பு.மா.இ.மு – ம.க.இ.க போராட்டத்திற்கு வெற்றி!
மாணவன் விஷ்வாவை மீண்டும் சேர்த்துக் கொள்ள –
அரசுக் கட்டணத்தை மட்டும் வசூலிக்க
டவுட்டன் கொரியன் பள்ளிக்கு உயர்நீதிமன்றம் ஆணை !
—————————————————————————————– பெற்றோர்களே -மாணவர்களே !
* தனியார் பள்ளிகளின் அராஜகத்திற்கு விழுந்தது முதல் அடி !
* ஆணையை அமல்படுத்த மறுக்கும்
பள்ளி நிர்வாகத்தின் திமிருக்கு முடிவுகட்டுவோம் !
———————————————————————
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
9445112675
பள்ளி மாணவ-மாணவிகளை வேனில் கடத்திச்சென்று சமச்சீர் கல்விக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட செய்ததாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேனில் கடத்தல்
திருச்சி மாவட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்தக்கோரி நூதன போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து, இந்த அமைப்பின் திருச்சி மாவட்ட அமைப்பாளர் கிளர்ச்சியாளன் நிர்வாகிகள் நந்தகுமார், வசந்த் உள்பட 7 பேர் நேற்று காலை பாலக்கரை பீமநகர் பகுதிக்கு ஒரு வேனில் வந்தனர்.
அப்போது அவர்கள் அங்கு பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகளிடம் நாங்கள் உங்களை வேனில் அழைத்து கொண்டு பள்ளி விடுகிறோம் என்று கூறினார். இதை நம்பிய சுமார் 35 மாணவ-மாணவிகள் வேனில் ஏறினர்.
பின்னர் இந்த அமைப்பினர் சி.இ.அரசு உதவி பெறும் பள்ளிக்கு சென்று அந்த பகுதியில் பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் சிலரையும் உங்களை வழக்கமாக ஏற்றி செல்லும் வேன் இன்று வராது என்று கூறி அவர்களையும் பள்ளியில் விடுவதாக சொல்லி ஏற்றினர். பின்னர் 70 மாணவ -மாணவிகளுடன் அந்த வேன் புறப்பட்டு சென்றது. வேன் பள்ளிக்கு செல்லாமல் வேறு வழியாக சென்றதால், பள்ளி மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். வேனில் இருந்த மாணவிகள் கதறி அழுதனர்.
கடத்தல் புகார்
இந்த தகவல் இரு பள்ளி நிர்வாகிகளுக்கும், பெற்றோருக்கும் தெரியவந்தது. பெற்றோர் தங்களது குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு ஓடி வந்தனர். திருச்சியில் வேனில் பள்ளி மாணவ-மாணவிகள் கடத்தப்பட்டதாக செய்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இரு பள்ளிகளிலும் பெற்றோர் முற்றுகையிட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் பள்ளி மாணவ-மாணவிகளுடன் சென்ற வேன் மரக்கடை அருகே உள்ள திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை அடைந்தது. அங்கு பள்ளி மாணவ-மாணவிகளை கூட்டமாக வைத்து, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் மாவட்ட செயலாளர் கிளர்ச்சியாளன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. “சமச்சீர் கல்வியை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்” என்பதை வலியுறுத்தி கோஷம் போட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மாணவ-மாணவிகளை தேடி அவர்களது பெற்றோர்களும், ஆசிரியர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். இதைத்தொடர்ந்து, முன்அனுமதியின்றி பள்ளி மாணவ-மாணவிகளை வேனில் கடத்தி வந்து ஏன் ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள் என்று போலீசார் கேட்டனர். இதைத்தொடர்ந்து போலீசாருக்கும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும் பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஏன் எங்கள் பிள்ளைகளை வைத்து போராட்டம் நடத்துகிறீர்கள் என்று வாக்குவாதம் செய்தனர். பின்னர் 70 பள்ளி மாணவ-மாணவிகள் போலீசார் மீட்டு, அந்தந்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
9 பேர் கைது
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேனில் மாணவ-மாணவிகளை கடத்தியதாகவும், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்த 9 பேரை கைது செய்தனர்.
“மாணவ-மாணவிகளை வேனில் கடத்திச்சென்று சமச்சீர் கல்விக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் 9 பேர் கைது” என்று தினத்தந்தி நாளிதழ் விரிவாக ஒரு பொய்ச் செய்தியை வெளியிட்டிருந்தது. இதையே மற்ற ஊடகங்கள் சிறு செய்தியாக, குழந்தைகளின் புகைப்படங்களோடு வெளியிட்டிருந்தன.
கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் பு.மா.இ.முவினர் மாணவர்களை திரட்டி பாசிச ஜெயா அரசாங்கத்தைக் கண்டித்தும், சமச்சீர் பாடப்புத்தகங்களை உடனே வழங்கக் கோரியும் போராடி வருகின்றனர். இதில் சில இடங்களில் பெற்றோர்களும் கூட கலந்து கொண்டிருக்கின்றனர். இப்படி மாணவர்களும், பெற்றோர்களும் கலந்து கொள்வதனாலேயே போலீசு எந்தப் போராட்டத்தையும் விரும்பியபடி தடை செய்ய முடியவில்லை. மாணவர்களை கைது செய்தால் தமிழகம் முழுவதும் போராட்டம் முன்னிலும் பெரிதாக வெடிக்கும் என்று அவர்களுக்கு தெரியும்.
ஆனாலும் இனி போராட்டங்கள் எங்கும் நடக்கக் கூடாது என்று பாசிச ஜெயா தனது ரவுடி போலீசுக்கு உத்திரவிட்டுள்ளார். அதன்படியே போலீசு உருவாக்கிய இந்த பொய்ச் செய்தியை தினத்தந்தி வெளியிட்டிருக்கின்றது. மேலும் திருச்சி பு.மா.இ.முவினரை கைது செய்வதற்கென்றே உள்ளூர் அ.தி.மு.க பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆய்வாளர் உதவியுடன் பொய் மனு அளித்திருக்கின்றனர். அதற்காகவே ஒரு பெண் தோழரை உள்ளிட்டு எட்டு பு.மா.இ.மு தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எப்படியும் இந்தப் போராட்டத்தை சிதைக்க வேண்டுமென்பது காவல்துறையின் நோக்கமென்பதால் இந்த பொய்ச்செய்தியை உருவாக்குவது ஒன்றும் அவர்களுக்கு புதிதல்ல.
இந்த கடைந்தெடுத்த பொய்யை பெரியதாக வெளியிட்டிருக்கும் தினத்தந்தி, பு.மா.இ.மு மாணவர்கள் சென்னை பள்ளிக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட செய்தியை ஒரு குறுந்துணுக்கு செய்தியாக வெளியிட்டிருக்கிறது. அம்மா புகழ் பாடும் பஜனை கூட்டத்தில் நான்தான் முன்னணி என்று காட்டுவது தினத்தந்தியின் நோக்கம்.
இந்தச் செய்தி வந்த உடனேயே பு.மா.இ.மு தோழர்கள் சென்னை தினத்தந்தி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தினத்தந்தி செய்தி ஆசிரியரை சந்தித்து தங்களது மறுப்பை வெளியிடுமாறும் கோரினர். தினத்தந்தி ஆசிரியர் அவ்வாறே நாளை வெளியிடுவதாக கூறியதும் தோழர்கள் ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பினர்.
இதனை தொடர்ந்து
தினந்தந்தியில் இன்று (ஜூலை28) வெளிவந்துள்ள மறுப்பு செய்தி:
சமச்சீர்கல்வி பாடப்புத்தகங்களை உடனே மாணவர்களுக்கு வழங்கக்கோரி திருச்சியில் நாங்கள் போராட்டம நடத்த மாணவர்களை கடத்தி செல்லவில்லை என்று புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தெரிவித்துள்ளது.
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் த.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
போராட்டம்
மாணவர்களுக்கு உடனடியாக சமச்சீர்கல்வி பாடப்புத்தகங்களை வழங்கக்கோரி புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பில் திருச்சி மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. ஆனால் அந்த போராட்டத்திற்கு பெற்றோருக்கு தெரியாமல் மாணவர்களை கடத்திச் சென்று போராட்டத்தில் ஈடுபடுத்தினோம் என்று திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் பத்திரிகைக்கு தவறான தகவலை கொடுத்துள்ளார். மாணவர்களை யாரும் கடத்தவில்லை.
நேர்மையான அமைப்பாக எங்கள் அமைப்பு உள்ளது. எங்கள் மீது அவதூறுபரப்பும் நோக்கத்தில் அவர் தவறான தகவலை கொடுத்துள்ளார்.
உண்மைநிலை
திருச்சி பீமநகரில் உள்ள ஒரு பள்ளியிலும், வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு பள்ளியிலும் பெற்றோர்களுக்கு தெரிவிக்காமல் மாணவர்களை அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபடுத்தியதால் அது ஏதோ திட்டமிட்ட கடத்தல் நடவடிக்கை எனவும், கதறி அழுத மாணவர்களை போலீசார் தனிப்படை அமைத்து விரைந்து வந்து மீட்டு சாகசம் புரிந்ததைப்போலவும் அப்பட்டமான பொய்யை பரப்பி உள்ளார்.
இந்த சம்பவத்தில் தங்கள் குழந்தைகள் கடத்தப்பட்டதாக போலீஸ் கொடுத்த தவறான தகவல் காரணமாக அச்சமடைந்த பெற்றோர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உண்மை நிலையை அறிந்தனர்.
பின்னர் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னிணியின் செயல்பாடு குறித்து போலீஸ் ஏன் அவதூறாக பேசினார்கள் என்று கேள்வி எழுப்பியும் அவர்கள் எங்கள் குழந்தைகளை கடத்தி செல்லவில்லை என்று கூறியுள்ளனர். எங்களின் செயல்பாடு குறித்து விளக்கம் அளிக்க தயார் என்று பெற்றோர்கள் கூறியுள்ளனர். பள்ளியின் தலைமை ஆசிரியரை மிரட்டி காவல் துறையே இந்த பொய்ப் புகாரை பெற்றுள்ளது. பெற்றோர்கள் யாரும் புகார் அளிக்கவில்லை.
விடுதலை செய்ய வேண்டும்
மேலும் பொய்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்யவேண்டும்.
போலீசாரின் இந்த அவதூறுக்கு எதிராக மாநில அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
தமிழக அரசின் சதியை முறியடிப்போம்! மே 22,2010 சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
அரசுப் பள்ளிகளுக்கு போதிய நிதி ஒதுக்காமல் சீரழித்து ,தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்து,
அவை ஆயிரக்கணக்கில் புற்றீசல் போல பெருகி,கல்வியை கடைச் சரக்காக்கி பெற்றோர்கள் ,மாணவர்களிடம் பகற் கொள்ளையடிக்க காரணமாக இருந்த தமிழக அரசு, இன்று தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணங்களை முறைப்படுத்துகிறதாம்!”கேட்பவன் கேனை என்றால் கேப்பையில் நெய் வழியும் ” என்ற கதையாக உள்ளது .தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டனங்களை முறைப்படுத்துவதற்காக என்று தமிழக அரசு இயற்றிய சட்டம் ,அதையடுத்து அமைக்கப்பட்ட கமிட்டி ,ஓய்வு பெற்ற நீதிபதி .கோவிந்த்தராஜன் கமிட்டியின் கட்டண நிர்ணயம் ,இதைக்கூட ஏற்க மறுத்த தனியார் பள்ளி வியாபாரிகளின் மிரட்டல் ,ஆகியவற்றை அம்பலப்படுத்தும் வகையில் பு .மா. இ .மு கடந்த ஜூன் 22 ந் தேதி
சென்னை மெமோரியல் ஹால் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தியது .நூற்றுக்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர் .
பெற்றோர்களிடம் கோடிக்கணக்கில் சுருட்டிய கல்வி வியாபாரிகளை கைது செய்ய வேண்டும்,
அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும் .
பகற்கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள் அனைத்தையும் அரசுடைமையாக்க வேண்டும்,
தனியார் பள்ளிகளின் கொள்ளைக்கு அடிப்படையாக உள்ள அரசின் கல்வி தனியார்மயக் கொள்கையையும் ,
தனியார் என்றால் தரமானக்கல்வி என்ற மாயையும் ,ஆங்கிலவழிகல்வி மோகத்தையும் பெற்றோர்கள் ,மாணவர்கள் விட்டொழிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கம்பீரமாக முழக்கம் எழுப்பப்பட்டது .
அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாமல் நடத்தப்படும் ஏ. சி. எஸ். மருத்துவக்கல்லூரி, எப்படி 300 மாணவர்களை சேர்த்துக்கொண்டது என்று உச்சநீதிமன்றம் கேள்வியை எழுப்பியுள்ளது. இதனால் 300 மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது (ஹிந்து, 13/12/2009).
ஏ. சி. எஸ். மருத்துவக்கல்லூரி நடத்துவதற்கான அனுமதியை மனித வளமேம்பாட்டு அமைச்சகத்திலோ அல்லது பல்கலைக்கழக மானிய குழுவிலோ பெறவில்லை. அதுமட்டுமில்லாமல், இக்கல்லூரி எந்த பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டவில்லை. ஆனாலும், ஏ. சி. எஸ். மருத்துவக்கல்லூரி சென்ற வருடம் 150 மாணவர்களையும், இந்த வருடம் 150 மாணவர்களையும் சேர்த்துக்கொண்டது. இந்த மருத்துவக்கல்லூரி, தனியார் எம் ஜி ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டது என்று சொல்லி மாணவர்கள் சேர்க்கையை செய்துள்ளது.
இதனால், உச்சநீதிமன்றம் 300 மாணவர்களை விடுவிக்கும் கடிதத்தை கொடுக்குமாறு கல்லூரியை கேட்டுக்கொண்டுள்ளது.
ஆனாலும், இன்று வரை கல்லூரி வலைத்தளத்தில் ” இந்திய மருத்துவ கவுன்சில்”, “பல்கலைக்கழக மானிய குழு” ஆகியவற்றின் அனுமதி பெற்றுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது (http://www.acsmch.ac.in/profile.html).
——————————————————
ஏன், அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாமல் நடத்தப்படும் ஏ. சி. எஸ். மருத்துவக்கல்லூரி மீது உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவில்லை?
ஏன், 300 மாணவர்களை விடுவிக்கும் கடிதத்தை கொடுக்கும் நாடகம்?
எது, ஏ. சி. சண்முகத்தை கைது செய்வதை தடுக்கிறது? அப்போ, கல்வி கட்டணக்கொள்ளை அரக்கன்கள் என்ன செய்தாலும் நடவடிக்கை இல்லையோ? இது தான் ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்பதின் அர்த்தமோ?
——————————————-
இக்கல்லூரி பண்ணிய கூத்துகள்:
சென்னை வேலப்பன்சாவடியில் நடைபெறும் விழாவில் ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரியை ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா 25/09/2008 அன்று தொடங்கி வைத்தார்.
எப்படி அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாத மருத்துவக்கல்லூரியை மாநில ஆளுநர் தொடங்கி வைக்கிறார்?
சென்னை ஏ.சி.எஸ். கல்விக் குழுமத்தின் அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாத ஒரு கல்வி நிறுவனம் தான் ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், சினிமா இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், விஞ்ஞானி வி.கே.சரஸ்வத் ஆகியோருக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் நவம்பர் 14ஆம் தேதி கெளரவ முனைவர் பட்டம் வழங்கியது.
அது மட்டுமில்லாமல், விஜய், சந்திராயன் திட்ட இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் டென்னிஸ் இளம் புயல் சானியா மிர்ஸா ஆகியோருக்கு 6/12/2008 அன்று டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது.
இவை எல்லாம் பகட்டு நாடகம் தானே? இல்லை இது தான் தனியார் கல்வியின் தரமோ?
இவர்கள் எல்லாம் யார் கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்களோ?
—————————————————————–
கல்விக்கட்டனக் கொள்ளைக்கு அரசே துணை என்பதை இந்த சம்பவத்தைவிட வேறு என்ன வேண்டும்?
மாணவர்களே!
தனியார்மய கல்விக் கொள்ளையை வீழ்த்தாமல் நமக்கு கல்வியும் இல்லை, வாழ்க்கையும் இல்லை!
அனைத்து தரப்பு மக்களையும் அணி திரட்டுவோம்! வீதியில் இறங்கி போராடுவோம்!
சென்னை, ராயப்பேட்டையில் பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர், இரண்டாம் ஆண்டுக்குரிய கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார். முதலாமாண்டு கல்விக் கட்டணம் செலுத்திய நிலையில், அவரது தந்தை உடல் நலக் குறைவால் இறந்து போயுள்ளார். மருத்துவ செலவு கை மீறிப் போக, இரண்டாமாண்டு கல்விக் கட்டணம் செலுத்த வழியின்றி தவித்த அந்த ஆர்க்கிடெக்சர் படித்த மாணவி, தூக்கில் தொங்கி விட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன் வங்கிக் கடன் கிடைக்காத விரக்தியில் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தற்போது மருத்துவமனையில் இருக்கிறார் (தினமலர், 4/10/2009).
இதுகுறித்து, சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியதாவது:
… சில கல்லூரிகள் அதிகளவில் கட்டணம் வசூலிப்பது ஒருபுறம் இருந்தாலும், பெரும்பாலான கல்லூரிகள் நன்றாகப் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்கின்றன. …
இதுகுறித்து, தொழில்நுட்ப கல்வி இயக்குனரக அதிகாரி கூறியதாவது:
ஒவ்வொரு பாடப் பிரிவிலும் 60 பேரில் அதிகபட்சம் ஆறு பேருக்கு இலவச கல்விக் கட்டணத்திற்கு வலியுறுத்துகிறோம். எத்தனை பேருக்கு இலவச கல்விக் கட்டணம் வழங்குகின்றனரோ, அதே எண்ணிக்கைக்கு நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம்….(தினமலர், 4/10/2009).
———————————————————————————
////சில கல்லூரிகள் அதிகளவில் கட்டணம் வசூலிப்பது ஒருபுறம் இருந்தாலும்,…////
கட்டணக்கொள்ளை நடப்பது தெரிந்தே நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் எதற்காக அந்த பதவியில் நீடிக்க வேண்டும்?
தனக்கும் அந்த கொள்ளையில் பங்கு உண்டு என்று தானே அர்த்தம்?
இந்த கட்டணக்கொள்ளை, தற்கொலைகளை அரசும் சேர்ந்து தானே நடத்துகின்றது? இல்லை என்றால், தற்கொலையை தடுக்க அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன?
//ஒவ்வொரு பாடப் பிரிவிலும் 60 பேரில் அதிகபட்சம் ஆறு பேருக்கு இலவச கல்விக் கட்டணத்திற்கு வலியுறுத்துகிறோம்….//
மாணவர்களே!
கல்வி என்பது ஏதோ முதலாளி பிச்சை போட்டு பெறுவது அல்ல. கல்வி நமது அடிப்படை உரிமை.
தற்கொலை தீர்வல்ல, கட்டணக் கொள்ளையை தடுக்க…
விடை வேறெதும் இல்லை!
தனியார்மய கல்விக் கொள்ளையை வீழ்த்தாமல் நமக்கு கல்வியும் இல்லை, வாழ்க்கையும் இல்லை!
அனைத்து தரப்பு மக்களையும் அணி திரட்டுவோம்! வீதியில் இறங்கி போராடுவோம்!