• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 213,941 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

பிரெய்ன்வாஷ்

வைரஸ் காய்ச்சலுக்காக மருத்துவரைப் பார்க்க போயிருந்தேன். கூட்டம் அதிகமாக இருந்ததால் வெளியே நின்று கையிலுள்ள பத்திரிக்கையைப் (புதிய ஜனநாயகம்) புரட்டிக் கொண்டிருந்தேன். பத்திரிக்கையை நோட்டமிட்டபடி அருகில் வந்தார் அந்த மருந்துக் கம்பெனியின் விற்பனைப் பிரதிநிதி. பார்த்தவர் பதட்டத்துடன் பேச ஆரம்பித்தார்.

“என்ன பாஸ்! இது ரொம்ப தீவிரமான கம்யூனிஸ்டு பத்திரிக்கையாச்சே! நக்சலைட்டெல்லாம் சரின்னு எழுதுவாங்களே! எலக்ஷனக் கூட பாய்காட் பண்ணனும்பாங்க!.. இத விரும்பி படிப்பீங்க போல?”

“ஆமாம். உண்மையைத்தானே சொல்றாங்க! நீங்க படிப்பீங்களா?”

“படிச்சிருக்கேன். ஆனா தொடர்ந்து படிக்க மாட்டேன். ரெகுலரா படிச்சோம்னு வச்சிக்குங்க .. அப்படியே நம்மள பிரைன்வாஷ் பண்ணிடுவாங்க!”

“அது என்னங்க.. துணி வாஷ் மாதிரி, பிரைன்வாஷ். அழுக்கா இருந்தா சலவைக்குப் போட வேண்டியதுதானே!”

“ஐ மீன்.. பிரைன்வாஷ்.. மீன்.. எதையாவது ஒன்னச் சொல்லி அவங்க சொல்றதுதான் சரின்னு ஆக்கிடுவாங்க.. நம்மள அவங்க பக்கம் இழுத்துடுவாங்க .. புரியுதா!”

“எங்கயும் போயிடாதீங்க, தொடர்ந்து நிகழ்ச்சியைப் பாருங்கன்னு டி.வி.யுலயும்.. ஏன் உங்க மருந்துக் கம்பெனி முதலாளி வரைக்கும் எதையாவது சொல்லி, பொருளை விக்கறதுக்காக அவங்க பக்கம் நம்மள இழுக்கும்போது.. இந்தச் சுரண்டல் சமுதாய அமைப்பு மாறணும்னு தொழிலாளிங்க கருத்துச் சொன்னா அது தப்பா?”

“பாத்தீங்களா! உடனே தொழிலாளி முதலாளின்னு பேச ஆரம்பிச்சுடுவீங்க.. மனுசன இயல்பா ஃபீல் பண்ணவுடணும் பாஸ்! சும்மா எப்ப பாத்தாலும் “அவன் ஒழிக! இவன் ஒழிக! புரட்சி’ன்னு பேசி பப்ளிக்கை டெர்ரர்ராக்கி .. லைப்ல ஒரு ஜாலியே இல்லாம .. வேஸ்டாயிடும் பாஸ்!”

“உழைக்குற எல்லாரும் அவுங்க தேவைக்கு ஏத்த மாதிரி “இயல்பா’ பணத்தை எடுத்துக்க முதலாளி விடுவானா? தொன்னூறு சதவீதம் பேரை ஜாலியா இருக்க வுடாம, 12, 16 மணிநேரம் வேலை வாங்கி 10 சதவீதம் முதலாளிகள் மொத்த சமூகச்சொத்தையும் சுரண்டிக் கொண்டிருக்கிறார்களே! இது உங்களுக்கு இயல்புக்கு மீறுனதாப் படலையா?”

“பாத்தீங்களா! மெல்ல மெல்லப் பேசி .. என்னையே பிரைன்வாஷ் பண்ணிடுவீங்க .. இதான் கம்யூனிஸ்டு வேலையே!”

“ஏன் நீங்க செய்யலையா? ஏற்கனவேதான் டாக்டர் மருந்து எழுதிக்கிட்டு இருக்காரே! அவரை இயல்பா இருக்கவுடறீங்களா? உங்க கம்பெனி மருந்துகளைக் காட்டி, அதப் பத்தியே பேசிப் பேசி டாக்டரை ஏன் பிரைன்வாஷ் பண்றீங்க? நீங்க முதலாளிக்காக பிரைன்வாஷ் பண்ணலாம்! தொழிலாளிக்காக மட்டும் யாரும் பேசக்கூடாது!? இல்ல!”

“பாஸ்.. என்ன புரிஞ்சுக்காம பேசுறீங்க? இது அட்வான்ஸ் மெடிசின்.. ஜனங்களுக்குத் தேவை.. சும்மா ஏனோ தானோ இல்லை.. பழைய மருந்துகளை விடப் புதுசு. வியாதியை அட்வான்ஸா க்யூர் பண்ணுது! இது தேவை இல்லையா? என்ன சயின்சும் வேணாம்பீங்க போல..”

“அறிவியல் வேண்டாம்னு சொல்லலை.. அதைப் பண்டமாக்கி விக்கிறீங்க நீங்க.. அதை சமூக மாற்றத்திற்கும் பயன்படுத்தலாம்ங்குறோம் நாங்க. இப்ப இருக்குற தனியுடமை, சுரண்டல், சாதி மத ஆதிக்க நோய்களுக்கு, அதை விரட்ட “அட்வான்ஸா’ அரசியல் மட்டும் கூடாதா? அதச் சொன்னா பிரைன் வாஷா!”

“இதாங்க.. உங்கள மாதிரி ஆளுங்க.. அது அதுக்கு ஒரு பதில் சொல்வீங்க.. பாசிட்டிவ்வா திங்க் பண்ணுங்க.. ஏன் நெகட்டிவாவே யோசிக்கிறீங்க.. சும்மா குறையை மட்டுமே பாக்குறீங்க.. எவ்வளவு மாடர்னா லைஃப் வந்துருக்கு.. சயின்ஸ், மருந்து, டெக்னாலஜி.. நாடு எங்கேயோ போயிட்டு இருக்கு! நீங்க என்னடான்னா சும்மா இல்லாததை மட்டுமே சொல்லி .. நீங்களும் டென்சனாகி, ஜனங்களையும் டென்சனாக்கப் பாக்குறீங்க.. இன்னவொன்னு பாஸ்! இந்த கம்யூனிஸ்டு தாட் உள்ளவங்க.. நாங்க சொல்றதுதான் சரின்னு அடுத்தவங்க மேல ஏன் கருத்தைத் திணிக்கிறீங்க ..? இதுவே ஒரு வயலன்ஸ் இல்லையா?”

“சில பேருக்கு நீங்க சொன்ன எல்லா வசதியும் ஏன் இல்லாமல் இருக்குன்னு யோசிக்கறதுக்குப் பதில், இல்லாததைப் பத்திப் பேசுறதே தப்புங்குறீங்களே! இது வயலன்ஸ் இல்லையா? உங்க கருத்துப்படி சயின்ஸ் முன்னேறிய இந்த நாட்டில் வறுமை காரணமாகப் பெத்த பிள்ளைகளைக் கிணற்றில் போட்டு, தானும் தற்கொலை செய்ய முயற்சிக்கின்றாள் ஒரு தாய். நீங்க சொன்னபடி டெக்னாலஜி முன்னேறிய இந்த நாட்டில் இன்னும் மனித மலத்தைக் கையால் அள்ளும்படி வேலை வாங்கப்படறாங்க தாழ்த்தப்பட்ட தொழிலாளிங்க.. இப்படி ஒரு பகுதி உண்மை நிலவரத்தை மறச்சிட்டு நாடு பொதுவா முன்னேறி எங்கோ போயிட்டிருக்குன்னு நீங்க பேசறதுதான், அடுத்தவங்க மேல கருத்தைத் திணிக்கறது, அதுவும் தப்புத் தப்பா!”

“பாத்தீங்களா! நான் சொன்ன மாதிரி இதுபோல பத்திரிக்கைகளைப் படிச்சுப் படிச்சு நீங்களும் அதுவாவே மாறிட்டீங்க! இதெல்லாம் சீரியஸா படிச்சா.. அவ்ளோதான்.. சும்மா சொசைட்டியுல இப்படியும் ஒண்ணு இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு விட்டுடணும் பாஸ்! தொடர்ந்து அதுலேயே நாலெட்ஜெ கொண்டு போனோம்னு வச்சுக்குங்க.. அப்புறம் எதைப் பாத்தாலும் எதிர்க்கச் சொல்லும்.. யாரைப் பார்த்தாலும் இதுதான் சரின்னு பேசச்சொல்லும்! சும்மா சித்தாந்தம் பேசிக்கிட்டு இருந்தா லைஃப்பே போரடிக்கும்.. ஜஸ்ட் வாட்ச் அண்ட லீவ் இட்..!”

“இப்ப நீங்க பேசறது ஒரு சித்தாந்தம் இல்லையா? உன்னை வரைக்கும் பாருங்குறதுதான் முதாலாளித்துவ சித்தாந்தம்.. என்னை சொன்னீங்க.. இப்ப நீங்க அதுவாவே மாறி என் மேல ஏன் உங்க சித்தாந்தத்தைத் திணிக்குறீங்க..? நீங்க திணிச்சா ஜஸ்ட் பேச்சு.. நாங்க பேசுனா திணிப்பு.. என்னங்க உங்க ஜனநாயகம்?”

“ஹலோ நீங்க ஆயிரம் சொல்லுங்க.. உங்கள மாதிரி பேசிக்கிட்டு இருக்குறவங்க ஊருக்கு ஒரு பத்துப் பேரு இருப்பீங்களா? எங்கள மாதிரி உள்ளவங்கதான் மெஜாரிட்டி.. இதுதான் பாஸ் யதார்த்தம்.. சும்மா ஏதாவது கற்பனையாப் பேசாதீங்க.. ஹா.. ஹா..”

“நாட்ல மெஜாரிட்டி நோயாளிங்க; எய்ட்ஸ் பிரபலமா இருக்கு. அதுக்காக அதை ஆதரிக்க முடியுமா? நேர்மையா, கருத்து சரியா தப்பான்னு பேசுங்க. அத வுட்டுட்டு மெஜாரிட்டி, மைனாரிட்டி எதுக்கு?”

“கருத்துன்னு கேட்டா.. நீங்க ஏத்துக்க மாட்டீங்க.. பட் பல இடத்துக்கும் போறதால ஐ நோ த ட்ரூத் வெரிவெல், பாஸ்! இந்த புரட்சி அது இதெல்லாம் எடுபடாது.. ஜனங்க ஏத்துக்க மாட்டாங்க.. நீங்க பேசிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.”

“பாத்தீங்களா! ஜம்ப் ஆகுறீங்களே .. ஜனங்க இருக்கட்டும். நீங்க ஏத்துக்குறீங்களா.. இல்லையா..? அதச் சொல்லுங்க முதல்ல?”

“நோ.. நோ.. எனக்கு இந்த கம்யூனிசம்னாலே அலர்ஜி.. நீங்க சொல்றது சரியாவே இருந்தாலும் நான் ஏத்துக்க மாட்டேன். ஒருநாளும் கம்யூனிஸ்டா மாறவும் மாட்டேன்..”

“ஏன் மாறுனா என்னாகும்?”

“நான் ஏன் கம்யூனிஸ்டா மாறணும் .. எனக்குதான் எல்லா வசதியும் இருக்கே! ஐ ஆம் ஆல்ரெடி செட்டில்ட். ஸோ ஐ டோண்ட் வான்ட் எனி ரிஸ்க்!”

“இப்பதாங்க உள்ளபடியே உங்கள சரியாக அறிமுகப்படுத்திட்டு உண்மையைப் பேசுறீங்க.. உங்க வர்க்கத்துக்கு கம்யூனிசம், புரட்சி தேவையில்லைங்குறதுக்காக.. அதை மத்தவங்களுக்கும் தேவை இல்லைன்னு பேச்சுவாக்குல பிரச்சாரம் பண்றீங்க பாருங்க.. இதுதான் பிரைன்வாஷ்.. அடுத்தவங்க மேல கருத்தத் திணிக்கறது.. இப்ப புரியுதா!”

“பாஸ்! என்ன டென்சனாயிட்டீங்க போல. விட மாட்டேங்குறீங்க.. வரட்டா!.. டார்கெட் பிசினஸ் பாஸ்! டார்கெட் பிசினஸ்.. லேட்டாகுது.. வரட்டா!”

“புரியுது.. புரியுது.. டார்கெட்டோடுதான் இருக்கீங்க ..”

“ஓ! ஐ ஆம் அண்டர்ஸ்டேண்ட்.. பட் ஐ டோண்ட் கேர். ஹா.. ஹா.. ஹா..”

வறட்டுச் சிரிப்புடன் நகர ஆரம்பித்தார்.. வைரஸை நுண்ணோக்கி மூலம்தான் பார்க்க முடியும் என்று அறிவியல் சொல்கின்றது. என் கண்ணிற்கு முன்னால் ஐந்து அடி, இரண்டு சென்டிமீட்டரில் ஒரு வைரஸ் அலட்டிக் கொள்ளாமல் நழுவிச் செல்வதைப் பார்த்து வியந்து நின்றேன்.

· சுடர்விழி

நன்றி : புதிய கலாச்சாரம்

காதலர்களுக்கு…. மரணப்படுக்கையிலிருந்து காவேரி!

1

2

3

4

5
6

7

8

9

10

11

IMG_3450IMG_3451

 

 

 

 

 

03-10-09, நக்கீரன்

உடலுறவின் இன்பத்திற்காவே காதலித்தாக நடித்த இந்த கயவன், காவேரியை அனுபவித்தபின் அவளுடைய தங்கையயும் கேட்கிறான். திருமணம் முன்பு வரை காவேரி அழகில்லை என்று அந்த காமவெறியனுக்கு தெரியாதா என்ன? தெரிந்தும் அவள் தங்கையை அடைய காவேரியை கொல்லவும் தயாராகிறான். ஆகையால் தான், 11 தீக்குச்சிகளை காட்டி மிரட்டியவன், 12 வது தீக்குச்சியில் தன்னுடைய மனைவியையே பொசுக்குகிறான். இது ஏதோ ஆத்திரத்தில் நடந்தது அல்ல.

இந்த மறுகாலனியதிக்க காலத்தில் பாலியியல் வெறியே உண்மையான் காதல் போல், பண்பாட்டுக் கருவிகள் பாலியல் வேட்கையை ஊரெங்கும் இரைத்திருக்கின்றன. பழத்தை புசித்துவிட்டு தோலை எறிந்து விடுவது என்பதே இன்று காதலைப் பற்றி பல இளைஞர்களின் வக்கிரமான கருத்தாக இருக்கிறது. பெண்ணுக்கோ தனது விடலைக்காதலையும் அதன் விளைவையும் மறைக்க முடியாமல்அவளது வாழ்வே கேள்விக்குறியாக மாறுகிறது. அதனால் தான், காவேரி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தன்னுடைய தாயிடம் யாருக்கும் தெரியாமல் நடந்த திருமணத்தை தெரிவிக்கிறாள்.

நமது காதல் தகுதியானதா என்று பரிசீலிப்பதற்கு கவலைப்படாத காதலர்கள் காமத்தை பகிர்ந்து கொள்வதற்கும் மட்டும் அவசரப்படுகிறார்கள். இந்த அவசரப்படுதலில் ஆணை விடபெண்ணுக்கு அபாயங்கள் அதிகமென்றாலும் அவள் அதைப்பற்றையும் கவலைப்படுவதில்லை.

அவசரகதியில் முடிவுசெய்ய, காதல் என்பது சந்தையில் விற்கப்படும் பொருள் அல்ல. உலக வாழ்க்கையையும், சமூகத்தையும் புரிந்து கொண்ட பின்னர், வாழ்க்கையில் தன் வாழ்க்கை துணையை தெரிவு செய்யுங்கள். இதே விதி பெண்களுக்கு இன்னும் பல மடங்கு அதிகம். இந்தக் காலத்தில் காதல் ஏற்படுவது ஒன்றும் முற்போக்கல்ல, அதன் சமூகத்தரமே நம் கவலைக்குரியது. அன்றாடம் கொல்லப்படும் காதல்பெண்களின் கதைகள் நமது தரம் மிகவும் இழிவாக இருப்பதையே எடுத்துச் சொல்கிறது.

 

தொடர்புடைய பதிவு: காதல்: நேசிக்குமா, கொலை செய்யுமா?

தீபாவளி – படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை

IMG_3438
IMG_3439

பெரியார், தன் வாழ்நாளில் பெரும் பகுதியை பார்ப்பன மாயையை திரைகிழித்து வந்தார். ஆனால், பெரியாருக்கு மறைவுக்கு பின் திக – வோ வீரமணி & கோ – வாக மாறிவிட்டது (மாற்றப்பட்டது). ஆனாலும், இதுமாதிரி பிரசுரங்களை, அவ்வப்போது அரிப்புக்கு சொரிந்து விட்டுக்கொள்வதக்குகாக திக வெளியிடுகிறது.

இந்த பிரசுரத்தின் உள்ளடக்கத்தின் முக்கியத்துவம் கருதி இந்த வலைப்பூவில் வெளியிடப்பட்டுள்ளது.

பெண்ணை விடுதலையாக்கும் புரட்சிகர திருமணத்துக்கு தடை !!

puka copy

பெண்ணை  முப்பத்து முக்கோடி தேவருக்கு வைப்பாட்டியாக்கும்
பார்ப்பனீய திருமணத்துக்கு பூங்கொத்து !

பெண்ணை விடுதலையாக்கும் புரட்சிகர திருமணத்துக்கு  தடை !!

பார்ப்பன பரிவாரங்களின் வாலாக மாறிய காவல் துறை !!!


ஆந்திராவில் 40 நாளில் 21 விவசாயிகள் தற்கொலை – போலி சுதந்திரதின கொண்டாட்டம் தேவையா?

“எந்த ஒரு நாடு தன்னுடைய விவசாயிகள் தற்கொலை செய்வதை கண்டுகொள்ளவில்லையோ, அந்நாடு பட்டினி என்ற கொடுங்சித்தரவதைக்கு தயார் ஆகிவிட்டது என்று அர்த்தம்.”

———————————————————————————

ஆந்திர மாநிலம் தெலுங்கானா மற்றும் ராயலசீமா பகுதியில் பருவ மழையும் பொய்த்தது. மழையை நம்பி விவசாயம் செய்த விவசாயிகள் பலத்த ஏமாற்றமடைந்தனர். சிலர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த 40 நாளில் 21 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டோன்சந்தா கிராமத்தை சேர்ந்த ஞீமண்ணா என்ற விவசாயி தூக்கில் தொங்கினார்.

விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை ஆந்திர மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டியும் ஒப்புக் கொண்டுள்ளார். அனந்தஞீர் மாவட்டத்தில் 11 பேரும், அடில்லாபாத்தில் 4 பேரும், வாராங்கல் பகுதியில் 3 பேரும், மேடக் மாவட்டத்தில் 2 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது (தினபூமி, 17/08/2009).

———————————————————————————————–

இது விவசாயிகளின் முதல் தற்கொலை அல்லவே. கடந்த 10 வருடங்களில் இரண்டு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

ஏன் இந்த தற்கொலைகள்?

எப்போது இருத்து தனியார்மயம்- தாராளமயம் – உலகமயம் முழு விச்சில் நடைமுறைப்படுத்தபட்டதோ, அப்போதிருந்து விவசாயிகள் படும் கஷ்டம் ஒன்றா? இரண்டா?

அதிக விலையில் உரம், மருந்து, விதைகள்…

தேவையோ பணம்…

வழியோ அதிக வட்டி கடன்…

ஆனால் விவசாய விளைபொருளின் விலையோ பிச்சைகாசு…

இப்போது சொல்லுங்கள், ஏன் இத்தனை வருடங்கள் அரசு இரண்டு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்தும் கண்டுகொள்ளவில்லை?

நீங்கள் கொண்டடுவது உண்மையா சுதந்திரம் என்றால் ஏன் இத்தனை தற்கொலைகள்?

ஏன், அந்த விவசாயிகள் இந்தியாவை சேர்ந்தவர்கள் இல்லையா?

நாட்டிக்கே சோறு போடும் விவசாயிகளுக்கு இந்த நிலைமை என்றால் நாளை இந்தியாவின் நிலைமை என்ன?

தேச பக்தி என்றால் கிரிக்கெட்டுக்கு அடிமை – கிரிக்கெட் என்றால் சூதாட்டம்…

முதலாளிதுவ அறிவுஜீவிகளுக்கு, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கு தேச பக்தி என்றால் கிரிக்கெட்டுக்கு அடிமை ஆவது என்பதுதான் அர்த்தம். கிரிக்கெட் விளையாட்டு என்பது ரசிக்க தான், அதை விமர்சிக்க கூடாது என்று சொல்லி கிரிக்கெட் விளையாட்டில் நடைபெறும் அக்கிரமங்களை பற்றியே பேசவிடமாட்டார்கள்.

ஆனாலும், அடிக்கடி கிரிக்கெட்டில் நடைபெறும் சூதாட்டம் வெளியே வந்து சந்தை சிரித்துக் கொண்டு தான் இருக்கிறது. இப்போது வெளியே வந்துள்ள சூதாட்ட புயல் இதுதான். தற்போது இலங்கையில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் தான் இந்த சூதாட்ட புயல் கிளம்பியுள்ளது.

இந்திய கிரிக்கெட் சூதாட்டகாரர்கள் பாகிஸ்தான் வீரர்களை தற்போது நடைபெறும் இலங்கை டெஸ்ட் தொடரில் அணுகியுள்ளார் என்று, சல்மான் அஹ்மத் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் புகார் அளித்துள்ளனர் (http://timesofindia.indiatimes.com/SPORTS/Cricket/Top-Stories/Indian-bookies-did-approach-Pakistan-players-in-Sri-Lanka/articleshow/4861435.cms).

உடனே நம்ம முதலாளிதுவ அறிவுஜீவிகள் , நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் இது பொய் குற்றசாட்டு என்று சொல்லிக்கொண்டு வந்துவிடுவார்கள்.

உண்மையிலேயே, கிரிக்கெட்டில் சூதாட்டம் நடை பெறுவதே இல்லையா? அப்படி இல்லையென்றால் ஏன் அடிகடி கிரிக்கெட்டில் நடைபெறும் சூதாட்டம் வெளியே வருகிறது?

கிரிக்கெட் என்றாலே சூதாட்டம் தான். அதை ஒத்துகொள்ள மறுப்பது ஏன்?

பி. கு.: இப்பதிவுக்கு தொடர்புடைய பதிவு வினவு தளத்தில் இருந்து (http://vinavu.wordpress.com/2008/08/16/184/).