• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,819 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

காக்கிச்சட்டை ரவுடிகளுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்!


காக்கிச்சட்டை ரவுடிகளுக்கு எதிரான ஆர்பாட்டம்

துரவாயல் கொலை வழக்கில் இரு அப்பாவி இளைஞர்களையும், இரு பு.மா.இ.மு தோழர்களையும் கடத்தி  வைத்திருந்த போலீசிடம் பகுதி மக்களும் பு.மா.இ.மு தோழர்களும் விடுவிக்கக்கோரிய போது அவர்களை குற்றவாளிகள் என்று கூறியது போலீசு. அப்பாவிகளான அவர்கள் மீது பொய் வழக்குகளை போட்டு சிறையிலடைக்கும் போலீசின் முயற்சியை எதிர்த்து நின்ற தோழர்கள் மீது போலீசு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதலில் ஐந்து தோழர்கள் மிகக்கடுமையான தாக்குதலுக்குள்ளாயினர். அடித்து தாக்கியதுடன் 64 பேர் மீது பொய் வழக்குகளையும் போட்டு சிறையில் தள்ளியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை பிணையில் விடுவதற்கும் மறுத்து வருகின்றனர்.  பாசிச ஜெயாவின் இந்த போலீசு ஆட்சியை கண்டித்து சுவரொட்டி ஒட்டிய இரு தோழர்களையும் கைது செய்து மிரட்டி, அவர்ளுடைய பெற்றோர்களை வரவழைத்து நக்சல் பீதியூட்டியுள்ளது.

தமிழகத்தில் நடக்கும் இந்த போலீசு ஆட்சியை கண்டித்து பு.மா.இ.மு கடந் 3- ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது. ஒரே நேரத்தில் காங்கிரசுக்கும் பு.மா.இ.முவிற்கும் அனுமதி கொடுக்கப்பட்டிருந்ததால் ஆர்ப்பாட்டம் மறுநாள் தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 11 மணிக்கு மெமோரியல் ஹால் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பு.மா.இ.மு ஆர்ப்பாட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்பதற்காகவே போலீசு வேண்டுமென்று காங்கிரசுக்கு அதே நேரத்தில் ஆர்ப்பாட்டம் கொடுத்திருந்தது. ஆனால் தோழர்கள் உறுதியாக நடத்துவோம் என்று போராடிய பிறகே மறுநாள் நடத்திக் கொள்ள அனுமதி கொடுத்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு பு.மா.இ.மு மாநில அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் செ.சரவணன் தலைமை தாங்கினார். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தை சேந்த தோழர் சுரேசும், பு.மா.இ.மு மாநில அமைப்பாளர் தோழர் த. கணேசனும் கண்டன உரையாற்றினர்.

சரவணன் பேசும் போது,  போலீசு கும்பலின் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு என்ன காரணம் என்பதை விளக்கினார்.  மதுரவாயல் பகுதியில் போலீசுக்கும் சமூக விரோதிகளுக்குமிடையில் இருக்கும் கள்ளக்கூட்டும், அந்த கள்ளக்கூட்டணிக்கு பு.மா.இ.மு தடையாக இருந்து வருவதும் தான் இந்த தாக்குதலுக்கான உண்மையான காரணம். எங்களுக்கு இது போன்ற அடக்குமுறைகள் ஒன்றும் புதியதல்ல.  உழைக்கும் மக்களின் துணையோடு இதையும் எதிர்கொள்வோம் போலீசு அராஜகத்தை முறியடிப்போம் என்று கூறி தலைமை உரையை முடித்தார்.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர் தோழர் சுரேஷ் பேசும் போது, புரட்சிகர அமைப்புகள் இது போன்ற அடக்குமுறைகளை எதிர்கொள்வது சகஜமானது தான். புரட்சிகர அமைப்புகளை ஒடுக்கி வைக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் தான் இந்த வழக்குகள் அனைத்தும் புனையப்பட்டுள்ளன.  நீங்கள் இதை எதிர்கொள்ளுங்கள் ம.உ.பா.மை உங்களுக்கு துணையாக இருக்கும்.

காவல்துறை மட்டுமல்ல நீதித்துறையும் கூட காவல்துறையை போலவே செயல்படுகிறது. போலீசு சொல்வதை அப்படியே கேட்டுக்கொண்டு தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.  எனவே போலீசை மட்டுமல்ல நீதிமன்றத்தையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது,  எதிர்கொள்வோம் என்று கூறி முடித்தார்.

இறுதியாக பேசிய கணேசன், போலீசு என்பது எப்படி கிரிமினல் கும்பலாக இருக்கிறது என்பதையும்,  இந்த போலீசு ரவுடிகள் நம்மை மட்டுமல்ல போராடக்கூடிய அனைத்து தரப்பு  மக்களையும் தான் தாக்கி வருகிறார்கள் என்பதையும்.  இத்தகைய மக்கள் விரோத போலீசு அமைப்பையே ஒழித்துக்கட்டுவது தான் இதற்கு தீர்வு என்றும் கூறினார். அத்துடன் கைது செய்யப்பட்ட தோழர்களை உழைக்கும் மக்களின் உதவியோடு வெளியில் கொண்டு வருவோம் என்று கூறி முடித்தார்.

பிறகு போலீசு குண்டர்களுக்கு எதிரான கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் ,இளைஞர்கள், பெற்றோர்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.  பேருந்துகளில் பயணித்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தை கவனித்தவாறே சென்றனர். பு.மா.இ.மு நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் போலீசு கும்பலுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்தது.

______________________________

முதல் பதிவு: வினவு

போலீசு தாக்குதல்: கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்!

தொடர்புடைய பதிவுகள்:

 பிரசுரம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

நக்கீரன்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் மீது கொலைவெறித்தாக்குதல்!

போஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு!

சென்னை புமாஇமு தோழர்கள், மக்கள் மீது காக்கி ரவுடிகள் தாக்குதல்!

நன்றி: புதிய ஜனநாயகம் செப் 2012

போலீசு தாக்குதல்: கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்!

தொடர்புடைய பதிவுகள்:

 பிரசுரம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

நக்கீரன்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் மீது கொலைவெறித்தாக்குதல்!

போஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு!

போலீசு தாக்குதல்: கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்!

கடந்த 25 ந்தேதி மதுரவாயலைச் சார்ந்த எமது அமைப்புத் தோழர்கள் திவாகர்,குமரேசன் ஆகியோரை பொய்வழக்கில் கைது செய்துமறைத்து வைத்து போலீசார்சித்திரவதை செய்தனர். தகவல் தெரிந்ததும் இதுபற்றி விசாரிக்க பதறியடித்துக் கொண்டுமதுரவாயல் போலீசு நிலையம் சென்ற அப்பகுதி மக்கள்,புமாஇமு தோழர்களை ஏ.சி சீனிவாசன் தலைமையிலான போலீசார் கொலை வெறியுடன்தாக்கினர். இதில் பெண்கள் உள்பட பலர்படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் 64 பேர் மீது பொய்வழக்குகள்போட்டு கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். பிணையில்விடவும் மறுத்து அராஜகம் செய்துவருகின்றனர்.

போலீசின் தாக்குதலுக்குள்ளான எமது அமைப்புத் தோழர்கள்  இருவர் சீரியசான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவம்பார்த்து வருகின்றனர்.  போலீசின் இத்தகைய அராஜகத்தைக் கண்டித்து ,இன்று 4.9.12   காலை 11 மணிக்கு மெமோரியல்ஹால் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பு.மா.இ.மு மாநிலஅமைப்புக்குழுஉறுப்பினர்  தோழர் செ.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில அமைப்பாளர் தோழர் த.கணேசன் கண்டன உரையாற்றினார்.இதில் மாணவர்கள் ,இளைஞர்கள்,  பெற்றோர்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

 தொடர்புடைய பதிவுகள்:

 பிரசுரம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

நக்கீரன்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் மீது கொலைவெறித்தாக்குதல்!

போஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு!

பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட மாநிலக்கல்லூரி மாணவர்கள் 32பேர் விடுதலை! பு.மா.இ.மு தலைமையில் போராடிய பெற்றோர்கள்-மாணவர்கள்-ஆசிரியர்களுக்கு வெற்றி!

தமிழக அரசே!

  • அடிப்படை வசதிகள் கேட்டு போராடிய மாணவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கினை திரும்பப் பெறு!

  • பொய் வழக்கு போட்ட D-1 காவல்நிலைய ஆய்வாளர் மீது நடவடிக்கை எடு!

  • கல்லூரிக்குள் போலீசை அத்துமீறி நிறுத்தி

         சிறைச்சாலையாக மாற்றாதே!

அனைத்து கல்லூரி மாணவ நண்பர்களே!

  • அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல்

           அரசு கல்லூரிகளை சீர்குலைக்கும்

            தனியார்மய கல்வி கொள்ளையை முறியடிப்போம்!

  • பெற்றோர்கள்-ஆசிரியர்களுடன் வீதியில் இறங்கி போராடுவோம்!

  • கழிவரை,குடிநீர்,கேண்டீன்,நூலகம், மாணவர் தேர்தல்,கலாச்சார விழாக்கள் போன்ற அடிப்படை வசதிகளை வென்றெடுப்போம்!

தொடர்புடைய பதிவுகள்:

எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?- 25.8.12 கருத்தரங்கம் – அனைவரும் வாருங்கள்!

லாபவெறியில் நீச்சல் பயிற்சியை காண்ட்ரக்ட் விட்ட திருமதி ஒய்ஜிபியை கைது செய்து சிறையில் அடைக்க போராடுவோம்!

அரசு பள்ளிகளில் கண்கானிப்பு கேமரா: மாணவர்களா? குற்றவாளிகளா?

மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர்களின் உறுதிமிக்க உள்ளிருப்பு போராட்டம் வெல்லட்டும்!

பல்கலை நிர்வாகமே!

நியாயமான உரிமைகள் கோரி போராடும் மாணவர்களை ஒடுக்காதே!

எடுமைமாட்டை போல் செயல்படாமல் மாணவர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்று!

மாணவர்களே!

நமது கோரிக்கைகளை  நிறைவேற்ற இறுதி வரை அணி திரண்டு போராடுவோம்!

தொடர்புடைய பதிவுகள்:

தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி புமாஇமு வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!

பெங்களூர் ஆஸ்போர்டு தனியார்பள்ளி : இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்(RTE) சாயம் வெளுத்தது!

கல்விப் பிச்சை வள்ளல் சூர்யா நமக்கு முன்மாதிரியா?

தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி புமாஇமு வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!

தஞ்சை சரோபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் தமிழக அரசு அறிவித்த இலவச மடிக்கணிணி வழங்க வேண்டும் என்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்தில் மாணவர்களிடம் உரையாற்றிய புமாஇமு தோழர்கள் மடிக்கணிணி மட்டுமல்ல மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ், மாணவர்களுக்கான உதவித் தொகை, கரண்ட் வசதி, தரமான உணவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சேர்த்து இந்த வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தினர். புமாஇமு தோழர் தீபன் தலைமையில் நடைபெற்ற இவ்வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் 1000 க்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டணர்

– புமாஇமு,தஞ்சை

போலீசு தாக்குதலைக் கண்டித்து கரூரில் புமாஇமு கண்டன ஆர்ப்பாட்டம்!

தொடர்புடைய பதிவுகள்:

தாக்குதல் நடத்திய காவல்துறையினரை கைது செய்ய கோரி திருச்சியில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

பு.மா.இ.மு தோழர்களை விடுவிக்க கோரி விழுப்புரத்தில் பு.மா.இ.மு&வி.வி.மு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

போலீசு தாக்குதலைக் கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

ஏறுங்கடி தேவடியாளுங்களா! என்கிறான் உளவுப்பிரிவு போலீசு

தாக்குதல் நடத்திய காவல்துறையினரை கைது செய்ய கோரி திருச்சியில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

– தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,  திருச்சி

தொடர்புடைய பதிவுகள்:

பு.மா.இ.மு தோழர்களை விடுவிக்க கோரி விழுப்புரத்தில் பு.மா.இ.மு&வி.வி.மு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

போலீசு தாக்குதலைக் கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

ஏறுங்கடி தேவடியாளுங்களா! என்கிறான் உளவுப்பிரிவு போலீசு


ஏறுங்கடி தேவடியாளுங்களா! என்கிறான் உளவுப்பிரிவு போலீசு

ஏறுங்கடி தேவடியாளுங்களா! – அன்று கல்வியை மறுத்தது பார்ப்பனீயம் இன்ற கேள்வி கேட்டதற்காக தேவடியாளாக சித்தரித்த போலீசு உளவாளி நாய்

அன்று சூத்திரனை தேவடியாள் மகனாக சித்தரித்தது பார்ப்பனீயம்
இன்று அடிப்படை உரிமையான கல்வியை கேட்டுப் போராடிய பெண்களை தேவடியாளாக என்று சித்தரிக்கிறது போலீசு காலிகள்.

சென்னை பேக்கேஜிங் நிறுவன முதலாளியின் லாபத்திற்காக சிறுவன் பலி!போராடிய மக்கள் மற்றும் பு.மா.இ.மு தோழர்கள் மீது போலீசு ரவுடிகள் தாக்குதல்!!

 மதுரவாயல் ஏரிக்கரை பகுதி – அது எப்போதும் போலவே இருந்தது. வெள்ளிக்கிழமை மாலை 5 மணி. பெற்றோர்களெல்லாம் வேலையை விட்டு வீடுகளை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த நேரம் . குழந்தைகளோ இரண்டு நாள் விடுமுறை மகிழ்ச்சியில் துள்ளி விளையாடிக்கொண்டிருந்தனர். அப்படி விளையாட்டு மைதானத்தில் விளையடிக்கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் பிரவீண் அருகில் சிறுவர்கள் விளையாடும் தெர்மாகோல் நிறுவனத்திற்கு பக்கத்தில் எப்போதும் போல நண்பனுடன்  விளையாடச் சென்றான்.

பிரவீண்

அவர்கள் செல்லும் போதும் அந்த சென்னை பேக்கேஜிங் என்ற  தெர்மாகோல் நிறுவனம் மிகவும் அமைதியாக இருந்தது. அது முதலாளித்துவ பயங்கரவாதத்தின் சின்னம் என்பதோ தன்னுடைய உயிர் இங்குதான் போகப்போகிறது என்பதோ அவன் அறியவில்லை. ஓடிக்கொண்டே இருந்த அவன்  “ஹைய்யா ” என்றபடி கீழே கிடந்த தெர்மாகோல் மீது காலை வைத்தவுடன் “ அய்யோ” என்ற குரல் வீறிட்ட படியே அதனுள் விழுந்தான். அப்போது தான் தெரிந்தது. அது  நான்கு அடிக்கு இருபது அடி அகலம் ஆழமுள்ள அந்த நிறுவனத்தின் கழிவு நீர் தொட்டி என்பதும் அது சுற்றுச்சுவர் இல்லாமல்  பார்ப்பதற்கு மண்ணோடு மண்ணாகவே எப்போதும் காட்சியளிக்கும் . பிரவீணோடு வந்த சிறுவன் அவர்கள் வீட்டில் போய் சொன்னவுடன் பெற்றோரும் அப்பகுதி மக்களும் அலறி அடித்துக்கொண்டு ஓடிவந்தனர்.

உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் 8 மணியளவிலே தாமதமாக வந்தது. தீயணைப்புத்துறை ஊழியர்கள் வந்து கூறியபோது தான்  அம்மக்களுக்கே தெரிய வந்தது ” இந்த நிறுவனம் இவ்வளவு நாள் அமைதியாக இருந்த்தே அம்மக்களை கொல்வதற்குதான்” என்று. தெர்மாகோல் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் ரசாயனக்கழிவு என்பது அதிகபட்ச வெப்ப நிலையில் உள்ளதாகும். கம்பெனி சட்டப்படி அந்த ரசாயனக்கழிவை கண்டிப்பாக குளிரூட்டித்தான் கழிவு நீர் தொட்டியில் அனுப்ப வேண்டும் என்பதும், அந்த கழிவு நீர் தொட்டிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்பது விதியாகும். தாமதமாக வந்த தீயணைப்புத்துறை கொதிக்கின்ற ரசாயனக்கழிவை கண்டவுடன் பயந்து போனது. முதலில் ரசாயனக்கழிவை வெளியேற்றி பின்னரும் தொடர்ந்து புகையாக வந்த்தால் தீயணைப்புவீரர்கள் அச்சமடைந்தனர். பின்னர்  நீரை செலுத்திய  அந்த இட்த்தை குளிரூட்டப்பட்ட பின்னரே அவர்கள் இறங்கி சிறுவனை உடல் முழுக்க வெந்து போன நிலையில்  பிணமாக வெளிக்கொணர்ந்தனர்.

ஏற்கனவே ஆடுகளும் மாடுகளும் இந்த தொட்டியில் இறந்த போதும் பல முறை சென்னை பேக்கேஜிங் முதலாளி லோகநாதனிடம் முறையிட்ட போதும் அவர்  நிறுவனத்தை சுற்றி சுற்றுச்சுவரோ கழிவு நீர்த்தொட்டிக்கு சுற்றுச்சுவரோ அமைக்கவில்லை. இந்த நிலையில் இந்த சிறுவன் இறந்த பின்னர்  மதுரவாயல் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்த பின்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதலாளிக்கு சேவை செய்யும் போலீசை கண்டித்தும் லோகநாதனை உடனே கைது செய்யக்கோரியும் பூந்தமல்லி நெடுஞ்சாலையை அப்பகுதி மக்கள் 400க்கும் மேற்பட்டவர்கள்  முற்றுகையிட்டனர். காவல்துறையோ “FIR போட்டாச்சு கிளம்புங்க” என்று கூற மக்களோ அந்த தெர்மாகோல் நிறுவனத்தை இழுத்து மூடவேண்டும், அந்த முதலாளியை கைது செய்யவேண்டும், அதை துணை ஆணையர்  கைப்பட எழுதிக் கொடுக்க வேண்டும் என்றும் போலீசை நம்ப முடியாது என்றும் அறிவித்தனர். இந்த நிலையில்  பகுதியில் செயல்படும் பு.மா.இ.மு தோழர்கள் சிதறிக்கிடந்த மக்களை ஒன்றுபடுத்தி மறியலை முறைப்படுத்தி ”கைது செய், கைது செய்,  லோகநாதனை கைது செய்” என்று

முழக்கமிட்டனர். அந்த முழக்கம் மக்களின் முழக்கமானது. துணை ஆணையரோ ”ரெண்டு பேரையும் அரெஸ்ட் பண்ணியாச்சு, கம்பெனிய இழுத்து மூடுனா   மக்களுக்கு வேலையில்லாம போகும் , எதுவாக இருந்தாலும் ஸ்டேஷன் வாங்க” என்றார். மக்கள் அதை ஏற்க மறுத்து உறுதியாய் அந்த முதலாளியை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர்.

இதற்கிடையில் 23ம் தேதி மதியம்  3 மணிக்கு தொடங்கிய மறியல் 4.30 வரை நீடித்தது.  அச்சாலையில் தொடங்கிய நெருக்கடி சென்னை முழுக்க சாலை நெருக்கடியானது.  பிரச்சினையை கேள்விப்பட்டு இணை ஆணையர் பகுதிக்கு வந்தார் “சென்னை முழுக்க டிராபிக் ஜாம், சிஎம்  ரூட்ல கூட டிராபிக், நான் பைபாஸ்ல தான் வந்தேன்” என்ற கூறியபடி உடனே லத்தி சார்ஜ்க்கு ஆணையிட அந்த இட்த்தில் இருந்த மக்களையெல்லாம் அடித்து துவம்சம் செய்த்து காவல்படை. சிதறி மக்கள் ஓடிய போதும் உறுதி குலையாமல் முழக்கமிட்டபடி பு.மா.இ.மு தோழர்கள் மக்களை மீண்டும் ஒருங்கிணைக்க முயற்சித்தார்கள். தோழர்கள் மீது  திட்டமிட்டு வெறித்தாக்குதல் நடத்தி அனைவரையும் கைது செய்து வாகனத்தில் ஏற்ற காவல்துறை முயன்றது. குண்டாந்தடிகளால் தாக்கிய போதும் யாரையும் வாகனத்தில் ஏற்ற முடியவில்லை,   “எங்களுக்காக வந்தவர்களை ஏய்யா அடிக்குற” என்றகூறிய படி தோழர்களை காத்தார்கள் மக்கள். அவர்கள் மீது இரண்டாவது முறையாக தடியடி தாக்குதல் நடத்தப்பட்டது. தோழர்கள் ஐந்து பேர்களோடு பகுதி மக்கள் நால்வரும்  அடித்து துவம்சம் செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.

அதுவரை அந்த முதலாளியை கைது செய்யாத போலீசு மக்கள் மீது தடியடி நடத்திய பின்னர்  , கணக்கு காட்டுவதற்காக அவனை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து காவல்துறை அதிகாரிகள் அறையில்   தங்க வைத்து உறங்கவும் வைத்திருந்தது. குழந்தையை இழந்து போராடிய மக்கள் மீதும் அதற்கு ஆதரவாக போராடிய தோழர்கள் மீதும் தாக்குதல் நடத்திய போலீசு கொலைக்கு காரணமான முதலாளியை பத்திரமாக சிறையிடைக்காமல் வெளியே அனுப்பி பாதுகாத்தது. காவல் நிலையத்திற்கு வெளியே மக்களும் பகுதி தோழர்களும் கூடியதால்  கைது செய்யப்பட்ட தோழர்கள் அனைவரையும் விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட தோழர்களை அப்பகுதி இளைஞர்கள் கட்டியணைத்து வாழ்த்தினர். “எங்க பிரச்சினைக்கு நீங்க வந்தீங்க, நாங்களாவது ஓடினோம், நீங்க நின்னு அடி வாங்குனீங்க” என்று அவர்கள் கூறியதற்கு தோழர்களோ “மக்கள் பிரச்சினைக்கு இப்படித்தான் போராட முடியும், போலீசு நீதிமன்றம் எப்பவுமே மக்களுக்காக இருந்ததில்லை”  என்பதை ஆழமாக பதிய வைத்தார்கள். மரணமடைந்த அச்சிறுவனின் தாய் “அந்த கம்பெனிக்கு காம்பவுண்ட் போடனும், அந்த முதலாளியை கைது செய்யணும், அப்படி எதுவும் நடக்கலைன்னா அந்த தொட்டியில விழுந்து நான் தற்கொலைதான் பண்ணிக்குவேன். எங்க பையன் மாதிரி யாரும் விழுந்து சாகக்கூடாது ”  என்றூ கதறினார். அந்த சிறுவனின் தந்தையோ  “என் பையன் இந்த சாலையில்தான் ஓடி விளையாடினான், இந்த மக்கள் தான் என் பையனை வளர்த்தாங்க , அவங்கதான் சாலையை மறிச்சாங்க , போலீஸ் அந்த முதலாளியை கைது செய்யாம இருந்த்துதான் எல்லாவற்றுக்கும் காரணம், எங்களுக்காக அடிவாங்கிய உங்களுக்கு ரொம்ப நன்றி” என்றபடியே  தழுதழுத்தார்.

மக்களுக்கு பிரச்சினை என்றவுடன் ஓடோடி வந்து அம்மக்களுக்கு தலைமை தாங்கி , அவர்களோடு தோளோடு தோள் நின்று, களத்திலே அடிவாங்கி மக்களின் பிரச்சினைகளுக்கு இப்படித்தான் போராட வேண்டும் என்று அப்பகுதி மக்களிடம் புமாஇமு தோழர்கள் பதிய வைத்துள்ளார்கள் என்றால் அது மிகையல்ல.

உடல் முழுவதும் போலீசின் தாக்குதலால் துவண்டு போயிருந்த போதும்  லத்திக்கம்பினால் வீங்கிப்போயிருந்த தன் கால்களை தேய்த்து விட்டபடியே சக தோழர்களிடம் பேசிக்கொண்டிருந்தார் ஒரு தோழர் “ போலீசு, நீதிமன்றம் யாருமே மக்களுக்காக இல்லை. எல்லாம் மக்களை சுரண்டுவதற்குத்தான் . இதைத்தான் மக்கள்கிட்ட சொல்லணும். மக்களுக்கு பிரச்சினைன்னா இப்படி உடனடியாக தலையிட வேண்டும். இதைத்தான் இந்த போராட்டம் கத்துக்கொடுக்குது”

தகவல்

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, சென்னை.