• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,814 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

நீ தான் ஆசிரியன் – கவிதை

நீ தான் ஆசிரியன்

பருவத்தேர்வுகள்
நெருங்கிவிட்டது போலிருக்கிறது
படித்துக்கொண்டிருக்கிறாய்
பார்க்கும் போதெல்லாம்
தொலைபேசியில் கேட்கும் போதெல்லாம்……

தலையில் தட்டி குட்டி
இரவு முழுக்க விழுந்து விழுந்து
எதைப்படித்துக்கொண்டிருக்கிறாய்

?
புரியாததை புரிய வைக்க உன்னுள்
எத்தனைப் போராட்டம்
தெரியாததை தெரியவைக்க
எத்தனை விழிப்புக்கள்……எதைப்புரிந்து கொண்டாய்?
எதைத் தெரிந்து கொண்டாய்?
ஆனாலும் கண்டிப்பாய்
நீ தேர்வாகிவிடுவாய்
மக்களைப் புரியாமலும்
தெரியாமலும்
இருக்கத்தானே தேர்வுகள்……

I=V/R
இது ஓம்ஸ் விதி
இன்னும் எத்தனை விதிகள்
எதை மாற்ற? எதை உருவாக்க?
மின்சாரத்தின் அலகினை
அளக்க முற்படும் நீ
என்றாவது நம் பொருளாதார அலகினை
பற்றி நினைத்திருக்கிறாயா?

அரிசி விலையும்
பருப்பு விலையும் எதனால்
ஏறுகிறதென்று தெரியாமல்
எதைப் படிக்கிறாய்?

மருத்துவம்,பொறியியல்
அறிவியல்……..
காய்ந்து போன நிலங்கள்
மூடிக்கிடக்கும் ஆலைகள்
சுருண்டு போன நெசவாளிகள்
எந்தப்படிப்பு வந்து இதை
மாற்றப்போகிறது?

பார்ப்பனீயத்தின் தேர்வுகள்
குத்திக்கிழிக்கின்றன
பறையனென்றும் சூத்திரனென்றும்
முதலாளித்துவம்
கடைசி பென்ச்-ல் உட்காரவைத்து விட்டது
உழைக்கும் மக்களை……

நீ டாக்டர் ஆனாலும் என்ஜினியர் ஆனாலும்
ஏன் அந்த கலக்டரே ஆனாலும்
இதை மாற்ற முடியுமா என்ன ?
உன் வாழ்வுக்கு
இம்மியளவும் பயன்படாத படிப்புதான்
உனக்கு மதிப்பு கொடுக்கப்போகிறதா?

படி நன்றாகப்படி
முதலில் உன்னைப்படி
இந்த உலகைப்படி
உழைக்கும் மக்களைப்படி
அவர்கள் தான் ஆசிரியர்கள்
அங்கிருந்து கற்போம்
புரிந்ததை உனக்கு தெரிந்ததை
பற்றி கற்போம்- வேலையில்லா
திண்டாட்டம் இங்கில்லை……

போராட்டத்தில்
ஓய்வுக்கு இடமில்லை
உன் விளங்காத படிப்பையும்
விளங்க வைக்க “புதிய ஜனநாயகத்தையும்”
சேர்த்துப்படி
இனி நீ விளக்கு
மற்றவர்களுக்கு நீ தான் ஆசிரியன்.

-கலகம்

முதல் பதிவு: கலகம்

தொடர்புடைய பதிவுகள்:

வினவு – தேர்வு: ‘காப்பி’ அடித்தால் தப்பா? ஒரு அனுபவம் !!

கனவு காண சொன்னாரு.. கலாம் சொன்னாரு…!

விளங்காத படிப்பும்-விளங்கவைக்கும் அரசியலும்

மழையைப் பார்ப்பது போன்றதல்ல மழையில் நனைந்து கிடப்பது!

சன்னல்

 

தூரல்

 

மிகப் பாதுகாப்பான சன்னல்

குளிருக்கு இதமாய் சிகரெட்

 

நடேசன் தெரு முக்கிலிருக்கும்

நடைபாதை வாசிகள்

இந்நேரம்

எந்தப் பக்கம் ஓடியிருப்பார்கள்

அடுப்புகளை அணையவிட்டு

 

கொண்டைக் காலளவு

முழங்காலளவு

எத்தனை வீடுகள்

உறக்கமிழக்கும்

 

கால் நரம்புகள் விடைக்க

அழுத்திப் போகின்ற

டிரைசைக்கிள்காரருக்கு

இன்று கூடுதலாய் ஒரு கிளாஸ்

தேவைப்படலாம்

 

ஒதுங்க வாய்ப்பற்ற

பாரவண்டி மாடுகளின்

கழுத்துப் புண்ணும்,சாட்டையும்

உறுத்துகிறது என்னை

 

டீக்கடைகளில் நின்று நின்று

கையேந்துகிற பெண்ணை

விரட்டுகிற குரல்கள்…

நனைந்து நாறும்

குப்பை மேட்டிற்குள்

காகிதம் தேடும்

கோணிப்பை சிறுமி….

 

எல்லாவற்றையும் ஏற்கும்படி

உறுத்தலற்றதாகிவிட்டது

வாழ்க்கை

 

பாதுகாப்பான சன்னல்

சிகரெட் தீர்ந்துவிட்டது

 

தூங்கப் போகுமுன் தோன்றுகிறது

மழையைப் பார்ப்பது

போன்றதல்ல

மழையில் நனைந்து கிடப்பது

 

-ராசன்

நன்றி புதிய கலாச்சாரம் மார்ச் 2009

இளந்தமிழகத்தின் எழுச்சியே வருக…வருக…! துரை.சண்முகம்

தனியார் பள்ளிகள் அனைத்தையும் அரசுடைமையாக்க கோரி ஜூன் 28 அன்று டிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்ட  புமாஇமு தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல் நடத்தி  250 பேர் மேற்பட்டவர்கள் கைது செய்தது.அதில் பெண்கள், குழந்தைகள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 74 க்கும் மேற்பட்ட தோழர்களை ரிமெண்டு செய்து சிறையில் அடைத்தது போலீசு. கடந்த  ஒரு வாரமாக சிறையிலிருந்த தோழர்கள் நேற்று ஜாமீனில் விடுதலையாகி வெளி வந்தனர். அந்த தோழர்களை வரவேற்கும் விதமாக தோழர் துரை.சண்முகம் எழுதிய கவிதை இதோ…

*******************

இளந்தமிழகத்தின்
எழுச்சியே வருக…வருக…

தற்காலிகச் சிறையிலிருந்து
தோழர்கள் விடுதலை!
தமிழகத்தை
தனியார்மயச் சிறையிலிருந்து விடுவிக்க
பு.மா.இ.மு. வே நீதான் தலை!

அடைமழையில் நனைந்தாலும்
அல்லி நிறம் மாறாது,
கொடுவெயில் கொளுத்தினாலும்
கொன்றை மணம் போகாது
அடக்குமுறை எத்தனை அழுத்தினாலும்
பு.மா.இ.மு. அடங்காது!
இலக்காம்கல்வி உரிமையினை
அடையும் வரை,
இந்த இளமை எதற்கும் மயங்காது!
அரசியல் உரம் சேர்த்த தோழர்களே,
உங்கள் திறம் வியந்து
தமிழகமே உங்களை என்றும் மறவாது!

குடும்பத்தின் பாரத்தை
தலைப்பிள்ளையே தாங்காமல்
நழுவுகின்ற காலத்தில்,
சமூகத்தின் பாரத்தை
சளைக்காமல் தாங்கித் தகர்க்க
தானே முன்வந்த
வர்க்கத்தின் வாரிசுகளே,
கல்வி உரிமை பெறும் பிள்ளைகளின்
நா பழக நாளை,
நீங்களே முதலெழுத்தும், உயிரெழுத்தும்.

பலநாள் ஊதியமிழந்து
சிலநாள் வகுப்பறையிழந்து
நேசமுள்ள குடும்ப உறவுகளின்
முரண் சுவை கலைந்து,
அரைவயிறு உணவில் சேமித்த உடல்வழுவை
முறையற்ற போலீசோடு முட்டியதில் இழந்து,
அனைத்திற்கும் மேலாக அன்றாடம்
பஸ்சிலும், ரயிலிலும் பிரச்சாரத்தால்
பரிவுடன் பார்க்கும் மக்களின்
விழித்துணை இழந்து,
பாசமுள்ள தோழமையின் வேலைமுறை
கூட்டுணர்வின் சுகமிழந்து

சிறைப்பட்டு மீண்டு வரும் சிம்புட் பறவைகளே…
வானத்து நிலவிலும் விண்மீன்களிலும்
உங்களை வரவேற்கும் வசீகரிப்பு!

சட்டத்தின் வெளிக்குத்தும்
போலீசின் உள்குத்தும்
புண்பட்ட உங்கள் உடலுக்கு
மறுகாலனியத்தை பொடியாக்கி
மருந்து செய்ய வேண்டியுள்ளதால்
தோழர்களே…
தமிழகத்தின் முழுக்கரத்தையும்
பலமாக திரட்டுவதற்கு
மீண்டும் மீண்டும்
வேலை… வேலை… வேலைதான்
உங்களை வேண்டி வரவேற்கும் பூரிப்பு!

-துரை. சண்முகம்.

தொடர்புடைய பதிவுகள்:

பத்மா சேஷாத்திரியை விட புழல் சிறை மோசமானதில்லை!

அப்துல் கலாம் வாயிலிருந்து ஆறாயிரம் மெகாவாட்

12.2.2012 அன்று சென்னை லயோலா கல்லூரியில் அணுசக்திக்கு எதிரான பெண்கள் போராட்டக்குழு சார்பில் நடைபெற்ற கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை.

___________________________

வன் கொடுப்பதை குடிக்க வேண்டும்,
அவன் தருவதை படிக்க வேண்டும்,
நம் தினச்சாவு கூட – இனி
அணுச்சாவாகவே அமைய வேண்டும்
எனும் அமெரிக்க திமிரின்
ஆதிக்க குறியீடே,
கூடங்குளம் அணு உலை !

போராடும் தமிழகத்தின்
ஒரு பகுதியாக இக்கவியரங்கம்…
அனைவர்க்கும் வணக்கங்கள்.

***

டிந்தகரை உணர்ச்சிகள்
ஒரு கவிதைக்குள் அடங்குமா ?
தெக்கத்தி உப்புக்காற்றில்
புதைந்திருக்கும் போர்க்குணங்கள்
திக்கற்ற அறிவாளிகளின்
தோலில் வந்து உரைக்குமா ?

கொலைவெறிக்கு இரையான காதுகள்
அணுவெறிக்கும் இசையுமென்ற
ஆளும் வர்க்க ஏளனத்தை,
கலைத்தெறியும் பெரும் பணிக்கு
கலைப்பணிகள் துணை சேர்ப்போம் !

போராடும் மக்களின்
உணர்ச்சிகர உண்மைகளை – நாடெங்கும்
வேரோடச் செய்வதற்கு வேண்டும்
நிறைந்த கவிதைகளும்,
நிறைய களப்பணியும்.

க்கத்து மனிதரிடம்
தெக்கத்தி கதை சொல்வோம்..
புன்னையும் புலி நகக்கொன்றையும்
தென்னையும், வழிகாட்டும் பனையும்
பால்வடி மாரோடு எங்கள் அன்னையும்,

உன்னையும் என்னையும் காக்க
உண்ணா நிலையிருக்கும் உண்மையும்,

ப.சிதம்பரம், நாராயணசாமி, கலாமின்
பாசம் படிந்த உதடுகளில்
வழுக்கி விழுந்தவர்கள் உணரும்படி,
பக்கத்து மனிதரிடம்
தெக்கத்தி கதை சொல்வோம் !

கரத்து பிட்சா காடுகளில்
நாகரீக மேய்ச்சலிருப்போரே,
உங்களுக்கும் சேர்த்து தான்
இடிந்தகரை பட்டினிப்போரில்
காய்ந்து கிடக்கிறது
ஒரு தாயின் கருவறை.

நான் வேறு சாதியென்று
நழுவ முடியாது நீ !
பன்னாட்டு கம்பெனிகளின்
அணுக்கழிவுகள்
திண்ணியத்து மலமாய்
திணிக்கப்படுகிறது உனது வாயில் !

கெடுநிலை மத்தியில்
நடுநிலை இல்லை !
இரண்டிலொன்று –
இடிந்தகரை பக்கம் வந்தால்
நீ மனிதனாகலாம்,
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பக்கம் போனால்
காங்கிரசு மிருகமாகலாம் !

பொய்கள் ரதமேறி
புறப்பட்டுவிட்டன,
உண்மைகள் ஊரடங்கி கிடப்பதுவோ ?

இனி.. கவிதைகள்
அரங்கினில் மட்டும் போதாது,
காங்கிரசு பி.ஜே.பி
சிரம்களில் செலுத்தப்பட வேண்டும் !

றிந்து கொள்வோம் !
அபாயம்
அணு உலை மட்டுமல்ல,
அதனை கொண்டுவரும் அரசியல்…
ஆதரிக்கும் கட்சிகள்…

காங்கிரசும் – பா.ஜ.கவும்
ஏகாதிபத்திய இதழ் வழியும் எச்சில்கள் !
கைராட்டையாலேயே
நூல் விட்டவர் காந்தி,
நாட்டை காட்டிக்கொடுக்க
கண்ணாலேயே
நூல் விடுபவர்
மன்மோகன்சிங் !

நேரு, குழந்தைகளுக்குத்தான் மாமா,
மன்மோகனோ
இந்த குவலயத்திற்கே மாமா !
அமெரிக்க அடிமைத்தனத்தில்
அத்வானியும், மோடியும்
பன்னாட்டு கம்பெனி வேள்விக்கு
வில் பிடிக்கும் ராமா !

கனிமொழி ஆபத்தை
காப்பதே பெரும்பாடு !
அணு உலை பாதிப்பில்
அழியட்டும் தமிழ்நாடு
இது கருணாநிதி தமிழனின் நிலைப்பாடு !

ரொம்பவும் நோண்டிக்கேட்டால் நோ கமெண்ட்ஸ் !

அறிவிக்கப்படாத மின்வெட்டால்
அணு உலைக்கு ஆதரவாய்
பொதுக்கருத்தை உருவாக்க
ஜெயலலிதா ஏற்பாடு !
அன்னிய மூலதனத்தில்
கனக்குது அம்மாவின் மடிசாரு !

எழுந்து நீ போராடு !
இல்லையேல் சுடுகாடு !
கோக்கடித்தாலும் விடாது
அமெரிக்கா சாகடிக்கும்,
நீ.. ஆதரித்தாலும்
அணு உலை உன்னையும் கொல்லும் !

ஈழத்தமிழனுக்கு.. முள்ளிவாய்க்கால் !
இந்தியத்தமிழனுக்கு.. கூடங்குளம் !
மேலாதிக்க அடையாளங்கள் வேறு,
நோக்கம் ஒன்று.

த்துக்கொள்ளாத ஈராக்குக்கு
குண்டுவீச்சு !
ஒத்துக்கொண்ட இந்தியாவுக்கு
கதிர் வீச்சு !
உதவாது வெறும் வாய்ப்பேச்சு..

மவுனம் காத்தால் –

தலைமுறைகளின் சினைமுட்டையில்
அணுக்கரு வளரும்
தாயின் மார்பிலும் அணுக்கதிர் சுரக்கும்
அதையும் குடிக்க எத்தனித்து
உதடுகள் பிளந்த குழந்தை அலறும்
பிதுங்கிய விழிகளில் ப்ளூட்டோனியம் வழியும்.
தன்னிறம் மாறும்

புல்லினம் பார்த்து
தாழப் பறக்கும் பறவைகள்
இறக்கைகள் அடித்து குழறும்.
நிலத்தடி நீரும்… நெல்மணி குணமும்
தென்கடல் உப்பும்… தென்றல் காற்றும்
கடைசியில் நஞ்சாய் போய் முடியும்.

சம்மதித்தால் –

அப்துல் கலாம்
கனவு கண்ட இந்தியா
உன்னில் புற்று நோயாய் வளரும்
மன்மோகன்சிங்
நாட்டை முன்னேற்றும் திசையில்
தைராய்டு தசைப் பிண்டம் அசையும்.

அனுமதித்தால் –

அணு உலையும் அணு சார்ந்த படுகொலையும்
நெய்தல் திணையின்
முதல் பொருளாய் மாறிவிடும்.
அய்வகை நிலமும்
அணுக்கழிவின் பிணமுகமாய் ஆகிவிடும்.

இவ்வளவுக்கும் பிறகு –
நம் இழவெடுத்த மின்சாரம்
பன்னாட்டு கம்பெனிகளுக்கு,
இந்தியனாய் இருந்ததற்கு
அணுமின் மயானம் தமிழகத்திற்கு !

செர்நோபில், புகுஷிமா அணுக்கசிவில்
சிதைந்தொழிந்த முகங்களில்
பிழைத்திருக்கும் உண்மைகளை பார்த்து
உலகமே தெளிவுபெறும் வேளையில்
புதுச்சேரியில் போட்ட சரக்கு
தில்லிக்கு போயும் தெளியவில்லை நாராயணசாமிக்கு !

”அணு உலை.. யாரையும்… ஒன்னுமே செய்யாதாம் !
காசை கொட்டிய வேலை வீணாகிவிடுமாம் !”

கட்டிய அணு உலை வீணாகக் கூடாதென்றால்
கொட்டி மூடுங்கள் அதில் காங்கிரசு கழிவுகளை.

பார்ப்பன மனு உலைக்கும் காவல்
பன்னாட்டு அணு உலைக்கும் காவல்
தோரியமும் ஆரியமும் கலந்த

வீரியக் கலவை அப்துல் கலாமும்
‘அணுவுக்கு அஞ்சினால் கனவு நடக்குமா ?’
வாருங்கள் கனவு காணுவோம்
‘முதலில் கண்ணை மூடுவோம்’ என்கிறார்.

பொய்யிலிருந்து
மின்சாரம் தயாரிக்கும்
புதுவழி ஒன்றிருந்தால்
நாராயணசாமி வாயிலிருந்தே
நாலாயிரம் மெகாவாட்டும்
அப்துகலாம் வாயிலிருந்து
ஆராயிரம் மெகாவாட்டும்
தமிழகத்திற்கு கிடைக்கும்.

அன்றாடம் இவர்கள்

அவிழ்க்கும் பொய்கள்
அணுவுக்கே அடுக்காது…
அணுக்கழிவே சகிக்காது.

ளர்ச்சி என்பதற்காய்
புற்று நோயை ஏற்க முடியுமா ?
அறிவியல் சுகம் அடைவதற்காய்

மின்சாரத்தை முத்தமிட முடியுமா ?

பாதுகாப்பான முல்லைப் பெரியாறை
பாதுகாப்பற்றதென்றும்
பாதிப்பான அணு உலையை பாதுகாப்பென்றும்
திரிக்கும் தேசிய பொய்யர்கள்
திசையெங்கும்… ஜாக்கிரதை !
அணு உலைகளை விடவும் ஆபத்தானவை
இந்த அயோக்கியர்களின் வாய்கள்.

த்தாம் பசலிகளாம் நாம்
ப.சிதம்பரம் கேட்கிறார்.
“உங்களுக்கு மின்சாரம் வேண்டுமா ?
வேண்டாமா ?
மாண்புமிகு மத்திய அமைச்சரே
கொஞ்சம் பொறுங்கள்,
எங்கள் மாட்டிடம் கேட்டுவந்து
மறுபடியும் பதில் சொல்கிறேன்…

புல்லினமும், பூ வனமும்
கல்லினமும், கடலினமும்
எம் தமிழின் மெல்லினமும்
இடையினமும், வல்லினமும்

உழைக்கும் மக்களின் சொல்லினமும்,
தொடுவானம் தொடங்கி
கடலாழம் வரைக்கும்
பல்லுயிரினமும் சேர்ந்ததெங்கள் நாடு !

நீங்கள் நாட்டை முன்னேற்ற
நாங்கள் காட்டை இழந்தோம்..

நீங்கள் தொழிலை முன்னேற்ற

எங்கள் வயலை இழந்தோம்..
எங்கள் காற்றை இழந்துவிட்டு
உங்களிடம் ஏ.சி வாங்கவேண்டும்..

எங்கள் ஆற்றை அள்ளிக் கொடுத்துவிட்டு
உங்களிடம் ‘கின்லே’ ’பெப்சி’ வாங்கவேண்டும்..
எங்கள் கடலை இழந்துவிட்டு உங்களிடம்
உப்பு வாங்கவேண்டும்..
எங்கள் மகரந்தங்களை இழந்துவிட்டு
மானியத்தில் உங்களிடம்
சாம்பல் வாங்கவேண்டும்..

முதலாளித்துவ லாபவெறிக்கு
மொத்த இயற்கையையும்
இழந்த பிறகு தான்,
நாங்கள், செத்துப்போனதே
எங்களுக்கு தெரிய வந்தது !

மழை முடிந்தபின்
இலை சொட்டும் ஓசைகளைக் கேட்கவியலாமல்,
மரங்களை இழந்த எங்களை
நகரத்துக் கொசுக்கள்
காதோரம் வந்து கண்டபடி ஏசுகிறது !

குடியிருப்பின்
இறுக்கம் தாளாமல்
குடும்பத்தையே திட்டித்தீர்த்து
தீண்டப்பயந்து
வெறுத்து வெளியேறுகிறது தேள் !

வந்தமர மலரின்றி
வெறுமையில்,
தேடிக்களைத்த வண்ணத்துப்பூச்சி
எங்கள் இயலாமை பார்வை மீது
கண்டனம் பொழிகிறது வண்ணங்களை !

நம்பி ஒப்படைத்த,
ஊருணி, குளங்கள்,
ஆறு, ஏரியைக்
காப்பாற்ற வக்கில்லாத என்மேல்,
காக்கை எச்சமிடுகிறது !

தருவேன் என்ற நம்பிக்கையில்
வாசலில் வந்து மாடு கத்துகிறது,
ஒரு வாய்
தண்ணி தர இயலாமல்
கூனி குறுகுகிறேன் நான் !

வாழையும்… தாழையும்
உப்பும் மீனும், கடலும் கலனும்
செருந்தி மரத்தில் பொருந்தி வாழும்
பூச்சியும்.. எறும்பும்
கேட்கும் கேள்விகளுக்கு

என்னிடம் பதிலில்லை !

மாடு மடி நனைய.. நீரில்லை,
தும்பி குடிக்க தேனில்லை,
வண்டு படுக்க வளமான மண்ணில்லை,
கொண்டு வாராணாம் அணு உலை !
இயற்கையையே கொளுத்தி
எவனுக்கு வெளிச்சம் !

மின்சாரம்,
வேண்டுமா ? வேண்டாமா ?
எனக்கேட்ட அமைச்சர் அவர்களே,
உங்கள் அணுத்திமிர் பார்த்து
அஃறினைகளும் கேட்கின்றன,
“நீங்கள் சொல்லுங்கள் –
உங்களுக்கு இந்தியா வேண்டுமா ?
வேண்டாமா ?

______________________________________________________

– துரை.சண்முகம்

முதல் பதிவு: வினவு

தொடர்புடைய பதிவுகள்:

மீண்டும் நண்பனுக்கு ஒரு கடிதம்!

என் அன்புள்ள நண்பனே,
ஈராண்டுகளுக்குப்பின் உனை
மீண்டும் சந்திக்கிறேன்
இதோ இப்போது அதே
புரட்சி நாளில்……
 
அன்றும் இன்றும்
எத்தனையோ
எவ்வளவோ மாறிவிட்டன
சொன்னால் நம்ப மாட்டாய்
கண்டிப்பாக நீயும் நானும் கூட
மாறித்தான் போயிருக்கிறோம்….
 
“நீ பேசுற பேச்சுக்கு ஜெயிலுக்குத்தான்
போவ – உனக்கு களி திங்குற காலம் வந்திடுச்சு”
கடவுள் மேல் எனக்கு நம்பிக்கையில்லை
ஆனால் உன் வாக்கு
பலித்துவிட்ட்து நண்பா!
ஒரு வேளை நீ வசிட்டன் ஆகிவிட்டாய்யா என்ன?
 
நீ கூறியது போல
சிறைக்கும் சென்று விட்டேன்
ஆனால் இப்போதங்கே களி தருவதில்லை
காய்ந்து போன சோற்றை தான் தருகிறார்கள்….
 
சிறை என்றவுடன்
நீ முகஞ்சுளிப்பதும்- உன்
நியாயத்தராசில் அதல பாதாளத்தில்
நான் நிற்பதையும் உணர்கிறேன்…..
 
உனக்குத் தெரியாது
உன் தாராசினை நீ இயக்குவதில்லை
ஆனால்
நான் பெருமையாயிருக்கிறேன்
யார் தாலியறுத்தும் நாங்கள்
சிறை செல்லவில்லை – ஊர்
தாலியறுத்த பொன்மனச்செல்வியின்
பொற்கால ஆட்சியல்லவா இது….
 
எப்படி எங்களால் அமைதியாயிருக்க முடியும்?
1 ½ கோடி மாணவர்களின்
கல்வியுரிமை பறிபோன பின்னும்
அமைதியாயிருக்கச்சொல்கிறாயா என்ன?
 
LKG-யில் தன்பிள்ளையை
சேர்க்க முடியாமல் செத்துப்போன
சங்கிதாவின்
ஆவியென்னை உசுப்பியது
 
என்னால் நிம்மதியாய்
உறங்க முடியவில்லை
ஆனால் நிம்மதியாய்
உறங்கினேன் சிறையில்
என்பதை நீ அறிவாயா?
 
மற்றகைதிகளின் மத்தியில்
கம்பீரமாக நடந்து சென்ற
அந்த மகிழ்ச்சியும்
மக்களுக்கான எமது போராட்டத்தால்
விறைப்பான காவல்துறை கூட
கண்ணீர் கசிந்ததும்
ஏனென உனக்கு புரிகிறதா?
 
சரி
என் அன்பு நண்பனே!
மீண்டும் தொடங்கிவிட்ட்து பேயாட்சி,
நான் விடை பெறுகிறேன்.
 
இதைப்படித்துக் கொண்டிருக்க்கையில்
நான் தெருவில் இருப்பேன்
தனியாக அல்ல
உழைக்கும் மக்களின் விடுதலைக்காக
உயிரையேத்தரும்
எமது தோழர்களுடன்.
 
அன்புடன்
உன் நண்பன்.
 
– திப்பு

ஓ ! நக்சல்பரி …

 

 

 

ஓ !  நக்சல்பரி …

எங்கள் காடுகள் பூத்தாய்
காற்றினில் சிலிர்த்தாய்
வயல்வெளி வியர்த்தாய்
மலைகளில் வீசினாய்
நதிகளில் கலந்தாய்
எங்கள் மண்ணின் உவப்பே நக்சல்பரி !

 

 
எங்கள் கைகளில் சிவந்தாய்
கண்களில் வழிந்தாய்
உதிரம் பெருகினாய்
இதயம் நிறைந்தாய் நக்சல்பரி !

 
எங்கும் எதிலும்
பொங்கும் பொலிவே நக்சல்பரி !
ஓ ! நக்சல்பரி…

 

 

– துரை.சண்முகம்

மவுனம்

மவுனம்pesu copy

நான் இப்போதேதும்
பேசப்போவதில்லை பேசுவதற்கு
என்னிடம் வார்த்தைகள் இருக்கின்றன
ஆனாலும் நான் இப்போது
பேசப்போவதில்லை மவுனமாயிருக்கிறேன்…….

நான் பேசாமலிருப்பது
பலருக்கும் மகிழ்ச்சியைத்
தரலாம்
பேசாமலிருப்பது கோழைத்தனமாம்
பேசவிடாமல் செய்வது வீரமாம்
நான் கோழையாகவே
இருந்து விட்டுப் போகிறேன்
ஆனால் அது நிரந்தரமல்ல…….

படிப்பிற்காக வேலைக்காக
நான்  செல்லும் இடங்களிலெல்லாம்
பதவியும் பணமும்
என்னை பேசாமலிருக்கச்செய்து விட்டன

நான் மறுத்தாலும்
ஊருக்குள் சென்றதும் என் காலணிகள்
தானாய் கக்கத்தில் ஏறுகின்றன
தேனீர்க்கடைகள் என்னை
பிளாஸ்டிக் டம்ளர்களோடு
வரவேற்கின்றன

என் துயரங்கள் வேதனைகள்
எல்லாம் நினைவலைகளாய்
என்னுள் ததும்பிக்கொண்டிருக்கின்றன
எல்லாம் உள்ளே வெடித்துக்
குமுறிக்கொண்டிருக்கின்றன
பயமாய் இருக்கின்றது
எங்காவது தப்பித்தவறி
பேசிவிடுவோமோ என்று…….

என்னதான் முயன்றாலும் முடிவதில்லை
சில நேரம் பேசித்தொலைக்கின்றேன்
கனவுகளில்

எல்லாம் பணத்தால்
மதிப்பிடப்படும் போது
நானும் மதிப்பிடப்பட்டிருக்கிறேன்
செல்லாக்காசாக

செல்லாக்காசுகளின் மீதேறி
சிலர் கலசங்களாய்
அமர்ந்திருக்கின்றார்கள்
கலசங்களுக்கு தங்க முலாம்
பூசப்பட்டுக்கொண்டே இருக்கின்றது
அவை புனிதமானவையாம்…….

நான் எப்போதும் பேசாமல்
இருக்கப்போவதில்லை
நான்
மட்டுமல்ல நான் நாமாக
நாங்களாக பேசுவோம்
பேசுவோம்

இப்போது பேசுபவர்களெல்லாம்
அப்போது வாய் திறந்துகிடப்பார்கள்
உளுத்துப்போன சன நாயகத்தின்
எச்சில்கள் ஆறாய் ஓட
மொய்க்க வந்த ஈக்களோ
நிலையறிந்து பின்னங்கால்
பிடறியிலடிக்க ஓடும்

பேசுவோம் பேசுவோம்
பேசிக்கொண்டே இருப்போம்
அதிகாரத்தின் விம்மல்கள்
அடங்கும் வரை
உங்களின் மவுனங்கள்
நிரந்தரமாகும் வரை பேசிக்கொண்டே இருப்போம்.

– தோழர் கலகம்

தங்கம் வேண்டாம் இனி இரும்பை உருங்குங்கள்! நாளை அவன் உயிரை எடுப்பதற்கு!

gold copy

தங்கப்புராணம்

தங்கம், அடிமைத்தனம்,முதலாளித்துவம்

விவசாயம் நசிய நசிய
கைத்தறி தேய தேய
தங்கத்தொழிலாளி உருக உருக
ஏறுகிறது விலை மட்டும்
கொழுத்தவனின் கடவாய்ப்பற்களில்
இன்னொன்றாய் மின்னுகிறது….

ஒன்றும் புரியவில்லை
தங்கம் விலை ஏறுவதைப்போல….

அரிசி விலை  முப்பது ரூபா

பருப்பு விலை அறுபது ரூபா
தங்கவிலையோ ஏறுகிறது ஏறுகிறது
எவெரெஸ்டின் உச்சியைத்தாண்டி
அடேங்கப்பா
பிளந்த வாய்கள்
தப்பாமல் வரிசையில்
நிற்கின்றன திருச்சிக்கும்
வந்துவிட்டதாம் குமரன் தங்க மாளிகை….
பழையது புதியதாக மீண்டும்
அது பழையதாக
புதியதாக முளைக்க
அதெப்படி உழைப்பவனின் வாழ்வு மட்டும்
பழையதாகிக்கொண்டே போக
வலுத்தவன் மட்டும் புதியதாகிக்கொண்டே போக….

வந்து விட்டதாம் ரேட் கார்டு
விலை என்னவென்று சரியாயிருக்குமாம்
அங்கு  உலகமயத்தின்
கோரத்தால் சயனைடைத்தின்ற
குடும்பங்களின் மதிப்பு செல்லாததாயிருக்கும்…..

இனியும் உருக்க
தங்கம் இல்லை
இரும்பை உருக்குங்கள்
பத்திரமாய் வைத்துக்கொள்ளுங்கள்

நாளை  அவனின் உயிரை

எடுப்பதற்கு  தேவைப்படும்.

எடுப்பதற்கு  தேவைப்படும்.

தங்கம்

தங்கக்கட்டி, செல்லத்தங்கம்
எனபல வாழ்த்துரைகளை
கேட்டிருப்போம், கேட்டவர்கள்
பல்லைக்காட்டிக்கொண்டிருக்க
தோண்டியெடுத்தவனின் நிலை….

“திருகாணியெல்லாம் வேஸ்ட்
வளையம்தான் பெஸ்ட்” பேசும்
விளம்பரங்கள் நாளை நம்மையும்
விற்கும் அப்போது – ஏகாதிபத்தியத்தின் காதுகளில்
அல்ல கால்களில் மாட்டிக்கொண்டிருப்போம்…..

லேட்டஸ்ட் மாடல்கள் கேட்கும்
வாய்கள் கோலாரின் லேட்டஸ்ட்
நிலையை பேசுமா? கண்டிப்பாய்
பேசாது “ஆரம்” கழுத்தை நெறிக்கும் போது
என்ன பேச முடியும் “மாடல் சூப்பராயிருக்கு” என்பதை தவிர….

தங்கம் எடுக்கப்போனவர்கள்
தோண்டியெடுக்கப்பட்டார்கள் தங்கத்தோடு
பிணங்களாக – அச்செய்திகள் எப்படி
கேட்கும் காதில் தங்கப்பூட்டினை
மாட்டிக்கொண்டிருக்கும் போது…..

நண்பரிடம் கேட்டேன் எதற்கு தங்கம்?
“எனக்கு பிடித்திருக்கிறது” “தெரியவில்லை”
“அளவுக்கு மீறி இல்லை” “தகுதிக்காக போடவில்லை “
தெறித்தன பதில்கள்…..
மூன்றுகிராமுக்கு ஓராயிரம் கிலோ
மண்ணை தோண்டியெடுப்பவனால்
தொடத்தான் முடியும்…..

யாரும் தப்பிக்க முடியாது,கணக்கு
போடுங்கள் உங்களுக்காக
எத்தனையாயிரம் கிலோ தோண்டப்பட்டிருக்கிறது?
எத்தனை பேர் புதைக்கப்பட்டார்கள்?
அதிகமாய் பேச வேண்டாம்,
நீங்கள் அணிந்திருக்கும் அளவுக்கு மட்டும்…

– தோழர் கலகம்

தொடர்புடைய பதிவு:

தங்கம்: அழகா, புனிதமா, ஆபாசமா?

“அதோ அது அங்கிருந்துதான் வருகிறது….”

அடையாளம்

ஒரே பக்கத்தை காட்டி நிற்கின்றன.எல்லோரது கைகளும்

கடந்துபோக அஞ்சி

வெறிநாய் பின்வாங்கும் அந்தப் பாதையில்

குதறப்பட்டுக் கிடக்கும் ஒருபெண்ணின் கைகள்

குறிப்பாக அடையாளம் காட்டுகிறது

“அதோ அவர்கள் அந்தப்பக்கம்தான்…..”

பட்டப்பகலில்

பணப்பையில் பிடுங்க வந்தவனிடமிருந்து தப்பித்து ஓடி

பஸ்ஸாண்டு ரவுடிகளிடம்

பாதுகாப்பாக ஒளிந்துகொண்ட

அப்பாவி ஒருவரின் கைகள் அடையாளம் காட்டுகின்றன.

“அதோ அந்தப்பக்கம்தான்…..”

தறிகெட்டு ஓடிவரும் பன்றியின் கால்கள்

பூக்கடை, பழக்கடைகளைத்

தள்ளிவிடாமல் சென்றபிறகும்

விரட்டிவசைபாடும் சாலையோர வியாபாரிகள்

நிதானமாக வந்து எட்டி உதைக்கும்

கால்களைப் பார்த்து வாயடையத்து

ஆத்திரத்துடன் அடையாளம் காட்டுகிறார்கள்,

“அதோ அது அங்கிருந்துதான் வருகிறது….”

வயலுக்குள் புகுந்து

நாசம் செய்வதைத் தடுக்க

ஒரு வைக்கோல் பொம்மையை நம்பும் விவசாயி

தனது கோரிக்கை ஊர்வலத்தில் புகுந்து

நாசம் செய்வதைப் பார்த்து

குலைநடுங்கச் செல்கிறார்,

“அதோ அதுகள் ஓடுப்போனது அங்கேதான்….”

மலக்கிருமிகளுக்குள்ளும்

வாழ்வதற்கான போராட்டம் நடக்கிறது – என்பதை

ஆராய்ச்சியின் முடிவில்

அறிந்து கொண்ட மாணவன்,

தனது போராட்டத்திற்குள் தொற்றி

“போதும் முடித்துக்கொள்!

போதும் முடித்துக்கொள்!” என்ற

புழுத்த அடிமைகளைப் பார்த்து

ஆச்சிரியத்துடன் அடையாளம் காட்டுகின்றான்

“அதோ அவைகள் அந்தப் பக்கம்தான்……”

உயிரியல் பூங்காவில் இருந்து தப்பித்த

மிருகத்தின் தடையங்களைச் சொல்வதில்

கருத்து வேறுபாடு இருந்தாலும்

பாதிக்கப்பட்ட மக்கள்

அனைவரது கைகளும் மாறுபாடில்லாமல்

ஒரேபக்கத்தை அடையாளம் காட்டுகின்றன

“அதோ, அந்தப்பக்கம்தான்

காவல் நிலையம்”

-துரை.சண்முகம்.

நன்றி: புதிய கலாச்சாரம் 2002

தொடர்புடைய பதிவுகள்

விழித்தெழு என் தமிழகமே!

ஈழத்தில் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது எழுதிய கவிதை. இன்று அதே ஈழப்போராட்டத்தின் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று பேரின் தூக்குதண்டனையை ரத்து செய்! என போராட அறைகூவி அழைக்கிறது.

மருத்துவ மனைகள்
மயான பூமிகளாய்
கல்வி நிலையங்கள்
கொலை களங்களாய்
மழலைகளின் பிஞ்சு
உடல்கள் ஊனங்களாய்
மக்களின் வாழ்வு மரண
போராட்டங்களாய்
பற்றி எரியும் ஈழம்
பதறி எழு என் தமிழகமே!

அறுக்கப்பட்ட எம்
பெண்களின் மார்பகங்கள்

வெடிகுண்டிகளால்
சிதைக்கப்பட்ட எம்
பெண்களின் யோனிகள்

மின்சாரம் பாய்ச்சப்பட்டு
மரித்துபோன ஆண்குறிகள்

விடாது துரத்தும்
சிங்களகொலைவெறிக் கூட்டம்

வேடிக்கை பார்க்கும்
சர்வதேச சமூகம்
அநாதைகள் அல்ல
எம்மக்கள்
ஆர்ப்பரித்து எழு
என் தமிழகமே!

இராஜபக்சேவுக்கு
நன்றி சொல்லும் ஜெயலலிதா

புலி பூச்சாண்டி காட்டும்
சுப்ரமணிய சுவாமி

சந்திரிகாவிடம் விருது
பெற்ற இந்து ராம்

ஷோபாசக்தியின்
கட்டுரை வரையும்
சி.பி.எம்

தமிழன ஒழிப்பில்
சிங்களத்துடன்
கூட்டு சேரும்
பார்ப்பன கும்பல்

பகைமுறிக்க
படை கொண்டு
எழு என் தமிழகமே!

மகிழ்ச்சியை மறந்த மனம்
உடமைகள் இழந்த அவலம்

உறவுகளை துளைத்த வலி
உணர்வுகள் மரித்துபோன இதயம்

கேட்பாரில்லாத மக்கள் கூட்டம்
கூடவே அகதி என்ற பட்டம்

கார் இருளாய்
கவ்விருக்கும்
சிங்கள இனவெறி கூட்டம்
பற்றி எரிகிறது தமிழீழம்

அதில் பெட்ரோல்
ஊற்றுவது இந்தியம்

எம்மக்கள் கொலுத்த
படுவது தெரிந்தும்
மவுனம் சாதிக்கிறான்
கருணாநிதி

பதவி சுகத்துக்காக
இனத்தை விற்கும்
விபச்சார பன்றிகளை
கரிசமைக்க
ஓங்கி எழு என் தமிழ்கமே!

சித்திரவதை முகாம்களில்
எம் இளைஞர்கள்

பாலியல் வன்புணர்ச்சியில்
சிக்கும் எம் பெண்கள்

செம்மணி புதைகுழிகளில்
ஈழத்தின் கிராமங்கள்
சிங்கள தாக்குதலால்
சிதைக்கப்படும் வன்னிகாடுகள்

வாழவிரும்பும்
மக்களை குருரத்தில்
வதைக்கும் பேய்களை
ஓட்டிட விழித்தெழு
என் தமிழகமே!

கிழந்தது கிளிநொச்சி
முரிந்தது முல்லைத்தீவு
அழிந்தது ஆணையிறவு
படுத்தது பரந்தன்

இனி வன்னி
மண்டலம்
எங்களின் மண்டலம்
என்கிறான்
மகிந்தா

அவன் புன்சிரிப்பின்
பின் எம்மக்களின்
அழுகை ஓலம்

அவன் மீசை திருகளின் பின்
கற்பழிக்கப்பட்ட
எம் தேசம் கதறும் சத்தம்
கேட்கவில்லையா?
கருணை கொண்டு எழு
என் தமிழகமே!

வாழ்வதற்கு உத்ரவாதமற்ற
வன்னிகாடு

கொட்டும் பேய்
மழையின் பெருவெள்ளம்

கொடும் மிருகங்களின்
மாமிச பசி

ஏர் வரிசையில்
பட்டினி சாவுகள்
உதவி என்ற பெயரில்
ஏகாதிபத்தியங்களின்
ஊடுறுவல்

எம்மக்கள் கேட்பது
உதவியல்ல
சுயநிர்ணய உரிமை என்ற வாழ்வை

பெற்றுதர புறப்படு
என் தமிழகமே!

முத்துக்குமார், ரவி
தியாகத்தின் வரிசை
நீள்கிறது
தமிழகம் பொங்கி
எழுகிறது.

போராட்டங்களின்
வலிமை கூடுகிறது.

தீ பரவட்டும். தீ பரவட்டும்
தியாகங்கள் பெருகட்டும்

அரை நூற்றாண்டு கால
சிங்கள மேலாதிக்க
சிறையை விட்டு
எம் ஈழம் விடுதலை பெறட்டும்!

-நக்சல்பாரியன்