ஆகிய புரட்சிகர அமைப்புகளுக்கு வெற்றி!
Filed under: பு.மா.இ.மு | Tagged: அரசியல், கல்வி, சமச்சீர் கல்வி, நிகழ்வுகள் | Leave a comment »
ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளான பகத்சிங்,ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவு நாள் நிகழ்ச்சி மார்ச்-23 அன்று புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் சார்பில் சென்னையில் மதுரவாயல் பகுதியில் நடைபெற்றது. காலை 8 மணியளவில் பறை முழக்கத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்திய தோழர். செந்தில் தனது தலைமை உரையில்” வருகின்ற சட்டமன்றத் தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளின் ஓட்டுப்பொறுக்கித்தனத்தை அம்பலப்படுத்தியும், பல்லாண்டுகளாக இருக்கும் இந்த தேர்தல் முறையினால் உழைக்கும் மக்கள் மென்மேலும் சுரண்டப்பட்டு கொண்டு இருப்பதையும், முதலாளிகளுக்கான இந்தத் தேர்தல் முறையினை ஒழிக்காமல் தீர்வு இல்லை” என்பதையும் விளக்கிப்பேசினார்.
அடுத்ததாக விண்ணதிரும் வகையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளின் நினைவை நெஞ்சில் ஏந்தக்கோரியும், நாடு மீண்டும் மறுகாலனியாவதை முறியடிக்கவும் முழக்கங்களிடப்பட்டன. பின்னர் சென்னைக்கிளை செயற்குழு உறுப்பினர் தோழர். சேகர், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் கொடியினை ஏற்றினார். பின்னர் சென்னைக்கிளை செயலாளர் தோழர். வ. கார்த்திகேயன் தனது சிறப்புரையில்,” ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளின் நினைவை நெஞ்சில் ஏந்த வேண்டிய அவசியத்தையும், உலகம் முழுவதும் பற்றிப்படர்ந்து வருகின்ற மக்கள் எழுச்சிகளைப்போல இங்கேயும் மக்கள் எழுச்சியை, கலகத்தைப் படைக்காமல் தீர்வு இல்லை” வலியுறுத்தியும் பேசினார்.
பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரை பூசையறைப் படங்களாக வைத்துக்கொண்டு பிழைக்கும் போலிகளுக்கு பதிலடி கொடுக்கவும் , நாடு மீண்டும் காலனியாவதற்கெதிராக மாபெரும் மக்கள்போராட்டங்களையும் கட்டியமைக்க வேண்டுமென்ற புரட்சிகர அரசியல் உணர்வை வளர்க்கும் விதத்திலும் அமைந்தது ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளான பகத்சிங்,ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவு நாள் நிகழ்ச்சி.
Filed under: அரசியல், இளைஞர்கள், பகத்சிங், பு.மா.இ.மு, புகைப்படங்கள் | Leave a comment »
பஸ்டே’வை கொண்டாடுவோம்!
“பஸ்டே” கொண்டாடுவதால் டிராபிக் ஜாம் ஆகிறது, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதால் தடைசெய்கிறோம்” , இது ஐகோர்ட் நாட்டாமைகளின் உத்தரவு. மாணவர்கள் ரவுடித்தனம், பொறுக்கித்தனம் செய்கிறார்கள் “ஆமா அந்த மாணவர்களுக்கு கடுமையான தண்டனை” வழங்க வேண்டுமென்று குரைக்கின்றன பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும். இதையே சாக்காக வைத்துக்கொண்டுகல்லூரிகளுக்குள் புகுந்து மாணவர்கள் பேராசிரியர்களின் மண்டையை உடைக்கிறது போலீசு.
எதை வைத்து பஸ்டே’ வை தடை செய்தது நீதிமன்றம்?. ஒருநாள் ஏ.சி. காரில் செல்லும் போது நீதிபதி ஏன் டிராபிக் ஜாம் ஆகிறது என்று விசாரித்து பஸ்டே என்றவுடன் கொதித்துப்போனாராம். ஒருநாள் தானே பஸ்டே கொண்டாடப்படுகின்றது. மீதம் 364 நாட்களும் டிராபிக் ஜாம் ஆகிறதே அதற்கு யார் காரணம் ? காருக்குள்ளேயிருந்தே விசாரித்த நீதிபதி டிராபிக் ஜாம் எப்படி ஆகிறதென்பதை கண்டறிய காலை 7 மணிக்கு கோயம்பேடுக்கும், காலை 10 மணிக்கு அண்ணா மேம்பாலத்திற்கும் வந்திருக்கிறாரா? ஐடி கம்பெனி பஸ்களும்,கார்களும் குவிந்திருப்பது காரை விட்டு வெளியே வந்தால் தானே தெரியும். 100 பேர் செல்லக்கூடிய இடத்தை ஒன்று அல்லது இருவர் மட்டும் செல்லக்கூடிய கார்கள் ஆக்கிரமித்திருக்கின்றன.
கருணாநிதி,ஜெயா,விஜயகாந்த் என தினமும் பிறந்தநாள், வேட்புமனுத்தாக்கல் எனக்கூறிக்கொண்டு டிராபிக் ஜாம் நெருக்கடிக்குள் மக்களை தத்தளிக்க வைக்கின்றனர். முதல்வர் செல்கிறார் என்று வேகாத வெயிலிலும் கொட்டும் மழையிலும் மக்களை பல இடங்களில் நிறுத்தி வைத்து டிராபிக் ஜாமை உருவாக்குகிறார்களே இதெல்லாம் தெரியாதா? இதற்கெல்லாம்தடைவிதிப்பாரா? மெத்தப்படித்தவர்களாககாட்டிக்கொள்ளும் நீதிபதிகளும் ஐ.பி.எஸ் அதிகாரிகளும் அறிவு நாணயம் இருந்தால் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
“மாணவர்கள் பஸ்ஸிலே ரூட் அடிக்கிறார்கள் என்று பேருந்தில் தொங்கும் மாணவர்களை அடித்து நொறுக்குகிறது போலீசு. கோடிக்கணக்கான மக்கள் குவிந்திருக்கும் இந்தச் சென்னையில், அவர்களுக்கு ஏற்றாற் போல் பேருந்துகள் இயக்கப்படுகின்றனவா? மாணவன் மட்டும்தான் படியில் தொங்குகிறானா? வேலைக்குப் போகும் ஆண்கள், பெண்கள், வயதான தாய்மார்கள் என் அனைவரும் தான் உயிரைப் பணயம் வைத்து தொங்கிக் கொண்டு செல்கிறார்கள். பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்குவதாலேயே ரவுடிகள் என்கிறது, அலகாபாத் நீதிமன்றத்தால் ” காக்கிச்சட்டை அணிந்த ரவுடிகள்” என்று பட்டம் பெற்ற போலீசு. இவர்களின் யோக்கியதை நமக்கு தெரியாததா என்ன ? காவல்நிலைத்திற்கு புகார் கொடுக்க யாராவது நிம்மதியாக சென்று வர முடியுமா? “ங்கோத்தா, ங்கொம்மா ” என்று வார்த்ததைகள் வராத வாய்கள்தான் உண்டா? எத்தனை எத்தனை பெண்கள் மீதான காவல் நிலைய வன்புணர்ச்சிகள், கொலை, கொள்ளை, விபச்சாரம், ஆள்கடத்தல்கள் என அனைத்து கிரிமினல் வேலைகளையும் முன்நின்று நடத்துவது போலீசு தானே. இவர்களால் எப்படி மாணவர்களை திருத்த முடியும்?
மாணவர்கள் பேருந்துகளில் பாட்டுப்பாட வேண்டும், டாப் அடிக்க வேண்டும் எனக் கற்றுக்கொடுத்த சினிமாக்களும் டிவிக்களும் தான் பெண்களை கிண்டல் செய்வதையும் தம் அடிப்பதையும், சரக்கடிப்பதையும் ஊக்குவித்தன. காதலன் படத்திற்கு பிறகு தான் பஸ்ஸிலே டாப் அடிப்பது அதிகமாயிருக்கின்றது. பாய்ஸ் படத்தின் மூலம் பெண்களுக்கு எப்படியயல்லாம் மார்க் போடலாம் என்று கற்றுக்கொடுத்த இயக்குனர் சங்கர், எழுத்தாளன் சுஜாதாவையும் கைது செய்யவில்லை போலீசு, சீரழிவையே பரப்பும் சினிமாக்களுக்கு சென்சார் போர்டு தடை விதிக்கவில்லை, தடைவிதிக்க வேண்டிய தமிழக முதல்வர் மானாட மயிலாட நிகழச்சியில் சிறுவர் சிறுமிகளை ஆபாசமாக ஆடவிட்டு ரசிக்கிறா,வரிவிலக்கு அளித்து ஊக்குவிக்கிறார். இந்த கருணாநிதி அரசுதான் மாணவர்கள் பேருந்தில் பாடுகிறார்கள், பெண்களை கிண்டல் செய்கிறார்கள் என சீரழிந்தவர்களாக காட்டுகிறது .
“பஸ்டே கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது, கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்” துணை வேந்தர். ஆகா என்ன ஒரு கடமை உணர்வு. அரசு மற்றும் அரசு உதவி பெறும் 67 கல்லூரிகளில் பெரும்பாலும் ” பிரின்ஸ்பால்” இல்லை. கல்வி அரசிடமிருந்து தனியாருக்கும், தனியாரிடமிருந்த டாஸ்மாக் அரசுக்கும் கை’ மாறி தெருக்களெல்லாம் சாராயக்கடைகளாக நாறுகின்றன, மாணவர்கள் தங்கள் உரிமைகளை முன்வைக்க ஒரே வாய்ப்பாக இருந்த ” மாணவர் பேரவை தேர்தல்” நடத்தப்படுவதில்லை. கல்லூரிகளில் முறையான விளையாட்டு மைதானங்கள் இல்லை. அப்படியே இருந்தாலும் பச்சையப்பன் கல்லூரி விளையாட்டு மைதானங்களில் சாமியார்கள் கும்மியடிக்கிறார்கள்.மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்த கலாச்சார விழாக்கள் நடத்தப்படுவதிலலை, கலை மற்றும் இலக்கியங்களில் சிறந்து விளங்கும் மாணவர்களின் திறமை மேம்படுத்தப்படாமல் அஸ்தமனமாகிப்போகின்றது.நூலகம், கேண்டீன், குடிநீர், கழிவறை எனஅடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை. இதையயல்லாம் செய்து தர வக்கில்லாத துணைவேந்தர் மாணவர்களை கண்டிப்பது, “”ஊதாரி அப்பன் மகனுக்கு கூறும் உபதேசமல்லவா””.
ஏழை மாணவர்கள் படிப்பதற்கான சூழல் இல்லாததைப்பற்றியோ, அவர்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டதைப் பற்றியோ, விலைவாசி உயர்வால் மக்கள் பட்டினிச்சாவிற்கு தள்ளப்படுவது பற்றியோ, மாணவர்கள், தொழிலாளர்கள்,விவசாயிகள், வழக்குரைஞர்கள் என அனைவரையும் போலீசு கடித்துக்குதறுவதைப் பற்றியோ தினமலர், தினமணி போன்ற பார்ப்பன பத்திரிக்கைள் வாய்திறப்பதேயில்லை. “அம்மணமாயிருக்கும் போது எந்த நடிகை அழகு” என்று கருத்துக்கணிப்புச்செய்திகள், சினிமா விளம்பரங்கள், கள்ளக்காதல் விவகாரங்கள் என அருவருப்பையும் ஆபாசத்தையுமே வெளியிட்டு சமுதாயத்தையே சீரழித்த இவர்களுக்கு மாணவர்களை ரவுடிகளாகவும் பெறுக்கிகளாகவும் சித்தரிக்க யோக்கியதை இருக்கிறதா?
இப்படி உழைக்கும் மக்களுக்கு எதிராக இருக்கும் போலீசு, நீதிமன்றம், பத்திரிக்கைள் போன்றவை ஏன் மாணவர்கள் மீது கடித்துக் குதறுகின்றன? மாணவன் என்ற ஒரு பெயர்ச் சொல்லுக்குப் பின்னால் பல வினைச்சொற்கள் இருக்கின்றன. உலகம் முழுக்க நடந்த அனைத்து சமூக மாற்றங்களிலும் மாணவர்களின் பங்கு முக்கியமானது. வேறெங்கும் இல்லாத போர்க்குணம், உறுதி, ஒற்றுமைஆகியவைகளைப்பார்த்துதான் இந்த போலீசு, நீதிமன்றம், பத்திரிக்கைள் எனப்பலரும் ஆந்தையைப் போல அலறுகின்றனர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழக மாணவர்களின் வீரம் உலகறிந்தது. இராணி மேரிக்கல்லூரியைக் காத்த மாணவிகளின் போர்க்குணம் அரசின் குலையை நடுங்க வைத்தது. ஈழப்போராட்டத்தில் இறுதிவரை உறுதியாக நின்று இந்திய அரசை கதிகலங்கச் செய்தவர்கள் மாணவர்கள். உழைக்கும் மக்களை சென்னையை விட்டே விரட்டும் மெட்ரோ இரயில் திட்டத்திற்கு எதிராக மாபெரும் உள்ளிருப்புப் போராட்டத்தை நிகழ்த்தி பச்சையப்பன் கல்லூரியின் ஒரு அங்குல நிலத்தைக்கூட விட மாட்டோம் என போர் முழக்கம் செய்தவர்களும் மாணவர்கள் தான்.
இந்த ஒற்றுமையும் போர்க்குணமும் கல்வி வியாபாரமாவதற்கு எதிராகவும், ஸ்பெக்ட்ரம் போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் பகற் கொள்ளைகளுக்கு எதிராகவும் மாறக்கூடாதென்பதில் குறியாய் இருக்கிறது அரசு. அதனால் தான் பத்திரிக்கைகள், சினிமா, டிவிக்கள் போன்ற அரசின் கைக்கூலிகள் திட்டமிட்டே மாணவர்களை சீரழிக்கின்றன. கொலைசெய்வதையும், ரவுடித்தனத்தையம் மட்டுமே தொழிலாகக் கொண்ட காடுவெட்டி குருவை ஒரு தலைவனாகக் கொண்ட பா.ம.கவின் மக்கள் டிவி மாணவர்களை ரவுடிகளாக சித்தரிக்கிறது. இப்படி மாணவர்கள் திட்டமிட்டு சீரழிக்கப்படுவது பற்றி பேசாமல் ” மாணவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டுமென்கிறா “டிராபிக் ராமசாமி , “துக்ளக் சோ” ராமசாமி போன்ற பார்ப்பன நாய்களை என்ன செய்வது ? அடித்து விரட்ட வேண்டாமா?
உழைக்கும் மக்களே இதைப்பற்றி சற்று சிந்தியுங்கள். பஸ்டே ஆரம்பத்தில் எப்படி இருந்தது. மாணவர்கள் அமைதியான முறையில் பேருந்தை எடுத்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி, வருடம் முழுவதும் தங்களை பாதுகாப்பாக கொண்டு செல்லும் ஓட்டுனர்களுக்கும், நடத்துனர்களுக்கும் நன்றி செலுத்தினார்கள். தங்களுக்காக உழைத்து உழைத்து ஓடாய்த்தேய்ந்து போன அந்த தொழிலாளி வர்க்கத்திற்கு ஏழை எளிய மாணவர்களால் செலுத்தப்படும் நன்றியறிவிப்பு விழா தான் பஸ்டே. அன்று ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகள் மாணவர்களை தங்களுக்கு அடியாட்களாக மாற்றுவதற்காக திட்டமிட்டே பஸ்டேவை சீரழித்தனர். இன்று அவர்களோடு போலீசு,பத்திரிக்கை, டி.வி, ஆகியவைகளும் இணைந்து மக்களுக்கெதிராக நிறுத்திவருகின்றனர்.அரசு , அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களின் எல்லா சனநாயக உரிமைகளும் பறிக்கப்பட்ட சூழலில், அவர்களுக்கு இருக்கும் ஒரே மகிழ்ச்சி பஸ்டே மட்டும் தான்.
இந்த பஸ்டே விழாவையும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் கயிறுகட்டி தங்களைத் தாங்களே முறைப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள் மாணவர்கள். அவர்களே முற்றிலும் சீரழிவுகளை நீக்கி புதியதொரு வரலாற்றை படைப்பார்கள். போர்க்குணத்தோடு, ஒற்றுமையோடு, விளங்கும் மாணவர்களை பொறுப்புள்ளவர்களாக, மக்களின் உரிமைகளை ஓங்கி ஒலிப்பவர்களாக மாற்ற வேண்டியது தான் மாணவர் நலனில், சமூக நலனில் அக்கறை கொண்ட நமது கடமையாக இருக்க வேண்டுமே தவிர அவர்களின் ஒரே மகிழ்ச்சியான பஸ்டேவை பறிப்பதாக இருக்கக்கூடாது. எனவே நமது பிள்ளைகளான, சகோதரர்களான , நண்பர்களான மாணவர்களின் பஸ்டே விழாவை அங்கீகரித்து ஆதரிப்போம் !
மாணவர்களே ! ரூட் தலைகளே !
கல்லூரி, ரூட், ஏரியா என பிரிந்து கிடந்தது போதும், பஸ்டே நமது உரிமை மட்டுமல்ல. ஓட்டுனர்களுக்கும், நடத்துனர்களுக்கும் செய்ய வேண்டிய நன்றிக்கடன். பல்லாயிரக்கணக்கான மாணவர்களோடு, பேராசிரியர்கள், உழைக்கும் மக்களின் ஆதரவோடு, பொது மக்களுக்கு இடையூறில்லாமல் பஸ்டேவை கொண்டாடுவோம். பஸ்டே நமது உரிமை என ஆர்ப்பரித்து முழங்குவோம்.
கல்லூரி,ரூட் பேதங்களை மறந்து மாணவர்கள் ஒரே வர்க்கமாக ஒன்றிணைவாம் !
பஸ்டே நமது உரிமை என நிலை நாட்டுவோம் !
மாணவர்-தொழிலாளர் ஒற்றுமையை கட்டியமைப்போம் !
தொழிலாளர் உரிமைகளுக்கு மாணவர்களையும், மாணவர்களின் உரிமைக்கு தொழிலாளர்களையும் அணிதிரட்டிப் போராடுவோம்!
Filed under: அடிப்படை உரிமை, அரசியல், பு.மா.இ.மு, போராட்டம், மாணவர்கள் | Leave a comment »
அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு
பஸ்பாஸ் -யை இலவசமாக உடனே வழங்கு !
பு .மா. இ .மு தலைமையில்
மாபெரும் மறியல் போராட்டம்!
Filed under: அடிப்படை உரிமை, கல்வி தனியார்மயம், பு.மா.இ.மு, புகைப்படங்கள், போராட்டம், மாணவர்கள் | Leave a comment »
தொழிற் பாடப்பிரிவை அரசுப் பள்ளிகளில் ரத்து செய்யாதே !
ஜூன் 17 பு .மா. இ .மு தோழர்கள் தலைமையில்
குரோம்பேட்டை அரசுப்பள்ளி முற்றுகை !
போராட்ட புகைப்படக்காட்சிகள் !
Filed under: அடிப்படை உரிமை, அரசியல், கல்வி தனியார்மயம், பு.மா.இ.மு, புகைப்படங்கள், பேட்டி, போராட்டம், மாணவர்கள் | Leave a comment »
தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை அம்பலப்படுத்தும் விதமாக
பு .மா. இ. மு திருச்சி மாநகரத்தில் வரைந்துள்ள கேலிச்சித்திரம் .
தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக தொடரும்
பு. மா.இ மு வின் பிரச்சாரம் …,
Filed under: அரசியல், பு.மா.இ.மு, புகைப்படங்கள், போராட்டம், மாணவர்கள் | Leave a comment »
பு. மா. இ. மு தலைமையில் போராடிய செல்லம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு முதல்கட்ட வெற்றி!
Filed under: கல்வி கட்டணக்கொள்ளை, பு.மா.இ.மு, போராட்டம் | Leave a comment »
Filed under: பு.மா.இ.மு | Leave a comment »
Filed under: அரசியல், பு.மா.இ.மு, புரட்சிகர கவிதைகள் | Leave a comment »
Related:
சென்னையில் வழக்குரைஞர் போராட்டத்தை ஆதரித்து ம.க.இ.க பொதுக்கூட்டம்!
Filed under: அரசியல், ஈழம், பு.மா.இ.மு, ம.க.இ.க | 1 Comment »