• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 214,413 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளான பகத்சிங்,ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவு நாள் நிகழ்ச்சி மார்ச்-23


ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளான பகத்சிங்,ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவு நாள் நிகழ்ச்சி மார்ச்-23 அன்று புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் சார்பில் சென்னையில் மதுரவாயல் பகுதியில் நடைபெற்றது. காலை 8 மணியளவில் பறை முழக்கத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்திய தோழர். செந்தில் தனது தலைமை உரையில்” வருகின்ற சட்டமன்றத் தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளின் ஓட்டுப்பொறுக்கித்தனத்தை அம்பலப்படுத்தியும், பல்லாண்டுகளாக இருக்கும் இந்த தேர்தல் முறையினால் உழைக்கும் மக்கள் மென்மேலும் சுரண்டப்பட்டு கொண்டு இருப்பதையும், முதலாளிகளுக்கான இந்தத் தேர்தல் முறையினை ஒழிக்காமல் தீர்வு இல்லை” என்பதையும் விளக்கிப்பேசினார்.

அடுத்ததாக விண்ணதிரும் வகையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளின் நினைவை நெஞ்சில் ஏந்தக்கோரியும், நாடு மீண்டும் மறுகாலனியாவதை முறியடிக்கவும் முழக்கங்களிடப்பட்டன. பின்னர் சென்னைக்கிளை செயற்குழு உறுப்பினர் தோழர். சேகர், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் கொடியினை ஏற்றினார். பின்னர் சென்னைக்கிளை செயலாளர் தோழர். வ. கார்த்திகேயன் தனது சிறப்புரையில்,” ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளின் நினைவை நெஞ்சில் ஏந்த வேண்டிய அவசியத்தையும், உலகம் முழுவதும் பற்றிப்படர்ந்து வருகின்ற மக்கள் எழுச்சிகளைப்போல இங்கேயும் மக்கள் எழுச்சியை, கலகத்தைப் படைக்காமல் தீர்வு இல்லை” வலியுறுத்தியும் பேசினார்.

பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரை பூசையறைப் படங்களாக வைத்துக்கொண்டு பிழைக்கும் போலிகளுக்கு பதிலடி கொடுக்கவும் , நாடு மீண்டும் காலனியாவதற்கெதிராக மாபெரும் மக்கள்போராட்டங்களையும் கட்டியமைக்க வேண்டுமென்ற புரட்சிகர அரசியல் உணர்வை வளர்க்கும் விதத்திலும் அமைந்தது ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளான பகத்சிங்,ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவு நாள் நிகழ்ச்சி.

அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ்பாஸ் -யை இலவசமாக உடனே வழங்கு ! பு .மா. இ .மு தலைமையில் மாபெரும் மறியல் போராட்டம்!

அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு

பஸ்பாஸ் -யை இலவசமாக உடனே வழங்கு !

பு .மா. இ .மு தலைமையில்

மாபெரும் மறியல் போராட்டம்!


ஜூன் 17 பு .மா. இ .மு தோழர்கள் தலைமையில் குரோம்பேட்டை அரசுப்பள்ளி முற்றுகை !

தொழிற் பாடப்பிரிவை அரசுப் பள்ளிகளில் ரத்து செய்யாதே !

ஜூன் 17 பு .மா. இ .மு தோழர்கள் தலைமையில்

குரோம்பேட்டை அரசுப்பள்ளி முற்றுகை !

போராட்ட புகைப்படக்காட்சிகள் !

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக தொடரும் பு. மா.இ மு வின் பிரச்சாரம் …,

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை அம்பலப்படுத்தும் விதமாக

பு .மா. இ. மு திருச்சி மாநகரத்தில் வரைந்துள்ள கேலிச்சித்திரம் .

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக தொடரும்

பு. மா.இ மு வின் பிரச்சாரம் …,

கல்வியை வியாபாரமாக்கிவரும்

கல்வியை வியாபாரமாக்கிவரும்

தனியார் பள்ளிகள் அனைத்தையும் அரசுடைமையாக்கக்கோரி

ஜூன் 4 ,2010 பள்ளிக் கல்வி இயக்குநரகத்தை(DPI) முற்றுகையிட்டு

பு .மா. இ .மு போராட்டம் நடத்தியது.

கொள்ளாதவன் வாயில் கொழுக்கட்ட…

“பு.மா.இ.மு குரோம்பேட் கிளை துவக்க விழா” புகைப்படங்கள்

cro-10

cro-6

cro-4

cro-3

cro-2

cro-1

cro-9

 

cro-5

cro-8

 

cro-7

 

(படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்)