• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 210,072 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

தனியார் பள்ளிகளின் கட்டனக்கொள்ளைக்கு

தனியார் பள்ளிகளின் கட்டனக்கொள்ளைக்கு

சட்டப் பூர்வ அங்கீகாரம் வழங்கும்

தமிழக அரசின் சதியை முறியடிப்போம்! மே 22,2010 சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

அரசுப் பள்ளிகளுக்கு போதிய நிதி ஒதுக்காமல் சீரழித்து ,தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்து,

அவை ஆயிரக்கணக்கில் புற்றீசல் போல பெருகி,கல்வியை கடைச் சரக்காக்கி பெற்றோர்கள் ,மாணவர்களிடம் பகற் கொள்ளையடிக்க காரணமாக இருந்த தமிழக அரசு, இன்று தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணங்களை முறைப்படுத்துகிறதாம்!”கேட்பவன் கேனை என்றால் கேப்பையில் நெய் வழியும் ” என்ற கதையாக உள்ளது .தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டனங்களை முறைப்படுத்துவதற்காக என்று தமிழக அரசு இயற்றிய சட்டம் ,அதையடுத்து அமைக்கப்பட்ட கமிட்டி ,ஓய்வு பெற்ற நீதிபதி .கோவிந்த்தராஜன் கமிட்டியின் கட்டண நிர்ணயம் ,இதைக்கூட ஏற்க மறுத்த தனியார் பள்ளி வியாபாரிகளின் மிரட்டல் ,ஆகியவற்றை அம்பலப்படுத்தும் வகையில் பு .மா. இ .மு கடந்த ஜூன் 22 ந் தேதி

சென்னை மெமோரியல் ஹால் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தியது .நூற்றுக்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர் .

பெற்றோர்களிடம் கோடிக்கணக்கில் சுருட்டிய கல்வி வியாபாரிகளை கைது செய்ய வேண்டும்,

அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும் .

பகற்கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள் அனைத்தையும் அரசுடைமையாக்க வேண்டும்,

தனியார் பள்ளிகளின் கொள்ளைக்கு அடிப்படையாக உள்ள அரசின் கல்வி தனியார்மயக் கொள்கையையும் ,

தனியார் என்றால் தரமானக்கல்வி என்ற மாயையும் ,ஆங்கிலவழிகல்வி மோகத்தையும் பெற்றோர்கள் ,மாணவர்கள் விட்டொழிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கம்பீரமாக முழக்கம் எழுப்பப்பட்டது .

கல்வியை வியாபாரமாக்கிவரும்

கல்வியை வியாபாரமாக்கிவரும்

தனியார் பள்ளிகள் அனைத்தையும் அரசுடைமையாக்கக்கோரி

ஜூன் 4 ,2010 பள்ளிக் கல்வி இயக்குநரகத்தை(DPI) முற்றுகையிட்டு

பு .மா. இ .மு போராட்டம் நடத்தியது.

வாதாடி மட்டுமல்ல – போராடிப் பெறுவதே வெற்றி!

பு. மா. இ. மு தலைமையில் போராடிய செல்லம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு முதல்கட்ட வெற்றி!


page-1

page 2

IMG139-01

IMG140-01அரசு விடுதி கட்டிடம் இடிந்து 3 மாணவர்கள் படுகாயம் – மாணவர்கள் போராட்டம்

4

4 001

4 002

4 003

4 004

எல்லா அரசு விடுதிகளின் நிலைமையும் இது தான்.

இப்படி அடிப்படை உரிமையான கல்வியை மறுக்கும் அரசு மக்களுக்கானதா?

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான கல்லூரி முதல்வரை எதிர்த்து செல்லம்மாள் கல்லூரி மாணவிகள் போராட்டம்!!!

மாணவிகள் போராட்டம்:

சென்னை கிண்டி அருகேயுள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ம் தேதி ரமாராணி என்பவர் முதல்வராக நியமிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே 10 மாதங்களுக்கு முன்பாக இதே கல்லூரியில் முதல்வராக இருந்தவர். முன்பு முதல்வராக இருந்த பொழுது மாணவிகளிடம் நன்கொடை என்ற பெயரில் கட்டில், மெத்தை, பீரோ, மின்விசிறி போன்ற பொருட்களை வாங்கியுள்ளார். எதற்கு எடுத்தாலும் மாணவிகளிடம் பணம் பறிப்பார். இதனை எதிர்க்கும் மாணவிகள் மிரட்டப்பட்டனர்; பழிவாங்கப்பட்டனர். இப்படிபட்டவர் மீண்டும் தங்கள் கல்லூரிக்கு முதல்வராக பணியமர்த்தப்பட்டதை எதிர்த்து இக்கல்லூரி மாணவிகள் கடந்த ஆகஸ்ட் 26 ம் தேதியில் இருந்து வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

IMG135-01

IMG137-01

IMG143-01

பு.மா..மு தலைமையில் மாணவிகள் ஆர்ப்பாட்டம்:

தொடர்ந்து 7 நாட்களாக உறுதியுடன் மாணவிகள் போராடியும் நிர்வாகம் எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை. போராட்டம் குறித்த செய்தியும் வெளியே தெரியாமலிருந்தது. இந்நிலையில் இக்கல்லூரி மாணவிகள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடம் தங்கள் போராட்டம் பற்றி கூறியுள்ளனர். இதன் மூலம் இப்போராட்டம் பு.மா..முவிற்கு தெரிய வந்தது. பு.மா..மு இக்கல்லூரி மாணவிகளிடம் பிரச்சாரம் செய்து போராட்டத்தை எப்படி முன்னெடுத்து செல்வது என்னும் வழிகாட்டுதலைக் கொடுத்தது. செல்லம்மாள் கல்லூரி மாணவிகளின் இப்போராட்டத்திற்கு பச்சையப்பன் கல்லூரி, கந்தசாமி நாய்டு கல்லூரி போன்ற கல்லூரிகளிலும் ஆதரவு திரட்டியது. இதனையடுத்து இப்போராட்டத்திற்கு ஆதரவாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பு.மா..மு தலைமையில் மறியல் செய்து கைதாகினர். இக்கைது நடவடிக்கை மாணவிகள் மத்தியில் உணர்வூட்டி போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு இட்டு சென்றது.

பின்னர் மாணவிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரிக் கல்வி இயக்குனரிடம் சென்று மனு கொடுத்தனர். ஆனால் இதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து, தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேன்டும் என்று வலியுறுத்தி மாணவிகள் செப்டம்பர் 26 ம் தேதி அன்று மெமோரியல் ஹால் அருகே மாபெரும் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாணவிகளை அணிதிரட்டுவதிலும், கலந்துகொள்வதிலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது. அனைத்து மாணவிகளுமே பலவிதமான எதிர்ப்புகளையும், மிரட்டல்களையும் சந்தித்தனர். ஆனால் அவற்றையும் மீறி, சுமார் 800 மாணவிகள் அணிதிரட்டப்பட்டனர். அவர்கள் ரயில் நிலையத்திலிருந்து மெமோரியல் ஹால் க்கு பேரணி போன்று சென்றனர். இது அங்கு கூடியிருந்த பத்திரிக்கையாளர்களையும், பொதுமக்களையும் வியக்க வைத்தது.

800 மாணவிகளும், பிற கல்லூரி மாணவர்களும், பு.மா..மு தோழர்களுமாக சுமார் 1000 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

கல்லூரி முதல்வர் ரமாராணியை

வேலை நீக்கம் செய்!!!

15 நாட்களாக போராடும் மாணவிகளின்

கோரிக்கையை நிறைவேற்று!!!”

என்ற முழக்கங்கள் எழுப்பபட்டன. கல்லூரி பெண்களின் இந்த ஆர்ப்பாட்டமும், அவர்களது போராட்ட உணர்வும் அங்கு கூடியிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

கல்லூரிக்கல்வி இயக்குனருக்கு மனு கொடுத்தது போன்று, உயர்கல்வித்துறை செயலாளர், உயர்கல்வித்துறை அமைச்சர், தலைமை செயலாளர், தமிழக முதலமைச்சர் ஆகியோருக்கும் மாணவிகளின் கோரிக்கை மனு அனுப்பபட்டது. ஆயினும், அதிகாரிகளும், அமைச்சர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாய் உள்ளனர். மனு கொடுப்பது போன்ற அறவழி போராட்டங்களால் எவ்வித பலனும் ஏற்படாது என்பதை மாணவிகள் உணர்ந்துள்ளனர். எனவே போராட்டத்தை முன்னெடுத்து செல்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையில் உறுதியுடன் இறங்கி, தொடர்ந்து போராடி வருகின்றனர்.

அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கையுமே தனியார்மயம், தாராளமயம் போன்ற அரசின் கொள்கைகளாலும் பாதிக்கப்படும் பொழுதும் அவர்களுள் பலர் போராட வருவதற்கு தயங்குகின்றனர். ஆனால் செல்லம்மாள் கல்லூரி பெண்களோ, கல்வி தனியார்மயத்தின் கொடுமையை உணரத்துவங்கியதுமே தைரியத்துடன் போராட்டக்களத்தில் இறங்கி போராடுவது எல்லோருக்கும் முன்னுதாரணமாக உள்ளது.


கல்வி கட்டணக் கொள்ளைக்கு எதிராக களத்தில் நிற்கும் புமாஇமு மற்றும் அதன் தோழமை அமைப்புக்கள்…

புதிய ஜனநாயகம் இதழின், ஜுலை 2009 கல்விக் கட்டணக்கொள்ளை பற்றிய கட்டுரை. இமேஜ் பைலை ‘டவுன் லோடு’ செய்து, டவுன் லோடு செய்த பைலையை பெரிதாக்கி படிக்கவும்.

2

தனியார் கல்விக் கொள்ளையைத் தடுக்கக் கோரி அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தரை சந்திப்போம்!

poster

பு.மா.இ.மு தலைமையில் போராடிய மக்களுக்கு மாபெரும் வெற்றி!

rsyf-madhuravoyal

 

Related:

பு.மா.இ.மு.வின் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி! தமிழகம் முழுவதும் நன்கொடை வசூலித்த பணத்தை திருப்பித்தர உத்தரவு!!

ஈழத்தமிழர்களுக்காக தொடர்ந்து களத்தில் நிற்கும் சென்னை பு.மா.இ.மு

     poster_mariyal1

jan-30-rsyf1

புமாஇமு தலைமையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அணிதிரளுகிறார்கள்

p3

பச்சையப்பன் கல்லூரி சாலையில் புரட்சிகர நாடகம்

p5

போலீசு அடக்குமுறையினை எதிர்க்கும் மாணவர்

p2

பச்சையப்பன் கல்லூரி சாலையில் மறியல்

p-1

முத்துக்குமார் இறுதி அஞ்சலி :
இந்திய அரசின் பிராந்திய மேலாதிக்கத்தை முறியடிக்க கோரும் பதாகைகளுடன் தோழர்கள்

k-11

சிங்கள ராணுவத்தை தோலுரிக்கும் புரட்சிகர நாடகம்

dsc00865

dsc00866

 
dsc00864
கல்லூரிகளை மூடி போராட்டத்தை தடுக்க முயன்ற கருணாநிதியை அம்பலப்படுத்தும் சுவரொட்டி

rsyf-college-feb-3

தொடர்ந்து மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் பிரச்சாரம்

elam-pirasuram-1

elam-pirasuram-2

கல்லூரிகளில் அறைக்கூட்டங்கள்

dsc00924

dsc00922

சென்னை மாநில கல்லூரியில் வாயிற்கூட்டம் நடத்தி
போலீசு தாக்குதலை எதிர்கொண்ட பு.மா.இ.மு மாணவர்கள்
dsc00949

dsc00951

dsc00959

காக்கிச்சட்டை ரவுடிகளை அம்பலப்படுத்தி ஆயிரக்கணக்கில் பிரசுரம் விநியோகம்

1

குரோம்பேட் – தெருமுனைக்கூட்டம்

dsc00972

காக்கிசட்டை ரவுடிகளை அம்பலப்படுத்தும் புரட்சிகர நாடகம்

dsc00978

dsc009931

dsc00994

dsc009842

dsc00981

dsc00982

தொடர்ந்து மக்கள் மத்தியிலும், நீதிமன்றத்திலும் போராடியதன் விளைவாக ஜாமீனில் பு.மா.இ.மு மாணவர்கள் விடுதலை

dsc010171

 

 

கால வரையற்று மூடிய கல்லூரி-விடுதிகளை உடனே திற!

rsyf-college-feb-34