• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 218,594 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

’டெத் ஆஃப் மெரிட்’ – தலித் மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்களை தோலுரிக்கும் ஆவணப்படம்!

தலித் சமூகத்தில் இருந்து படித்து ஒரு டாக்டராகவோ, என்ஞினியராகவோ ஆவதற்காக வரும் மாணவர்கள் பார்ப்பனியத்தின் சாதி அடக்குமுறை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் நிலை உயர்கல்வி நிறுவனங்களில் தொடர்கதை ஆகி வருகிறது.

அவ்வாறு தற்கொலை செய்து கொண்ட மாணவர்களான டாக்டர்  ஐஸ்ப்ரீத் சிங் மற்றும் டாக்டர் பால் முகுந்த் பார்த்தி , மணிஷ் குமார் ஆகியோரை பற்றிய ஆவணப்படங்கள்  தான் “டெத் ஆஃப் மெரிட்” .  அந்த இளைஞர்களின் குமுறலையும், அவர்கள் பெற்றோர்களின் நீதிக்கான  போராட்டத்தையும் ஆவணப்படம் விவரிக்கிறது.

உயர்கல்வி நிறுவனங்களான  IIT, AIIMS போன்றவை  இன்று பார்ப்பன பாசிஸ்டுகளின் கூடாரமாக இருந்து வருவதை,  வெட்டி வீழ்த்தினால் தான் உழைக்கும் மக்களின் சமூக விடுதலையை சாதிக்க  முடியும்.

ஜீலை மாத புதிய கலாச்சாரம் இதழில் இது குறித்த விரிவான கட்டுரை வெளிவந்து உள்ளது.

டெத் ஆஃப் மெரிட்  ஆவணப்படங்கள்  மற்றும் மேலும் விரிவான செய்திகளும் டெத் ஆஃப் மெரிட்   என்ற வலைத்தளத்தில்  நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இளைஞர்களே உஷார் – இனி புரோகிதர்களுக்கு ‘டிவி’ முதல் ‘ஏசி’ வரை தட்சணையாக குடுக்கவேண்டும்???

டில்லியில், பெரியளவிலான திருமணங்களை நடத்தி வைக்கும் புரோகிதர்கள் பல்வேறு வகையான பரிசு பொருட்களை பெறுகின்றனர். டில்லியில், திருமணங்களில் சடங்குகள் செய்யும் புரோகிதர்கள் நவீன மொபைல் போன்கள் முதல் பகட்டான மியூசிக் சிஸ்டம் வரை, எல்.சி.டி., “டிவி’ முதல் “ஏசி’ வரை ஏராளமான பரிசு பொருட்கள் பெறுகின்றனர்.

இதுகுறித்து, லட்சுமி நகரை சேர்ந்த கிரிஷன் காந்த் சர்மா என்பவர் கூறுகையில், “நாங்கள் பரிசு பொருட்கள் எதுவும் கேட்பதில்லை. அவரவர் அந்தஸ்திற்கேற்ப அவர்களாகவே கொடுக்கின்றனர். “யாராவது கொடுக்கும் போது நாங்கள் அதை வாங்க மறுப்பதில்லை’ என்றார்.இவர் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தி வைத்த திருமணம் ஒன்றிற்காக, “டிவி’ ஒன்றை பரிசாக பெற்றுள்ளார். கடந்த ஐந்தாண்டுகளில், அவர் மியூசிக் சிஸ்டம், “சிடி’ பிளேயர், நான்கு வாட்சுகள், மூன்று போன்கள் ஆகியவை பரிசாக பெற்றுள்ளார்.

புரோகிதர் ஒரு திருமணத்தை நடத்தி வைத்து, 51 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிப்பதாக, மியூசிக் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தை சேர்ந்த இஷாங்க் சபர்வால் என்பவர் தெரிவித்தார்.இதுகுறித்து திருமண ஏற்பாடு செய்யும் கரிமா குமார் என்பவர் கூறுகையில், “வெளிநாடு வாழ் இந்தியர்கள், குஜராத்திகள் ஆகியோர் தான் திருமணங்களுக்கு அதிகளவில் செலவு செய்கின்றனர்.

“புரோகிதர்கள் திருமண நிகழ்ச்சிகளுக்கு “ஏசி’ பிரிட்ஜ் போன்றவற்றை பரிசாக பெறுவதாக, என் நண்பர்கள் மூலம் கேள்விபட்டுள்ளேன். மூன்றாண்டு காலமாக என் பணி மூலமும் இதை நேரில் பார்த்துள்ளேன்’ என்றார்.இதுகுறித்து சமூகஆர்வலரான யோகேந்திர சிங் என்பவர் கூறுகையில், “அந்த காலத்தில் கால்நடைகள் பரிசாக வழங்கப்பட்டன. அவை தற்போது, பணம் மற்றும் பொருள் என வளர்ச்சியடைந் துள்ளது. “தற்போது எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை பரிசாக வழங்குவது இந்திய பாரம்பரியத்தின் விரிவடைந்த நிலை’ என்றார் (தினமலர், 07/11/2009 ).

———————————————————————————————–

// “யாராவது கொடுக்கும் போது நாங்கள் அதை வாங்க மறுப்பதில்லை’ என்றார்//

ஏதாவது ஒரு ஏழை மனிதனால் எந்த தட்சணையும் கொடுக்க முடியவில்லை என்றால் எந்த பார்பனரவது அந்த திருமணத்தை நடத்தி வைக்க தயாரா?

// “அந்த காலத்தில் கால்நடைகள் பரிசாக வழங்கப்பட்டன. அவை தற்போது, பணம் மற்றும் பொருள் என வளர்ச்சியடைந் துள்ளது. “தற்போது எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை பரிசாக வழங்குவது இந்திய பாரம்பரியத்தின் விரிவடைந்த நிலை’ என்றார்//

இதுதான் பார்ப்பனியத்தின் வளர்ச்சியோ? மனுதர்மம் மீண்டும் ஆட்சிக்கு வரத்துடிக்கிறதா?


உண்மையாகவே பார்பனர்கள் கடவுளின் அவதாரம் (அ) கடவுளின் தூதர்கள் என்றால் ஏன் தட்சணை வாங்குகிறார்கள்?

குரு தட்சணை என்று சொல்கிறிகளோ?  ஒரு ரூபாய் குரு தட்சணை என்று கொடுத்தால் எந்த புரோகிதராவது ஏற்று கொள்ள தயாரா?

இளைஞர்களே!

இவர்களுடைய மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது என்றால், ஏன் ஏதாவது ஒரு மந்திரத்தை சொல்லி இவர்களால் ஒரு ஆப்பிளையோ, ஒரு வாழை பழத்தையோ, குறைந்தபட்சம் ஒரு டம்ளர் தண்ணீரையோ உருவாக்க முடியவில்லை?

மந்திரத்தால், இவர்களால் உணவுப்பொருட்களை உருவாக்க முடிந்தால் இவர்கள் தட்சணை வாங்க வேண்டிய அவசியமே இருக்காதே?

மக்கள் தொகையில் 3% உள்ள பார்பனர்கள், உழைக்காமல் உண்டு கொளுத்து வாழ்கிறார்கள்.  இவர்கள், மக்கள் தொகையில் 90% ஆக உள்ள உழைக்கும் மக்களை சுரண்டி வாழ்கிறர்கள். இந்த சுரண்டலை பார்பனர்கள் ஒரு பண்பாடாக மாற்றி, இரண்டு ஆயிரம் வருடங்களாக உழைக்கும் மக்களை அடிமைப்படுத்தி, சொல்ல முடியாத கொடுமைகளையும் இழைத்து வருகின்றனர்.


ஆகையால் தான் நாங்கள் சொல்கிறோம், இந்த பார்ப்பன பண்பாட்டையே அடியோடு ஒழிக்க வேண்டும் என்று. இந்த கேடுகெட்ட பார்ப்பன பண்பாட்டிக்கு பதிலாக உழைக்கும் மக்களின் பண்பாட்டை கொண்டுவருவதே எங்களின் நோக்கம்.

தீபாவளி – படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை

IMG_3438
IMG_3439

பெரியார், தன் வாழ்நாளில் பெரும் பகுதியை பார்ப்பன மாயையை திரைகிழித்து வந்தார். ஆனால், பெரியாருக்கு மறைவுக்கு பின் திக – வோ வீரமணி & கோ – வாக மாறிவிட்டது (மாற்றப்பட்டது). ஆனாலும், இதுமாதிரி பிரசுரங்களை, அவ்வப்போது அரிப்புக்கு சொரிந்து விட்டுக்கொள்வதக்குகாக திக வெளியிடுகிறது.

இந்த பிரசுரத்தின் உள்ளடக்கத்தின் முக்கியத்துவம் கருதி இந்த வலைப்பூவில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆயுதபூசை! (கவிதை)


அதிர்ச்சியாகத்தான்
இருந்தது!
இருக்காதா பின்னே,
பகத்சிங் பிறந்த நாளன்று
அரசு விடுமுறை!

எப்படி சாத்தியம் இது?
அவனென்ன,
காந்தியா?
கதராடை உடுத்தி,
மக்களின்
கோவணம் உருவ!
வெள்ளைக்காரன்,
கால் நக்கி
மெடல் வாங்க!

என்னதான் நடந்தது,
நடந்தபடியே யோசித்த போது
ஞாபகம் வந்தது,
நேற்று
ஆட்டோக்கார “காம்ரேடு”
கடலை பொரி கொடுத்தாரே!
அடடே!
ஆயுத பூசை!

என்ன பொருத்தம்?

தூக்கிய
துப்பாக்கியை மட்டுமல்ல,
தன்
வார்த்தைகளையே தோட்டாக்களாக்கி,
வாரிசுகளிடம்
வழங்கியவனின்
பிறந்தநாளில்
வாழத்துடிக்கிறோம்
வற்றாத,
அவன் நினைவுகளைப் போல!

இன்னும்,
தெரிந்து சிலரும்
தெரியாமல் பலரும்
கொண்டாடுகிறார்கள்
ஆயுத பூசை!

யாருக்கான ஆயுதம்
யாருக்கான பூசை?

சும்மாவே இருந்து,
சோறு தின்று,
தொந்தி வளர்ப்பவனுக்கு
திரிசூலம் ஆயுதமென்றால்,

ஊரையே வெளிச்சமாக்க,
உயிரைப் பணயம் வைத்து
உயரக் கம்பங்களில்
ஏறும் எமக்கு
செருப்புதான் ஆயுதம்!

கண நேரம்
கடந்து செல்லும் முன்
மூக்கைப் பிடிக்கச் செய்யும்
உன்
மலச்சாக்கடையில்,
மூச்சடக்கி,
மூழ்கி எழும் எமக்கு
மலவாளிதான் ஆயுதம்!

உன் நுகர்வு வெறியின்
எச்சங்களால்,
உன் மனதைப் போலவே
குப்பை கூளமாகிப் போன
சாலைகளை
பெருக்கித் தள்ளும்
எமக்கு,
துடைப்பமே ஆயுதம்!

அனைவரும்
இந்து என்றாய்,
செய்யும் தொழிலே
தெய்வம் என்றாய்,

சேர்த்து வைத்துக்
கொண்டாடு பார்க்கலாம்,
உன் நவராத்திரிக் கொலுவில்,
செருப்பையும்,
மலவாளியையும்,
துடைப்பத்தையும்,
திரிசூலத்தின்
மூன்று முனைகளாய்
நினைத்து!

நன்றி: விடிவெள்ளி

விஸ்வ இந்து பரிஷத் அசோக் சிங்கால் – அண்டப்பொய் விஷம பிரச்சாரம்

இந்து கோவில்களை மீட்க இயக்கம் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் பேட்டி சிதம்பரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது (தினமலர் 22/09/2009):

1) அரசின் நிர்வாக திறமையின்மையால் கோவில்களுக்கு சொந்தான லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் வருமானம் வசூலிக்கப்படாமல் உள்ளது.

2) மதச்சார்பற்ற அரசுக்கு கோவில் நிர்வாகத்தை நடத்த எந்த உரிமையும் கிடையாது. உதாரணமாக காஷ்மீர் அமர்நாத் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அம்மாநில அரசு எடுத்துக் கொண்டது. இந்து மக்களின் கோபக் கிளர்ச்சியினால், அந்நிலங்கள் கோவிலுக்கு திரும்பவும் ஒப்படைக்கப்பட்டன.

இதுதான் அண்டப்பொய் விஷம – பிரச்சாரமோ?

1) 2007 ம் ஆண்டு மூழுவதும் தில்லை நடராசர் கோயிலுக்கு பக்தர்கள் மூலம் வந்த காணிக்கை என்று தீட்சிதர்கள் கொடுத்திருக்கும் கணக்கு என்ன தெரியுமா? 2007 ம் ஆண்டின் மொத்த காணிக்கை வரவு ரூ. 37,199. செலவு 37,000. கையிருப்பு 199 ரூபாய்!

“பரமேஸ்வரன் ஆனந்த நடனம் ஆடறார் பாருங்கோ” என்று தமிழிலும், “தி காஸ்மிக் டான்ஸ் ஆப் லார்டு ஷிவா” என்று ஆங்கிலத்திலும், இன்னும் எல்லா உலக மொழிகளிலும் வருசம் பூரா பேசி தீட்சிதர்கள் வசூலித்த தொகை வெறும் 37,199 ரூபாய்தானாம். அதாவது தினமொன்றுக்கு 100 ரூபாய். நடைபாதை பிள்ளையார் கூட உட்கார்ந்த இடத்தில் 400, 500 வசூல் பண்ணுகிறார். நம்ம நடராசப் பெருமானோ நாள் முழுவதும் டான்ஸ் ஆடுகிறார். இருந்தாலும் தினசரி வசூல் நூறு ரூபாய்தான் என்றால் நம்ப முடிகிறதா? (நன்றி: குருத்து)

தினமலர், 10/07/2009 :சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து அறநிலையத் துறை சார்பில், மேலும் மூன்று இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோவிலை கடந்த பிப்., 2ம் தேதி தமிழக அரசு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது. இக்கோவிலில் முதன் முறையாக, கடந்த பிப்., 5ம் தேதி உண்டியல் வைக்கப்பட்டது. உண்டியல் வைத்த 40 நாட்களில் நிரம்பி வழிந்ததால், கடந்த மார்ச் 12ம் தேதி திறக்கப்பட இருந்தது. தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வர மறுத்ததால், உண்டியல் திறக்கப்படவில்லை. அறநிலையத் துறை ஆணையர் உத்தரவுபடி 20ம் தேதி, இணை ஆணையர் திருமகள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. ஆயிரம் ரூபாய் நோட்டுகள் முதல் சில்லரை காசுகள் வரை மொத்தம் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 929 ரூபாய் (வெறும் 45 நாட்களில்)இருந்தது .

தீட்சிதர்கள் கொள்ளையடித்தால் அதில் தவறு எதுவும் இல்லை? இது தானே பாசிச பார்ப்பினியம்.

2) //இந்து மக்களின் கோபக் கிளர்ச்சியினால்//
உண்மையில் நடந்தது என்ன?
கடந்த அக்டோபரில் நடைபெற்ற காசுமீர் சட்டசபைத் தேர்தலில், ஜம்முவைச் சேர்ந்த இந்துக்களின் வாக்குகளை மொத்தமாக அள்ளிக் கொள்ளத் திட்டம் போட்ட காங்கிரசு மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி, வனத்துறைக்குச் சொந்தமான 39.88 ஹெக்டேர் நிலத்தை, அமர்நாத் ஆலய நிர்வாக வாரியம் அனுபவித்துக் கொள்ள அனுமதித்துச் சட்டம் போட்டது. இதற்கு எதிராக காசுமீர் பள்ளத்தாக்கில் போராட்டம் வெடிக்கவே, அந்தச் சட்டம் பின்னர் ரத்து செய்யப்பட்டது. எனினும், கூட்டணியில் பிளவு ஏற்பட்டு, மாநில ஆட்சியை இழந்தது, காங்கிரசு. நிலம் ரத்து செய்யப்பட்டதை இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவும், துரோகமாகவும் பா.ஜ.க. உருவேற்றியது.

தொடர்புடைய பதிவு: காஷ்மீர் : இந்து தேசியத்தின் பரிதாபத் தோல்வி

இதுவா திருமணம்?

IMG_3405

மதக்கலவரங்களை திட்டமிட்டு உருவாக்கும் இந்து முன்னணி – அம்பலம்

பழனியில் ஆகஸ்டு 26 அன்று இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்பட்டது. புது ஆயக்குடி அருகே விநாயகர் சிலையுடன் இந்து முன்னணியினர் வந்த பொழுது பள்ளிவாசல் முன்பு பட்டாசு வெடிக்கக்கூடாது என்று போலீசார் கூரியதால் இந்து முன்னணியினர் சாலை மறியல் செய்தனர்.

பின்பு விநாயகர் சிலை ஊர்வலம் காந்தி ரோடு சின்னப்பள்ளிவாசல் சென்ற போது, இந்து முன்னணியினர் பள்ளிவாசல் முன்பு நின்று இருந்தவர்களை வீடியோவில் படம் எடுத்தனர். அதை முஸ்லிம் இளைஞர்கள் ஏன் எங்களை படம் எடுக்கிறீர்கள், ஊர்வலத்தில் செல்பவர்களை படம் எடுங்கள் என்று கூறினார்கள் (மாலை முரசு, 27/08/2009).

———————————————————————————————–

முஸ்லிம் பண்டிகையின் போது, முஸ்லிம்கள் விநாயகர் கோயில் முன்பு பட்டாசு வெடித்தால் இந்து பாசிஸ்ட்களாகிய இந்து முன்னணியினர் ஏற்றுக்கொள்வார்களா?

ஏன், எப்போதும் விநாயகர் சிலை ஊர்வலம் பள்ளிவாசல் வழியாகவே நடத்தப்படுகிறது? வேற வழியே கிடையாதா?

விநாயகர் சிலை ஊர்வலம் என்பது மதக்கலவரங்களை உருவாக்க மட்டும் தான் கொண்டாடப்படுகிறது என்று தானே அர்த்தம்??

தொடரும் இந்து பாசிசம்… பள்ளி ஆசிரியர்கள் இனி ‘ராஷ்ட்ர ரிஷி’ கள்…

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது. “சூரிய நமஸ்காரம்” என்ற யோக முறையை பள்ளிகளில் கற்பிக்க கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. “சூரிய நமஸ்காரத்தை பள்ளியில் கட்டாயமாக்கக்கூடாது’ என கோர்ட் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பள்ளிகளில் மதிய உணவுக்கு சாப்பிடுவதற்கு முன், போஜன மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்ற நடைமுறை, அடுத்த மாதம் 5ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. “இது, மதச் சுதந்திரத்துக்கு எதிரானது’ என முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்த எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், ஆசிரியர்களை “ராஷ்ட்ர ரிஷி’ என்றழைக்க வேண்டும் என்ற புதிய உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 13ம் தேதி முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வருகிறது.

மாநில கல்வி அமைச்சர் அர்ச்சனாவின் இந்த உத்தரவுக்கு, ஆர்ச் பிஷப் லியோ கார்னிலியோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அகில இந்திய முஸ்லிம் தியோகர் கமிட்டி தலைவர் அசப் ஷமீரி குர்ரம் குறிப்பிடுகையில், “ஆசிரியர்களை ராஷ்ட்ர ரிஷி என அழைக்கப்படுவதற்கு பதிலாக, “ராஷ்ட்ர மவுல்வி’ என ஏன் அழைக்கக்கூடாது’ என்று கேள்வி எழுப்பியுள்ளார் (02/09/2009).

———————————————————————————————-

கரேணுக்கு (karen) கேள்வி,

முதலில் “சூரிய நமஸ்காரம்”, பின்பு போஜன மந்திரம், அதன் பின் ‘ராஷ்ட்ர ரிஷி’, இது என்ன சமத்துவ நாடா அல்லது இந்து பாசிச நாடா?

இப்ப எல்லாம் யாரு ஜாதி பாக்கறா?

நகரத்தில் உள்ள படித்த அறிவுஜீவிகளிடம் தீண்டாமையின் கொடுமையை பற்றி பேசினால் முதலில் அவர்கள் சொல்லுவது, “இப்ப யாரு சார் ஜாதி பாக்கறா?” என்பது தான்.

ஆகையால் தான், தீண்டாமை கொடுமையை உருவாக்கிய பார்பனியத்தின் ஊதுகுழல் பத்திரிக்கை ஆன “டைம்ஸ் ஆப் இந்தியா”-வில் இருந்து ஒரு செய்தி.

தீண்டாமை கொடுமையை தினம் தினம் அனுபவிக்கும் தாழ்த்தபட்டவர்களில், மிக மிக சொற்பமனவர்களே இந்த வன்கொடுமையை வெளியில் கொண்டுவருகின்றனர். 6-ம் தேதி ஆகஸ்டு, 2009 வந்த செய்தி தெரிவிப்பது என்னவென்றால், சண்டிகரில் உள்ள தாழ்த்தபட்டவர்களுக்கான தேசிய கமிஷனிடம் தினமும் 3-4 தீண்டாமை கொடுமை பற்றி புகார் வருகிறது என்கின்றனர். இந்த புகார் எல்லாம், தீண்டாமை கொடுமையால் மிக மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்களால் இதற்கு மேல் தாங்க முடியாது என்ற கட்டத்தில் வெளியே கொண்டு வருகின்றனர்.

கிராமங்களில், தனி குடியிருப்பு, தனி கோயில், தனி சுடுகாடு……இன்னும் எத்தனையோ கொடுமைகள்.

அதில் ஒன்று தான், கீழே உள்ள படத்தில் காண்பது (இதுவும் “டைம்ஸ் ஒப் இந்தியா”-வில் 06/08/2009 அன்று வந்த புகைப்படம்.)…

IMG_3395

ஆதிக்க சாதி வர்க்கமே, தாழ்த்தபட்டவருக்கு உன் வீட்டு டம்ளரில் தண்ணி கொடுத்தால் தீட்டு பட்டுவிடும்.

ஆனால், இதே தாழ்த்தபட்டவர் உன் நிலத்தில் ஓடாய் உழைத்து அதனால் வரும் லாபத்தை நீ எடுத்து கொள்ளும் போது மட்டும் ஏன் தீட்டு பார்ப்பதில்லை?

பெண்ணை விடுதலையாக்கும் புரட்சிகர திருமணத்துக்கு தடை !!

puka copy

பெண்ணை  முப்பத்து முக்கோடி தேவருக்கு வைப்பாட்டியாக்கும்
பார்ப்பனீய திருமணத்துக்கு பூங்கொத்து !

பெண்ணை விடுதலையாக்கும் புரட்சிகர திருமணத்துக்கு  தடை !!

பார்ப்பன பரிவாரங்களின் வாலாக மாறிய காவல் துறை !!!