• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 210,079 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

“மாநில வேளாண் சட்டம்” நிறுத்தி வைப்பு – கருணாநிதியின் கபட நாடகம் ஆரம்பம்

மருத்துவ பணிகள் செய்வதற்கு மருத்துவ கவுன்சிலில் உறுப்பினராக பதிவு செய்தல், வக்கீல்களாக பணியாற்ற “பார் அசோசியேஷனில்’ பதிவு செய்தல் என உள்ளது போல, வேளாண்மை பணிகள் செய்வோர் பதிவு செய்வதற்காக “வேளாண் மன்றத்தை’ ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்கான சட்ட மசோதா சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத் தொடரில் நிறைவேற்றப் பட்டது.இதன்படி, தமிழகத்தில் வேளாண் சேவை அல்லது ஆலோசனை போன்ற பணிகளை யாராவது செய்ய வேண்டுமென்றால், இந்த மன்றத்தில் கட்டாயம் உறுப்பினராகி இருக்க வேண்டும்.மேலும், இதில் உறுப்பினராக குறிப்பிட்ட கல்வி மையங்களில் வேளாண் பட்டப்படிப்பு முடித் திருக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் இந்த சட்டத்தில் இடம்பெற்றன.

இந்நிலையில், இந்த வேளாண்மை மன்றத்தால் பாரம்பரிய விவசாயத் தொழில் பாதிக்கப்படுமென சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப் பாக, இந்த மன்றத்தை ரத்து செய்ய வேண்டுமென ஓட்டுபொறுக்கி ராமதாஸ் நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட் டிருந்தார்.இந்நிலையில், இந்த மன்றத்தை அமல்படுத்தும் சட்டத்தை நிறுத்தி வைப்பதாக கருணாநிதி நேற்று அறிவித்தார்.

இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு: தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கான வேளாண் மை திட்டங்களை தயாரித்தல் மற்றும் சான்றளித்தல், பயிர் வளர்ப்பு, அறுவடைக்கு முன்னதான தொழில் நுட்பம், விதைத் தொழில்நுட்பம், மண் பரிசோதனை, நீர் பரிசோதனை, உரம், செடி வளர்ச்சியை முறைப்படுத்துதல் மற்றும் களைக்கொல்லிகள், பயிர்களைக் காக்கும் பொருள் களை முறைப்படுத்த முடிவு செய்யப் பட்டது.

இந்த நோக்கில் வேளாண்மை அறிவியல் வல்லுனர்களின் பரிந்துரைகளை ஏற்று “தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்ற சட்டம்’ தமிழக சட்டசபையில் நிறைவேற்றப் பட்டது.சட்டசபையில் இந்த சட்ட மசோதா அறிமுகப்படுத்தப் பட்ட போதும், விவாதிக்கப் பட்ட போதும் எதிர்க்கட்சிகள் சார்பிலும், தோழமைக் கட்சிகளின் சார்பிலும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காததால், இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பாரம்பரிய விவசாயம் தொடர்ந்து காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக விவசாய மக்களின் எண்ணங்களுக் கும், பத்திரிகையாளர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளித்திடும் வகையில் “தமிழ்நாடு வேளாண்மை மன்ற சட்டம்’ அறிவிக்கை செய்யப்படாமல் மேல் நடவடிக்கை நிறுத்தி வைக் கப்பட்டுள்ளது.இவ்வாறு முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார் (தினமலர், 11/09/2009).

———————————————————————————————–

தமிழக சட்டசபையில் இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட போது ஓட்டுபொறுக்கி ராமதாஸ் மவுனமாக இருந்த மர்மம் என்ன?

இந்த சட்டம் கொண்டு வரும் போது “பாரம்பரிய விவசாயம் தொடர்ந்து காப்பாற்றப்பட வேண்டும்” என்று தெரியாதா? அப்படி தெரியவில்லை என்றால் முதல்வர் என்ற பதவிக்கு தகுதி கிடையாது.

எந்த முறையில் விவசாயம் செய்வது? எனத் தீர்மானிக்கும் உரிமையை விவசாயிகளிடமிருந்து தட்டிப் பறிக்கும் இந்த சட்டம் ” தமிழக விவசாயிகளின் பாரம்பரிய வேளாண் அறிவையும், தற்சார்பையும் முற்றிலுமாக அழிப்பதே நோக்கம்”.

“மாநில வேளாண் சட்டம்” நிறுத்தி வைப்பு என்பது கருணாநிதியின் கபட நாடகத்தின் ஆரம்பமே.

தொடர்புடைய பதிவு: தமிழ்நாடு வேளாண் தொழில் ஆலோசகர் ஒழுங்காற்றுச் சட்டம்: யாருக்கு இலாபம்?

வறுமை தாண்டவம் – மனைவியை விற்க வேண்டிய அவலத்தில் விவசாயிகள்!

இதை அதிர்ச்சி என்று சொல்வதா? அல்லது, நாட்டுக்கே அவமானம் என்று சொல்வதா?

—————————————————————————————– வறுமை மற்றும் கடன் தொல்லையால் சில ஆண்டுகளுக்கு முன் ஆந்திர விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால், உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் பலர் வாங்கிய கடனுக்கு தங்கள் மனைவியை தாரை வார்க்கும் அவலம் நடந்து வருகிறது. ஜான்சி பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவர் தனது மனைவி சரயு தேவியை, எட்டாயிரம் ரூபாய்க்கு, வயதான குலாப் என்பவருக்கு விற்றுள்ளார்.

குலாப், திருமண ஒப்பந்தம் தொடர்பாக, கையெழுத் திட, ஜான்சி பகுதி கோர்ட்டிற்கு அழைத்து வந்த போது, அவரிடமிருந்து தப்பித்த சரயு தேவி, மாவட்ட கூடுதல் நீதிபதியின் அறையில் நுழைந்து, தன்னை காப்பாற்றுமாறு கெஞ்சியுள்ளார். இதேபோன்று, பண்டல்கன்ட் பகுதியிலும், ஏராளமான சம்பவங்கள் நடைபெறுவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வறட்சியை சமாளிக்க, தங்கள் வீடுகள், நிலங்கள் ஆகியவற்றை விற்ற விவசாயிகள், விற்பதற்கு வேறு பொருட்கள் இல்லாத நிலையில் தற்போது மனைவியை விற் கின்றனர்.சமீபத்தில், கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட, பைஸ்ரா கிராமத்தை சேர்ந்த சுகியா கூறுகையில், “மகேஷ் சந்திரா என்பவரிடம், எனது கணவர் கடன் வாங்கினார். வாங்கிய தொகைக்கு அதிகமாகவே, அவருக்கு பணம் கொடுத்தார். இருப்பினும், மேலும் 20 ஆயிரம் ரூபாய் தர வற்புறுத்தினார். திடீரென எனது வீட்டிற்கு வந்த மகேஷ், என்னை பலாத்காரம் செய்ய முயன்றார். எனது கணவர் என்னை அவரிடம் விற்றதாக தெரிவித்தார். அதனால், கோபத்தில், அவரை கொலை செய்து விட்டேன்’ என்றார். இதேபோன்று பர்காரா கிராமத்தில், கடன் கொடுத்தவர், தனது மனைவியை இழுத்து சென்றுவிட்டதாக காலிசரண் என்பவர் தெரிவித்துள்ளார் (தினமலர், 11/09/2009 )

———————————————————————————————–

நாடெங்கும் தாராளமயம் தோற்றுவித்துள்ள பயங்கரத்துக்கும் அவலத்துக்கும் இன்னுமொரு சாட்சிதான் “மனைவியை விற்க வேண்டிய அவலத்தில் விவசாயிகள்”.

நாடு நாலுகால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருப்பதாக ஆட்சியாளர்கள் அவிழ்த்துவிடும் அண்டப் புளுகை இன்னமும் நம்பிக் கொண்டிருக்கப் போகிறோமா? அல்லது இந்த அவமானக் கறையைத் துடைத்தெறிய தாராளமயத்துக்கும் துரோக ஆட்சியாளர்களுக்கும் எதிராகப் போராடப் போகிறோமா?

தொடர்புடைய பதிவு: ”விவசாயிகளின் சிறுநீரகங்கள் விற்பனைக்கு!” தாராளமயத்தின் கோரம்