• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,819 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

தோழர் ஸ்டாலின் – உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம் !

தோழர் ஸ்டாலின் – அவர் உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம். ஐரோப்பாவைப் பிடித்தாட்டுகிறது ஒரு பூதம், கம்யூனிசம் என்னும் பூதம் என்றுகுறிப்பிட்டாரே மார்க்ஸ், உலக முதலாளி வர்க்கத்தைப் பொருத்தவரை, அந்த கம்யூனிச பூதத்தின் மனித உருவம் – ஸ்டாலின்.

டிச 21, தோழர் ஸ்டாலினின் 132 வது பிறந்த நாள்.

தோழர் ஸ்டாலின் – அவர் உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம்.

ஐரோப்பாவைப் பிடித்தாட்டுகிறது ஒரு பூதம், கம்யூனிசம் என்னும் பூதம் என்று கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையிலே குறிப்பிட்டாரே மார்க்ஸ்,

உலக முதலாளி வர்க்கத்தைப் பொருத்தவரை,
அந்த கம்யூனிச பூதத்தின் மனித உருவம் – ஸ்டாலின்.

ஏகாதிபத்திய மிருகங்களும், முதலாளித்துவக் கிருமிகளும் ஊடுறுவ முடியாத  கம்யூனிசத்தின் இரும்புக் கோட்டை

முதலாளித்துவ அறிவு ஜீவிகளுக்கு அரக்கன்,
உலகப் பாட்டாளி வர்க்கத்துக்குக் ‘காவல்தெய்வம்’

………………..

எதிரிகளிடம் வெறுப்பையும் மக்களிடம் பெருமிதத்தையும்
ஒரே நேரத்தில் தோற்றுவித்த ஒரு பெயர் உண்டென்றால்

அந்தப் பெயர் – ஸ்டாலின்.

………………..

பாட்டாளி வர்க்கத் தலைவர்களிலேயே அதிகம் தூற்றப்படுபவர் அவர்தான்.

அவரை வெல்ல முயற்சி செய்தார்கள்,
முடியாதால் கொல்ல முயற்சி செய்தார்கள்.

பேனைப் பெருமாளாக்கி அவரைத் தூற்றினார்கள்.

பொய்களை ஆதாரமாகக் கொண்டே அவருக்கு எதிராக
ஆயிரக்கணக்கான நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்கள்.

பிறகு அந்த நூல்களின் எண்ணிக்கையை ஆதாரமாகக் கொண்டே
அந்தப் பொய்களையெல்லாம் உண்மை என்று சாதித்தார்கள்.

அவர் மறைந்து ஆண்டுகள் பல கடந்த போதிலும்,
எதிரிகளின் வெறி இன்னும் அடங்கவில்லை.

………………..

வரலாற்றில் கொடிய மக்கள் விரோதிகளுக்கும்
வில்லன்களுக்கும் கூட சலுகை வழங்கி

அவர்களுடைய தவறுகளை அனுதாபத்துடன் பரிசீலிக்கும்
அறிவுஜீவிகளின் மூளைகள்,

ஸ்டாலின் என்ற சொல்லைக் கேட்டவுடன் மட்டும்
முறுக்கிக் கொண்டு வெறுப்பைக் கக்குகின்றன.

நரமாமிசம் தின்னும் காட்டுமிராண்டியைப் போல அவரைச் சித்தரிக்கின்றன.

………………..

மார்க்சியம் லெனினியம் மா சே துங் சிந்தனை அனைத்தையும் மெச்சுவதாகக் கூறிக்கொண்டே

கட்சிக்குள் வர மறுக்கும் அறிவாளிகள்,

தங்களை நசுக்கிப் பிழியும் எந்திரமாகக் கட்சியைக் கருதுபவர்கள்,

கட்டுப்பாடுக்கு அஞ்சுபவர்கள், ஜனநாயகம் என்ற பெயரில்

சாதாரண தொழிலாளிகளின் உத்தரவுக்கெல்லாம் நாம் கட்டுப்படவேண்டியிருக்குமே என்று அஞ்சுபவர்கள் –

இவர்கள் யாருக்கும் ஸ்டாலினைப் பிடிப்பதில்லை.

………………..

கம்யூனிஸ்டு முன்முயற்சி, கம்யூனிஸ்டு வேலைத்திறன், கம்யூனிஸ்டு கட்டுப்பாடு, கம்யூனிஸ்டு ஒழுக்கம், கம்யூனிஸ்டு தியாகம்

என்ற சொற்களுக்கான இலக்கணத்தையெல்லாம்

அவருடைய தலைமையின் கீழ்தான்

இலட்சக்கணக்கான ரசிய போல்ஷ்விக்குகள் உருவாக்கிக் காட்டினார்கள்.

………………..

அவருடைய தலைமையின் கீழ் சோசலிசத்தை
கட்டியெழுப்புவதற்காகக் குனிந்த ரசியா,

நிமிர்ந்தபோது இட்லரின் குண்டுகளை நெஞ்சில் வாங்கிக்கொண்டது.

ஐரோப்பாவும் அமெரிக்காவும் இரண்டு நூற்றாண்டுகள்
நடந்து எட்டிய முன்னேற்றத்தை,

இருபதே ஆண்டுகளில் பறந்து எட்டியது.

200 இலட்சம் ரசிய மக்களை இட்லரின் போர்வெறிக்குப் பலி கொடுத்து

உலக மக்களையே பாசிசத்திலிருந்து காப்பாற்றியது.

………………..

மனிதகுலத்தின் ஒப்புயர்வற்ற இந்த வரலாற்றுப் பெருமைகள் அனைத்துக்கும்

உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் ஒரு கம்யூனிஸ்டும்

இன்று நெஞ்சு நிமிர்த்தி உரிமை கொண்டாட முடிகிறதென்றால்,

அந்த கவுரவத்தை நமக்கு வழங்கியவர் தோழர் ஸ்டாலின்.

………………..

வரலாற்றில் மனித குலம் கண்டிராத உழைப்பு,

ஞானியர்களின் சிந்தனைக்கும் எட்டியிருக்க முடியாத அறம்,

கவிஞர்கள் கற்பனையாலும் தீண்ட முடியாத தியாகம்

இவையனைத்தையும் நம் கண்முன்னே நிதர்சனமாக்கியது சோசலிச ரசியா.

அந்த சோசலிச ரசியாவின் புதல்வனும் தந்தையும் – தோழர் ஸ்டாலின்.

அதனால்தான் அவர் கம்யூனிசத்தின் குறியீடு.

அதனால்தான் அவர் ஏகாதிபத்தியத்தின் குறியிலக்கு.

………………..

கம்யூனிசத்தை அது பிறந்த மண்ணிலேயே புதைத்து விட்டதாக களி வெறி கொண்டு பிதற்றிய முதலாளித்துவம்,

இதோ மரணப் படுக்கையில் கிடக்கிறது.

அதன் மலமும் மூத்திரமும் பரப்பும் வீச்சத்தால்
மனித சமூகமே மூச்சுத் திணறுகிறது.

இருப்பினும் சாக மறுக்கும் முதலாளித்துவம், நம்மைக் கொல்கிறது.

பட்டினிச்சாவுகள், தற்கொலைகள், கொலைகள், பயங்கரவாதத் தாக்குதல்கள், ஆக்கிரமிப்புகள், நரவேட்டைகள்

அனைத்தும் ஒரே காரணம் – முதலாளித்துவம்.

மரணப்படுக்கையில் கிடக்கும் முதலாளித்துவம்,

தன்னுடைய மரணத்தைத் தள்ளிப்போடுவதற்காகவே

மனிதகுலத்தை நசிவுக்கும் அழிவுக்கும் தள்ளும் முதலாளித்துவம்!

………………..

முதலாளித்துவம் வென்று விட்டதாகவும்,
கம்யூனிசத்தைக் கொன்றுவிட்டதாகவும்

செய்யப்பட்ட பிரகடனங்கள் பொய் என்று

நாம் நடைமுறையில் நிரூபிக்கும் வரை,

அதாவது முதலாளித்துவத்தை அதற்குரிய சவக்குழிக்குள் இறக்கி
உப்பை அள்ளிப் போடும் வரை,

கம்யூனிசம் செத்துவிட்டதாக

அதன் வாயிலிருந்து ஒரு முனகலாவது கேட்டுக் கொண்டுதான் இருக்கும்.

………………..

கம்யூனிசம் வெல்லும்வரை முதலாளித்துவம் கொல்லும்.

முதலாளித்துவக் லாபவெறியின் கோரதாண்டவத்தை,

பாசிசம் உலகமக்கள் மீது தொடுத்த ஆக்கிரமிப்புப் போரை,

கம்யூனிசத்தின் வெற்றியின் மூலம்தான் முறியடித்தார் தோழர் ஸ்டாலின்.

பாசிசம் தோற்றதனால் கம்யூனிசம் பிழைத்துவிடவில்லை.

மாறாக, கம்யூனிசம் வென்றதனால்தான் பாசிசம் தோற்றது.

அந்தக் கம்யூனிச வெற்றியின் சின்னம் தோழர் ஸ்டாலின்.

………………..

முதலாளித்துவத்தைக் கொன்று புதைத்த மண்ணில்,

தோழர் ஸ்டாலினின் புகழை ஒரு மலர்ச்செடியாய் நாம் நடுவோம்.

அதற்கு முன், அவர் நினைவு தரும் உத்வேகத்தால்

முதலாளித்துவத்தைக் கொன்று புதைப்போம்!

-மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.

“ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம்!

“ஸ்டாலின்”

கோடான கோடி உழைக்கும் மக்கள்
உவப்போடு உச்சரித்து உச்சரித்து
உழைக்கும் வர்க்கத்தின் உதடுகளாகவே மாறிவிட்ட ஒரு பெயர்!

முதலாளிவர்க்கமோ!
அந்தப்பெயரைச் சொன்னவுடனேயே சூடுபட்டது போல,
“அய்யோ ஸ்டாலின் என்று அலறுகிறது.
‘ஸ்டாலின்’ என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே
சுரண்டுபவர்களின் கூடாரத்திற்கு இரத்தம் சுண்டிப்போகிறது.

ஆம்! ஸ்டாலின் என்பது வெறும் பெயரல்ல!
அது வர்க்கப்போராட்டத்தின் ஒரு குறியீடு!

பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்திற்காக
போராடினார் என்ற ஒரே  காரணத்திற்காக!

எத்தனை அவதூறுகளை
முதலாளித்துவம் பரப்பியது
தோழர் ஸ்டாலினைப் பற்றி!
முதலாளித்துவத்தின் ஆவிகளாக
எத்தனை கூலி எழுத்தாளர்களின் கட்டுக்கதைகள்
தோழர் ஸ்டாலினைச் சுற்றி!

பாட்டாளி வர்க்கம் வீறுகொண்டு எழும் போதெல்லாம்-
முதலாளித்துவ ஆசிபெற்ற அறிவுஜீவிகள்,
மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதிகள்,
கம்யூனிச திரிபுவாதிகள்
கதறுகிறார்கள்;
“அய்யோ மீண்டும் ஸ்டாலினிஸ்டுகள்
மீண்டும் ஸ்டாலினிஸ்டுகள்!”

ஆம்!
மூட்டைப்பூச்சிகளால் எப்படி
சூரியனை ரசிக்க முடியும்?
முதலாளித்துவத்தால் எப்படி
ஸ்டாலினை சகிக்க முடியும்!

‘தோழர் ஸ்டாலின்
நமது வர்க்கத்துக்காக பேசியவர்
நமது வர்க்கத்துக்காக போராடியவர்
முக்கியமாக –
நமது வர்க்கத்தை நமக்கு உணர்த்துபவர்
அந்த அவசியத்தோடு
அரசியல் தேவையோடு
நாம் ஒவ்வொருவரும்
தோழர் ஸ்டாலினிடமிருந்து
பெற வேண்டிய வர்க்க உணர்வை
சுருக்கமாக…….
வர்க்கப்போராட்டத்திற்கு நெருக்கமாக
உங்களையும் இணைக்கிறது
இந்த ஸ்டாலின் சகாப்தம்!

வெளியீடு

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி

விலை

ரூ 75

கிடைக்குமிடம்:
கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை-600 002
போன்:044 – 2841 2367

தொடர்புடைய பதிவுகள்:

சோவியத் வீரனின் தியாகம்

தோழர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினத்தை (டிசம்பர் 21) முன்னிட்டு ….

தோழர் ஸ்டாலின் தலைமையில், ஹிட்லர் என்ற பாசிச மிருகத்திடமிருந்து உலகை காப்பாற்றிய சோவியத் வீரர்கள் பற்றிய உண்மைகதைகள் சிலவற்றை மாஸ்கோ நூலில் இருந்து தேர்தெடுத்து க்கதைகள் ஒவ்வொன்றாக பிரித்து வெளியிட முடிவு செய்ததில் நான்காவது மற்றும் இறுதி பதிவாக “வீரனின் தியாகம்”   என்ற உண்மைக்கதையினை வெளியிடுகிறோம்.

************************

ஏப்ரல் 25ந் தேதியன்று முதல் பைலோருஷ்ய இராணுவம் மற்றும் முதல் உக்ரேனிய இராணுவத் த்ருப்புகளும் பெர்லினைச் சூழ்ந்து கொண்டு முற்றுகையை முழுமையாக்கின. இப்பொழுது நகரத்தின் நடுப்பகுதியில் போ நடைப் பெற்றது.

  பெர்லின் ஒரு மாபெரும் நகரம். அந்த சமயத்தில் அங்கே மொத்தம் ஆறு லட்சம் வீடுகள் இருந்தன. ஒவ்வொரு தெருவிலும் சாவு தலை விரித்தாடியது.

   நாஜிகள் தெருக்களில் குறுக்குச் சுவர்களும் பலவிதமான தடைகளும் ஏற்ப்படுத்தினார்கள். குறுக்குச் சுவர்களுக்குச் செல்லும் பாதைகாளில் கண்ணிகள் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு தெருவும் ஒரு போர்க்களமாக உண்மையாகவே மாறியிருந்தது.

பெர்லின் நகரத்தின் தெருக்களில் ஒன்றில் குறுக்குச் சுவர்கள் மிகவும் பலமாக அமைக்கப்பட்டிருந்த்து. இரும்பு, எஃகு மற்றும் பாறாஇக் கற்களைக் கொண்டு நாஜிகள் அவற்றைக் கட்டியிருந்தார்கள். முதலில் காலாட்படை அந்தச் சுவர் மீது மோதியது. ஆனால் பலனில்லை போர்வீர்ர்கள் வீனாக உயிரிழந்தார்கள். அடுத்தபடியாக சோவியத் டாங்கிகள் அங்கே வந்து தங்களுடைய கணமான பீரங்கிகளைக் கொண்டு சுட்டன; அங்கிருந்த குறுக்குச் சுவர்காளில் எங்காவது ஒரு இடத்தில் பிளவை ஏற்ப்படுத்த முயற்சி செய்தார்கள். ஆனால் டாங்கி பீரங்கிகளின் குண்டுகளால் கூட அந்தச் சுவர்களைத் தகர்க்க முடியவில்லை. இரும்பும் சிமெண்டும் சேர்த்துக்கட்டப்பட்ட கட்டிட்த்தை போல அந்தச் சுவர் உறுதியாக நின்றது. அந்தச் சுவர் காலாட் படைகளையும் டாங்கிகளையும் முன்னேறவிடாமல் தடுத்தது. எல்லாப் போக்குவரத்தும் அந்த இட்த்தில் நின்றுவிட்டது.

காலாட் படைவீர்ர்களும் டாங்கி ஓட்டிகளும் அங்கே இரும்பையும் எஃகையும் பாறாஇக் கற்களையும் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

”வேட்டு வைக்கும் திறமைசாலிகள், பாதை அமைக்கும் படையினர் சிலராவது எஅம்மிடமிருந்தால்…” என்று பேசிக் கொண்டார்கள்.

அவர்கள் விரும்பியது மாதிரியே பாதை அமைக்கும் படையைச் சேர்ந்த வீர்ர் ஒருவர் அந்தக் குறுக்குச் சுவரை நோக்கி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். அவர் தனக்குப் பின்னால் வெடிமருந்துகள், ஒரு பிக்ஃபோர்டு எறியூட்டும் பொறியமைப்பு மற்றும் எரிகின்ற சுருள் ஆகியவற்றை இழுத்துக் கொண்டு வந்தார். அவர் அங்கே நின்று சற்றுத் தாமதித்து விட்டுக் கீழே குனிந்தார். பிறகு மறுபடியும் தரையில் ஊர்ந்தார்.
போர்வீரர்கள் கண்கள் அவர் மீதே இருந்தன. அடுத்தாற் போல என்ன செய்யப் போகிறார்  என்பது அவர்களுக்குத் தெரியும். அவர் அந்தக் கற்களில் ஒன்றின் மீது தாவி ஏறி அதன் மீது படுத்துக் கொண்டார். பிறகு வெடிமருந்தை அந்தக் கல்லின்  அடியில் கவனமாக வைத்து பிக்ஃபோர்டு எறியூட்டும் பொறியமைப்பை இணைத்தார்.

அவருடைய ஒவ்வொரு செயலையும் போர்வீர்ர்கள் கவனமாக பார்த்தார்கள். இனிமேல் திரியில் நெருப்பைப் பற்ற வைப்பார். அந்த நெருப்புப் பொறி சுருள் வழியாக வெடுமருந்தை நோக்கி வேகமாக போகும். அவர் உடனே கல்லிலிருந்து கீழே குதிப்பார்; குறுக்கு சுவர்க்கு அப்பால் ஓடிப்போய் விடுவார். நெருப்புப் பொறி  வெடுமருந்தில் பட்டவுடன் ஏற்ப்படும் வேட்டில் சுவர் அசைந்தாடும். அதில் பிளவு ஏற்படும். போர்வீர்ர்கள் அந்தப் பிளவு வழியாக உள்ளே குதிப்பார்கள்.

அது ஆரம்பமாயிற்று. அந்தப் போர்வீர்ர் பையிலிருந்து தீக்குச்சியை எடுத்து உரசி நெருப்பு பற்ற வைத்தார். அதை திரியில் காட்டினார். திடீரென்று அவர் தன்னுடைய கைகளை விரித்துக் கொண்டு அந்தக் கல் மீது படுத்துக் கொண்டார். சிறிதும் அசையவில்லை. “அவரைக் கொன்று விட்டார்கள்” என்று யாரோ சொன்னார்கள். இல்லை . அந்தப் போர்வீர்ர் நகரத் தொடங்கினார்.

“சகோதரர்களே! அவர் சாகவில்லை. காயமடைந்திருக்கிறார்” என்றார் ஒருவர்.

அவர் உடலே லேசாக அசைத்தார். தலையைத் தூக்கினார். கல்லைப் பார்த்தார். திரியைப் பார்த்தார். ஏதோ கணக்குப் போடுவது போல இருந்தது. அவர் மறுபடியும் தீப்பெட்டியை எடுத்தார். மறுபடியும் அதை கையில் பிடித்துத் தீக்குச்சியை உஅரசினார். அவர் உடல் பலவீனமடைந்து விட்டபடியால் தீக்குச்சி பற்றிக் கொள்ளவில்லை. மறுபடியும் அந்தப் பாறாங்கள் மீதே படுத்துக் கொண்டார்.

அந்தப் பாறை சிகப்பு நிறமாக மாறிக் கொண்டிருப்பதைப் போர்வீர்ர்கள் பார்த்தார்கள். அவர் உடலிலிருந்து இரத்தம் பெருகிக் கொண்டிருக்கிறது.  அவர் பலம் குறைந்து வருகிறது. ஆயினும் அவர் தன்னுடைய முயற்சியைக் கையில் எடுத்தார். மூன்றாவது முறையாகக் குச்சியை உரசினார். பலே! அது தீப்பற்றிவிட்டது. நெருப்பைத் திரியை நோக்கி நீட்டினார். கடைசியில் அதற்கு நெருப்பு வைத்துவிட்டார். அந்தச் சுருளிலிருந்து புகை, பாம்பைப் போல வெடிமருந்தை நோக்கி ஓடியது.

“குதி! கீழே குதி!”  என்று போர்வீரர்கள் அவரை நோக்கி கத்தினார்கள்.

அவர் அசைவில்லாமல் அக்கல்லின் மேலே கிடந்தார்.

”குதி! குதி!”

போர்வீரர்களுக்கு இப்பொழுது தான் உண்மை தெரிந்தது. கீழே குதிப்பதற்க்கு அந்தப் போர்வீரனுடைய உடலில் சக்தி இல்லை.அந்த வீர்ர் கல்லின் மீது அசைவில்லாமல் படுத்திருந்தார்.
சக்தி வாய்ந்த வெடிமருந்து கண்ணைக் கூச வைக்கும் பிரகாசத்தோடு வெடித்தது. பாறாங்கற்கள் உடைந்து பெரும் கற்கள் வானத்திலே பறந்தன. சுவரில் ஒரு துவாரம் வாயைப் பிளந்து கொண்டுருப்பது தெரிந்தது. போர்வீர்ர்கள் அதன் வழியாக உள்ளே குதிப்பார்கள்.

வீரர்களின் புகழ் ந்ன்றும் அழியாது! துணிவுடையோர் புகழ் என்றும் மறையாது!

முந்தைய பதிவுகள்:

வீட்டை கொடுத்த வீராங்கனை!

சோவியத் வீரன் டான்கோ

சோவியத் வீரன் டிட்டாயெவ்

வீட்டை கொடுத்த வீராங்கனை!

தோழர் ஸ்டாலின் தலைமையில், ஹிட்லர் என்ற பாசிச மிருகத்திடமிருந்து உலகை காப்பாற்றிய சோவியத் வீரர்கள் பற்றிய உண்மைகதைகள் சிலவற்றை மாஸ்கோ நூலில் இருந்து தேர்தெடுத்து மொத்தமாக நமது வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது.

தோழர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினத்தை (டிசம்பர் 21) முன்னிட்டு அக்கதைகள் ஒவ்வொன்றாக பிரித்து வெளியிட முடிவு செய்ததில் மூன்றாவது பதிவாக வீட்டை கொடுத்த வீராங்கனை”  யை வெளியிடுகிறோம்.

************************

சோவியத் துருப்புகள் முன்னேறித் தாக்கிக் கொண்டிருந்தன. மேஜர்-ஜெனரல் காட்டுகோவ் தலைமையிலிருந்த டாங்கிப் படை நாஜிகளைத் துரத்திக் கொண்டிருந்த்து.

திடிறென்று அவர்கள் ஒரு இடத்தில் நின்றர்கள். அங்கே நதியின் மீதான பாலம் நொறுங்கிப் போயிருந்த்து. நோவொ-பெட்ரோவ்ஸ்கொயே கிராமத்தில் வொலோகோலாம்ஸ்குக்குப் போகும் பாதையில் இந்த சம்பவம் நடைபெற்றது.

டாங்கி ஓட்டிகள் எந்திரங்களை நிறுத்தினார்கள். அவர்களுடைய கண்களுக்கு முன்பகவே நாஜிகள் தப்பியோடிக் கொண்டிருந்தார்கள். ஜெர்மனியப் படைகளை நோக்கி யாரோ சுட்டார்கள்; ஆனால் அது குண்டுகளை வீணாக்கும் பயனற்ற வேலையாகவே இருந்தது.

”போய்வருகிறோம்” என்று நாஜிகள் சத்தம் போட்டார்கள்.

”நாம் நதியைக் கடக்க போகலாமே” என்று யாரோ மேஜர்-ஜெனரலிடம் யோசனை சொன்னார்கள்.

மக்லுஷா நத்யின் செங்குத்தான கரைகளையும் வேகமாகப் பாய்தோடும் தண்ணீரையும் ஜெனரல் காட்கோவ் குனிந்து பார்த்தபடி இருந்தார்.அவர்களுடைய டாங்கிகள் அந்த செங்குத்தான கரைகளின் மீது ஏறிப் போக முடியாது.

ஜெனரல் சிந்தனையில் மூழ்கினார்.

திடீரென்று அங்கே ஒரு பெண் தன்னுடைய குழந்தையோடு டாங்கிகளுக்கு முன்னால் வந்து நின்றாள்.

”””””தோழரே! என்னுடைய வீட்டுக்குப் பக்கத்தில் நதியைச் சுலபமாக்க் கடக்க முடிவும்” என்று ஜெனரல் காட்டுகோவைப் பார்த்துச் சோன்னாள். ”அங்கு தண்ணீர் கொஞ்சமாகதான் ஓடும். செங்குத்தான சரிவுகள் இல்லை.”

டாங்கிகள் அந்தப் பெண்ணைப் பிந்தொடர்ந்து சென்றன.அவள் வீடு தெரிந்தது. நதியின் மேற்கரையில் ஒரு குழிவான இட்த்தில் அந்த வீடு கட்டப்பட்டிருந்தது. அந்த இட்த்தில் நதியைக் கடப்பது சுலபமே. ஆனல்… ஜெனரல் கட்டுகோவும் டாங்கி ஓட்டிகளும் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். அங்கேயும் ஒரு பாலம் இல்லாமல் நதியைக் கடக்க முடியாது.

”இங்கே ஒரு பாலம் கட்ட வேண்டும். அதற்கு மரக்கட்டைகள் வேண்டும்” என்றார்கள் டாங்கி ஓட்டிகள்.

”மரக்கட்டைகள் இருக்கின்றன” என்றாள் அந்த பெண்.

டாங்கி ஓட்டிகள் சுற்றிலும் பார்த்தார்கள். ஆனால் மரக்கட்டைகள் எங்கேயும் தென்படவில்லை.

”அதோ! அங்கே பாருங்கள்” என்று அந்தப் பெண் தன்னுடைய வீட்டைச் சுட்டிக் காட்டினாள்.

”அது வீடு அல்லவா?” என்ன்றார்கள் டாங்கி ஓட்டுனர்கள்.

அந்தப் பெண் தன்னுடைய வீட்டை ஒரு முறைப்பார்த்தாள்; பிறகு போர்வீர்ர்களைப் பார்த்தாள்.

”வீடு என்பது என்ன? மரப்பலைகைகள் தானே? நம் மக்கள் எவற்றையெல்லாம் இழந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழிது இந்த வீடு ஒரு பெரிய விஷயமா? பெட்யா! நான் சொல்வது சரி தானே?” என்று தன்னுடைய குழந்தையிடம் சொன்னால். பிறகு போர்வீரர்களை பார்த்துப் பேசினால் . “அஎத வீட்டைப் பிரித்து மரப்பலகைகளை உபயோகியுங்கள்.”

போர்வீரர்களுக்கு அந்த வீட்டைப் பிரிக்க மனம் வரவில்லை. முன்பே கணமான  மூடுபனி தொடங்கிவிட்டது. எந்த நேரத்திலும் குளிர்காலம் ஆரம்பமாகிவிடும். வீடு இல்லாமல் இந்தப் பெண்ணும் குழந்தையும் குளிர்காலத்தை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?

அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அந்தப்பெண் புரிந்துகொண்டால்.

“நாங்கள்  ஒரு பொந்தில் குளிர் காலத்தை கழிப்போம். எங்களைப் பர்றிக் கவலைப்பட வேண்டாம்” என்று சொல்லிவிட்டுத் தன்னுடைய குழந்தையைப் பார்த்தாள். “என்ன பெட்யா? சரிதானே? என்று கேட்டாள்.

”ஆமாம் ஆமாம்!” என்றது அந்த குழந்தை.

எனினும் போர்வீரர்கள் தயக்கத்தோடு நின்று கொண்டிருந்தார்கள்.

இதைப் பார்த்த அந்தப்பெண் ஒரு கோடாரியை கையிலெடுத்தால்; தன்னுடைய வீட்டை நோக்கி நடந்தாள். அதன் மரப்பலகையின் மீது கோடாரியைக் கொண்டு முதல் வெட்டு வெட்டினாலள்.

”சரி. நாம் என்ன சொல்ல முடியும்?… நன்றி” என்றார் ஜெனரல் காட்டுகோவ்.

போர்வீர்ர்கள் அந்த வீட்டைப் பிரித்தார்கள். அந்த மரங்களைக் கொண்டு ஒரு பாலத்தைக் கட்டினார்கள். டாங்கிகள் அந்தப் புதிய பாலத்தின் மீது நதியைக் கடந்தன.

டங்கிகள் நதியைக் கடக்கும் பொழுது அந்தப்பெண்ணும் குழந்தையும் கைகளை ஆட்டிப் போர்வீரர்களுக்கு விடை கொடுத்தார்கள்.

“உங்கள் பெயரைச் சொல்லுங்கள். நாங்கள் யாருக்கு நன்றி செலுத்த வேண்டும்?’ என்று போர்வீரர்கள் கேட்டார்கள்.

“அலெக்ஸாண்ட்ரா கிரிகோரியெவ்ன குஸ்னெட்ஸோவா, என் மகம் பிரியோத்தர் இவானெவிச் குஸ்னெட்ஸோவ்.”

“அலெக்ஸாண்ட்ரா கிரிகோரியெவ்ன! உஙகளுக்கு எம்முடைய ஆழ்ந்த நன்றி! பிரியோத்தர் இவானெவிச்! நீ பிற்காலத்தில் பெரிய வீரனாக்க வளர்வாய்” என்று போர்வீரர்கள் அவர்களை வாழ்த்தினார்கள்.

டாங்கிகள் வேகமாக முன்னேறிச் சென்று எதிரிகளின் படைகளைப் பிடித்தன. நாஜிகள் நசுக்கிய பிறகு மேற்குத் திசையில் முன்னேறிச் சென்றன.

வருடங்கள் உருண்டோடின. யுத்தத்தின் இடியோசை நின்றது. மரணத்தின் ஊழிக் கூத்து குடிவடைந்தது. ஒவ்வொரு வருடமும் யுத்தம் எங்களுடைய நினைவிலிருந்து விலகிப் பின்னே போய்க் கொண்டிருந்தது. ஆனால் அப்பொழுது நடைபெற்ற வீரச் செயல்களின் மட்டும் பசுமையாக இருக்கின்றன.

மக்லுஷா நதி கரையில் அந்தப் பெண் காட்டிய வீரத்தையும் தியாகத்தையும் நாங்கள் மறக்கவில்லை. நோவா- பெட்ரோவ்ஸ்கொயே ஒரு சிறிய கிராமம். இன்று அங்கே போய்ப் பாருங்கள். அதே இடத்தில் இன்று ஒரு புது வீடு கட்டப்பட்டிருப்பதை காணமால். ”மாபெரும் தேசப் பக்தப்போரின் போது அலெக்ஸாண்ட்ரா கிரிகோரியெவ்ன, பியோத்தர் இவானெவிச் குஸ்னெட்ஸோவ் காட்டிய வீரத்துக்காக!” என்று அந்த வீட்டின் கதவின் மீது பொறிக்கப்பட்டிருப்பதை காணலாம். யுத்தம் முடிந்தும் டாங்கி வீரர்கள் அங்கே வந்து இந்த வீட்டைக் கட்டினார்கள்.

மக்லுஷா நதி அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த நதியின் மேல் கரையில் வராந்தாவும் முன்வாசலும் கொண்ட ஒரு வீடு காணப்படுகிறது. அதன் சன்னற் கதவுகள் பிரகாசமான  உலகத்தை நோக்கி திறந்திருக்கின்றன.

முந்தைய பதிவுகள்:

சோவியத் வீரன் டான்கோ

சோவியத் வீரன் டிட்டாயெவ்

சோவியத் வீரன் டான்கோ

தோழர் ஸ்டாலின் தலைமையில், ஹிட்லர் என்ற பாசிச மிருகத்திடமிருந்து உலகை காப்பாற்றிய சோவியத் வீரர்கள் பற்றிய உண்மைகதைகள் சிலவற்றை மாஸ்கோ நூலில் இருந்து தேர்தெடுத்து மொத்தமாக நமது வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது.

தோழர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினத்தை (டிசம்பர் 21) முன்னிட்டு அக்கதைகள் ஒவ்வொன்றாக பிரித்து வெளியிட முடிவு செய்ததில் இரண்டாவது பதிவாக “சோவியத் வீரன் டான்கோ” வை வெளியிடுகிறோம்.

**************************

மாக்சிம் கோர்க்கியின் கதைகளில் ஒன்றில் வருகின்ற வியப்பைத் தரும் பாத்திரம் டான்கோ. ஒரு இருண்ட காட்டில் அகப்பட்டுக் கொண்ட சிலரைக் காப்பாற்றுவதற்காக டான்கோ தன்னுடைய மார்பிலிருந்து இருதயத்தைப் பிய்த்துக் கொடுத்தான். அந்த இருதயம் பிரகாசமான நெருப்பாக கொழுந்து விட்டெரிந்து காட்டை விட்டு வெளியே போகின்ற பாதையை அவர்களுக்குக் காட்டியது.

ஸ்தாலின்கிராடு ஒரு அசாதாரணமான நகரம். வோல்கா நதியின் வலது கரையில் வடக்கிலிருந்து தெற்கே அறுபது கிலோமீட்டர் தூரம்  ஒரு நீண்ட பிரதேசமாக இருந்தது.

செப்டம்பர் மாத கடைசியில் நகரத்தின் வட பகுதியில் மிகவும் தீவிரமான யுத்தம் நடைபெற்றது. “சிகப்பு அக்டோபர்”,”தடையரண்கள்”. பிரபலமான ஸ்தாலின் கிராடு டிராக்டர் தொழிற்சாலை அகியவை இந்தப் பிரதேசத்தில்தான் இருந்தன. ஸ்தாலின்கிராடு வாசிகள் தொழிலாளர்களுக்கு கீர்த்தியளிக்கும் தங்கள் தொழிற்சாலைகளைப் பற்றி மிகவும் பெருமப்பட்டனர். இந்த்த் தொழிற்சாலைப் பிரதேசத்தில்தான் நாஜிகள் நகரத்துக்குள் ஊடுருவுவதற்கு முயற்சி செய்தார்கள். காலையிலிருந்து மாலைவரையிலும் உக்கிரமான யுத்தம் நடைபெற்றது.

மிஹியீல் பானிக்காகா ஒரு மாலுமி; இளம் கம்யூனிஸ்டுகள் கழகத்தை சேர்ந்தவன். ஒரு கூட்டத்தில் அவன் நின்றால் மற்றவர்களுக்கும் அவனுக்கும் வித்யாசம் தெரியாது. அவன் உயரம் நடுத்தரம்; உடலும் அப்படியே. அவன் சாதாரணமான தோற்றத்தைக் கொண்ட மாலுமிதான்.

ஒரு மாலுமியின் தொப்பியும் கோடுகள் போட்ட சட்டையும் அணிந்திருந்தான். அவனுடைய அகலமான கால்சராயின் நுனிப் பகுதிகளை பூட்சுகளுக்குள் திணித்துக் கொண்டுருந்தான்.

மிஹியீல் பானிக்காகா கடற்படையைச் சேர்ந்தவன். இந்த்த் தொழிற்சாலைப் பிரதேசத்தில் அவன் தன்னுடைய படைப்பிடிவோடு சேர்ந்து யுத்தத்தில் ஈடுபட்டுருந்தான்.

நாஜிகள் கடற்படை வீரர்களுக்கு எதிராகத் தங்களுடைய டாங்கிகளை அனுப்பினார்கள். பலம் பொருந்திய எதிரிகளுக்கும் கடற்படைவீரர்களுக்கும் யுத்தம் நடைபெற்றது.

டாங்கிகள் இரும்பு கவசமும் பீரங்கிகளும் இயந்திரத் துப்பாக்கிகளும் இருந்தன; மோலும் அவை குறவான எண்ணிக்கையிலே தான் இருந்தன.

மிஹியீல் பானிக்காகா குழிக்குள் மறைந்திருந்து இரும்புக் கவசத்தையும் பீரங்கியையும் இயந்திரத் துப்பாக்கிகளையும் எதிர்த்துத் தன் தோழர்களோடு சேர்ந்து சண்டை செய்தான். ஆனால் அவனிடமிருந்து கைவெடிகுண்டுகள் தீர்ந்து போகும் தருணம் வந்தது.  அவனிடம் மிச்சமிருந்தது வெடிக்க்கூடிய திரவம் நிரப்பப்பட்டிருந்த இரண்டு பாட்டில்கள்தான். ஆனால் டாங்கிகள் வருவதும் போவதுமாக இருந்தன. அந்தச் சண்டை முடிவடைவதாகத் தெரியவில்லை.

மிஹியீல் பானிக்காகாவுக்கு நேர் எதிரே ஒரு டாங்கி வந்து கொண்டிருந்த்து. அதிலிருந்து தப்புவதற்கு வழியில்லை; மனித உடலை நசுக்கி அழிப்பதற்கு எஃகு முன்னேறிக் கொண்டிருந்தது.

டாங்கி குழிக்குச் சமீபத்தில் வரட்டுமென்று அந்த மாலுமி குழியின் ஓரத்தில் காத்துக் கொண்டிருந்தான். அவன் பாட்டிலைக் கையில் தயாராக வைத்துக் கொண்டான். குறி தவறிவிடக் கூடாது என்பதற்காக மிகவும் கவனமாக குறி பார்த்தான். இப்பொழுது அந்த டாங்கி போதிய அளவுக்குச் சமீபத்தில் வந்துவிட்டது. அவன் குழியில் நன்றாக நின்று கொண்டான். பாட்டிலைத் தலைக்கு மேலே தூக்கி அந்த எஃகு வண்டிக்கு அடியில் எறியத் தயாரானான். அந்த நேரத்தில் பாட்டில் மீது ஒரு குண்டு பட்டு அது நொறுங்கியது. அதிலிருந்து திரவம் தீப்பற்றி பானிக்காகாவின் உடல் மீது கொட்டியது. ஒரு சில வினாடிகளுக்குள் அவன் உடல் எரியும் நெருப்பாக மாறியது.

அவனைச் சுற்றியிருந்தவர்கள் பயத்தில் அப்படியே கல்லானார்கள். வானம் இருந்த நிலையிலேயே உறைந்து போயிற்று. வானத்திலே பவனிவந்த சூரியன் அப்படியே நிலைகுத்தி நின்றது….

“இல்லை, உன்னை விட மாட்டேன்” என்று அந்த மாலுமி கத்தினான்.

அவன் இரண்டாவது பாட்டிலைக் கையிலே எடுத்தான். தீப்பற்றிய உடலோடு குழியிலிருந்து வெளியே குதித்தான்; நாஜி டேங்கியை நோக்கி ஓடினான். டாங்கி இயந்திரத்தின்  மூடியின் மீது பாட்டிலை ஓங்கி உடைத்தான். நாஜி டாங்கி சீறியது; கடகடவென்று சத்தமிட்டது; பிரகு அதற்கு மூச்சுத் திணறியது. உயரமான அனற் பிழம்பு தன் கைகளை நீட்டி வானத்தை தொட்டது.

யுத்தம் எப்பொழுதோ முடிந்து விட்டது.; போர்வீரர்கள் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பிவிட்டார்கள். யுத்தத்தைப் பற்றிய நினைவுகளும் மறைந்து வருகின்றன. ஆனால் அச்சமென்பதே இல்லாத  இந்த வீரர்களின் சாதனைகள் என்றும் அழியாதவை. மிஹியீல் பானிக்காகாவின் வீரத்தைப் பற்றிய நினைவு இன்னும் வாழ்கிறது. அதற்கு அழிவு கிடையாது.

ஸ்டாலின்கிராடு டான்கோ-அவன் தோழர்கள் அவனை அப்படித்தான் கூப்பிட்டார்கள். அவன் பெயர் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது.

முதல் பதிவு:

சோவியத் வீரன் டிட்டாயெவ்

சோவியத் வீரன் டிட்டாயெவ்

தோழர் ஸ்டாலின் தலைமையில், ஹிட்லர் என்ற பாசிச மிருகத்திடமிருந்து உலகை காப்பாற்றிய சோவியத் வீரர்கள் பற்றிய உண்மைகதைகள் சிலவற்றை மாஸ்கோ நூலில் இருந்து தேர்தெடுத்து மொத்தமாக நமது வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது.

தோழர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினத்தை (டிசம்பர் 21) முன்னிட்டு அக்கதைகள் ஒவ்வொன்றாக பிரித்து வெளியிட முடிவு செய்து முதல் பதிவுவாக “சோவியத் வீரன் டிட்டாயெவ்” வை வெளியிடுகிறோம்.

**************************

நவம்பர் மாதம், அதிகமாக விழுகின்ற பனி.

இராணுவ செய்திப் பிரிவைச் சேர்ந்த சமிக்கையாளரின் வாழ்க்கை மற்றவர்கள் பார்த்துப் பொறாமப்படக் கூடியதல்ல. பனி, மோசமான பருவநிலை, மண் சகதி, வானத்திலிருந்து திடீரென்று வருகுன்ற தாக்குதல்கள், தரயில் பள்ளம் பறிக்கும் வெடிகுண்டுகள், மரணத்தை வாரியிறைக்கும் தோட்டாக்கள்-எனினும் ஒரு சமிக்கையாளர் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும்.  தகவல் அனுப்புகின்ற கம்பி குண்டினால் பாதிக்கப்பட்டுவிட்டால் அல்லது வெடிகுண்டினால் பிய்த்தெறியப்பட்டால் அல்லது நாஜி வேவுப் படையினரால் சீர்குலைக்கப்பட்டால் அதைக் கண்டுபிடித்து செய்திப் போக்குவரத்தை மறுபடியும் ஏற்படுத்துவது சமிக்கையாளரின் கடமையாகும்.

நவம்பர் மாதத்தில் மமாயெவ் குர்கானில் மறுபடியும் சண்டைகள் தொடங்கின. அவை உச்ச கட்டத்திலிருக்கும் பொழுது டிவிஷன் தலமைக்குச் செய்தி அனுப்புகின்ற கம்பி தொடர்பை துண்டிக்கப்பட்டது.  அந்த நேரத்தில் டிவிஷன் தலமை பீரங்கி படை தாக்க  வேண்டிய இலக்குகளை தெரிவித்துக் கொண்டிருந்தது. செய்தித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன; பீரங்கிகள் அமைதியாக இருந்தன.

டிட்டாயெவ் என்ற சமிக்கையாளர் அதைப் பழுது பார்த்துச் சரி செய்வதற்காக அனுப்பப்ட்டார்.

அவர் கம்பிகளைப் பார்த்துக் கொண்டே ஊர்ந்து சென்றார். எங்கே பழுது ஏற்பட்டிர்க்கிறதென்று தேடியவாரு சென்றார். அப்பொழுது மேகங்கள் தணிவாக மிதந்து கொண்டிருந்தன; காற்று வேகமாக வீச ஆரம்பித்துருந்தது. அவருடைய இடது பக்கத்தில் எதிரிகள் மறைந்திருக்கும் குழிகள் இருந்தன. பீரங்கி குண்டுகள் தலைக்கு மேலே பறந்தன. இயந்திரத் துப்பாக்கிகள் இடைவிடாமல் சுட்டுக் கொண்டிருந்தன. அவரைப் பாதையிலிருந்து விரட்டுவதைப் போல காற்று வேகமாக வீசியது.

”என்னை விரட்ட உன்னால் முடியாது” என்று அந்தப் போர்வீரர் பனிப்புயலிடம் சொன்னார்.

“என்னைப் பிடிக்க உன்னால் முடியாது”  என்று அவர் பறந்து வந்த தோட்டாக்களிடம் சொன்னார்.

அவர் ஊர்ந்து சென்றார். அதோ, தெரியும் மலையில் சண்டை தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. நம் துருப்புகளுக்கு பீரங்கிப் படையின் உதவி அவசியம். டிட்டாயெவ் அதை உணர்ந்து கொண்டு வேகமாக இயங்கினார். அவருக்கு முப்பது மீட்டர்களுக்கு முன்னால் குண்டு வெடித்துப் பள்ளம் பறித்திருப்பதைப் பார்த்தார். அங்கு தான் கம்பித் தொடர்பு அறுந்திருக்க வேண்டும். இன்னும் பத்து மீட்டர் தூரம் தான். ஐந்து மீட்டர் தான் அந்தப் பள்ளத்தை நோக்கி அவர் ஊர்ந்து சென்றார். இப்பொழுது அந்தப் பள்ளத்தின் விளிம்புக்கு வந்துவிட்டார். அங்கே குண்டு சிதறல்களினால் அறுந்து போன கம்பி கிடந்தது. டிட்டாயெவ் ஒரு கம்பியை கையிலெடுத்தார். உடனே அடுத்த கம்பி முனையும் தேடி எடுத்தார்….

தலமையகத்தில்  தொலைபேசி நீண்ட நேரமாக இயங்காமல் மெளனமாக இருந்தது. இப்பொழுது அது இயங்க ஆரம்பித்தது. தளகர்த்தர் நிம்மதியாக ஒரு பெருமூச்சு விட்டார்.

“முதல் தரமான நபர்கள்” என்று சமிக்கையாளர்களைப் பாராட்டினர்.

“டிட்டாயெவ் அனுப்பினோம். அவர் ஒரு முதல் தரமான போர்வீரர்” என்று அங்கே யாரோ சொன்னார்கள்.

அந்த டிவிஷனில் டிட்டாயெவை எல்லோருக்கும் தெரியும்; எல்லோருக்கும் தெரியும்; எல்லாரும் அவர் மீது அதிகமான பிரியம் வைத்திருந்தார்கள். டிட்டாயெவ் திரும்பவருவார் என்று தலைமையகத்தில் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்ன காரணமோ அவர் திரும்பவில்லை.

அவரைத் தேடுவதற்காக இரண்டு போர்வீரர்கள் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் அதே பாதையில் ஊர்ந்து சென்றார்கள். மேகங்கள் தணிவாக மிதந்து கொண்டிருந்தன. அவர்களுடைய முகத்தில் காற்று பலமாக அடித்தது. இயந்திரத் துப்பாக்கிகள் இடைவிடாமல் சுட்டுக் கொண்டிருந்தது. போர் ஓய்வில்லாது நடைபெற்றுக் கொண்டிருந்தது. சோவியத் பீரங்கிப்படை இப்பொழுது சுட்டுக் கொண்டிருந்த்து. பீரங்கி வேட்டுகள் போர்களத்தின் மற்ற சத்தங்களை மூழ்கடித்தன. போர்வீரர்களின் காதுகளுக்கு அது சங்கீதத்தைப் போல இனிமையாக இருந்தது.

போர்வீரர்கள் தங்களுக்கு முன்னால் உற்றுப்பார்த்துக் கொண்டு ஊர்ந்து சென்றார்கள். அந்தப் பள்ளத்தை பார்த்தாகள். அதன் விளிம்பில் டிட்டாயெவை அடையாளம் கண்டு கொண்டார்கள். அவர் பூமியின் மீது கிடந்தார்.

“டிட்டாயெவ்!”

“டிட்டாயெவ்!”

டிட்டாயெவ் பதில் பேசவில்லை.

போர்வீரர்கள் இன்னும் அருகே ஊர்ந்து சென்றார்கள்.

அவர் செத்துப்போய் விறைத்துக் கிடப்பதைப் பார்த்தார்கள்.

யுத்தத்தில்பல விதமான காட்சிகளை பார்த்து அனுபவப்பட்டவர்கள் தான் அந்தப் போர்வீரர்கள். ஆனால் இந்தக் காட்சி….

டிட்டாயெவ் அறுந்துபோன கம்பிகளை எடுத்து, அந்தக் கம்பி முனைகளை ஒன்று சேர்க்க முயற்சி செய்து கொண்டிருந்த அதே நேரத்தில் ஒரு தோட்டா அவர் மீது பாய்ந்தது.  அந்தக் கம்பிகளை ஒன்று சேர்த்து கட்டத்தேவையான பலம் அவரிடமில்லை.

அவர் வேகமாக சுய உணர்வை இழந்து கொண்டிருந்தார்; உயிர் பிரிந்து கொண்டிருந்தது. அந்தக் கடைசி வினாடியில் அந்தப் போர்வீரர் இரண்டு கம்பிகளின் முனைகளையும் மிகுந்த சிரந்தோடு தன்னுடைய பற்களுக்கிடையே வைத்தார். கம்பி முனைகளை தன்னுடைய பற்களால் ஒரு கிடுக்கியைப் போலக் கடித்துக் கொண்டார். கம்பித் தொடர்புகள் மறுபடியும் ஏற்பட்டன.

“சுடுங்கள்! சுடுங்கள்!” கம்பிகளின் வழியாக உத்தரவுகள் பிறந்தன.

உடனே பதில் கிடைத்தது.

“சுட ஆரம்பித்துவிட்டோம். கம்பித் தொடர்பு நன்றாக இயங்குகிறதா?”

”ஆம்! தொடர்பு சிறப்பாக வேலை செய்கிறது.”

மறுபடியும் உத்தரவுகள்.

”சுடுங்கள்! சுடுங்கள்!”

சோவியத் துருப்புகள் எதிரியை நசுக்கின. ஆனால் அந்தப் பள்ளத்தின் விளிம்பில் ஒரு போர்வீரர் கிடக்கிறார். இல்லை, அவர் தரையில் கிடக்கவில்லை. தன்னுடைய காவலிடத்தில் அவர் நிற்கிறார்.

ஆம். அந்தப் போர்வீரர் தம்முடைய காவலிடத்தில் நின்று கொண்டிருக்கிறார்.