• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 185,167 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

 • Advertisements

கொள்ளாதவன் வாயில் கொழுக்கட்ட…

Advertisements

விதியல்ல! சதி!

என் செல்லம் எப்ப திரும்ப வருவான்?

பட்டனத்துக்கு
படிக்க போயிருக்கான்
என் மகன்!

படிப்பின் வாசமே
அறிந்திடாத
இந்த பாவிக்குப்
பிறந்த
ஒரே மகன்
படிக்கத்தான்
போயிருக்கான்
பட்டினத்துக்கு!

வெயிலோ மழையோ
தடையின்றி நுழையும்
ஓட்டை குடிசைகள்!

பசுமையைப் பார்த்து
பல வருடங்களான
வயல்வெளிகள்!

எலக்சன் வரும்போது
மட்டுமே
தாரை பார்த்திட்ட சாலைகள்!

கிழிசல்களின்
கணக்கை
சட்டென்று
கூறமுடியாத
நைந்துபோன சட்டைகள்!

இதுதான்
என் கிராமம்
என்னோட வாழ்க்கை!

ஏழ்மையும்
வறுமையும்
கூடப் பிறந்ததென
இதையெல்லாம்
புறந்தள்ளி
இயல்பாய்
காலந்தள்ளியாச்சு!

இது
என்னோடே
போகட்டும்!
என்
மவனாவது
பள்ளிக்கூடம்
போவட்டும்!

கிழிஞ்ச டவுசரோட
உடைஞ்ச சிலேட்டு
தட்டோட
சத்துணவு உருண்டைக்கும்
மத்தியான சோத்துக்கும்
அரசாங்கத்து
அரை கிளாசுக்கு
அனுப்ப
புடிக்கலை எனக்கு!

கழுத்துப்பட்டயோட
புதுசட்டைய
போட்டுட்டு
பட்டணத்து
புள்ளக மாதிரி
எம்புள்ளயும்
போவனும்
பள்ளிக்கூடத்துக்கு!

தஸ் புஸ்சுன்னு
பேசாட்டியும்
ஏ..பி..சி..ன்னாவது
என் மவன்
பேசிப் பார்க்கனும்!

அதுக்கு
எம்புட்டு
ஆனாதான்
என்ன?

உழைச்சது
என்னக்கிதான்
மிஞ்சியிருக்கு?
கழனிய
வித்தாவது
கடனை அடைச்சிக்கிடலாம்!

அந்த
நெனப்புலதான்
அனுப்புனேன்
எம்புள்ளய
அந்த
தனியாரு
பள்ளிக்கூடத்துக்கு!

வருச பீசுன்னுதான்
முதல்ல சொன்னான்
பின்னே
மாசம் முன்னூறு
கொடுக்கனுமுன்னான்
உன் வூட்டுக்கே வரும்
பள்ளிக்கூடத்து வேனுக்கும்
தனியே காசு
கட்டனுமின்னான்!

கணக்குத் தவறாம
காச எண்ணிவைச்சேன்- என்
ஆச மவன்
இங்கிலீசு
படிக்கனுமுன்னு!

என்றைக்கும் போல
அன்னிக்கும்
போயிட்டு வர்றேன்னு
சொல்லிட்டுதான்
போனான்
எம்புள்ள!

பொத்தி பொத்தி
வளர்த் புள்ளய
பொதி மூட்டை போல
கூட்டிகிட்டு
போனாங்களாம்
பள்ளிக்கூட வேனுல…

முக்கு திரும்பயில
வேனு ஆத்தோட
முங்கிப் போச்சாம்!

இத்தன நாள்
தூங்கி
கிடந்தவெனெல்லாம்
விழிப்பு வந்து
வசனம் பேசுறான்.
அறிவிப்பு செய்யுறான்.

விதியை மீறின
பள்ளிவாகனங்கள்
முடக்கப்படும்
அனுமதி பெறாத
பள்ளிகள் மூடப்படும்
தனியாருங்கிற
பேருல
பகற்கொள்ளை
நடக்குதுன்னு…

நானும்
நாலு நாளா
காத்துக்கிடக்கேன்

எப்பவும் போல
ஸ்கூலுக்கு
போயிட்டு வர்றேன் டாடி-ன்னு
வாய் நிறைய
சொல்லிட்டு
போன
என் செல்லம்
எப்ப
திரும்ப வருவான்?

-இளங்கதிர்.

அமெரிக்க வல்லரசு! ஆனால் 4.9 கோடி மக்கள் பட்டினி!

அமெரிக்காவில், ஏழில் ஒரு குடும்பம் வீதம் போதுமான உணவின்றி பட்டினியில் வாடுகின்றனர் என்றால் நம்ப முடிகிறதா? உண்மை தான். போதுமான உணவின்றி அமெரிக்க மக்கள் தவிப்பதற்கு, பொருளாதார நெருக்கடியும், வேலையின்மையும் தான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், அரசின் உணவுப்பாதுகாப்பு அமைப்பு , பதினான்கு ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்டது. விவசாய அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட இந்த அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்கர்களின் உணவுப்பாதுகாப்பு பற்றி சர்வே எடுத்து வருகிறது. சமீப காலமாக எடுக்கப்பட்ட சர்வேக்களில், அமெரிக்காவில், போதுமான உணவு இல்லாமல், பற்றாக்குறையுடன் காலம் தள்ளும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. கடந்தாண்டு அமெரிக்காவில், 4.90 கோடி பேர் போதிய உணவின்றி தவித்துள்ளனர். அதாவது, ஏழு குடும்பங்களில் ஒன்று வீதம் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது . இவர்களில், மூன்றில் ஒரு பங்கினர் மிக மோசமான நிலையில் உணவின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், சில வேளை உணவு சாப்பிடாமல் பட்டினியாக இருக்க வேண்டிய நிலை உள்ளது.எஞ்சியுள்ள மூன்றில் இரண்டு பங்கினருக்கு, சாப்பிட போதுமான உணவு கிடைத்தாலும், மிக விலை குறைந்த, உணவுகளே சாப்பிடுகின்றனர்.அமெரிக்காவில், இந்தாண்டு 5.60 லட்சம் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் பசியால் வாடுகின்றனர். முந்தைய ஆண்டு, 3.23 லட்சம் குழந்தைகள் மட்டுமே பசியால் வாடினர். இந்தாண்டு உணவின்றி இருப்போரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, நாட்டின் உணவு பாதுகாப்பின்மையே காட்டுகிறது.ஆனால், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வரும் 2015ம் ஆண்டிற்குள் குழந்தைகள் பட்டினிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, ஆய்வாளர்கள் கூறுகையில்,”பசியால் வாடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு, வேலையின்மை வீதம் கடந்தாண்டு இறுதியில், 4.9 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாக அதிகரித்ததே காரணம். தற்போது அந்த வீதம், 10.2 சதவீதமாக உள்ளது. மேலும், உணவுப் பொருட்களின் விலையேற்றமும், இதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது’என்றனர் (தினமலர்,  24/11/2009)

————————————————————————————–

முதலாளித்துவ அறிவுஜீவிகளே!

இந்தியா வல்லரசு ஆகவேண்டும். அதற்காக விவசாய, பழங்குடி மக்களை அவர்களுடைய நிலத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டாலும் கவலை இல்லை பொருளாதார வளர்ச்சி தான் முக்கியம் என்று சொல்லும் முதலாளித்துவ அறிவுஜீவிகளே உலக வல்லரசின் (அமெரிக்கா) உண்மை நிலைமை இது தான்.

நாட்டின் பெரும்பான்மை மக்களை சாவின் விளிம்புக்கு தள்ளிவிட்டு, மிக சொச்சம் பேர் மட்டும் சுகபோகமாக வாழ்வது தான் உங்கள் கொள்கையா?

இது தான் நீங்கள் விரும்பும் வளர்ச்சியோ?

மாணவர்களே!

அமெரிக்க சொர்க்கபுரி, முதலாளித்துவமே சிறந்தது என்பதெல்லாம் நம்மளை ஏமாற்றவே.

சோனி எரிக்சன் சென்னை மையம் திடீர் மூடல் – தனியார்மயத்தின் உண்மை முகம்

சென்னை மணப்பாக்கத்தில் இயங்கிவந்த, சோனி எரிக்சன் மென் பொருள் மேம்பாட்டு மையத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள், மொத்தமாக வீட்டுக்கு அனுப்பப் பட்டனர். சோனி எரிக்சன் நிறுவனம், சென்னை அருகில் உள்ள மணப் பாக்கத்தில், 2007ம் ஆண்டு, மென் பொருள் மேம்பாட்டு மையத்தைத் துவக்கியது. இங்கு, புதிய மொபைல் போன்களை வடிவமைக்கும் பணி நடந்து வந்தது. சமீபத்தில் வெளியான டி-715 மொபைல், சென்னையில் வடிவமைக்கப்பட்டது தான். அந்த மொபைல் விற்பனை நன்றாகவே இருந்தது.

சோனி எரிக்சன் நிறுவனத்தின் தலைமையில் சமீபத்தில் மாற்றம் ஏற்பட்டது. புதிய தலைவராக பொறுப்பேற்றவர், உடனடியாக உலகம் முழுவதும் உள்ள அந்நிறுவனக் கிளைகளின் செயல்பாட்டை ஆராய்ந்தார். சென்னை மையம் லாபம் ஈட்டாதது தெரிந்தது. அவர் அனுப்பிய 10 பிரதிநிதிகள், சீனாவில் இருந்து நேற்று முன்தினம் சென்னை வந்தனர். காலை 10 மணிக்கு, ‘மீட்டிங்’ என அறிவித்து, அனைத்து ஊழியர்களையும் அழைத் தனர். ‘சென்னை மையம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதால், இனியும் இம்மையத்தை நடத்துவதாக இல்லை. இன்றே, இப்போதே இந்த மையம் மூடப்படுகிறது’ என, அறிவித்தனர்.

காலையில் உற்சாகமாகப் பணிக்கு வந்திருந்த ஊழியர்கள், அதிர்ச்சியில் உறைந்தனர். இளம் பெண்களும், வாலிபர்களுமாக இருந்த அவர்கள், குய்யோ முய்யோ என குமுறினர்; அழுதனர். அதிகாரிகள், எதற்கும் மசிவதாக இல்லை. அனைத்து ஊழியர்களுக்கும் மூன்று மாத சம்பளம், காசோலையாக வழங்கப்பட்டது. பகல் 12 மணியளவில், மையத்தின் அனைத்து நெட்வொர்க்குகளும் துண்டிக்கப் பட்டன. ஒரு மணிக்கு கதவுகள் மூடப்பட்டன. மொத்த ஊழியர்கள் எத்தனை பேர், அதில் இந்தியர்கள் எத்தனைபேர், அவர்களின் பணிக்காலம் போன்ற தகவல்களை யாரும் கூற முன்வரவில்லை. மென்பொருள் தயாரிப்பு கம்பெனியின் நடைமுறைகளின் படி இந்த நடவடிக்கை இருக்கும் என்று கூறப்பட்டது. கண்ணீரும் கம்பலையுமாக அங்கேயே குழுமியிருந்த ஊழியர்கள், நஷ்ட ஈடாக ஆறு மாத சம்பளத் தொகையை வழங்கும்படி கேட்டு வருகின்றனர் (தினமலர், 19/11/2009).

——————————————————————–

//’சென்னை மையம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதால், இனியும் இம்மையத்தை நடத்துவதாக இல்லை. இன்றே, இப்போதே இந்த மையம் மூடப்படுகிறது’ என, அறிவித்தனர்.//

முதலாளித்துவ அறிவுஜீவிகளே!
தனியர்மையத்தின் உயிர் நாடியே இலாபம் தான் என்பதை ஏற்றுக் கொள்வீர்களா?

இப்போது சொல்லுங்கள், தனியார்மயத்தினால் தான் வேலை கிடைக்கிறதா? அல்லது இலாபம் கிடைப்பதால் மட்டுமே தனியார்மயம் வேலை கொடுக்கிறதா?

//பகல் 12 மணியளவில், மையத்தின் அனைத்து நெட்வொர்க்குகளும் துண்டிக்கப் பட்டன. ஒரு மணிக்கு கதவுகள் மூடப்பட்டன.//

இது தனியார்மய பயங்கரவாதம் அல்லாமல் வேறு என்ன?

ஐ டி அறிவுஜீவிகளே!

இப்போதாவது தொழிச்சங்கத்தின் தேவை புரிகிறதா?

ஏ.ஐ.சி.டி.இ. அனுமதியின்றி 5 பொறியியல் கல்லூரிகள் இயங்குதல் – சி.பி.ஐ. வழக்கு; கல்வி தனியார்மயத்தின் உச்சகட்ட அவலம்

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) விதிமுறைகளை மீறிய 5 பொறியியல் கல்லூரிகள் மீது மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) வழக்கு பதிந்துள்ளது.

இக்கல்லூரிகளுக்கு உறுதுணையாக இருந்த ஏ.ஐ.சி.டி.இ. அதிகாரிகள் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சி.பி.ஐ. நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை கோயம்பேடு, சென்னையை அடுத்துள்ள அடையாளம்பட்டு மற்றும் இருங்காட்டுக்கோட்டை, நாகர்கோயில், தர்மபுரி ஆகிய இடங்களில் உள்ள 5 பொறியியல் கல்லூரிகள் மற்றும் அவற்றின் அறக்கட்டளைகள் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஏ.ஐ.சி.டி.இ. வகுத்துள்ள விதிமுறைகளை அப்பட்டமாக மீறி கல்லூரிகள் நடத்தப்படுகின்றன என்றும், ஏ.ஐ.சி.டி.இ. அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் குற்றச் சதியில் ஈடுபட்டு ஏ.ஐ.சி.டி.இ.-ன் அனுமதி மற்றும் அங்கீகார நீட்டிப்பைப் பெற்றுள்ளன என்றும் கல்லூரிகள் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

கல்லூரிகளை நடத்துவதற்கான வைப்புத் தொகை, குறிப்பிட்ட அளவு நிலங்கள் ஆகியவற்றை கல்லூரிகளின் அறக்கட்டளைகள் தங்கள் பெயர்களில் வைத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு தங்கள் பெயர்களில் இல்லாதவற்றை, தங்கள் பெயர்களில் இருப்பதாக அந்த கல்லூரிகள் போலியான மற்றும் மோசடி ஆவணங்கள் மூலம் கணக்கு காட்டியுள்ளன. தவிர, மாணவர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளும் கல்லூரிகளில் இல்லை.

கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட நேரடி சோதனையின்போது, கல்லூரிகளில் கட்டடம், நூலகம், ஆய்வக வசதிகள் மற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கை போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளில் முறைகேடுகள் நடந்திருப்பதையும், ஏ.ஐ.சி.டி.இ. விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதையும் எடுத்துக்காட்டும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தவிர, மேலே சொன்ன கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ.-ன் அனுமதி / அங்கீகாரம் வழங்கக் கூடாது என்ற நிபுணர் குழுவின் பரிந்துரையை மீறி அவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ (தினமணி, 17/11/2009).

——————————————————————-

எதற்கெடுத்தாலும், தனியார்மயம்தான் சரி என்று சொல்லும் நடுத்தரவர்க்கமே இது தான் சரியோ? தரமோ?

இது தான் தனியார்மயத்தின் உண்மை முகம்.

ஏன், இந்த கல்வி கட்டண கொள்ளை அரக்கர்களை சி பி ஐ கைது செய்யவில்லை? அல்லது அந்த வழக்கு பற்றிய விவரங்களை மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்கவில்லை? ஏனென்றால், அரசின் கொள்கையே கல்வி தனியார்மயம் தான்.

கமிட்டி, மறு ஆய்வு, வழக்கு என்பதெல்லாம் கபட நாடகமே. இது ஊர் அறிந்த உண்மை.

புரட்சிகர அமைப்புகளுடனும் கல்வியாளர்களுடனும், மாணவர்களும் பெற்றோர்களும் கைகோர்த்து களமிறங்கிப் போராடுவதைத் தவிர, இதற்கு வேறு தீர்வில்லை.

கொடி கட்டி பறக்கும் விவசாயம்!

IMG_3415