• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,819 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!


கூடங்குளம்-இடிந்தகரை-போராட்டம்-14

கூடங்குளம் மக்கள் போராட்டத்தின் மீதான பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!

போராடும் மக்களுக்குத் தோள் கொடுப்போம்!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இம்மாத இறுதியில் மின் உற்பத்தி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. கூடவே அணு உலையில் யுரேனியம் எரிபொருளை நிரப்ப சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. உள்ளூர் மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பையும் மீறி இந்த அனுமதியை அரசுகளும் நீதிமன்றங்களும் வழங்கியிருக்கின்றன. இந்நிலையில் மக்கள் அணுமின்நிலையத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர்.

அதன்படி குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் இடிந்தகரையிலிருந்து கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு கடற்கரை வழியாக நேற்று சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்த போலீஸ் அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் நயவஞ்சகமான சட்ட மொழியில் பேசி முயன்றனர். இதற்கு தோதாக நீண்ட நாட்களாக 144 தடையுத்திரவையும் பிறப்பித்திருந்தனர். 5000த்திற்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

நேற்றிரவு முழுவதும் கடற்கரையில் வெட்டவெளியில் தங்கிய மக்கள் இன்றும் தமது போராட்டத்தை தொடர்ந்தனர். மக்களை போக்கு காட்டிவிட்டு அலையவிடும் தந்திரத்தை போலீசு தொடர்ந்து மேற்கொண்டது. இறுதியில் கண்ணீர் குண்டுகளை வீசி தடியடி நடத்தியிருக்கிறது தமிழக போலீசு. கையில் கிடைத்தவர்களை கொடூரமாக தாக்கி கைதும் செய்திருக்கிறது. கடலுக்குள் ஓடிய மக்களை மீண்டும் கரை திரும்பாத வண்ணம் அரண் அமைத்து வேட்டை நாயைப் போல காத்திருக்கிறது போலீசு.

இடிந்தகரைக்கு உள்ளேயும் போலீசு படை நுழைந்து, போராட்டக்காரர்களின் பந்தலைக் கைப்பற்றியிருக்கிறது. தேவாலயத்துக்கு உள்ளேயும் நுழைந்திருக்கிறது. ஊரைக் கைப்பற்றிய ஆக்கிரமிப்பு படை போல ஊர் முழுவதையும் போலீசு ஆக்கிரமித்திருக்கிறது. பலர் படகுகளில் கடலுக்குள் செல்கிறார்கள். பெண்கள் குழந்தைகள் திசைக்கொருவராக சிதறியிருக்கின்றனர். யாருக்கு என்ன நேர்ந்த்தென்று தெரியவில்லை.

அணு உலைக்கு எதிராகப் போராடிவரும் இடிந்தகரை மக்கள் மீது பாசிச ஜெயலலிதா அரசு தொடுத்திருக்கும் இந்த நயவஞ்சகமான, கொடிய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.

இத்தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் எமது அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இடிந்தகரை கூடங்குளம் வட்டாரத்தில் போடப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவையும் அங்கே குவிக்கப்பட்டுள்ள போலீசு படைகளையும் உடனே திரும்ப பெறவேண்டும்.

அணு உலை பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் சிவில் உரிமைகளைப் பறிப்பதை நிறுத்த வேண்டும்.

கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதை உடனே நிறுத்தவேண்டும்.

மக்களுக்கும் உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரு நாசம் விளைவிக்கும் அணு உலைகள் இழுத்து மூடப்படவேண்டும். என்று கோருகிறோம்.

ஒரு பட்டாசு தொழிற்சாலையில் கூட மக்களின் உயிருக்கு உத்திரவாதம் வழங்க வக்கில்லாத அரசுக்கு, அணு உலையின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் தருவதாகப் பேசுவதற்கே அருகதை கிடையாது. காற்றாலை, சூரிய ஒளி உள்ளிட்ட மாற்று மின் தயாரிப்பு முறைகள் உலகமெங்கும் பரவிவரும் இக்காலத்தில் இந்தியாவின் மீது அணு உலைகள் திணிக்கப்படுவதற்கு காரணம், ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை இலாப நோக்கமும், இந்திய அரசின் இராணுவ நோக்கமுமே தவிர வேறில்லை.

அணு உலைக்கு ஆதரவாக கூறப்படும் பித்தலாட்டமான வாதங்களை மக்கள் நிராகரிக்க வேண்டுமென்றும், கூடங்குளம் இடிந்தகரை மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக துணை நிற்கவேண்டும் என்றும் மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

அ.முகுந்தன்,

ஒருங்கிணைப்பாளர், போராட்டக்குழு.

ம.க.இ.க, பு.மா.இ.மு, வி.வி.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு.

_______________________________________________________

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம் நகரில் துப்பாக்கி சூடு!
கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!
கூடங்குளம் – இடிந்தகரை: போராட்டக் காட்சிகள்!
கூடங்குளம்:தாக்கத் தொடங்கியது போலீசு! அச்சமின்றி முன்னே செல்கிறார்கள் மக்கள்!!
உலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு…! சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு

கூடங்குளம் மக்களோடு கரங்களை இணைத்திடு! நாட்டை மீண்டும் காலனியாக்கும் அணு உலையை விரட்டிடு!!

போலீசு தாக்குதல்: மெமோரியல் ஹால் எதிரில் இன்று(4.9.12) கண்டன ஆர்ப்பாட்டம்!

நேற்று ரத்து ஆன ஆர்ப்பாட்டம் இன்று காலை 11 மணிக்கு அதே மெமோரியல் ஹால் அருகில் நடைபெறுகிறது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

  • பு.மா.இ.மு தோழர்கள் மீது போலீசு ரவுடிகள் கொலைவெறித் தாக்குதல்.  64 பேர் கைது  8 பேர் படுகாயம்.
  • போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

தமிழக அரசே!

தாக்குதல் நடத்திய AC சீனிவாசன், இன்ஸ்பெக்டர் ஆன்ந்த்பாபு, எஸ்.ஐ. கோபிநாத் ஆகியோரை கொலை முயற்சி வழக்கின் கீழ் கைது செய் சிறையிலடை !

கண்டன ஆர்ப்பாட்டம்

3.9.12 காலை 11 மணி மெமோரியல் ஹால் (G.H அருகில்)

புமாஇமு தோழர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மதுரவாயல் போலீசு ரவுடிகளின் அராஜகத்தையும், பொய்வழக்கையையும் முறியடிக்கும் விதமாக மாணவர்கள், பெற்றோர்கள்,சமூக ஆர்வலர்கள் ஆகிய அனைவரையும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு புமாஇமு அறைகூவி அழைக்கிறது.

தொடர்புக்கு:

புமாஇமு-9445112675

நிகழ்ச்சி நிரல்:

கண்டன ஆர்ப்பாட்டம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

போலீசு தாக்குதல்: சென்னை மெமோரியல் ஹால் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்!

  • பு.மா.இ.மு தோழர்கள் மீது போலீசு ரவுடிகள் கொலைவெறித் தாக்குதல்.  64 பேர் கைது  8 பேர் படுகாயம்.
  • போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

தமிழக அரசே!

தாக்குதல் நடத்திய AC சீனிவாசன், இன்ஸ்பெக்டர் ஆன்ந்த்பாபு, எஸ்.ஐ. கோபிநாத் ஆகியோரை கொலை முயற்சி வழக்கின் கீழ் கைது செய் சிறையிலடை !

கண்டன ஆர்ப்பாட்டம்

3.9.12 காலை 11 மணி மெமோரியல் ஹால் (G.H அருகில்)

புமாஇமு தோழர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மதுரவாயல் போலீசு ரவுடிகளின் அராஜகத்தையும், பொய்வழக்கையையும் முறியடிக்கும் விதமாக மாணவர்கள், பெற்றோர்கள்,சமூக ஆர்வலர்கள் ஆகிய அனைவரையும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு புமாஇமு அறைகூவி அழைக்கிறது.

தொடர்புக்கு:

புமாஇமு-9445112675

நிகழ்ச்சி நிரல்:

கண்டன ஆர்ப்பாட்டம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

”பு.மா.இ.மு தோழர்கள் மீது போலீசு ரவுடிகள் கொலைவெறித்தாக்குதல்.  64 பேர் கைது  8 பேர் படுகாயம்.

தாக்குதல் நடத்திய AC சீனிவாசன், இன்ஸ்பெக்டர் ஆன்ந்த்பாபு, எஸ்.ஐ. கோபிநாத் ஆகியோரை கொலை முயற்சி வழக்கின் கீழ் கைது செய் சிறையிலடை !

போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

கண்டன ஆர்ப்பாட்டம்

3.9.12 காலை 11 மணி மெமோரியல் ஹால் (G.H அருகில்)

புமாஇமு தோழர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மதுரவாயல் போலீசு ரவுடிகளின் அராஜகத்தையும், பொய்வழக்கையையும் முறியடிக்கும் விதமாக மாணவர்கள், பெற்றோர்கள்,சமூக ஆர்வலர்கள் ஆகிய அனைவரையும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு புமாஇமு அறைகூவி அழைக்கிறது.

நிகழ்ச்சி நிரல்:

கண்டன ஆர்ப்பாட்டம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

 தொடர்புடைய பதிவுகள்:

பிரசுரம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

நக்கீரன்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் மீது கொலைவெறித்தாக்குதல்!

போஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு!

கண்டன ஆர்ப்பாட்டம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

 

 

பிரசுரம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

நக்கீரன்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் மீது கொலைவெறித்தாக்குதல்!

போஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு!

தொடர்புடைய பதிவுகள்:

 

பிரசுரம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

நக்கீரன்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் மீது கொலைவெறித்தாக்குதல்!

போஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு!

தொடர்புடைய பதிவுகள்:

நக்கீரன்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் மீது கொலைவெறித்தாக்குதல்!

கடந்த  25.8.2012  அன்று இரவு மதுரவாயல் ஏரிக்கரைப் பகுதியில் ஒரு இளைஞரை யாரோ கொலை செய்து விட்டுள்ளனர். இது தெரிந்தவுடன் அப்பகுதி மக்கள் கும்பலாக கூடி நின்றிருந்துள்ளனர். அங்கு வந்த மதுரவாயல் போலீசு நிலைய துணை ஆய்வாளர் கோபிநாத் தலைமையிலான போலீசார் விசாரணை எதுவும் இன்றி அங்கு நின்றிருந்த மக்களை விரட்டியுள்ளனர்.

பள்ளி மாணவர்கள் சிலரை கைது செய்து போலீஸ் வண்டியில் ஏற்றியுள்ளனர். அதில் பு.மா.இ.மு உறுப்பினரின் தம்பியும் ஒருவர். அப்போது அங்கு வந்த பு.மா.இ.முவின் அப்பகுதி இளைஞர் கிளையைச் சார்ந்த தோழர்கள் திவாகர், குமரேசன் இருவரும் போலீஸ் துணை ஆய்வாளரிடம் தங்களை அமைப்புத் தோழர்கள் என்று அறிமுகம் செய்து கொண்டு எதுவும் தெரியாத அப்பாவி மாணவர்களை கைது செய்ய வேண்டாம் என்று அவர்களை விடுவிக்கக் கோரியுள்ளனர்.

இதை எதையுமே காதில் வாங்காத துணை ஆய்வாளர் கோபிநாத் தலைமையிலான போலீசார் எதற்கெடுத்தாலும் அமைப்புனு வந்திடுறீங்க என்று கத்திக்கொண்டே தோழர்கள் இருவரையும் அடித்து இழுத்து கைது செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த மதுரவாயல் போலீஸ் ஆய்வாளர் தோழர்களை போலீசு வேனில் வைத்து கடுமையாகத் தாக்கி அழைத்துச் சென்றுள்ளார்.

இத்தகவல் தெரிந்ததும் சென்னைப் பகுதி பு.மா.இ.மு தோழர்கள் கைது செய்யப்பட்ட தோழர்களைப் பார்த்து விசாரிக்க மதுரவாயல் போலீஸ் நிலையம் சென்றுள்ளனர். அங்கு தோழர்கள் இல்லை. போலீசாரிடம் விசாரித்தற்கு எவ்விதபதிலும் இல்லை.

ஆய்வாளரிடம் போனில் பேசும்போது உங்கஆளுங்க எங்கஎஸ்.ஐயை அடித்திருக்காங்க அதனால கைது செய்திருக்கிறோம் என்றுள்ளார். அவர்களை பார்க்க வேண்டும் என்றதற்கு பதில் இல்லை. அன்று இரவு முழுவதும் முயன்றும் தோழர்களை காட்டவில்லை.

சிறையிலடைத்ததாகவும் தெரியவில்லை. காலையில்  போலீசு உதவி ஆணையர் சீனிவாசனிடம் பேசும்போது முதலில் 30 நிமிடம் கழித்துகாட்டுவதாக சொன்னார். பின்னரும் தோழர்களை எங்குவைத்திருக்கிறோம் என்று சொல்லவும் இல்லை,  காட்டவும் இல்லை.

இப்படி முதல் நாள் இரவிலிருந்து அடுத்த  நாள் வரை அலைகழிக்கப்பட்டும் தோழர்களை பார்க்க முடியவில்லை, அவர்களிடம் நடந்தது பற்றிவிசாரிக்கவும் முடியவில்லை. அவர்களை சிறையில டைத்தாகவும் தெரியவில்லை.

தோழர்கள்கைதும்,அதைப்பற்றியானதகவல்களும் மறைக்கப்படுவதால்  இதைப் பற்றியான உண்மைத் தகவல்களை தெரிந்துகொள்ளும் வகையில் 26.8.2012 அன்று மதியம் சுமார் 1மணியளவில் பு.மா.இ. முதோழர்கள் பகுதிமக்களுடன்  இணைந்து மதுரவாயல்போலீசுநிலையம் சென்றுவிசாரிக்கமுயன்றனர்.

போலீசு ஏ.சி தோழர்கள்கைது பற்றி பேசமறுத்துவிட்டுஉங்கள் அனைவரையும் கைதுசெய்வேன் என்றுமிரட்டியுள்ளார். தோழர்கள் இதைஎதிர்த்து  முழக்கமிட்டுள்ளனர். தயாராக  நிறுத்திவைக் கப்பட்டிருந்த போலீசுகும்பல்ஏ.சிசீனிவாசன் தலைமையில் தோழர்கள்,பகுதிமக்கள்  அனைவரையும்கொலைவெறியுடன்தாக்கியது.

தலைவர்களை 10,15சேர்ந்துபோலீசார்குறிவைத்துதாக்கினார்கள்.பெண்தோழர்களை அடித்து ரோட்டில் கீழேதள்ளிபூட்ஸ்காலால்மிதித்துள்ளனர். சிலபெண் தோழர்கள் உடையைவக்கிரமாகபிடித்து இழுத்து கிழித்து தாக்கியுள்ளனர்.

சில மாணவித்தலைவர்களையும், இளைஞர் தலைவர்களையும் தனியாக போலீசுநிலையத்திற்குள் இழுத்துச்சென்று காட்டுமிராண்டித்தனமாகதாக்கி சித்திரவதை செய்துள்ளனர்.

நாகூசத்தக்க வார்த்தைகளால் அவமானப்படுத்தியுள்ளனர். சிலசிறுவர்களை  தூக்கி கீழே  எறிந்துள்ளனர். இப்படி போலீசு கும்பல்கொலைவெறியுடன் தாக்கியதில்அனைத்துத்தோழர்களும் கடுமையாகபாதிக்கப்பட்டனர்.8 தோழர்கள் ( மணிகண்டன், கிருஷ்ணகுமார்,விவேக் , பிரேம், வெங்கடேஷ்,ராஜா, பாபு, வீரா,  ) படுகாயம்அடைந்தனர். இதில்கிருஷ்ணகுமார், விவேக்இருவருக்கும்கை, கால்களில் பலத்த அடிபட்டதால் இன்றுவரை அவர்களுக்கு மருத்துவமனையில் மருத்துவம்பார்க்கப் படுகின்றது.

மற்றவர்களில் பெண்தோழர்கள் 14 பேர்உள்படமொத்தம் 64 பேர்கள் மீது பொய்வழக்குப் போட்டு கைது போலீசார் செய்தனர். இவர்களில் பெண்தோழர்கள் 14 பேரை மட்டும் அன்று இரவே (26.8.12 இரவுசுமார் 2 மணிக்கு)   பிணையில் விடுவித்தனர்.  ஆண்தோழர்கள் 50 பேரைஅடுத்தநாள் (27.8.12) வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இவர்களை சிறையிலடைக்க நீதிமன்றம் அழைத்து வந்த நேரத்தில்தான் , முதலில்  25 ந்தேதி இரவு அடித்து இழுத்துச் சென்று மறைத்து வைத்திருந்த தோழர்கள்திவாகர், குமரேசன் இருவரையும் சிறையிலடைக்க நீதிமன்றம் அழைத்துவந்தனர். அதுவரை அவர்கள் இருவரையும் வேவ்வேறு இடங்களில் அடைத்து வைத்துதாக்கியுள்ளனர்.

உழைக்கும் மக்கள் பகுதியில் இளைஞர் அமைப்பைக் கட்டி செயல்படும் புமாஇமு இளைஞர்களின் கோரிக்கைகளுக்காக மட்டுமின்றி உழைக்கும் மக்களின் பிரச்சனைகளுக்காகவும் இளைஞர்களை , மக்களைத் திரட்டி போர்க்குணமாக போராடிவருகின்றது.

அந்தவகையில் மதுரவாயல் பகுதியிலும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் உழைக்கும் மக்கள்கோரிக்கைகளுக்காவும் , அப்பகுதியில் போலீசின் அராஜகங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து உறுதியாகப் போராடி வருகின்றோம்.

இதனால் போலீசின் கட்டப்பஞ்சாயத்துக்கள் பலதடைபட்டுள்ளன. இதற்கு முன்னர் மதுரவாயலில் உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் அத்துமீறி நுழைந்து மாணவர்கள், இளைஞர்களை கேள்வி கேட்பாரின்றிதாக்கும், பொய்வழக்குகள் போட்டு கைதுசெய்து இழுத்துச்செல்லும் போலீசு தற்போது பு.மா.இ.மு இளைஞர் அமைப்புக் கட்டி வேளை செய்யத் தொடங்கிய பின்னர் அத்தைகைய அராஜக நடவடிக்கைகளை அனாவசியமாக செய்ய முடியவில்லை.

சமீபத்தில் அதே ஏறிக்கரைப் பகுதியில் சென்னை பேக்கர் என்ற நிறுவனத்தின் தெர்மால் ரசாயன தொட்டி பாதுகாப்பு இன்றி திறந்து கிடந்ததால் அதில் அப்பகுதி சிறுவன் ஒருவன் விழுந்து இறந்து விட்டான் .

இதை அந்த நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து மூடிமறைக்கப் பார்த்தது போலீசு. இதணை அம்பலப்படுத்தியும், நீதிகேட்டும் ஏறிக்கரை பகுதிமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்திய போது அதற்கு தலைமை தாங்கியது பு.மா.இ.முதான்.

 இப்படிப்பட்ட போர்க்குணமான செயல்பாடுகளை பார்ர்த்து வந்த போலீசார் தற்போதைய சம்பவத்திலும் தங்கள் அராஜக செயல்பாடுகள் மீது கேள்வி எழுப்பியதும் அதைப்பொறுத்துக் கொள்ள முடியாதவர்களாக அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள்.

இதனால் எல்லாம் புரட்சிகர அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்கிவிட முடியாது, போர்க்குணத்தை மழுங்கடிக்க முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் போலீசின் இந்த அராஜகங்களையும், பொய்வழக்குகளை எதிர்த்தும்,தோழர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய போலீசு  ரவுடி கும்பலை கைது செய்து சிறையிலடைக்கவும் பு.மா.இ.மு தோழர்கள் தோழமை அமைப்புகளுடன் இணைந்து மக்கள் பலத்துடன் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

நன்றி: நக்கீரன் வார இதழ்

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=81606

தொடர்புடைய பதிவுகள்:

போஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு!

புமாஇமு தோழர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏ.சி சீனிவாசன் , இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு, எஸ்.ஐ கோபிநாத்தை-யும் கொலை முயற்சி குற்றத்தின் கீழ் கைது செய்-சிறையிலடை!

போஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு!


போஸ்டர்

சென்னை மதுரவாயல் கொலை வழக்கில் அப்பாவி இளைஞர்கள் இருவரை கைது செய்து சிறையிலடைத்த போலீசாரை எதிர்த்துக் கேட்டதற்காக புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தோழர்கள் மீது பாய்ந்து குதறிய தமிழக காக்கிச்சட்டைகள் நாற்பத்தைந்து தோழர்களை கைது செய்து சிறையிலடைத்துள்ளது. இந்த போலீசு ஆட்சியை கண்டித்து நேற்று சென்னை நகருக்குள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

”பு.மா.இ.மு தோழர்கள் மீது போலீசு ரவுடிகள் கொலைவெறித்தாக்குதல்.  64 பேர் கைது  8 பேர் படுகாயம்.

தாக்குதல் நடத்திய AC சீனிவாசன், இன்ஸ்பெக்டர் ஆன்ந்த்பாபு, எஸ்.ஐ. கோபிநாத் ஆகியோரை கொலை முயற்சி வழக்கின் கீழ் கைது செய் சிறையிலடை !

கொலையாளிகளை கைது செய்யாமல் அப்பாவி இளைஞர்களை கைது செய்த போலீசை தட்டிக்கேட்ட பு.மா.இ.மு தோழர்கள்  திவாகர்,குமரேசனை கடத்திச் சென்று மறைத்து வைத்தது போலீசு !

விசாரிக்க சென்ற பகுதி மக்கள்,  பு.மா.இ.மு தோழர்கள் மீது அடக்குமுறையை ஏவி விட்டது போலீசு !

இதை அரங்கேற்றிய பாசிச ’ஜெயா’ அரசின் போலீசு ராஜ்ஜியத்திற்கு முடிவுகட்டுவோம் !”

இவை தான் சுவரொட்டியில் உள்ள வாசகங்கள். பு.மா.இ.மு தோழர்கள் நரேஷ், பால்சாமி, வினோத் ஆகியோர் நேற்று காலை மதுரவாயலிலிருந்து MMDA காலனி நோக்கி இந்த சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டு சென்ற பொழுது போலீசு குண்டர்களால் கைது செய்யப்பட்டனர். கைது செய்தது மதுரவாயல் போலீசு, ஆனால் தோழர்களை அடைத்து வைத்திருந்ததோ கோயம்பேடு ஸ்டேஷனில்.

கைது செய்யப்பட்டதை அடுத்து உடனடியாக களத்திற்கு வந்த ம.உ.பா.மை தோழர்கள் உதவி ஆணையர் சீனிவாசனிடம் பேசினர்.

அவரு சாமி பட ஹீரோ மாதிரி “எதுக்குப்பா போலீசோட பிரச்சினை, விடு போலீஸ்கிட்ட எதுத்துக்கிட்டு நிக்காத. எதுக்கு இருபது வயசு, இருபத்தியோரு வயசு பசங்களை எல்லாம் தேவை இல்லாம சேர்த்து வச்சிக்கிட்டு பண்றாங்க” என்றார். அதுக்கு ம.உ.பா.மை தோழர்கள்,” சார் அது அவங்க கொள்கை அதைப் பத்தி நீங்களும் நானும் பேச முடியாது. அவங்க அவங்க கருத்தை சொல்றாங்க. அவங்க மேல பொய் வழக்கு போட்ருக்கீங்க, தடியடி நடத்தி இருக்கீங்க அதை கண்டிச்சு அவங்க போஸ்ட்டர் போட்ருக்காங்க. அது அவங்களோட கருத்துரிமை. அதுக்காக எப்படி அவங்களை கைது செய்யலாம்? முதலில் எஸ்.ஐ-யை அடித்ததாக வழக்கு போடுறீங்க, அப்புறம் காலையில ஐந்தரை மணிக்கு ராப்பரி பண்றதாக வழக்கு போடுறீங்க. இது எப்படி?” என்று கேட்டனர்.

பிறகு ஏ.சி இன்ஸ்பெக்டரிடம் கைமாற்றி விட்டார். இன்ஸ்பெக்டர் ஹீரோவோ மூன்று பேரின் பெற்றோர்களும் வந்தால் தான் விடுவேன் என்றார். வந்தார்கள். “அவர்களிடம் எதுக்கு உங்க பையன இந்த மாதிரி அமைப்புகளுக்கெல்லாம் அனுப்புறீங்க, இது என்ன மாதிரி அமைப்புன்னு தெரியுமா உங்களுக்கு ? நக்சலைட் அமைப்பு” என்று பீதியூட்டிவிட்டு பிறகு வழக்கு பதிந்துகொண்டு சொந்த ஜாமீனில் விட்டார். அனுப்பும் போது தோழர்களுடைய வண்டியையும் செல்போன்களையும் தர முடியாது என்றார். இறுதியில் போராடி வண்டி மட்டும் பெறப்பட்டது. செல்போன்கள் வழக்கு ஆதாரங்களுக்கு வேண்டும் என்று தர மறுத்துவிட்டனர்.

பிறகு மூன்று தோழர்களையும் அழைத்து எதுக்கு இந்த சின்ன வயசுலயே இந்த வேலை, இந்த மாதிரி ஆளுங்களோட சேர்ந்தா உங்க வாழ்க்கையே அழிஞ்சிரும் என்றெல்லாம் புத்திமதி கூறி அனுப்பி வைத்தனர்.  போலீசு ரவுடிகள் தமக்கு கூறும் புத்திமதிகளை தோழர்கள் மதிக்கமாட்டார்கள். ஸ்டேஷனிலிருந்து வெளியே வந்ததும் மாணவர்கள் அடுத்தக்கட்ட அமைப்பு வேலைகளை பார்க்கத் துவங்கிவிட்டனர்.

சுவரொட்டிகள் ஒட்டி தமது எதிர்ப்பைத்தெரிவிப்பது ஒரு ஜனநாயக உரிமை. அந்த ஜனநாயகம் கூட இல்லை என்பதை என்னவென்று சொல்வது?

மாணவர்கள் தறுதலையாக சுற்றி வந்தால் பிரச்சினை இல்லை. அரசியல் உணர்வுடன் போராட ஆரம்பித்தால் தடியடி, சிறை, கைது, புத்திமதி எல்லாம் வந்துவிடுகின்றன.

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தமிழக காவல்துறைக்கு ஒரு சவாலாக மாறிவிட்டது. பு.மா.இ.மு வா – பாசிச ஜெயாவின் வளர்ப்பு பிராணிகளா என்பதை போராட்டக் களத்தில் பார்ப்போம்.

முதல் பதிவு: வினவு

தொடர்புடைய பதிவுகள்:

புமாஇமு தோழர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏ.சி சீனிவாசன் , இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு, எஸ்.ஐ கோபிநாத்தை-யும் கொலை முயற்சி குற்றத்தின் கீழ் கைது செய்-சிறையிலடை!

பு.மா.இ.மு தோழர்களை விடுவிக்க கோரி விழுப்புரத்தில் பு.மா.இ.மு&வி.வி.மு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை DPI முற்றுகையில்  கைது செய்யப்பட்ட பு.மா.இ.மு.,தோழர்களை விடுவிக்க  கோரி   விழுப்புரத்தில்   பு.மா.இ.மு/ வி.வி.மு  தோழர்களால் நேற்று( 29 .06 .2012 ) மாலை  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நேற்று அனுமதி கேட்டவுடன் மறுப்பேதும் சொல்லாமல் அனுமதி அள்ளித்தது காவல் துறை. 60 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு இறுதிவரை வீச்சாக கண்டன முழக்கங்களை எழுப்பினர். விழுப்புரம்  பு.மா.இ.மு செயலாளர் தோழர். செல்வகுமார், தாக்குதலை கண்டித்தும், காவல்துறையை அம்பலப்படித்தியும், கல்வி தனியார் மயத்தை விளக்கியும் 30 நிமிடங்கள் பேசினார்.

– தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விழுப்புரம்

தொடர்புடைய பதிவுகள்:

போலீசு தாக்குதலைக் கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

ஏறுங்கடி தேவடியாளுங்களா! என்கிறான் உளவுப்பிரிவு போலீசு

பு.மா.இமு தோழர்கள் மீது கொடூரத்தாக்குதல். 10 தோழர்கள் படுகாயம். 250 பேர்கள் கைது !!

தனியார்மய கல்விக்கொள்கைக்கு முடிவுகட்டவும், அனைத்து தனியார்பள்ளி, கல்லூரிகளையும் அரசுடமையாக்கி அனைவருக்கும் இலவசக் கட்டாயக்கல்வி வழங்கவும், பொதுப்பள்ளி – அருகமைப்பள்ளி முறையை அமுல்படுத்தவும் வலியுறுத்தி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் 28.06.12 அன்று காலை 11 மணியளவில் பள்ளிக் கல்வி இயக்குனரகத்தை முற்றுகையிட்ட பு.மா.இமு தோழர்கள் மீது கொடூரத்தாக்குதல். 10 தோழர்கள் படுகாயம். 250 பேர்கள் கைது !!