
“ஸ்டாலின்”
கோடான கோடி உழைக்கும் மக்கள்
உவப்போடு உச்சரித்து உச்சரித்து
உழைக்கும் வர்க்கத்தின் உதடுகளாகவே மாறிவிட்ட ஒரு பெயர்!
முதலாளிவர்க்கமோ!
அந்தப்பெயரைச் சொன்னவுடனேயே சூடுபட்டது போல,
“அய்யோ ஸ்டாலின் என்று அலறுகிறது.
‘ஸ்டாலின்’ என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே
சுரண்டுபவர்களின் கூடாரத்திற்கு இரத்தம் சுண்டிப்போகிறது.
ஆம்! ஸ்டாலின் என்பது வெறும் பெயரல்ல!
அது வர்க்கப்போராட்டத்தின் ஒரு குறியீடு!
பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்திற்காக
போராடினார் என்ற ஒரே காரணத்திற்காக!
எத்தனை அவதூறுகளை
முதலாளித்துவம் பரப்பியது
தோழர் ஸ்டாலினைப் பற்றி!
முதலாளித்துவத்தின் ஆவிகளாக
எத்தனை கூலி எழுத்தாளர்களின் கட்டுக்கதைகள்
தோழர் ஸ்டாலினைச் சுற்றி!
பாட்டாளி வர்க்கம் வீறுகொண்டு எழும் போதெல்லாம்-
முதலாளித்துவ ஆசிபெற்ற அறிவுஜீவிகள்,
மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதிகள்,
கம்யூனிச திரிபுவாதிகள்
கதறுகிறார்கள்;
“அய்யோ மீண்டும் ஸ்டாலினிஸ்டுகள்
மீண்டும் ஸ்டாலினிஸ்டுகள்!”
ஆம்!
மூட்டைப்பூச்சிகளால் எப்படி
சூரியனை ரசிக்க முடியும்?
முதலாளித்துவத்தால் எப்படி
ஸ்டாலினை சகிக்க முடியும்!
‘தோழர் ஸ்டாலின்
நமது வர்க்கத்துக்காக பேசியவர்
நமது வர்க்கத்துக்காக போராடியவர்
முக்கியமாக –
நமது வர்க்கத்தை நமக்கு உணர்த்துபவர்
அந்த அவசியத்தோடு
அரசியல் தேவையோடு
நாம் ஒவ்வொருவரும்
தோழர் ஸ்டாலினிடமிருந்து
பெற வேண்டிய வர்க்க உணர்வை
சுருக்கமாக…….
வர்க்கப்போராட்டத்திற்கு நெருக்கமாக
உங்களையும் இணைக்கிறது
இந்த ஸ்டாலின் சகாப்தம்!
வெளியீடு
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
விலை ரூ 75
தொடர்புக்கு:
எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல்,
சென்னை-95.
அலைபேசி: (91)9445112675
மின்னஞ்சல்: rsyfchennai@gmail.com
ஸ்டாலின் ஆவணப்படம் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று விற்பனை அரங்கு, எண் 404 – 405
மனிதவாழ்வை மறுக்கும் முதலாளித்துவக் கொடுங்கோன்மைக்கு
மார்க்சிய-லெனினியமே ஒரே மாற்று
மக்களிடம் கொண்டு செல்லும் கீழைக்காற்று
சென்னை புத்தகக் கண்காட்சி
(டிச.30 – சன.10 வரை, ஜார்ஜ் பள்ளி,பச்சையப்பன் கல்லூரி எதிரில்)
கீழைக்காற்று விற்பனை அரங்கு, எண் 404- 405

- உரைவீச்சுக்களாய், இசைப்பாடல்களாய், அரசியல் போராட்டக்காட்சிப் பதிவுகளாய், ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகளின் ஒலி,ஒளி வட்டுகள், பெரியார், அம்பேத்கார் படைப்புகள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான அனைத்து ஆக்கங்களும் கீழைக்காற்றில் கிடைக்கும்.
- வாருங்கள், நண்பர்களிடம் சொல்லுங்கள்!
Filed under: புத்தகக் கண்காட்சியில் புமாஇமு, ஸ்டாலின் | Tagged: அரசியல், ஆவணப்படம், கீழைக்காற்று, சமூக மாற்றம், சமூகம், சோசலிசம், சோவியத் யூனியன், நிகழ்வுகள், படைப்புகள், புத்தகக் கண்காட்சி, புமாஇமு வெளியீடு, புரட்சி, போராட்டம், ரஷியப்புரட்சி, ரஷ்யா, லெனின், ஸ்டாலின் | 1 Comment »