• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 214,337 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

இந்திய சமத்துவ நாடா? ம. பி., பள்ளிகளில் போஜன மந்திரம் அறிமுகம்

மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது. ஏற்கனவே இங்குள்ள பள்ளிகளில் தினமும் சூரிய நமஸ்காரம் செய்யும் திட்டம் அமல்படுத்தப் பட் டுள் ளது. இந்நிலையில், மதிய உணவு சாப்பிடுவதற்கு முன் போஜன மந்திரத்தை சொல்ல வேண்டும் என, கல்வித்துறை அமைச்சர் அர்ச்சனா சிட்னிஸ் அறிவுறுத்தியுள்ளார். அடுத்த மாதம் 5ம் தேதியிலிருந்து 4,000 அரசு பள்ளிகளில்
படிக்கும் மாணவர்கள், மதிய நேரத்தில் போஜன மந்திரத்தை சொல்லி விட்டு சாப்பிடலாம் (தினமலர் 05/07/2009).

 

இந்தியாவின் பெருமையே சமத்துவம் என்று சொல்லுபவர்களே, தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதும், போஜன மந்திரம் சொல்லுவதும் தான் சமத்துவமா?

இந்திய சட்டத்தை பார்த்தாலும், சமய சார்பற்ற நாடு என்று சொல்லுகிறது. ஆனால், பிஞ்சு வயதிலேயே பார்ப்பனிய சடங்கை செய்ய வைப்பது எந்தவிதத்தில் சரி?

இதே மாதிரி, வேறொரு மாநிலத்தில் கிருத்தவ, முஸ்லிம் மத சடங்கை செய்ய வைத்தால் இந்து பாசிஸ்டுகள் ஏற்றுக்கொள்வார்களா?

ஆசிரியரின் காலை மாணவர்கள் கழுவி விடுவது தான் கல்வின் தரத்திக்கு தேவையோ?

IMG_3386

ஜுலை 7, 2009 அன்று தாம்பரம் அருகேயயுள்ள மண்ணிவாக்கம் ஸ்ரீ நடேசன் வித்யா சாலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ‘குரு பூர்ணிமா’ என்று சொல்லி ஆசிரியரின் கால்களை மாணவர்களை கழுவி விட வைத்துள்ளனர் (தினமணி 07/07/2009).

முதலில், எதற்காக மாணவர்கள் ஆசிரியரின் காலை கழுவி விட வேண்டும்?

வேறு எந்த நாட்டிலாவது இது மாதிரி கொடுமைகள் நடைபெறுவதுண்டா?

இது மனித தன்மையுள்ள செயலா?

உண்மையில், ஆசிரியர் மாணவனை அன்பாக நடத்த வேண்டுமா? அல்லது அடிமையாக நடத்த வேண்டுமா?

கல்வியில், பார்பனியத்தின் கொடுமைக்கு இதைவிட என்ன சான்று வேண்டும்?

இந்த நவீன காலத்திலே இப்படி என்றால், கடந்த 2000 வருடங்களாக மக்கள் தொகையில் 95 சதவீதமாக ஆக உள்ள உழைக்கும் மக்கள் பட்ட கொடுமைகள் கொஞ்சமா?