைகளுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் கிட்டிடுமா என்ன? சரி, அது கிடக்கட்டும்.

நீண்ட மௌனத்திற்கு பிறகு, மெல்ல பேசினான் சோமு.
“நாங்க கூட எவ்வளவோ தேவலாம் சம்பு. இங்க பாலம் கட்டறதுக்காக வடமாநிலங்களிலிருந்து வந்து வேலைசெய்யிறவங்களை நினைச்சா, ரொம்ப வேதனையாயிருக்கு. இது எல்லாம் என்ன பிழைப்பு என என்னத்தோனும். பாவம் அவர்கள். சொந்த பந்தங்களை விட்டுட்டு, வருசம் முழுதும் அநாதையா இங்க கிடக்கிறாங்க. ஒண்ட குடிசை கூட இல்லை. காத்து மழைக்கு தாங்காத வெறும் தகர சீட்டு போட்ட கூடாரத்துலதான் வாழ்க்கையை ஓட்டுறாங்க.” என அவர்களுடைய வாழ்க்கைக்கான போராட்டத்தை விவரிக்கத்தொடங்கினான், சோமு.

“அடச்சே என்ன வாழ்க்கை இது. ஊருல விவசாயம் பண்ணி போண்டியாய் போன ஆளுங்களையெல்லாம், காண்ட்ராக்ட்காரனுங்க பத்தாயிரம் இருபதாயிரம் மொத்தமா தாரேன்னு சொல்லி குடும்பத்தோட அங்கயிருந்து கூட்டிட்டு வந்திடுறானுங்க. இங்கவந்ததும் அடிமை மாதிரி வேலை வாங்கிட்டு, அன்னன்னைக்கு வயித்த ரொப்ப ஒரு குடும்பத்துக்கு அம்பதோ அறுபதோ தர்ரானுங்க. அதில வேலைசெஞ்ச களைப்பு தீர முப்பது நாப்பதுக்கு ஆம்பிள ஆளுக பாக்கெட் சாராயத்தை ஊத்திகிரானுங்க. மிச்ச இருக்கறதுல்ல, ‘கலைஞர் அரிசி’யை பிளாக்ல வாங்கி பொங்கி திங்கிறாங்க. அந்த கொழந்த குட்டிக என்ன பாவம் செஞ்சிச்சோ தெரியலை. படிப்புமில்லாம ஊட்டமுமில்லாம இவங்க கூடவே கிடந்து வதைபடுதுங்க.

நோய் நொடின்னு வந்தா டாக்டருகிட்ட போக காசு பணம் இல்லாம திண்டாடுறாங்க. அதுல பலர் வேற வழியே இல்லாம, காண்ட்ராக்ட் காரண்ட்டேயும் லாரி டிரைவருகிட்டேயும் பொண்டாட்டிங்களையே அனுப்பி வைக்கிற கொடுமையும் நடந்துட்டுருக்குது” என மூச்சிறைக்க சோமு சொல்லி முடித்த போது, நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பனை சந்தித்த சந்தோசம் அது தோன்றிய கனமே மறுத்துப்போயிருந்தது. இத்தனை காலம் நான் அறிந்திராத வேறோர் உலகை கண்டு மனம் சிறுத்துப்போனது. வழக்கம் போல வார்த்தைகள் எதுவுமின்றி, வெறுமை அப்பிய புன்னகையோடு வெளியேறினேன் மதுரவாயலை விட்டு.

ஆம். இன்று ஆகஸ்டு பதினைந்து. தெருவெங்கும் தோரணங்கள். செவியை பிளக்கும் ‘சுதந்திரகீதங்கள்’. முச்சந்திகளில் முளைத்திருந்தன சாமியானா பந்தல்கள். கதர்சட்டை போட்ட கந்துவட்டி அன்னாச்சியிலிருந்து, சபாரி போட்ட ரியல்எஸ்டேட் அதிபர் வரைக்கும் அவரவர் தகுதிக்கேற்ப மிட்டாய் கொடுத்தும் பிரியாணி வழங்கியும் பரிமாறிக்கொண்டிருந்தனர் ‘சுதந்திரதின’ வாழ்த்துக்களை!

-சம்பு.

காஷ்மீரில் காணாமல் போனவர்கள் – பத்திரிக்கை செய்திகளின் உண்மை முகம்

காஷ்மீர் மக்கள், தனது உரிமைக்காக போராடுவதை எவ்வாறு பத்திரிக்கைகள் மறைக்கின்றன என்பதையும், எவ்வாறு அம்மக்களின் மனித உரிமையை இந்திய இராணுவம் மீறுகின்றது என்பதை டெல்லியில் உள்ள காஷ்மீரில் காணாமல் போனவர்களின் பெற்றோர் சங்கத்தோடு தொடர்புடைய உமா சக்ரவர்த்தி அம்பலப்படுத்துகிறார் (டைம்ஸ் ஆப் இந்தியா, 14/09/2009).

– பத்திரிக்கைகள் உண்மையான செய்தியை முழுமையாக தருவதில்லை. அவை, சம்பவத்தின் ஒரு பகுதியை மட்டும் வெளியிடுகின்றன. இவை, இந்தியாவில் உள்ள நடுத்தர வர்க்கத்தை, காஷ்மீர் பிரச்சனை அம்மக்கள் தேர்தலில் வாக்களித்ததால் முடிந்துவிட்டது என்று நம்பச் செய்வதாகவே உள்ளது.

– எந்த பத்திரிக்கையும் ஆயுதப்படையின் சிறப்பு அதிகாரம், கற்பழிப்பு, சிறையில் நடக்கும் கொட்டடி கொலைகள், இராணுவ மற்றும் ஆயுதப்படையின் ஆள் (உரிமைக்காக போராடுபவரை) கடத்தல் போன்றவற்றை பற்றி பேசுவதே இல்லை.

ஆக மொத்தம், இந்திய பத்திரிக்கைகள் காஷ்மீர் மக்களுக்கு துரோகத்தையே செய்கின்றன. அதை தேச பக்தி என்ற புதைசேற்றில் அடைத்துவிடுகின்றன.

1 ரூபா அரிசி வரமா? சாபமா?

New Microsoft PowerPoint Presentation

ஆந்திராவில் 40 நாளில் 21 விவசாயிகள் தற்கொலை – போலி சுதந்திரதின கொண்டாட்டம் தேவையா?

“எந்த ஒரு நாடு தன்னுடைய விவசாயிகள் தற்கொலை செய்வதை கண்டுகொள்ளவில்லையோ, அந்நாடு பட்டினி என்ற கொடுங்சித்தரவதைக்கு தயார் ஆகிவிட்டது என்று அர்த்தம்.”

———————————————————————————

ஆந்திர மாநிலம் தெலுங்கானா மற்றும் ராயலசீமா பகுதியில் பருவ மழையும் பொய்த்தது. மழையை நம்பி விவசாயம் செய்த விவசாயிகள் பலத்த ஏமாற்றமடைந்தனர். சிலர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த 40 நாளில் 21 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டோன்சந்தா கிராமத்தை சேர்ந்த ஞீமண்ணா என்ற விவசாயி தூக்கில் தொங்கினார்.

விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை ஆந்திர மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டியும் ஒப்புக் கொண்டுள்ளார். அனந்தஞீர் மாவட்டத்தில் 11 பேரும், அடில்லாபாத்தில் 4 பேரும், வாராங்கல் பகுதியில் 3 பேரும், மேடக் மாவட்டத்தில் 2 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது (தினபூமி, 17/08/2009).

———————————————————————————————–

இது விவசாயிகளின் முதல் தற்கொலை அல்லவே. கடந்த 10 வருடங்களில் இரண்டு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

ஏன் இந்த தற்கொலைகள்?

எப்போது இருத்து தனியார்மயம்- தாராளமயம் – உலகமயம் முழு விச்சில் நடைமுறைப்படுத்தபட்டதோ, அப்போதிருந்து விவசாயிகள் படும் கஷ்டம் ஒன்றா? இரண்டா?

அதிக விலையில் உரம், மருந்து, விதைகள்…

தேவையோ பணம்…

வழியோ அதிக வட்டி கடன்…

ஆனால் விவசாய விளைபொருளின் விலையோ பிச்சைகாசு…

இப்போது சொல்லுங்கள், ஏன் இத்தனை வருடங்கள் அரசு இரண்டு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்தும் கண்டுகொள்ளவில்லை?

நீங்கள் கொண்டடுவது உண்மையா சுதந்திரம் என்றால் ஏன் இத்தனை தற்கொலைகள்?

ஏன், அந்த விவசாயிகள் இந்தியாவை சேர்ந்தவர்கள் இல்லையா?

நாட்டிக்கே சோறு போடும் விவசாயிகளுக்கு இந்த நிலைமை என்றால் நாளை இந்தியாவின் நிலைமை என்ன?

காங்கிரஸ் கட்சியில் செந்தில்-கவுண்டமணி!

காட்சி: 1


செந்தில்:
அண்ணே, நம்ம கட்சி தான் அன்றைக்கு வெள்ளைக்காரனுடன் போராடி சுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சின்னு அடிக்கடி சொல்றீங்க. ஆனா நம்ம கட்சியை ஆரம்பித்ததே “ஹீகூம்” ன்ன வெள்ளைக்காரனு சொல்றாங்களேனே, அது உண்மையானே?

கவுண்டமணி:
ஆமாண்டா. ஆனா இது ஜனங்களுக்கு தெரியாதுடா, நாம தான் புத்தகத்தில் மாத்தி எழுதிவிட்டோம்ல. எவனையாவது நடுராத்தியிலே எழுப்பி ‘இந்தியாவிற்கு சுந்திரம் வாங்கி கொடுத்தது யாருன்னு?’ கேளு. அவன் ‘நம்ம மகாத்மா’ன்னு தான் சொல்லுவான்.

அவரு ஒரு பிரிட்டிஸ் ஆள்காட்டி தானு இப்ப “நாமளே” போய் சொன்னாலும் நம்ப மாட்டானுங்க. அந்த அளவுக்கு ஜனங்களை பிரெய்ன் வாஷ் பண்ணாச்சுடா.

செந்தில்:
பாவம் ஜனங்கனே!

காட்சி: 2

கவுண்டமணி:
டேய் என்னடா ஆச்சு உனக்கு?

செந்தில்:
அண்ணே நேற்று அணுசக்தி ஒப்பந்தத்தில் சில பக்கத்தை பொழுதுபோகாமல் படிச்சு தொலைச்சுட்டேனே, மனசே சரியில்லைன்னே…

இந்த அளவுக்கு ஆணே நம்ம நாட்டை அமெரிக்காவுக்கு கூட்டி கொடுக்குறது..

கவுண்டமணி:
அடே எவ்வளவு நாளைக்கு தாண்டா ஆயிரக்கணக்கான கோடியினை கொள்ளையடிக்குறது, மீண்டும் மக்களை போய் சந்திச்சு வாக்காளப் பெருமக்களே என இழிப்பது?
அதுக்கு தான் நம்ம கூட்டாளி பசங்களான பாசக, போலி கம்யூனிஸ்டு என எல்லா பயலோடவும் பேசி இந்த ஏற்பாட்டை பண்ணோம்.

மொத்தமாக நாட்டை விக்குறது., லட்சக்கணக்கான கோடியினை சுருட்டி விட்டு எஸ்கேப் ஆகுறது.

செந்தில்:
அப்ப தேர்தல் கிடையாதானே?

கவுண்டமணி:
ஆமாண்டா, இன்னும் கொஞ்ச நாளைக்கு தான் இந்த தேர்தல் எல்லாம்.

செந்தில்:
அப்ப மக்கள் போராட மாட்டாங்க

கவுண்டமணி:
டேய், இன்னைக்கு ஓட்டு உரிமையை தவிர எந்த உரிமையும் தரலை. ஜனங்க என்ன போராடிகிட்டா இருக்காங்க. அப்புறமா “தேர்தலுன்னு ஒன்னு இல்லை” சொன்னவுடன் அப்படியே மக்கள் கிளர்ந்து எழ இது என்ன மக்கள் அரசாடா!

நாம எவ்வளவு அடிச்சாலும் இந்த ஜனங்க நம்மளை ரொம்ம நல்லவேன்னு தான்டா சொல்லுவாங்க…

செந்தில்:
நம்ம வடிவேலு பய மாதிரி கரக்டா சொல்லிட்டேங்கணே….

Related:

காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு

கொள்கை கூட்டணி ஒவ்வொனுக்கும் என்ன பின்னணி!

 ஒலி வடிவில் கேட்க இங்கே சொடுக்கவும்

http://www.snapvine.com/bp/ceB85BYzEd6nWQAwSFxxvg

தொடர்புடைய பதிவுகள்:

அண்ணன் வர்றாரு

“தேர்தல் பாதை………. திருடர் பாதை! ” – ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி

தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் – கட்டுரை 1

தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் – கட்டுரை 2

“தேர்தல் பாதை………. திருடர் பாதை! ” – ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி

தேர்தல் பாதை………. திருடர் பாதை! “
ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி

” ஓட்டுப்போடாதே புரட்சி செய் ” – மக்கள் கலை இலக்கிய கலகத்தின் புகழ் பெற்ற வாசகம்.உலகமய ,தாராளமய, தனியார்மய எதிர்ப்பை முன் வைத்து தீவிரமாக செயல் படும் ம க இ க ஒவ்வொரு தேர்தலிலும் “ஓட்டு போட வேண்டாம்” என்று மக்களிடம் பிரச்சாரம் செய்கிறது.  ம க இ க வின் பொதுச்செயலாளர் மருதயைனை சந்தித்தேன்.
மக்கள் ஏன் ஓட்டு போடக்கூடாது?

” ஓட்டு அரசியல் என்பது, வேறு மாற்று தெரியாமல், பழக்கமாகிவிட்டதால் பின்பற்றபடும் ஒரு நடைமுறை.பழனிகோயிலுக்கு போகும் பக்தனுக்குக்கூட “முருகனுக்கு மொட்டை போட்டால்  ஏதாவது நல்லது நடக்கும்” என்ற நம்பிக்கை இருக்கிறது. வாக்காளனுக்கோ அந்த நம்பிக்கை கூட கிடையாது. இருந்தாலும் ஓட்டுப் போடுகிறார்கள் என்றால், அது வேறு வழி இல்லாத கையறு நிலை. இன்னொரு வகையில் கருணா நிதி மீதும் செயலலிதா மீதும்  உள்ள கோபத்தை மாற்றி மாற்றி தணித்துக்கொள்ளும் ஆசுவாசம். இது ஒரு புறமிருக்க, அரசியல் வாதிகள் வாக்காளர்களை ஊழல் மயப்படுத்தி இருக்கிறார்கள் என்பதற்கு திருமங்கலம் இடைத்தேர்தலே அண்மைக்கால சாட்சி.”
வாக்குரிமை என்பது ஓர் அடிப்படை சன நாயக உரிமை தானே?”
” நாங்கள் தேர்தலே தப்பு என சொல்லவில்லை. இது ஒரு போலி ஜன நாயகம் என்கிறோம். ஓட்டு போடும் உரிமை மட்டுமே ஜனநாயகத்தை முழுமை  செய்துவிடாது. அது ஜனநாயக உரிமைகளில் ஒன்று. நம் நாட்டில் மக்கள் ஓட்டுரிமையைத்தவிர, வேறு எந்த உரிமையை கேட்டாலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் அதை விரும்புவதும் இல்லை, அளிப்பதும் இல்லை. கல்வி,

வேலை, உணவு போல பேச்சுரிமை கூட அடிப்படை உரிமை தான். இந்த  உரிமைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வாக்குரிமை மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்பது ஜனநாயகமா என்ன?”
அப்படியானால்  என்னதான் உங்கள் மாற்று அரசியல்?”

“இந்தப்போலி ஜன நாயகத்தை அம்பலப்படுத்தி வேறு ஒரு மாற்று பற்றிய நம்பிக்கையைக் கண்டறிவது தான் சிறந்த தீர்வாக இருக்க முடியும். நாங்கள்”புதிய ஜனநாயகம்” என்ற மாற்றை சொல்கிறோம். அதிலும் தேர்தல் உண்டு . ஆனால் அது “வாக்காளப் பெருமக்களே” என்று அழைக்கின்ற தேர்தலாக இருக்காது. டாடாவையும் டாடாவால் துப்பாக்கி சூடு வாங்கிய  சிங்கூர் விவசாயிகளையும்  சமப்படுத்தி “வாக்காளப் பெருமக்கள்” என்ற ஒரே வரையறையின் கீழ் எப்படி கொண்டு வர முடியும்? சட்டம் இயற்றுவது சட்ட மன்றம் அதை அமல் படுத்துவது அதிகார வர்க்கம் என்ற இப்ப்பொதுள்ள இரட்டை ஆட்சி முறை ஒழித்துக்கட்டப்பட்டு, மக்கள் பிரதிநிதிகளே சட்டத்தை அமல் படுத்தும் அதிகாரம் உள்ளவர்களாகவும்  இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் பிரநிதிகளை திரும்ப அழைக்கும் அதிகாரமும் மக்களுக்கு இருக்க வேண்டும். இந்த உத்திர வாதங்கள் தான் ஜனநாயகத்தை பெரும்பான்மை மக்களின் நலனுக்கானதாக ஆக்கும். அப்படி ஒரு மாற்று தான் ஏற்கனவே ரஷ்யாவிலும் சீனாவிலும் அமலில் இருந்தது

“சோவியத் யூனியன் உடைந்து விட்டது. சீனாவிலும் இப்போது முதலாளித்துவ ஆட்சிதான் அப்படியானால்?”

“இந்தியாவின் தேர்தல் ஜன நாயகம் மட்டும் வெற்றி அடைந்ததாக சொல்ல முடியுமா என்ன? ஒரு வரலாற்று கண்ணோட்டத்தில் பார்க்கும் போது  கம்யூனிசத்துக்கு ஏற்பட்ட பின்னடைவு மிகச்சாதாரண விசயம். பெரும்பான்மை மக்கள் நலனுக்கான ஒரு புதிய மக்கள் அரசை உருவாக்குவதற்கு  நீண்ட நெடிய போராட்டம் தேவைப்படும். “அது தோற்று விட்டதே” என்பது அது தோற்றுப்போவதில் மகிழ்ச்சியடைபவர்கள் சொல்லக்கூடிய கருத்து. ஏன் தோற்றது என்பதை ஆராய்ந்து, இனி தோற்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ , அதைசெய்ய வேண்டும். கம்யூனிசம் தோற்றுவிட்டது என்றால், நேபாளத்தில் மட்டும் எப்படி வென்றது? நேபாளத்தில் ஜனநாயகம் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும் என்பதும் உண்மை”

“தேர்தல் புறக்கணிப்பு ஒரு புறம் இருக்கட்டும்…ஈழப்பிரச்சினை இந்ததேர்தலை எப்படி எதிரொலிக்கும்?”

“இப்போது தேர்தல் களத்தில் இருப்பது இரண்டே அணிகள் தான். ஈழத்தமிழர்களுக்கு எதிரிகள் அணி மற்றும் ஈழத்தமிழர்களுக்கு துரோகிகள் அணி. எனவே, தேர்தல் அரசியலை நம்பி இழ ஆதரவாளர்கள் ஏமாறக்கூடாது. ஈழத்தமிழர்களை படுகொலை செய்வது இலங்கை அரசு மட்டுமல்ல, இந்திய அரசும் தான். நாம்  கொடுக்கின்ற வரிப்பணமும், வழங்கியிருக்கின்ற அதிகாரமும் தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன. ஈழத்த்மிழனுக்கு காங்கிரஸ் மட்டும் தான் துரோகம் இழைக்கிறது என்பதில்லை. இத்ற்கு முந்தைய பா.ஜ.க ஆட்சியில் யாழ் கோட்டையைபுலிகள் சுற்றி வளைத்த போது , உள்ளே ஏறத்தாழ  20  ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள ராணுவத்தினர் சிக்கி இருந்தனர். அப்போது, “உடனே புலிகள் முற்றுகையை விலக்கி கொள்ள வேண்டும் இல்லையென்றால் இந்திய விமானங்கள் வரும்” என்று வாஜ்பாய் அரசு மிரட்டியது. முற்றுகை விலக்கப்பட்டது. இந்த்யா ஒருபோதும் தனி ஈழத்தை ஆதரிக்காது!”
” இது ஈழ ஆதரவாளர்களுக்கு தெரியாமலா இருக்கும் ?”

“யாராலும் அதிகம் பேசப்படாத கோணமும் இதில் இருக்கிறது.இந்தியா, இலங்கை தீவை தனது பொருளாதார நலன் சார்ந்தே அணுகுகிறது.இந்திய பெரு முதலாளிகளுக்கு இலங்கை என்பது ஒரு லாபமுள்ள சந்தை.டீ எஸ்டேட், வாகன மார்க்கெட், பெட்ரோல் பங்குகள், எண்ணைக்கிணறுகள்  என இந்தியாவின் அனைத்து பெரிய நிறுவனங்களுக்கும் இலங்கை ஒரு வர்த்தகச் சந்தை. “இலங்கையில் யுத்தத்தால் சீரழிந்த பகுதிகளை சீரமைக்க இந்தியா உதவும் என்று பிரணாப் முகர்ஜி சொன்னதன் பின்னால், இந்தியப்பெருமுதலாளிகளின் நலன் இருக்கிறது. நாளை பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தாலும் இதையே சொல்லும்..இதுதான் இந்திய அரசின் உண்மை முகம்!

இன்னொன்று, ஏதோ இலங்கையில்தான் போர் நடக்கிறது, இந்தியாவில் பாலாறும் தேனாறும் ஓடுகிறது என்று பேசுவது அயோக்கியத்தனம். இதுவரை காஷ்மீரில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களில் பல்லாண்டு காலமாக அறிவிக்கப்படாத ராணுவ ஆட்சிதான் நடந்து வருகிறது. எந்த ஓர் இனத்தையும், அந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் விரும்பாத மக்கள்விரும்பாதபட்சத்தில், அவர்களை அந்நாட்டில் ஆட்சியின் கீழ் இருத்தி வைக்கக்கூடாது. அதுதான் தேசிய இனங்களின் தன்னுரிமை.இந்த நியாயம்  ஈழத்துக்குமட்டுமல்ல, காஷ்மீருக்கும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் பொருந்தும்”
“இந்திய இறையாண்மை பற்றி இப்போது அடிக்கடி பேசப்படுகிறது. கைதுகள் நடக்கின்றன.இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்.?”

“அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் இந்திய இறையாண்மையை அமெரிக்காவிடம் விற்ற மன்மோகன் சிங் தான் இப்போது இந்தியாவின் பிரதமர். அவர் படத்தை கொளுத்தினால் தேசியப்பாதுகாப்பு சட்டம் பாயும் என்று கருணாநிதி சொல்வது எவ்வள்வு அபத்தம். ஒரு கருத்தினை தெரிவிக்கக்கூட உரிமை இல்லாத ஒரு நாட்டில் ஜன நாயகம் இருக்கிறது, வாக்குரிமை இருக்கிறது என்று சொல்வதை போல ஒரு கேலிக்கூத்து வேற் எதுவும் இல்லை. அதனால் தான் மீண்டும்

வலியுறுத்திச் சொல்கிறோம் “தேர்தல் பாதை………. திருடர் பாதை! “

நன்றி kalagam

சொல்லாத சோகம் யாரும் வெல்லாத வீரம்!!

sollaatha soogam
sollaatha soogam.w…
Hosted by eSnips

இந்த பாடலை எப்போது கேட்டாலும் நெஞ்சின் ஆழத்தில் ஏதோ ஒரு இனம் புரியாத வலியை உண்டாக்கும்