• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 216,089 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

ஆதிக்க அணு உலை அடங்காது… இடிந்தகரை!

 

பொய்யிலிருந்து
மின்சாரம் தயாரிக்கும்
புதுவழி ஒன்றிருந்தால்
நாராயணசாமி வாயிலிருந்தே
நாலாயிரம் மெகாவாட்டும்
அப்துகலாம் வாயிலிருந்து
ஆராயிரம் மெகாவாட்டும்
தமிழகத்திற்கு கிடைக்கும்.

அன்றாடம் இவர்கள்

அவிழ்க்கும் பொய்கள்
அணுவுக்கே அடுக்காது…
அணுக்கழிவே சகிக்காது.

ளர்ச்சி என்பதற்காய்
புற்று நோயை ஏற்க முடியுமா ?
அறிவியல் சுகம் அடைவதற்காய்

மின்சாரத்தை முத்தமிட முடியுமா ?

– நூலில் இருந்து

***************

தோழர் துரை.சண்முகம் எழுதிய கவிதை நூல்

விலை: ரூ. 10

நூல் கிடைக்குமிடங்கள்:

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக்நகர்,சென்னை – 600 083.
பேச : 044-23718706

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
110,63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை – 600 024.
பேச : 94453 84519

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002.
பேச : 044-28412367

தொடர்புடைய பதிவுகள்:

கருத்துப்படங்கள்: கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!

 

கூடங்குளம் அணு உலையை மூடு! – சிறு வெளியீடு!

மக்களின் உயிருக்கும் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும்

உலை வைக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு !

விலை: ரூ. 5

இந்தியாவை அமெரிக்காவின் அடிமையாக்கும்
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவோம்!

அணுஉலை = பல்நோய் உற்பத்திக் கூடம் + பேரழிவு ஆயுதக் கிடங்கு!

பதவிக்கும் பட்டத்திற்கும் பல்லிளித்து பொய்யும் புரட்டும் பேசி
பன்னாட்டு முதலாளிகளின் இலாபவெறிக்கு
பாமர மக்களின் உயிரைக் காவு கொடுக்கும்
அணு விஞ்ஞானிகளின் உண்மை உருவத்தைத் தோலுரிப்போம்!

அணு மின்சாரத்தை விட மலிவான, ஆபத்தில்லாத,
சுற்றுச்சூழலை நாசமாக்காத காற்றாலை, கடலலை,
சூரிய ஒளி மின்நிலையங்களை அமைக்கப் போராடுவோம்!

42% கிராமங்களுக்கு மின்னிணைப்பே இல்லை!
சிறு- குறுந்தொழில்கள், விவசாயத்துக்கோ என்றைக்கும் மின்வெட்டு!
நாட்டின் மின் உற்பத்தியை விழுங்குவது
டாடா, அம்பானிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளே!
அணு மின்சாரம் அவனுக்கு, புற்றுநோய் சாவு எங்களுக்கா?

அணு உலைகளால் அறவே ஆபத்து இல்லையென்றால்
அப்புறம் எதற்கு அணுஉலை விபத்து காப்பீட்டுச் சட்டம்?

தங்கள் நாடுகளில் அணு உலைகளை மூடும்
ஏகாதிபத்திய முதலாளிகளிடம்
எட்டு இலட்சம் கோடிக்கு அணு உலை வாங்க
ஒப்பந்தம் போட்டிருக்கிறது இந்திய அரசு – இதுதான் தேசத்துரோகம்!

பன்னாட்டு முதலாளிகளின் இலாபவெறிக்கு
இந்திய மக்களை பலியிடாதே!

‘வளர்ச்சி – வேலைவாய்ப்பு – வல்லரசு’ என்று ஆசை காட்டி
தேசத்துரோக, மக்கள் விரோத சதியில் ஈடுபட்டிருக்கும்
காங்கிரசு, பா.ஜ.க. உள்ளிட்ட ஓட்டுப்பொறுக்கிகளைப் புறக்கணிப்போம்!
தனியார்மயம், தாராளமயம், உலகமயம்-
மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்!

நூல் கிடைக்குமிடங்கள்:

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக்நகர்,சென்னை – 600 083.
பேச : 044-23718706

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
110,63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை – 600 024.
பேச : 94453 84519

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002.
பேச : 044-28412367

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம் அணு உலையை மூடு! பிப்.11 நெல்லையில் மறியல்!! அணிதிரள்வோம் !!!

கூடங்குளம்-மறியல்

முல்லை பெரியாறு – சிறு வெளியீடு!

அணையை மீட்க எல்லையை மூடு!
பொருளாதார தடை போடு!

விலை: ரூ. 5

பக்கங்கள் : 16

தமிழக உழைக்கும் மக்களே!

* முல்லை பெரியாறில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும்,
5 மாவட்டங்கள் பாலைவனமாகாமல் தடுக்கவும் ஊர் தோறும்
அணைப் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்குவோம்!

* கேரள எல்லைகளை முற்றுகையிடுவோம்!
பொருளாதாரத் தடையை அமுலபடுத்துவோம்!

* அச்சுதானந்தன், உம்மன்சாண்டி போன்ற
மலையாள இனவெறியர்களின் சதியை முறியடிப்போம்!

* கேரளத்தில் மலையாள இனவெறி, தமிழகத்தில் முல்லைபெரியாறுக்கு
அடையாள ஆதரவு – என்று இரட்டை வேஊட்ம்
தமிழ் மக்களை அடிமைப்படுத்தும் தேசியக்கட்சிகளான
காங்., பா.ஜ.க, சிபிஎம், சிபிஐ கட்சிகளை விரட்டியடிப்போம்!

* கேரள அரசின் அடாவடித்தனங்களுக்குத் துணைபோகும்
மத்திய அரசின் அலுவலங்களை இழுத்துப்பூட்டுவோம்!

* தமிழக எம்பிக்களை ராஜினாமா செய்யக்கோரி முற்றுகையிடுவோம்!

தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்

வெளியீடு :

மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

நூல் கிடைக்குமிடங்கள்:

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக்நகர்,சென்னை – 600 083.
பேச : 044-23718706

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
110,63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை – 600 024.
பேச : 94453 84519

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002.
பேச : 044-28412367

தொடர்புடைய பதிவுகள்:

முல்லைப் பெரியாறு: அணையை மீட்க எல்லையை மூடு! பொருளாதாரத்தடை போடு! தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்!


முல்லைப் பெரியாறு: புரட்சிகர அமைப்புகளின் போராட்டம்!

தொடர்புடைய பதிவுகள்:

முல்லைப் பெரியாறு : தேசியக் கட்சிகளின் துரோகம்

முல்லைப் பெரியாறு: ‘தேசிய’க் கட்சிகளின் துரோகம்!

*********************************************

முல்லைப் பெரியாறு: சி.பி.எம்மின் துரோகம் – ஆதாரங்கள்!

முல்லைப் பெரியாறு: சி.பி.எம்மின் துரோகம் – ஆதாரங்கள்!

****************************

வணிகமயக் கல்வி – இலவசக் கல்வி குறித்த கேள்விகளும் பதில்களும்! – இளஞ்செழியன்

தனியார்பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்காக பெற்றோர்களும், மாணவர்களும் தினந்தினம் சித்தரவதைக்குள்ளாக்கப்படுவது அனைவரும் அறிந்த ஒன்றுதான். தனியார் கல்விதான் தரமானது, அரசு கல்வி தரங்கெட்டது  என்று ஒரு மாயையை உருவாக்கி இச்சமூகத்தின் பெருவாரியான ஏழை மாணவர்களுக்கு கல்வியை மறுத்துவரும் இந்தக் கொடிய ஏற்றத்தாழ்வுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு ”சமச்சீர்” கல்வி இச்சமூகத்திற்கு அவசியம் வேண்டும்.

கேள்வி; சமச்சீர் கல்வி என்றால் என்ன?

 

பதில்; ஏழை, பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடு இன்றியும், கொடிய சாதிய ஏற்றத்தாழ்வுகள் இன்றியும் அனைவரும் ஒரே பள்ளியில் படிக்கும் பொதுப்பள்ளி முறை, தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள பள்ளியில் எந்த ஒரு மாணவரும் சேரும் உரிமை, பொதுப்பாடத்திட்டம், பொதுப்பாடநூல், ஒரே மாதிரியான தேர்வு முறை, ஆசிரியர்-மாணவர் விகிதம் 1:30 க்கு மிகாமல் இருப்பது, கற்றல் – கற்பித்தல் முறை, மாணவர்களின் சுயசிந்தனையை வளர்ப்பதற்கு ஏற்ற கலைத்திட்டம் (Curriculum) , கற்பதற்கான ஆரோக்கியமான வகுப்பறைச் சூழல்,தாய்மொழி வழிபயிற்றுவிப்பு, பாடத்திட்டத்தை உருவாக்குவதில் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்குபெறுவதற்கான ஜனநாயகம், போதுமான அடிப்படைக் கட்டுமான வசதி போதிய நிதி ஒதுக்கீடு ஆகியவற்றை மாநகரம், நகரம், கிராமம் என்ற பாகுபாடு இன்றி அனைத்து மாணவர்களுக்கும் சமமாக, ஒரே சீராக செய்து கொடுக்க வழிவகை செய்வதுதான் உண்மையில் “சமச்சீர் கல்வியின்” முழுப் பரிமாணமாகும்.

இத்தகையதொரு சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் அடிப்படையில் தனியார் கல்வியை ஒழித்துக்கட்ட வேண்டும். கல்வியை முழுவதுமாக அரசே கொடுக்க வேண்டும், இப்படி ஒரு நோக்கம் எந்த ஓட்டுக்கட்சி அரசாங்கங்களுக்கும் இல்லை. இருக்கப்போவதுமில்லை.

 

கேள்வி; இதுதான் சமச்சீர் கல்வியின் அர்த்தம் என்றால்

         கடந்த தி.மு.க அரசால் அமுல்படுத்தப்பட்டது என்ன?

     

பதில்;   நம் நாட்டில் தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களில் பள்ளிக்கல்வியில் மத்திய அரசு பாடத்திட்டம் (CBSE), மாநிலப்பாடத்திட்டம்(State Board) என்ற இரண்டு வகையான பாடத்திட்டங்கள் தான் நடைமுறையில் உள்ளன. ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் மாநில பாடத்திட்டம், மெட்ரிக், ஓரியண்டல் (கீழ்திசை மொழி பள்ளிகள் எனப்படும் உருது, கன்னடம் போன்ற குறிப்பிட்ட மொழிப்பள்ளிகள்), ஆங்கிலோ-இந்தியன் என நான்கு வகையான பாடத்திட்ட முறைகள் நடைமுறையில் உள்ளன. இந்த வேறுபட்ட பாடத்திட்டமுறைகளை தங்கள் உடைமையாக்கிக் கொண்டுதான் தனியார் கல்வி வணிகர்கள் ‘உயர்வான, தரமான’ கல்வியை தருவதாகக் சொல்லி வரன்முறையின்றி கட்டணக்கொள்ளை அடித்து வருகின்றனர்.

     இது சமீப ஆண்டுகளில் தலைவிரித்தாடியது. ‘தனியார் கல்விதான் தரமானது’ என்ற பிரச்சாரத்தில் மயங்கி  அரசுக்கல்வி, தரமானதாக கிடைக்கப் போராடாமல் அதை புறக்கணித்து சென்ற பெற்றோர்கள் ’விட்டில்’ பூச்சியாய் தவித்தனர். தன்னெழுச்சியாகப் போராடவும் தொடங்கினர். இந்நிலையில் கல்வியாளர்கள் நீண்ட காலமாக தமிழகத்திலுள்ள நான்கு வகையான பாடத்திட்டங்களை ஒன்றாக இணைத்து பொதுப்பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்ததும் சேர்ந்து கொள்ளவே, போராடும் பெற்றோர்களை சமரசப்படுத்துதற்காக கடந்த கருணாநிதி அரசு கொண்டு வந்த திட்டம்

தான் சமச்சீர் கல்விக்கான பொதுப்பாடத்திட்டமுறை. இது சமச்சீர் கல்வியில் ஒரு அம்சம்தான். இதுவே சமச்சீர்கல்வியின் முழுப் பரிமாணம் ஆகிவிடாது. முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தலைமையில் தி.மு.க அரசால் அமைக்கப்பட்ட சமச்சீர் கல்விக்கான குழுவின் பரிந்துரைப்படி பார்த்தால் கூட இது நான்கு வகையான பாடத்திட்டங்களை ஒன்றாக இணைக்கும் பொதுப்பாடத்திட்டம், பொதுப்பாடநூல் ஒரே மாதிரியான தேர்வுமுறை என்ற ஒரு அம்சத்தை மட்டும்தான் நடைமுறைப்படுத்தியுள்ளது.

ஆக, இது ஒருவகையான சீர்திருத்தம் அவ்வளவுதான். இதுவே தனியார்பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு முடிவுகட்டும் உண்மையான சமச்சீர் கல்வி ஆகிவிடாது.

கேள்வி; இந்த சீர்திருத்தத்தை தனியார்பள்ளி முதலாளிகளும்

         ஜெயலலிதாவும் எதிர்ப்பது ஏன்?

பதில்; தனியார்மயக் கல்விக்கொள்கையை முற்றிலும் ஒழித்துக்கட்டிவிடாத சிறிய சீர்திருத்தம் தான் பொதுப்பாடதிட்டம் என்றாலும், ‘அரசுக்கல்வியை விட உயர்வானது, ஆங்கில வழி பயிற்சி’ என்ற அடிப்படையை வைத்து வரன்முறை இன்றி பகற்கொள்ளையடித்து வருவதற்கு இது ஒரு இடையூறாக, ஒரு வரைமுறைக்கு வருவதாக அமைந்துவிடக்கூடும், அதாவது தங்கள் கொள்ளை லாபத்தில் ஒரு சதம் குறையும் என்ற அச்சத்தால்தான் தனியார்பள்ளி முதலாளிகள் இந்த சீர்திருத்தத்தை ஆரம்ப நிலையிலேயே எதிர்த்தனர். ஆட்சி மாற்றம் அவர்கள் நினைத்ததை நிறைவு செய்தது.

       தனியார்மயக் கொள்கையை எல்லா ஓட்டுக்கட்சிகளைப் போலவே மனமுவந்து ஏற்றுக்கொண்ட பார்ப்பன பாசிஸ்டு ஜெயலலிதா அதை நடைமுறைப்படுத்த தனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்ததும் தனியார்மயக் கொள்கைக்கு எதிரான, சமச்சீர் கல்விக்கான பொதுப்பாடத்திட்ட முறையை ரத்து செய்வதையே இந்த ஆட்சியின் முதல் சட்டமாக கொண்டு வந்து தனது தீவிர விசுவாசத்தை மீண்டும் நிரூபித்துக்கொண்டுள்ளார்.

    பொதுப்பாடத்திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்ததாலேயே, ஜெயலலிதா ரத்து செய்கிறார் என்று ஒரு அரசியலற்ற வாதத்தை முன்வைக்கின்றனர். இது உண்மையல்ல. தான் மனமுவந்து ஏற்றுக்கொண்ட “உலகமயமாக்கல் கொள்கைக்கேற்ப இந்த பொதுப்பாடத்திட்டம் அமையவில்லை” அதனால்தான் ரத்து செய்கிறோம் என்று சட்டமன்றத்தில் போட்டு உடைத்தார் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். பொதுப்பாடத்திட்டத்தை ஜெயா எதிப்பதற்கு இதுதான் உண்மையான காரணம்.

கேள்வி; உலகமயமாக்கல் கொள்கைக்கேற்ப பொதுப்பாடத்திட்டம்

         அமையவில்லை என்று ஜெயா சொல்வது புரியவில்லை, விளக்க முடியுமா?

 

பதில்; தற்போது நான்கு வகைப் பாடத்திட்டங்களை ஒன்றாக  இணைத்து 150 கல்வியாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பாடத்திட்டமும், பாடநூல்களும், கற்றல் – கற்பித்தல் என்ற முறையிலும், மாணவர்களின் சுயசிந்தனையை வளர்ப்பதற்கான அடிப்படையையும் கொண்டுள்ளது என்பது நிதர்சனமான உண்மையே. சுய சிந்தனையே இல்லாத அடிமைகளை உருவாக்கத் துடிக்கும் தனியார்மயக் கல்வி கொள்கைக்கு அடிப்படையில் இது எதிரானது. மேலும் வெளிநாட்டுக் கம்பெனிகளுக்குத் தேவையான மலிவான ஆட்களை (அடிமைகளை) உருவாக்குவதற்கான பாடத்திட்டங்களைத்தான் உலகத்தரத்திற்கான பாடத்திட்டம் என்கின்றனர். இது தான் சமச்சீர்கல்விக்கான பொதுப்பாடத்தில் இல்லை என்கின்றார் ஜெயா. அதாவது,  உலகத் தரம் இல்லை என்கிறார்.இந்த நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான அறிவியல்,வரலாறு,சமூக அறிவியல் ஆகியவற்றை ஒழித்துக்கட்டி விட்டு பன்னாட்டுக்கம்பெனிகளுக்குத் தேவையான ஆட்களை உருவாக்கவும் அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் தேவையை பூர்த்திசெய்வதற்கான ஆய்வுகளை செய்வதற்குமான படிப்புகளை பள்ளிக்கல்வியிலிருந்தே கொண்டுவர வேண்டுமென உலகவங்கி உத்தரவு போடுகிறது. ஜெயலலிதா ஆடுகிறார், அதைத்தான் தற்போது பார்த்து வருகின்றோம். இன்றும் புரியவில்லையா? கடந்த முறை ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது ரேசன் அரிசி விலையை உயர்த்தியபோது ஏன் விலை உயர்வு என்று கேட்டதற்கு “உலகவங்கி சொன்னது அதைத்தான் செய்தேன்” என்று சட்டமன்றத்தில் பகிரங்கமாகவே சொன்னதை நினைவுபடுத்தி பார்த்தால் தற்போது தெளிவாகப் புரியும்.

கேள்வி; பெற்றோர் சங்கங்கள், கல்வியாளர்கள் போன்றோர்

         நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்களே

         இனியும் சமச்சீர் கல்விக்கான பொதுப்பாடத்திட்டத்தை

ஜெயா முடக்கிவிட முடியுமா?

பதில்; பெற்றோர் சங்கங்கள், கல்வியாளர்கள் பலர் வழக்கு தொடர்ந்திருந்தாலும், மனித உரிமைப் பாதுகாப்பு மையம் அதன் தலைமையிலான மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர்கள் சங்கம் ஆகியவைதான் ஆரம்பத்திலிருந்தே சமச்சீர் கல்விக்கான பொதுப்பாடத்திட்டத்தை ரத்துசெய்யக் கூடாது, உடனே அமல்படுத்த வேண்டும் என்று நீதிமன்றத்திற்கு உள்ளும், வெளியிலும் உறுதியாகப் போராடி வருகின்றது. வெளியில் போராடுபவர்களை போலீசை வைத்து தடி கொண்டு தாக்கி, கைது, சிறை என்று அடக்குமுறையை ஏவும் ஜெயலலிதா, நீதிமன்றத்தை கொள்கையால் வளைத்துப்போடுகிறார். வழக்கு என்று ஒன்று போட்ட உடனயே அரசுக்கொள்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தனியார் பள்ளி முதலாளிகள் அறிக்கை விட்டு எடுத்துக் கொடுக்கிறார்கள். முதலில் சென்னை உயர்நீதிமன்றமோ சமச்சீர்கல்விக்கான பொதுப்பாடத்திட்டத்தை இவ்வாண்டே அமல்படுத்த வேண்டும் என்று கூறிய போதும் அதிலுள்ள எந்தப் பகுதியையும் நீக்கவும், வெட்டிச்சுருக்கவும் தாராள அனுமதியையும் சேர்த்துத்தான் வழங்கியது. இதைவிட மொத்த பாடத்திட்டத்தையுமே ரத்து செய்வதுதான் நோக்கம் என்பதில் குறியாக இருந்த ‘ஜெயா’ உச்சநீதிமன்றம் சென்றார். அதற்கு எதிராக மனித உரிமை பாதுகாப்பு மையமும்  சென்றது. அந்தப் பார்ப்பனிய உச்சிக்குடுமி மன்றமோ 1வது மற்றும் 6வது வகுப்புக்கு இவ்வாண்டே சமச்சீர்கல்விக்கான பொதுப்பாடத்திட்டத்தை அமல்படுத்தலாம்.

2வது முதல் 10வது வரையிலான பாடத்திட்டத்தை கல்வித்துறை நிபுணர்களைக்கொண்ட 9 பேர் குழு அமைத்து மறு ஆய்வு செய்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதை விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கட்டப் பஞ்சாயத்து செய்து முடித்தது. இந்த தீர்ப்பு கேட்ட பின்பு சிலர்     இப்படி பேசிக்கொண்டார்கள். ”1வது மற்றும் 6வதுக்கும்  உருவாக்கியது போன்ற பாடத்திட்டத்தைதானே, 2வது முதல் 10வரையும் கல்வியாளர்கள் உருவாக்கி இருப்பார்கள் இது கூடவா உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பொதுபுத்திக்கு தெரியாது என்று”  இது ஒன்றும் அவர்களுக்கு தெரியாதா, புரியாத விசய்மல்ல.பார்ப்பன கும்பல் மீதும் , தனியார் பள்ளி முதலாளிகள் மீதும் உள்ள வர்க்கப் பாசத்தால் சமச்சீர் பாடத்திட்டத்தை முடக்க செய்யப்பட்டது தான் இந்த கட்டப்பஞ்சாயத்து. தனியார்மயக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதை உத்தரவாதப்படுத்துவதில்  ஓட்டுக்கட்சிகளுக்கும் நீதிமன்றத்துக்கும் எந்த வேறுபாடும் கிடையாது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றன என்பதற்கு உதாரணம்தான் இந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு. (ஒன்பது பேர் கொண்ட பாடத்திட்ட மறு ஆய்வுக்குழு-வின் யோக்கியதைப் பற்றியும், அவர்கள் கொடுத்த அறிக்கையை பற்றியும் கல்வியாளர் அ.கருணானந்தனும்,வினவு தளமும் விரிவாக அம்படுத்தியுள்ளதைப் பார்க்கவும்)

தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை முடிந்துள்ள நிலையில் சமச்சீர் கல்விக்கான பொதுப்பாடத்திட்டத்தை 1வது முதல் 10வது வரை இவ்வாண்டே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.இது நீதிமன்றத்திற்குள் போராடிய மனித உரிமைப் பாதுகாப்புப் மையம் மற்றும் ம.க.இ.கபு.மா.இ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகளின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! ஆனால் முழுமையான வெற்றியாக இல்லை.காரனம் ஜெயா அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக அறிவித்துள்ளது.

எப்படியாவது இந்த சமச்சீர் கல்விக்கான பொதுப் பாடத்திட்டத்தை முடக்கிவிட வேண்டும் என்று துடிக்கிறார்.இதை முறியடிக்க வேண்டும் என்றால் பாதிக்கப்படும் பொதுமக்கள் அமைதியாக வேடிக்கை பார்க்காக்கூடாது கல்வியாலர் திரு.ராஜகோபாலன் சொன்னது போல் ”ரேசன் கடையில் அரிசி,மண்ணென்னை கிடைக்கவில்லை என்றால் வீதியில் இறங்கிப் போராடுவதைப் போல்“லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு போராட வேண்டும்.

கேள்வி: பழைய  பாடத்திட்டம் தொடருவதாலோ,

சமச்சீர் பாடத்திட்டம் முடக்கப்படுவதாலோ

மாணவர்களுக்கும் சமூகத்திற்கும் என்ன பாதிப்பு?

பதில்:

       நமது சமுதாயம் வர்க்க சமுதாயமாக மட்டும் இல்லாமல், சாதிய ஒடுக்குமுறைகளும், சமூகப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் நிறைந்த சமுதாயமாகும். இவை மிகக் கொடூரமாக அரங்கேற்றப்பட்டு ஆண்டாண்டு காலமாக பெருவாரியான உழைக்கும் மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டுவந்துள்ளது. ஒரு காலத்தில் ’சூத்திரனுக்கு கல்வி இல்லை’ என்றது பார்ப்பன மனுநீதி. இன்றோ ’காசு இல்லாதவனுக்கு கல்வி இல்லை’ என்கிறது உலக வங்கியின் புதிய மனுநீதி. இப்படி பார்ப்பனியமும், தனியார்மயமும் ஒரு நாணயத்தின் இரண்டுபக்கங்களாக செயல்பட்டு உழைக்கும் மக்களை புறக்கணிப்பது கல்வியில் இன்று பட்டவர்த்தனமாக அம்பலமாகிறது. பழைய பாடத்திட்டம் தொடர்ந்தால், நான்குவகையான பாடத்திட்டங்களும் தொடரும், வரன்முறை இன்றி சுருட்டும் தனியார்பள்ளிகளின் கட்டணக் கொள்ளையும் கேள்வி கேட்பாறின்றித் தொடரும், பார்ப்பனிய குலக்கல்வி முறையைப் போல இன்று ஆங்கில வழி பயிற்சி, தரமானக்கல்வி என்ற போர்வையில் புகுத்தப்படும் புதிய பார்ப்பனியக் கல்வி முறை பரவலாக்கப்படும். இதன் மூலம் நீடித்துவரும் ஏற்றத் தாழ்வுகளும் வர்க்க வேறுபாடுகளும் மேலும், மேலும் ஆழமாகும் பெருவாரியான ஏழை மாணவர்களுக்கு கல்வி முற்றிலுமான மறுக்கப்பட்டு ஒரு சமூகமே தற்குறியாகும் அபாயம் இதில் நிறைந்துள்ளது.

கேள்வி:இது இந்த அரசுகளுக்குத் தெரியாதா?

பதில்:

    நன்றாகத் தெரியும்! தெரிந்தேதான் இதை நடைமுறைப்படுத்துகிறார்கள். நாட்டின் சுயசார்பான வளர்ச்சிக்கும், நாகரிகமான மனிதனை உருவாக்குவதற்கும், அனைவருக்கும் கல்வி கட்டாயமாக –இலவசமாக – அறிவியல்பூர்வமாகவும் இதைக் கொடுப்பதுதான் ‘மக்கள் நல அரசுகளின்’  கடமையாகவும் இருக்க முடியும். ஆனால் நமது அரசு மக்கள் நல அரசு இல்லை என்பது மீண்டும் மீண்டும் அம்பலப்பட்டு வருகின்றது. மத்திய-மாநில அரசுதான் அரசுக்கல்வி கட்டமைப்பையே திட்டமிட்டு சீர்குலைத்து வருகின்றன. நாடு முழுவதும் உள்ள 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளில் சுமார் 3 கோடி பேர் பள்ளி வாசனையே அறியாதவர்கள். நாட்டில் 40% பள்ளிகளில் கட்டிட வசதிகளே இல்லை, சுமார் 32 ஆயிரம் பள்ளிகளில் கரும்பலகைக் கூட இல்லை. 1,21,728 தொடக்கப்பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக செயல்படுகின்றன. அங்கு பாடங்களே நடப்பதில்லை. இது எல்லாம் அரசே தரும் புள்ளி விவரங்கள்தான்.

மாணவர்களுக்கு ’இலவச லேப்டாப்’ வழங்கப்போகும் தமிழகம் இதற்கெல்லாம் வதிவிலக்கு அல்ல. இதுவரை சுமார் 35 ஆயிரம் பள்ளிகள் 5 ஆசிரியர்கள் பள்ளிகளில் தர ஈராசிரியர் பள்ளிகளாக தரம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2000 பள்ளிகள் இருந்து மூடப்பட்டுள்ளன. கடந்த 2010-ல் சென்னையில் மட்டும் 30 மாநகராட்சிப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றன. ஆனால் காலியிட எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியதே தவிர நிரப்பப்படவில்லை. இவையெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே.

 

கேள்வி; அரசுக்கல்வியை திட்டமிட்டே சீர்குலைப்பதற்கு என்ன காரணம்?

பதில்:

தனியார் கல்வியை ஊக்குவிப்பதற்காகத்தான் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. தமிழ்கத்தில் 1970 -களில் தனியார் கல்வியா என்று ஆச்சரியப்பட்ட நிலைமாறி இன்று பல ஆயிரக்கணக்கில் புற்றீசல்  போல பெருகி அதிச்சியடைய வைத்துள்ளன. “ஒரு பெட்டிக்கடை வைப்பதென்றால் கூட சிறு முதலீடும் அரசின் அனுமதியும் கண்டிப்பாக வேண்டுமாம். ஆனால் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடங்க மட்டும் இவை எதுவுமே தேவை இல்லை. சில நூறு ரூபாய்கள் கூட செலவாகாத மழலையர் கல்விக்கு (PRE KG, LKG,UKG )  2 லட்சங்கள் வரை வசூலிக்கின்றன டி.ஏ.வி, வேலம்மாள், த பப்ளிக் போன்ற பராசுரப் பள்ளிகள், அரசுக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இன்ஞ்னியரிங் படிக்க சில ஆயிரங்கள் மட்டுமே செலவாகும் போது சாராய ரவுடி ஜேப்பியாரின் சத்யபாமா, சாதிக்கட்சி ரவுடி பச்சைமுத்துவின் SRM போன்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் பல லட்சங்களை சுருட்டுகின்றன. இப்படி தாங்கள் வைத்ததே சட்டம், நிர்ணயித்தே கட்டணம் என்று தனி சாம்ராஜ்ஜியமே நடத்துகிறார்கள் தனியார் கல்வி வணிகர்கள்.

       தமிழக அரசின் “கோவிந்தராஜன், ரவிராஜன் பாண்டியன் எந்தக்கமிட்டி கட்டணத்தையும் ஏற்க முடியாது, நோட்டு, புத்தகம், சீருடை அனைத்தையும் தங்களிடம் தான் வாங்க வேண்டும், சுமார்ட் கிளாஸ், பேருந்து இவைகளுக்கு கட்டாயக் கட்டணம். மீறும் மாணவர்களை வெயிலில் நிற்க வைப்பது, முட்டிபோட வைப்பது, தனியாக உட்காரவைத்து தீண்டாமையை கடைபிடிப்பது என்று மாணவர்களை சித்ரவதை செய்கிறார்கள் கல்வி வணிகர்கள். கமிட்டிகளின் தலைவர்களோ கட்டணம் நிர்ணயித்த கையோடு பதவி விலகி விடுவார்கள். பள்ளிக் கலவித்துறை அதிகாரிகளோ, தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று நழுவுகிறார்கள். தமிழ்க முதல்வர் ஜெயலலிதாவோ “இது கட்டணம் நிர்ணயித்த கமிட்டிக்கும் பெற்றோர்களுக்குமான பிரச்சனை இதில் அரசு தலையிடாது” என்று தனியார் பள்ளிகளுக்கு  துணை நிற்கிறார். ‘கல்வி வணிகம்’ எனும் பகற்கொள்ளை படுஜோராக நடக்கிறது. ”பேருந்தில் பிட்பாக்கெட் அடிப்பவன் பிடிபட்டால் உள்ளே தள்ளி நிமிர்த்தும் போலீசும், சட்டமும் பிள்ளைகளை பிணையக் கைதிகளாக வைத்து பணம் பறிப்பது பகிரங்கமாக தெரிந்தும் தனியார் பள்ளிகள்முன் காவல் நிற்கின்றன, எதிர்த்து போராடுபவர்கள் மீது அடக்குமுறையை ஏவுகின்றன. காரணம், இவையெல்லாம் சட்ட விரோதமானது அல்ல சட்டபூர்வமாகவே நடைபெறும் பகற்கொள்ளை இதுதான் அரசின் கொள்கை.

கேள்வி; கொள்ளைக்கு வழிவகுப்பது அரசின் கொள்கையா?

பதில்:

ஆம், 1994 க்குபிறகு ‘காட்’ ஒப்பந்தப்படி நாட்டின் முன்னேற்றம் என்ற பெயரில் நீர், நிலம், காடு, மலைகள், அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) என அனைத்து இயற்கை வளங்களும் கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கு சட்டப்பூர்வமாகவும், அரசுக்கொள்கை முடிவுகளின் படியுமே திறந்துவிடப்பட்டன.விளைவு நாடே சூறையாடப்படுகின்றது. இதன் தொடர்ச்சிதான் ‘காட்ஸ்’ ஒப்பந்தம்.இதன்படி கல்வி, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து சேவைத்துறைகளும் வியாபாரத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளன. விளைவு “கல்வி”  சட்டப்படியும், அரசுக் கொள்கை முடிவுகளின் படியுமே வணிகமயமாக்கப்பட்டுவருகின்றது.

உலகவங்கி உத்தரவுபடி,

1994-95 இல் மாநில ஆரம்பக்கல்வித் திட்டம் (District Primary Education Programme – DPEP)  என பள்ளிக்கல்வியை அரசுக்கொள்கைப்படியே தனியார்மயப்படுத்தும் நடவடிக்கை அரசுத்தொடங்கியது.

 • பிள்ளையை படிக்க வைப்பது பெற்றோர்கடமை,
 • காசு கொடுத்து படிக்க வேண்டும்
 • கல்வி நிறுவனத்தை உபயோகப்படுத்துவதற்கான கட்டணம்
 • கல்விக்கான அரசு மான்யங்களை , சலுகைகளை வெட்டிச் சுருக்குவது

       இறுதியில் முற்றிலுமாக நிறுத்துவது

என்பதை தீவிரமாக நடைமுறைப்படுத்தி கல்வி கொடுக்கும் கடமையிலிருந்து அரசு மெல்ல, மெல்ல விலகி வருகின்றது.

அரசுக்கல்வியை சீர்படுத்த தபஸ்மஜீம்தார் குழு கொடுத்த அறிக்கையை குப்பையில் போட்ட அன்றைய பி.ஜே.பி அரசு பிர்லா-அம்பானி அசோசம், பிக்கி போன்ற முதலாளிகள் சங்கங்கள் கொடுத்த அறிக்கைகளை சட்டமாக இயற்றின. கார்ப்பரேட் நிறுவனங்கள் பள்ளிகளை தொடங்கவும், நடத்தவும் சட்ட விதிகள் மாற்றியமைக்கப்பட்டன. வரிச்சலுகைகளும் வாரி வழங்கப்படுகின்றன. இதன்பிறகுதான் டெல்லியில் கோகோ கோலாவும், கர்நாடத்தில் விப்ரோவும் பல பள்ளிகளை குத்தகை எடுத்து தனது ஆக்டோபஸ் கரங்களை நீட்டியுள்ளன.

கேள்வி: எங்கே செல்கிறது கல்வி?

பதில்:

“குழந்தைகளின் இலவசக் கட்டாய கல்வி உரிமைக்கான சட்டம் 2009” கொண்டு வந்து நாட்டு மக்களின் 60 ஆண்டு கால கனவை நிறைவேற்றி விட்டதாக நாடகமாடுகிறது கள்ளுளிமங்கன் மன்மோகன் அரசு. ஆனால் அந்தப் பேனா மை காய்வதற்குள்ளாகவே மே,2010-ல் உலகவங்கி ஆணைப்படி வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இங்கு வந்து கடைபோடவும் பாராளுமன்றங்களால் கூட கட்டுப்படுத்த முடியாதபடி ‘நிகரில்லா அதிகாரங்களைப் பெறும் கல்வி தீர்ப்பாயங்களை உருவாக்குவது உள்ளிட்ட உயர்கல்விக்கான 16 வகையான மசோத்தாக்கள் அறிமுகம் செய்து  வைக்கப்பட்டுள்ளன. இப்படி கல்வியை மத்தியப்படுத்தப்பட்ட ஒரு தீர்ப்பாயத்தின் கீழ் கொண்டுவருவதன் மூலம் மாநில அரசுகளின் உரிமை பறிக்கப்படுவதோடு கல்வியை மொத்தமாக கார்ப்பரேட் மயமாக்கும் அபாயம் காத்திருக்கிறது. இதற்காகத்தான் பெயரளவிற்கு இருந்துவந்த ”1986 ஆம் ஆண்டு தேசியக் கல்வி கொள்கையை புதிய உலகார்ந்த வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது பொருந்தவில்லை என்று தூக்கி எரிந்தது உலகவங்கி கைக்கூலி காங்கிரசு அரசு” .இன்று தமிழகத்திலோ ”சமச்சீர் கல்விக்கான பொதுப் பாடத்திட்டம் உலகமயக் கொள்கைகேற்ப அமையவில்லை என்று சட்டம் போட்டு ரத்து செய்கிறது” பார்ப்பன பாசிஸ்டு ஜெயா தலைமையிலான அ.தி.மு.க அரசு.

கேள்வி:

அப்படி என்றால், கல்விக்கொள்கை நமக்காக இல்லையா?

வேறு யாருக்கு சேவை செய்கிறது?

பதில்:

இதை புரிந்து கொள்வது ஒன்றும் கடினம் இல்லை. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைக்கு சேவை செய்வதுதான் நமது கல்விக் கொள்கையின் வேலையாக மாற்றப்பட்டுள்ளது.

என்ன புரியவில்லையா?

                ஐடி பார்க்குள், கார்ப்பரேட் மருத்துவமனைகள், பன்னாட்டுக் கம்பெனிகள் போன்றவற்றின் உயர்பதவிகளுக்கு பணக்கார-மேட்டுக்குடி வர்க்கத்திலிருந்து ஒரு சிறு கும்பலை என்ன்ஞ்னியர்களாக, மருத்துவர்களாக உருவாக்கி அனுப்புவதும், இந்த சிறு கும்பலுக்கு சேவை செய்யும் உதவியாளர், டிரைவர், மெக்கானிக்குகள், செக்யூரிட்டிகளாக பெருவாரியான உழைக்கும் மக்களை நவீன கொத்தடிமைகளாக்குவதும்தான் இன்றைய மறுகாலனியாக்க சூழலில் கல்வியின் பாத்திரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்காகத் தான், கல்லூரிகளுக்கு தன்னாட்சி(Autonoums) , பாடத்திட்டம், புதிய துறைகள், புதிய படிப்புகள் தொடங்க சுதந்திரம், செமஸ்டர் தேர்வு முறை, ஒருமைப் பல்கலைக்கழகங்கள் என கல்வி சூழலை மாற்றுகிறார்கள். இதெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பதென்று நினைக்காதீர்கள். இதுதான் அரசின் கல்விக் கொள்கை. இது பன்னாட்டு முதலாளிகளின் தேவைக்கான கொள்கை.

ஆதாரம் வேண்டுமா?

                பிக்கி (FICCI) என்னும் பன்னாட்டு முதலாளிகள் சங்கத்தின் செகரட்டரி செனரல் டாக்டர் அமித்மித்ரா பன்னாட்டு முதலாளிகளின் விருப்பம் என்ன என்பதை ஒரு கருத்தரங்கில் பின்வருமாறு சொல்கிறார்.

“இந்தியா, ஆங்கிலம் பேசும் திறந்த பொருளாதாரத்துடன் கூடிய பன்முகத் தன்மை கொண்ட சமூகம் என்ற அடிப்படையிலும், மில்லியன் கணக்கில் பட்டப்படிப்பாளர்களையும், லட்சக்கணக்கில் பொறியியலாளர்களையும், மருத்துவர்களையும் விஞ்ஞானிகளைய்ம் உருவாக்குவதன் அடிப்படையிலும் இந்தியாதான் அமெரிக்காவுடன் நீண்ட நாள் அடிப்படையில் பங்குதாரராய் இருக்க முடியும்” என்கிறார். சுருக்கமாக சொன்னால், பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஆள் சப்ளை செய்யும் வேலைதான் இந்திய அரசின் கல்விக் கொள்கையின் வேலை என்கிறார்.

கேள்வி:

கல்வியின் உண்மையான பாத்திரம் தான் என்ன?

பதில்:

மனிதனை விலங்கிலிருந்து நாகரீகமான உயர்ந்த நிலைக்கு மாற்றியதும் – அன்பு, கருணை, நட்பு பாராட்டகூடிய சமுதாய மனிதனாக உயர்த்தியதுமான மகத்தான பாத்திரத்தை வகித்ததுதான் “கல்வி”.

இத்தகைய கல்வியை வேலைக்கான ஒரு கருவியாக, சந்தைக்கான ஒரு சரக்காக மாற்றியதன் மூலம், இந்நாட்டு மக்களை சுய சிந்தனையோ, மனிதத் தன்மையோ இல்லாத மிருகங்களாக, மனித உணர்வின் அடிப்படையான இதயத்தையும், ‘ஆன்மா’வையும் உருவி எடுத்த ‘எந்திரனாக’ (ரோபாட்டாக) மாற்றி வருகிறார்கள். இப்படி ஒரு சமூகத்தையே அழிக்கும் அபாயம் ‘லைலா’ புயலைவிட  வேகமாக எதிர் வருகின்றது.

கேள்வி:

இதெல்லாம் இங்கு இருக்கும் அரசியல் கட்சிகளுக்குதெரியாதா?

இக்கட்சிகள் என்ன செய்கின்றன?

பதில்:

                அரசியல் கட்சிகள் என்றால் யாரைச்சொல்லுகிறீர்கள். ஓட்டுப்பொறுக்கி கட்சிகளையா?

கேள்வியைத் தெளிவாகக் கேளுங்கள். வெயிலில் கால்கடுக்க நின்றும், துப்பாக்கி முனையிலும், ஜனநாயகம் இல்லாமல் ஓட்டுப்போட்ட மக்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். வெள்ளை வேட்டி, சட்டை மடிப்பு களையாமல் ஸ்கார்ப்பியோ காரில் வலம் வந்து ஓட்டுப்பொறுக்கிச் சென்ற கோடீஸ்வர சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இது நன்குத் தெரியும்.

                அதனால்தான், கடந்த ஜீன் 7 ந்தேதி சமச்சீர்கல்விக்கான பொதுப்பாடத்திட்டதை ரத்து செய்யும் சட்டத்திருத்தத்தை பாசிச ஜெயா சட்டமன்றத்தில் கொண்டு வந்த போது எந்த ஓட்டுக்கட்சிகளும் அதை எதிர்க்கவில்லை. மாறாக மேசையை தட்டி வரவேற்றார்கள். இந்த அநீதிக்கு எதிராக இன்று வரை அமைதியாகவே உள்ளார்கள். தே.மு.தி.க விஜயகாந்தைப் பற்றி சொல்லவே தேவையில்லை. பாசிச ஜெயாவிற்கு சற்றும் சளைத்தவர் அல்ல, தனியார்மயத்திற்கு சேவை செய்ய தனக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்துவிட்டதால் பன்னாட்டு -உள்நாட்டு கம்பெனி முதலாளிகளுக்கு செருப்பாகத் தேய்வார். சமச்சீர் கல்வியின் நாயகனாக வருணிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதிக்கு மகள் கனிமொழியை காப்பாற்றுவதும், கட்சியைக் காப்பாற்றுவதுமே பெரிய பிரச்சனையாக உள்ளது என்று அனுதாபத்தை தேடுகிறார். உண்மை என்னவென்றால் ஜெயலலிதாக்கு  ஓட்டுப்போட்ட மக்கள் அனுபவிக்கட்டும் என்று ஏழைகள் மீது வக்கிரத்தை கக்குகிறார்.

                பாமக, விசி, மதிமுக இவர்களைபோன்ற ’வாய்வீச்சு வீரர்களைப் ’பற்றி சொல்லவேத் தேவையில்லை பத்திரக்கைகளில் அறிக்கைவிட்டு ஓட்டுவங்கியை தக்கவைப்பதைத்தவிர ஜெயலலிதாவுக்கும் இவர்களுக்கும் வேறு ஒரு கொள்கைப் பிரச்சனையும் இல்லை.இந்த ரகங்களைச் சேர்ந்தவர்கள் எல்லாம் பெருவாரியான மாணவர்களுக்கு எதிரானவர்கள் என்று பளிச்சென்று  தெரிந்து விட்டனர். சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டதை எங்களால்தான் கொண்டு வந்தார்கள் என்று மார்தட்டிக்கொண்ட போலி கம்யூனிஸ்டுகள் மேலே சொன்ன ரகங்களை விட ஆபத்தானவர்கள், சட்டமன்றத்திற்கு வெளியே ரத்து செய்யப்பட்ட சமச்சீர் கல்வி பொதுப்பாடதிட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும்,சட்டமன்றத்திற்குள் ஜெயா வின் சட்டத்திருத்தத்தை சமூக நீதிக்கானது என்று வரவேற்றும் பேசும் அயோக்கியதனத்தை இனங்காண வேண்டியது மிகவும் அவசியமானது.

(இவர்களின் இந்த இரட்டை நிலையைப் பற்றி வினவு தளத்தில் விரிவாக அம்பலப்படுத்தியதைப் பார்க்கவும்) இதற்கு மேலும்  நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான், இந்த சமச்சீர்கல்விக்கான பொதுப்பாடத்திட்டத்தை திமுக அரசு அறிவித்த பின்பு உடனே அமல்படுத்த வேண்டும் என்று சட்டமன்றத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் (SFI)  முற்றுகையிட்டபோது   அடி, உதைபட்ட அந்த உண்மையான SFI தொண்டர்கள் அன்று இருந்த  அதே தன்மான உணர்வுடன் தங்கள் தலைமை கேள்வி எழுப்பவேண்டும். அவர்கள் அதற்கு நேர்மையாக பதில் சொல்லவில்லை என்றால் அந்த உண்மையானத் தொண்டர்கள், தங்கள் இழப்பு, தியாகங்களை இழிவுபடுத்தப்படுவதை சகித்துக் கொண்டு சகவாழ்வு நடத்தாமல்,உண்மையில் “சமச்சீர் கல்வியை” அமல்படுத்த வேண்டும் என்று களம் கானும் புரட்சிகர அமைப்புகள் பக்கம் நிற்பதுதான் தன்மானம். இது  அறிவுரை அல்ல – தோழைமை உணர்வு.

கேள்வி:

இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுதான் என்ன?

பதில்:

 

முதலில் இதை ஜெயலலிதாவுக்கும்-கருணாநிதிக்குமான பிரச்சனையாகவோ, தனியார் பள்ளிகளுக்கு – கட்டண நிர்ணய கமிட்டிக்கும் -பெற்றோர்களுக்குமான பிரச்சனையாகவோ பார்க்கக்கூடாது. இது ஒரு சமூகத்தையே சீர்குலைக்கும் மறுகாலனியாக்கக் கல்விக் கொள்கைப்பிரச்சனை என்பதை உணர வேண்டும். நாம் தொடங்க வேண்டியதும் இதை வேறறுக்கும் போராட்டத்தைத்தான். சமச்சீர் கல்விக்கான பொதுப்பாடத்திட்டத்தை மட்டுமல்லாது, உண்மையான “சமச்சீர்” கல்வியையும் அமல்படுத்துவதற்கான போராட்டத்தில் இந்த சமூகத்தின் ஓவ்வொரு உறுப்பினரும் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். அத்தகையதோர் போராட்டம்தான் தனியார்பள்ளிகளின் கட்டணக்கொள்ளைக்கும், கல்வி வணிகர்களின் கொட்டத்திற்கும் முடிவு கட்டும்.

உயிர்வாழும் உரிமையான கல்வி இன்று கடைச்சரக்காகி உள்ளது. கல்வி வணிகர்களும் கார்ப்பரேட் முதலாளிகளும் ‘கல்வி வள்ளல்களாக’ வலம் வருகிறார்கள். இவர்கள் காலடியில் மண்டியிடும் ஓட்டுப்பொறுக்கிகளும், அவர்கள் தலைமையில் நடைபெறும் அரசாங்கங்கலும் இப்பிரச்சனைக்கு முடிவு கட்டாது.

தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகிவிடும் என்று பணத்தையும் உயிரையும் பறிகொடுத்தது போதும். பாதிக்கப்படும் சமுதாயத்தின் பிரதிநிதி என்ற முறையில் இந்த அநீதிக்கு எதிராக தன்மானத்தோடு கிளர்ந்தெழ வேண்டும். அனைத்துத்தரப்பு மக்களும் களத்தில் நிற்கும் நக்சல்பாரிகளின் பாதையில் புரட்சிகர அமைப்புகளின் தலைமையின் கீழ் அணிதிரள வேண்டும். மறுகாலனியாக்கக் கல்விகொள்கைக்கு முடிவு கட்டுவதன் மூலமே உழைக்கும் மக்கள் அனைவருக்கும் காட்டாயமாக -இலவசமாக – அறிவியல் பூர்வமாக – தாய்மொழியில் கல்விபெறுவதற்கான உரிமையை நிலைநாட்டமுடியும்.

 – இளஞ்செழியன்

 

இவர் தான் லெனின்

lenin

1. லெனின் இறக்கவில்லை நம்முடன் வாழ்கிறார்

2. வறுமையை ஒழித்த லெனின்

3. துக்கம் சூழ்ந்தாலும் துவளாத மனிதன்

4. வக்கீல் உருவில் ஒரு போராளி!

5. லெனின் தேர்வு செய்த பாதை

6. போராட்டமே வாழ்க்கையாக…!

7. சைபீரியச் சிறைவாசம்

8. மரணத்தை மண்டியிடச் செய்த லெனின்

9. அடக்குமுறைக்கு அஞ்சாத போல்ஷ்விக்குகள்

10. ஜாரை வீழ்த்திய பிப்ரவரி புரட்சி

11. சதியை முறியடித்த லெனின்

12. சுரண்டலுக்கு முடிவு கட்டிய நவம்பர் புரட்சி

13. ஏகாதிபத்தியங்களை விரட்டியடித்து சோவியத்யூனியன்…

14. எதிரிகளை வீழ்த்திய செம்படை

15. பட்டினி கிடந்து சோசலிசத்தைப் பாதுகாத்த லெனின்

16. மக்களின் மகத்தான தலைவர் லெனின்

17. லெனின் உறங்குவதில்லை நம்மையும் உறங்கவிடுவதில்ல…

வெளியீடு:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
சென்னை

பகத்சிங் -ஒரு அறிமுகம்

bhakathsing-arimugamபகத்சிங் -ஒரு அறிமுகம்

இந்தியா ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அடிமையாக (காலனியாக) இருந்த காலம் அது. ஆங்கிலேயர்கள் நம் நாட்டு வளங்களை சுரண்டிக் கொள்ளையடித்தனர். மக்கள் வறுமையில் வாடினர். இதைப் புரிந்து கொண்ட மக்கள் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை ஒழிக்க போராடத் துணிந்தனர். போராடும் மக்கள் மீது ஒடுக்குமுறை ஏற்பட்டது.
..
1919 ஏப்ரல் 14 ஆம் நாள் பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ரவுலத் சட்டத்தை எதிர்க்கும் போராட்ட விளக்க கூட்டம் நடத்தப்பட்டது. திடீரென ஜெனரல் டயரின் தலைமையில் ஒரு படைப்பிரிவு கூட்டத்தைக் சுற்றி வளைத்து ஆயிரக்கணக்கான மக்களை சுட்டுக் கொன்றது. நாடெங்கும் மக்கள் கோபத்தால் பழிவாங்கத் துடித்தனர். ஆனால் எவருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. ஒரு (11 வயதுடைய) சிறுவன் மட்டும் ரத்த சேறான மைதானத்திற்கு சென்று ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து வீட்டில் வைத்தான். தியாகிகளின் ரத்தம் தோய்ந்த மண்ணின் மீது ஆங்கிலேயர்களை பழிவாங்குவதாக சபதம் செய்தான். அச்சிறுவனின் பெயர் தான் பகத்சிங்.
..
நாட்டின் விடுதலையை தன் இலட்சியமாக ஏற்றுக் கொண்டான். அதை எப்படி அடைவது என ஆராயத் தொடங்கினான். பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்த பிறகு ஏராளமான புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவற்றில் இருந்து, ரஷ்ய நாட்டில் 1917 சோசலிச புரட்சிக்குப் பின்னர் அனைத்து மக்களும் அனைத்து வளங்களையும் சரிசமமாக பகிர்ந்து கொண்டு செழிப்பாக வாழ்வதைப் பற்றி அறிகிறார்.
..
அதற்கு காரணமான தலைவர் லெனினைப் பற்றியும் அறிகிறார். சோசலிசத் தத்துவத்தை தன் இலட்சியமாக ஏற்கிறார். காந்தியின் அகிம்சையால் இந்தியா விடுதலை அடைய முடியாது என அவருக்கு புரிகிறது. வெள்ளையர்களுக்கு துணையாக இந்தியாவிலுள்ள பண்ணையார்களும், முதலாளிகளும் இருக்கின்றனர். அவர்களைப் பாதுகாக்க போலீசும், இராணுவமும் உள்ளது. இவற்றை ஒழித்துக்கட்டி சுதந்திர இந்தியாவை உருவாக்க மக்கள் ஆயுதம் ஏந்தி புரட்சியில் ஈடுபட வேண்டும் என முடிவெடுத்தார்.
..
1925-ஆம் ஆண்டு தன்னைப் போன்ற கருத்துடைய இளைஞர்களை ஒன்று திரட்டி ஹிந்துஸ்தான் சோசலிச குடியரசு கட்சி என்ற புரட்சிகர அமைப்பைத் தொடங்குகிறார். விவசாயிகள், தொழிலாளிகளிடையே பிரச்சாரம் செய்து, அவர்களை ஒன்று திரட்டுகிறார். ஆயிதப் போராட்டத்தின் மூலம் இந்தியாவை விடுதலையடையச் செய்வதே அக்கட்சியின் திட்டம்.
..
1928 ஆம் ஆண்டு தேசத் தலைவர் லாலாபஜபதிராயை போலீசார் அடித்து கொன்றனர். நாளுக்கு நாள் வெள்ளையரின் அட்டூழியம் அதிகரித்தது. காந்தியின் அகிம்சையால் ஒன்றும் உருப்படியாக செய்ய முடியவில்லை. மக்கள் என்ன செய்வது என தெரியாமல் தவித்தனர். பத்திரிக்கையோ, பணபலமோ இல்லாததால் பகத்சிங்கால் மக்களிடைய பரவலாக பிரச்சாரம் செய்ய முடியவில்லை.
..
இந்திய மக்கள் அனைவருக்கும் தங்கள் கொள்கைகளைத் தெரிவிப்பதற்கு எதுவாக கைதாகி நீதிமன்றத்தில் இருந்து பிரச்சாரம் செய்ய முடிவு செய்யப்பட்டது. நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்க நாடாளுமன்றத்தின் எவரும் இல்லாத வெற்றிடத்த்தில் குண்டு வீசி பகத்சிங்கும், பதுகேஷ்வர் தத்-தும் கைதாகினர்.
..
எதிர்பார்த்தபடியே பத்திரிக்கைகள் இவ்வழக்கு பற்றி ஏராளமாக எழுதின. நீதிமன்றத்தில் பகத்சிங் பேசிய பேச்சுக்களால் மக்கள் விழிப்படைந்தனர். சிறையிலும் தங்கள் உரிமைகளை பாதுகாக்க பகத்சிங்கும் இதர தோழர்களும் போராடினர். நாடு முழுவதும் சுதந்திர தாகம் கொண்ட இளைஞ்ர்கள் பகத்சிங்கின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டனர். ஒருசில நாட்களிலேயே பகத்சிங் காந்தியை விடப் பெரிய தலைவராக உயர்ந்தார். பகத்சிங்கை விடுதலை செய்யக் கோரி நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதைக் கண்ட ஆங்கிலேய ஏகாதிபத்தியம் பயந்து நடுங்கியது. பகதிங்கால் ஈர்க்கப்பட்ட லட்சக்கணக்கான இளைஞர்கள் புரட்சியில் ஈடுபட்டால் இந்தியா விடுதலையாவதை எவராலும் தடுக்க முடியாது என உணர்ந்தது. அதைத் தடுக்க பகத்சிங்கை கொலை செய்ய முடிவு செய்தது. 1931 மார்ச் 23 ஆம் நாள் பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவை தூக்கிலிட்டு கொன்றது. ஆனால் அவரால் உருவாக்கப்பட்ட இளைஞர் பட்டாளம் தொடர்ந்து போராடியது. ஆயுதப் போராட்டம் வளர்ந்தது. 1947 ஆக 15இல் நம்மை ஆண்ட வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர். இதற்கு காரணமான தோழர் பகத்சிங்கை நாம் ஒருபோதும் மறக்கலாகாது..
வெளியீடு:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
சென்னை